Type Here to Get Search Results !

பரிசேயர், சதுசேயர், ஆயக்காரர் என்பவர்கள் யார்❓

[1/27, 9:29 AM] : 🕎 *இன்றைய தியானம் - 27/01/2017* 🕎
*பரிசேயர்*
*சதுசேயர்*
*ஆயக்காரர்*
👆🏼👉இவர்கள் யார்❓இவர்கள் பணி❓இவர்கள் மூலம் கற்று கொள்ளும் காரியங்கள் ❓
                  *வேத தியானம்*

[1/27, 10:52 AM] Elango: *தங்களை நீதிமான்களென நம்பி, பிறரை அற்பமாகக் கருதுவதும்,😏😏😏 பாவிகளோடு பழகுவதைக்கூட அற்பமாகக் கருதுவதும் பரிசேயத்தனமே❗❗*👇👇👇👇👇
லூக்கா 18:9-12 *தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து,*👇👇👇👇👇 அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன்பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
மத்தேயு 9:11 பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

[1/27, 10:57 AM] Elango: மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில்பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
*நீதி விஷயத்தில் பரிசேயரின் நீதியை இயேசு மட்டுப்படுத்தவில்லை, அசட்டை செய்யவில்லை* மாறாக அவர்களின் நீதியைவிட அதிக நீதிதான்வேண்டுமென்று சொன்னாரேயொழிய, அவர்களின் நீதியை இயேசு குறைகூறவில்லை.💥💥
நற்கிரியை இல்லாமல் இரட்சிப்பு இல்லை எனச் சொல்வதும் பரிசேயத்தனமே எனக் கூறுபவர்கள், 👇👇
👉 *பரிசேயரின் நீதி எனும் கிரியையைவிட அதிக நீதியாகிய கிரியை இல்லாவிடில், பரலோகராஜ்யம் பிரவேசிக்க மாட்டீர்கள் என இயேசு சொன்னதை கவனித்தல் அவசியம்❗*

[1/27, 11 AM] Jeyachandren Isaac VT: வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
👆பரிசேயரின் நீதிகள் என்று இயேசு குறிப்பிட்டவைகள் இவைகள்தானோ........????

[1/27, 11:00 AM] Elango: I think so ayya🙋♂👍👇

[1/27, 11:04 AM] Elango: *பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும்.*
💥 இது சமய மற்றும் அரசியல் நோக்கங்களை கொண்டிருந்தது.
 💥திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாறலாம்.
💥இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர்.
💥ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர்.
💥தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.

[1/27, 11:07 AM] Elango: மத்தேயு 23:1-2,4-39
[1]பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:
[2]வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
[4]சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
[5]தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
[6]விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
[7]சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
[8]நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
[9]பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
[10]நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
[11]உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
[12]தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
[13]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
[14]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
[15]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
[16]குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
[17]மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
[18]மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
[19]மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
[20]ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
[21]தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
[22]வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.
[23]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
[24]குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.
[25]மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
[26]குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
[27] *மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.*

[28] *அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.*
[29] *மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:*
[30]எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
[31]ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
[32]நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.
[33]சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?
[34] *ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;*
[35 *] *நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின்* *இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக*
இப்படிச் செய்வீர்கள்.*
[36]இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[37]எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
[38]இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
[39]கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[1/27, 11:16 AM] Elango: .
பவுல் AKA சவுல், சைலீசியாவிலுள்ள இன்றைய துருக்கி டார்சஸ் நகரில் பிறந்தவர். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இயேசுவை இவர் நேரில் சந்தித்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை.
 பிறப்பிலேயே யூதரான பவுல் இளமையிலேயே எபிரேயு மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.✅✅✅🕎🕎🕎
இவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறிகிறார்.

[1/27, 11:16 AM] Apostle Kirubakaran VT: மத்தேயு 5:20
[20]வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தேவ ராஜ்ஜியத்தில் நாம் பிரவேசிக்க இவர்களை விட நாம் நாம் அதிகமாக செயல் பட வேண்டும் நான் கற்றுக் கொண்டேன்

[1/27, 11:17 AM] Jeyaseelan VT: *பரிசேயர் என்பவர் யார்??????*
பரிசேயர்கள்கலிலேயாவில் வாழ்ந்தவர்கள். கிரேக்கச்சொல் "பாரிசெயாச்". எபிரேயச் சொல் "பெருசீம்". பரிசேயர் கிரேக்கச் சொல்ஒருமையில் "பாரிசேயாச்" என்றும், பன்மையில் "பாரிசேயாய்" என்றுகூறலாம்.
பரிசேயர்கள் மற்றவர்களைக் காட்டிலும்தங்களை வேறுபடுத்திக்கொண்டவர்கள். பரிசேயன் என்றால், "பிரித்தெடுக்கப்பட்டவன்" என்றுபொருள்.

கி.மு.இரண்டாம் நூற்றாண்டின்ஆரம்பத்திலும் மூன்றாம் நூற்றாண்டின்கடைசி பகுதியிலும் பாலஸ்தீனாவில்உள்ள 'ஹாசிடிம்'  (Hasidim) என்றபக்திக்குரிய மக்கள் வாழ்ந்தார்கள். மக்கபேயர் புரட்சியின்போது இந்தஹசிடியர்கள் - மக்கபேயர்களுக்குஆதரவாக இருந்தார்கள்.

இவர்கள் "காசீடிம்" என்றவகுப்பாரிலிருந்து வந்தவர்கள். 'ஹசிடிம்' என்ற சொல்லை சிலர் 'சாசிடிம்' (Chasidim) என்று உச்சரிக்கிறார்கள். இச்சொல்சங்கீத புத்தகத்தில் 23 தடவைவருகின்றது. அங்கு இச்சொல் "பரிசுத்தவான்கள்" என்றுமொழிபெயர்த்துள்ளது. நடுத்தரகுடும்பத்தைச் சார்ந்தவர்கள். மதப்பிரகாரமாக சுத்தமில்லாதகரியங்களிலிருந்து தங்களை பரிசேயர்வேறுபடுத்திக் கொண்டார்கள்.

பின்னர், ஹாஸ்மோனியர்ஆட்சியாளர்கள் யுத்தம் செய்ய வேண்டியமனநிலையில் இருந்ததால் பரிசேயர்தங்களுடைய படைஉதவியைபின்வாங்கிக் கொண்டார்கள். இந்த 'பரிசேயர்' என்ற பெயர்  'ஜான்கிர்ஹேனஸ்' என்பவர்  யூதேயாவைஆண்டபோது, இவர்களுக்கு இப்பெயர்கொடுக்கப்பட்டது. மகா ஏரோது ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய சுமார் 6000 பரிசேயர் இருந்தனர் எனசொல்லப்படுகிறது.

ஜான் கிர்ஹேனஸ் (கி.மு.135 - கி.மு.105) காலத்திலும், அலெக்சாண்டர் ஜேன்னஸ் (கி.மு.103 - கி.மு.76) காலத்திலும்பரிசேயர்கள் ஒடுக்கப்பட்டார்கள். ராணிசலோமி அலெக்சாண்டிரா (கி.மு.76 முதல்கி.மு.67) காலம் "பரிசேயர்களின்பொற்காலம்" எனலாம். சாலமோனின்சங்கீதம் ராணி அலெக்சாண்டிராவைபுகழ்ந்து பாடியது.

எருசலேமின் அழிவுக்குப்பின்பரிசேயர்கள் இந்த   யூதமதத்தைஉயிர்ப்பித்தார்கள். அதற்கு 'ரபியோகன்னா பென்சாகி' (Rabbi Johannan Benzakkai) என்பவர் இந்த யூத மதம்உயிர்ப்பிக்க தலைமைத்துவம் வகித்தார்.

இவர்கள் வேதப்பிரமாணத்திற்கு(Interpreters) விளக்கம் கொடுப்பவர்கள். ஜெப ஆலயங்களில் முக்கிய பங்குவகித்தவர்கள். கிறிஸ்துவின் நாட்களில்இவர்கள் மிகுந்த செல்வாக்குஉடையவர்களாய் இருந்தனர்.

இவர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள்.  யூதர்களின் நியாயப் பிரமாணத்தின்ஒவ்வொரு வார்த்தையையும்கவனமாகக் கடைபிடிக்க முயன்றவர்கள். எனவே, இவர்களை பக்தி கூட்டத்தார்எனவும்  அழைப்பார்கள். ஆபிரகாமைப்போல தேவனை நேசிப்பவர்கள்.இருப்பினும், பரிசேயரில்பெரும்பான்மையினர்சுயநீதியுள்ளவர்கள்.

இவர்கள் தங்களை நீதிமான்கள் என்றுகருதியவர்கள். உண்மையில்,கிறிஸ்துவின் நாட்களில் இவர்கள்புறம்பாக மட்டுமே நீதிமான்கள் போல்தோன்றினர். உள்ளேயோ தீமையினால்நிறைந்திருந்தனர். மாய்மாலக்காரராய்இருந்தனர். (மத்தேயு: 23:13-32).

என்றாலும், எல்லாப் பரிசேயர்களுமேமாய்மாலக்காரர்கள் என்று சொல்லிவிடமுடியாது. நிக்கொதேமுவும், கமாலியேலும் பரிசேயர்கள்தான்என்றாலும், நேர்மையான, நீதியுள்ளமனிதர்களாயிருந்தனர். (யோவான்: 3:1; அப்போஸ்தலர்: 5:34). அப்போஸ்தலனாகிய பவுலும் கூட ஒருபரிசேயனே! (அப்போஸ்தலர்: 26:5; பிலிப்பியர்: 3:5).

பரிசேய இனம் இன்னும் அழியவில்லை. பரிசேய சமயம் தான் இன்றைய  யூதமதத்தின் அஸ்திபாரமாகும்.

பரிசேயர்களில் 7 வகை
உண்டு.

1. தோள் பட்டை பரிசேயர்:

காணிக்கை போடும்போது மற்றவர்கள்காணும்படி விளம்பரப்படுத்தி போடுவது.

2. சற்று நில் என்று சொல்லுகிறபரிசேயர் கூட்டம்:

தர்மம் செய்யும்போது வழியருகேபோகிறவர்களை சற்று நில் என்றுசொல்லி பார்க்க வைத்து போடுபவர்கள்.

3. குருட்டுப் பரிசேயர்:

தாம் போகும்போது பெண்கள் எதிரில்வந்தால், கண்களை மூடி நடந்துசெல்வார்கள். இவர்கள் சுவரில் முட்டிமோதி இரத்தம் வந்தாலும் கண்களைத்திறக்க மாட்டார்கள்.

4. குனிந்த பரிசேயர்:

இவர் சோதனைகளுக்குத் தப்பும்படிகுனிந்துதான் நடப்பார்.

5. எப்போதும் தங்கள் நற்கிரியைகளைஎண்ணிக் கொண்டிருக்கும் பரிசேயர்:

தங்கள் குறைகளை மூடும்படி தங்கள்நல்ல காரியங்களை நினைவுபடுத்திக்கொண்டிருப்பார்கள்.

6. தேவனுக்குப் பயப்படும் பரிசேயன்:

யோபுவைப் போல் உண்மையாய்நீதியாய் வாழ்பவர்கள்.

7. தேவனை நேசிக்கும் பரிசேயன்:

ஆபிரகாமைப் போல தேவனைநேசிப்பவர்கள். இருப்பினும், பரிசேயரில்பெரும்பான்மையினர்சுயநீதியுள்ளவர்கள்.
http://waytoheaven2011.blogspot.com/2013/11/blog-post.html?m=1

[1/27, 11:17 AM] Jeyaseelan VT: *சதுசேயர்*
(Sadducee)

'சதுசேயர்' என்ற பதம் 'சாதோக்' (Zadok) என்ற பதத்திலிருந்து வந்திருக்கலாம். சாதோக் தாவீது ராஜாவின் காலத்தில் பிரதான ஆசாரியனாக இருந்தவன். (1இராஜாக்கள்: 2:35). சதுசேயர் என்பதற்குரிய கிரேக்கச் சொல் "சாடுக்கை". ஒருமையில் "சாடுக்கையாச்". இதற்கு 'பழமைப் பற்றாளர்' என்று பொருள்.

சதுசேயர்கள்  கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த ஒரு முக்கியமான யூத மதப் பிரிவினர். பெரும்பாலான யூதப் பிரதான ஆசாரியர்கள் சதுசேயர்களே. ஆனால், எல்லா ஆசாரியர்களும் சதுசேயர்கள் அல்ல. சதுசேயர்கள் சரீர உயிர்த்தெழுதலையோ நித்திய ஜீவனையோ நம்பாதவர்கள். பரிசேயரைப் போலவே, இவர்களும் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் எதிர்த்தனர்.

'யோவான் கிர்ஹேனஸ்' (John Hgircanous) காலத்தில் சதுசேயர்கள் முக்கிய இடத்திற்கு வந்தனர். யோவான் கிர்ஹேனஸ் பரிசேயர்களை வெறுத்து சதுசேயர்களை நேசித்ததினால் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

 யூத கலாச்சாரமும், கிரேக்கக் கலாச்சாரமும் கலப்பதற்கு "ஹெலனாசேஷன்"  (Hellenization) என அழைக்கின்றனர். கிரேக்கக் கலாச்சாரமும், யூதக் கலாச்சாரமும் சேர்ந்த இராஜா 'அந்தியோகஸ் எபிபனேஸ்' (Antiochus Epipanas) (அதாவது, ஹெலனாசேஷன்) என்பவன் யூதர்களை ஒடுக்கினான். இதனால், உண்மையான சதுசேயர்கள் மறைந்து போனார்கள். இந்த ஹெலனாசேஷன் வந்ததும் ஆசாரியர்கள் வழிகள் மாறி, சீர்கெட்டுப் போயின.

'அந்தியோகஸ் IV'  (Antiochus IV) என்பவன் காலத்தில் சாதோக்கிய வழிவந்த பிரதான ஆசாரியனாகிய 'ஒனியாஸ் III'  (Onias III)  சை பதவியிலிருந்து விலக்கினான். அதனால் ஒனியாஸின் மகன் பயந்து போய் எகிப்திற்கு ஓடிப்போய்விட்டான்.

இப்படியிருந்த சதுசேயர்கள் இராஜாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சதுசேயர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள். அரசியலில் இவர்கள்  எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததினால், அதிகாரத்தையும், ஆட்சியையும் விரும்பியதாலும் மிக ஞானத்துடன் நடந்து கொண்டார்கள். சமய நெறியை கடைபிடித்து வாழ ஆட்சியாளர்கள் தடை செய்யாவிட்டால் அவர்கள் அரசியலை, ஆட்சியாளர்களை எதிர்ப்பதில்லை. ரோம ஆட்சியாளர்கள் ஆன்மீக வாழ்வில் தலையிட்டபொழுதுதான் அவர்கள் எதிர்த்தார்கள்.

பாரசீக மன்னர் காலத்திலிருந்து அயல் நாட்டினர் யூத நாட்டை ஆண்ட பொழுதெல்லாம் அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடைய பழக்கவழக்கங்களுக்கு தக்கவாறு தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்வதற்குச் சிறிதும் பின்வாங்கவில்லை. சமயக்கருத்துக்கள், சடங்குகளில் கூட, பரிசேயரைப்போல கண்டிப்பாயிராமல், எவ்வளவுக்கெவ்வளவு வளைந்து கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தனர்.

காலத்துக்கேற்றப்படி தங்களை மாற்றிக் கொண்டார்கள். பரிசேயரோ, அவ்வாறு காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள மறுத்தார்கள்.

'ராணி சலோமி அலெக்சாண்டிரா' ஆட்சிகாலத்தில் மட்டும் இவர்களுடைய அரசியல் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை. தீத்துராயன் கி.பி.66 முதல் கி.பி. 70 வரை எருசலேமை முற்றிக்கையிட்ட காலத்தில் இவர்கள் சமாதானத்தை விரும்பினர். இருப்பினும், எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது.

இதனால், தங்கள் விசுவாசத்தை கட்டி எழுப்பும் மதிப்பு பரிசேயருக்குப் போனதே ஒழிய சதுசேயர்களைப் பற்றி சரித்திரம் எதுவும் சொல்வதில்லை.

சதுசேயர்கள் கிரேக்கக் கலாச்சாரத்தைப் பின்பற்றினார்கள். பரிசேயர்களுக்கு இவர்கள் எதிரானவர்கள். மோசேயின் நியாயப் பிரமாணத்தை வெறும் சடங்காச்சாரமாகக் கைக் கொண்டவர்கள். இவர்கள் தோராவின் எழுத்தின்படி வியாக்கியானம் கொடுத்தவர்கள். இந்த மார்க்கம் அறநெறி கொள்கையுடையது. அரசியல் நிலைமைக்கு ஏற்ப மாறுபவர்கள். எருசலேம் அழிவுக்குப் பின் 'சதுசேய சமயம்' அழிந்து போனது.

இயேசுவும் சதுசேயரும்:

இயேசுவுக்கும் சதுசேயருக்கும் உள்ள தொடர்பில் உயிர்த்தெழுதலைக் குறித்து கேள்வி கேட்டனர். உயிர்த்தெழுதலில் ஒருத்திக்கு ஏழு கணவர்களைக் கொண்டவள் பரலோகில் யாருக்கு உடையவளாவாள்? என்ற கேள்விக்கு - இயேசு பிரதியுத்தரமாக: "கொள்வனையும் கொடுப்பினையும் இல்லை. தேவதூதர்களைப் போல இருப்பார்கள்" என கூறுகிறார். (லூக்கா: 20:27 - 36). இதிலிருந்து இவர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கையற்றவர்களாய் இருந்தனர் எனத் தெரிகிறது.
http://nesarin.blogspot.in/2012/09/blog-post_192.html?m=1

[1/27, 11:17 AM] Elango: பிலிப்பியர் 3:4-7
[4]மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
[5] *நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;*❗❗❗

[6]பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
[7]ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

[1/27, 12:26 PM] Elango: 🕎 *இன்றைய தியானம் - 27/01/2017* 🕎
*பரிசேயர்*
*சதுசேயர்*
*ஆயக்காரர்*
👆🏼👉இவர்கள் யார்❓இவர்கள் பணி❓
இவர்கள் மூலம் கற்று கொள்ளும் காரியங்கள் ❓
                  *வேத தியானம்*

[1/27, 12:26 PM] Elango: இவர்கள் மூலம் கற்று கொள்ளும் காரியங்கள் ❓

[1/27, 12:34 PM] Elango: மத்தேயு 23:2-3
[2] *வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;*❗❗
[3] *ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்;*💥💥💥💥💥💥💥💥
 ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.

[1/27, 3:35 PM] Kenosis VT: The righteousness of the scribes and Pharisees consisted of seeking the acceptance of God by their careful adherence to their rules and traditions. “I keep more rules than you do, so I’m more righteous than you!”
But the righteousness that exceeds this comes from faith in God.
When we act in faith before God, God grants us His own righteousness.

[1/27, 3:36 PM] Kenosis VT: It is not about more fastings and more tithings

[1/27, 4:52 PM] Samson David Pastor VT: 👆வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் .....👆

[1/27, 5:01 PM] Samson David Pastor VT: 13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8 :13
14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
ரோமர் 8 :14
👆வேதபாரகர், பரிசேயர் நீதியிலும் மேலான நீதியின் வாழ்க்கை.
👉 மாம்சத்தின்படியான நீதி அல்ல,
ஆவியின்படியான நீதி.

[1/27, 8:10 PM] Tamilmani Ayya VT: *இன்றைய பரிசேயர் - சதுசேயர் - ஆயக்காரர் அதையேதான் செய்து வருகிறார்கள்! !!*

[1/27, 8:12 PM] Jeyachandren Isaac VT: *இன்றைய பரிசேயர் - சதுசேயர் - ஆயக்காரர் ...
????

[1/27, 8:36 PM] Elango: *எவர்கள் கைக்கொள்ளும்படி போதிக்கிறார்களோ ஆனால்  சொல்லியும்  செய்யாதிருக்கிறார்களோ அவர்களே இன்றும் அன்றும் என்றும் பரிசேயர்கள்😮😀*

மத்தேயு 5:19
[19]ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; *இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ,*❗❗❗ பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

[1/27, 8:43 PM] Elango: 💥வேத பாரகர்களின் நீதி -  மாம்ச கொலை செய்யாமல் இருப்பது
👉✅ நம்முடைய நீதியாக இருக்கவேண்டியது -  நியாயமில்லாமல் சகோதரனிடத்தில் கோபித்துக்கொள்ளாமல் இருப்பது❗
💥 பரிசேயர்களின் நீதி எனப்படுவது - மாம்ச விபச்சாரம் செய்யாலிருப்பது.
👉✅ நம்முடைய நீதியாக இருக்கவேண்டியது - ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்காமல் இருப்பது❗

[20] 👉 *வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால்,👈 பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.*👆🏼👆🏼💥💥

[1/27, 8:48 PM] Elango: பரிசேயர் குடும்பத்தில் வந்த. அப். பவுல் பின் நாட்களில் தனௌனுடைய பரிசேய நீதியை குப்பையாக எண்ணி,  *தேவனுக்கு பிடித்த நீதி எது என்று உணர்ந்துகொள்கிறார்.*👇👇👇👇👇
[9] *நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்*

பிலிப்பியர் 3:4-16
[4]மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
[5]நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
[6]பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
[7]ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
[8]அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
[9] *நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,*
[10] *இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,*👉👉👉👆🏼👆🏼👈👈👈
[11] *அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.*

[12]நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
[13]சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
[14]கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
[15]ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
[16]ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.

[1/27, 8:53 PM] Elango: 💥 *சதுசேயர்*💥

🔆 தாவீது மற்றும் சாலமோனின் ஆட்சியில் பிரதான  ஆசாரியராக இருந்தவர் *சாதோக்.*
இந்த சாதோக்கின் வம்சா வழியினர் சதுசேயர் ஆவர். முதல் நூற்றாண்டில் இவர்கள் ஆளும் வர்க்கத்தினராய், அரசு செல்வாக்குடன் பணபலமும் படை பலமும் பெற்றிருந்தனர்.🕎
 ஆம்..அவர்களுக்கு என்று தேவாலய காவல் படை இருந்தது. மத சம்பத்தப்பட்ட விஷயங்களில் சிறு சிறு தண்டனை கொடுக்க ரோம அரசிடம் அதிகாரமும் பெற்றிருந்தனர்.
🕎 சதுசேயர் தேவ தூதரை நம்ப மாட்டனர்.
🕎 மரித்தோர் உயிர்த்தெழுவதை நம்பமாட்டனர்.
🕎மோசேயின் நியாயப் பிரமாணத்தை கடைப் பிடித்தனர்
🕎பரிசேயரின் வாய் முறைச் சட்டங்களை ஏற்பதில்லை
🕎மத சம்பத்தப்பட்ட முடிவுகளை எடுக்கும் ஆலோசனை சங்கம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
🕎ஆலோசனை சங்கத்தில் பிரதான ஆசாரியர், தலைமை குருக்கள், ஜனத்தின் மூப்பர் மற்றும் வேத பாரகர்கள் இடம் பெற்றிருந்தனர்.
🕎மோசேயின் நியாயப் பிரமாணத்துடன் *கட்டளைகளின் புத்தகம்* ஒன்றும் வைத்திருந்தனர்.
🕎 இப் புத்தகத்தில் யாரெல்லாம் *கல் எறியப் படவேண்டும், யாரெல்லாம் கழுத்து நெரித்து தூக்கிலிடப் படவேண்டும், யாரெல்லாம் உயிரோடு எரிக்கப் பட வேண்டும், யாரெல்லாம் தலை துண்டிக்கப் பட்டு கொலை செய்யப்படவேண்டும் என  ஒரு நீண்ட கொலை காரப் பட்டியலே வைத்திருந்தனர்.*
🕎 ஆனால், கொலை தண்டனை நிறைவேற்றும் அதிகாரம் மட்டும் ரோமர்களிடம் இருந்ததால், *பற்கள் பிடுங்கப் பட்ட நிலையில் இருந்தனர்❗*😮😮😮

[1/27, 9:15 PM] Elango: 💥 *பரிசேயர் யார்⁉😮*
*நியாயப் பிரமாணத்தை கடைப் பிடிப்பதில் ஏதேனும் தப்பித்  தவறி குற்றம்  நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதை சுற்றி சற்று விசாலமான வேலியடைக்கிறோம் என்று கூடுதல் வாய் மொழிக் கட்டளைகளையும் , வித்தியாசமான சம்பிரதயங்களையும் சேர்த்து விட்டிருந்தனர் பரிசேயர்.*
🕎 பரிசேயர் என்றவுடன் வேதத்தை கரைத்து குடித்தவர் என்று நினைக்க வேண்டாம். 
🕎இவர்களில்  மெஜாரிட்டி படிப்பறிவு இல்லாதவர்தாம். *நியாயப் பிரமாணத்தின் உத்திகளை சொல்லித்தருகிறோம் என்று வெறுமனே சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பட்டியலிட்டு விட்டு கற்பனையின் சாராம்சத்தை அறியத் தவறியவர்கள்*😮☹
🕎 உதாரணத்திற்க்கு, “ஒய்வு நாளை பரிசுத்த நாளாக ஆசரிப்பாயாக!” என்பது நான்காம் கட்டளை. ஆனால், பரிசேய முறைப் படி, ஒய்வு நாளில் --
👉ஒருவன் படுக்கையை கூட எடுக்கக் கூடாது❌
👉குழியில் விழுந்த ஆட்டை தூக்கி விடலாம்❌😮
👉ஓய்வு நாளில் எத்தனை எழுத்துகள் எழுதலாம்⁉ ஒன்றே ஒன்று மட்டும்😮
👉 ஒரு மைல் தூரம் நடக்கலாம். அதற்கு மேலும் நடக்க வேண்டுமெனில், கொஞ்ச நேரம் அங்கு உட்கார்ந்து, தண்ணீர் குடித்த பின் தங்கள் வசதிக்ககாக, அது வீட்டில் இருந்து புறப்பட்டதாக அர்த்தங்கொள்ளப்படும் மீண்டும் ஒரு மைல் தூரம் நடக்கலாம்! அட..நம்ம ஊர் சகுனம் - சம்பிரதாயம் போல இருக்குதில்ல
யெஸ் அப்படித்தான்❗👆🏼👆🏼👆🏼💥💥💥

[1/27, 9:20 PM] Elango: 💥 *ஆயக்காரர் என்பவர்கள் யார்⁉*
👉 அம்மோனியனான தொபியா வழி வந்த ஆயக்காரர் வரி வசூலிக்கும் உரிமையை குத்தகைப்  பணமாக பெரும் தொகை கொடுத்து பெற்றனர்.
👉 எவ்வளவு அடித்து பறித்து வரி வசூலிக்க முடியுமோ அவ்வளவு வரிப் பணத்தை பாமரரிடம் பறித்தனர். அத்துடன் கிரேக்க  கலாச்சாரத்தை கடைப் பிடித்து சுக போக வாழ்க்கை நடத்தியதால், யூத மக்களின் வெறுப்பைப் பெற்றிருந்தனர். 😠😟😳🤔
👉ஒரு ஆயக்காரனின் சாட்சியையோ, அவனது வாக்கு மூலத்தையோ, யூத நீதி மன்றங்களில் ஆதாரமாக ஏற்பதில்லை.
👉பிச்சை எடுப்போர் கூட ஆயக் காரனிடம் பிச்சை கேட்பதில்லை.🤔😳😀😀
👉 *மக்கள் எல்லோருமே ஆயக்காரனை பாவி என்றும், அவனது பணத்தை  பாவம் என்றும் கருத்தினர்❗❗*

[1/27, 9:22 PM] Kumar VT: கொஞ்சம்  வசன ஆதாரோடே பதிவிடுங்களே சகோ... 🙏 🙏

[1/27, 9:22 PM] Kumar VT: கர்த்தருடைய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாவாதாக

[1/27, 9:29 PM] Kumar VT: 19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
மத்தேயு 5 :19
20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 5 :20

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/27, 9:31 PM] Kumar VT: 31 அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும், ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.
லூக்கா 13 :31

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/27, 9:32 PM] Elango: *நம்முடைய அனுதின வாழ்க்கையில், இன்றைய பரிச்சேயர்கள் நானோ நீங்களோ இன்றைய பரிச்சேயர்களாக இருக்கலாம்.💥👇👇👇*
➡நானும் ஒரு மாய்மால பரிசேயன் தான் -
இரக்கமில்லாமலும்
அன்பில்லாமலும்
பாவத்தைவிட்டு மனந்திரும்பாமலும் இருந்துக்கொண்டே, தேவனுக்காக மட்டும் வைராக்கியமும், வீராப்பும் காட்டும்போது❗☹☹☹😏😏
➡நானும் ஒரு கல்நெஞ்ச பரிசேயன் தான்
எனக்கு அன்பானவர்கள் தவறும்போது தேவசமுகத்தில் மன்றாடிய அதே நான்,
பிறர் தவறும்போது தேவசமூகத்தில் மன்றாட மனதுவராதபோது!😏😏😏😏
➡நானும் ஒரு இரக்கமற்ற பரிசேயன் தான் -
போதனையில் பிழையென்பதால் பிறரை சத்துருவாய் பார்க்கும் எனக்கு,
அன்பே பிரதானம் என்ற போதனையிலும் பிழையுள்ளதோ என்று என் மனசாட்சியே எனக்கு சுட்டிக்காட்டுகையில்👇👉👈👆🏼☹☹
➡நானும் ஒரு உணர்வில்லாத பரிசேயன் தான் -
ஒருசில விஷயங்களில் நான் நீதிமான் என்பதாலும் அதே ஒருசில விஷயங்களில் பிறரை நியாந்தீர்க்கும் அதே நான்,
வேறு ஒருசில விஷயங்களில் அந்த பிறர் என்பவர்கள் நீதிமான் என்று அறிந்திருந்தும் அதே விஷயத்தில்  என்னை நானே நியாந்தீர்த்து திருத்திக்கொள்ளாதபோது❗👆🏼😡😡
➡நானும் ஒரு வெள்ளையடிக்கப்பட்ட பரிசேய கல்லறை தான் -
ஊராருக்கெல்லாம் கீழ்ப்படிதலையும், பரிசுத்தத்தையும், இரக்கத்தையும் பிரசங்கித்த எனக்கு, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் என்ற ஆண்டவருடைய வார்த்தை சத்தமாய் எனக்கு மட்டும் கேட்கும்பொழுது❗👆🏼👂👂
➡நானும் ஒரு செத்த பரிசேயன் தான் -
பிறர் இச்சையில் விழுந்து போகையில் அவர்களை உற்றுநோக்கி மிரட்டிஉருட்டி நியாந்தீர்த்த அதே கண்கள், தானும் ஓரு சிலவேளைகளில் ஓரக்கண்ணால் பிறருக்கானவைகளை இச்சிக்கும்போது👀😮😳

[1/27, 9:34 PM] Kumar VT: கவிதை  முறை வேண்டாம் ...  வசனங்களை  சாட்சியாக  போடுங்க ஐயா

[1/27, 9:35 PM] Kumar VT: மன்னிக்கவும்   வசன ஆதாரோடே பதிவிடுங்களே சகோ

[1/27, 9:37 PM] Kumar VT: நீங்கள்  சொல்லும் கருத்துக்கள்  சரியே இருப்பினும்  எல்லாருமே  இல்லை  நிதானித்து  பாருங்கள் ஐயா

[1/27, 9:40 PM] Elango: *விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயர்கள் இயேசுவிடத்தில் கொண்டுவந்து அவளை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று அவரிடத்திலே கேட்டபோது*🗣🗣🗣🗣
 “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்” (யோவான் 8:7). 👆🏼👍👂👌

[1/27, 9:43 PM] Elango: *இயேசு பரிசேயருடைய மாய்மாலத்தை இங்கு வெளிப்படுத்துகிறார்.*👆🏼👆🏼👆🏼👆🏼
 பரிசேயர்கள் இயேசு நியாயப்பிரமாணத்தை மீறினார் என்று குற்றஞ்சுமத்துவதற்காகவே இதை செய்தார்கள்.
 அவர்களுக்கு ஸ்திரியை கல்லெறிந்து கொல்ல விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரியை வேண்டும் என்பது உண்மையான நோக்கம் அல்ல என்பது வேத ஆய்வாளர்களின் கருத்து❗❗

[1/27, 9:48 PM] Elango: *நாமும் யார் மேலாவது குற்றம் கண்டிபிடிக்கவே கண்ணோக்கமாகவே இருக்கவே வாய்ப்பு தேடுகிறோமா* 👇👇👇

மாற்கு 12:13-17
[13] *அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.*
[14]அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.
[15]அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
[16]அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள்.
[17]அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

[1/27, 9:53 PM] Elango: 🕎 *இன்றைய தியானம் - 27/01/2017* 🕎
*பரிசேயர்*
*சதுசேயர்*
*ஆயக்காரர்*
👆🏼👉இவர்கள் யார்❓இவர்கள் பணி❓
இவர்கள் மூலம் கற்று கொள்ளும் காரியங்கள் ❓
                  *வேத தியானம்*

[1/27, 9:54 PM] Kumar VT: பரிசேயர்\சதுரேயர்
இவங்களுக்குள்ள உயிர்த்தெழுதலை குறித்ததான வேறுபட்ட கருத்து இருந்தது
[1/27, 10:03 PM] Kumar VT: 29 யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.
லூக்கா 7
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/27, 10:04 PM] Kumar VT: 13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
லூக்கா 18
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/27, 10:12 PM] Kumar VT: 47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?
மத்தேயு 5
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/27, 10:14 PM] Kumar VT: 31 இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார், அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 21
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/27, 10:14 PM] Kumar VT: 3 பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
மத்தேயு 10
Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[1/27, 10:18 PM] Kumar VT: 2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
லூக்கா 3 :2
3 அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
லூக்கா 3 :3
5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,
லூக்கா 3 :5
6 அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
லூக்கா 3 :6
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள், ஆபிரகாம் எங்களக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 3 :8
10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
லூக்கா 3 :10
11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன், ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
லூக்கா 3 :11
12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
லூக்கா 3 :12
13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
லூக்கா 3 :13

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

Post a Comment

0 Comments