Type Here to Get Search Results !

12 கோத்திரம் என்றால் என்ன? ரூபன் கோத்திரத்தை வேதம் என்ன கூறுகிறது❓

 [08/09 9:37 am] Elango: 👨‍👩‍👧‍👦 *இன்றைய வேத தியானம் - 08/09/2017*👨‍👩‍👧‍👦
 
1⃣ *கோத்திரம் என்றால் என்ன❓* 12 கோத்திரங்களை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓12 கோத்திரங்களை தேவன் ஏன் தெரிந்துக்கொண்டார்❓
 
2⃣ இஸ்ரவேலின் கோத்திரங்களை குறித்த தீர்க்கதரிசனங்கள் என்ன❓
 
3⃣ புதிய எருசலேமின் 12 வாசல்களில், 12 கோத்திரங்களின் பெயர்கள் எழுதப்பட ஏதாவது காரணங்கள் உண்டா❓
 
4⃣ *முதல் கோத்திரமான ரூபன் கோத்திரத்தை வேதம் என்ன கூறுகிறது❓*
 
5⃣ ரூபனின் நற்குணங்கள் என்னென்ன❓ரூபனின் தீயகுணங்கள் என்னென்ன❓
 
6⃣ ரூபன் ஆசீர்வாதங்கள் என்னென்ன❓சாபங்கள் என்னென்ன❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev
 
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
 
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
 
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
 
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[08/09 9:48 am] Aa Prabhu Sasirekha Sis VTT: கோத்திரம் means குடும்பத்திற்கு வைக்கப்படும்  பெயர்கள்

[08/09 9:56 am] Elango: பொதுவாக கோத்திரம் என்றால் வடஇந்தியாவில் சொல்லப்படுகிற *Surname* என்று வைத்துக்கொள்ளலாமா?
 அல்லது ஒரு பெரிய ஜாதிவகையை சொல்லலாமா?
 நீ என்ன கோத்திர குலம்? என்று நாம் பொதுவாக பேசுவதை கேட்டிருக்கிறோம்...

[08/09 9:58 am] Abraham Bro VTT: கோத்திரம் - சந்ததி

[08/09 10:00 am] Elango: யாக்கோபின் ஒரு சந்ததி தானே 12 கோத்திரங்கள்...
 
ஒரு சந்ததியா அல்லது 12 சந்ததியா? நீங்கள் கோத்திரம் என்றால் சந்ததி என்று சொல்லும்போது...?

[08/09 10:00 am] Abraham Bro VTT: Ex :-இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். - மத்தேயு 1:1

[08/09 10:12 am] Aa Sam Jebadurai Pastor VDM: Yes ... மூல மொழியில் இரண்டும் வேறு வேறே

[08/09 10:14 am] Aa Sam Jebadurai Pastor VDM: சந்ததி என்பது குடும்பத்தையும் கோத்திரம் என்பது குடும்ப கிளையையும் குறிக்கும். இஸ்ரவேல் குடும்பத்தில் வந்த 12 கிளைகளே 12 கோத்திரங்கள்.

[08/09 10:15 am] Aa Robert Pastor VDM: ஐயா உங்கள் ஆடியோ இரைச்சல்லாக இருக்கிறது .

[08/09 10:17 am] Aa Robert Pastor VDM: நன்றி ஐயா

[08/09 10:20 am] Aa Sam Jebadurai Pastor VDM: சந்ததி- משׁפּחה-மிஷ்பாஹா
கோத்திரம்-שׁבט-ஷேபெத்

[08/09 10:25 am] Elango: 🙏🏻👍🏻
நன்றி பாஸ்டர் . ஆங்கிலத்தில் கோத்திரத்தை எப்படி அழைக்கலாம்..
 
Family, Lineage, descent, race....
 
கிளை, கிளைவழி, குலம், குடும்பம், சந்ததி...

[08/09 10:25 am] Aa Sam Jebadurai Pastor VDM: தமிழில் வெகு சில இடங்களில் மிஷ்பாஹா கோத்திரம் என மொழிபெயர்க்கபட்டுள்ளது

[08/09 10:25 am] Aa Sam Jebadurai Pastor VDM: கிளை என அழைக்க கூடாது

[08/09 10:26 am] Aa Sam Jebadurai Pastor VDM: மன்னிக்கவும் குடும்பம் என அழைக்க கூடாது

[08/09 10:33 am] Aa Robert Pastor VDM: ஆதாம் ஏவாள் பிள்ளைகளையும் கோத்திரங்கள் சொல்லலாம ஐயா.

[08/09 10:34 am] Aa Sam Jebadurai Pastor VDM: புரியவில்லை

[08/09 10:37 am] Elango: இஸ்ரவேலின் - யாக்கோபின் குமாமரர்களையே தேவன் கோத்திரங்களாக அழைக்க முன்குறித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.... ஆதாமின் பிள்ளைகளை ஏன் தேவன் கோத்திரங்களாக முன் குறிக்கவில்லை.. என்றும் யோசிக்கலாம்...

[08/09 10:39 am] Aa Robert Pastor VDM: ஆதாம் சந்ததி என்றால் காயீன் ஆபேல் அவரின் கிளைகள் தானே . இவர்கள் கோத்திரமா

[08/09 10:39 am] Aa Robert Pastor VDM: ஆதாம் சந்ததி என்றால் காயீன் ஆபேல் அவரின் கிளைகள் தானே . இவர்கள் கோத்திரமா

[08/09 10:40 am] Elango: 1. நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
 
2. யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
 
3. கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
 
4. யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
 
5. இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், *அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும்,* ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
 
6. காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். ஆதியாகம் 10:1-6
 
*இங்கேயும் கோத்திரம் என்ற வார்த்தை வந்திருக்கிறது... ஆனால் தேவன் யாக்கோபின் 12 கோத்திரங்களை முக்கியப்படுத்த காரணங்கள், தீர்க்கதரிசனங்கள் கண்டிப்பாக இருக்கும்.*

[08/09 10:41 am] Aa Robert Pastor VDM: கோத்திரம் என்று யாக்கோபு பிள்ளளுக்கு மட்டுமே இருக்கிரதே ?

[08/09 10:41 am] Aa Sam Jebadurai Pastor VDM: கோத்திரம் என்ற வார்த்தை முதல் முதலில் தமிழ் வேதாகமத்தில் ஆதி 10:5 ல் வருகிறது. ஆனால் அங்கே பயன்படுத்தபட்ட வார்த்தை மிஷ்பாஹா. ஷேபேத் என்பது தான் கோத்திரம் என்பது ஆதி 49 ல் தான் வருகிறது.

[08/09 10:42 am] Elango: கிளை, கிழைவழி, குலம், கோத்திரம், சந்ததி, ச்நதானம், வம்சம், குடும்பம் - என்ற வார்த்தகளுக்கு நாம் அர்த்தம் தெரிந்தாலே... கோத்திரத்தை புரிந்துக்கொள்ள முடியும்...

[08/09 10:43 am] Aa Sam Jebadurai Pastor VDM: யாக்கோபின் பிள்ளைகளை தான் கோத்திரம் என கூற வேண்டும் ஏனெனில் ஷேபேத் என்பதற்கு நியாயம் விசாரிப்பது,ஆளுகை செய்வது என்ற அர்த்தம் உண்டு

[08/09 10:43 am] Elango: இதற்கு தான் எபிரேயம் கற்றிருக்க வேண்டும். 👍🏻😇

[08/09 10:44 am] Aa Robert Pastor VDM: புரிந்தது ஐயா 🙏

[08/09 10:45 am] Aa Sam Jebadurai Pastor VDM: இது மிகவும் எளிமையான விளக்கம். இதை இன்னும் கடினமாக்க வேண்டிய அவசியம் இல்லை

[08/09 10:46 am] Aa Robert Pastor VDM: நல்லது ஐயா

[08/09 10:47 am] Elango: *கோத்திரத்திற்க்கு சத்த தமிழில் குலங்கள்* என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன்

[08/09 10:49 am] Aa Sam Jebadurai Pastor VDM: வசனத்தை பொது மொழிபெயர்ப்பில் இருந்து பதிவிடுங்கள்

[08/09 10:53 am] Aa Sam Jebadurai Pastor VDM: அங்கேயும் கோத்திரம் எனவும் குடும்பம் எனவும் மொழிபெயர்க்கபட்டுள்ளது😃

[08/09 10:54 am] Elango: 16 தாண், *இஸ்ரயேலின் குலங்களில்* ஒன்றாக, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
 
தொடக்கநூல் 49:16
 
21 இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம், *பன்னிரண்டு குலங்கங்களுக்காகப்* பன்னிரன்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு முத்திரைபோல் விளங்கும்.
 
விடுதலைப் பயணம் 28:21
 
இன்னோரு மொழிப்பெயர்ப்பில் கோத்திரத்திற்க்கு குலங்கள் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

[08/09 10:55 am] Aa Sam Jebadurai Pastor VDM: கிளை என்பதை மரத்தின் கிளை எனவும்,  சந்ததி என்பதை மரமாகவும் குடும்பமாகவும் புரிந்தால் எளிது

[08/09 10:57 am] Elango: அருமை..

[08/09 11:01 am] Aa Robert Pastor VDM: அருமையான பதிவு நன்றி

[08/09 11:03 am] Aa Robert Pastor VDM: ரூபன் கோத்திரத்தை பற்றி மேலும் விரிவான விளக்கம் வேண்டும் ஐயா.🙏

[08/09 11:16 am] Aa Robert Pastor VDM: ஐயா. ஷெபேத் என்றால் ஆளுகை.
மிஷ்பாஹா என்றால் என்ன?
கொஞ்சம் விளக்கம் வேண்டும் ஐயா

[08/09 11:18 am] Aa Sridhar VDM: ஐயா கோத்திரம் என்பது இந்தியாவில் மாத்திரமா இவை வெளிநாடுகளிலும் உள்ளதா.

[08/09 11:48 am] Elango: 🕎  *இன்றைய வேத தியானம் - 08/09/2017* 🕎
 
1⃣ *கோத்திரம் என்றால் என்ன❓* 12 கோத்திரங்களை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓12 கோத்திரங்களை தேவன் ஏன் தெரிந்துக்கொண்டார்❓
 
2⃣ இஸ்ரவேலின் கோத்திரங்களை குறித்த தீர்க்கதரிசனங்கள் என்ன❓
 
3⃣ புதிய எருசலேமின் 12 வாசல்களில், 12 கோத்திரங்களின் பெயர்கள் எழுதப்பட ஏதாவது காரணங்கள் உண்டா❓
 
4⃣ *முதல் கோத்திரமான ரூபன் கோத்திரத்தை வேதம் என்ன கூறுகிறது❓*
 
5⃣ ரூபனின் நற்குணங்கள் என்னென்ன❓ரூபனின் தீயகுணங்கள் என்னென்ன❓
 
6⃣ ரூபன் ஆசீர்வாதங்கள் என்னென்ன❓சாபங்கள் என்னென்ன❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev
 
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
 
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
 
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
 
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[08/09 12:19 pm] Aa Jeyaseelan Bro VDM: *இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள்*
  
யாக்கோபு தனது வாழ்க்கையின் இறுதிகாலத்தில், தனது பனிரெண்டு குமாரர்களைக் குறித்த தீர்க்கதரிசன ஆசீர்வாதங்களை அளித்தான். இந்த தீர்க்கதரிசன ஆசீர்வாதங்கள் ஆதியாகமம் 49 ல் கொடுக்கப்பட்டுள்ளன, இதன் காலம் சுமார் 1800 கி.மு. ஆகும்.
 
*ரூபன் - ஆதியாகமம் 49:3,4.*
 
1. யாக்கோபு ரூபனைத் தனது மேன்மையில் பிரதானமும், வல்லமையில் விஷேசமுமானவன் என அழைக்கிறான் (ஆதியாகமம் 29:31,32).
 
2. முதற்பலனாய் பிறந்தவன் தலைவனும், ஆசாரியனும் மற்றும் இருமடங்கு ஆசீவாதத்தை பெற்றுக்கொள்கிறவனுமாய் இருந்தான் (உபாகம் 21:17).
 
3. ரூபன் தனது தலைமைத்துவத்தை யூதாவிற்கும், தனது ஆசாரியத்துவத்தை லேவிக்கும், தனது இருமடங்கு ஆசீர்வாதத்தை யோசேப்பிற்கும் அளித்து விட்டான்.
 
4. இவன் தண்ணீரைப்போல தளம்பினவன் ஆனபடியால், இவன் அதிகாரத்துவத்தை அடைய முடியாது 
 
 
5. ரூபனின் குணாதிசயம் நிலையற்றதாய் இருந்தபடியால், அவனது சந்ததியினரும் அப்படியே இருந்தனர்.
 
6. தாத்தான், அபிராம் போன்றவர்கள் ரூபனின் சந்ததியாய் இருந்து மோசேயிக்கு விரோதமாய் கோராவுடன் சேர்ந்துகொண்டு கலகம் செய்தனர். (எண்ணாகமம் 16).
 
7. ரூபன் கோத்திரம் மூன்று கோத்திரங்களில் ஒன்றாயிருந்து யோர்தானுக்கு கிழக்கே தங்கள் சந்ததியினருக்கு தாபரிக்க இடம் வேண்டும் எனக்கேட்டு கொண்டவராய் இருக்கின்றனர். (எண்ணாகமம் 32).
 
8. இச்செயல்கள் ஏறத்தாள உள்நாட்டு யுத்தம் போன்ற விளைவை அளிக்கிறதாய் இருந்தது (யோசுவா 22).
 
9. ஒரு கோத்திரமாய் இருந்த ரூபனின் இருமனம் நியாதிபதிகள் 5 ன் குற்றமாய் விமர்சிக்கப்படுகிறது.
 
10. ரூபனியர்களின் எண்ணிக்கை எண்ணாகமம் 1:21 ல் 46,500 ஆக இருந்தது எண்ணாகமம் 26:7 ல் 43,730 ஆக குறைந்தது.
 
11. ரூபனுக்காய் மோசே ஜெபித்த ஆசீர்வாதத்தின் ஜெபம், அவர்கள் செழிக்கத்தக்கதாய் இருந்தது (உபாகமம் 33:6).
 
12. இருமனமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை நிலையற்ற தன்மைக்கு காரணமாய் அமைகிறது. (யாக். 1:8).

[08/09 1:17 pm] Elango: *12 கோத்திரங்களின் பெயர்களும், அவைகளின் அர்த்தங்களும்.*
 
32. லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: *கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.*
 
33. மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: *நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.*
 
34. பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் *அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.*
 
35. மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: *இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று*
 
அதியாகமம் 29
 
6. அப்பொழுது ராகேல்: *தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்*
 
8. அப்பொழுது ராகேல்: *நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.*
 
11. அப்பொழுது லேயாள்: *ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.*
 
13. அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, *ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.*
 
18. அப்பொழுது லேயாள்: *நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.*
 
20. அப்பொழுது லேயாள்: *தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.*
 
23. அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: *தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,24. இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.*
 
ஆதியாகமம் 30
 
18. *மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.* ஆதியாகமம் 35:18

[08/09 1:27 pm] Aa Robert Pastor VDM: *12 கோத்திரதங்களின் பெயர்*  அந்த பெயருக்கு உண்டான *அர்த்தங்கள்* என்ன? என்று தனித்தனியாக பிரித்து காட்டுங்கள் . ஐயா...

[08/09 1:29 pm] Elango: நாம் எந்த கோத்திரத்தார், எந்த சந்ததியினர்?
 
*நாம் கோத்திரமும் இல்லை. இஸ்ரவேலரும் இல்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் புறஜாதியினரே.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்து மூலமாக ஆபிரகாமின் சந்ததியாகவும், ஆவிக்குரிய இஸ்ரவேலராகவும் அழைக்கப்படுகிறோம் என வேதம் தெளிவாக உறுதிபட சொல்கிறது.*
 
-  http://nesarin.blogspot.com/2016/01/blog-post_65.html#ixzz4s4XAEDB6

[08/09 1:35 pm] Aa Robert Pastor VDM: அருமையான பதிவு நன்றி👍👌💐

[08/09 1:39 pm] Aa Thomas Pastor Brunei VDM: Praise the Lord.. The whole world was populated from the three sons of Noah.. Shem Ham and Japeth..

[08/09 1:42 pm] Aa Thomas Pastor Brunei VDM: It is from the Family of Shem that Jesus was Born.. Noah - Shem- Abraham-Isaac- Jacob(Israel)-12 Tribes of Israel

[08/09 1:45 pm] Aa Thomas Pastor Brunei VDM: We in India are descendants of Japeth..

[08/09 1:46 pm] Aa Thomas Pastor Brunei VDM: We are the Spiritual descendants of Abraham... and the Israelite are the literal descendants of Abraham..

[08/09 1:47 pm] Aa Thomas Pastor Brunei VDM: All gentiles including us Indians are descendants of Ham and Japeth..

[08/09 1:51 pm] Aa Thomas Pastor Brunei VDM: Abraham had three wives. 1. Sarah-Isaac-Jacob(Israel). 2. Hagar - Ishmael-12 tribes (Arabians) and 3. Keturah- Arabs

[08/09 1:52 pm] Aa Thomas Pastor Brunei VDM: The descendants of Esua are not Israelite..

[08/09 1:54 pm] Aa Thomas Pastor Brunei VDM: The problem with many of us (Indian Pastors) is we fail to see that we are GENTILES and the law was not intended for us..

[08/09 1:56 pm] Aa Thomas Pastor Brunei VDM: The 12 Tribes of Israel were scattered (Captivity of  Israel by Assyrians and Babylonians) throughout nearly 127 countries as we read in the Book of Esther

[08/09 2:03 pm] Aa Thomas Pastor Brunei VDM: Many Jews are still living in many other nations but they are not those Nations.. as a msg from Bro Elango suggest..

[08/09 2:05 pm] Aa Thomas Pastor Brunei VDM: Now the Israel Government is bringing back the Jews.. Even the mixed ones..

[08/09 2:08 pm] Aa Thomas Pastor Brunei VDM: These are Ethiopian Jews with Prayer Shawl

[08/09 2:10 pm] Elango: என்ன சொல்றீறீங்க முகச்சாடல் யூதர்கள் போல் தெரியவில்லையே... ஆச்சரியம் தான்... யூதர்கள் கருப்பாகவும் இருப்பதை பார்த்து...

[08/09 2:10 pm] Aa Thomas Pastor Brunei VDM: These are Indian Jews in Manipur

[08/09 2:10 pm] Aa Thomas Pastor Brunei VDM: They have Jewish blood..

[08/09 2:11 pm] Aa Thomas Pastor Brunei VDM: Many Jews married the people in their exile countries.. Like the Samaritans of Jesus time..

[08/09 2:14 pm] Elango: *யூதர்களை பார்த்தாலே சந்தோஷம் தான் ... தேவன் முன்குறித்த ஜன்ங்கள் அல்லவா...*
 
ஆமோஸ் 3:2 *பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்;* ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

[08/09 2:17 pm] Aa Thomas Pastor Brunei VDM: 3 "The days are coming, 'declares the LORD,' when I will bring my people Israel and Judah back from captivity and restore them to the land I gave their ancestors to possess," says the LORD. 
Jeremiah 30:3
 24 "For I will take you out of the nations; I will gather you from all the countries and bring you back into your own land."

[08/09 2:17 pm] Aa Thomas Pastor Brunei VDM: Ezekiel 36:24

[08/09 2:18 pm] Elango: ரேமியா 46:28 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; *உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்;* உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.

[08/09 2:18 pm] Elango: செப்பனியா 3:19 இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; *அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்.*

[08/09 2:19 pm] Aa Thomas Pastor Brunei VDM: If you go to Israel now.. you will see Jews who look entirely different from the native Jews

[08/09 2:19 pm] Aa Justin VTT: ரோமர்2:28
ஆதலால்‌ புறம்பாக யூதனானவன், யூதனல்ல...
29 உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகமல்....

[08/09 2:20 pm] Aa Thomas Pastor Brunei VDM: i believe the 144,000 mentioned in Rev 7 is about the Jews from 12 tribes..

[08/09 2:20 pm] Elango: *12 கோத்திரத்தில் வந்த எல்லோரும் இஸ்ரவேலர் அல்ல என்கிறார் கர்த்தர்... இருதயத்தில் விருத்தசேசதனம் பெற்றவர்களே உண்மையான யூதர்கள், இஸ்ரவேலரோ...*
  
எரேமியா 9:26 எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; *ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.*

[08/09 2:21 pm] Elango: இந்தியாவில் உள்ள சில சபை ஸ்தானங்கள் அந்த 144,000 நபர்கள் நாங்கள் என்கின்றார்கள்...😃

[08/09 2:22 pm] Aa Aasai Elavendan Pastor VDM: அய்யா இப்பொழுது இஸ்ரவேலில் வாழ்கின்ற யூதர்கள் தாங்கள் எந்த கோத்திரம் என்று அவர்களுக்கு அடையாளம் தெரியுமா?

[08/09 2:23 pm] Aa Aasai Elavendan Pastor VDM: ஏனென்றால் அவர்களுடைய கோத்திரம் இன்னும் அவர்களுக்கு ஞாபகம் இருக்குமா

[08/09 2:24 pm] Aa Aasai Elavendan Pastor VDM: எப்படி அவர்கள் இந்த கோட் தினம் என்று கண்டுபிடித்து உறுதிப்படுத்துவார்கள்

[08/09 2:25 pm] Aa Thomas Pastor Brunei VDM: I think so Bro Elango... By DNA Genetic Studies

[08/09 2:26 pm] Elango: நல்ல கேள்வி ... அவர்களிடம் கண்டிப்பாக வம்ச அட்டவணை இருக்கும் என நினைக்கிறேன்.
 
நெகேமியா 7:5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் *வம்ச அட்டவணைப் புஸ்தகம்* அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,

[08/09 2:27 pm] Aa Thomas Pastor Brunei VDM: இந்தியாவில் உள்ள சில சபை ஸ்தானங்கள் அந்த 144,000 நபர்கள் நாங்கள் என்கின்றார்கள்...😃.... They refer to Rev 14..

[08/09 2:29 pm] Elango: oh ... 👍😃 ஆனால் ஜெகோவா விட்னஸ் கார்களும் அந்த 144,000 நாங்கள் தான் என்பது தான் பெரிய காமடி...😂

[08/09 2:31 pm] Aa Robert Pastor VDM: ஐயா 🙏🙏🙏 இன்றைய தியானத்துக்கு மாறாக வேறு திசையில் நமது தியானம் திரும்புகிறது ஐயா...
      இன்றைய தியானத்துக்கு ஏற்ற பதிவுகளை  பதிவுசெய்யுங்கள் ஐயா....

[08/09 2:32 pm] Aa Aasai Elavendan Pastor VDM: அய்யா அப்பொழுது அவர்கள் வம்ச அட்டவணையை வைத்திருந்தார்கள் பின்பு அனேக முறை சிதறடிக்கப்பட்டார்கள் அதற்கு அடுத்து ஒரு வேலை எருசலேமில்  கங்கர்கள் எழுதிவைத்து மாற்றப்பட்டார்கள் இருந்தவர்கள் எழுதி வைத்திருந்தாலும் சிதறடிக்கப்பட்ட வர்களிடம் அட்டவணை இருந்ததற்கு உரிய சான்றுகள் உண்டா

[08/09 2:33 pm] Aa Thomas Pastor Brunei VDM: 12 signifies Authority and Governance..

[08/09 2:34 pm] Elango: சரியான பாதையில் வண்டியை திருப்பியதற்க்கு நன்றி ஐயா.😁

[08/09 2:35 pm] Aa Thomas Pastor Brunei VDM: The 12 Tribes of Israel are equivalent to the 12 Apostles in Church

[08/09 2:37 pm] Elango: சந்தேகம் தான்.... எல்லாலாவற்றையும் இழந்த பிறகு வம்ச அட்டவணை அவர்களிடத்தில் இருந்திருக்குமா என்பது கேள்விகுறியே...

[08/09 2:39 pm] Aa Aasai Elavendan Pastor VDM: இப்படி ஏன் கேட்கிறேன் என்றால் கடந்த முறை நான் கேரள மாநிலத்திற்கு சென்று இருந்தேன் அங்கே மலபார் அப்பகுதிக்கு சென்றேன் அங்கே ஒரு யூதர்களின் ஜெப ஆலயத் திற்கு சென்றேன் அங்கு ஒரு யூதரை சந்திப்பேன் அவரிடமும் நீங்கள் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டபோது அவர் தெரியாது என்று பதில் பதில் சொல்லிவிட்டு மிகவும் மனஸ்தாபப்பட்டார் பின்பு அவர் கூறியதாவது தேவன் எங்களுக்கு வெளிப்படுத்துவார் என்றார்

[08/09 2:39 pm] Elango: ஆமென்... நல்ல விசுவாசம்... அல்லேலுயா...

[08/09 2:40 pm] Aa Thomas Pastor Brunei VDM: In fact the NT records more than 12 Apostles.. The Rev is a Book of Symbols which are to be discerned and interpreted with other Bible verses and its contexts..

[08/09 2:44 pm] Aa Thomas Pastor Brunei VDM: Aaron carried the names of the 12 tribes on his bosom

[08/09 2:47 pm] Elango: 👍 29. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். யாத். 28:29

[08/09 3:00 pm] Elango: *ஆலயமாகிய இயேசுகிறிதுவை* ஏற்றுக்கொள்ளாமல்... ஜெப ஆலயம் என்ற பெயர். 😀     வெளி 21:22 *அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.*

[08/09 3:15 pm] Aa Robert Pastor VDM: வருத்தமாக தான் இருக்கிறது ஐயா. யூதர்களின் இரட்சிப்புக்காக நாம் ஜெபித்து கொள்ளுவேம்.

[08/09 3:17 pm] Elango: 🙏🙏  yes ayya.. அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ? Romans 11:15

[08/09 3:22 pm] Aa Jeyanti Pastor VDM: Beautiful discussions are going on go ahead.  👏🏻👏🏻🙏🙏

[08/09 3:44 pm] Aa Robert Pastor VDM: இன்றைய வேத தியானம் - 08/09/2017* 🕎
  
4⃣ *முதல் கோத்திரமான ரூபன் கோத்திரத்தை வேதம் என்ன கூறுகிறது❓*
 
5⃣ ரூபனின் நற்குணங்கள் என்னென்ன❓ரூபனின் தீயகுணங்கள் என்னென்ன❓
 
6⃣ ரூபன் ஆசீர்வாதங்கள் என்னென்ன❓சாபங்கள் என்னென்ன❓
 
   *ரூபன் கோத்திரத்தை பற்றி மேலும் விரிவான விளக்கத்தை யாராவது செல்லுங்கள் ஐயா .*

[08/09 4:22 pm] Elango: levei*ரூபனின் நற்குணங்கள் என்னென்ன❓*
 
யோசேப்பை குழியில் அவனின் சகோதர்கள் செய்த தீமையான காரியங்களுக்கு ஒத்துப்போகாமல், யோசேப்புக்காக பலதடவை அனுதாபம் கொண்டவன் ரூபன். இதன் நிமித்தம் தன் சகோதர்களை கடிந்துக்கொண்டான்.
 
ஆதியாகமம் 37:21 ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,
 
ஆதியாகமம் 37:22 அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
 
ஆதியாகமம் 37:29 பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
 
ஆதியாகமம் 42:22 அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.
  
*ரூபனின் தீயகுணங்கள் என்னென்ன❓*
 
1. ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது. I நாளாகமம் 5:1
 
ரூபன் யாக்கோபுக்கு முதல் மகன் ஆனாலும் அவன் தன் தகப்பனின் மனைவியை தீட்டுப்படுததினபடியினால் அவன் தன் சேஷ்டபுத்திர சுதந்திரத்தை இழந்தான்.
 
ஈசாவும் அப்படியே தான் தன் ஒரு வேளை போஜனத்திற்க்காக தன் ஸ்தானத்தை இழக்க துணித்தான்..

[08/09 4:32 pm] Elango: *ரூபன் பெற்ற ஆசீர்வாதங்கள் என்னென்ன❓*
 
1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: 6. *ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது* என்றான். உபாகமம் 33:1,6
 
*ரூபன் பெற்ற   சாபங்கள் என்னென்ன❓*
 
4. *தண்ணீரைப்போலத் தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்;* உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. ஆதியாகமம் 49:4

[08/09 5:07 pm] Aa Jeyanti Pastor VDM: உபாகமம் 33
 
6  ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.
மோசேயின் ஆசீர்வாதம்??

[08/09 7:07 pm] Aa Sam Jebadurai Pastor VDM: 1 Chronicles    5:1-2 (TBSI)
1 "ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது."
2 யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.

[08/09 7:08 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Deuteronomy     21:15-17 (TBSI)
15 "இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,"
16 "தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது."
17 "வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது."

[08/09 7:10 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Exodus          11:5-7 (TBSI)
5 "அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,"
6 அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
7 "ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை."

[08/09 7:10 pm] Aa Thomas Vellore VTT: Praise the Lord  Good  messages  God blessing u

[08/09 7:11 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Exodus          13:2 (TBSI)  இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.

[08/09 7:14 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Luke            2:23-24 (TBSI)
23 "முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,"
24 "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்."

[08/09 7:14 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Romans          8:29-30 (TBSI)
29 "தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;"
30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

[08/09 7:15 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Hebrews         12:23-24 (TBSI)
23 "பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,"
24 "புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்."

[08/09 7:15 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Romans          11:16 (TBSI)  "மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்."

[08/09 7:16 pm] Aa Sam Jebadurai Pastor VDM: 1 Corinthians   15:20 (TBSI)  "கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்."

[08/09 7:16 pm] Aa Sam Jebadurai Pastor VDM: James           1:18 (TBSI)  அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

[08/09 7:16 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Revelation      14:4 (TBSI)  ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.

[08/09 7:18 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Genesis         4:4 (TBSI)  ஆபேலும் தன் மந்தையின் *தலையீற்றுகளிலும்* அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

[08/09 7:21 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Genesis         49:3-4 (TBSI)
3 "ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்."
4 "தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே."

[08/09 7:22 pm] Aa Robert Pastor VDM: 👆👆👆👍👌👌👌
      மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.

[08/09 7:23 pm] Aa Sam Jebadurai Pastor VDM: ரூபனை பற்றி பேச வேண்டுமானால் சேஷ்ட படுத்தினர், முதற்பேறானவன், முதற்பலன், சேஷ்ட புத்திர பாகம் இவையெல்லாம் நாம் அறிய வேண்டும். முதற்பேறானவன் குமாரனின் பொறுப்பு மற்றும் அந்தஸ்தை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

[08/09 7:24 pm] Aa Sam Jebadurai Pastor VDM: ரூபனை பற்றி பேச வேண்டுமானால் சேஷ்ட புத்திரன் , முதற்பேறானவன், முதற்பலன், சேஷ்ட புத்திர பாகம் இவையெல்லாம் நாம் அறிய வேண்டும். முதற்பேறானவன் குமாரனின் பொறுப்பு மற்றும் அந்தஸ்தை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

[08/09 7:26 pm] Aa Robert Pastor VDM: மிக்க நன்றி ஐயா

[08/09 7:59 pm] Aa Robert Pastor VDM: *ரூபனுக்கும் தூதாயீம் இனிக்கும் எதாவது சம்மந்தம் உண்டா.? ஐயா*

[08/09 8:29 pm] Aa Thomas Pastor Brunei VDM: Ruban lost his status as the Firstborn as he defiled his father's bed..

[08/09 8:36 pm] Aa Thomas Pastor Brunei VDM: Esau lost his birthright for a brew and Reuben lost his birthright by the bed.. 🙂

[08/09 8:37 pm] Elango: எல்லாம் ஒரு சில நிமிஷ பசியை அடக்காமை தானோ🙁

[08/09 8:58 pm] Aa Sam Jebadurai Pastor VDM: பத்மராகம்-אדם-ஓடெம்-சிகப்பு நிற கல் இந்த வார்த்தைக்கு மூல வார்த்தை אדם- ஆடம்- சிகப்பு என அர்த்தம் தரும். ஆதாம் என்பதற்கும் இதே எழுத்து அமைப்பே. சிகப்பு நிற மண்ணில் இருந்து எடுக்கபட்டபடியால் அவன் ஆதாம்(மனுஷன்)  என அழைக்கபட்டான்.
 
இங்கு சிவப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தையும் குறிக்கும்.
ரூபன் என்பதற்கு இதோ உன் மகன் என அர்த்தம் உண்டு. இயேசு கிறிஸ்து இதோ உலகின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி என அழைக்கப்பட்டார்.(John            1:29 (TBSI)  "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.")
 முந்தைய ஆதாம்(சிவப்பு) விழுந்து போனவன். இரண்டாவது ஆதாம் இயேசு கிறிஸ்து ஜெயம் எடுத்தார்.
John            3:16 (TBSI)  "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்..

[08/09 9:15 pm] Aa Robert Pastor VDM: *ரூபனுக்கும் தூதாயீம் இனிக்கும் எதாவது சம்மந்தம் உண்டா.? ஐயா*

[08/09 9:31 pm] Aa George VDM: ஐயா இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் (யாக்கோபு) பேசியதாக எடுக்கலாம் இல்லை தேவன் பேசியதாக எடுத்துக்கொள்ளளாமா

[08/09 9:39 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Exodus          28:17-21 (TBSI)
17 "அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும்(sardies) புஷ்பராகமும் மாணிக்கமும்,"
18 "இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,"
19 "மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,"
20 நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய்(Jasper) இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
21 "இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்."
இங்கு பத்மராகம்(Sardine) முதலாவது வருகிறது. கடைசியாக யஸ்பி(Jasper) வருகிறது.  ஆனால் வெளிப்படுத்திய விஷேசத்தில்  பத்மராகம்(Sardine) கடைசியிலும் வச்சிரக்கல்(Jasper) முதலாவதாகவும் வருகிறது.
Revelation      4:3 (TBSI)  "வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று."
இந்த ஜாஸ்பர் கல் பென்யமீன் கோத்திரத்தின் கல். பென்யமீன் என்றால் வலது கையின் மகன் என பொருள். பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் இயேசு கிறிஸ்துவை ஆட்டுகுட்டியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.சிகப்பு நிற பத்மராகம் அதை குறிக்கிறது. அவர் ஏற்கனவே வந்து விட்டார். இப்போது நாம் அவர் ராஜாவாக,வல்லமை நிறைந்த கர்த்தராக வர எதிர் பார்க்கிறோம்.வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் அவர் வருவார். ஆகவே வெள்ளை நிற கல் முன்பதாக வருகிறது.

[08/09 9:41 pm] Aa Sam Jebadurai Pastor VDM: தீர்க்கதரிசன வார்த்தைகள். ஆண்டவர் யாக்கோபு மூலமாக உரைத்தது.

[08/09 9:43 pm] Aa Sam Jebadurai Pastor VDM: ரூபன் விழுந்து போன மனிதனின் நிலைக்கு. அவனை மீட்க ஆதாமாகிய இயேசு கிறிஸ்து வந்தார்.

[08/09 9:44 pm] Elango: ஆதியாகமம் 49:1-3
[1] *யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், 👉👉👉👉👉👇🏻👇🏻👇🏻கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.*👆👆👆👆👆
 
[2] *யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.*👂👂👂👂👂
[3]ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
 
*அந்த முழு அதிகாரத்திலும் வரபோகிற காரியங்களை யாக்கோபு தீர்க்கதரிசனமாக பேசுகிறார்...*
 
2 பேதுரு 1:20-21
[20] *வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.*
[21]தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; *தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.*🗣🗣🗣🗣

[08/09 9:45 pm] Elango: 👌👌👌👌நானும் நேற்று வச்சிரக்கல்லுக்கு Google லில் தேடித்தேடி பார்த்தேன்... இது போன்று அருமையாக படங்கள் பார்க்க முடியவில்லை...

[08/09 9:48 pm] Aa Sam Jebadurai Pastor VDM: நான் பதிவிட்ட வார்த்தை ஆழங்கள் எத்தனை பேருக்கு புரிந்தது என தெரியவில்லை.

[08/09 9:50 pm] Aa Nesaraja VDM: நன்றி மற்றவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்

[08/09 9:52 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனாலும் தேவன் மருத்துவத்தை விட நம்பிக்கைகளை விட பெரியவர் என நிரூபித்தார். தூதாயீம் கனி மலட்டு தன்மையை போக்கும். எனவே அதன் மூலம் கருத்தரிக்க ராகேல் விரும்பினாள்.  ஆனால் கர்ப்பம் தரித்தது லேயாள்.
Genesis         30:17-18 (TBSI)
17 தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.
18 "அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்."

[08/09 9:56 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இந்த வேத பகுதி முழுவதும் வாசித்தால் இது புரியும்

[08/09 10:00 pm] Aa Robert Pastor VDM: மிக்க நன்றி ஐயா 🙏

[08/09 10:05 pm] Aa Sam Jebadurai Pastor VDM: வாய்ஸ் கிளிப்பிங் என்றால் இன்னும் விளக்கமாக கூறி இருக்கலாம்

[08/09 10:14 pm] Aa Robert Pastor VDM: ரூபனுக்கு சேஷ்டபுத்திர பாகத்தை இழந்து.
தன் தகப்பனுடைய மனைவிடத்தில் தவறுசெய்தது தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா ? ஐயா..

[08/09 10:19 pm] Aa George VDM: ஆம் ஐயா அதிகமான விளக்கங்கள் குடுக்கும் பொழுது ஆடியோவில் தாருங்கள்

[08/09 10:21 pm] Aa Thomas Pastor Brunei VDM: Mandrakes were considered to be an aphrodisiac in ancient Bible times..

[08/09 10:25 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Yes.. And also The ancients believed them calculated to produce fecundity. Their Hebrew name, duwdaim, "love apples," agrees with their being used as aphrodisiacs to conciliate love; Rachel had this superstitious notion (Gen 30:14-17). 

[08/09 10:29 pm] Aa Thomas Pastor Brunei VDM: Reuben used to collect them for Leah because Leah had stopped child bearing.
Leah too must have believed that would help her to conceive

[08/09 10:32 pm] Elango: ரூபன் தேவனுடைய சமூகத்திலே அருவருப்பான காரியத்தை செய்ததால் தன் தகப்பனுடைய ஆசீர்வதத்தை இழந்தது மட்டுமல்ல, தன் சேஷ்டபுத்திரத்தின் அருமை கூட அவனுக்கு தெரியாமல் போய்விட்டது.
 
சமூகத்திலே ஒரு சகோதரன் செய்த பொல்லாத பாவ செயல், மிகவும் அருவருப்பாக இருந்தது. அந்த வாலிபன் வளர்ந்து தேவனை அறிந்து இரட்சிக்கப்பட்டான். பிறகு அவனுடைய பொல்லாத பாவ தழும்புகள் மறையாமலேயே இருக்கிறது. தற்போது அந்த மனிதன் தேவ பணியை செய்துக்கொண்டிருந்தாலும், தேவனை அறியாத வயதில் செய்த பாவ தழும்புகளை சமூகத்திலே இன்றும் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். பல நூறு ஆண்டுகள் ஆகும் இருந்தாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம் பாவ தழும்புகளை நீக்கி, நம்மை பரிசுத்தத்துக்குள்ளாக கொண்டுபோகிறது.
 
*ரூபனின் அருவருப்பு பல ஆசீர்வாதங்களை இழக்க காரணமாக இருந்தது போல, நம்முடைய வாழ்க்கையிலும் எந்த அருவருப்புகளுக்கும் இடங்கொடாமல், பிசாசின் தந்திரங்களுக்கும் இடங்கொடாமல், தந்திரமுள்ள போதககங்களுக்கும் நாம் கீழ்ப்படியாமல், ஜாக்கிரதையாக அவர் திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய வசனத்திற்க்கு கீழ்ப்படிந்து அவர் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.*
 
வேதம் சொல்லுகிறது ஆண்டவருடைய கண்கள் எங்கும் உலாவிக்கொண்டிருக்கிற படியால், எல்லா மனிதர்களையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
 
- சங்கர் ஐயா

[08/09 10:33 pm] Elango: Mind blowing ! Think about it ...
 
*THE 12 SONS OF JACOB (ISRAEL) IS THE MYSTERY OF CHRIST JESUS.!!*
 
Jacob had twelve(12) sons, and in their names put together was the gospel hidden but now revealed through it. Its so amazing how God hid all these wonderful truths inside simple names and stories.
 
Here are the names and their meanings:
 
*NAMES*       *MEANING*
*Reuben*:     _Behold, A Son is born to us_
*Simon*:       _One who hears_
*Levi:*           _Attached_
*Judah*:       _Praise the Lord_
*Dan*:          _He judged_
*Naphtali*:  _My Struggle_
*Gad*:           _Good fortune_
*Asher*:        _Happiness_
*Issachar*:   _Reward_
*Zebulun*:    _Honour_
*Joseph*:     _Add to my family_
*Benjamin*:  _Son of
righteousness_
 
When the names are joined together, this is what it says:
 
_BEHOLD, A SON IS BORN UNTO US, ONE WHO HEARS US AND BECAME ATTACHED UNTO US. PRAISE THE LORD. HE JUDGED OUR STRUGGLES AND BROUGHT US GOOD FORTUNE, HAPPINESS, REWARD, HONOR; HE ADDED US TO HIS FAMILY AND CALLED US THE SONS OF RIGHTEOUSNESS._
 
This completely blows one's mind when one discovers it. Jesus Christ is not just a mere name mentioned in sermons. Jesus is the content, the context, the text, the paragraph, the mark and the remark of the *"Word of Truth "*.
Jesus is the outline of the entire Bible. And His "scarlet thread" of redemption links & runs through the Bible!!!!!!!
 
Meaningful message👆
[08/09 10:33 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Yeah..May be. But the word of God says Genesis 30:17 (ESV)  And God listened to Leah, and she conceived and bore Jacob a fifth son. So i think Leah may not believe that also

[08/09 10:35 pm] Aa Thomas Pastor Brunei VDM: God over rules science and medicines.

[08/09 10:36 pm] Elango: *தூதாயிம் கனி மலட்டுத்தன்மையை நீக்கும், கருத்தரிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது*
 
1. *ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு,* தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: *எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்* என்றாள்.
2. அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ *உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்,* நான் தேவனா? என்றான்.
 
ராகேல் ஏன் லேயாளிடம் அந்த தூதாயிம் கனியை கேட்டாள் என்றாள், அந்த *தூதாயின் கனி கருத்தரிப்பதற்கும் அதன் மூலம் மலடி என்ற நிந்தையை போக்குவதற்கும் இந்த தூதாயீம் கனிகள் உதவும் என அவள் ஒருவேளை நினைத்திருக்கலாம்* என்று வேத அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
இங்கே கீழே பாருங்கள்... மலடியாயிருந்த ராகேல் அந்த பலத்தை தின்ற பிறகு கருத்தரிக்கிறாள் என்றும், தேவன் அவளை நினைத்தருளினார் என்றும் வேதம் கூறுகிறது.
 
22. *தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.*
23. *அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,*
24. இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். ஆதியாகம் 30:22-24

[08/09 10:40 pm] Aa Sam Jebadurai Pastor VDM: பழத்தை தின்ற உடனே கருத்தரிக்கவில்லையே..இசக்கார்,செபுலோன், தீனாள் குறிப்புகளை கூறிய பின் தான் ராகேல் கருதரித்ததாக வேதம் கூறுகிறது. ராகேல் பழத்தை தின்றதால் அல்ல தேவன் நினைவு கூர்ந்ததாலேயே பிள்ளை பெற்றாள்.பழத்தை தின்றதால் கருதரித்ததாள் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது.

[08/09 10:44 pm] Aa Thomas Pastor Brunei VDM: When God shuts.. He alone can open..
When God opens.. He alone can shut..

[08/09 10:45 pm] Aa Robert Pastor VDM: *ரூபன் கோத்திர கொடி சிவப்பு அந்த கொடியில்  உள்ள சித்திரங்கள் தூதாயீம் கனிகள். இதன் விளக்கம் என்ன ஐயா.?*

[08/09 10:46 pm] Aa Thomas Pastor Brunei VDM: Flag of Reuben?

[08/09 10:46 pm] Elango: 👍 *தேவன் நினைத்தருளினார்*
 
ஆண்டவர் கர்ப்ப கதவை அடைத்தால், எந்த பலத்தை தின்றாலும் புச்சி புழு ஒருநாளும் உண்டாகாது...😃

[08/09 10:47 pm] Aa Sam Jebadurai Pastor VDM: வேதத்தில் ஆதாரம் உண்டா???

[08/09 10:48 pm] Aa Sam Jebadurai Pastor VDM: நேர்மறையாக கூறுங்கள். தேவனால் மாத்திரமே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
Psalms          127:4 (TBSI)  "இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்."

[08/09 10:49 pm] Aa Robert Pastor VDM: வேதத்தில் ஆதாரம் தெரியவில்லை
 ஆனால் இது சம்பந்தமாக கேட்டு இருக்கிறேன்.

[08/09 10:49 pm] Aa Sam Jebadurai Pastor VDM: எங்கே கேள்விபட்டீர்கள்???

[08/09 10:52 pm] Aa Robert Pastor VDM: ஒரு போதகருடைய பிரசங்கத்தில் ஐயா

[08/09 10:54 pm] Aa Sam Jebadurai Pastor VDM: வேதத்தில் இல்லாத ஒன்றை நான் பேச விரும்பவில்லை. வாய்மொழி கதைகள் இருக்கலாம். தல்மூத் கதைகளை வேத வசனம் ஆதாரம் இல்லாமல் இங்கே விவாதிப்பது ஏற்புடையதல்ல

[08/09 10:55 pm] Aa Robert Pastor VDM: நல்லது ஐயா. நன்றி🙏

[08/09 10:55 pm] Aa Sam Jebadurai Pastor VDM: போதகர் பெயரை கூற இயலுமா???

[08/09 10:56 pm] Aa Robert Pastor VDM: Pr சாம்பத்தர் ஜான் TPI

[08/09 10:58 pm] Elango: எல்லா இடங்களிலும் கோத்திர குலமென்று பெருமை பாராட்டி பேசுவதுண்டு. ஆனால் வேதத்தில் 12 கோத்திரங்களே சொல்லப்பட்டிருக்கிறது.

[08/09 11:01 pm] Aa Sam Jebadurai Pastor VDM: நினைத்தேன்..😃 வேதத்தை விட்டு வெளியே செல்வது எப்போதுமே ஆபத்து. யூத கலாசார பாடங்கள் கட்டு கதைகளாக போக்குவரத்து கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். இப்படி வேதத்தில் இல்லாத கதை துர் உபதேசத்திற்கு நேராக வழி நடத்தி விடும்.

[08/09 11:02 pm] Aa Robert Pastor VDM: நல்லது ஐயா.

[08/09 11:02 pm] Aa Thomas Pastor Brunei VDM: Reuben's stone should be Sardius according to Exodus 39:10-14

[08/09 11:03 pm] Aa Sam Jebadurai Pastor VDM: எபிரேயத்திற்காக வேதம் இல்லை. வேதம் கற்கவே எபிரேயம். யூத கலாச்சாரத்தை கிறிஸ்துவை விட உயர்த்துவது துர் போதனைக்குள்.

[08/09 11:05 pm] Aa Robert Pastor VDM: நன்றி ஐயா .
  என் சந்தேகத்திற்காக கேட்டேன்

[08/09 11:05 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Exodus          39:10 (TBSI)  "அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,"
 
Exodus 39:10 (ESV)  And they set in it four rows of stones. A row of sardius, topaz, and carbuncle was the first row;
 
Exodus          28:17 (TBSI)  "அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,"
 
Exodus 28:17 (ESV)  You shall set in it four rows of stones. A row of sardius, topaz, and carbuncle shall be the first row;

[08/09 11:13 pm] Aa Sam Jebadurai Pastor VDM: As you said few stones are uncertain. Typology has its own limitations.

[08/09 11:16 pm] Aa Thomas Pastor Brunei VDM: I can understand the similarities of Adam, Esau/Edom and Reuben's stone... Red... May be this made the Pastor to say Reuben's banner is red..
It is not in the Bible though..

[08/09 11:23 pm] Aa Thomas Pastor Brunei VDM: 3⃣ If New Jerusalem is only for NT saints then why 12 Tribes of Israel (OT) written on the 12 gates?

[08/09 11:24 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இங்கே இரண்டாம் ஆதாம் என்ற பதம் தவறு. பிந்தின ஆதாம் என வர வேண்டும்.நன்றி தாமஸ் ஐயா

[09/09 12:10 am] Aa Sam Jebadurai Pastor VDM: Yes Iyya...எனக்கு பல மாறுபட்ட கருத்துகள் உண்டு. ம்
யூத மயமாக்க அல்ல இயேசு மயமாக்கவே நமக்கு அழைப்பு

[09/09 12:11 am] Aa John Rajadurai Bishop VTT: 👍 yes Pastor . I am with you👍

[09/09 8:09 am] Thirumurugan VTT: கலாச்சாரம் மற்றும் பண்பாடு பண்டைய நாட்களில் (ஆதாம் முதலே) இருந்தே மனிதர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் இது ஒவ்ஒரு இனம், மொழி மற்றும் இடம் என்கிற நிலை சார்ந்து வேறுபட்டும் காணப்படுகிறது. இப்படித்தான் யூத இனத்திற்கும் அவர்களுக்கான கலாச்சாரம் மற்றும் பண்பாடு உண்டு.
 
ஆகவே கிறிஸ்து இயேசுவை வெறுமனே கொண்டு வந்து இயேசுவை உயர்த்துங்கள் கலாச்சாரத்தை அல்ல பாரம்பரியத்தை அல்ல என்று நாம் கூறும் போது, கிறிஸ்துவை நாம் எப்படி அறிந்தித்திருக்கிறோம் என்பதில் சிறிது ஐயங்கொள்ள வைக்கிறது. கிறிஸ்து மனிதர்கள் மத்தியில் வாழ்ந்தார் என்பது மெய்யானாலும் அவர் எல்லாவற்றிற்கும் மேலானவராய் இருக்கிறார்.
 
ஆகவே, குழுவில் எந்த கலந்தாய்வு வந்தாலும் இயேசு கிறிஸ்துவை உடனே குறிப்பிட்டு, இயேசு தான் முக்கியம் அவரைத்தான் உயர்த்த வேண்டும் என்று கூறுவதை தயவாய் தவிருங்கள்.
 
12 கோத்திரங்களைக் குறித்து ஆராயும்போது பதிவிடப்படும் பதிவுகளுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் அதை பதிவிடுங்கள் அப்பொழுது காரியங்களை தெளிவாய் அறிந்து கொள்ள அது ஏதுவாய் இருக்கும். அதை விடுத்து வெறுமனே இது அப்படியா அது இப்படியா என்று கேட்டுக்கொண்டே இருந்தால், நம் குழு google chat மற்றும் yahoo chat போல் ஆகி விடும்.
 
ஆக, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு பதிவு இட்டாலும் அது கருத்தானதும் மற்ற குழு அன்பர்களுக்கு பிரயோஜன முள்ளதாகவும் இருக்கட்டும்.
 
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே, தவறாக தோன்றினால் தவிர்த்து விடுங்கள். சரியாக தோன்றினால் பிடித்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

1 Comments
SALEM SENTHIL said…
எரேமியா 20.3-ல் உள்ள *பஸ்கூர்* என்ற பேருக்கு அர்த்தம் சொல்லுங்கள்.