Type Here to Get Search Results !

சுத்திகரிப்பின் பண்டிகை அல்லது விளக்குகளின் பண்டிகை என்றால் என்ன?

[7/31, 9:35 AM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 31/07/2017* ♦

1⃣ *கிறிஸ்மஸ், சாம்பல் புதன், லெந்து நாள், குறுத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர்*  போன்றவை தோன்றின வரலாறு என்ன? இவைகளை ஆதி சபையினர் அனுசரித்தனரா? இன்று நாம் அனுசரிக்கலாமா? என்பதை தியானிக்கலாம்.


2⃣  யோவான் சுவிஷேசத்தில் சொல்லப்பட்ட *சுத்திகரிப்பின் பண்டிகை* ( விளக்குகளின் பண்டிகை) என்றால் என்ன❓ஏன் இந்த பண்டிகை யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்தது❓இந்த பண்டிகையில் என்னவெல்லாம் செய்தார்கள்❓


_*இன்றையோடு பண்டிகைகளை பற்றிய தியானம் முடிவடைகிறது*_

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE


*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/31, 10:06 AM] Levi Bensam Pastor, V: கொலோசெயர் 2:14-23
[14] *நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து*👇 👇 👇 👇 👇 👇 👇 ;
[15] *துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.*👇👇👇👇👇👇
[16] 👉 *ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.*👇👇👇👇👇👇👇👇👇
[17]அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; *அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.*
[18]கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்பற்றிக்கொள்ளாமல்,
[19]மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
[20]நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
[21]மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
[22]இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
[23]இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், *இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.*

[7/31, 10:23 AM] Ebi Kannan Pastor, V: கிறிஸ்துமஸ் தினத்தையோ அல்லது ஈஸ்டர் தினத்தையோ கொண்டாடுவது தவறு ஆனால் அந்த நாட்களிலும் தேவனை சபையாக கூடி ஆராதிக்கலாம் அது தவரேயில்ல

[7/31, 10:26 AM] Jerome VM: ஏன் கொண்டாட கூடாது

[7/31, 10:27 AM] Elango: கலாத்தியர் 4:5
[5] *காலம் நிறைவேறினபோது,* ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
குமாரனை இவ்வுலகத்தில் குறித்த சமயத்தில், நமக்காக அனுப்பியதை கொண்டாடுவது மகிழ்ச்சி தானே...
நம் சந்ததி சந்ததியாக அந்த நாள் எந்த நாளாக இருந்தாலும், அவர் இந்த பூமியில் வந்த நாளை நாம் நினைவு கூறுவதில் தவறில்லையே...

[7/31, 10:29 AM] Elango: எஸ்தர் 9:28
[28] *இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும்* என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள்.
பகைஞர் மேல் கிடைத்தை வெற்றியான பூரீமை விட, சாத்தானில் மேல் அதிகாரம் பெற, பாவத்திலிருந்து நம்மை விடுதலையாக்க தேவாதி தேவன் பூமியில் நமக்காக வந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடலாம் தானே?

[7/31, 10:29 AM] Ebi Kannan Pastor, V: கொலோசெயர் 2:16
[16]ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

[7/31, 10:33 AM] Elango: அப்ப கிறிஸ்தவர்களுக்கு பண்டிகையே கிடையாதா?😢😭😭
யூதர்களுக்கு தேவன் 7.பண்டிகைகளை கொடுத்தாரே...

[7/31, 10:35 AM] Ebi Kannan Pastor, V: நமக்கு கிறிஸ்து இயேசுதான் பண்டிகை

[7/31, 10:35 AM] Levi Bensam Pastor, V: *புதிய ஏற்பாடு விசுவாசிகளுக்கு தினந்தோறும் பண்டிகை தான்*😆😆😆🤝

[7/31, 10:52 AM] Elango: நன்றி பாஸ்டர். கிறிஸ்மஸ் கொண்டாடலாம்😀🤝

[7/31, 10:53 AM] Levi Bensam Pastor, V: தினந்தோறும் கொண்டாடலாம்😆😆😆

[7/31, 11:03 AM] Levi Bensam Pastor, V: 1யோவான் 3: 8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், *பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.*👍👍👍👍👍👍
1 John 3: 8
He that committeth sin is of the devil; for the devil sinneth from the beginning. *For this purpose the Son of God was manifested, that he might destroy the works of the devil.*🙏🙏🙏🙏

[7/31, 11:05 AM] Levi Bensam Pastor, V: *ஏன் இயேசு கிறிஸ்து பிறந்தார்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 லூக்கா 19: 10
*இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்*.

Luke 19: 10
*For the Son of man is come to seek and to save that which was lost.*

[7/31, 11:08 AM] Christopher Pastor, V: ரோமர் 14:  5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.
6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.
7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

[7/31, 11:08 AM] Levi Bensam Pastor, V: *இயேசு கிறிஸ்து ஏன் பிறந்தார்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 1தீமோத்தேயு 1: 15
*பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.*

1 Timothy 1: 15
*This is a faithful saying, and worthy of all acceptation, that Christ Jesus came into the world to save sinners; of whom I am chief.*🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

[7/31, 11:10 AM] Christopher Pastor, V: I கொரிந்தியர் 5:  6 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
12 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
13 புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.

[7/31, 12:50 PM] Elango: 😭😭😭👍🏻👍🏻

ஆமோஸ் 5:21,23-24
[21] *உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.*
[23]உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
[24]நியாயம் தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது.

[7/31, 1:03 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 31/07/2017* ♦

1⃣ *கிறிஸ்மஸ், சாம்பல் புதன், லெந்து நாள், குறுத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர்*  போன்றவை தோன்றின வரலாறு என்ன? இவைகளை ஆதி சபையினர் அனுசரித்தனரா? இன்று நாம் அனுசரிக்கலாமா? என்பதை தியானிக்கலாம்.

2⃣  யோவான் சுவிஷேசத்தில் சொல்லப்பட்ட *சுத்திகரிப்பின் பண்டிகை* ( விளக்குகளின் பண்டிகை) என்றால் என்ன❓ஏன் இந்த பண்டிகை யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்தது❓இந்த பண்டிகையில் என்னவெல்லாம் செய்தார்கள்❓

_*இன்றையோடு பண்டிகைகளை பற்றிய தியானம் முடிவடைகிறது*_
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/31, 1:23 PM] Christopher Pastor, V: எரேமியா 2:  3 இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.
4 யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
6 என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
7 செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
8 கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
11 எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
13 என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
21 நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
32 ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
37 நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

[7/31, 2:29 PM] Elango: அப்போஸ்தலர் 20:16
[16] *பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம்,* தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம்.

பெந்தேகோஸ்தே பண்டிகையை பவுல் ஆசரிக்க விரும்பினாரா?

[7/31, 2:39 PM] Elango: லூக்கா 22:15
[15]அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

*ஆண்டவர் இயேசு பஸ்காவை அனுசரிக்க ஆசையாக இருந்தாரா அல்லது பஸ்காவை சீஷர்களோடு புசிக்க ஆசையாக இருந்தாரா*?

[7/31, 4:06 PM] Rooban VM: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.

But I say unto you, That whosoever is angry with his brother without a cause shall be in danger of the judgment: and whosoever shall say to his brother, Raca, shall be in danger of the council: but whosoever shall say, Thou fool, shall be in danger of hell fire.

மத்தேயு 5:22

இவ்வசனத்தின் தெளிவான விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்😇நன்றி

[7/31, 4:07 PM] Elango: *புறஜாதியாருடைய பண்டிகை நாளான டிசம்பர் 25ம் தேதியையே கான்ஸ்டன்டைன் கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கினான். பல கிறிஸ்தவர்களும் புறமத தெய்வத்தின் பண்டிகை நாளே கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும்.*

*உண்மையில் கிறிஸ்தவர்களின் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டே புறஜாதி மக்கள் தங்களுடைய பண்டிகையை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடியுள்ளனர். எனவே. டிசம்பர் 25ம் தேதி பண்டிகை புறமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு வந்த கொண்டாட்டம் அல்ல.*

புறமதப் பண்டிகையின் நாளே கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றப்பட்டது என்னும் கருத்து முதற்தடவையாக கி.பி. 17ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே உருவானது. (1) ஆனால் கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மதமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் தேதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் தேதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது. (2). எனவே, *கிறிஸ்மஸ் பண்டிகையின் நாள், புறமதப் பண்டிகை நாளின் கிறிஸ்தவ மாற்றம் அல்ல.*

*கான்டஸ்டன்டைன் என்னும் அரசன் டிசம்பர“ 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடியதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை*

உண்மையில் இவ்வரசனுடைய மரணத்திற்கும் (கி.பி. 337) பின்பே. அதாவது கி.பி 379ம் ஆண்டே முதற்தடவையாக இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்பட்டது.

*எனவே, கான்ஸ்டன்டைன் என்னும் அரசனே புறமதப் பண்டிகை நாளைக் கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றினான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.*

- இப்படியும் வேத வல்லுனர்கள் சொல்லுகின்றனர். நீங்கள் சொல்வது சரியா? அவர்கள் சொல்வது சரியா?

[7/31, 4:14 PM] Levi Bensam Pastor, V: டிசம்பர் மாதம் குளிர் மாதம் என்றால், மேய்ப்பர்கள் எப்படி வெளியே தங்கியிருக்க முடியும் ❓ ❓ ❓

[7/31, 4:15 PM] Levi Bensam Pastor, V: லூக்கா 2:8
[8]அப்பொழுது *அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.*

[7/31, 4:18 PM] Jeyanti Pastor VT: கர்த்தருடைய பிறப்பு ஏப்ரல் மாதத்தில் தான்,  என்று கனித்துள்ளனர்.  மலை என்பதால் குளிர் இருந்திருக்குமோ பாஸ்டர்?

[7/31, 4:22 PM] Elango: ஆமென் ஆமென்

1 கொரிந்தியர் 10:31-32
[31] *ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.*

[32]நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;

[7/31, 4:22 PM] Levi Bensam Pastor, V: *Good Friday ஏப்ரல் மாதம் வருகிறது, வெயில் காலத்தில் எப்படி குளிர்காய முடியும்*👇👇👇👇👇👇👇👇👇 மாற்கு 14:66-67
[66]அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,
[67] *குளிர்க்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு,* அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.

[7/31, 4:26 PM] Peter David Bro VT: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட காலம் இந்த வசனத்தில் உள்ள மாதம் எது பாஸ்டர்  யோவான் 18:18
குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.

[7/31, 4:29 PM] Levi Bensam Pastor, V: *நீங்கள் கிறிஸ்துவை ஒருவருக்குள் உருவாக்கிய அனுபவம் உண்டா, அது தான் Christ+Mas= Christmas*😆😆😆😆😆😆👍 🤶கலாத்தியர் 4:18-19
[18]நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில், இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்.
[19]என் சிறுப்பிள்ளைகளே, *கிறிஸ்து உங்ளிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.* Happy Christmas 👍👍👍👍

[7/31, 4:34 PM] Elango: ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக." (கொலோசெயர்.2:16)

*மேற்கண்ட வசனத்தின்படி எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுபவன் மற்றவனை இழிவாக நடத்தக்கூடாது; அதுபோலவே கொண்டாடாதவனும் மற்றவனைக் குற்றப்படுத்தக்கூடாது என்கிறார், பவுல்ல்*

அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன் தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்."(ரோமர்.14:5)

[7/31, 4:36 PM] Elango: *பண்டிகைகளையும் பலிகளையும் வெறுத்த கர்த்தரே தமது ஜனத்துடன் சேர்ந்து பண்டிகையினை ஆசரித்தார் என்பதை மறக்கக்கூடாது;*

லூக்கா 22:15
[15] அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

[7/31, 4:38 PM] Levi Bensam Pastor, V: *பவுலுடைய கிறிஸ்துமஸ்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 அப்போஸ்தலர் 26:27-29
[27]அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்.
[28]அப்பொழுது *அகிரிப்பா பவுலை நோக்கி: நான்🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂👇👇👇👇👇👇👇 கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.*👇👇👇👇👇👇👇👇
[29] *அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.*

[7/31, 4:39 PM] Levi Bensam Pastor, V: *மரண போராட்டதின் மத்தியில் பவுலுடைய போராட்டம்*👍👍👍👍👍👍

[7/31, 4:48 PM] Levi Bensam Pastor, V: *சிறையில் இருந்து தப்பிக்க பவுலுக்கு பல வழி இருந்தது, But பேலிக்ஸ்க்கே மரண பயத்தை காண்பித்தார், கிறிஸ்து உருவாக மரண போராட்டம், கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்*😆😆😆😆👇👇👇👇👇👇👇👇👇👇👇அப் 24:24-27
[24]சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, *பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[25] *அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.*👇👇👇👇👇👇👇👇
[26]மேலும், *அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.*
[27]இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது *பேலிக்ஸ் யூதருக்கு தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்*👍👍👍👍👍👍👍.

[7/31, 4:58 PM] Levi Bensam Pastor, V: *உண்மையான ஒரு தேவ பிள்ளையின் மகா பெரிய சந்தோஷம்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 லூக்கா 10:17-24
[17]பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
[18]அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
[19]இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
[20] *ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள்👇👇👇👇😆😆😆😆😆❌❌❌❌ சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச்😆😆😆😆😆😆😆😆😆 சந்தோஷப்படுங்கள்* என்றார்.
[21]அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
[22]சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று, அறியான் என்றார்.
[23]பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங்கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
[24]அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

[7/31, 5:08 PM] Elango: இப்போதெல்லாம் கிறிஸ்மஸ், ஈஸ்டர் பண்டிகைகளுக்கு மட்டுமே, சில பெயர் கிறிஸ்தவர்கள் சபை ஆராதனைக்கு வருகிறார்கள் பாஸ்டர்.

கிறிஸ்மஸ், ஈஸ்டர் பண்டிகை வேண்டாம் என்றால், அன்றைக்கு கூட அவர்கள் சபை ஆராதனைக்கு வந்து இதேவ வார்த்தை கேட்டு மனந்திரும்ப ஒரு வாய்ப்புண்டு...

[7/31, 5:08 PM] Levi Bensam Pastor, V: *கிறிஸ்மஸ் கொண்டாடுங்க நல்லது தான், ஆனாலும் பரலோகமும், தூதர்களும் சந்தோஷ படுகிற ஒரு தருணம் உண்டு👇👇👇👇👇👇 கிறிஸ்துவே உனக்குள் வருகிறபோது தான் பரலோகமே களிகூர்ந்து மகிழும்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 லூக்கா 15:6-7,9-10
[6]வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: *காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன்,* என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
[7] அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் *மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.*
[9]கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
[10] *அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.*

[7/31, 5:10 PM] Levi Bensam Pastor, V: *சவூதியில் நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன்* 👍👍👍👍

[7/31, 5:10 PM] Christopher Pastor, V: மத்தேயு 5:  23 ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,
24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம்பொருந்து.

[7/31, 5:14 PM] Elango: அல்லேலுயா....🙋♂ நாங்கள் சுவிஷேசம் அறிவிக்க இந்த விஷேசமான நாட்களை பயன்படுத்திக்கொள்ளுளுவோம்.... மற்ற நாட்களில் போலிஸ் நிலையங்களில் பைபிள் கொடுக்கமுடியாது.... கடந்த முறை இந்த நாளை பயன்படுத்தி.... போஸ்ட் ஆபிஸ், கல்லூரி, காவல்துறை, ஜெயில் போன்ற இடங்களுக்கு ... கேக் சாக்லேட் கொடுத்து சுவிஷேசம் அறிவித்தோம்..... பண்டிகை நாங்கள் கொண்டாட விரும்பவில்லை.... வழிதப்பிய ஆடுகளை விருந்து சாலைக்கு அழைப்பிதல் கொடுக்கக இந்த நாளை பயன்பபடுத்திக்கொள்கிறோம்....

[7/31, 5:18 PM] Levi Bensam Pastor, V: 1 கொரிந்தியர் 9:18-23
[18]ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், *கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.*
[19]நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், *நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.*👇👇👇👇👇👇👇👇👇 👇
[20] *யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.*👇👇👇👇👇👇
[21] *நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.*👇👇👇👇👇👇👇👇👇👇
[22] *பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; 👉 👉 👉 👉 👉 👇👇👉எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.*
[23]சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.👍👍👍👍👍👍👍

[7/31, 5:21 PM] Elango: ஆமென்

பிலிப்பியர் 2:4
[4] *அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.*

[7/31, 5:22 PM] Christopher Pastor, V: லூக்கா 15:  7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[7/31, 5:30 PM] Elango: யாத்திராகமம் 12:14 *அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக;* அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.

உபாகமம் 15:15 *நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்;* ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

பண்டிகைகளும், தேவன் நமக்காக செய்த அடையாளங்களும், நம்முடைய சந்ததிகளும், நம் சந்ததிகளின் சந்ததியும் நினைவுகூறுவதற்க்காகவும் அது ஒரு நினைவுகூறுதல் ஆகும்..

நம் பாட்டன், பூட்டன் பெயரையே நாம் மறந்து போகும் இக்கால சந்ததியில்... தேவனுடைய அதிசய அற்புத கிரியைகளை நாமும் மறக்காமல் நினைவில் வைத்திருப்போம்... நம் சந்ததிக்கும், பின்வரும் சந்ததிக்கும் அறிவிப்போம்....

[7/31, 5:30 PM] Levi Bensam Pastor, V: *கிறிஸ்து பிறந்த போது சிலருக்கு கலக்கம்*👇 👇 👇 👇 👇 👇 மத்தேயு 2:1-3
[1]ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
[2], *யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்.*👇👇👇👇👇👇👇👇👇
[3] *ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.*

[7/31, 5:31 PM] Peter David Bro VT: ஏசாயா 55:11
[11]அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

[7/31, 5:38 PM] Elango: ரோமர் 12:15
[15]சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்;😀😀😀😀💃💃💃💃💃 அழுகிறவர்களுடனே அழுங்கள்.😢😢😭😭😭

[7/31, 5:44 PM] Levi Bensam Pastor, V: *பண்டிகையின் பிரதானம்*👇 👇 👇 👇 👇 👇 👇 யோவான் 7:37-38
[37] *பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.*☝️ 👆 👆 👆 👆 👆 👆 👆 👆
[38] *வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் 👍👍👍👍👍ஓடும் என்றார்.*

[7/31, 5:51 PM] Levi Bensam Pastor, V: *இதுவும் super பண்டிகை*👇 👇 👇 👇 👇 👇 👇 1 கொரிந்தியர் 5:7-8
[7]ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
[8]ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே *பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்*.

[7/31, 6:14 PM] Jeyasingh VM: அது வேதத்தில் சொல்லப்படவில்லையே!

[7/31, 6:20 PM] Elango: பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட 7 பண்டிகைகளில், நிறைவேறாத அல்லது நிறைவேறப்போகிற 3 பண்டிகைகளை நாம் கொண்டாடலாமா?

தேவன் அதை கொண்டாட சொன்னார் தானே...

[7/31, 6:21 PM] Elango: எக்காள பண்டிகை
பாவ நிவாரண நாளின் பண்டிகை
கூடார பண்டிகை

[7/31, 7:33 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 31/07/2017* ♦

1⃣ *கிறிஸ்மஸ், சாம்பல் புதன், லெந்து நாள், குறுத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர்*  போன்றவை தோன்றின வரலாறு என்ன❓ இவைகளை ஆதி சபையினர் அனுசரித்தனரா❓ இன்று நாம் அனுசரிக்கலாமா❓ என்பதை தியானிக்கலாம்.

2⃣  யோவான் சுவிஷேசத்தில் சொல்லப்பட்ட *சுத்திகரிப்பின் பண்டிகை* ( விளக்குகளின் பண்டிகை) என்றால் என்ன❓ஏன் இந்த பண்டிகை யூதர்களால் அனுசரிக்கப்பட்டு வந்தது❓இந்த பண்டிகையில் என்னவெல்லாம் செய்தார்கள்❓

_*இன்றையோடு பண்டிகைகளை பற்றிய தியானம் முடிவடைகிறது*_
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[7/31, 8:17 PM] Elango: முதலாவது கேள்விக்கு பதில் என்னவென்றால், பண்டிகைகளை அனுசரிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று பார்க்கும்போது..பழைய ஏற்ப்பாடு காலத்தில் ஆண்டவர் தேதியை மாதத்தை கூட குறிப்பிடுகிறார்.

ஆனால்  *கிறிஸ்மஸ், சாம்பல் புதன், லெந்து நாள், குறுத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர்*  இவைகளுக்கெல்லாம் வேதத்தில் தேதிகள் அறிவிக்கப்படவேயில்லை.

ஆண்டவர் பிறந்து 2017 வருடம் தான் ஆகிறது என்று சொல்லும்போது, மகிமையுள்ள தேவனின் சத்தியத்தை மறைப்பது போல் இருக்கிறது.  அவர் அநாதியாயிருக்கிறார் ஆதியும் அந்தமும் அவரே.

 *கிறிஸ்மஸ், சாம்பல் புதன், லெந்து நாள், குறுத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர்*  போன்றவைகளெல்லாம் பின்னாடி வந்தவைகள், ஆதி சபைகளோ, ஆதி அப்போஸ்தலர்கள் யாருமே இவைகளை கொண்டாடினதில்லை.

அண்ட சராசரங்களை உருவாக்கின தேவனுக்கு சத்திரத்தில் கூட இடமில்லை. ஆனா முன்னனையில் கிடத்தி வைச்சிருக்காங்க.

நமக்கு எந்நாளுமே கொண்டாட்டம் தான். பரிசுத்த ஆவியினால் நிறைகிற சந்தோஷம் ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும்.எந்நாளும் சிலுவையை சுமக்க வேண்டும்.

உலக பிரகாரமான மனுஷர்கள் செய்வது போல இயேசுவை வருஷம் வருஷம் பண்டிகையில் சிலுவையில் அறைவதும், சின்ன இயேசு பெரிய இயேசு என்று சொல்லி கர்த்தருக்கு மகிமையை செலுத்தாமல் இருக்கிறார்கள்.

இனி அவர் இராஜாதி இராஜாவாக, கர்த்தாதி கர்த்தராக  வரப்போகிறார்.

அத்தேனே பட்டணத்தில் விக்கிரகங்கள் இருந்த இடத்திலும் பவுல் பிரசங்கம் செய்தது போல, நாமும் கிறிஸ்துவை அறியாத பகுதியில் கிறிஸ்துவை அறிவிக்க இந்த நாட்களை பிரயோஜன படுத்தலாம்.

*கிறிஸ்து நமக்குள் அனுதினமும் பிறக்க வேண்டும்.என்றைக்கு நாம் புதிய மனிஷனாக பிறக்கிறோமோ,   அப்போதுதான் நமக்கு உண்மையான சந்தோஷம். அதுதான் கிறிஸ்துவுக்கு முன்,  கிறிஸ்துவுக்கு பின் உள்ள வாழ்க்கை.*

- Pastor Levi @⁨Levi Bensam Pastor, V⁩

[7/31, 8:43 PM] Elango: ஆதி கிறிஸ்தவர்களோ, ஆதி அப்போஸ்முதலாவது இந்த   *கிறிஸ்மஸ், சாம்பல் புதன், லெந்து நாள், குறுத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர்* பண்டிகைகளை கொண்டாடினதாக எந்த சான்றிதழும் எங்கும் காணப்பட வில்லை.

 அதேப்போல *கிறிஸ்மஸ்,  லெந்து நாள்,  ஈஸ்டர்*  இவைகள் எல்லாமே பாபிலோனை பழக்கத்தை தழுவிய பண்டிகைகள் என அநேக வேத வல்லுனர்களும், ஆராய்ச்சியாளரும் கூறுகின்றனர்.

ஆதி கிறிஸ்தவர்கள் முதல் நூற்றாண்டு சபை, இயேசுகிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து அதை அனுசரித்தார்களே ஒழிய, இயேசுகிறிஸ்துவின் பிறந்த நாளை முக்கியப்படுத்தியதாகவோ, அதை கொண்டாடினதாகவோ வேதத்தில் எங்கும் குறிப்பும் இல்லை, சரித்தரத்திலும் குறிப்பும் இல்லை.

அதேப்போல டிசம்பர் 25 ஆம் தேதிதான் இயேசு பிறந்தார் என்பதற்க்கும் எந்த சரித்திரபூர்வமான எந்த ஆதாரமும் இல்லை.

1939 ஜனவரி மாதம் சயின்ஸ் டைஜிஸ்ட் என்கிற பத்திரிக்கை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

பண்டைகால பழங்குடி மக்கள்,  குளிர்கால பண்டிகையை டிசம்பர் 25 ஆம் தேதியில் கொண்டாடினர். ஏனெனில் சூரியன் அந்த நாளிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும்.அந்த பண்டிகையை கிறிஸ்ததவர்கள் கிறிஸ்து பிறந்த நாளாக மாற்றிவிட்டனர், பின்பு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு அதை கிறிஸ்மஸ் என்று கொண்டாட ஆரம்பித்தனர்...என்கிற குறிப்பை அந்த பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/31, 8:49 PM] Sam Jebadurai Pastor VT: இயேசு கிறிஸ்து கூடார பண்டிகையை ஒட்டி தான் பிறந்திருக்க வேண்டும்.அதாவது செப்டம்பர் பின்பகுதியில் அல்லது அக்டோபர் முன்பகுதியில். ஏனெனில் ஆசரிப்பு கூடாரம் இயேசுவின் நிழல்.
Exodus          25:8  "அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக."

Exodus 25:8  And let them make me a sanctuary; that I may dwell among them.

[7/31, 8:50 PM] Sam Jebadurai Pastor VT: அதாவது திஷ்ரி மாதம்

[7/31, 8:52 PM] Sam Jebadurai Pastor VT: ஹணுக்கா பண்டிகை புதிய ஏற்பாட்டில் தேவாலய பிரதிஷ்டை பண்டிகை என அழைக்கபடுகிறது.
John            10:22-23
22 பின்பு எருசலேமிலே *தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை* வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.

[7/31, 8:56 PM] Sam Jebadurai Pastor VT: ஹணுக்கா விளக்குகளின் பண்டிகை எனவும் அழைக்கப்படும்.

[7/31, 8:57 PM] Sam Jebadurai Pastor VT: சுத்தமான தமிழில் ஆலய அர்ப்பண விழா என அழைக்கலாம்

[7/31, 9:30 PM] Silvaster VM: 🙏🏽 Amen
Praise the lord Jesus Christ

[7/31, 10:33 PM] Elango: நமக்கு எந்நாளுமே பண்டிகை. ஒரு நிமிஷம் கூட விலக்கு கிடையாது.

அன்றைக்கெல்லாம் எருசலேம் தேவாலயத்திற்க்கு போகும் போது மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடினார்கள்.இப்போது நாமே அவருடைய ஆலயமாக மாற்றிவிட்டார். எந்நாளும் நம்மோடு வசிக்கிறார். தேவன் வசிக்கிற நாளெல்லாம் நமக்கு பண்டிகை தான்.

பழைய ஏற்ப்பாட்டில் லேவி கோத்திரத்தார் வேறே யாரும்,  ஆலய காரியங்களில் ஈடுபட முடியாது. ஆனால் புதிய ஏற்ப்பாடு காலத்தில் நம்மை அந்தகார இருளிலிருந்து,  ஆச்சர்யமான ஒளியிடனித்திற்க்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதே பெரியதொரு சுவிஷேசம்.

யோவான் 7:37-38
[37]பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

[38] *வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.*

இயேசு வெளியே நின்று கொண்டு கதறுகிறார், ஜனங்கள் உள்ளே போய் ஆண்டவரை தேடுகிறார்கள்.

சாலமோன் கட்டின ஆலயத்தில் வசிக்காதவர் கைவேலையில்லா ஆண்டவர் சிருஷ்டித்த இந்த சரீரத்திலே , நமக்குள்ளே வசித்தால்... இதை விட பெரிய பண்டிகை வேறே உண்டா.

நாம் பண்டிகை கிறிஸ்தவர்களாக இராதபடிக்கு, கிறிஸ்து நமக்குள் வசித்து, எந்நாளும் ஆவியில் பிறப்போம், ஆவியில் பிறந்த மனுஷனை நிதானிக்கவே முடியாது. எந்நாளும் மகிழ்ச்சி, களிப்பு, சந்தோஷம். தேவன் நம் சரீரத்தில் எப்பொழும் இருப்பது தான் மிகப்பெரிய பண்டிகை.

- Pastor Levi @⁨Levi Bensam Pastor, V⁩

[7/31, 10:45 PM] Elango: *கிறிஸ்மஸ் வந்தவிதம் எப்படி இருந்தாலும் அதை கொண்டாடலாமா வேண்டாமா என்ற எந்த குழப்பமும் நமக்கு இருக்கக்கூடாது*

அவர் பிறந்த நாள் தான் எந்த நாள் என்று தெரியாதே தவிர, இயேசுகிறிஸ்து மனித உருவெடுத்து மனிதனுக்காக, தேவனாயிருந்தும் மனித உருவெடுத்து, இந்த பூமியில் பிறந்தார் என்ற சத்தியம் மாறாதது.

*இயேசு எந்த நாளில் இந்த பூமியில் மனிதனாக பிறந்தார் என்ற நாள் நமக்கு தெரியாததினால், எதாவது ஒரு நாளை வைத்து, அதை கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை*

இயேசு பிறக்காமலேயே அவர் பிறந்தார் என்று சொல்வதே தப்பு. அவர் பிறந்தார் என்பதை கொண்டாடுவது தவறு அல்ல. ஆனால் அந்த நாளில் தான் பிறந்தார் என்று வாதிட கூடாது.

இயேசு இந்த உலகத்திலே வந்த நோக்கம் பாவிகளை இரட்சிக்க, மனிதனின் பபாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய.. இதற்காக தான் இயேசு இந்த பூமியில் வந்தார். இதை நம்புகிறவர்கள் தான் கிறிஸ்தவர்கள்.

பாவ மன்னிப்பை பபெற்ற அனைவருமே கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுவதற்க்கு நமக்கு தகுதி இருக்கு, பாவ மன்னிப்பின் நிச்சயமற்றவர்கள் தான் கிறிஸ்து பிறக்கவில்லை.. என்று அறிக்கை செய்வார்கள்.

*கிறிஸ்து பிறந்தநாள் என்றயறு ஒரு நாள் இருக்கிறது என்கிற நினைவோடு, கட்டாயமாக கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுவதில் எந்ந தவறும் இல்லை*

- Pastor Charles @⁨Charles Pastor VT⁩

[7/31, 11:26 PM] Rooban VM: கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடுவதால் என்ன பயன்?

கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடாமல் இருந்தால் என்ன பயன்?

வரலாறு கொண்டாட வேண்டாம் என்கிறது

பாரம்பரியம் கொண்டாடுங்கள் என்கிறது

நாம் எந்த பக்கம் நம் கருத்துக்களை பதிவிட்டாலும் தன் வாதம் தான் நியாயம் என்று எண்ணாமல் எது சரி எது நியாயம், என்று பார்த்து பதிவிட்டால்  விடை எளிதாய் கிடைத்துவிடும்...முயற்ச்சித்துப்பாருங்கள்..நன்றி👋

[7/31, 11:27 PM] Sam Jebadurai Pastor VT: கிமு இரண்டாம் நூற்றாண்டில்  BC 167 ல் இஸ்ரவேல் தேசம் அடிமைப்பட்டு இருந்தது. அப்போது மத்தியாஸ் எனும் ஒரு யூத ஆசாரியரை பிடித்து அவரது சொந்த ஊரில் ஜீயஸ் எனும் தங்களது தெய்வத்தை வணங்க வற்புறுத்தினர்.  அவர் அங்கிருந்த பலிபீடத்தை இடித்து வற்புறுத்திய வீரனையும் கொன்று
அரசனுக்கு எதிராக புரட்சி செய்தார்.
அவரும் அவருடைய ஐந்து புதல்வரும் (மக்கபேயர்கள்) மலைக்கு ஓடி அங்கேயிருந்து புரட்சி செய்து செலுசி மன்னன் அன்டியோகஸ் IV க்கு எதிராக வெற்றியும் கொண்டு எருசலேமையும் பிடித்தனர். பின் எருசலேமில் இருந்த இரண்டாவது தேவாலயத்தை சுத்திகரித்தனர். தேவ கட்டளைபடி  (Leviticus       24:2  குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.)
எப்போதும் குத்து விளக்கு எரிய வேண்டும்.எண்ணெய் இல்லாத சூழலில் ஒரு நாள் மட்டுமே எரிய போதுமான எண்ணெயில் தேவாலய குத்து விளக்கு  எட்டு நாட்கள் தொடர்ந்து எரிந்ததை கொண்டாடும் பண்டிகை இது.
ஹணுக்கா எட்டு நாட்கள் கொண்டாடப்படும். இந்த நாட்களில் ஒன்பது கிளைகளை கொண்ட குத்து விளக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்படும்.
 இயேசு கிறிஸ்துவும் தேவாலயத்தை சுத்திகரித்தார்.
இயேசு கிறிஸ்து ஒளியாக இருக்கிறார்.

John            1:9, 14
9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
14 "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது."
John            8:12  "மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்."
அந்த ஒளி நம்மையும் பிரகாசிக்க பண்ணுகிறது.
Matthew         5:14  நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

[7/31, 11:28 PM] Sam Jebadurai Pastor VT: *ஹணுக்கா*

[7/31, 11:40 PM] Sam Jebadurai Pastor VT: இது டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. பொதுவாக கிறிஸ்துமஸை ஒட்டி வரும்

Post a Comment

0 Comments