"இருக்கிறவராக இருக்கிறேன்"
'தியானப்பகுதி: யாத்திராகமம் 3:7-14
"அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்." - யாத்திராகமம் 3:14
மோசே ஒரு எகிப்தியனை கொன்றபின் தனக்கு ஆபத்து நேரிடும் என பயந்து தன் ஜீவனை காக்கும்படி, எகிப்திலிருந்து சென்றான், அங்கே அவன், தன்மனைவிஇரு பிள்ளைகளோடு மனநிறைவுடன் வாழ்ந்து, வனாந்தரத்தில் தன் மாமனார் எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் தேவன் இடைப்பட்டு தனது சொந்த ஜனங்களை எகிப்தியர்களிடமிருந்து மீட்கும்படியாக கட்டளையிட்டார்.
மேலும், முட்செடியில் தோன்றிய தேவன், அவருடைய ஜனத்தை எகிப்திலிருந்து விடுவிப்பதற்காக மோசேவாகிய என்னை அனுப்பினார் என்று பார்வோனிடத்தில் கூறும்படி கர்த்தர் கட்டளையிட்டார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: "நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும் போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நாள் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். அதற்குத் தேவன், "இருக்கிறவராக இருக்கிறேன்" என்றார். இதிலிருந்து, “யெகோவா" என்ற பெயர் வந்தது. இதற்கு 'இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய கர்த்தர்? என்று அர்த்தமாகும் (யாத்திராகமம் 3:14),
புதிய ஏற்பாட்டில், எபிரெய நிருபத்தின் "இயேசுகிறிஸ்து தேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" (எபிரெயர் 13:8) என்றுரைக்கிறார். அதாவது, இயேசுவே இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய நித்திய யெகோவா". இயேசுவை போர்ச்சேவகர்கள் வந்தபோது, "யாரைத் தேடுகிறீர்கள்" என்று கேட்டார். கைது செய்ய அதற்கு அவர்கள், நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். "நான்தான்" என்று இயேசு சொன்னவுடனே அவர்கள் பின்னிட்டு, தரையிலே விழுந்தார்கள் (யோவான் 18:4-6).
பொதுவாக மனிதர்களைப்பற்றி பேசும்போது, 'நேற்று அவர் அப்படி இருந்தார்; இன்று அவர் இப்படி இருக்கிறார்: நாளை எப்படி இருப்பாரென்று நமக்குத் தெரியாது' என்று சொல்வதுண்டு. ஆனால், நம்முடைய காத்தராகிய இயேசுகிறிஸ்துவோ எப்போதும் "இருக்கிறவராகவே இருப்பவர்."
Post a Comment
0 Comments