இயேசுவின் தனித்துவம்
(தியாளப்பகுதி: யோவான் 1:3-14
"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது . யோவசன் 1:14
இயேசுகிறிஸ்துவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பானது, இன்றும் மிகுந்த சத்தேகத்துடன் நோக்கப்படுகின்றது. ஏனெனில், அவர் ஓர் ஆண் ஈடுபாட்டின்றி பிறந்தவர். இருப்பினும், அவரது பிறப்பை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், மரபணு விஞ்ஞானத்தில் 'பார்தெனோஜெனிசிஸ்' (parthenogenesis) என்று அழைக்கப்படும் குறிப்பிடத்தக்க நிகழ்வின் மூலம் தெளிவாக விளக்கமுடியும். கிரேக்க மொழியில் 'பார்தெனோஜெனிசிஸ்" என்பதற்கு 'கன்னி உருவாக்கம்' என்று அர்த்தமாகும். இது விலங்கினத்தின் மத்தியில் ஏற்படும் ஒரு பொதுவான நிகழ்வு: எப்படியெனில், கருத்தரித்தல் இல்லாமல் கருவகத்தில் (onin) இனப்பெருக்கம் நடைபெறுகிறது. உதாரணமாக, கொமோடோ உடும்பு, ஒரு சில பல்லி வகைகள், கொகுங்குள் ஈறாக்கள், மலைபாம்புகள், தேனீக்கள் மற்றும் பல வகை இனங்கள் இந்த பிரிவில் அடங்கும். சில வகைகளில் ஆண் இனமே இருப்பதில்லை. மேலும், 'பார்தெனோஜெனிசிஸ்' என்ற இனப்பெருக்க வகையிலுள்ள குறைபாடு என்னவெனில், பெண்ணானது ஆண் இள சந்ததியை உருவாக்கவே முடியாது. இதில் இயேசுகிறிஸ்து மட்டுமே ஓர் விதிவிலக்காய் திகழ்கிறார்.
ஆதியாகமத்தில் குறிப்பீட்டுள்ள வெளிப்படுத்துகிறார் (யோவான் 1:1). அப்போஸ்தலனாகிய யோவான் சிருஷ்டிக்கர்த்தர் இயேசுவே என்று இயேசு ஆதியிலே இருந்தவர்; மனுகுலத்திற்காக இவ்வுலகத்திற்கு வரும் முன்பே, இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவர் இவரே. விருட்சங்களை உருவாக்கினவரே தச்சளாய் அம்மரவேலையை செய்யும்படி வந்தார். நம்மை இவ்வுலகத்திற்கு கொண்டுவர தீர்மானிப்பது தம்முடைய பெற்றோர். மாறாக, மனித வரலாற்றிலேயே தன் பிறப்பை தாளே நிர்ணயித்து, அவதரிப்பதற்கு முன்பாகவே தன் பெற்றோரை அறிந்தவர் இவர் ஒருவரே. இயேசு பூரியில் வாழும் மனிதகுலத்திற்கு தெய்வீகத்தை கொண்டுவந்தது
மட்டுமல்லாமல், அவரே மனுகுலத்தை பரலோக தேவனிடத்திற்கு கொண்டு செல்லுகிறவகுமாயிருக்கிறார். ஆகையால், நம்மை புரிந்துகொண்டு, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவரும், கிருபை அளிக்கிறவரும், இப்பிரபஞ்சத்தை நிலைகுலையாமல் தாங்குகிறவரும், பிதாவினுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவரும் இவரே. இயேசு இல்லாமல், மாம்ச ரீதியான வாழ்க்கையும் (கொலோசெயர் 1:17), ஆவிக்குரிய வாழ்க்கையும் (யோவான் 5:39-40) ஒன்றுமில்லாமல் போய்விடும்.
Post a Comment
0 Comments