Type Here to Get Search Results !

சிலுவையின் ஏழு வார்த்தைகளில் இரண்டாவது வார்த்தையின் தியானம்...

[4/11, 7:44 AM] : 👑 *இன்றைய வேத தியானம் - 11/04/2017* 👑
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று இரண்டாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉

⏺இயேசு அவனை நோக்கி: *இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய்* என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.    ⏺லூக்கா 23:43

    🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/11, 7:46 AM] Thomas Udumalai VT: பிதாவே இவர்களை மன்னியும் இது தான் அவர் பேசிய முதல் வார்த்தை என்று உறுதியாக சொல்ல முடியாது. வேதாகமத்திலும் அப்படி வரிசை படுத்த வில்லை, இந்த வரிசை நம்மால் ஏற்படுத்தப் பட்டதே...
ஏனெனில், காட்டி கொடுக்கப் பட்ட பின் உணவு தண்ணீர் கொடுக்கப் படவில்லை மாறாக சவுக்கடி , சிலுவை மரம் , முள்படி இந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது சிலுவையில் தாகமாயிருக்கிறேன் என கேட்டிருக்கலாம்.
இருப்பினும் முதல் வார்த்தையாக  இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்தார்கள்..?

[4/11, 7:58 AM] Stanley Ayya VT: ஆண்டவராகிய இயேசப்பா உம் நாமத்தை துததிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் மகிமைபடுத்துகிறோம்.
நாங்கள் பிறப்பாலும் வாழ்வாழும் சுயஞானத்தலும் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் பாவிகளாய் இருப்பாதால் நீதாமே எங்களை மீட்டு நித்திய ஜீவனுக்கு தகுதி அடையும்படிக்கு உம்மையே சிலுவைபாடுகளுக்கு உட்படுத்தி உம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை மீட்டுக்கொண்ட மாக மேன்மையான இரக்கத்திற்க்காகக கோடி ஸ்தோத்திரம்.
அன்பின் பிதாவே நீர் எங்களுக்கு நித்திய ஜீவனை அடையும் படிக்கு கொடுத்த ஆலோசனைகளை நாங்கள் தியானிக்கும் படிக்கு உம்மால் வெளிபடுத்தபடும் சத்தியங்களை உம் தேவபிள்ளகள் மூலம் தெரியபடுத்தும்.
நங்கள் தெளியவும் அனேகரை நித்திய வாழ்வுக்கு ஆயத்தபடுத்ததவும் உபயோகமான செய்திகளால் நிறையபட கிருபைதாங்கப்பா.
நாங்கள் சிறுத்து ஆண்டவர் எங்களுள் பெருகி வெளிபட நீரே எங்களை வழிநடத்தும்.
ஆழ்ந்த சத்தியங்களை காணவும் கிருபை தாங்கப்பா.
ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் உம்முடையதே.
உமது
இரக்கத்திற்காக
காத்திருக்கிறோம்
கெஞ்சுகிறோம்.
ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின்
திருநாமத்தில்
கெஞ்சி மன்றாடுகிறோம்
நல்ல பிதாவே.
ஆமென்.

[4/11, 8:09 AM] Thomas - Brunei VT: The First Words
“Then said Jesus, ‘Father, forgive them; for they know not what they do.’ And they parted his raiment, and cast lots” (Luke 23:34).
The Second Words
“And Jesus said unto him, ‘I say unto thee, Today thou shalt be with me in paradise’” (Luke 23:43).
The Third Words
“When Jesus therefore saw his mother, and the disciple standing by, whom he loved, he saith unto his mother, ‘Woman, behold thy son!’” (John 19:26).
The Fourth Words
“And at the ninth hour Jesus cried with a loud voice, saying, ‘Eloi, Eloi, lama sabachthani?’ which is, being interpreted, ‘My God, my God, why hast thou forsaken me?’” (Mark 15:34).
The Fifth Words
‘After this, Jesus knowing that all things were now accomplished, that the scripture might be fulfilled, saith, ‘I thirst’” (John 19:28).
The Sixth Words
“When Jesus therefore had received the vinegar, he said, ‘It is finished’”: and he bowed his head, and gave up the ghost” (John 19:30).
The Seventh Words
“And when Jesus had cried with a loud voice, he said, ‘Father, into thy hands I commend my spirit’” (Luke 23:46).
Clearly the Lukan order is correct, following the Lukan narrative (Lk. 23:34, 43, 46). Similarly, the Johannine order is correct, following the Johannine order (Jn. 19:26, 28, 30).
The Markan insertion of the Fourth Words is correct in the order of placement based on the temporal marker, “at the ninth hour.” This makes Lk. 23:34, 43 and John. 19:26 correct in their placement prior to Fourth Words. This also makes Jn. 19:28, 30, and Lk. 23:46 correct in their placement after the Fourth Words. It is after being forsaken legally in Divine judgment –Ps. 22:1 –that Christ finds all things accomplished and then dies. (Note the temporal marker in Jn. 19:28, “after this.”)

[4/11, 8:14 AM] Elango: ஆமென்🙏

[4/11, 8:19 AM] Elango: நல்ல கேள்விதான் வேத வல்லுநர்களிடம் விடை இருக்கும்

[4/11, 8:50 AM] Elango: லூக்கா 23:39
[39] அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த *குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.*😏😏😏😜😜😛😛
லூக்கா ஒரு கள்வன் இயேசுவை இகழ்ந்ததாக காட்டுகிறார்👆🏼
மாற்கு,  இருவருமே நிந்தித்ததாக காட்டுகிறார்👇
மாற்கு 15:32
[32]நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். *அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.*
இரண்டு சுவிஷேசம் நூல்களிலும் ஏதாவது முரண்பாடு உள்ளது போல் தெரிகிறதா... விளக்குங்களேன்🙏🙏

[4/11, 9:31 AM] Elango: நம்மில் அநேகர் ... மனரம்மியமன சூழ்நிலையில் இயேசுவை ஏற்றுக்கொண்டிருப்பதை விட... இக்காட்டான, கைவிடப்பட்ட, கஷ்ட, நோய்,  பாவத்தின் கோரமான சூழ்நிலையிலேயே ஆண்டவரை ஏற்றுக்கொண்டிருப்போம்....
தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு ... இக்காட்டான சூழ்நிலையும் ஏற்ற சூழ்நிலையே...
*இந்த சிலுவை கள்ளன் ... சிலுவையில் இல்லாமல் ... கீழே நின்றுக்கொண்டிருப்பானால் அவன் இயேசுவை ஏற்றுக்கொண்டிருப்பானா அல்லது பரதீசியில் நுழைய பாக்கியம் பெற்றிருப்பானா என்பது கேள்வியே😰😨😨*

[4/11, 9:53 AM] Elango: மீன்பிடிப்பதில் தேறினவர்கள் வலையினாலும் மீன் பிடிப்பார்கள் என்று சொலவடை சொல்வதுண்டு... அதுபோல
*ஆத்ம பாரம், ஆத்ம தாகம் உள்ளவர்கள் மரிக்கும் வேளையிலும் சில ஆத்துமாவை இரட்சிப்பதுண்டு ... இப்போது சிலுவையில் இயேசுவை கண்டுகொண்ட கள்வனைப் போல...*❤✝🙏
ஜான் பனியன் எழுதிய *மோட்ச பிரயாணம்* என்ற புத்தகத்தில் ... கிறிஸ்தியானின் கூடே வரும் *உண்மையுள்ளவன்* என்பவனை மயாபுரி சந்தையில் சுவிஷேச விரோதிகள் அவரை அடிக்கும் போது... அந்த உண்மையுள்ளவனின் விசுவாசத்தை  பார்த்து ... இயேசுவை ஏற்றுக்கொள்வான் ஒருவன்.
அதுபோல ஒரு கப்பல் சேதத்தில் ... ஒரு சுவிசேஷகர் கடலில் மூழ்கும் தருவாயில்... சுவிஷேசம் அறிவித்து ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக வரலாறு உண்டு.
*ஆத்ம பாரம் கொண்ட இருதயம் ... தான் மரிக்கும் தருவாயிலும் சிலரை இயேசுவண்டை திருப்பும்*❤🙏👍😭😭✝✝

[4/11, 10:01 AM] Elango: ஆமென்🙋♂
8 *மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது.*
சங்கீதங்கள் 49 :8

[4/11, 10:12 AM] Elango: நாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதாவது செய்யாத தவறுக்கு மக்களால் அவமானப்படுத்தப்பட்டு, தூஷிக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு,
சதைகள் கிழிக்கப்பட்டு,
இரத்தம் சிந்தப்பட்டு,  தண்டிக்கப்படும் சூழ்நிலையில் கிறிஸ்துவின் இடத்தில் நாம் இருப்போமானால்...
அதாவது கிறிஸ்துஇல்லாத இல்லாத இருதயத்தோடு நாம் அந்த சூழ்நிலையில் இருந்தோமானால் எப்படியிருப்போம் - கசப்பு, சபித்தல், வெறுப்பு, கோபம், கடுப்பு .... என்று நம் இருதயத்தில் இருக்கும்.
ஆனால் சிலுவையில் அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த இயேசுவின் இருதயம் - அன்பு, இரக்கம், மன்னிப்பு, தாழ்மை, கரிசனை, கிருபை ... போன்ற குணங்கள் நிறைந்தவராய் காணப்பட்டார்.
*ஏனென்றால் தேவன் அன்பாகவே இருக்கிறார்*
💥கழுதையை சீண்டிப் பார்த்தால் உதை கிடைக்கும்
💥மாட்டை சீண்டி பார்த்தால் முட்டு கிடைக்கும்.
💥நாயை சீண்டி பார்த்தால் கடி கிடைக்கும்.
💥 மனுசனை சீண்டி பார்த்தால் கோபம் வெளிப்படும்.
❤இயேசுவை சீண்டிப் பார்த்தார்கள், அடித்து பார்த்தார்கள், சீதைத்து நொறுக்கி பார்த்தார்கள் அங்கே *அவரிடத்தில் இருந்து அன்பே வெளிப்பட்டது*❣❣❣❣
யோவான் 1:16
[16] *அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.*

[4/11, 10:14 AM] Amos John Pastor VT: Pr praise the lord.பரதீசி என்றால் என்ன? என்று சொல்ல முடியுமா? பாஸ்டர்

[4/11, 10:32 AM] Elango: 2 கொரிந்தியர் 12:3
[3]அந்த மனுஷன் *பரதீசுக்குள்* எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
பவுல் எடுத்துக்கொள்ளப்பட்டது *பரதீசு*
பரதீசி,  பரதீசு இரண்டும் வேறுப்பட்ட இடம் சொல்களா

[4/11, 10:32 AM] Jeyaseelan VT: 🌹இயேசுகிறிஸ்து சிலுவையில் அருளின
ஏழு வார்த்தைகள்🌹
💥இரண்டாவது வார்ததை💥
🌷என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…🌷

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். – (லூக்கா 23:43)
நாம் இயேசுகிறிஸ்து சிலுவையில் மொழிந்த வார்த்தைகளை குறித்து தியானித்து வருகிறோம். அந்த ஒவ்வொரு வார்த்தையும் வல்லமையும் ஜீவனும் நிறைந்ததாக இன்றும் நம்மோடு பேசுகிறவைகளாக இருக்கின்றன. இந்த நாளில் இரண்டாவது வார்தையான *இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்* என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்ற வார்த்தையை குறித்து தியானிக்க போகிறோம்.
இயேசுகிறிஸ்து தம்மை சுற்றிலும் இருந்தவர்களை மன்னித்தது மாத்திரமல்ல, தம்மருகே சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளியையும் மன்னித்தார்.
இயேசுகிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளில் இரண்டு வார்த்தைகள் மன்னிப்பை குறித்தானதே. எத்தனையோ காரியங்களை தாம் உலகில் இருந்த போது கற்றுக் கொடுத்த போதிலும், சிலுவையில் இரண்டு வார்த்தைகளை மன்னிப்பிற்கே ஒதுக்கினார். மன்னிப்பது எத்தனை முக்கியமென்பது இதனால் விளங்குகிறதல்லவா?
இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது, இரண்டு கள்ளர்களையும் அவருடைய இடது வலது புறமாக சிலுவையில் அறைந்தனர். அவர்களில் ஒரு கள்ளன், சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் வடிய வடிய, தான் உயிர் வாழ்வதற்கு சிறிது நேரமே இருந்தபோதிலும், உலக இரட்சகராகிய கிறிஸ்து தன் பக்கத்தில் இருப்பதால், அதை பயன்படுத்தி கொண்டு, தான் இந்த நேரத்திலாவது இரட்சிக்கப்பட வேண்டுமே என்று எண்ணாமல், அவரை தூஷித்தான். எத்தனை வேதனையாக காரியம் பாருங்கள். யுகாயுகமாய் நரகத்தில் சேர வேண்டிய நிலமை மாறுவதற்கு தருணம் இந்த கள்ளனுக்கு கொடுக்கப்பட்டாலும், அவன் அதை மறுத்து, கர்த்தரை தூஷித்தான்.
‘அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்’ (39ம் வசனம்). இரண்டு பேருமே எங்களை இரட்சிக்க வேண்டும் என்று கேட்டாலும், இந்த கள்ளன் தன் மனதில் உண்மையான மனந்திரும்புதல் இல்லாமல், அவரை இகழ்ந்தவனாக, தான் குற்றம் செய்தவன் என்றும், தனக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட்டு, தான் அதை அனுபவிக்கிறோம் என்று உணராதவனாக, அவரை இகழ்ந்து கடைசி நேரத்திலும் அறிவில்லாதவனாக நித்திய நரகத்தை நோக்கி கடந்து சென்றான்.
‘மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்’ (40-41 வசனங்கள்). மற்ற கள்ளன், தான் செய்தது தவறு என்றும், அதற்காக நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் என்பதையும் உணர்ந்தான். கிறிஸ்துவை பரலோகத்தின் அதிபதியாக, நித்திய ராஜனாக உணர்ந்து, தம்முடைய இராஜ்யத்தில் வரும்போது தன்னை நினைத்தருளும் என்று வேண்டினான்.
தன்னை பாவி என்று உணர்ந்து, தேவனுக்கு பயப்பட வேண்டும் என்றும், கர்த்தர் தவறு எதுவும் செய்யவில்லை என்றும் அறிக்கையிட்ட அந்த கள்ளனின் வாழ்வில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அல்லேலூயா!
முதல் கள்ளனை கர்த்தர் பார்த்ததாக கூட எழுதப்படவில்லை. ஆனால் தன்னை தாழ்த்தின மற்றவனை அவர் நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று சொன்னார். இந்த கள்ளனுக்கு பரதீசு மாத்திரம் அல்ல, என்னுடனே கூட இருப்பாய் என்கிற பெரிய உத்திரவாதம் கொடுக்கப்பட்டது.
நாம் பரலோகத்தில் நாம் அறியாத எத்தனையோ அற்புதமான காரியங்கள் இருந்தாலும், கர்த்தரோடு நாம் இருப்பதே எல்லா பாக்கியங்களிலும் மேலான பாக்கியம்! அந்த பாக்கியம் இன்னும் சற்று நேரத்தில் மரிக்க போகிற மனம் திரும்பிய அந்த கள்ளனுக்கு கிடைத்தது. இந்த மாதிரியான சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆகவே கொடுக்கப்படுகிற தருணத்தை பயன்படுத்துவதே சிறந்தது. அல்லேலூயா!
பிரியமானவர்களே இந்த உலகத்திலும் இந்த இரண்டு வகையான மக்கள் காணப்படுகின்றனர். கர்த்தரை தேவன் என்று அறிந்தும், அவரை ஏற்றுக் கொள்ளாதோர், மற்றவர் தங்கள் பாவ நிலையை உணர்ந்து, கர்த்தரிடம் மனம் திரும்பி வருபவர்கள். இந்த இரண்டு வகையில் நாம் எந்த வகையில் காணப்படுகிறோம்?
இந்த கடைசி நாட்களில் நமக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கிற இந்த தருணங்களில் கர்த்தரை நாம் ஏற்றுக் கொள்ளும்போது நமக்கு பரதீசு மாத்திரமல்ல, கர்த்தரோடு நித்திய நித்தியமாக வாழும் பாக்கியம் கிடைக்கிறது. கர்த்தர் கொடுக்கும் இந்த கிருபையின் நாட்களில் அவரை ஏற்றுக் கொள்வோமா? இரட்சிக்ககூடாதபடிக்கு அவருடைய கரங்கள் குறுகி போகவில்லை. இன்றே திரும்புவோம், அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம். கர்த்தருடைய உபதேசங்களை கைகொள்ளுவோம். பரலோக இராஜ்யத்தில் கர்த்தரோடு என்றென்றும் வாழ்வோம்.
ஆமென் அல்லேலூயா!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[4/11, 10:33 AM] Levi Bensam Pastor VT: 2 கொரிந்தியர் 12:1-4
[1]மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
[2]கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே *மூன்றாம் வானம்வரைக்கும்* எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
[3]அந்த மனுஷன் *பரதீசுக்குள் எடுக்கப்பட்டு,* மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
[4]அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

[4/11, 10:37 AM] Jeyanti Pastor VT: 1. முதல் வார்த்தை -  மன்னிப்பு
2. இரண்டாம் வார்த்தை - இரட்சிப்பு
3. மூன்றாம். வார்த்தை - பராமரிப்பு
4. நான்காவது வார்த்தை -  பரிதவிப்பு
5. ஐந்தாவது வார்த்தை - அன்பு
6. ஆறாவது வார்த்தை -  ஆர்ப்பரிப்பு
7. ஏழாவது வார்த்தை -  அர்ப்பணிப்பு

[4/11, 10:40 AM] Jeyanti Pastor VT: இல்லை பரசீசு என்பது பேசும் போது பரதீசில் இருப்பாய் என்ற வார்த்தையாயிற்று

[4/11, 10:41 AM] Elango: Oh👍👍

[4/11, 11:17 AM] Elango: 👍👍தலைவனின் பொறுப்பு👌👍🙏

[4/11, 11:31 AM] Elango: 👑 *இன்றைய வேத தியானம் - 11/04/2017* 👑
👉 சிலுவையில் இயேசுகிறிஸ்து பேசிய ஏழு வார்த்தைகளை ஒவ்வொன்றாக ஒரு நாள் வீதம், இந்த வாரம் முழுவதும் 7 வார்த்தைகளை தியானிக்கலாம், *இன்று இரண்டாவது வார்த்தையை தியானிக்கலாம்*👇⁉
⏺இயேசு அவனை நோக்கி: *இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய்* என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.    ⏺லூக்கா 23:43
    🌏📚 *http://vedathiyanam.blogspot.com*📚🌏

[4/11, 1:04 PM] Elango: 2) இரட்சிப்பு

"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)

இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது! அவன் கஷ்டபட்டு அதை பெறவேண்டிய அவசியமே இல்லை! எப்படியெனில் இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்னவென்றால்:
14. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், 15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் -3:14,15
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் ஆண்டவரின் வழினடத்துதல்படி கானானை நோக்கி போய்கொண்டிருந்தபோது, அவர்கள் செய்த தவறுகளின் காரணமாக கொள்ளிவாய் சர்ப்பங்களால் கடிபட்டு மாண்டுபோயினர். அவர்கள் தேவனிடத்தில் முறையிட்டபோது, தேவன் ஒரு வெண்கல கொள்ளி வாய் சர்ப்பத்து உருவத்தை செய்து, அதை ஒரு கம்பத்தில் தூக்கி வைக்கும்படிக்கும், சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் உடனே அதை நோக்கி பார்த்தால் போதும் பிழைப்பார்கள் என்றும் கட்டளயிட்டார். கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் மேலே தூக்கி வைக்கப்பட்ட்ட வெண்கலசர்ப்பத்தை நோக்கி பார்த்து, அவ்வாறு பார்த்த ஒரே காரணத்துக்காக எவ்வாறு தப்பிததார்களோ, அதுபோலவே சாத்தான் என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு பாவம் என்னும் படுகுழியில் கிடக்கும் மனிதர்கள் சிலுவையில் தூக்கப்பட்ட இயேசுவை நோக்கி பார்த்தாலே போதும் அவரை விசுவாசித்தாலே போதும் சாத்தானின் இடத்துக்கு போவதிலிருந்து தப்பித்து விடலாம் அவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை! இந்த இரட்சிப்பை பற்றி யோவான் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
யோவான் -3:18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; என்றும் யோவான்-1:12. ல் அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். இங்கு இயேசுவை ஒருவர் ஏற்றுக்கொண்ட உடனேயே அவன் பிசாசின்பிள்ளை என்ற ஸ்தானத்திலிருந்து "தேவனின் பிள்ளை" என்ற ஸ்தானத்துக்குள் (அதாவது தேவனின் அன்பான கரத்துக்குள்) வந்துவிடுவாதால் "என்னிடத்தில் வந்த எவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை" என்ற இயேசுவின் வார்த்தை அடிப்படையில் அவன் சுலபமான இரட்சிப்பை பெறுகிறான்!. இயேசுவும் அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு, யாரையும் வேண்டாம் என்று ஒருபோதும் தள்ளுவதில்லை! அவன் கிருபைக்குள் இருப்பதால் பாவம் ஒருபோதும் மேற்கொள்ளவே முடியாது என்று பவுலும் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்! இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசம்! கிரயம் எதுவும் இல்லை! அதை இயேசு செலுத்திவிடார். அது தேவனின் இலவச ஈவு! ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; பாருங்கள் இந்த இலவச இரட்சிப்பை கள்ளன் எப்படி பெற்று கொண்டான் முதலாவது பாவத்தை உணர்கிறான் லூக்கா 23 : 41(a) நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம் என கூறுவதை பார்க்கலாம்.இரண்டாவது இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடுகிறான் லூக்கா 23 : 42(a) இயேசுவை நோக்கி: ஆண்டவரே முன்றாவது தேவனின் இரண்டாம் வருகையை அறிக்கையிடுகிறான் லூக்கா 23 : 42(b) நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் ஆம் நாமும் இந்த கள்ளனை போல நம்முடைய பாவத்தை உணர்த்து அதை அறிக்கையிட்டால் இந்த பெரிதான இரட்சிப்பை இலவசமாக பெற்றுகொள்ள முடியும்
தேவனுடைய இரட்சிப்பு என்பது நாளைக்கோ, ஒரு வாரம் விட்டோ, ஒரு மாதம் விட்டோ, ஒரு வருடம் விட்டோ கிடைப்பதுக்கிடையாது.
பாவத்தில் இருந்தும்,பாவத்தின் தண்டனையிலிருந்தும், விடுதலை கொடுக்க, நமக்கு ஒரு புது வாழ்வை கொடுக்க, பாவத்தினாலும், பாவத்தின் வல்லமையினாலும் மரித்துக்கொண்டிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை தர இயேசு இன்று அழைக்கிறார். சிலுவையில் மரித்துக்கொண்டிருந்த கள்ளனுக்கு மாத்திரமல்ல இன்றைக்கும் அவரை நோக்கி கூப்பிடுகிற அனைவருக்கும், அவரோடு கூட இருக்கும்படியான பாக்கியம், ஸ்லாக்கியம் கிடைக்கிறது.
லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஒரு வேளை இதை வாசிக்கிற யாராவது, இந்த உன்னதமான நேசரின் அன்பை இழந்திருப்பீர்களானால், இழந்துப்போன சந்தோஷத்தை, சமாதானத்தை, உங்களுக்கும் எனக்கும் மறுபடியும் கொடுக்க இந்த இயேசு வல்லவர். அவரை மறுதலித்து அவரை விட்டு பின் வாங்கி போய்யிருப்போமானால், இன்று இந்த குரல் நம்மை நோக்கி வருகிறது. "இன்று" இன்றைக்கே உன்னுடைய வாழ்க்கையில், குடும்பத்தில், படிப்பில், தொழிலில், உன்னுடைய பெலவீனத்தில், நோய்களில், உனக்கு ஒரு முழு நிச்சயத்தை, நம்பிக்கையை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்.. நாமும் நமது பாவத்தை உணர்ந்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா?
- http://charlesmsk.blogspot.in/2017/04/22_11.html?m=1#more

[4/11, 2:32 PM] Elango: மாற்கு 15:30-32
[30]உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
[31]அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை.
[32]நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
*👆🏼👆🏼👆🏼இப்படி கீழே நின்றுக்கொண்டு தூஷித்த, நிந்தித்த அநேகர் மத்தியில் ... கடைசி நிமிடத்தில் இரட்சிப்பை சுதந்தரித்துக்கொண்டான் அந்த சிலுவை கள்ளன்.*✝✝✝✝❤❤🙏🙏🙏

[4/11, 8:15 PM] Elango: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேத தியான குழுவில் இருக்கிற யாவரையும் வாழ்த்துகிறேன்.
இயேசு அவனை நோக்கி: *இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய்* என்று கள்ளனை நோக்கி சொன்ன வார்த்தைகள் அநேக படிப்பினையை நமக்கு கொண்டு வருகிறது...
இன்றைக்கு பரதீசு என்றால் என்ன... கள்ளன் ஞானஸ்நானம் எடுத்தானா ...இப்படியாக அநேகர் ஆராய்ந்துக்கொண்டிருந்தாலும்...அதை இந்த பார்வையில் பார்க்கலாம் என்று விசுவாசிக்கிறேன்....
*மனிதன் பார்க்கிற விதமாக தெய்வம் ஒருவரையும் பார்ப்பதில்லை...மனிதன் என்பவன் ஒருவன் செய்த தவறு குற்றங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறான்... ஆனால் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிற கர்த்தர் அவனது மனந்திரும்புதலை பார்க்கிறார்*👆🏼👆🏼🙏🙏👍👍👌👌✝✝✝✅✅
*நம்முடைய வாழ்க்கையில் புறஜாதிகள்,  ஆண்டவரை அறியாதவர்கள்...தேவனற்றவர்கள்... குடிகாரர்கள், பாவிகள்...என்று சொல்லி மற்றவர்களை வெறுத்து ஒதுக்குகிற ஒரு அனுபவம் இருக்கிறதா ...இல்லாவிட்டால் இயேசுகிறிஸ்து போல இன்றைக்கு பரதீசில் என்னோடு கூட இருப்பாய் என்று சொல்லி...அவன் மனந்திரும்புதலை கண்டு அவனும் எப்படியாவது பரலோகம் வந்துவிட வேண்டும் என்ற தாகம் நமக்குள் இருக்கிறதா...*✅✅✅✝✝✝👌👌👍👍

இயேசுகிறிஸ்துவின் தாகம் அந்த சிலுவை பாடுகளின் உச்சத்தில் இருந்தது... அவர் தான் எதற்க்காக பாடுபடுகிறேன் தன்னுடைய நோக்கமென்ன ...என்பதை நன்றாக அறிந்திருந்தார்...
நாம் நம்முடைய நோக்கத்தை அறிந்திருக்கிறோமா... எதற்க்காக ஊழியம் செய்கிறோம்...எதற்கு கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்...என்பதை அறிந்தவர்களாக இருக்கிறோமா
அடுத்து இயேசு அவனை நியாயந்தீர்க்கவில்லை அவனை இரட்சித்தார் ...நம்முடைய கிரியையைகள் பிறரை நியாயந்தீர்க்கிறதா அல்லது இரட்சிக்கிறதாயிருக்கிறதா...
இயேசு நினைத்திருந்தால் நீ கள்ளன் என்று ஒதுக்கியிருக்கலாம் ஆனால் அவர் அவனை ஒதுக்கவில்லை....
பிரியமானவர்களை இப்படிப்பட காரியஙக்ளை இந்த வசனங்களிலிருந்து நாம் கற்க்கலாம் என்று விசுவாசிக்கிறேன்... இன்னும் ஒரு சில காரியங்களை நான் மற்றவர்களிடத்திலிருந்து கற்க விரும்புகிறேன்.
- பாஸ்டர் சாம் @Sam Jebadurai Pastor VT

[4/11, 8:43 PM] Elango: பிரியமான தேப்பிள்ளைகளே ... இந்த கள்ளனைக்குறித்து ஆழமான கருத்து உண்டு...அவன் ஆண்டவரை நோக்கி சொல்லுகிறான் 👇👇👇
லூக்கா 23:42-43
[42]இயேசுவை நோக்கி: *ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.*
தேவனுடைய இராஜ்யம் வரும்போது என்னை நினைத்தருளும் என்றான்... தேவனுடைய இராஜ்யம் வருவதாக!
லூக்கா 23:43
[43]இயேசு அவனை நோக்கி: *இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.*
அடியேனை நினைத்தருளும் என்று ஒரே ஒரு வார்த்தைதான்...
லூக்கா 23:39-41
[39]அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
[40]மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
[41] *நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,*
[42]இயேசுவை நோக்கி: *ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.* ‼
அந்த கள்ளன் சொல்கிறான்.... நாம் தவறு செய்ததால்... நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்...அவர் தவறே செய்யவில்லையே தகாத ஒன்றையும் நடப்பிக்க வில்லையே ...ஒரு கள்ளன் அருமையாக சாட்சியை கொடுக்கிறான்... *நினைத்தருளும்*  என்கிறான்...
இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட சிம்சோன்னும் அப்படித்தான் ....நல்ல ஒரு நியாயதிபதி,  பலசாலி.... எல்லாம் இழந்து வேடிக்கையாக காட்டப்பட்டவனாக ...இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தை பரியாசம் பண்ணுகிறார்கள்... அந்த நேரத்தில் அவன் ஜெபிக்கிறான்.👇👇👇

நியாயாதிபதிகள் 16:28
[28]அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, *இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும்*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்று சொல்லி,
தேவன் அவனை நினைத்தருளினார் ...
நியாயாதிபதிகள் 16:30
[30]என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் *அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.*‼
*புதிய ஏற்ப்பாட்டிலும் அப்படிதான் நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்...அவனுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது ... மறுபடியும் ஆண்டவர் வருவார் ...அவருடைய இராஜ்யத்தில் என்னைக் கொண்டு சேர்ப்பார் என்று ...*✝👍✅
ஆண்டவருடைய கிருபையினால் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று பவுலைக்குறித்து வேதம் சொல்கிறது ... வாக்கடங்கா பெருமூச்சோடு பேசுகிறார் .... இதில் ஏதோ ஒரு தேவனுடைய கிருபை இருக்கிறது.
- பாஸ்டர் லேவி @Levi Bensam Pastor VT

[4/11, 10:42 PM] Elango: கடவுள் தம்முடைய குமாரன் மூலமாக அந்த திட்டத்தை சரியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்...
*சாத்தானின் தலை நசுக்கப்படுகின்றது ...அந்த கள்வனின் வார்த்தைக்கு மதிப்பளிக்கின்றார்...அவன் தன்னை யார் என்று அறிந்துக்கொண்டதை இயேசு உணர்ந்துக்கொண்டார்*❤❤✝👍🙏
உம்முடைய இராஜ்யத்தில் அடியேனை நினைத்தருளும் என்று சொன்ன கள்வனுக்கு ... நியாயப்படி பார்த்தோமானால் கிறிஸ்து அங்கே என்ன சொல்லியிருக்க வேண்டும்.... *சகோதரனே கொஞ்சம் பொறுமையாக இரு ... நான் இப்போது விண்ணுக்கு சென்று விடுவேன் ... என்னுடைய இரண்டாம் வருகையின் போது உன்னை நிச்சயமாக நினைப்பேன், நியாயத்தீர்ப்பின் நாளிலே உன்னை கணௌடு கொள்வேன் ... உன்னை அங்கே விடுவித்து காத்துக்கொள்வேன் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்.*
ஆனால் அப்படி சொல்லாமல் ஏதோ சொல்லி வைப்போம் என்று சொல்லி வைக்கவில்லை... *இன்று என்னோடு பரதீசில் இருப்பாய்* என்றார்.‼ஒரு தீர்க்கமாக திட்டவட்டமாக ஒரு வார்த்தையை அவனுக்கு சொல்லுகின்றார்...
தேவனின் வாயிலிருந்து புறப்பட்ட வல்லமையை பார்த்து .. எல்லோரும் ஆச்சர்யப் பட்டார்கள் இந்த மனிதன் பேசியது போல ஒருவனும் இதுபோல யாரும் பேசுவதை ஒருக்காலும் கேட்டதில்லையே என்றார்கள்... இவருடைய வார்த்தைக்கு எதிர்ப்பேச்சு யாராலும் பேச முடியவில்லை..
*அப்படிப்பட்ட வல்லமையான தீர்க்கமான வார்த்தையை இயேசு கள்வனிடத்தில் சொல்லுகிறார்...ஆம் அவர் கடவுள் என்பதை நிறுபிக்கிறதாக அந்த வார்த்தை அமைகிறது*
விண்ணுக்கும், மண்ணுக்கும் நடுவாக நின்று அவர் மத்தியஸ்தர் என்பதை நிறுபிக்கிறார்...✝✝✝✝✝
அந்த கள்ளவனிடம் கொடுத்த வாக்கின் மூலமாக அவர் தான் ஒரு இறைமந்தன் என்பதை இந்த உலகத்திற்க்கும், ஒட்டுமொத்த மனிதர்களுக்கும், ரோம சாம்ராஜ்யத்திற்க்கும் எல்லாவற்றிற்க்கும் உறுதிப்படுத்தி காண்பிக்கிறவராய் இருக்கிறார்.
- சகோ. இம்மானுவேல் @Immanuel Brother VT

[4/11, 10:46 PM] Elango: இன்னும் மேலே அருமையான தேவ மனிதர்கள் பேசிய  தேவ வார்த்தைகளான ,  அனைத்து ஆடியோக்களையும் எழுத்தில் எழுதி விட ஆசையே... ஆனாலும் நேரம் அனுமதிக்கவில்லை...
நேரம் கிடைத்தால் ஞாயிறு அன்று நம் ப்ளாக்கில் எழுதி அப்லோட் செய்துவிடுகிறேன்👍✍🙏

[4/11, 11:33 PM] Immanuel Brother VT: 💝💝 அருமை சகோதரரே! நன்றிகள் பல.. 🙏🙏🙏

[4/11, 11:57 PM] Thomas Udumalai VT: தயவாய் எல்லோரும் மன்னிக்கவும்.....
11:30 மணிக்கு அனுப்பியதற்கு
மன்னிக்கவும்..
இன்று என்னுடைய மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி ஆன் ஆகவில்லை problem.,
அதனால் இன்றைய தியானத்தில் அநேக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
அதனால் ஒரு காரியத்தை
( கேள்வி ) மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து : ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். யோவான் 3 :5 
மெய்யாகவே என இரண்டு முறை, இயேசு ஒரு சில இடங்களில் மட்டுமே கூறியுள்ளார்.
இரண்டு முறை சொன்னால் சொன்னது தான், மாற்றம் இல்லை.
என்னுடைய கேள்வி அந்த கள்ளன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தானா..?
(ஜலத்தில்) பிறக்காதவன் எப்படி தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.?
இயேசு ஏன்  அப்படி., அவனை நோக்கி அந்த வார்த்தையை சொன்னார்...?
விதிமுறைகளை மீறி நேரம் கடந்து அனுப்பியதற்கு மன்னிக்கவும்...
இன்னும் அநேக காரியங்களை கேட்கவும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்., ஆனால் மொபைல்  இப்போது தான் ரெடியானது பகிர்ந்து கொள்ள இது சரியான நேரமும் அல்ல...
மன்னிக்கவும்...!

Post a Comment

0 Comments