Type Here to Get Search Results !

பூரீம் பண்டிகை என்பது என்ன❓

[7/28, 10:18 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 28/07/2017* ☀

1⃣  *எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பூரீம் பண்டிகை என்பது என்ன❓*ஏன் அந்த பண்டிகையை யூதர்கள் அனுசரித்தார்கள்❓

2⃣  யோவான் சுவிஷேசத்தில் சொல்லப்பட்ட *சுத்திகரிப்பின் பண்டிகை* ( விளக்குகளின் பண்டிகை) என்றால் என்ன❓ஏன் இந்த பண்டிகை யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்தது❓இந்த பண்டிகையில் என்னவெல்லாம் செய்தார்கள்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/28, 11:36 AM] Elango: எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பூரீம் பண்டிகை என்பது என்ன❓ஏன் அந்த பண்டிகையை யூதர்கள் அனுசரித்தார்கள்❓

24. *அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.*

25. ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

26. ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

27. யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,

28. *இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.*

29. பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

30. *யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,*

31. அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

எஸ்தர் 9:24 - 31

[7/28, 11:39 AM] Elango: 15. *சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும்* கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

16. ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

17. *ஆதார் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.*

18. *சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.*

19. ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான *யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.*

20. மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

21. *வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை,* யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

22. அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், *ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.*

எஸ்தர் 9:15-22

[7/28, 11:52 AM] Elango: எஸ்தர் 6:13
[13]ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷூக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; *அவன் யூதகுலமானால்,*💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻  *நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.*💪🏻💪🏻👑👑👑👑

ரோமர் 2:28-29
[28] *ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல,*❌❌❌❌❌ புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
[29] *உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்;* இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

*உண்மையான யூதர் நாமே*✅✅✅✅💪🏻💪🏻💪🏻👑👑

[7/28, 12:30 PM] Elango: *HAPPAY PURIM*

1. மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; *ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.*

2. *ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.*

3. ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான். Esther&Chapter=5

[7/28, 2:19 PM] Sam Jebadurai Pastor VT: பூரிம் பண்டிகையை குறித்து முதன் முதலாக வேதாகமத்தில்

Esther          3:7 (TBSI)  "ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது."

மொர்தேகாய் செய்த நன்மை நினைக்கப்படவில்லை
Esther          2:21-23 (TBSI)
21 "அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகை தேடினார்கள்."
22 "இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்."
23 "அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது. "

ஆனால் ஆமான் உயர்த்தபட்டான்

Esther          3:1 (TBSI)  "இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்."

Esther          6:2, 4 (TBSI)
2 "அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது."
4 "ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜஅரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்."

ஏன் மொர்தேகாய் ஆமானை கனம் பண்ணவில்லை?

1 Samuel        15:2-3 (TBSI)
2 "சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்."
3 "இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்."

1 Samuel        15:9 (TBSI)  "சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்."

2 Samuel        1:8-10 (TBSI)
8 அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
9 "அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்."
10 "அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான்."

1 Samuel        15:33 (TBSI)  "சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான்."

Exodus          17:8-16 (TBSI)
8 அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
9 "அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்."
10 "யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்."
11 "மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்."
12 "மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது."
13 யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
14 "பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்."
15 "மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,"
16 "அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான். "

Esther          4:16 (TBSI)  "நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்."

Numbers         24:19-20 (TBSI)
19 யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
20 "மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்."

Hebrews         2:14-16 (TBSI)
14 "ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,"
15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
16 "ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்."

Esther          9:19 (TBSI)  "ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்."

Ps. Sam Jebadurai,
Covenant Ministries,
Bangalore.
9788124188

John            6:54-55 (TBSI)
54 "என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்."
55 "என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது."

2 Corinthians   10:3-5 (TBSI)
3 "நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல."
4 "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது."
5 "அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்."

Genesis 36
ஏசா+ஆதாள்=எலீப்பாஸ்=அமலேக்கு

Deuteronomy     2:4-5 (TBSI)  ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;
அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

[7/28, 2:19 PM] Sam Jebadurai Pastor VT: Sermon outline for last year Purim by me

[7/28, 2:39 PM] Elango: ஏன் மொர்தேகாய் ஆமானை கனம் பண்ணவில்லை?👍👍

பலநாள் விடை தெரியாத கேள்விக்கு விடை கிடைத்தது🙏🏻🙏🏻நன்றி பாஸ்டர்

[7/28, 3:09 PM] Sam Jebadurai Pastor VT: 1 Samuel        15:22-23
22 "அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்."
23 "இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்."

[7/28, 3:11 PM] Sam Jebadurai Pastor VT: 2 Samuel        1:8-10
8 அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
9 "அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்."
10 "அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான்."

[7/28, 3:14 PM] Sam Jebadurai Pastor VT: Esther          5:14  அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

[7/28, 3:15 PM] Sam Jebadurai Pastor VT: Esther          4:14, 16
14 "நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்."
16 "நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்."

[7/28, 3:28 PM] Elango: ஆழமான இரகசியம். சவுல் சாவு👏🏻👍🏻👏🏻👏🏻

[7/28, 3:30 PM] Elango: தைரியமூட்டும் வார்த்தைகள்👏🏻👏🏻👏🏻👏🏻💪🏻💪🏻👍🏻👍🏻

[7/28, 5:13 PM] Elango: வேத தியான குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை வாட்ஸ்அப் குழுவின் Maximum limit 256 தொட்டுவிட்டதால், குழுவில் புதிய நபர்களை இணைப்பதற்க்காக,  குழுவில் Inactive ஆக இருக்கும் நம்பரை நீக்கி , புதியவர்களை இணைக்கிறோம். தவறுதலாக Active ஆக இருக்கும் உங்கள் நம்பரை நீக்கினால் அட்மின்களின் தனி சாட்டில் தெரிவிக்கவும், மறுபடியும் இணைக்கிறோம்.🙏🏻

[7/28, 5:15 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 28/07/2017* ☀

1⃣  *எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பூரீம் பண்டிகை என்பது என்ன❓*ஏன் அந்த பண்டிகையை யூதர்கள் அனுசரித்தார்கள்❓

2⃣  யோவான் சுவிஷேசத்தில் சொல்லப்பட்ட *சுத்திகரிப்பின் பண்டிகை* ( விளக்குகளின் பண்டிகை) என்றால் என்ன❓ஏன் இந்த பண்டிகை யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்தது❓இந்த பண்டிகையில் என்னவெல்லாம் செய்தார்கள்❓

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/28, 10:28 PM] Elango: *பூரீம் பண்டிகை*

*பூரீம் பண்டிகை என்பது பூர் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இந்த பூர் என்றால் எபிரேயத்தில் சீட்டு என்று அர்த்தம்.*

ஆமான் , யூதர்களை அழிக்கும்படியாக சீட்டு போட்டான், ஆகவே சீட்டு போட்டு இஸ்ரவேலரை அழித்து விடலாமென்று ஆமான் நினைத்தான். இந்த சீட்டை அடிப்படையாக கொண்டபடியினால் பூரீம் என்று அழைக்கிறார்கள். இதுதான் இதனுடைய பெயர் காரணம்.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/28, 10:38 PM] Elango: இந்த பூரீம் பண்டிகை - எஸ்தர் புத்தகத்தில் தான் முதல் முதலாக வருகிறது, இந்த எஸ்தர் புத்தகம் மிகவும் Interest ஆன புத்தகம். ஏனென்றால் வேதாகமத்தில் பெண்ணின் பெயரை உள்ளடக்கிய புஸ்தகங்களில் இது ஒன்று.

அதேப்போல ரூத் புஸ்தகமும் இருக்கிறது, பெண்ணின் பெயரை எஸ்தர் என்று இருக்கிறதை பார்க்க முடியும்.

*இந்தியாவின் பெயரும் இரண்டு தடவை இந்த புஸ்தகத்தில் தான் வருகிறது. ஒரு பெண்ணினுடைய பெயரை வைத்து எழுதப்பட்டது.  ஆகவே எஸ்தர் புஸ்தகம் ஒரு அருமையான புஸ்தகம்.*

இந்த புஸ்தகத்தில் சில Characters களை புரிந்துக்கொண்டால், எஸ்தர் புஸ்தகம், பூரீம் எல்லாம் நாம் புரிந்துக்கொள்ளலாம். அது மொர்தேகாய், ஆமான், இராஜாவாகிய ஆகாஸ்வேரு,  எஸ்தர் இவர்களை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/28, 10:46 PM] Elango: எஸ்தர் 3:7
[7]ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் *பூர் என்னப்பட்ட சீட்டு* ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.

அந்த 12 ☝🏻ஆம் மாதம் தான் எல்லா இஸ்ரவேலரும் மரிக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணுகிறதை நாம் பார்க்க முடியும்.

பூர் என்கிற வார்த்தையின் அடிப்படையில் பூரீம் என்கிறது வருகிறது.

அதேப்போல பூர் என்கிற இன்னோரு பண்டிகை என்னவென்றால் *பாவ நிவாரண நாள்*, சீட்டுப்போடுவார்கள் ; அதிலும் பூர் வருவதை நாம் பார்க்க முடியும்.

*இந்த பூரீம் பண்டிகையானது, இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலே பாபிலோனில் இருப்பதற்க்கு பின்பதாக நடந்த சம்பவமாகும், ஆகவே இது அந்நிய தேசத்தில் இருந்த போது நடந்த சம்பவம் இது.*

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/28, 11:02 PM] Elango: அநேகருடைய யோசனை இப்படியாக இருக்கும்.👇🏼👇🏼👇🏼
*மொர்தேகாய் எதற்காக இந்த ஆமானுக்கு மதிப்பு கொடுக்காமல் போனான், அவன் ஒழுங்காக ஆமானை மதித்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காதே என்று* ⁉ஏனென்றால் இராஜா தான் கட்டளை கொடுக்கிறார் எல்லோரையும் வணங்க வேண்டுமென்று சொல்லி, ஆனால் மொர்தேகாய் ஏன் ஆமானை வணங்கவில்லை⁉ என்று நம் இருதயத்தில் எண்ணம் வரும்.

*இந்த ஆமானை குறித்து வேதம் சொல்லும் போது,

எஸ்தர் 3:1
[1]இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய *ஆமான் என்னும் ஆகாகியனை* மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான்.

1 சாமுவேல் 15:9
[9]சவுலும் ஜனங்களும் *ஆகாகையும்,* ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.

*மேலே ஆகாக் ☝🏻என்பது இராஜா. யார் இந்த இராஜா என்று பார்த்தால் - அமெலேக்கு; இந்த அமெலேக்கின் இராஜாதான் ஆகாக்.இந்த ஆகாக் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பெயரை குறிக்காமல், அந்த நபர் வகித்த பதவியை குறிப்பதாக இருக்கிறது.*

எப்படியென்றால், பார்வோன் என்பது ஒரு நபரின் பெயரல்ல, எகிப்து இராஜாவின் பெயர். அதேப்போல அமலேக்கியரை ஆண்ட இராஜாக்களின் பெயர் ஆகாக்.

*இந்த ஆகாகியனாகிய ஆமான், அமலேக்கிய வம்சத்தை சார்ந்தவன், அவன் அமலேக்கிய வம்சத்தை சார்ந்தபடியினால், அவனை மொர்தேகாய் கணம் பண்ணவில்லை.*

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/28, 11:18 PM] Elango: முதன்முதலாக அமலேக்கியரை குறித்து👇🏼👇🏼👇🏼

யாத்திராகமம் 17:8-16
[8]அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
[9]அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
[10]யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.

[11] *மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.*

[12]மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.

[13]யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.

[14]பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
[15]மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

[16] *அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.*

எதற்காக இந்த அமலேக்கியர், இஸ்ரவேலர்களை தாக்கினார்கள்❓இஸ்ரவேலர்கள் அமலேக்கியரை எதுவும் செய்தார்களா❓என்று பார்த்தோமானால், நமக்கு தெளிவாக ஆண்டவர் வார்த்தை சொல்லுகிறது. 👇🏼👇🏼👇🏼

உபாகமம் 2:4-5
[4] *ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;*

[5]அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; *சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.*

[7/28, 11:26 PM] Elango: முதன்முதலாக அமலேக்கியரை குறித்து👇🏼👇🏼👇🏼

யாத்திராகமம் 17:8-16
[8]அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
[9]அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
[10]யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.

[11] *மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.*

[12]மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.

[13]யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.

[14]பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
[15]மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

[16] *அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.*

எதற்காக இந்த அமலேக்கியர், இஸ்ரவேலர்களை தாக்கினார்கள்❓இஸ்ரவேலர்கள் அமலேக்கியரை எதுவும் செய்தார்களா❓என்று பார்த்தோமானால், நமக்கு தெளிவாக ஆண்டவர் வார்த்தை சொல்லுகிறது. 👇🏼👇🏼👇🏼

உபாகமம் 2:4-5
[4] *ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;*

[5]அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; *சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.*

சேயீர் மலை நாட்டு பக்கத்தில் தான் அமலேக்கியர் வாழ்ந்தனர்.

ஆதியாகமம் 36:10-12
[10]ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.
[11]எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
[12]திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, *எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.*

ஏசாவின் வம்சத்தான் தான் இந்த அமலேக்கு. அமரேக்கிற்க்கு கொடுக்கப்பட்ட இடத்தை Disturb பண்ணக்கூடாது என்று ஆண்டவர் சொல்லியிருந்தார்.

ஆகவே இஸ்ரவேலர் அவர்களை தொடுவதற்க்கு எத்தனித்து வரவில்லை, ஆனால் முகாந்தில்லாமல் இந்த அமலேக்கியர் இஸ்ரவேலர்கள் மேல் இவர்கள் போர் தொடுத்தார்கள்.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/28, 11:34 PM] Elango: இந்த அமலேக்கியரை குறித்து சொல்லும்போது, 👇🏼👇🏼

யாத்திராகமம் 17:16
[16] *அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும்* என்றான்.

பிலேயாம் இப்படி சொல்லுகிறான் அமலேக்கியரை குறித்து...👇🏼👇🏼

எண்ணாகமம் 24:20
[20]மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: *அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான்* என்றான்.

இந்த அமலேக்கியர் மிகவும் கொடுமையானவர்கள், முகாந்திரமில்லாமல், இஸ்ரவேலரை பகைத்தார்கள். ஆகவே ஒரு நாள் இரண்டு நாள் இல்லாமல், தலைமுறை தலைமுறையாக யுத்தம் நடக்கும்,

நன்றாக கவனித்து பார்க்க வேண்டும்.👇🏼👇🏼👇🏼

யாத்திராகமம் 17:16
[16] *அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும்* என்றான்.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/28, 11:42 PM] Sam Jebadurai Pastor VT: Exodus          17:16  "அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான். "

[7/28, 11:43 PM] Sam Jebadurai Pastor VT: Revelation      20:7-9
7 "அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,"
8 "பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்."
9 "அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது."

[7/29, 12:13 AM] Elango: ஆகையால் முகாந்திரமில்லாமல் இஸ்ரவேலரை கொலை செய்தபடியால், ஆண்டவர் சவுலுக்கு சொல்கிறார்.

1 சாமுவேல் 15:1-3
[1]பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:

[2]சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

[3] *இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.*

ஒரு சிலருக்கு இப்படி ஒரு கேள்வி வரலாம், ஆண்டவர் பிள்ளைகளை ஏன் கொல்ல சொல்கிறார் என்று...

*பிள்ளைகள் செய்த அக்கிரமத்தின் நிமித்தமாக பிதாக்கள் கொலை செய்யப்படக்கூடாது, பிதாக்கள் செய்த அக்கிரமத்தின் நிமித்தமாக பிள்ளைகள் கொலை செய்யப்படக்கூடாது*

ஆனால் இந்த 1 சாமூவேல் 15 ம் அதிகாரத்தில், பிதாக்களின் அக்கிரமத்தின் நிமித்தமாக பிள்ளைகளை கொலை செய்ய சொல்கிறாரா❓

என்று ☝🏻அப்படி அமலேக்கியரை பற்றி புரிந்துக்கொள்கிறவர்கள், இன்னோரு ஒரு காரியத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டும். 

இஸ்ரவேலர் பாளயம் இறங்கியபோது, அவர்கள் தளர்ந்தவர்களும், விடாய்த்தவர்களுமாய் இருந்த போது, குழந்தைகள், பெரியவர்கள் என்று அமலேக்கியர் சங்காரம் செய்தார்கள்.அது ஆண்டவரின் பார்வையில் துண்மார்க்கமாக காணப்பட்டது. 

உபாகமம் 25:17-19
[17]எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, *அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,*

[18] *நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிற உன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.*

[19]உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.

ஆகவே ஆண்டவர் என்ன சொல்கிறார் என்றால், திரும்பவும் பழி வாங்க சொல்லுகிறார்.

 அமலேக்கியர் இஸ்ரவேலருக்கு தொந்தரவாகத் தான் இருந்தார்கள், ஏற்கனவே குழந்தைகளை அவர்கள் கொலை செய்தபடியினால், இஸ்ரவேலருக்கு நியாயம் செய்யும் படியாக செய்கிறார்.

*இன்னொன்று என்னவென்றால், அந்த சந்ததி தேவனுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் விரோதமாக தலைமுறை தலைமுறையாக யுத்தம் செய்யும் தலைமுறையாக இருக்கும் என்பதை தேவன் அறிந்திருந்தார்.*

ஆகவே தேவன் அப்படிப்பட்ட கட்டளையை 1 சாமுவேல் 15:1-3 ல் கொடுக்கிறார் - எல்லாவற்றையும் கொன்று போடக்கடவாய் என்று.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/29, 12:36 AM] Elango: அப்ப இப்படிப்பட்ட அமலேக்கை சங்கரிக்க ஆண்டவர் சவுலுக்கு கட்டளை கொடுத்தார், ஆனால் சவுல் அந்த கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை சரியாக.

அவன் ஆகாகை உயிரோடே கொண்டு வந்தான், ஆடுமாடுகளில் முதல் தரமானதை எல்லாவற்றையும் கொண்டு வந்தான், அப்பொழுது சாமூவேல் கேட்பார் என் காதில் விழுகிற சத்தம் என்ன என்று கேட்கும்போது, தேவனுக்கு பலியிட கொண்டுவந்தேன் என்று சொல்லுவான் சவுல்.

1 சாமுவேல் 15:14-16,18-23
[14]அதற்குச் சாமுவேல்: *அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன*❓❓❓❓❓👂🏻👂🏻👂🏻👂🏻👂🏻👂🏻 என்றான்.
[15]அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
[16]அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
[18]இப்போதும் கர்த்தர்: *நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு* என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
[19]இப்படியிருக்க, *நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.*
[20]சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், *அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து,* அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.

[21] *ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.*

[22] *அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.*

[23]இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

சவுல், அமலேக்கியரை முற்றிலும் அழிக்காமல் ஒரு சிலரை விட்டு விட்டான், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனான்.ஆகையால் கர்த்தர் அவனை இராஜாவாக இராதபடிக்கு தள்ளினார்.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால்,  அவன் அமலேக்கை விட்டு விட்டதுதான்.

1 சாமுவேல் 15:27
[27] *போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.*

சால்வையின் தொங்கல் கிழிந்துபோனது என்பது மரணத்தை குறிக்கிறதாயிருக்கிறது.

அப்ப அந்த சவுல் தேவனுக்கு கீழ்ப்படியாமல் அமலேக்கியரை விட்டுவிட்டான், பின் நாட்களில் பார்க்கும்பொழுது,  சவுல் சாக கிடக்கும் போது, அவனை கொலை செய்தது யாரென்றால் அமலேக்கியன்தான். சவுல் விட்டான் , அதே அமலேக்கியன் அவனை கொலை செய்து விட்டான்.

2 சாமுவேல் 1:8-10
[8]அப்பொழுது அவர்: *நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.*
[9]அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
[10]அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, *அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்;* பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான்.

யாத்திராகமத்தில் சொல்லப்பட்டபடி, தலைமுறை தலைமுறைதோறும் யுத்தம் நடக்கும், அந்த யுத்தத்தை ஆண்டவர் ஆரம்பத்திலேயே நிறுத்த விரும்புகிறார், ஆனால் சவுல் கீழ்ப்படியாமல் விட்டு விடுகிறான்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நிறைய தடவை, எதிரியை விட்டோம் என்றால் எதிரி நம்மை கொன்று விடுவான். நம் ஆண்டவர் பிசாசின் மேலே ஜெயம் எடுத்தவர்,  நாம் அதை பின்பற்ற வேண்டும். ஆனால் நாம் அதை விட்டுவிட்டால் பின்நாட்களில், ஆபத்தாக முடியும்.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/29, 12:49 AM] Elango: *சவுல் விட்டுவிட்ட அமலேக்கியன் அதோடு முடிந்து போகவில்லை, ஆகாகின் வம்சத்தானாகிய ஆகான், எஸ்தர் நாட்களி திரும்பவும் இஸ்ரவேலரை அழிக்க வகை தேடுகிறான், அப்ப மொர்தேகாய் ஆமானை கனப்படுத்தாதற்க்கு காரணம், இவன் தேவனுக்கு விரோதமானவன்.*

இன்றைக்கு தேவனுக்கு விரோதமானவனை காலில் விழுந்து, வெட்கங்கெட்டு, பூச்செண்டு கொடுத்து, ஊழியர்கள் நிறைய பேர் நமஸ்கரிப்பதாக செய்தியில் வருகிறது.

ஆனால் அவர்களோடு கம்பேர் பண்ணும் போது, இந்த மொர்தேகாய் எவ்வளவு பெரிய உயர்ந்த குணமுள்ளவன் பாருங்கள்.

*எந்த சூழ்நிலையிலும் சரி, சத்தியத்திற்க்கு நான் தனியாகத்தான் நிற்பேன்,  நான் தேவனுக்கு விரோதமானவர்களை வந்தனம் செய்ய மாட்டேன் என்று இருந்தான்.*

இதேப்போல நாம் இருக்கிற நாடுகளில்,  இந்த நாட்களிலே, அநேக ஆமான்கள் எழும்பியிருக்கிறார்கள், எப்படியாவது தேவ ஜனத்தை அழிக்க வேண்டுமென்று, இப்போது நாம் சொல்ல வேண்டும்,, *நான் யூதன்,  நான் யூதனென்று சொன்னால் நீ எனௌனை மேற்க்கொள்ள முடியாது*.

இன்றைக்கும் இஸ்ரவேலை பார்த்தால் - சூழ சத்துருக்கள் மத்தியில், பந்தி போல தான் வாழ்கிறார்கள்.

சுற்றிலும் எல்லா இஸ்லாமிய நாடுகளும் எப்போது இஸ்ரவேலை அழிக்கலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேல் தனித்து ஒரு சின்ன நாடாக இருந்தாலும், அதாவது தமிழ்நாடை விட பரப்பளவில் சிறிய நாடு தான்.ஆனாலு தனித்து நிற்கிறது, *ஏனென்றால் தேவனுடைய பிள்ளையாக ஒருவன் இருந்தால் அவன் கண்டிப்பாக மேற்க்கொள்கிறவனாகத் தான் இருப்பான்*

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/29, 9:13 AM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 28-29/07/2017* ☀

1⃣  *எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பூரீம் பண்டிகை என்பது என்ன❓*ஏன் அந்த பண்டிகையை யூதர்கள் அனுசரித்தார்கள்❓

2⃣  யோவான் சுவிஷேசத்தில் சொல்லப்பட்ட *சுத்திகரிப்பின் பண்டிகை* ( விளக்குகளின் பண்டிகை) என்றால் என்ன❓ஏன் இந்த பண்டிகை யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்தது❓இந்த பண்டிகையில் என்னவெல்லாம் செய்தார்கள்❓

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/29, 9:58 AM] Charles Jebaraj VM: இரக்கமுள்ள எங்கள் அன்பின் ஆண்டவரே எங்களுக்காக உம்முடைய ஒரே குமாரனாகிய இயேசப்பாவை தந்ததற்க்காக உமக்கு நன்றி கடந்த நாட்கள் முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்து இந்த நாளை காண செய்த கிருபைக்காக நன்றி இயேசப்பா வேத தியானம் குரூப்பில் உள்ள எல்லோரையும் கண்ணோக்கி பாருங்க எல்லோரையும் உம்முடைய சத்திய வேத வசனத்தினால் நிரப்புங்க இன்று நாங்கள் தியானம் செய்கிற எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பூரிம் பண்டிகை குறித்து தியானம் பண்ண இருக்கிறோம் இன்று இந்த தியானத்தில் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இடைபடும்படி உம்மிடத்தில் வேண்டுகிறோம்  எங்களுக்கு புரியும் படி இந்த சத்திய வேத வசன தியானங்கைளை கற்று தர வேண்டும் என்று ஜெபிக்கிறோம் இந்த வசனம் தியான செய்கிற ஒவ்வொரு ஊழியர்களையும் உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்பி அவர்கள் மூலம் எங்களுக்கு புரியும் படி வைப்பீராக இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த ஜெபத்தை உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்

[7/29, 10:52 AM] Elango: இந்த எஸ்தர் தான் ஒரு யூத ஸ்திரீ என்று சொல்லவில்லை.

ஏற்கனவே வஸ்தி ராணி இராஜாவுக்கு கீழ்ப்படியாமல் போனதால் தான், பட்டத்து ராணி அந்தஸ்தை இழந்தாள். 

இராஜா கூப்பிட்டால் போக வேண்டும், கூப்பிடவில்லையென்றால் போகக்கூடாது.இப்போது எஸ்தர் இராஜாவை போய் பார்க்க வேண்டும், இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்தர் தன்னுடைய வளர்பு தகப்பனாக இருக்கிற மொர்தேகாயுக்கு சொல்கிறாள் - இராஜாவின் கட்டளையில்லாமல் போனால்,  கொன்று விடுவார்கள் என்று. அப்போது மொர்தேகாய் சொல்லுவான். 👇🏼👇🏼👇🏼

எஸ்தர் 4:13-14
[13]மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், *மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.*

[14]நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; *நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே,* யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

இப்படிப்பட்ட காலத்திற்க்கு உதவியாக இருக்கும் படி இந்த வேலை உனக்கு கிடைத்திருக்கலாமே! 

இப்படிப்பட்ட காலத்திற்க்கு உதவியாக இருக்கும் படி உனக்கு ஒரு கார் கிடைத்திருக்கலாமே! 

இப்படிப்பட்ட காலத்திற்க்கு உதவியாக இருக்கும் படி இந்த பணம் உனக்கு கிடைத்திருக்கலாமே! 

இப்படிப்பட்ட காலத்திற்க்கு உதவியாக இருக்கும் படி , வெளிநாட்டில் வேலை பார்க்கும் படி உனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாமே! 

*இப்படியெல்லாம் நாம் மாற்றிக்கொள்ளலாம்*☝🏻☝🏻☝🏻☝🏻

*ஏனென்றால் விசுவாசிகளின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் சாதாரணமாக நடப்பது இல்லை, தேவ திட்டம் தான் நடக்கிறது.*

*இந்த எஸ்தர் புஸ்தகத்தில் இன்னோரு Interest ஆன Factor என்னவென்றால்...எஸ்தர் புஸ்தகத்தில் தேவன் என்ன பதம் ஒரு தடவை கூட வரவே இல்லை. அதேப்போல உன்னதபாட்டிலும், பிரசங்கியிலும் தேவன் என்ற பதம் வரவில்லை, ஆண்டவர் என்கிற பெயரே வரவில்லை, ஆனால் ஆண்டவருடைய கிரியைகள் அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை துவக்கத்திலிருந்து கடைசி வரைக்கும் பார்க்கலாம்*

*எஸ்தருக்கு இராஜ மேன்மை தேவ சித்தத்தினால் கிடைத்தது. அப்ப நமக்கு ராஜ மேன்னை கிடைத்திருக்கிறது, எதற்க்காக.. என் ஜனங்கள் அழியக்கூடாது...இந்தியாவை இரட்சியுங்க ஆண்டவரே, என் தேசத்தை இரட்சியுங்க ஆண்டவரே, நான் இருக்கிற பட்டணத்தை இரட்சியுங்க ஆண்டவரே ... ஆண்டவரே எப்படியாவது இவர்கள் இரட்சிக்கப்படனும், என்ன மாதிரி இவர்களும் உங்களை அறிந்துக்கொள்ள வேண்டும்*

அப்போது எஸ்தர் மொர்தேகியாவிற்க்கு சொல்லுகிறதென்னவென்றால்... எனக்காக அல்லும்பகலும் உபவாசம் இருங்கள் என்று...இப்படியாக மூன்று நாள் உபவாசம் இருக்கிறார்கள்.

எஸ்தர் 4:15-16
[15]அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது:
[16] *நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.*

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/29, 11:29 AM] Elango: உபவாசம் எத்தனை நாள் பண்ண வேண்டும், மூன்று நாள் பண்ணலாமா,  இரண்டு நாள் பண்ணலாமா❓

*உபவாசம் எத்தனைநாள் வேண்டுமானாலும் பண்ணலாம்,  எதற்க்காக பண்ணுகிறோம் என்பது ரொம்ப முக்கியம், தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்துகிறார்கள், இதுதான் உபவாச ஜெபத்தின் Power*

எஸ்தர் மூன்றாவது நாள், இராஜாவினடத்தில் போகிறாள், இராஜா எஸ்தருக்கு நேராக தன் செங்கோலை நீட்டினாள், நீட்டின உடனே... இராஜா சொல்லுகிறார்... எஸ்தர் இராஜாத்தி உன் வேண்டுதல் என்ன? விருப்பம் என்ன?  என் இராஜ்யத்தில் பாதி வேண்டுமானாலும் நான் தருகிறேன் என்கிறான்... உடனே எஸ்தர் சொல்லுகிறார்.. எனக்கு அதெல்லாம் வேண்டாம்... எங்க வீட்டிற்க்கு நீங்கள் சாப்பிட வரவேண்டுமென்று...சாப்பிட வரும்போது கூடவே ஆமானையும் கூட்டிக்கொண்டு வாங்க என்கிறாள்... ஆமானும் சந்தோஷமாக விசேஷத்திற்க்கு சாப்பிட போகிறான்.

அதன் பிறகு பார்த்தோமானால்... ஆமான் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறதை நாம் பார்க்க முடியும்.

எஸ்தர் 5:3-6,8
[3]ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, *உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.*
[4]அப்பொழுது எஸ்தர்: *ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.*
[5]அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, *எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.*
[6]விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: *உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும்* என்றான்.
[8]ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், *ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது;* நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

எஸ்தர் 5:9,14
[9]அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; *ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.*

[14]அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: *ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்;* பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

எஸ்தர் 6:1-3
[1]அந்த இராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
[2]அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
[3]அப்பொழுது ராஜா: *இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.*

*அந்த நாளில் இராஜா அந்த காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தை வாசிக்கும்படி செய்தார். God is in control, எல்லா சூழ்நிலையும் தேவனுடைய Control லில் இருப்பதை நாம் அங்கே பார்க்க முடியும்*

எஸ்தர் 6:4-5
[4]ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜஅரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

[5]ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

எஸ்தர் 6:6-11
[6]ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: *ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்;* அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,
[7] ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,
[8] *ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்*
[9] *அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.*

[10]அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: *சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.*

[11]அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

*எவன் ஒருவன் தேவ ஜனத்தை வெட்கப்படுத்த வேண்டும், கொன்று விட வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மூலமாகவே தேவன் தேவ ஜனத்தை கனப்படுத்துகிறார், இதுதான் தேவனுடைய திட்டம் தீர்மானம்*

ரோமர் 8:28
[28]அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

மொர்தேகாயிற்க்கு உடனடியாக அவன் கனம்பண்ணபடாமல் போனாலும், பிறகு கனம் பண்ணப்படுகிறான்.

பிறகு ஆமானுடைய மனைவி மற்றவர்களும் சொல்கிறார்கள்..👇🏼👇🏼

எஸ்தர் 6:13
[13]ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷூக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; *அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.*

*தேவனுக்காக தெரிந்துக்கொள்ளப்பட்ட மனுஷன் கண்டிப்பாக ஜெயிப்பான், இயேசுவுக்காக வாழ்ந்த எவரையும் , இயேசுகிறிஸ்து தோற்க பண்ணமாட்டார்.. ஜெயிக்கபண்ணுவார்.*

எஸ்தர் 6:12
[12]பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு *முக்காடிட்டுக்கொண்டு* தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான்.

இங்கே முகத்தை மூடிக்கொண்டு ஆமான் போகிறான். முகத்தை யாருக்கு மூடுவார்கள் என்றால் செத்தவனுக்குத்தான். முதலாவது எப்போது ஆமான் மொர்தேகாயை கனம் பண்ணினானோ அப்பொழுதே அவன் முகம் செத்துப்போனது.

எஸ்தர் 7:1-6
[1]ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,

[2]இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: *எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.*

[3]அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.
[4] *எங்களை அழித்துக்கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப் போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள்.*

[5]அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: *இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.*

[6]அதற்கு எஸ்தர்: *சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.*

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/29, 12:05 PM] Elango: இராஜஸ்திரி எஸ்தரின் படுக்கையின் மேல் இரக்கத்திற்க்காக படுத்து கிடக்கிறான் ஆமான்.

இராஜா கேட்கிறார், நான் இருக்கும்போதே.. இராஜஸ்திரியை பலவந்தம்பண்ணுகிறாயா என்று சொன்ன உடனே.. ஆமான் முகத்தில் துணியை போட்டு மூடுகிறார்கள்.அப்ப இரண்டாவது செத்துப்போகிறான் ஆமான்.

மூன்றாவது, இவன் மொர்தேகாவிற்க்காக செய்வித்த தூக்குமரத்தில், இவனை தூக்கில் போடுகிறார்கள்... 

*பூர் போடப்பட்ட கரெக்டாக அந்த ஆதார் 12 ம் மாதத்தில், குறித்த நாளில், இஸ்ரவேலர்கள் தங்களுடைய சத்துருக்களை சங்கரிக்கலாம் என்கிற ஒரு உத்திவு பிறப்பிக்கப்படுகிறது, அப்படியாக தேவ ஜனம் பாதுகாக்கபடுகிறதை பார்க்க முடிகிறது.*

ஆகையால் கடைசி வரைக்கும் தேவன் தம் ஜனங்களை பாதுகாக்கிறவராய் இருக்கிறார்.நம் வாழ்க்கையில், சூழ்நிலையில் எஸ்தர் புஸ்தகம் மாதிரி,  ஆண்டவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கலாம், ஆண்டவர் பெயர் இல்லாமல் இருக்கலாம்.

*ஆனால் ஒண்ணே ஒண்ணை மறந்துவிடக் கூடாது...தேவன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறார், அவர் சகலத்தையும் தீர்மானம் செய்துக்கொண்டிருக்கிறார், அவர் அறியாமல் எதுவுமே நடப்பது கிடையாது*

நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அவர் தான் Control பண்ணி நடத்துகிறார், எஸ்தர் புஸ்தகத்தில் தேவன் என்கிற வார்த்தை வரவில்லையே தவிர, தேவனுடைய கிரியைகள் எல்லாம் அங்கே இருக்கிறது. So இந்த புஸ்தகம் ரொம்ப interesting ஆன புஸ்தகம்.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/29, 12:23 PM] Elango: வரலாற்றில் பார்க்கும்பொழுது, மேலே இருக்கிற இந்த சொஸ்திகா, இது தான் அமெலேக்கியரின் சின்னமாக இருந்தது.சொஸ்திகா என்றால்,,அதன் நடுவில் இருப்பது.👆🏻👆🏻

பின்னாட்களில் நம் எல்லோருக்கும் தெரியும், ஹிட்லர் ... இந்த symbol ஐ தான் தன்னுடைய Symbol ஆக வைத்திருந்தார்.அதை வைத்து தேவ ஜனங்களை,  யூதர்களை அழித்ததை நாம் பார்க்க முடியும்.


யாத்திராகமம் 17:16
[16] *அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.*

இங்கே சொல்லப்பட்ட இந்த வார்த்தையை, நாம் நினைவுகூற வேண்டும்.👆🏻👆🏻👆🏻

*அப்ப இந்த சொஸ்திகா Symbol நாசிக் கட்சியினுடைய Symbol ஹிட்லரோடு முடிந்துவிடவில்லை...இன்றைக்கும் நம்முடைய தேசத்தில் அநேக மதவாத சக்திகள்.. இந்த symbol ஐ தான் வைத்திருக்கிறார்கள். இவர்கள் யாருக்கு விரோதமாக இருக்கிறாரேகள் என்றால்... தேவ ஜனங்களாகிய நமக்கு விரோதமாக இருக்கிறார்கள்.*

So மாம்ச பிரகாரமாக வருகிற பிரச்சனைகள் காரியங்களை, அநேக முறை மாம்சப்பிரகாரமான பிரச்சனை என்று பார்க்கக்கூடாது, அது ஒரு ஆவிக்குரிய போராட்டமாக இருக்கலாம்.

*நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது எதிர்ப்பு வந்ததென்றால்..சட்டம் வழியாகத்தான் போகனும் என்பதைவிட, முழங்கால்களை முடக்கி தேவனுக்கு முன்பதாக, தேவன் நமக்காக யுத்தம் செய்யும்படியாக ஜெபிக்க வேண்டியது அவசியம்.*

இந்த நாட்களில் இந்தியாவில் அப்படிப்பட்ட ஜெபம் அவசியமாக இருக்கிறது நாம் உணர வேண்டும்.

- Pastor Sam @⁨Sam Jebadurai Pastor VT⁩

[7/29, 12:26 PM] Elango: ☀ *இன்றைய வேத தியானம் - 28-29/07/2017* ☀

1⃣  *எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட பூரீம் பண்டிகை என்பது என்ன❓*ஏன் அந்த பண்டிகையை யூதர்கள் அனுசரித்தார்கள்❓

2⃣  யோவான் சுவிஷேசத்தில் சொல்லப்பட்ட *சுத்திகரிப்பின் பண்டிகை* ( விளக்குகளின் பண்டிகை) என்றால் என்ன❓ஏன் இந்த பண்டிகை யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்தது❓இந்த பண்டிகையில் என்னவெல்லாம் செய்தார்கள்❓

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/29, 2:26 PM] Sam Jebadurai Pastor VT: ஒவ்வொரு பூரிம் பண்டிகையின் போதும் எஸ்தர் புத்தகம் வாசிக்கபடும்

[7/29, 2:27 PM] Sam Jebadurai Pastor VT: வெகுமதிகளை மற்றவர்களுக்கு கொடுப்பார்கள்

[7/29, 2:28 PM] Sam Jebadurai Pastor VT: இந்த சம்பவங்களுக்கு பின் அநேகர் யெகோவாவை தேவனாக ஏற்றுக் கொண்டனர்.
Esther          8:16-17
16 "இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று."
17 "ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், *அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் அமைந்தார்கள். "*

[7/29, 2:29 PM] Sam Jebadurai Pastor VT: இன்றும் இந்த பண்டிகை யூதர்களால் கொண்டாடப்படுகிறது.

Post a Comment

0 Comments