[20/11 10:20 am] Elango: 🎷🎻 *இன்றைய ( 20/11/2017) வேத தியானம் - சங்கீதம் 28* 🎷🎻
1⃣ சங்கீதம் 28 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 28 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 28:3
[3]அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
4⃣ சங்கீதம் 28:9
[9]தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[20/11 11:31 am] Elango: *எழுதியவர்* - தாவீது
*எழுதிய சூழ்நிலை* - சத்துருக்களில் நெருக்கத்தின் மத்தியில், தேவனை நோக்கி கதறுகிறார்.
[20/11 11:32 am] Elango: சங்கீதம் 28:1
[1] *என் கன்மலையாகிய கர்த்தாவே,* உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
*கர்த்தர் நம்மை பாதுகாக்கும் கன்மலை, இந்த பொல்லாத தீய உலகத்தில் நமக்கு அடைக்கலாக உறுதியான பாதுகாப்பு கன்மலையாக இருப்பது கர்த்தர் மாத்திரமே.*
ஏசாயா 25:4
[4]கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில்,
❤ நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும்,
❤ பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும்,
❤ வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
கர்த்தரின் பாதுகாப்பை நாமும் வர்ணித்து வார்த்தைகளாலும்,ஆவியின் அனல்மூண்டு முழு இருதயத்தோடு துதிப்போமாக!
[20/11 11:33 am] Jeyanthi Pastor VDM: 13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது, அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
ஏசாயா 29
[20/11 11:42 am] Elango: சங்கீதம் 28:4
[4]அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; *அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.*
பரிசுத்தவான்களோ, தேவ மனிதர்களோ தன் சத்துருக்களை பழி வாங்குவதில்லை..அவர்கள் தங்கள் நியாயத்தை தேவனிடத்தில் விட்டுவிடுகிறவர்களாக இருக்கிறார்கள். தாவீதும் தனக்கு நியாயஞ்செய்யும் படியாக தேவனிடத்தில் வேண்டுகிறார்.
பழிவாங்குவது தேவனுக்குரியது என்றாலும், நாம் ஏன் பல நேரங்களில் பழிவாங்க துடிக்கிறோம்❓
பழிவாங்குவது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஒரு பகுதியாகவும், துன்மார்க்கருக்கு சரிகட்டும் நாளாகவும் இருக்கிறது.
ஆதியாகமம் 9:5
[5]உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்,
*பழிவாங்குவதும், சரிக்கட்டுவதும் தேவனுக்குரியது. மன்னிப்பதும் விட்டுக்கொடுப்பதுமே நாம் செய்ய வேண்டியது*
உபாகமம் 32:35
[35]பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்
[20/11 11:42 am] Elango: பழிவாங்குவதும், திரும்ப பதிலளிப்பதும் தேவனுக்கே உரியது.
பழிவாங்குவதை என்று நாம் நம் கையில் எடுக்கிறோமோ அது பிசாசின் கிரியையாக இருக்கிறது.
சங்கீதம் 18:47
[47] *அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.* அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
தேவன் நமக்காக பழிவாங்குகிறவராயிருக்க, நாம் பழிவாங்காமல் தேவனிடத்தில் விடுவது தானே சரி. ❤✅✅✅✅
ரோமர் 12:19,21
[19]பிரியமானவர்களே, *பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.*
[21]நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
[20/11 11:45 am] Elango: தாவீது இச்சங்கீதத்தை, *என் கன்மலையாகிய கர்த்தாவே* என்று துவங்குகிறார்.
*தேவன் என் கன்மலை* -
தேவனுடைய பரிசுத்த சுபாவத்தின் மீது, அவருடைய பரிசுத்த வார்த்தையின் மீது, அவருடைய பரிசுத்த திட்டத்தையும் மீது நாம் அவருக்குள் கட்டப்பட்டிருக்கிறோம்;
தேவனுடைய ஊழியத்திற்காக அவருடைய
திட்டத்தின்படியும், நோக்கங்களின்படியேயும் முழுமையான ஸ்திரத்தன்மை நமக்கு உண்டு, ஏனெனில் நாம் அழைக்கப்பட்ட ஊழியம் நம்முடையதல்ல, அந்த ஊழியம் தேவனுடையது.
அவரே நமக்கு கன்மலை - நம் வாழ்க்கையின் புயல்களில் நம் தேவனை தவிர வேறு எந்த கன்மலையும் நமக்கு பாதுகாப்பானது அல்ல.
*நமது கன்மலை* -
1. கிறிஸ்து *இரட்சிப்பின் கன்மலையாய்* இருக்கிறார். யாத்திராகமம் 17:1-7, 1 கொரிந்தியர் 10:4
2. கிறிஸ்து *நியாத்தீர்ப்பின் கன்மலையாய்* இருக்கிறார்.. ஏசாயா 8:1 4, 1 பேதுரு 2:8
3. கிறிஸ்து *நித்திய கன்மலையாய்* இருக்கிறார். ஏசாயா 26:3, 4
4. கிறிஸ்து *அஸ்திபாரக் கன்மலையாய்* இருக்கிறார்.. ஏசாயா 28:16, சங்கீதம் 118:22
5. கிறிஸ்து *சபையின் அஸ்திபாரக் கன்மலையாய்* இருக்கிறார். மத்தேயு 16:16, 18, 1 கொரிந்தியர் 3:11, எபேசியர் 2:20-22
6. கிறிஸ்து *கையால் பெயர்த்தெடுக்கப்படாத கல்லாய் தகர்க்கும் கன்மலையாய் இருக்கிறார்.* தானியேல் 2:35
[20/11 11:58 am] Elango: *சங்கீதம் 28 சுருக்கவுரை*
*வசனம் 1-2 :* ஆபத்து காலத்தில் கர்த்தரே நம் அடைக்கலம்
*வசனம் 3 - 5 :* துன்மார்க்கரின் பங்கும், துன்மார்க்கரை குறித்து பரிசுத்தவானின் வேண்டுதலும்.
*வசனம் 6-9 :* கர்த்தர் ஆபத்த நாளில் தாவீதின் ஜெபத்தை கேட்டார். நம்முடைய ஆபத்து நாளிலும் நம் ஜெபத்தை கேட்பார்.
[20/11 12:09 pm] Jeyanthi Pastor VDM: 👆🏻👆🏻 இது தான் அயலானுக்கு சமாதான வாழ்த்துதல் சொல்லும் குணம்.
[20/11 12:09 pm] Jeyanthi Pastor VDM: தாவீது தன் வாழ்க்கையில் அநேகரால் இகழப்பட்டான்,
3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள்.
சங்கீதம் 62:3
4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேசவிரும்புகிறார்கள், தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.)
சங்கீதம் 62:4
[20/11 12:10 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தரை நேசிக்குறவர்களுக்கு, இப்படிதான் நடக்கும்
[20/11 12:10 pm] Jeyanthi Pastor VDM: 12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
2 தீமோத்தேயு 3:12
13 பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
2 தீமோத்தேயு 3:13
14 நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதமல்லாமல்,
2 தீமோத்தேயு 3:14
[20/11 12:16 pm] Elango: சங்கீதம் 28:3
[3] *அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும்* என்னை வாரிக்கொள்ளாதேயும்.
இருதயம் தான் ஒரு மனிதனின் உண்மை ரூபத்தை, சுபாவத்தை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது.❤❤❤❤
சிலரிடம் ஆண்டவரை பற்றி பேசினாலோ, வசனங்களை குறித்து கேட்டாலோ வேதத்தின் படியே போதிப்பார்கள். ஆனால் அவர்களின் இருதயமோ தேவனுக்கு விரோதமாகவும், தேவ மனிதர்களை பகைக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.
மத்தேயு 23:3
[3]ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; *அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.*
மாயமால ஊழியர்கள் இன்றும் உண்டு.
[20/11 12:18 pm] Jeyanthi Pastor VDM: பதில் மேலே பாருங்க
[20/11 12:19 pm] Elango: *மேடையில் ஒரு பேச்சு🗣*
*இருதயத்திலோ பாம்பின் நச்சு*🐍
[20/11 12:20 pm] Elango: Yes
[20/11 12:23 pm] Jeyanthi Pastor VDM: My God.
[20/11 12:29 pm] Elango: மீகா 3:5
[5] *தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து,😬😬😬 சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு*🤔🤔🙄🙄👿👿😈😈 விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
[20/11 12:32 pm] Jeyanthi Pastor VDM: 2 துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது, கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
சங்கீதம் 109:2
3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
சங்கீதம் 109:3
4 என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
சங்கீதம் 109:4
5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
சங்கீதம் 109:5
இப்படி தான் நீதிமான்களின் பாதையை, சத்துருக்கள் சமாதானமின்றி போகச் செய்வார்கள்.
6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
1 சாமுவேல் 30:6
[20/11 12:34 pm] Elango: மத்தேயு 22:15-18
[15]அப்பொழுது, *பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி,*
[16]தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: *போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.*
[17]ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
[18] *இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து:* மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
*சங்கீதம் 28:3 க்கு பொருத்தமான சம்பவம், இயேசுவினடத்தில் நடந்தது, ஆனால் ஆண்டவர் அவர்களின் இருதயத்தின் துர்குணத்தை அறிந்திருந்தார்*☝☝
[20/11 12:36 pm] Elango: நீதிமொழிகள் 26:23-26,28
[23] *நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.*🙄🙄😏😏😏😏😏
[24]பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
[25] *அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.*
[26]பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
[28]கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.
[20/11 12:41 pm] Elango: எரேமியா 9:4-5,8-9
[4] *நீங்கள் அவனவன் தன்தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.*
[5]அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.
[8] *அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.*😃😃😃🤝🤝🤝🤝🤝😡😡😡😡😡
[9]இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ🙄🙄🙄🤔🤔🤔 என்று கர்த்தர் சொல்லுகிறார்.
[20/11 3:24 pm] Jeyanthi Pastor VDM: 8 கர்த்தர் அவர்களுடைய பெலன், அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
சங்கீதம் 28:8
தியானிக்கலாமா? பாஸ்டர்
[20/11 4:20 pm] Jeyanthi Pastor VDM: அபிஷேகிக்கப் பட்ட தேவப் பிள்ளைகளுக்கு, கர்த்தர் உயர்ந்த அடைக்கலமானவர்
[20/11 9:23 pm] Elango: *என் கன்மலையாகிய கர்த்தாவே,* உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.சங்கீதம் 28:1
ஆபத்து காலத்திலோ, சத்துருக்கள் படையெடுத்து வரும்போது,பாதுகாப்பான இடமாக கன்மலையுக்குள் ஓடிஒளிந்துக்கொள்வது வழக்கம், கன்மலை பாதுகாப்பான இடமாக வேதாகமத்தில் அநேக இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஓரேப், சேலா போன்ற கன்மலைகளும் பைபிலில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே கழுகு, காட்டாரு, பாம்பு, தேனீ முதலியவைகள் அதிகம். இந்த கன்மலைக்குள் ஆதி ஜனங்களும் வசித்தார்கள். இந்த கன்மலை என்ற வார்த்தை கிறிஸ்துவுக்கும் அதிகமாக வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சங்கீதாம் 18:2, ஏசாயா 17:10
*நாம் கன்மலையாகிய கர்த்தருக்குள் பாதுகாப்பாக இருக்கும்போது - உலகமோ, மாம்சமோ, சாத்தானோ நம்மை செதப்படுத்த இயலாது. அவருடைய வார்த்தையை நாம் தேவ ஆவியினால் கைக்கொள்ளும்போது, நாம் கன்மலையில் அஸ்திபாரம் போடப்பட்ட கட்டிடமாக இருக்கிறோம்.*
24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. மத்தேயும் 7:24-25
[20/11 9:30 pm] Elango: *உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;* சங்கீதம் 28:1
தாவீதின் ஜெபமானது தனிப்பட்ட முறையில் கர்த்தரிடத்தில் நேரடியாக பேசுவது போன்ற ஜெபம், இது தேவனோடுள்ள ஒரு ஆவிக்குரிய நெருக்கத்தை, அன்பை, பக்தியை குறிக்கிறதாயிருக்கிறது. ஆகாயத்தில் சிலம்பம் பண்ணும்வது போலும், பிறரை பிரியப்படுத்தவது போலவும், சடங்கு போல அவர் ஜெபம் பண்ணவில்லை. *அவர் நேரடியாக கர்த்தர் என்ற ஒரு நபரிடம் பேசினார், ஜெபித்தார், தன் ஜெபத்திற்க்கு பதில் தருவார் என்ற விசுவாசத்தோடு கதறுகிறார்.*
*சங்கீதம் 28 ன் தலைப்பு - பதிலளிக்கப்பட்ட ஜெபம்* என்று சுருக்கமாக அழைக்கலாம்.
[20/11 9:45 pm] Elango: *நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்;* சங்கீதம் 28:1
நாம் சிலர் தேவனிடம் விண்ணப்பம், ஜெபம் முன்வைத்துவிட்டு அதை மறந்துபோவோம், இந்த ஜெபமானது நமக்கானது என்றால் நாம் தொடர்ந்து ஜெபிப்போம் அல்லது பிறருக்கானது என்றால் சில நாட்கள் அல்லது சிலமுறை ஜெபித்துவிட்டு விட்டு விடலாம்.
*ஆனால் தாவீது விடவில்லை, தன் ஜெபத்திற்க்கு ஏன் பதிலளிக்கப்பட வில்லை என்று கேட்கிறார். ஆனால் தேவன் நம்முடைய நேரத்தின் படி, அவசரத்தின் படி, விருப்பத்தின் படி அவர் நமது ஜெபத்திற்க்கு பதில் தராமல், அவருடைய சித்தத்தின் படியே காலதாமதம் ஆகாதபடி, சரியான சமயத்தில் நம் ஜெபத்திற்க்கு பதிலளிப்பார்.*
நம்முடைய ஜெபத்திற்க்கு தேவன் காலதாமதம் செய்தாலும் நம் சோர்ந்துப்போகாமல் விசுவாசத்தோடு ஜெபிக்கவேண்டும், கடைசி நாட்களில் விசுவாசத்தை காண்பாரோ என்று ஆச்சரிய கேள்வி எழுப்பியிருக்கிறார் நம் ஆண்டவர். லூக்கா 18:8
*7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?8. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்....* லூக்கா 18:7-8
[20/11 9:57 pm] Elango: *நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்* சங்கீதம் 28:1
தேவனோடு நெருங்கி ஐக்கியம் வைத்திருக்கும் ஒவ்வொரு பரிசுத்தவாங்களுக்கும் இந்த வேதனையை கடந்து வந்திருப்பார்கள்.
*பூமிக்குரிய நம் நேசங்கள், நாம் அதிகமாக அன்பு வைத்திருப்பவர்கள் மவுனாமாயிருந்தாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது, வேதனையாக இருக்கும், நாம் ஏதாவது தவறு செய்திருக்கலாமா? அல்லது நாம் அந்த நபருக்கு பிடிக்காத காரியங்கள் ஏதாவது செய்திருப்போமோ என்ற பல யோசனை நம் சிந்தனையில் வரும்...உலக அன்புக்கே இவ்வளவு வேதனையென்றால் தேவன் நம்மோடு பேசாமல் இருந்தால், அவருடைய பிரசன்னம் நமக்கு கிடைக்காது போனால், அவர் நம் ஜெபத்தை கேளாமல் இருந்தால் நம் வேதனை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தேவனோடு அனுதினமும் நடக்கும் பரிசுத்தாவானகளுக்கே அந்த வேதனை தெரியும்*
நம்மை நேசிக்கும், நம் தேவைகளை சந்திக்கும் நம் தகப்பன் நம்மோடு பேசவிட்டால் எப்படியிருக்கும்? இந்த நிலையோடு தாவீது கதறுகிறார் ஆனால் 6 வசனத்தில் தேவன் அவரது ஜெபத்தை கேட்டார் என்று சாட்சி கூறுகிறார்.
கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தவர், நம் ஜெபத்தை கேளாதிருப்பாரோ?
தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தவர், நமக்கு விண்ணப்பத்திற்க்கு ஆசீர்வாதத்தை திறக்காமல் இருப்பாரோ?
[20/11 10:05 pm] Elango: நம்முடைய ஜெபத்தை கர்த்தர் கேளாத போலும், அதற்கு பதிலளிக்காதது போலும் நாம் உணரலாம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் உயிருள்ள சடலாமாக இருப்போம். ஆனால் நம் ஜெபத்திற்க்கு கர்த்தர் பதிலளித்த பிறகோ உயிர்வந்தது போலிருக்கும்.
*நீதிமொழிகள் 13:12 நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.*
[20/11 10:10 pm] Elango: *பதில் அளிக்கப்படாத ஜெபத்திற்கான காரணங்கள்*
- விசுவாசக்குறைவு. மத்தேயு 21:22
- சுய விருப்பங்களுக்காய் ஜெபித்தல் யாக்கோபு 4:3
- அறிக்கை செய்யப்படாத பாவங்கள் சங்கீதம் 66:18
- மனதுருக்கமற்ற நிலை (நீதிமொழிகள் 21:13).
- பெருமை மற்றும் சுய நீதி யோபு 35:12-13
- ஆவியானவரின் நிறைவு இல்லாமை எபேசியர் 6:18
- கீழ்ப்படியாமை 1 யோவான் 3:22
- தெய்வீக சித்தத்தில் இல்லாது இருப்பது 1 யோவான் 5:14
*பதிலற்ற ஜெபத்திற்கு பொதுவான காரணங்கள், ஏதோ ஒரு வகையில் பாவம் வாழ்வில் இருப்பதாகும், அறிந்த பாவங்களை 1 யோவான் 1:9 ன் படி, அறிக்கை செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண இயலும்*
[20/11 10:12 pm] Elango: *ஜெபத்தின் வல்லமை*
- தனிப்பட்ட நிலையில் - எலியாவும் சர்வாங்க தகனபலியும். 1 இராஜாக்கள் 18:36-39
- கூடி ஜெபித்த பொழுது - சிறைச்சாலையிலிருந்து பேதுரு விடுவிக்கப்படுதல். அப்போஸ்தலர் 12:1-18
[20/11 10:12 pm] Elango: *ஜெபம் - தேவன் கொடுக்கிறவர் என்பதை நாம் அறிந்து இருக்கலாம், ஆனால் நாம் அவருடன் சரியான தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால்தான் அவர் கொடுப்பதை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.*
- ஜெபம் என்பது ஒரு விசுவாசி தேவனுடன் தொடர்பு கொள்ளும் வழிமுறையாய் இருக்கிறது.
- பரிசுத்த வேதாகமம் தேவன் மனிதனுடன் தொடர்புகொள்ளும் வழியாய் இருக்கிறது.
[20/11 10:14 pm] Elango: *ஜெபத்தில் அடங்கியுள்ள வாக்குத்தத்தங்கள்*
- மத்தேயு 21:22 விசுவாசத்துடன் நாம் கேட்கவேண்டும்.
- மத்தேயு 18:19 குழுவாய் ஜெபித்தலின் வல்லமை.
- சங்கீதம் 116:1,2. தேவன் எப்பொழுதும் நமது ஜெபத்தை கேட்கிறவராய் இருக்கிறார்.
- ஏசாயா 65:24 நாம் ஜெபிக்கும்பொழுது தேவன் பதில் அளிப்பவராய் இருக்கிறார்.
- மத்தேயு 7:7 நாம் ஜெபிக்க கட்டளை பெற்று இருக்கிறோம்.
- யோவான் 14:13-14 அவரது நாமத்தினால் நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.
- பிலிப்பியர் 4:6 ஜெபம் நன்றி செலுத்துதலுடன் இருக்க வேண்டும்.
- 1 தெசலோனிக்கேயர் 5:17 நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்.
- எபிரெயர் 4:16 நாம் தைரியமாய் கிருபாசனத்தண்டைக்கு வர முடியும்.
[20/11 10:23 pm] Elango: *நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.சங்கீதம் 28:2*
ஒருவர் ஜெபிக்கும் நிலையை தாவீது படம்பிடித்து தன்னையே காட்டுகிறார், சபையில் நாம் ஜெபிக்கும் போது இந்த நிலையை நாம் கைக்கொள்ளலாம். இந்த நிலையானது நம் இருத்தின் மனநிலையையும், இருதயத்தின் ஒருமுக நிலையையும் காட்டுகிறதாயிருக்கிறது. நாம் நம்முடைய பாரத்தை, துக்கத்தை, வேண்டுதலை, கண்ணீரை, கவலையை கர்த்தருக்கு நேராக கடத்துகிறொம், இறக்குகிறோம், நம்மையே அர்ப்பணிக்கிறோம், நம்மை இலகுவாக்க.
என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதலை தருவேன் என்றவர், நம் பாரத்தை ஏற்காமல் இருப்பாரோ? நம் கைகளை நேராக ஏறெடுக்கையில் நம் தேவைகளை சந்தியாமல் இருப்பாரோ?
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.சங்கீத்தம் 28:6*
[20/11 10:36 pm] Elango: *அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.* சங்கீதம் 28:3
இந்த சங்கீத வசனமானது சங்கீதம் 26:9 க்கு ஒத்த வசனம். நம்மை கெடுக்க சத்துருவானவன் பல வழிகளிலும் வரலாம் - வெளியே இருந்து மனிதர்களின் தீய நட்பு மூலமாகவோ அல்லது கேடான திருக்குள்ளது, தீய அனைத்து குணங்களை கொண்ட பழைய இருதயத்தின் மூலமாகவோ நம்மை மோசம் போக்கலாம், அக்கிரம காரர்களுக்கு கிடைக்கும் அதே ஆக்கினையை நமக்கும் கிடைக்கும் படி பிசாசனவன் முயலலாம்.
நம்முடைய அனுதின ஜெபத்தில் *தீமையிலிருந்து என்னை இரட்சித்துக்கொள்ளும்* என்ற வரிகள் நிச்சயம் இருக்க வேண்டும். வெளியேயிருந்து நம் ஆத்துமாவுக்கு வரும் தாக்குதலை விட, விபசாரமும், வேசித்தனமும், பொய்யும், களவும், அசுத்தமும் நிறைந்த நம் பழைய இருதயத்தின் சுபாவத்திடமிருந்து நாம் விலகி வாழ வேண்டும், பரிசுத்த ஆவியின் நிறைவில் அந்த பழைய மனிதனை நாம் ஜெயிக்க வேண்டும்.
ஆனபடியால், *கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை* ரோமர் 8:1*
[20/11 10:41 pm] Elango: நம் பழைய மனுஷனைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும், கெட்டுப்போன பழைய மனுஷனை களைந்து புதிய மனுஷனை தரித்துக்கொள்ள வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. எபேசியர் 4:24-25, கொலேசேயர் 3:9-10
*பாவத்துக்குரிய பெயர்கள்*
- அவிசுவாசம் - சத்தியத்தை மறுதலிப்பது. யோவான் 16:9, எபிரெயர் 3:12
- சட்டவிரோதம் - வாழ்வுக்குரிய சட்டங்களை மறுதலித்து வாழ்தல். 1 திமோத்தேயு 1:9
- அக்கிரமம் - தீமையான செயல்கள். அப்போஸ்தலர் 8:22, 23
- மீறி நடத்தல் (Trespass)- தேவனுடைய அதிகாரத்தை மீறி நடத்தல். எபேசியர் 2:1
- கீழ்ப்படியாமை - கீழ்ப்படிய மறுப்பது. எபிரெயர் 2:2
- மீறுதல் (Transgression) - பிரமாணத்தை புறக்கணித்து நடத்தல். லூக்கா 15:29, கலாத்தியர் 3:19
[20/11 10:47 pm] Elango: *சபையிலோ அல்லது குடும்பத்திலோ எவ்வகையான பாவமும் குடிகொண்டிராத வண்ணம் மிகவும் எச்சரிப்புடன் இருப்பது மிகவும் முக்கியமானது, நாமும் அந்த வகையான பாவத்தில் சிக்கி அவர்களோடு ஆக்கினையை அடையாத படிக்கு தாவீது போல் நம் ஜெபமும் இருக்க வேண்டும்*
நம்மிடத்தில் பழைய பாவசுபாவமும், பெலவீனங்களுமுண்டு, அதே சமயம் பிசாசுகளின் தாக்குதல்களை நாம் சாதாரணமாய் எடுத்துக் கொள்ளக்கூடாது, கர்த்தரது வல்லமையானது, வல்லமையுடன் செயல்பட வேண்டியதாய் இருக்கிறது. கடந்த காலத்தில் சமுதாயத்தில் எவ்வகையான பாவமோ, தீமையோ இருந்தது குறித்து நாம் ஜாக்கிரதையுடன் இருத்தல் அவசியம்.
மரபுப் பகைமை, கொலைகள், அல்லது விபச்சாரம் அல்லது பெருமை போன்றவை குறித்து ஜாக்கிரதையாய் இருத்தல் அவசியம். இவைகளைக் குறித்து கவனமாய் ஜெபித்து, அதற்குப் பரிகாரம் கண்டுகொண்டு, சமுதாய மனந்திரும்புதல் மூலம் பகைமை, மற்றும் மேற்சொன்ன பாவங்களில் இருந்து விடுதலை பெறுதல் வேண்டும்.
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; *நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.கலாத்தியர் 6:2*
[20/11 11:05 pm] Elango: 8. கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.9. *தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.* சங்கீதம் 28:8-9
எல்லாவற்றையும் விட, அவரது கைக்குள் அடங்கி வாழும் ஆடுகளுக்கு அவரது வார்த்தையால் நமக்கு மன்னாவை கொடுக்கிறார், மகிழ்ச்சியாக்குகிறார், ஆளுகிறார், வழி நடத்துகிறார், பாதுகாக்கிறார், திருப்தியாக்குகிறார்.
*தேவனது வார்த்தையால் அனுதினம் போஷிக்கப்படும்போது, ஆத்துமாவிற்கு இரட்சிப்பை மட்டும் கொண்டுவராது, விடுதலையை ஏற்படுத்துகிறதாயும் இருக்கிறது, எதிராளியினால் உண்டாகும் உபத்திரவங்கள் நடுவே இது பெரிதான ஆறுதலையும், விடுதலையையும், இரட்சிப்பையும் அளிக்கிறதாய் இருக்கிறது.*
கர்த்தர் நம்முடைய மேய்ப்பராயிருக்கிறார், அவர் நம் ஆத்துமாவை போஷிக்கிறார், திருப்தியாக்குகிறார் - ஆவிக்குரிய பிரகாரமாக, இந்த சரீரத்துக்குரிய பிரகாரமாக, நம்முடைய தேவைக்கு அதிகமாக கொடுக்கிறார்.

Post a Comment
0 Comments