மனிதன் - ஒரு ஜீவாத்துமா!
தியானப்பகுதி: ஆதியாகமம் 2:4-7
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்." ஆதியாகமம் 217
தேவனாகிய கர்த்தர் தம்முடைய சிருஷ்டிப்பில் மனிதனை மட்டுமே அவருடைய சாயயினும், அவருடைய ரூபத்தின்படியேயும் மண்ணிலிருந்து உருவாக்கினார். அவர் ஜீவசுவாசத்தை மனிதனுடைய நாசியிலே ஊதின்போது, அவன் ஜீவாத்துமாவாயாள். பொதுவாக, மனித ஆத்துமாவானது.அவனுடைய சரிரத்திற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மையென்னவெளில், தற்காலிகமாக சரீரத்தில் வாழும் மனிதனே அந்த ஆத்துமா, தேவன் மண்னிலிருந்து உருவாக்கினதுபோல, இக்காலத்தில் மனிதர்களை உருவாக்குவதில்லை. பெற்றோர். பிள்ளைகளை அவர்களுடைய சாயலில் பெற்றெடுக்க தேவன் அவர்களை பயன்படுத்துகிறார், மாம்சமானது மாம்சத்தை பிறப்பிக்கிறது; ஆவியையோ ஆத்துமாவையோ பிறப்பிக்கமாட்டாது (யோவான் 3:6). எனவே, தேனன் சரீரத்திற்குள் தங்கும்படி ஆத்துமாவை பரலோகத்திலிருந்து அனுப்புகிறார். காப்பலதியின் வயிற்றில் எறும்புகள் உருவாரும் விதம் இன்னதென்று நாம் அறியாதிருக்கிறோம் என்று வேதாகமம் கூறுகிறது (பிரசங்கி 11:5), மனிதர்கள் தங்கள் சரீரத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்வதற்கு சிருஷ்டிக்கப்பட்டவர்கள் அல்ல: மாறாக, நித்திய வாழ்க்கை வாழும்படியாக உருவாக்கப்பட்ட ஆவிக்குரியவர்களே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அது தேவன் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரைப் போல வாழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை கொடுத்திருக்கிறார். மேலும் அவர் ஆளியாய் இருக்கிறபடியால் மனிதனுடைய மரணத்திற்கு பிறகு, அவன் தேவனோடு நித்திய நித்தியமாய் வாழ பாக்கியம் பெற்றுள்ளான்.
ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியின் உதவியோடு மட்டுமே மாம்சத்தின் இச்சைகளை மேற்கொண்டு ஜெயமுள்ள வாழ்க்கை வாழமுடியும். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆளி மாம்சத்துக்கு விரோதமாகவும் செயல்படுவதால், மாம்ச இச்சையை நிறைவேற்றாமல் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ள வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியரிடம் வேண்டிக்கொண்டார் (கலாத்தியர் 5:16-17). இவ்வுலகத்தில் நம் வாழ்க்கை முடிந்ததும், "மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆஸி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் திரும்பும்" (பிரசங்கி 12:7), ஏனெனில், ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை (பிரசங்கி 5:8),
Post a Comment
0 Comments