Type Here to Get Search Results !

சங்கீதம் 29 தியானம்

[21/11 10:03 am] Elango: 🎷🎻 *இன்றைய ( 21/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 29* 🎷🎻

1⃣ சங்கீதம் 29 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 29 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣  *பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் எப்படி  தொழுதுகொள்ள முடியும்* ❓சங்.29:2 

4⃣ கர்த்தருடைய சத்தத்தை குறித்து அதிகமாக இந்த சங்கீதம் கூறுகிறது, *கர்த்தருடைய சத்தத்தை குறித்து வேதம் நமக்கு போதிக்கும் சத்தியம் என்ன❓*

5⃣ சங்கீதம் 29:11
[11] *கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய*  - https://goo.gl/eXuRBd

*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும்  PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* -  https://goo.gl/1Kf2BV

*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________



[21/11 10:59 am] Elango: *சங்கீதம் 29 சுருக்கவுரை*

*வசனம் 1-2 :* கர்த்தரை ஆராதித்தல்

*வசனம் 3-9 :* கர்த்தரின் சத்தத்தின் மகிமையும், வல்லமையும்

*வசனம் 10 :* கர்த்தர் நம் இராஜா

*வசனம் 11 :*  தமது ஜனத்திற்க்கு அவரின் ஆசீர்வாதம்

*எழுதியவர்* : தாவீது

*சங்கீதத்தின் தலைப்பு* : பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் / கர்த்தரின் சத்தத்தின் வல்லமை

[21/11 11:23 am] Elango: தேவனது மகிமையையும், இயற்கையில் அவர் வெளிப்படுத்திய அவரது கிரியைகளையும், வானங்கள் அவரது மகிமையை வெளிப்படுத்தியதையும் சங்கீதம் 8:1-9, சங்கீதம் 19 ல்  தாவீது விவரித்து தேவனுக்கு மகிமை செலுத்துவதை நாம் தியானித்தோம்.

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.சங்கீதம் 8:1-9

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.சங்கீதம் 19- 1-6

*இந்த சங்கீத்தத்தில் கர்த்தருடைய சத்தத்தை குறித்து ஆவியானவர் தாவீதிற்க்கு வெளிப்படுத்துகிறார்.* சங்கீதம் 29:-3-9

[21/11 11:33 am] Elango: 3. அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

 4. *இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.*

5. அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.
6. அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.
7. அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.

8. அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
9. அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
10. அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.
11. அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.

12. அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
13. ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
14. அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.

15. நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
16. சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.
17. அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
18. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.

19. அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
20. ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
21. அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும் போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

22. ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
23. மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
24. அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.

25. அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
26. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
27. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.

28. *மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்;* அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.எசேக்கியல் 1:3-28

*கர்த்தருடைய மகிமையை கண்டபோது, தீர்க்கதரிசி எசேக்கியல் முகங்குப்புற விழுகிறார்*

[21/11 11:35 am] Elango: 1. உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

2. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;

3. ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

4. கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.

5. *அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்;* சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். ஏசாயா 6:1-5

*கர்த்தருடைய மகிமைக்கண்டு, அசுத்த உதடுள்ள மனுஷன் என்கிறார் தீர்க்கதரிசு ஏசாயா*

[21/11 11:40 am] Jeyanthi Pastor VDM: தேவனை மகிமைப் படுத்த வழிமுறைகள் :
1.  துதிப்பதினால்,
23 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள், யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள், இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.
சங்கீதம் 22:23
2. நற்கிரியைகளினால்
16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16
3.  மிகுந்த கனி கொடுப்பதினால் (யோவான் 15:8)
4. ஆவிக்குரிய ஐக்கியத்தியத்தினால்
5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,
ரோமர் 15:5

6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
ரோமர் 15:6

7 ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ரோமர் 15:7
5. முழு அற்பணிப்பால்

20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20

[21/11 11:48 am] Elango: கர்த்தருடைய மகிமையை பார்த்த ஏசாயா தன்னை அசுத்த உதடுள்ள மனுஷன் என்கிறார். ஏசாயா 6:5

கர்த்தருடைய மகிமையை பார்த்த எசேக்கியல் முகங்குப்புற விழுகிறார். எசேக்கியல் 1:28

கர்த்தருடைய மகிமையை பார்த்த யோவான் செத்தவன் போலானார். வெளிப்படுத்தின விசேஷம் 1:17

கர்த்தருடைய மகிமையை பார்த்த யோபு தன்னை நீசன் என்கிறார். யோபு 40:4

கர்த்தருடைய மகிமையை பார்த்த மேய்ப்பர்கள் மிகவும் பயந்தார்கள். 2:9

கர்த்தருடைய மகிமையை பார்த்த மாத்திரத்தில் நாம் எப்படிப்பட்டவர்களாக காணப்படபோகிறோம்?

பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.சங்கீதம் 29:1

*ஆபகூக் 2:14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.*

[21/11 11:51 am] Elango: அப்போஸ்தலர் 12:23 ஏரோது,  தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.

I கொரிந்தியர் 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

[21/11 11:58 am] Elango: நம்முடைய  ஆராதனையும், துதி ஸ்தோத்திரமும் தேவனுடைய சத்தியத்தை, மகிமையை, அவரது வல்லமையை, அவரது குணத்தை,அவரது அநாதி திட்டத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். *நாம் தேவனை துதிக்க துதிக்க நாம் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வல்லமையையும், அனலையும் தருவதை நாம் ஆவியில் உண்ர முடியும்*

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே நமக்கு பெலன். நெகேமியா 8:10

6. மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
7. *ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.*

8. கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
9. *பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.* சங்கீதம் 96:6-8

[21/11 12:00 pm] Elango: 1. *அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்*

2. இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.

3. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

4. கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

5. *உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?*

6. அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.சங்கீதம் 113:1-6

[21/11 12:01 pm] Elango: 1. *ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்*

2. நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

3. *கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.*

4. *தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்*

5. *உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன்.*

6. *ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்*

7. அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.சங்கீதம் 145:1-7

[21/11 12:05 pm] Jeyanthi Pastor VDM: Yes ஆராதித்தே தீர வேண்டும்.  அதுவே இன்பம்,  ஏற்றது

[21/11 12:06 pm] Jeyanthi Pastor VDM: இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது;
எபிரேயர் 8:5

[21/11 12:06 pm] Jeyanthi Pastor VDM: ஆராதிக்காமல் ஒரு வாழ்க்கையா?

[21/11 12:08 pm] Jeyanthi Pastor VDM: The reason I live is to worship u , என கூறி ஆராதிக்கவே வேண்டும்

[21/11 12:10 pm] Elango: ஏசாயா 43:21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

யாத்திராகமம் 9:13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; *எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.*

*கர்த்தருடைய மகிமையை துதிக்கும் படியாகவும்,அவரை ஆவியோடு தொழுதுக்கொள்ளுபடியாகவும், ஆராதிக்குபடியாகவும், அவரது கிரியைகளை பிறருக்கு அறிவிக்கும் படியாகவும், கனிகளை கொடுத்து அவரது நாமத்தை மகிமைப்படுத்தும்படியாகவே இந்த பூமியில் நாம் இருக்கிறோம்*

[21/11 1:48 pm] Jeyakumar Toothukudi VTT: praise the Lord
சங்  29:3  ல்_கர்த்தர் திரளான தண்ணீர்கள்மேல்  இருக்கிறார் என சொல்லப்பட்டுள்ளது.
திரளான தண்ணீர் என்பது எதைக் குறிக்கிறது?.
இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன?
   BRO. R. Jeyakumar.

[21/11 1:54 pm] Jeyanthi Pastor VDM: தண்ணீர் ஆவியின் அர்த்தம் அபிஷேகம்,  நதிகள் என்று சொல்லலாம்.  ஆனால் கடல் மீது நடப்பது,  அமருவது தேவனாகிய கர்த்தருக்கு சாதாரண காரியமாக இருந்தது

21/11 1:57 pm] Jeyanthi Pastor VDM: 8 அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின் மேல் நடக்கிறவர்.

யோபு 9

[21/11 1:58 pm] Jeyanthi Pastor VDM: 22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
ஏசாயா 40:22

[21/11 2:01 pm] Jeyanthi Pastor VDM: திரளான தண்ணீர்
👇👇👇👇
இந்த மகத்தான அநுபவத்தை கூறலாமா
4 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார், அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது, பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார், அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.
எசேக்கியேல் 47:4

5 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார், அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாயிருந்தது, தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.
எசேக்கியேல் 47:5

6 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
எசேக்கியேல் 47:6

7 நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.
எசேக்கியேல் 47:7

8 அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும், இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
எசேக்கியேல் 47:8

9 சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும், இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும், இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.
எசேக்கியேல் 47:9

10 அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள், அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும், அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
எசேக்கியேல் 47:10

12 நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும், அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை, அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.
எசேக்கியேல் 47:12

[21/11 2:02 pm] Jeyanthi Pastor VDM: 👆🏻👆🏻👆🏻 10 கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார், கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
சங்கீதம் 29:10

[21/11 2:09 pm] Jeyanthi Pastor VDM: இன்னும் காற்றின் செட்டைகளின் மேல்,  மேகங்களை இரதமாக்கி அதின் மேல், இருள்,  மறைவிடம்,  கரும்புனல்கள்,  ஆகாயத்துக் கார்மேகங்கள் கூடாரம்
மிகவும் சாதாரணமாக ஆளுகை செய்தார்

[21/11 2:12 pm] Jeyanthi Pastor VDM: 2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சங்கீதம் 29:2

[21/11 2:12 pm] Jeyanthi Pastor VDM: பரிசுத்த அலங்காரம் என்றால் என்ன?

[21/11 2:25 pm] Jeyanthi Pastor VDM: 22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
எபிரேயர் 10:22

23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரேயர் 10:23

25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10:25

26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
எபிரேயர் 10:26

27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
எபிரேயர் 10:27

[21/11 2:29 pm] Jeyakumar Toothukudi VTT: praise the Lord
சங் 29:10 ல் _கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் என்ன?
அங்கே உட்கார்ந்திருப்பது ஏன்?._விளக்கம் தாங்க ஐயா!
     BRO. R. jeyakumar

[21/11 2:37 pm] Jeyanthi Pastor VDM: மேலே முழுதும் படிக்கலயா?

[21/11 2:40 pm] Elango: 3⃣  பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் எப்படி  தொழுதுகொள்ள முடியும் ❓சங்.29:2

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுக்கொள்ள வேண்டும். பூமியிலும், வானத்திலும், சமுத்திரத்திலும் உள்ள சகல தேவனின் சிருஷ்டிப்புகளும் தேவனை ஆராதிக்க வேண்டியவர்களே.

*Beauty of holiness - பரிசுத்த அலங்காரத்துடன் என்று ஆங்கிலத்தில் பொருள்படும். ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை சடங்குகளை செய்யும் போது, பிரதிஷ்டை செய்யப்பட்ட பரிசுத்த ஆடையோடு தேவனுக்கு முன்பாக நிற்பதை குறிக்கிறது.* 2 நாளாகமம் 20:21 , 27:4, 96:9

*அந்தரங்கத்தில் இருக்கிற பிதா, நம் அந்தரங்க இருதயத்தின் அழகை,பரிசுத்தத்தை பார்க்கிறார். தேவனை ஆராதிக்கும் போது நாம் உலக சம்பந்தப்பட்ட காரியங்களையும், நம் மனதின் பாரங்களையும் தனியே வைத்துவிட்டு, நம்முடைய சிந்தையும், கவனமும் தேவனையே ஆராதிப்பதையே நோக்கமாக இருக்க வேண்டும்*

[21/11 2:46 pm] Elango: I பேதுரு 3:4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

ஆவியின் கனியின் ஒன்று சாந்தம். கலாத்தியர் 5:23-24

*அப்போஸ்தலர் பேதுருவும், கிறிஸ்தவ விசுவாசிகளுடைய மனைவிகளின் அலங்காரத்தை குறித்து விவரிக்கும் போது சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியின் குணமே அழியாத அலங்கரிப்பாக கூறுகின்றார்.*

[21/11 2:56 pm] Elango: பரிசுத்த அலங்காரத்தை - BEAUTY OF HOLINESS  நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவில் பார்க்கமுடியும். தேவனின் குணங்கள் மனித ரூபத்தில் வந்து இந்த பூமியில் வாழ்ந்ததை. ஆவிக்குரிய தரிசனங்களை பெற்றவர்களே அந்த பரிசுத்த தேவனின் அலங்காரமான அந்த மகிமையை கண்டு களிகூர்ந்திருப்பர். *அந்த மகிமையை கண்டோம்* என்று சாட்சி பகிரமுடியும். யோவான் 1:14, ஏசாயா 53:1-12

[21/11 3:04 pm] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:22
[22]துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

*உண்மையான, கழுவப்பட்ட, சுத்தமான, சாந்தமுள்ள இருதயத்தோடு தேவனை ஆராதிப்போம்*

[21/11 3:06 pm] Elango: அவர் ஜலத்தில் உட்கார்ந்திருப்பது *கர்த்தர் சர்வத்தையும் ஆளுகிறது குறிக்கிறது.*

[21/11 3:09 pm] Jeyakumar Toothukudi VTT: இது சரியானதுதான். ஆனால் இன்னும் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன.

[21/11 3:09 pm] Elango: நிறைய அர்த்தங்கள் இருந்தால் நீங்களும் பகிரலாம் ஐயா

[21/11 3:33 pm] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 17:1
[1]ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, *திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே* பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

*இந்த வசனத்தில், பூமியின் மேல் பிசாசின் ஆளுகையை, தண்ணீரின்மேல் வீற்றிருப்பதாக உருவப்படுத்தி குறிக்கிறதாயிருக்கிறது*

[21/11 3:38 pm] Elango: 👍👍 உலகத்தை மோசம்போக்குகிறவன்👿😈😈👹👹👺👺

[21/11 4:55 pm] Ebi Kannan Pastor VDM: வெளிப்படுத்தின விசேஷம் 18:11-19
[11]பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,
[12]சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும்,
[13]இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.
[14]உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.
[15]இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;
[16]ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.
[17]மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரைபண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
[18]அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
[19]தங்கள் தலைகள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

[21/11 5:02 pm] Ebi Kannan Pastor VDM: இந்த பாபிலோன் எதைக் குறிக்கிறது❓

[21/11 5:52 pm] Elango: சகல துர்குணங்கள் நிரம்பிய, தேவனுக்கு விரோதமான, மதவாத,  பிசாசின் கட்டமைப்பை குறிக்கும் சொல்லாக இருக்கலாம்.

பாபிலோன் என்பது பாபேல் என்ற இடத்திலிருந்து வருகிறது. அங்கு வாழும் மக்கள் தேவனுக்கு விரோதமானவர்களும், பொய் மதத்தினரும், தீய குணங்கள் நிறைந்தவர்களுமாக இருந்தனர்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:4
[4]பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: *என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.*

[21/11 7:04 pm] Jeyakumar Toothukudi VTT: praise the Lord

தண்ணீர்_ஆவிக்குரிய அர்த்தம்
1. ஏசா 8:6  _கர்த்தரின் உதவி
2. ஏசா 28:17_கர்த்தரின் நியாயத்தீர்ப்பு
3. நீதி 18:4 _மனுஷ வார்த்தைகள்
4. நீதி 20:5 _மனித யோசனைகள்
5. ஏசா 48:1 _A Person posterity
6. எசே 36:25 _
    எபே.   5:26_
     எபி  .  10:22_ இரட்சிப்பு
7.யோவான் 7:37_39. _பரிசுத்த ஆவி
8. எரே 2:13
            17:13_  ஜீவத் தண்ணீராகிய தேவனை.
          இன்னும் நிறைய....
      BRO.R. jeyakumar.

[21/11 7:07 pm] Jeyakumar Toothukudi VTT: ஜலப்பிரவாகத்தின்மேல்  ஏன்? உட்கார்ந்திருக்கிறார் என்பதையும் தியானிப்போம்.

[21/11 7:59 pm] Elango: திருவசனத்திற்க்கு  தண்ணீரும் உருவகமாக சொல்லப்பட்டிருக்கிறது.

எபேசியர் 5:26-27
[26] *தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,*

[27]கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

[21/11 8:01 pm] Sundara Moorthy VTTT: (Psalms 50:-1) offereth praise glorifieth me: and to him that ordereth his conversation aright will I shew the salvation of God.
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

[21/11 8:15 pm] Stella Joseph VDM: 15 பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே, அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:15

ஜனங்களையும் குறிக்கிறது பாஸ்டர்

[21/11 10:32 pm] Elango: சங்கீதம் 29:10
[10]கர்த்தர் *ஜலப்பிரளயத்தின்* மேல் வீற்றிருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

தாவீது கூறும் இந்த வார்த்தையானது, நோவாவின் காலத்தில் நிகழ்ந்த ஜலப்பிரளயத்தை குறிப்பதாக பல வேத அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முழுவேதாகமத்திலும் இந்த வார்த்தையானது வேறு எங்கும் சொல்லப்படாமல், நோவாவின் காலத்தில் தண்ணீரினால் ஏற்ப்பட்ட அழிவை குறிக்கிறது என்று கருத்து கூறுகின்றனர்.


ஆதியாகமம் 7:6-7
[6] *ஜலப்பிரளயம்* பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.

[7] *ஜலப்பிரளயத்துக்குத்* தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

[21/11 10:41 pm] Elango: சங்கீதம் 29:10
[10]கர்த்தர் ஜலப்பிரளயத்தின்மேல் வீற்றிருந்தார்; *கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.*

கர்த்தரே சர்வ வியாபி, சர்வ வல்லவர், சர்வ ஞானி,  அவருருக்கே சகல துதி, மகிமை, கனம் உண்டாகுவதாக!

தேவனே சகல சிருஷ்டிகளுக்கும் கர்த்தர், நித்திய இராஜா. இந்த பிரபஞ்சத்தின் அதிபதிக்கு அவருடைய சிருஷ்டியின் மேல் அதிகாரம் இல்லை.

சாத்தான் வஞ்சிக்கிறவன். அவனே வஞ்சிக்கப்பட்டும் போகிறான். அவனே கடைசி மகா உபத்திர காலத்தில், பூமியிலுள்ள தேவனுடைய சிருஷ்டிகளை அழிக்க நினைப்பான் ஆனால் அவன் தோற்றுப்போவான்.

தேவனின் படைப்புகளை அவர் ஒருவரே ஆளுகிறவராய், பாதுகாக்கிறவராய்  இருக்கிறார்.

[21/11 10:55 pm] Elango: கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.சங்கீதம் 29:8

18. *ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்;* அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று, 19. *மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம்* என்றார்கள். 20. மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.

கர்த்தருடைய சத்தத்தையும், மகிமையையும் கேட்டு பழைய ஏற்பாட்டில் ஜனங்கள் பயந்தனர், அவ்வளவும் பயங்கரமாகவும், நடுங்கத்தக்கதாகவும் இருந்தது. புதிய ஏற்பாட்டில் மகிமையின் தேவன் தாகமாயிருக்கிறவன் ஜீவதண்ணீரை தன்னிடத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி சத்தமிட்டார். யோவான்

*யோவான் 7:37 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்*

[21/11 11:11 pm] Elango: *ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்* சங்கீதம்:50:23

நம்முடைய ஸ்தோத்திர பலிகளின் மேல் தேவன் மிகவும் பிரியமாய் இருக்கிறார். வேதம் கூறுகிறது அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்[எபிரெயர்:13:15].

தாவீது ராஜா கூறுகிறார் சுவாசமுள்ள யாவும் அவரை துதிப்பதாக. தேவனை இரவும் பகலும் எந்நேரமும் தன்  பாட்டினால் துதித்த தாவீது ராஜா கூறுகிறார் “தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்” [சங்கீதம்:69:30-31].

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நம்முடைய சந்தோஷமான சூழ்நிலைகளில் மட்டுமல்ல பாடுகளிலும் வேதனைகளிலும் எல்லா நேரங்களிலும் எப்போதும் தாவீது ராஜாவை போல அவரை துதிக்கும் துதி ஸ்தோத்திரங்களினால் நம் உதடுகள் நிரம்பிவழிய  வேண்டும்.

வெளிபடுத்தின விசேஷம் நான்காம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் போது பரலோகத்தில் நான்கு ஜீவன்களும் “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டு சதாகாலமும் உயிரோடிருக்கிறவருக்கு மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துவதை காணலாம்.

*பவுலடியார் கூறுகிறார் நாம் ஒன்றுக்கும் கவலைபடாமல் நம் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துவோம் அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்.* பிலிப்பியர் 4:6-7

- https://goo.gl/Db3UqR

Post a Comment

0 Comments