[16/11 10:45 am] Elango: 🎷🎻 *இன்றைய ( 16/11/2017) வேத தியானம் - சங்கீதம் 26* 🎷🎻
1⃣ சங்கீதம் 26 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 26 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 26:1-2
[1] *கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும்,* நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
[2]கர்த்தாவே, *என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.*
இப்படிப்பட்ட வார்த்தைகளை தாவீது சொல்ல காரணமென்ன❓
4⃣ சங்கீதம் 26:4-5
[4] *வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை[5]பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣ சங்கீதம் 26:8
[8] *கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் ஸ்தலத்தையும் வாஞ்சிக்கிறேன்.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[16/11 11:09 am] Elango: 1 ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்; ஏனெனில், என் நடத்தை நேர்மையானது; நான் ஆண்டவரை நம்பினேன்; நான் தடுமாறவில்லை.
A
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:1
2 ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்;
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:2
3 ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:3
4 பொய்யரின் நடுவில்j நான் அமர்வதில்லை; வஞ்;சகரோடு நான் சேர்வதில்லை.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:4
5 தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்; பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:5
6 மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்; ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:6
7 உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்; வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்;
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:7
8 ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்பிகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்;
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:8
9 பாவிகளுக்குச் செய்வது போல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:9
10 அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக்கையில் நிறையக் கையூட்டு.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:10
11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:11
12 என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 26:12
[16/11 11:17 am] Elango: தாவீதின் பாடல்
கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை. சங்கீதம் 26.1
கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும். சங்கீதம் 26.2
நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன். சங்கீதம் 26.3
நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை. சங்கீதம் 26.4
அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன். சங்கீதம் 26.5
கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன். சங்கீதம் 26.6
கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன். சங்கீதம் 26.7
கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன். சங்கீதம் 26.8
கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும். சங்கீதம் 26.9
அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும். சங்கீதம் 26.10
ஆனால் நான் களங்கமற்றவன்.
எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். சங்கீதம் 26.11
நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன். சங்கீதம் 26.12
[16/11 11:18 am] Elango: வேறொரு மொழிப்பெயர்ப்பில்👆🏻
[16/11 12:17 pm] Jeyanthi Pastor VDM: 23 தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
சங்கீதம் 139:23
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
சங்கீதம் 139:24
[16/11 12:20 pm] Jeyanthi Pastor VDM: நீதிமானாக, வாழ விரும்பும், தேவப்பிள்ளைகள் யாராயினும், தன்னை செப்பனிட, நிதானித்து அறிய கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும்
[16/11 12:21 pm] Jeyanthi Pastor VDM: 2 தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள், நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
ஏசாயா 58:2
[16/11 12:31 pm] Jeyanthi Pastor VDM: மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1கொரி 9:27
[16/11 12:33 pm] Jeyanthi Pastor VDM: 31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
1 கொரிந்தியர் 11:31
32 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
1 கொரிந்தியர் 11:32
[16/11 12:47 pm] Elango: *தாவீது இந்த சங்கீதத்தில் தன்னுடைய உத்தமத்தை, நற்குணங்களை தேவனுக்கு முன் வைக்கிறார்.*
[16/11 12:56 pm] Elango: *நம்மை நாமே நிதானித்தறிய வேண்டும், நியாயந்தீர்க்க வேண்டும், நம்முடைய5 வார்த்தைகளையும், வாழ்க்கையையும் நாம் தேவனுடைய ஆவியினால், தேவனுடையj வார்த்தையினால் நிறுத்து பார்க்க வேண்டுமென்று அநேக வேத வசனங்கள் கூறுகின்றன.*
🔵 1 கொரிந்தியர் 11:28
[28] *எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து,* இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
🔵 2 கொரிந்தியர் 13:5
[5] *நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்;M உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள்.* இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
🔵 லூக்கா 15:17-19
[17] *அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.*🙄🙄😰😰😰😰
[18]நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
[19] *இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி*;
🔵 1 யோவான் 1:9
[9] *நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்,* பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
[16/11 1:01 pm] Elango: மத்தேயு 7:1-5
[1] *நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.*
[2]ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
[3] *நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?*
[4]இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
[5]மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
*பிறரை நியாயந்தீர்ப்பதற்க்கு முன்பாக, பிறரை குற்றம்தீர்ப்பதற்க்கு முன்பாக, பிறரை நிறுத்துப்பார்ப்பதற்க்கு முன்பாக முதலில் நம்மை நாமே நிறுத்துப்பார்க்க வேண்டும்*
[16/11 1:03 pm] Elango: 2 இராஜாக்கள் 20:2-3
[2]அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
[3]ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
*தாவீது இந்த சங்கீதத்தில் தேவனிடம் தன்னுடைய உத்தமத்தை வெளிக்காட்டுவது போல, எசேக்கியாவும் தன் உத்தமத்தை தேவனுக்கு நினைவுபடுத்துகிறார்*
[16/11 1:07 pm] Elango: யோபு 31:5-10,13-14,16-18,32-35,39-40
[5]நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
[6]சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
[7]என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
[8]அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது.
[9]என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,
[10]அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.
[13]என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
[14]தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.
[16]எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
[17]தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
[18]என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்து நடத்தினேன்.
[32] *பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.*
[33]நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?
[34]திரளான என் கூட்டத்துக்கு நான் பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி என்னைத் திடுக்கிடப்பண்ணினதினாலாவது, நான் பேசாதிருந்து, வாசற்படியை விட்டுப் புறப்படாதிருந்தேனோ?
[35]ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
[39] *கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,40]அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான்.* யோபின் வார்த்தைகள் முடிந்தது.
*தாவீது இந்த சங்கீதத்தில் தேவனிடம் தன்னுடைய உத்தமத்தை வெளிக்காட்டுவது போல, யோபுவும் தன் உத்தமத்தை தேவனுக்கு தெரிவிக்கிறார்*
[16/11 1:24 pm] Jeyanthi Pastor VDM: 18 என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும். உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும். நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
தானியேல் 9
[16/11 1:36 pm] Elango: ஆதியாகமம் 17:1-2
[1]ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: *நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.*
[2]நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
[16/11 2:03 pm] Elango: எல்லாவற்றைப்பார்க்கிலும் நம் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறபடியால், பரிசுத்த ஆவியானவர் நாம் ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறார். எரேமியா 17:9-10
*தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நம்மை விட்டு களைந்து, நாம் பொன்னாக விளங்கும் படியாகவும், ஈயமெல்லாம் நம்மை விட்டு சுத்திகரித்து, சுத்த வெள்ளியாக மாறுபடியாகவும் தேவ சமூகத்திலும், பரிசுத்த ஆவியானாவரின் ஆளுகையிலும் நம்மை ஒப்புக்கொடுப்போமாக!*
தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். சங்கீதம் 139:23
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும். சங்கீதம் 139:4
[16/11 2:34 pm] Elango: நம் நம்மை நாமே நிதானித்து அறிந்து ஆவியானவரின் கர்த்தில் நம்மை தருகிறபோது, அவர் நம்மை தேவனுக்கு பிரியமான பாத்திரமாக நம்மை வனைகிறார், தேவனுடைய மகிமைக்கான பாத்திரமாக நம்மை உருவாக்குகிறார்.* ஆவியானவர், விசுவாசியின் வாழ்வில், கிறிஸ்துவில் உள்ள அதே குணங்களை உருவாக்குகிறார். (கலாத்தியர் 4:19, 5:22, 23, எபேசியர் 3:16, 17, பிலிப்பியர் 1:20, 21, 2 கொரிந்தியர் 3:3):
*நம்மை நாமே நிதானிக்க வேண்டிய பகுதிகளும், வேத வசனம் நம்மை எப்படி ஜூவியம் செய்ய வேண்டும் என்று போதிக்கும் வசனங்களும்*
- கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாயிருத்தல் (Philippians 3:1, 4:4).
- ஒருவரிலொருவர் அன்பு கூறுதல் (யோவான்15:12, ரோமர்12:10எபேசியர்5:2).
- விசுவாசப்போராட்டம் (பிலிப்பியர் 1:27, யூதா3).
- பாவத்தை புறம்பாக்குதல் (1 கொரிந்தியர் 5:7, எபிரெயர் 12:1).
- பொல்லாங்காய் தோன்றுகிறவைகளைவிட்டு விலகுதல் (1 தெசலோ.5:22).
- அநியாயத்தை சகித்தல் (1 கொரிந்தியர்6:7).
-
கோபத்தை அடக்குதல் (எபேசியர்4:26, யாக்கோபு 1:19).
- ஒழுங்கற்று நடக்கிறவர்களை விட்டு விலகுதல் (2 தெசலோனிக்கேயர்3:6).
- கர்த்தருக்கேற்ற கிரியைகளில் பெருகுதல் (1கொரிந்தியர் 15:58
- நல்ல முன்மாதிரியைக் காண்பித்தல் (1 தீமோத்தேயு4:12, 1 பேதுரு2:12).
- நன்மையை பின்பற்றுதல் (பிலிப்பியர் 4:8, 1 தீமோத்தேயு 6:11).
- பரிசுத்தத்தைப் பூரணப்படுத்துதல் (2 கொரிந்தியர் 7:1, 2 தீமோத்தேயு 3:17)
- கறைபட்டதை வெறுத்தல் (யூதா23).
- உலகத்தை ஜெயித்தல் (1 யோவான்5:4-5).
- சுவிஷேசத்திற்காக போராடுதல் (பிலிப்பியர் 1:27)
- சத்துருவை மன்னித்தல் (ரோமர்12:20).
- எல்லாரோடும் சமாதானமாயிருத்தல் (ரோமர் 12:18, எபிரெயர்12:14).
- உபத்திரவப் படுகிறவர்களை விசாரித்தல் (யாக்கோபு 1:27).
- அழுகிறவர்களுடனே அழுதல் ( ரோமர் 12:15, 1 தெசலோனிக்கேயர்5:14).
- கனம் பண்ண முந்திக்கொள்ளுதல் ( ரோமர் 12:10).
- அதிகாரத்தில் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படிதல் ( ரோமர் 13:1-7).
- போதுமென்ற மனதுடன் இருத்தல் (பிலிப்பியர் 4:11, எபிரெயர்13:5).
- கர்த்தருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுதல் (கொலோசெயர்1:10,
1தெசலோனிக்கேயர் 2:12).
- புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளுதல் (ரோமர் 6:4).
- வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுதல் (எபேசியர்5:8).
- கிறிஸ்துவை அவரது சரீரத்தில் மகிமைப்படுத்துதல் (பிலிப்பியர்1:20, 21).
- கிறிஸ்து இருதயத்தில் வாசமாய் இருத்தல் (எபேசியர்3:16,17)
- மனிதருக்கு முன்பாக தேவனை மகிமை படுத்தி வாழும் வாழ்க்கை முறை
(2 கொரிந்தியர்3:3)
- உங்கள் செயல்பாடு யதார்த்தமாய் இருக்கிறதா என பரிசோதியுங்கள் (2 கொரிந்தியர் 14:5).
- எதைக்காண்கிறீர்களோ அதன்படி செயல்படுங்கள் (ரோமர் 4:7-8).
- எந்த பாவமானாலும், அவற்றை அறிக்கை செய்து, அதற்கு பரிகாரம் தேடுங்கள். (1 யோவான் 1:9, சங்கீதம் 66:18).
- அறிக்கை செய்த பாவத்தை மறந்து விடுங்கள். குற்றமனசாட்சி உங்களைத் தொடராத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். (பிலிப்பியர் 3:13-14, சங்கீதம் 103:10-12).
- தற்போதுள்ள உங்கள் ஆவிக்குரிய நடக்கை குறித்துப் பட்டியலிடுங்கள். பாவத்தினால் சோதிக்கப்படும் பகுதிகளை மற்றும் அவைகள் உங்களை எளிதாய் மேற்கொள்ளும் சோதனைகளிலிருந்து விலகி இருங்கள். (எபிரெயர் 12:12,13).
- தேவனுடன் ஒப்புரவான பின்னர், பிறருடனும் ஒப்புரவாகுங்கள். (யாக். 5:16).
- முன்னேறிச் செல்லுங்கள் மற்றும் சீராய் வளருங்கள். (2 பேதுரு 2:17-18).
*கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், நாம் நம்மை உய்த்து ஆராய்ந்து சோதித்தறிவோம், அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவோம்* செப்பனியா 2:1-3
[16/11 2:47 pm] Jeyanthi Pastor VDM: [11/16, 14:45] Pastor Jeyanthi, Jgsm: 20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 25:20
21 உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது, நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
சங்கீதம் 25:21
[11/16, 14:46] Pastor Jeyanthi, Jgsm: 20 இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்கு கைகொடுக்கிறதுமில்லை.
யோபு 8
[16/11 3:15 pm] Jeyanthi Pastor VDM: Amen. உம் சித்தம் போல் எங்களை, உம்மைப் போல் திவ்ய சுபாவமுள்ளவர்களாக மாற்றுங்க இயேசப்பா
[16/11 3:18 pm] Jeyanthi Pastor VDM: 14 வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.
ஏசாயா 57:14
15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
ஏசாயா 57:15
16 நான் எப்போதும் வழக்காடமாட்டேன், நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை, ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச்சோர்ந்துபோகுமே.
ஏசாயா 57:16
[16/11 3:19 pm] Jeyanthi Pastor VDM: 17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
சங்கீதம் 51:17
[16/11 3:24 pm] Jeyanthi Pastor VDM: 49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
மாற்கு 9:49
தேவ பிள்ளைகள் அக்கினியால் உப்பிட பட வேண்டும்.
[16/11 3:39 pm] Elango: அக்கினியினால் நாம் எப்படி உப்பிடப்பட முடியும்...
நம் வளர்ச்சிக்காக தேவன் அனுமதிக்கும் உபத்திவமா பாஸ்டர்?
[16/11 3:40 pm] Jeyanthi Pastor VDM: வனைய பட வேண்டும், கிளை நறுக்கி, களைப் பிடுங்கப் பட வேண்டும்.
[16/11 3:46 pm] Jeyanthi Pastor VDM: 1 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
யோவான் 15:1
2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
யோவான் 15:2
3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.
யோவான் 15:3
[16/11 3:48 pm] Jeyanthi Pastor VDM: 3 அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,
ஏசாயா 4:3
[16/11 3:49 pm] Jeyanthi Pastor VDM: 22 உன் வெள்ளி களிம்பாயிற்று, உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது.
ஏசாயா 1:22
25 நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
ஏசாயா 1:25
[16/11 3:50 pm] Jeyanthi Pastor VDM: 2 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்.
மல்கியா 3:2
3 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார். அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து,அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்.
மல்கியா 3:3
[16/11 4:03 pm] Elango: கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.சங்கீதம் 26:2
தாவீது மேலும் கதறுகிறார், தன்னை பரிசோத்து பாரும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் தன்னில் இருக்கிறதா என்று... அவர் தேவனை பிரியப்படுத்த விரும்பினார்.
நம்முடைய மாம்ச சிந்தையும், உலகத்தடுத்த யோசனைகளும் தேவனுக்கு விரோதமாகவும், தேவனுடைய சித்தத்திற்க்கு கீழ்ப்படியாமலும் இருக்கிறது. ரோமார் 8:5-8. விசுவாசத்தின் கிரியையினாலேயல்லாமல், பரிசுத்த ஆவியின் நிறைவினாலேயல்லாமல் நாம் தேவனை பிரியப்படுத்த இயலாத காரியம். எபிரேயர் 11:6
ஆனாலும் *நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே,* நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன். எரேமியா 20:12
அந்த மூன்றாம் பங்கை நான் *அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்;* நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.சகரியா 13:9
[16/11 4:05 pm] Elango: வேதனை தான் ஆண்டவர் நம்மை புடமிடும்போது, ஆனாலும் நாம் புடமிடப்படுவது, உபத்திரப்படுவது நல்லது
[16/11 4:10 pm] Jeyanthi Pastor VDM: Yes Yes, இந்த அனுபவம் கிருபை, அக்கினியால் புடமிடப்படாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உகந்தவர்களாக்க மாட்டாது.
[16/11 4:15 pm] Elango: *தாவீதின் அநேக ஜெபத்தில் அவர் கதறுவதை காணாலம், தம்மிடம் வேதனை உண்டாக்கும் வழிகள் உண்டோ என்று தேவனிடம் முறையிடுகிறார், நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின் படியே நம் வாழ்க்கையை நடத்துகிறார், பாவத்தை உணர்த்துகிறார், ஜீவ பாதையில் நடத்தி, நம்மை மகிமையான பரலோக இராஜ்யத்தில் ஏற்றுக்கொள்வார்.*
எல்லாக் கிறிஸ்தவர்களுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறவராய் இருக்கிறார். அவருக்கு நமது வாழ்வை கட்டுப்படுத்தி நடத்த ஒப்புக்கொடுக்கும் போது, ஆவியினால் நிரப்பப்படவேண்டும், அல்லது ஆவியில் நடக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.
[16/11 4:16 pm] Elango: *பரிசுத்தாவியானவரால் நிரப்பப்படுவது தடைபடுவது எப்போது?*
a) ஆவியானவரை துக்கப்படுத்துவதன் மூலம் இது பாவம் செய்யும் போது நிகழ்கிறது.
b) ஆவியை அவித்துப்போடுதல் மூலம் இது அவரது நடத்துதலுக்கு ஒப்புக்கொடுக்க தவறும்போது நிகழ்கிறது.
c) இது மாம்சீகத்தின்படி வாழ்தல் என அழைக்கப்படுகிறது. அல்லது மாம்சீகத்தால் கட்டுப்படுத்தப்படுவது அல்லது பழைய பாவ சுபாவத்தால் நடத்தப்படுவதை காட்டுகிறது.
[16/11 4:16 pm] Elango: *பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதை திரும்ப பெறுவது எப்படி?*
a) பாவத்தை அறிக்கை செய்வதன் மூலம் (1 யோவான்1:9).
b) தேவனுக்கு வாழ்வை அற்பணிப்பதன் மூலம் (ரோமர்12:1-2)
c) இதுவே ஆவிக்குரிய தன்மை என்றும் அல்லது பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுவது என அழைக்கப்படுகிறது.
[16/11 4:16 pm] Elango: *பரிசுத்த ஆவியானவர் மட்டுமே தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய நற்கிரியைகளை நம்மில் உருவாக்க முடியும் - நமது சொந்த பெலத்தாலோ முயற்சியாலோ தேவனை பிரியப்படுத்தமுடியாது. (ரோமர் 8:8-9, 1 கொரிந்தியர்3:10-15)*
*ஆவிக்குரிய விசுவாசி சுபாவம்*
a) தேவனை பிரதிபலித்துக்காட்டுகிறார். (எபேசியர் 5:1, 1 யோவான் 3:9).
b) கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். (யோவான் 7:39, யோவான் 16:14).
c) நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறார். (ரோமர் 8:2-4, ரோமர்13:8).
[16/11 4:36 pm] Elango: *தாவீது இங்கே 2ஆம் வசனத்தில் தன்னை சோதித்து, புடமிட்டு பாரும் என்கிறார், ஆவிக்குரிய மனிதன் தன்னை தானே நிதானித்து பார்க்கிறான், அவன் வேத வெளிச்சத்தில் தன்னை ஆராய்ந்து பார்க்கிறான்*
வேதாகமத்தில் மனித வர்க்கமானது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காட்டப்பட்டிருக்கிறது.
*இயற்கையான / இயல்பான மனிதன்* -
சரீரப்பிரகாரமாக ஒரு நபர் பிறந்து வாழ்கிறவராய் இருக்கிறார், ஆனால் அவர் மறுபடியும் பிறவாதவராய் , திரும்பவும் உருவாக்கப்படாதவராய் இருக்கிறார். அப்படிப்பட்ட நபர் சூதுவாது அறிந்தவராயும், மிகவும் நாகரிகமானவராயும், அன்பு மற்றும் சாந்தமுள்ளவராயும் இருக்கலாம், ஆனால் *அப்படிப்பட்ட நபர் ஆவிக்குரிய தனிச்சிறப்பைப் பற்றி முற்றிலும் அறியாதவராய் இருப்பர். ( 1கொரிந்தியர் 2:14) லவோதேக்கேய சபையில் உள்ள குளிர்ந்த நபருக்கு சமமானவர்கள்*
*மாம்சீகத்துக்குரிய மனிதன்* CARNAL MIND/ MAN -
ஒரு நபர் திரும்வும் உருவாக்கப்பட்டவராய் அல்லது மறுபடி பிறந்து, ஆனால் அந்நபர் தொடர்ந்து தனது பாவ பாவசுபாவத்துடன் வாழ்ந்து வருகிறவர். இப்பகுதியில் *அவர்களது செயல்பாடுகள் வளர்ச்சியற்ற குழந்தைத்தன கிறிஸ்தவ வாழ்வை காட்டுகிறதாய் இருக்கிறது. (1 கொரிந்தியர் 3:1-4). இது வெதுவெதுப்பான நபராய் லவோதிக்கேயா சபைக்கு சமமாய் காணப்படுகின்றனர்.*
*ஆவிக்குரிய மனிதன்* -
ஒரு நபர் திரும்ப உருவாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில், பொதுவாக வாழ்கிறவர்களாய் இருப்பர். இவர்கள் மனிதருக்கும் தேவனுக்கும் இடையே உள்ள காரியங்களை பகுத்தறிகிறவர்களாய் இருப்பர். ( 1 கொரிந்தியர் 2:11-13). *அனுதின வாழ்வில், தேவனோடு ஐக்கியம் கொள்கிறவர்களாய் இருப்பர். (எபேசியர் 5:18-20). இப்படிப்பட்டோர் லவோதிக்கேயா சபையில் உள்ள அனலுள்ளவர்களுக்கு சமமானவர்களாய்க் கருதப்படுகின்றனர்.*
[16/11 4:55 pm] Jeyanthi Pastor VDM: Yes, 19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15:19
[16/11 4:57 pm] Jeyanthi Pastor VDM: 4 வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
சங்கீதம் 26:4
5 பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன், துன்மார்க்கரோடே உட்காரேன்.
சங்கீதம் 26:5
[16/11 4:59 pm] Jeyanthi Pastor VDM: இந்த காரியம் நமக்கு சங் 1 லேயே கூறப்பட்டுள்ளது
[16/11 5:00 pm] Jeyanthi Pastor VDM: நம்முடைய ஐக்கியம் தேவப்பிள்ளைகளோடும், பரிசுத்தவான்களோடும் இருக்க வேண்டும்.
[16/11 5:01 pm] Elango: ✅✅
வேறுபிரிக்கப்பட்ட ஜீவியம்.
[16/11 5:01 pm] Jeyanthi Pastor VDM: 20 ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
நீதிமொழிகள் 13
[16/11 5:01 pm] Jeyanthi Pastor VDM: கூடா நட்பு கேடாய் முடியும்.
[16/11 5:05 pm] Elango: *வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்* சங்கீதம் 26:4-5
தாவீது இங்கே ஒரு வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுகிறார், உலத்தாரோடு ஒதத வேஷம் தரியாமல், தேவனுக்கு பிரியமாக வாழ தன்னை அர்ப்பணிக்கிறார், ஆவிக்குரிய எப்படி வாழ் வேண்டும் என்பதை பற்றி சில வசனங்களை கீழே பார்க்கலாம்.
அ] மாம்சத்தின்படி நடவாதிருத்தல் (ரோமர் 8:4).
ஆ] அன்பில் நடந்து கொள்ளுதல் (எபேசியர் 5:2).
இ] புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளுதல். (ரோமர் 6:4).
ஈ] அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரமாய் நடந்து கொள்ளுதல். (எபேசியர் 4:1).
உ] கர்த்தருக்குப் பாத்திரராய் நடந்து கொள்ளுதல். (கொலோசெயர் 1:10, 1 தெசலோனிக்கேயர் 2:12).
ஊ] பகலில் சீராய் நடத்தல். (ரோமர் 13:13).
எ] நற்கிரியைகளில் நடத்தல். (எபேசியர் 2:10).
ஏ] ஒளியில் நடந்து கொள்ளுதல். (எபேசியர் 5:8, 1 யோவான் 1:7).
ஐ] கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நடந்து கொள்ளுதல். (கொலோசெயர் 2:6).
ஒ] ஞானமுள்ளவர்களைப் போல கவனமாய் நடந்து கொள்ளுதல். (எபேசியர் 5:15,16).
ஓ] நடந்து கொள்ள வேண்டியபிரகாரம் நடந்து கொள்ளுதல். (1 தெசலோனிக்கேயர் 4:1).
[16/11 5:05 pm] Jeyanthi Pastor VDM: ஆவிக்குரியவன் ஆவிக்குரியவர்களோடு இருப்பது கிருபை. வேதத்தில் கர்த்தரோடு பேசி மேலான கிருபைகளைப் பெற்றவர்கள், தாங்கள் பலப்பட்டப்பின், துன்மாா்கருடைய ஆலோசனைக் கேட்டு பின்மாரி, கர்த்தரை விட்டு விலகினதை பார்க்கிறோம். அப்படி தேவ ஆவியானவரை நாம் துக்கப் படுத்தக் கூடாது
[16/11 5:06 pm] Elango: உண்மையே...
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும், ஞானவானோடு பழகுகிறவரன் இன்னும் ஞானமடைவான்.
பரிசுத்தவான்களின் ஐக்கியம் நமக்கு அவசியம்.
[16/11 5:17 pm] Elango: நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மிகவும் விலையேறப்பெற்றது, நேற்றைய நேரத்தை அல்லது இப்போது நாம் கடந்த பத்து நிமிடத்தை நாம் திருமப் பெற முடியாது. அதலால் இந்த வாழ்க்கையில் உள்ள நேரத்தை நாம் செல்விடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல நண்பர்களோடு, தேவ மனிதர்களோடு செலவிடுவது நல்லது.
சிலர் தேவையில்லாத காரியங்களுக்காக பல மணி நேரம் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள் ஆனால் கர்த்தருடைய தியானிப்பதற்க்கோ, ஜெபத்திற்க்கோ சில மணி நேரமே செலவிடுவதுண்டு. நேரமென்பது தேவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம்.
*இந்த உலகத்தை குறித்த காரியங்களில் அதிக நேரம் செலவிடாமல், நித்தியத்திற்க்கு அடுத்த காரியங்களில் அதிக நேரம் செலவிடலாம், ஜெபம், வேத வாசிப்பு, ஊழியம் , குடுபத்தோடு செலவிடுவது, சுவிஷேசம் அறிவிப்பது என்று*
ஆகாத சம்பாஷனையை தவிர்ப்போமாக. காலத்தை கர்த்தருக்கென்று பிரயோஜப்படுத்துவோமாக!
[16/11 5:54 pm] Elango: நம் நேரத்தை வீணாக்க, நம் ஆத்துமாவை கெடுத்துப்போட பல வழிகள் இந்த உலகத்தில் உண்டு - Clubs, Cinema, internet, Games, friends, picnic spots, TV, Mobiles, computers...
ஆனால் நம் நேரத்தை ஜெபத்திலும், இரவும் பகலும் வேதத்தை படிப்பதிலும் செலவி தேவனுக்கென்று கொடுக்கும்போது, கர்த்தருக்கேற்ற பாத்திரமாக மாறலாம்.
[16/11 5:56 pm] Silvaster VTT: தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
[16/11 6:01 pm] Elango: 10. *என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே*
11. *எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;*
12. பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
13. விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
14. எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;
15. *என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக*
16. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
17. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
18. *இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்*
19. பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.நீதிமொழிகள் 1:8:19
[16/11 6:02 pm] Elango: 17. இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
18. அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
19. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
20. *ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக* நீதிமொழிகள் 2:17-20
[16/11 6:23 pm] Jeyanthi Pastor VDM: Yes, 1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும், அவன் கண்களுக்குமுன் தெய்வபயம்இல்லை.
சங்கீதம் 36:1
2 அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.
சங்கீதம் 36:2
3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது, புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
சங்கீதம் 36:3
4 அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.
சங்கீதம் 36:4
[16/11 6:24 pm] Jeyanthi Pastor VDM: 14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
2 கொரிந்தியர் 6:14
15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
2 கொரிந்தியர் 6:15
16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
2 கொரிந்தியர் 6:16
17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 கொரிந்தியர் 6:17
[16/11 6:30 pm] Jeyanthi Pastor VDM: 8 கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
சங்கீதம் 26:8
தியானிப்போமா பாஸ்டர்
[16/11 6:35 pm] Jeyanthi Pastor VDM: 1 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சி;த்துக் கதறுகிறது.
சங்கீதம் 42:1
2 என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது, நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
சங்கீதம் 42:2
[16/11 6:37 pm] Jeyanthi Pastor VDM: தேவப் பிள்ளைகள் கர்த்தர் மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
வாஞ்சை, ஏக்கம், தாகம், இன்னும் கூறப்போனால் தேவ பக்தியையும் கோடிட்டு காட்டலாம்
[16/11 6:41 pm] Jeyanthi Pastor VDM: இரவிலும் பகலிலும் வாஞ்சிக்க, முதலாவது தேவ
[16/11 6:44 pm] Jeyanthi Pastor VDM: முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும்.
[16/11 6:54 pm] Jeyanthi Pastor VDM: 2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது, என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
சங்கீதம் 84:2
[16/11 7:18 pm] Jeyanthi Pastor VDM: 9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது, எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன், உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
ஏசாயா 26:9
[16/11 7:26 pm] Jeyanthi Pastor VDM: தேவனைத் தேட வேண்டும். 32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள், தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
சங்கீதம் 69
[16/11 7:55 pm] Elango: *கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.சங்கீதம் 26:8*
ஜெபத்திற்க்கும், தேவனை ஆராதிப்பதற்க்கும் தாவீது அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்க்கமுடியும், முக்கியமாக தாவீது தேவ பிரசன்னத்தை நேசித்தார், அந்த பிரசன்ன ஸ்தலத்தை வாஞ்சித்தார்.
*கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.சங்கீதம் 27:4*
1. சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 2. என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.சங்கீதம் 84:1-2
[16/11 7:55 pm] Elango: நாம் ஏன் கர்த்தருடைய சந்நிதியை நேசிக்கவேண்டும்? எனென்றால் சர்வத்தையும் படைத்தவர், ஆளுகிறவர், நம்மை மற்ற எல்லோரை விடவும் அதிகமாக நேசிக்கிற தேவன் நம்மோடு வாழும் நிமிடங்கள், அவர் நம்மை நிரப்பும் அனுபவங்கள், அளவில்லாத சந்தோஷத்தை நம் இருதயத்தில் நிரப்பி, நம்மை மகிழ செய்யும் தருணங்கள் அது.
*சங்கீதம் 4:7 அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.*
*கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.சங்கீதம் 122:1*
[16/11 8:31 pm] Elango: வேதத்தில் நாம் ஆலயத்தை குறித்து பார்க்கலாம்.
1. தேவாலயம் ( எருசலேமில் இருப்பது )
2. ஜெப ஆலயம் ( ஆராதனைக்கும், ஜெபத்திற்க்கும் பல இடங்களில் இருப்பது )
3. பரலோகத்தில் தேவாலயம் 2 தெசலோனிக்கேயர் 2:4, எபிரேயர் 7:25, 9:24, 10:19-22
4. பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும் நம் சரீரமே அந்த ஆலயம் 1 கொரிந்தியர் 3:16-17, 6:19-20
*எல்லா இடங்களிலும் தேவன் வியாபித்திருக்கிறார், எந்த இடத்திலும் நாம் ஆவியோடும், உண்மையோடும், அர்ப்பணத்தோடும் நம் இருதயத்தையும் கைகளையும் உய்ர்ந்தும்போது, நம் இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பி வழிகிறது.
[16/11 8:39 pm] Elango: என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; *சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.*சங்கீதம் 26:12
நாம் கர்த்தரை எக்காலத்திலும் துதிக்கவேண்டும், எப்போதும் அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நாம் எல்லாவற்றிலும் நன்றி செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறோம். *1 கொரிந்தியர் 1 ம் அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலர் தேவனால் அளிக்கப்பட்ட நன்மைகளுக்காய் தேவனுக்கு நன்றி செலுத்துகிறார்*
2. கிருபைக்காய் நன்றி செலுத்தினார் (வச 4)
3. ஆவிக்குரிய ஐசுவரியத்திற்காய் நன்றி செலுத்தினார் (வச 5)
4. சாட்சிக்காய் நன்றி செலுத்தினார் (வச 6)
5. ஆவிக்குரிய வரங்களுக்காய் நன்றி செலுத்தினார் (வச 7)
6. எல்லாவற்றிற்கும் மேலான பரிசுத்தமாக்குதலுக்காய் நன்றி செலுத்தினார் (வச 8)
7. தெய்வீக உண்மைக்காய் நன்றி செலுத்தினார் (வச 9)
a) நமது பாவங்களை மன்னித்த உண்மைக்காய் (1 யோவான் 1:9).
b) திராணிக்கு மிஞ்சின சோதனையை அநுமதிக்காத உண்மைக்காய் (1 கொரிந்தியர் 10:13).
c) நம்மை அழைத்தவரின் உண்மைக்காய் (1 தெசலோனிக்கேயர் 5:24).
d) தீமையினின்று காக்கும் உண்மைக்காய் (2 தெசலோனிக்கேயர் 3:3).
e) நாம் உண்மையில்லாத நிலையிலும் அவரது உண்மைக்காய் (2 தீமோத்தேயு 2:13).
[16/11 8:54 pm] Tamilmani Ayya VDM: தேவாலயத்திலும் பெரியவர் யார்?
நாம் யார்? தேவாலயம் என்றால் என்ன?
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 12: 6)
இயேசு கிறிஸ்துவே பெரியவர்.
தேவாலயத்திற்க்கு போகும்போது எப்படியிருக்கனும்?
நீ தேவாலயத்துக்குப் போகும்போது
உன் நடையைக் காத்துக்கொள்,
(பிரசங்கி 5: 1)
ஒரு விசுவாசி சனிக்கிழமை இரவுவிடுதிக்கு செல்லுகிறான். களியாட்டம் போடுகிறான். அடுத்த நாள் அவன் அதைப்போல ஒரு சபையைத்தான் நாடுவான். இதுதான் நடையை காத்துக்கொள்வது.
நாம் சபைக்கு திட்டமாக போகிறோமா? போவோம் என்கிறதற்க்காக (Attendance போட) போகிறோமா?
நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.
(சங்கீதம் 55: 14)
ஒரு திட்டமாக போக வேண்டும். இன்று ஆராதனையில் தேவ பிரசன்னத்தை பெற வேண்டும். சாட்சி சொல்ல வேண்டும். பிரசங்கத்தை கவனமாக கேட்க வேண்டும். தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும். அந்நிய பாஷை பேச வேண்டும். ஆலயத்திற்க்கு உதவ வேண்டும், இப்படி.
வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
(சங்கீதம் 100 :4)
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது, என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
(சங்கீதம் 84: 2)
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
(சங்கீதம் 48: 9)
தேவாலயம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்?
1. ஜெபம் நிறைந்த ஜெப ஆலயமாக
2. உபதேசம் நிறைந்த திருச்பையாக
3. நோயாளிகளை குணப்படுத்தும் சபையாக
4. கர்த்தரின் மகிமை ஆலயத்திலே வர துதித்து பிரயாசைப்படும் சந்நிதியாக
சபை ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். வணிகம் இருக்கலாகாது.
அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
(லூக்கா 4: 15)
அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
(மத்தேயு 21: 14)
நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்:
(மாற்கு 14: 49)
அக்கினி இறங்குகிறதையும் கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தலையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
(2 நாளாகமம் 7: 3)
தேவாலயம் எப்படி இருக்கக்கூடாது?
ஒரு நிறுவனமாக வியாபாரத்தை ஒரு பகுதியாக செய்யக்கூடாது. ஆலயத்தேவைகளை கர்த்தர் கடன் வாங்காமல் பார்த்துக்கொள்வார்.
என் பெரிய விசுவாசத்தோடு நடத்த வேண்டும். கர்த்தர் விசுவாசிகள் அளவிற்கேற்ற கட்டிடத்தை தருவார் ஊழியக்காரரை உயர்த்துவார். கர்த்தருடைய சித்தம் இல்லாமல் ஒரு செங்கலையும் நகர்த்தாமலிருப்பது நலம்.
இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:
(மத்தேயு 21: 12)
கிறிஸ்தவன் எப்படி இருப்பான்?
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
(சங்கீதம் 92 :13)
கிறிஸ்தவன் எப்படி இருக்கனும்?
விசுவாசி விசுவாசியாக கடைசிவரை வாழாமல், சீஷர்களாக இருக்க வேண்டும்.
சீஷத்துவ வாழ்க்கை
உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
(அப்போஸ்தலர் 20: 28)
[16/11 8:55 pm] Tamilmani Ayya VDM: *மணவாட்டியின் தோட்டம் - தேவாலயம்*
உன்னதப்பாட்டு 4: 13- 16
உன் தோட்டம்
1. மாதளஞ்செடிகளும்
2. அருமையான கனிமரங்களும்
3. மருதோன்றிச் செடிகளும்,
4. நளதச்செடிகளும்,
5. நளதமும்
6. குங்குமமும்
7. வசம்பும்
8. லவங்கமும்
9. சகலவித தூபவர்க்க மரங்களும்,
10. வெள்ளைப்போளச்செடிகளும்,
11. சந்தன விருட்சங்களும்,
12. சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள
சிங்காரவனமாயிருக்கிறது.
15. தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.
*வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.*
சபையிலே மிக அரிதான வாசனையை ஆராதனையில் நுகர்ந்தேன் யாராவது என்று சொல்வார்களானால் நம்பமுடியாதவர்கள் உண்டு. கேலி பண்ணி சொல்லடி கொடுப்பவர்களும் உண்டு. சபைகளிலே நறுமணமிருந்தால் வாசனையை ஆவிக்குரிய முகரும் தன்மையுடையவர்கள் அறிவார்கள். சபைகளின் தேவ தூதர்களும் அறிவார்கள். ஏன் என் சபை பாஸ்டர் அடிக்கடி சபையில் தேவ தூதர்களை தரிசிப்பார். சபை மகிமையை காண ஜெபியுங்கள்!
[16/11 8:59 pm] Jeyanthi Pastor VDM: 8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள், உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
சங்கீதம் 36:8
9 ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது, உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
சங்கீதம் 36:9
10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
சங்கீதம் 36:10
[16/11 9:01 pm] Tamilmani Ayya VDM: *~ ஜெப வீடு ~*
நமது திருச்சபைகள் வேதாகமத்தில்
👉 சந்நிதி
👉 சபை
👉 தேவ சபை
👉 மகா சபை
👉 கர்த்தருடைய சபை
👉 கர்த்தருடைய ஆலயம்
👉 ஆலயம்
👉 தேவாலயம்
👉 ஜெப வீடு
👉 ஜெப ஆலயம்
👉 பரிசுத்த சபை
👉 யாக்கோபின் சபை
👉 கர்த்தருடைய சந்நிதி
👉 இஸ்ரவேலின் சபை
👉 தேவனுடைய வீடு
👉 தேவனுடைய சபை
என 16 வகையில் குறிக்கப்பட்டுள்ளது._
★ கோவில் என்ற சொல் விக்ரகங்களுக்கு மாத்திரமே குறிக்கப்பட்டுள்ளது. (கோ என்றால் இறைவன், ராஜா, மிக பெரிய என அர்த்தம். இல் என்றால் இல்லம் (வீடு)
★ நாம் தேவாலயத்தை கோயில் என்றுக்கூப்பிடலாமா? நம் தெய்வத்தை இயேசுஸ்வாமி என கூப்பிடலாமா?
பெயருக்கு அர்த்தம்தான் முக்கியம். ஸ்வாமி என்றால் ஆண்டவர் LORD என பொருள். ஆக கூப்பிடலாம்.
★ சபைகள் எந்த பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆவியானவர் உரைக்கிறபடியே திருச்சபைக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன என அறிகிறேன். ஆனால் பரலோகத்திலே "பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபை" எனவும் "முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை" செம்மையானவர்களுடைய சங்கம்- சபை" என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து உரைத்தபடி திருச்சபைகள் என்றுமே ஜெப வீடுதான். அந்த ஜெப வீட்டிலே இயேசு கிறிஸ்து தன் கடைசி ஒரு வாரத்திலே செய்ததைத்தான் இக்கால திருச்சபைகள் செய்ய வெளிப்படுத்தியிருக்கிறார்.
எல்லா தேவாலயங்களிலும்
👉 1. ஜெபம்
👉 2. பிரசங்கம்
👉 3. நோயாளிகளை குணப்படுத்துதல்
👉 4. சபையை ஒழுங்குப்படுத்தல்
இவைகள் காணப்பட வேண்டும். இவையெல்லாம் இயேசு கிறிஸ்து தேவாலயத்திலே செய்தவைகள்.
பரலோகத்திலே தேவனுடைய ஆலயம் உள்ளது. தேவனுடைய உடன்படிக்கை பெட்டியும் அங்கு உள்ளது. தேவனை ஆயிரமாயிரம் தேவ தூதர்கள் துதிக்கிறார்கள். துதிக்கும் கூட்டமே உள்ளது.
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது, அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
(வெளி. விசேஷம் 11:19)
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
(எபேசியர் 3: 21)
ஆலயம் தேவனின் தோட்டம். அந்த தோட்டத்தில் நறுமணம் கமழும் மலர்க்கா வகைவகையாகயிருக்கும். ஓவ்வொன்றும் ஒவ்வொரு வாசனை தரும். இவையெல்லாம் விசுவாசிகளின் குணங்களை சொல்லுகி. அஅதேபோல் விதவிதமான பழ மரங்கள். இவைகளும் விசுவாசிகளே. கனி கொடுப்பவர்கள், இப்படி உன்னதப்பாட்டு சொல்லுகிறது.
பூமியிலே தினம் தினம் தேவனுடைய சபைகள் மகிமையை காண்பதாக! மணம் வீசுவதாக! கனிகளை தருவதாக! சாலொமோன் ஆலய மகிமையை காண்பதாக!! தேவ மகிமை உங்கள் மீது உதிக்க தேவன் கிருபை காட்டுவாராக!!
[16/11 9:10 pm] Jeyanthi Pastor VDM: ஆம், ஆனால் அநேகம் தேவப் பிள்ளைகள் தேவ சமூகத்தை கோவில் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன் பாஸ்டர். எனக்கு அது வேதனையாயிருக்கும்
[16/11 9:11 pm] Jeyanthi Pastor VDM: Yes
[16/11 9:26 pm] Tamilmani Ayya VDM: கோவில் வழக்குச்சொல்லாகி விட்டது Dr.
[16/11 9:27 pm] Jeyanthi Pastor VDM: தவறு, சொல்லக் கூடாது, கோவில் means கல்லறை

Post a Comment
0 Comments