வழிநடைப் போதனை
சிநேகிதனே, இதோ, நாமிருவரும் புறப்படுவோம். நடந்துவா, நாம் தியான சோலைக்குள் போகுமுன் அறிய வேண்டிய அநேக விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொள்வது நலம். ஏனெனில் அந்த ஸ்தலம் சாதாரணமான ஒரு சோலை யல்ல. அங்குள்ள நதியும், விருட்சங்களும், கனிகளும், அங்கு வீசும் காற்றும், எரிக்கும் வெயிலும், அங்கு பேசும் பாஷையும், பாடும் கீதமும், உண்ணும் உணவும் மாம்ச சம்பந்தமானதல்ல. அவையெல்லாம் ஆவிக்குரியவைகளா யிருக்கின்றன. சாதாரண கிறிஸ்துமார்க்கம் போதாது. ஏனெனில் அந்த சோலையின் விருந்து மண்டபத்திலிருக்கிற ஒரு காவற்காரன், 'கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத் தில் தங்குவான்! யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? உத்தமனாய் நடந்து நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தானே' என்று விளம்பரம் அடித்துக்கொண்டே நிற்கிறான் என்று சொல்ல லாம் (சங்.15:1,2). தியான சோலைக்குள், உனக்குக் கிடைக்கும் எல்லா வாழ்விலும் விருந்துண்பதே பெரிய வாழ்வாயிருக்கிறது. அந்தப் பெரிய வாழ்வை நீ பெற்றுக் கொள்ள வேண்டுமானால் தகுந்த ஆயத்தத்தோடே அதற்குள் பிரவேசிக்கவேண்டியது அவசியம். நீ உன் இஷ்டத்தை இன்று எனக்கு ஒப்புவித்துவிடுவாயானால், நான் அதற்குரிய பொதுவான குறிப்புகளையும் போதனைகளையும் உனக்கு உணர்த்தி, உலக சிந்தையிலிருந்து உன் மனதைப் பிரித்து, தியான சோலைக்கு நேரே திகையாமல் நடத்தக்கூடுமென்று நம்புகிறேன்.
திருவிருந்துபதேசம்
பரிசுத்த இராப்போஜனம் என்னும் திருவிருந்து, கிறிஸ்து பலியாக அடைந்த மரணத்தையும், அதினாலே நாம் பெற்றுக்கொள்ளுகிற நன்மைகளையும், நாம் இடை விடாமல் நினைவுகூருகிறதற்காக, கிறிஸ்துநாதரே ஏற்படுத்தி யிருக்கிற ஒரு நியமமாயிருக்கிறது. இந்த விருந்தில் பங்கு பெறும்படி ஆசிக்கிறவர்கள், துணிந்து சேராமல், யாவரும் தங்களை நன்றாகச் சோதித்து அறிந்து சேரவேண்டும். ஏனெனில் பரி. பவுல் 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து இந்தப் பாத்திரத் தில் பானம்பண்ணக் கடவன்' என்று எச்சரித்திருக்கிறார் (1 கொரி.11:28).
யில் இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரி இதை முதலாவது ஸ்தாபித்து, 'என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்' என்று கட்டளையிட் டார். அதுமுதல் இந்த முறைமை கிறிஸ்துசபையில் ஆசரிக்கப்பட்டுவருகிறது. பூர்வத்தில் இது நாள்தோறும் நடத்தப்பட்டுவந்தது என்பது நிச்சயம். ஆதிக் கிறிஸ்தவர் கள் 'ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதின மும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம் பிட்டு, மகிழ்ச்சி யோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி வந்தார்கள்' என்று அறிகிறோம் (அப். 2:46).
இந்தத் திருவிருந்தில் சேருகிறவர்கள் பாவத்தினிமித் தம் மெய்யாய் துக்கப்படுகிறவர்களாகவும், புது ஜீவமார்க் கத்தில் நடக்க உறுதியாய்த் தீர்மானித்தவர்களாகவும், இயேசுவின்மேல் உயிருள்ள விசுவாசம்வைத்து அவருடைய மரணத்தை நன்றியறிதலோடே நினைவுகூருகிறவர்களாகவும், எல்லா மனிதரிடத்திலும் அன்புள்ளவர்களாகவு மிருக்க வேண்டும். மேலே காட்டிய லட்சணங்களோடு நாம் இந்தப் பரிசுத்த பந்தியில் சேருகிறதுண்டானால் நமது ஆத்துமாவுக் குண்டாகும் பிரயோசனம் பெரியதாயிருக்கும். இப்படிப் பட்ட குணங்களில்லாமல் அத்திருவிருந்தைப் பெறுவதால் மோசமும் பெரிதாயிருக்கும். 'எவன் அபாத்திரமாக கர்த் தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிற அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்து குற்றமுள்ளவனாயிருப்பான்' என்றும் 'அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாத தால் தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜன பானம் பண்ணுகிறான்' என்றும் பரி. பவுல் அறிவித்திருக்கிறார் (1 கொரி. 11:27,29). அதுவுமன்றி, இந்தத் திருவிருந்தில் -அபாத்திரமாய்ப் பங்கு பெற்றதினிமித்தம், 'அநேகர் பல வீனரும், வியாதியஸ்தருமானதோடு பலர் மரித்தும்போனார் கள்' என்று அவரே எழுதுகிறார் (1 கொரி.11:30).
நாம் இந்தத் திருவிருந்தால் நஷ்டத்தையல்ல, லாபத்தை அடையும்படி, பாத்திரவான்களாய் அதில் பங்கு பெறுவது தகுதியாயிருக்கும். அதற்குதவியாகப் பின்வரும் பிரதான சத்தியக் குறிப்புகளை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
Post a Comment
0 Comments