இயேசுகிறிஸ்துவுக்கு வழிவகுத்தவர்
தியானப்பகுதி: ஏசாயா 40:1-5
*கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர்வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மக்மை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. - ஏசாயா 40:3-5
பழைய ஏற்பாட்டின் முடிவிற்கும் புதிய ஏற்பாட்டின் தொடக்கத்திற்கும் "இடையில் நானூறு ஆண்டுகள் இருந்தது. இந்த நாலகட்டத்தில் காத்தருடைய சத்தம் கேட்காமலும், அவருடைய விசேஷித்த வெளிப்பாடு கிடைக்காமலும் இருந்தபடியால் இக்காலத்தை 'அமைதியின் காலம்' என்று குறிப்பிடலாம். இச்சமயத்தில் இஸ்வேலின் ஆளிக்குசிய நிலைமையும் சீழித்து கொண்டிருந்தது. தேவன், இஸ்ரவேல் தேசம் மட்டுமல்லாமல், முழு உலகமும் இரட்சிப்படைய இயேசுகிறிஸ்து வருவதற்கான ஒரு வழியை ஆயத்தம் செய்ய தேர்ந்தெடுத்த நேரமும் இதுவே.
இஸ்ரவேல் மக்களின் ஆவிக்குரிய நிலையை புதுப்பிக்க, மேசியாவாரிய கிறிஸ்து வரவேண்டுமென்பதை குறிப்பிடும்படியாக, 'கோணலானவைகளை செம்மையாக்கி, மமையும் குன்றும் தாழ்த்தப்பட்டு கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டுமென்று' ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் உருவகப்படுத்தி பேசியிருந்தார். ஏனெனில், அந்த நாட்களில், இஸ்ரவேலில் உள்ள சாலைகள், மேடு பள்ளங்கள் நிறைந்ததாக இருந்தபடியால், மக்கள் தங்கள் இராஜாவை கிராமத்திற்குள் வரவேற்குமுன், அந்த சாலைகளை ஒவ்வொரு முறையும் சீரமைத்தார்கள்.
இஸ்ரவேல் ஆவிக்குரிய ரீதியில் ஒழுங்கற்ற நிலையில் இருந்தபோது இராஜாவாகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன், ஆவிக்குரிய வழியை ஆயத்தம்பண்ணும்படியாக 'தேவன், யோவான்ஸ்தானனை அனுப்பினார். யோவான் பிரசங்கித்த மனந்திரும்புதலின் செய்திதாள் இஸ்ரலேவின் ஆவிக்குரிய புதுப்பித்தலுக்கு முதல் படியாயிருந்தது. அவர் ஜனங்களை ஞானஸ்நானத்திற்குள் (மனந்திரும்பதயின் ஞாளஸ்தாளம்) வழிநடத்தினார். ஆனாலும், இயேசு ஒருவரே. மனந்திரும்பிய ஆத்துமாக்கனை மன்னித்து, பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்தானம் கொடுக்கக்கூடியவர். பரிசுத்த ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திலும் நடத்தி, துழு இயேசுவைப் பில்தொடர தம்மை பலப்படுத்துகிறவர்.
Post a Comment
0 Comments