Type Here to Get Search Results !

ஞானக் கல்விகள்

 

ஞானக் கல்விகள்

1.ஜெபம்


பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம் முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப் படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன் றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் குற்றங்களை எங்க ளுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள் ளும். ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக் கும் உம்முடையவைகளே. ஆமென்.


கவனிப்பு:- இந்த ஜெபத்தைச் ஜெபத்தைச் செய்யும்பொழுதெல்லாம் தேவன் உன் பிதாவென்றும்; அவர் தமது பரிசுத்த நாமத்தால் மாத்திரம் இவ்வுலகத்தில் அறியப்படுகிறாரென்றும்; அவருடைய ஆளுகை உலகமெங்கும் பிரபலமாகிறதால் பிசாசின் ஆளுகை அற்றுப்போக வேண்டுமென்றும்; தேவசித்தம் பரலோகத்தில், தேவதூதரால் எவ்வளவு பூரணமாக நிறைவேற்றப்படுகிறதோ அதுபோல இந்த உலகத்தாரும் அதை நிறைவேற்றவேண்டிய வர்களாயிருக்கிறார்கள் என்றும்; அன்றன்று சரீரத்துக்கு வேண்டிய அப்பத்தைக் கேட்கும்போது, அன்றன்று இயேசு என் ஞான போசனம் என்றுணர்ந்து அதை நாடவேண்டும் என்றும்; பிறர் குற்றங்களை மன்னித்தாவின்றி நமது குற்றங்கள் தேவனால் மன்னிக்கப்படமாட்டாதென்றும்; நாம் பாவம் செய் யாதபடி தேவனே தமது ஆவியால் நம்மைக் காத்து ஆதரிக்க வேண்டுமென்றும்; நமது தேவனாகிய பிதாவுக்கே சகல ராஜ்ய மும் வல்லமையும், என்றென்றைக்கும் உரித்தாயிருப்பதால், நாம் கருத்தோடு இந்த ஜெபத்தின் மூலமாய்க் கேட்கும் எல்லா காரியங்களையும் அவர் நமக்குக் காடாட்சம் பண்ணுவாரென்றும் உணர்ந்துகொள்ளவேண்டியது. இவை போலொத்த உணர்ச்சி யும் அறிவுமின்றி கர்த்தருடைய ஜெபத்தைச் செய்வது ஆத்து மாவுக்கு லாபமாயாவது, ஆவிக்கு அனலாயாவது இருக்க மாட்டாது.


கிறிஸ்துவானவர் படிப்பித்த கர்த்தருடைய ஜெபமானது கிறிஸ்துமார்க்க ஜெபங்களுக்கு ஆதாரமும் அஸ்திபாரமு மாயிருப்பதால், அதை அதன் பொருளோடு உணர்ந்து ஜெபிப்பது நியாயமாயிருக்கிறது.

2. விசுவாசம்


இந்தத் திருவிருந்தில் பங்குபெறுகிறவன் கிறிஸ்துமார்க் கத்துக்குரிய பிரதான சத்தியங்களை விசுவாசிக்கிறவனா யிருக்க வேண்டியது. அச்சத்தியங்களாவன:-


(1) ஒரே தேவன் உண்டு. அவர் வானத்தையும், பூமியை யும் படைத்தார், அவர் சர்வ வல்லமையுள்ளவர்; அவர் எனக்குப் பிதாவாயிருக்கிறார்.


(2) ஒரே இரட்சகர் உண்டு. அவர் தேவனுடைய ஒரே பேறான குமாரனாயிருக்கிறார், அவர் பேர் இயேசு கிறிஸ்து; அவர் பரிசுத்த ஆவியால் கன்னிமரியம்மா ளிடத்தில் பிறந்தார். அவர் சிலுவையில், பாடுபட்டு, மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, பின்பு பரலோகத்துக் கெழுந் தருளி பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.


அவர் மனுமக்களை நியாயம்தீர்க்கும்படி திரும்பவும் வருவார்.


(3) பரிசுத்த ஆவியும் உண்டு. அவர் கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாயிருக்கிறார்; அவர் என்னையும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா ஜனங் களையும் பரிசுத்தம் செய்துவருகிறார். 


(4) பொதுவான பரிசுத்த சபையுண்டு.


(5) பாவமன்னிப்பும் சரீர உயிர்த்தெழுதலும் நித்திய ஜீவனுமுண்டு.


(6) ஆத்துமாட்சிப்படைவதற்கு அவசியம் வேண்டிய தெல்லாம் பரிசுத்த வேதாகமத்தில் அடங்கியிருக் கிறது; ஆகிய இவைகளே.


இந்த விசுவாச சத்தியங்களை நீ பலமாய்ப் பிடித்து நடந்தால், பரம பிதாவாகிய தேவனைப்பற்றிய மதிப்பும், இரட்சகராகிய இயேசுவின்மேல் அன்பும், பரிசுத்த ஆவியின் மேல் வாஞ்சையும் உனக்குள் பெருகி, நீ பரிசுத்தவான் களின் தொகையில் சேர்ந்தவனாகி, கிறிஸ்துவின் வருகைக்கு எதிர்பார்க்கிறவனாக இவ்வுலகத்தில் ஜீவித்து, பாவமன்னிப் படைந்தவனாய் மரணமடைந்து நித்திய ஜீவனாகிய மோட்ச வாழ்வை அடைவாய்.

3. கற்பனைகள்


(1) தேவனை விசுவாசிக்கிறவர்கள், அவர் தங்களுக்குப் பிதாவாக இருக்கிறதினிமித்தம், 'முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரில் அன்பு கூரவேண்டும்' (மத். 22:37).


(2) தேவன் நம்மை நேசித்து அன்புகூருகிறதினிமித்தம் 'நாம் அவரவர், நம்மில் அன்புகூருவதுபோல பிறரிடத்தி லும் அன்புவைக்கவேண்டும் (மத்.22:39)

4.கீழ்ப்படிதல்


தேவனிலும் மனுஷனிலும் அன்புகூருகிறவர்கள் தங் கள் அன்பை வெளிப்படுத்தும்படி அவர் பத்துக் கட்டளை களைக் கொடுத்திருக்கிறார். 'ஒருவன் என்னில் அன்பா யிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுவான்' என்று இயேசுவும் அறிவித்திருக்கிறார். நாம் கீழ்ப்படிய வேண்டிய கட்டளைகளாவன:-


(1) உன் தேவனாகிய கர்த்தர் நானே; என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.


(2) மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாவது, யாதொரு விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ் கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த் தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னை பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய பாவங்களை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன்.


(3) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.


(4) ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளை யெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்த ருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானா லும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும் உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களிலிருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளுக்குள்ளே வானத்தை யும் பூமியையும் சமுத்திரத்தையும், அவைகளிலுள்ள எல் லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.


(5) உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கிற தேசத் திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.


(6) கொலை செய்யாதிருப்பாயாக.


(7) விபசாரம் செய்யாதிருப்பாயாக.


(8) களவு செய்யாதிருப்பாயாக.


(9) பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லா திருப்பாயாக.


(10) பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்பதே.


இந்தக் கற்பனைகளை நாம் கைக்கொள்ள இயலாதவர் களாயிருக்கிறோம். ஆகையால் நாம் இந்தப் பிரமாணங்களை நினைவுகூரும்போதும், நமது காதினால் கேட்கும்போதும், 'கர்த்தாவே எனக்கு இரங்கி இந்தப் பிரமாணத்தைக் கைக் கொள்ள என் இருதயத்தை ஏவியருளும்' என்று மன்றாட வேண்டியது.


இம்மட்டும் திருவிருந்தின் சம்பந்தமான பொதுப் போதனையையும், உபதேசத்தையும், கல்விக் குறிப்புகளையும் சுருக்கமாய்க் காட்டினேன். இனிமேல் உன்னிடத்தில் விளங்கவேண்டிய நற்குணங்களையும் நல்ல செய்கைகளையும் பற்றிப் பேசப்போகிறேன்; இந்த நற்குணங்களும் செய்கை களும் உனக்கில்லாமல், நீ இந்தப் பரிசுத்த விருந்துக்கு வருகிறதுண்டானால் அது தேவனைப் பரியாசம் பண்ணு கிறதுபோலிருக்கும். அது ஆடுகளுக்கிடையில் ஒரு ஓநாய் உட்கார்ந்ததுபோலும், புறாக்களுக்கிடையில் ஒரு பூனை வந்ததுபோலும், இராஜவிருந்தாளிகள் மத்தியில் அழுக் கான தேகத்தோடும் அசுத்தமான வஸ்திரத்தோடும் ஒரு துஷ்டன் வந்து, எனக்கும் இந்த விருந்தில் பங்குண்டு என்று வாதாடுகிறது போலும் ஆகும். நீ இந்தத் திருவிருந்தைச் சாப்பிடவரும்பொழுதெல்லாம் பரிசுத்த அலங் காரத்தோடு அவ்விருந்து மண்டபத்துக்குள் பிரவேசிக்கும் படி அவைகளை அடியில் குறிப்பிக்கிறேன்.

நற்குணக் குறிப்புகள்


மூன்று மூலகுணங்கள் (1 கொரி.13:13).


  • 1.விசுவாசம்.

  • 2.நம்பிக்கை.

  • 3. அன்பு.


நாலு மூலலட்சணங்கள்


  • 1. நியாயம்.

  • 2.விவேகம்.

  • 3.இச்சையடக்கம். 

  • 4.தைரியம். 

இவைகளுக்காக ஜெபம் செய்துவரவேண்டும்.


ஆவியின் ஏழு வரங்கள்.


1. ஞான வரம். 

2. விவேக வரம்.

3. ஆலோசனை வாம்.

4. ஆத்துமபெலன் வரம்.

5.அறிவு வரம்.

6. மெய்தேவபக்தி வரம். 

7. பரிசுத்தபயம் வரம். 


ஆவியின் கனிகள்.


1. அன்பு.

 2.சந்தோஷம்.

3.சமாதானம்.

4. நீடிய பொறுமை.

5.தயவு. 6.நற்குணம்.

7.விசுவாசம்.

8.சாந்தம்.

9.இச்சையடக்கம்.

நற்கிரியை குறிப்புகள்


இந்த நற்கிரியைகளில் சில ஆவிக்குரியதாயும், சில சரீரத்துக்குரியதாயும் சொல்லலாம்.


ஆவிக்குரியது.


1. அறிவீனனுக்குப் போதிப்பது.

2.குற்றவாளிகளை உணர்த்தல்

3.சந்தேகத்துக்கு ஆலோசனை சொல்லுதல்.

4. துன்பப்படுகிறவர்களை ஆறுதல் படுத்துதல்.

5.துன்பத்தைச் சகித்தல்.

6. மற்றவர்கள் பிழைகளை மன்னித்தல். 

7. மற்றவர்களுக்காக ஜெபித்தல்.


சரீரத்துக்குரியது.


1. பசித்தவனைப் போஷித் தல்.

2. தாகம் தீர்த்தல்.

3. வஸ்திரம் கொடுத்து உதவுதல்.

4. நோயாளியைச் சந்தித் தல்.

5. பரதேசிகளை உபசரித்தல்.

6. கைதிகளுக்குப் அடக்கம்

7. மரித்தோரை அடக்கம்பணி விடை செய்தல்.


மேலே காட்டிய நற்குணங்களிலும், நற்கிரியைகளிலும் விருத்தியாகும்படி அவைகளில் தினந்தோறும் பழகவேண் டும். அப்படிப் பழகினால் வரவர இவையனைத்தும் பரிசுத்த ஆவியானவருடைய உதவியால் உன் இயல்பான குணங்கள் போலாகிவிடும். அப்பொழுது உன்னிலுள்ள கிறிஸ்துமார்க் கம் சிறப்பாய் விளங்குவதோடு, இயேசுவின்மேலும் பிறர் மேலுமுள்ள உன் அன்பின் வாசனை தெளிவாகத் தெரிய வரும்.


இந்தத் திருவிருந்துக்கு ஆசைப்படுகிறவன் களைந்து விடவேண்டிய சில பாவங்களையும், அணிந்துகொள்ளவேண் டிய லட்சணங்களையும் காட்டுகிறோம்.


களையவேண்டியது.


பெருமை.

பொருளாசை,

இச்சை.

பொறாமை.

பெருந்தீனி.

கோபம்.

சோம்பல்.


அணிந்துகொள்வது.


தாழ்மை.

பரோபகாரம்.

கற்பு.

பொறுமை.

மட்டாய் புசித்தல்.

சாந்தம்.

சுறுசுறுப்பு.


இன்னும் நீ பொதுவாக அறிந்துணர்ந்து கொள்ளவேண்டிய ஞானசாஸ்திரங்களின் சில குறிப்புகளைச் சொல்லுகிறேன்.


1. பிறர் பாவம்செய்ய ஆலோசனை சொல்லக்கூடாது.


2. பிறர் பாவம்செய்ய ஏவக்கூடாது.


3. பிறர் பாவம்செய்யச் சம்மதிக்கலாகாது.


4. பிறர் பாவத்துக்கு நியாயம் சொல்லக்கூடாது.


5. பிறர் பாவத்தைப் புகழக்கூடாது. 6. பிறர் பாவத்தை மறைக்கக்கூடாது.


7.பிறர் பாவத்தில் சம்பந்தப்படலாகாது. 8. பிறர் பாவத்தைப்பற்றி மவுனம் சாதிக்கக்கூடாது.


9. குற்றவாளிகளைப் பேணி ஆதரிக்கக்கூடாது.


இந்த ஒன்பது விதிகளில் ஒன்றையாவது, சிலவற்றையா வது நீ மீறுகிறதுண்டானால், மற்றவன் செய்கிற பாவத்தை நீயே செய்கிறதுபோலாகும். தானே பாவம் செய்கையில் பாவியின் தொகையும், பாவத்தின் தொகையும் ஒருபங் கானால் மற்றவனைப் பாலத்துக் குட்படுத்துவதில் அதின் தொகைகள் இரட்டிக்கும். மேலும் மற்றவனைப் பாவத்துக் குத் தூண்டுதல் அவன் ஆத்துமாவைக் கொலை செய்கிற தாகும்.


இன்னும் பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம் என்று சொல்லக்கூடிய எல்லாத் தீமைகளுக்கும் இடம் கொடாத படி எச்சரிக்கையா யிருக்கவேண்டும்.

பரிசுத்தஆவிக்கு விரோதமான பாவங்களாவன.


1. தேவதயவை நினைத்து மதியாமல் பாவம் செய்வது. 

2. எனக்கேது மன்னிப்பு என்று நிர்விசாரமாகி பாவத் தைச் செய்வது.

3. பாவம் என்று அறிந்தும் அதைச் செய்வது.

4.பிறர் வாழ்வைச் சகியாமல் பொறாமைகொள்வது. 

5. பாவத்தில் பிடிவாதமாயிருப்பது.

6. மரணபரியந்தம் மனம் திரும்பாமலிருப்பது.


இப்படிப்பட்ட விஷயங்கள் உன் ஆத்தும வாழ்வைச் சமூலமாய் நஷ்டப்படுத்துமாதலால் இவைகளுக்கு இடங் கொடாதபடி எச்சரிக்கையா யிருக்கவேண்டும்.

Post a Comment

0 Comments