Type Here to Get Search Results !

தேவனிடத்திற்கு செல்லும் வழி

 தேவனிடத்திற்கு செல்லும் வழி 

தியானப்பகுதி: ஆதியாகமம் 11:1-9

"பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப்பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்," - ஆதியாகமம் 11:4

ஜலப்பிரளயத்திற்கு பின்பு, சேம், காம், யாப்பேத்தின் குடும்பங்களிலிருந்து வந்த ஜனங்கள் பூமியெங்கும் பரவினார்கள். அக்காலக்கட்டத்தில் ஜனங்கள் அனைவரும் ஒரே பாஷையை பேசினபடியால், அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர். அவர்கள் வானத்தைத் தொடுமளவும் உள்ள கோபுரம் ஒன்றைக் கட்டும் திட்டத்தை மேற்கொண்டனர். அதை பார்த்த தேவன் "ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்: இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்" என்று கூறினார் (ஆதியாகமம் 11:6).

திரியேசு தேவன் இறங்கிபோய் ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார். ஆகவே அவர்கள் அனைவரும் பூமியின்மீதெங்கும் சிதறுண்டு வெவ்வேறு பாவைகளில் பேசினார்கள்.

தேவன் இருக்கும் பரலோகத்திற்கு, பூமியிலிருந்து ஒரு வழியை உண்டுபண்ணவேண்டும் என்ற மனிதனின் திட்டத்தை கர்த்தர் அதமாக்கினார். இந்த சம்பவம் பல்வேறு மதங்களின் தொடக்கமாக அமைந்தது. ஏனெனில், தேவனை கண்டடைவதற்கு மளிதர்கள் தங்கள் சொந்த வழிகளை ஏற்படுத்திக் கொண்டனர். ஆகவே 'பாபேல்' என்பதற்கு இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. குழப்பம் என்ற அர்த்தம்

மதம் என்பது கடவுளை கண்டடைய மனிதன் உண்டுபண்ணின வழியாகும். ஆனால், தேவன் மனிதனைத் தேடி வருவதே கிறிஸ்தவமாகும். ஏதேன் தோட்டத்திலிருந்து மனிதன் துரத்தப்பட்டபின், தேவன் தமது ஒரேபேறான குமாரனை நமக்கு தந்தருளி, மனிதன் தேவனை அடைவதற்கான ஒரே வழி இயேசுகிறிஸ்துவே என்று வெளிப்படுத்தினார்.

Post a Comment

0 Comments