Type Here to Get Search Results !

சங்கீதம் 30 தியானம்

[22/11 10:32 am] Elango: 🎷🎻 *இன்றைய ( 22/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 30* 🎷🎻

1⃣ சங்கீதம் 30 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 30 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ சங்கீதம் 30:2-3
[2]என் தேவனாகிய கர்த்தாவே, *உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர் [3]கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

4⃣ சங்கீதம் 30:5
[5]ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

5⃣ சங்கீதம் 30:11
[11]என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்.

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய*  - https://goo.gl/eXuRBd

*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும்  PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* -  https://goo.gl/1Kf2BV

*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________



[22/11 10:45 am] Ebi Kannan Pastor VDM: இந்த பாபிலோன் நகரம் இனிமேல் எழும்புமா? இப்பொழுது இருக்குதா❓

[22/11 11:02 am] Jeyanthi Pastor VDM: 2 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
சங்கீதம் 30:2
கர்த்தரைக் கூப்பிட்டு,  சுகம் பெறுவதும்,  கர்த்தர் சுகம் தருவதும் பெரிய கிருபை. 
தாவீது,  எரேமியா,  போன்ற பரிசுத்தவான்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு சுகம் பெற்றார்கள்

[22/11 11:11 am] Jeyanthi Pastor VDM: 2 என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன், என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.
சங்கீதம் 6:2
தாவீது கர்த்தரிடத்தில்,  தன் எலும்புகளில் சுகமில்லை என்று ஜெபிக்கிறார். 
14 கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன், என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன், தேவரீரே என் துதி.
எரேமியா 17
ஆனால்,  தேவனாகிய கர்த்தர் சரீரத்தை மட்டுமல்ல,  ஆத்தும சுகத்தையும் தர வல்லவர்

[22/11 11:14 am] Jeyanthi Pastor VDM: 3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

சங்கீதம் 103

[22/11 11:20 am] Jeyanthi Pastor VDM: 2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது, உமது கை என்னை இருத்துகிறது.
சங்கீதம் 38:2

3 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
சங்கீதம் 38:3

4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
சங்கீதம் 38:4

5 என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
சங்கீதம் 38:5
Hope he was suffering with peptic ulcer n bone disease

[22/11 11:25 am] Jeyanthi Pastor VDM: இன்றைக்கும் நம் பெலவீனங்களில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது,  கர்த்தர் நம்மை சுகப்படுத்துவாா்

[22/11 11:30 am] Jeyanthi Pastor VDM: 7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 12:7

8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
2 கொரிந்தியர் 12:8

9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.
2 கொரிந்தியர் 12:9

Post a Comment

0 Comments