வேதாகமத்தின் நற்செய்தி
தியானப்பகுதி: ரோமர் 15:1-6
"தேவவசனத்தினால் உண்டாகும் பொறுபையினாலும் அறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது." ரோமர் 15:4
வேதாகமமானது ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் வாழ்த்த 40 ஆக்கியோன்களாய் சுமார் 1600 ஆண்டுகளில் எழுதப்பட்டது. சமூதாயத்தின் பலதரப்பட்ட வாழ்க்கை சூழ்நிலையிலிருந்து வந்தவர்களும், வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்களும், பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்களும் (அரசர்கள், ஆளுநர்கள், மேய்ப்பர்சுள், இசைக்கலைஞர்கள், மீன்பிடிப்போர், குருக்கள், வரி வசூலிப்பவர்கள், கூடாரத் தொழிலாளர்கள்) இவ்வேதாகமத்தை எழுதியுள்ளனர். கர்த்தரின் மகத்தான மீட்பின் திட்டத்தில், யூதர்களும், புறஜாதிகளும் பங்குவகித்துள்ளனர்.
II தீமோத்தேயு 3:16-ன்படி வேதலாக்கியங்களெல்லாம் "தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. இதின் கிரேக்க வார்த்தை 'தியோப்னுயுஸ்டோஸ்' (thoopecustor) ஆகும். அதின் அர்த்தம் "தேவன் ஜீவசுவாசத்தை ஊதினார்" என்பதாகும். தேவன் ஜீவசுவாசத்தை ஆதாமின் நாசியிலே ஊதியதால், அவள் ஜீவாத்துமாவானான். அவ்வண்ணமே தேவ ஆவியானவர் கர்த்தருடைய வார்த்தையை உருவாயிற்று, ஆக்கியோன்களின்மேல் ஊதினதினிமித்தம் வேதாகமம்
தேவ ஆவியானவர் தம்முடைய உணர்வுகளையும், தன்மைகளையும் தன் சுவாசத்தின் மூலம் பரிசுத்தவான்களுக்கு தந்தருளினார். தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினார்கள் என்று II பேதுரு 1:21 கூறுகிறது.
சுமார் 1600 ஆண்டு கால இடைவெளியில் வாழ்ந்த இந்த எழுத்தாளர்கள். பல்வேறு இடங்களில் வாத்து, ஒருவரையொருவர் அறியாதிருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் ஒரே நிலையான முரண்பாடற்ற நித்திய ஜீவனை அளிக்கும் நற்செய்தியை அறிவித்தனர். பாவத்தினாலும் முரட்டாட்டத்தினாலும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட மனித சமுதாயம், இயேசுகிறிஸ்து சிலுவையில் செய்த கிரியைவினால் மீட்கப்பட்டு, நித்திய ஜீவனையும் நம்பிக்கையையும் அளிக்கும் நற்செய்தியை. இந்த வேதாகமம் மிகத் தெளிவாக நமக்கு கொடுக்கிறது.
Post a Comment
0 Comments