[15/11 10:36 am] Elango: 🎷🎻 *இன்றைய ( 15/11/2017) வேத தியானம் - சங்கீதம் 25* 🎷🎻
1⃣ சங்கீதம் 25 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 25 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். சங்கீதம் 25:4
*தேவனுடைய வழிகளை நாம் எப்படியெல்லாம் அறிந்துக்கொள்ளலாம்❓*
4⃣ *என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்;* கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.சங்கீதம் 25:7
தேவன் நம் பழைய பாவங்களை நினைப்பவரா❓அதற்கு தக்க தண்டனை கொடுப்பவரா❓
5⃣ சிறுமைபட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். சங்கீதம் 25:9
சிறுமைப்பட்டவர்கள் என்பது யார்❓தேவனுடைய ஜனங்களா அல்லது துன்பங்களின் வழியாக கடந்து போகிறவர்களா❓
6⃣ கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; *உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.*சங்கீதம் 25:11
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
7⃣ *கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;* அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். சங்கீதம் 25:14
கர்த்தருடைய இரகசியம் என்பதன் அர்த்தம் என்ன❓கர்த்தருக்கு பயப்படுதல் என்றால் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[15/11 12:44 pm] Jeyanthi Pastor VDM: ஆத்துமாவை உயர்த்தி கர்த்தருடைய கரத்தில் கொடுக்கும் அனுபவம், ஒவ்வொரு தேவப்பிள்ளைகளுக்கும் மிகவும், அவசியம்.
[15/11 12:48 pm] Jeyanthi Pastor VDM: தாவீது தன் ஆத்துமாவைக் கர்த்தரிடத்தில் உயர்த்தினால், கர்த்தர் தம் காரியத்தை சீக்கிரம் மேற்போட்டுக் கொண்டு தமக்காக செயல்படுவாரென்று நம்பினார் போல், அநேக இடங்களில் தன் ஆத்துமாவை உயர்த்துவதை நாம் காணலாம்
[15/11 12:50 pm] Jeyanthi Pastor VDM: சங்கீதம் 86 : 4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
[15/11 12:51 pm] Elango: *1⃣ சங்கீதம் 25 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓*
*எழுதியவர்*
இந்த சங்கீதத்தை எழுதியவர் தாவீது. இந்த சங்கீதம் அவருடைய முதிர்ந்த வயதில் எழுதியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தன் இளவயதின் பாவங்களை நினையாதிருக்கும்படி கர்த்தரிடம் வேண்டுகிறார் தாவீது.
*சிறப்பு*
அகர வரிசையில் ( alphabetical order ) எழுதப்பட்ட முதல் சங்கீதம் இதுவே. இதிலுள்ள எல்லா வசனங்களின் முதல் எழுத்தும் எபிரேயத்தின் அகர வரிசையில் துவங்குகிறதாய் இருப்பது இந்த சங்கீதத்தின் சிறப்பு. கவிஞர்கள் தங்களின் கவித்துவத்தையும், மொழியின் சிறப்பையும் மேன்மைப்படுத்த இப்படி எல்லா மொழியின் கவிஞர்களும் எழுதுவதுண்டு. ஆனால் இங்கு சத்துருவின் போராட்டத்தின் மத்தியில் தாவீது கதறுகிறார், தேவ பாதத்தில் அமருகிறார். நாமும் அவருடைய பாதம் சரணடைந்தால் சத்துருவின் எல்லா போராட்டத்திலிருந்து நமக்கு வெற்றி நிச்சயம்.
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். சங்கீதம் 25:2
இந்த சங்கீதத்தில் இன்னும் நாம் அநேக ஆவிக்குரிய காரியங்களை கற்றுக்கொள்ளலாம்.
[15/11 12:51 pm] Jeyanthi Pastor VDM: சங்கீதம் 143:8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
[15/11 12:52 pm] Jeyanthi Pastor VDM: ஓ nice. அருமையான கருத்து
[15/11 12:54 pm] Jeyanthi Pastor VDM: 25:2 அருமையான விண்ணப்பம்,
4 நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள், வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள், நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று.
சங்கீதம் 69:4
6 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக, இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.
சங்கீதம் 69:6
7 உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன், இலச்சை என் முகத்தை மூடிற்று.
சங்கீதம் 69:7
8 என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
சங்கீதம் 69:8
9 உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது, உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
சங்கீதம் 69:9
இந்த நிலையில் இந்த ஜெபம் அவசியமே
[15/11 12:55 pm] Elango: 🙏👍
ஆத்துமாவை உயர்த்துவது என்றால் தேவனிடத்தில் தன் விண்ணப்பத்தை ஏறெடுப்பது, ஜெபிப்பது என்று சொல்லலாமா பாஸ்டர்?
அல்லது ஆத்துமாவை உயர்த்துவது என்றால் வேறு அர்த்தமா?
[15/11 12:57 pm] Jeyanthi Pastor VDM: துன்மாா்க்கருக்கு முன் நீதிமான் கலங்கினால், 26 துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
நீதிமொழிகள் 25:26
இப்படியாகி விடுமே
[15/11 1:05 pm] Jeyanthi Pastor VDM: மிகவும் சரியே, விண்ணப்பித்து, கர்த்தரை நோக்கி ஜெபிக்கலாம். நான் நினைக்கிறேன், பொதுவாக நாம் வெட்கப்படுகிற சூழ்நிலையில் அதை எல்லோரும் அறிந்துக் கொள்வது, மிகுந்த பாரமாக, வெட்கமாக இருக்குமல்லவா பாஸ்டர், ஆகவே, தாயின் அன்பு ஒன்றுதான் அந்த சூழ்நிலையில் அடைக்கலமாகும்.
அந்த அன்புக்காக ஏங்கி, கர்த்தர் தவிர, தாயைப் போல வேறு யாரும் நம்மைத் தேற்ற முடியாதென, உயர்த்தியிருக்கலாம்.
தன் ஆத்துமாவோடு அடிக்கடி தாவீது பேசியதும் குறிப்பிடத் தக்கது.
[15/11 1:09 pm] Jotham Brad VTT: ஆத்துமாவை எப்படி உயர்த்தலாம்.. ..ஜெபமா ? துதிப்பதா ???
[15/11 1:18 pm] Jeyanthi Pastor VDM: இரண்டுமே செய்யலாம்.
[15/11 1:20 pm] Jeyanthi Pastor VDM: ஆத்துமா நம்மால், சுய சித்தத்தால் கையாளப்படாமல், பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட ஒப்புக் கொடுப்பதே, ஆத்துமாவை உயர்த்துவதாகும்
[15/11 1:23 pm] Jotham Brad VTT: இன்னும் ஆழமாக சொல்ல முடியுமா???
[15/11 1:24 pm] Elango: *2⃣ சங்கீதம் 25 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓*
இந்த சங்கீதமானது தேவனை துதிப்பதற்க்கும், ஆராதிப்பதற்க்கும், விண்ணப்பம் ஜெபத்திற்க்கும் நாம் பயன்படுத்தலாம், தாவீதிற்க்கு போலவே ஒத்த சூழ்நிலை நமக்கு இல்லாமலிருக்கலாம் ஆனால் நமக்கு வித்தியாசமான ஆவிக்குரிய போராட்டாம் இந்த உலகத்தில் உண்டு, வான மண்டல பொல்லாதா சேனைகளோடும், பிசாசின் அந்தகார கிரியைகளோடும் போராட்டம் உண்டு. நம்முடைய ஆத்துமாவை கெடுக்கும் சத்துரு எப்போதும் நம்மை கீழே விழசெய்ய சுற்றி திரிகிறான். மாமசத்தின் இச்சையையும், கண்களின் இச்சையும், உலகத்தின் பெருமையையும் உபகரணங்களாக பயன்படுத்தி நம் ஆத்துமாவுக்கு விரோதமாக அவன் போர் செய்கிறவனாக இருக்கிறான்.
லூக்கா 22:31, 2 கொரிந்தியர் 2:11. கலாத்தியர் 5:16-25, 1 யோவான் 2:16
இந்த சங்கீதமானது நமக்கு நல்ல ஜெப விண்ணப்பம் சங்கீதமாக இருக்கிறது.
[15/11 1:25 pm] Elango: 👍👍
ரோமர் 8:26
[26]அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், *ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.*🙏🙏🙏🙏🙏🙏
[15/11 1:26 pm] Jeyanthi Pastor VDM: ம் கர்த்தருக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு, உறவு பாலம் செவ்வையாக, ஆத்துமா கர்த்தரை நோக்கி வாஞ்சித்துக் கதறுவது,
[15/11 1:29 pm] Jeyanthi Pastor VDM: 5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 42:5
6 என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது, ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
சங்கீதம் 42:6
9 நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
சங்கீதம் 42:9
10 உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
சங்கீதம் 42:10
11 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
சங்கீதம் 42:11
இப்படி அங்கலாய்த்து தேவனால் மட்டும் நம் பாரம், அதாவது வெட்கப்பட்ட சூழ்நிலை மாற்ற வைப்பது
[15/11 1:32 pm] Jeyanthi Pastor VDM: வேறு யாரிடமும் விடுதலையாகப் பேச முடியாதே, 18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
எபிரேயர் 2:18
அவருக்கு மட்டுமே தெரியும் இந்த வேதனை
[15/11 1:40 pm] Jotham Brad VTT: கர்த்தர் எல்லா ரகசியமும் தெரியபடுத்துவாரா..
[15/11 1:40 pm] Jotham Brad VTT: வெளிப்படுத்தின விசேஷம், Chapter 10
4. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
5. சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;
6. இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
[15/11 1:45 pm] Elango: கண்டிப்பாக, அவரோடு நாம் நெருங்கி ஐக்கியமாக இருக்கும் போது, அவரோடு நாம் அனுதினமும் நடக்கும் போதும் அவர் நம் பரிசுத்த ஆவியினாலே நமக்கு வெளிப்படுத்துவார். ஆவியானவர் தேவனின் ஆழங்களை அறிந்திருக்கிறார். ஆபிராகமுக்கு தேவன் சொன்னது என்ன? நாம் ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? நாமும் ஆபிரகாமை போல் தேவனுக்கு சிநேகிதகராக வாழ்ந்தால் ... அவரும் நமக்கு காரியங்களை, இரகசியங்களை வெளிப்படுத்துவார்.
[15/11 1:47 pm] Elango: அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
*நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?*
*கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.* ஆதியாகமம் 18:17-19
[15/11 1:57 pm] Elango: 1 கொரிந்தியர் 2:7-16
[7]உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், *மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.*
[8]அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.
[9]எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
[10] *நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.*
[11]மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
[12]நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
[13]அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
[14]ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
[15]ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
[16]கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
[15/11 2:01 pm] Stella Joseph VDM: தேவஞானம் தான் இரகசியமா❔பாஸ்டர்
[15/11 2:02 pm] Elango: இங்கு இரகசியம் என்பது உலகத்தாருக்கு அல்லது பெயர் கிறிஸ்தவர்களுக்கு தான் இரகசியம், மறைபொருள், தெரியாதது எனப் பொருள் கொள்ளலாம்.
ஆனால் *தேவ பிள்ளைகளுக்கு தேவன் அவருடைய இரகசியத்தை, பரலோக காரியங்களை, கிருபைகளை, ஞானத்தை வெளிப்படுத்துகிறவராக இருக்கிறார்.*
லூக்கா 8:10
[10]அதற்கு அவர்: *தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது;* மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
[15/11 2:03 pm] Jeyanthi Pastor VDM: Yes, அவருடைய சித்தமும் இரகசியம் தானே பாஸ்டர்
13 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
பிலிப்பியர் 2:13
[15/11 2:04 pm] Jeyanthi Pastor VDM: 14 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என்சிநேகிதராயிருப்பீர்கள்.
யோவான் 15:14
15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
யோவான் 15:15
[15/11 2:05 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தர் நம் சிநேகிதர் 👍🏻👍🏻👏🏻👏🏻 எத்தனைப் பெரிய பாக்கியம்.
[15/11 2:07 pm] Jeyanthi Pastor VDM: 20 குற்றமில்லாதவன் அவாகளைப் பார்த்து நகைக்கிறான்.
யோபு 22:20
21 நீர் அவரோடே பழகிச் சமாதானமாயிரும். அதினால் உமக்கு நன்மை வரும்.
யோபு 22:21
22 அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவா வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.
யோபு 22:22
23 நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர். அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
யோபு 22:23
24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்து வைப்பீர்.
யோபு 22:24
25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.
யோபு 22:25
26 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
யோபு 22:26
27 நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார். அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
யோபு 22:27
28 நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
யோபு 22:28
இப்படியிருந்தால் இரகசியம் பேசுவார்
[15/11 2:34 pm] Elango: *பவுலுக்கு தேவன் வெளிப்படுத்திய தேவனுடைய இராஜ்யத்தின் இரகசியங்கள்*👇🏻👇🏻
1. யூதர்களின் இரட்சிப்பு
ரோமர் 11:25
[25]மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; *அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.*
2. விசுவாசத்தின் மூலம் பெறும் இரட்சிப்பு
ரோமர் 16:25-26
[25]ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், *சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே* உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,
3. கிறிஸ்துவின் சிலுவை பாடு, உயிர்த்தெழுதல்
1 கொரிந்தியர் 2:7
[7] *உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.*
4. பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதல்
1 கொரிந்தியர் 15:51
[51]இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் *கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.*
5. புறஜாதியராகிய நாமும் தேவனுடைய வாக்குத்தத்திற்க்கு உடன்சுதந்திரரும், உடன்பங்காளிகளுமாக இருக்கிறோம்.
எபேசியர் 3:3
[3]அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
6. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - BODY OF CHRIST
எபேசியர் 5:32
[32]இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
7. கிறிஸ்து நமக்குள் மகிமையின் நம்பிக்கையாக இருப்பது.
கொலோசெயர் 1:27
[27]புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
8. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:16
[16]அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
[15/11 3:04 pm] Elango: *தேவனைப்பற்றிய இரகசியம்*
1. தேவ இரகசியம் குறித்து வெளிப்படுத்தல் 10:6 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
*கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இது நிறைவேறும். மனித சரித்திரத்தில் எல்லாவற்றிற்கும் மேலான தேவநோக்கம் நிறைவேறுவதை இது அறிவிக்கிறது. தமது குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவை இரட்சகராகவும், ராஜாவாகவும் ஏற்படுத்துவதே அந்நோக்கமாகும்.*
2. *தேவ இரகசியம் கீழ்க்கண்டவைகளை உள்ளடக்கியுள்ளது:*
a) ஏதேன் தோட்டத்தில் முதன் முதல் உருவான தீவினையின் பிரச்சனைக்கு தீர்வு உண்டாக்குவது. ஆதாமின் வீழ்ச்சி மனுக்குலத்திற்கும் சிருஷ்டிப்புக்கும் சாபத்தினை கொண்டு வந்தது, சிருஷ்டிகள் மேல் உள்ள சாபம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அகற்றப்படும். வெளிப்படுத்தல் 22:3, ஏசாயா 11:6-9, 6:21, சகரியா 14:11, அப்போஸ்தலர் 3:19-21.
b) *தேவன் மற்றும் மனிதன் கூட்டுறவால் தாவீதின் சிங்காசனம் நிலைநாட்டப்படும்* - ஏசாயா 54:1, மத்தேயு 22:41-46, யோவான் 1:51, 1 கொரிந்தியர் 15:50, 1 தீமோத்தேயு 3:16, எபேசியர் 1:10.
c) நமது மீட்பு மற்றும் நமது சுதந்திரம் நிலைநாட்டப்படுவது முற்றுப்பெறும் மத்தேயு 19:27-30, ரோமர் 8:23, எபேசியர் 1:11, 4:30, 1 யோவான் 3:2.
d) உபத்திரவ காலத்துக்கு முன்பும், ஆயிரவருட ஆழுகை துவங்கும் முன்பும் கிறிஸ்து தோன்றுவது, இராஜ்ஜியத்தை ஆயத்தப்படுத்தி, ஜனங்களை அதில் பிரவேசிக்க வைக்கவே - உபாகமம் 33:2, ஏசாயா 11:11, 1 கொரிந்தியர் 15:51, 1 தெசலோனிக்கேயர் 4:16-18.
e) தெய்வீக பழிதீர்ப்பதும், சத்துருக்களுக்குப் பதில் அளிப்பதும் கர்த்தரின் நாளில் முடிவுபெறும் ஏசாயா 61:2, 63:4, வெளிப்படுத்தல் 1:10.
f) இயேசுக்கிறிஸ்துவின் திறந்த வெளிப்பாடு மேசியாவாகவும், இராஜாவாகவும் அவரது இரண்டாம் வருகையில் இருக்கும், சாத்தான் அந்திக்கிறிஸ்து, பூமியின் ராஜாக்கள் புறக்கணிக்கப்படுவதும், ஆயிர வருட சுபிட்ச ஆழுகை ஆரம்பமும், பரிசுத்தவான்களின் ஜெயகெம்பீரமும் உண்டாகும். - தானியேல் 7:13,14, லூக்கா 10:18, கொலோசெயர் 3:4, 2 தெசலோனிக்கேயர் 1:10, வெளிப்படுத்தல் 20:10.
[15/11 3:30 pm] Jeyanthi Pastor VDM: தேவனுடைய வழியை அறிந்துக் கொண்டால், நம் பாதைகள் செவ்வையாகும்
[15/11 3:33 pm] Jeyanthi Pastor VDM: நீதிமொழிகள் 14:12 மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு: அதின் முடிவோ மரண வழிகள்.
மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு: அதின் முடிவோ மரண வழிகள்.
நீதிமொழிகள் 16:25
[15/11 3:35 pm] Jeyanthi Pastor VDM: 8 தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்: மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
நீதிமொழிகள் 14
[15/11 3:37 pm] Jeyanthi Pastor VDM: 14 பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும்: நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
நீதிமொழிகள் 14
[15/11 3:54 pm] Jeyanthi Pastor VDM: தாவீது 21 கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
சங்கீதம் 18
[15/11 3:56 pm] Jeyanthi Pastor VDM: ஒரு தேவப்பிள்ளை தேவனுடைய வழிகளுக்குத் தன்னை அற்பணித்துக் கொண்டால், தன் சுய வழியில் நடக்க இயலாது
[15/11 3:56 pm] Jeyanthi Pastor VDM: 6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீதிமொழிகள் 3:6
[15/11 3:59 pm] Jeyanthi Pastor VDM: 21 நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
ஏசாயா 30:21
[15/11 4:02 pm] Elango: *தேவ ஆவியானவர் நம்மை அவருக்கு பிரியமான வழிகளில் நடத்தி, அவருக்கு பிரியமான பாத்திரமாக வனைந்து நம்மை மகிமையில் ஏறெடுத்துக்கொள்கிறார்*
1. அவர் ஞானத்தின் ஆவியாய் இருக்கிறார். (ஏசாயா11:2, 40:13-14).
2. *தேவனுடைய காரியங்களை அவர் வெளிப்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 10:13)*
3. கிறிஸ்துவினுடைய காரியங்களை அவர் வெளிப்படுத்துகிறார் (யோவான் 16:14).
4. *சகல சத்தியத்திற்குள்ளும் அவர் வழிநடத்துகிறார் (யோவான் 14:26, 16:13)*
5. ஊழியர்கள் போதிக்க வல்லவர்களாக்குகிறார் (1 கொரிந்தியர் 12:8).
6. உபத்திரவப் படுத்துகிறவர்களுக்கு மறுமொழி கொடுக்க பரிசுத்தவான்களுக்கு போதிக்கிறார். (மாற்கு13:11, லூக்கா 12:12).
7. *தெய்வீக வழிகளில் அவர் வழி நடத்துகிறார் (ஏசாயா30:21, எசேக்கியேல் 36:27).*
8. *கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவுக்கு கொண்டு வருகிறார் (யோவான்14:26).*
[15/11 4:08 pm] Jeyanthi Pastor VDM: Very Fact Amen, we Yong for that
[15/11 4:11 pm] Jayakumar 3 VTT: Yes praise God
[15/11 4:40 pm] Elango: 7⃣ கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். சங்கீதம் 25:14
இரகசியம் என்பது தேவ இராஜ்யத்துக்குரியதாக இருக்கிறது. தேவ இராஜ்யம் என்பது ஆவிக்குரியதாகயிருக்கிறது. தேவ ஆவியினாலே மட்டும் அவைகளை நாம் அறிந்துக்கொள்ள இயலும். மாம்சமும், இரத்தமும் தேவ இராஜ்யத்துக்குரியவைகளை வெளிப்படுத்தாது. பேதுருவிடம் ஆண்டவர் சொன்னார், பரலோகத்திலிருக்கும் என் பிதாவே உனக்கு வெளிப்படுத்தினார் என்று. தான் செய்யப்போகிற காரியங்களை அவருடைய் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்துகிறார். பழைய ஏற்ப்பாட்டில் ஆபிராகமும், ஆதாம்,ஏவாளுக்கு, நோவாவுக்கு, தாவீதிற்க்கு இன்னும் அநேக பரிசுத்தவாங்களுக்கு கிறிஸ்துவைக்குறித்த இரகசியத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் புதிய ஏற்பாட்டில் அப். பவுலுக்கு வெளிப்படுத்திய சபைக்குரித்தும், யூதர்களின் இரட்சிப்பையும் குறித்தும், புறஜாதிகளின் ஆசீர்வாதங்களை குறித்தும், விசுவாசத்தின் மூலம் பெறப்போகும் இரட்சிப்பைக் குறித்தும், இரகசிய வருகையை குறித்தும், நியாயத்தீர்ப்பை குறித்தும் ஆதிகாலங்களில் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிகளுக்கு மறைவாகயிருந்து, அங்கென்றும் இங்கென்றுமாக வெளிப்படுத்தப்பட்டது.
லூக்கா 10:24 *அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.*
*லூக்கா 8:10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது;* மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
மத்தேயு 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, *நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.*
[15/11 4:41 pm] Elango: *வேதத்தில் இரகசியம் என்று சொல்லப்பட்ட வார்த்தைகள்*
1. இரகசியம் என்பதன் கிரேக்கச்சொல் ’முஸ்டேரியன்’ (MUSTERION,) இதன் பொருள், மறைபொருள் அல்லது இரகசியம் என்பதாகும்.
2. புதிய ஏற்பாட்டில் இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது, பழைய ஏற்பாட்டில் வெளிபடுத்தப்படாத சத்தியம் இவைகள் எபேசியர் 3:2-6, ரோமர் 16:25, 26, கொலோசெயர் 1:26, 27
3. இரகசியம் எனக்கூறப்படுவது எப்பொழுதும், சபையின் காலம் அல்லது சபை யுகம் மட்டும், சம்பந்தபட்ட நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எபே. 1:9, 3:2
4. கடந்தகால நித்தியத்தில் இரகசியம் என்பது தெய்வீகத்திட்டத்தின் ஒரு பகுதியாக நியமிக்கப்பட்டு இருந்தது. 1 கொரிந்தியர் 2:7
*5. மிகவும் முக்கியமானவகளான இரகசியங்கள்*
a) பரலோக இராஜ்ஜியத்தை குறித்த இரகசியம்-(மத்தேயு 13:3-52. முக்கியமாக v l1).
b) சபை யுகத்தில் இஸ்ரவேலரின் குருட்டாட்டம் பற்றிய இரகசியம்(ரோமர் 11:25).
c) அக்கிரமத்தின் இரகசியம் - (2 தெசலோனிக்கேயர் 2:7).
d) ஏழு நட்சத்திரங்களை பற்றிய இரகசியம் - (வெளிப்படுத்தல் 1:20).
e) தேவபக்திக்குரிய இரகசியம் - (1 தீமோத்தேயு 3:16).
f) சபை எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறித்த இரகசியம் - (1 தெசலோனிகேயர் 4:14-17, 1 கொரிந்தியர் 15:51,52).
g) மெய் சபைக்குரிய இரகசியம் - ( ரோமர் 16:25, எபேசியர் 3:1-11, எபேசியர் 6:19, கொலோசெயர் 4:3).
h) கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள இரகசியம் - ( எபேசியர் 5:22-32).
i) கிறிஸ்து வாசம் பண்ணுவதைக்குறித்த இரகசியம் - ( கொலோசெயர் 1:26, 27).
j) பிதாவாகிய தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியம் - ( கொலோ 2:2).
k) பாபிலோனைப் பற்றிய இரகசியம் - (வெளிப்படுத்தல் 17:5, 7)
[15/11 4:51 pm] Elango: *தேவ இராஜியத்தின் இரகசியங்கள் பரிசுத்தவாங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, உலகத்தாருக்கும், பெயர் கிறிஸ்தவர்களுக்கும் அந்த ஆவிக்குரிய இராஜ்யம் விளங்காதது, புரிந்துகொள்ள இயலாதது.*
1. பரலோக இராஜ்ஜியம் தேவ இராஜ்ஜியத்திலிருந்து வேறுபட்டது.
a) பரலோக இராஜ்ஜியம்:
i) பரலோக இராஜ்ஜியம் இப்பூமியில் காணும் வகையில் எதிர்கால கர்த்தரின் இராஜ்ஜியமாக இருக்கும் (லூக்கா 1:31-33).
ii) பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது, ஆயிரவருட ஆழுகையில் சரீரப்பிரகாரமாய் உயிருடன் இருந்து அதில் பிரவேசிப்பவர்களையும் உள்ளடக்கியுள்ளாது. (மத்தேயு 13:24-30, 36-43, 47-50).
b) தேவ இராஜ்ஜியம்:
i) தேவ இராஜ்ஜியம் ஆவிக்குரியது (யோவான் 3:3, ரோமர் 14:17, லூக்கா 17:20).
ii) மறுபடி பிறப்பதன் மூலம் தேவ இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கலாம் (யோவான் 3:3-7).
iii)தேவ இராஜ்ஜியத்தின் தெய்வீக அதிகாரம் எல்லா சிருஷ்டிகளின் மீது எல்லா காலங்களிலும் செலுத்தப்படுகிறது. (லூக்கா 13:28, 29, எபிரெயர் 12:22, 23).
2. இராஜா ஓர் கன்னிகையினிடத்தில் பிறப்பார் என தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது (ஏசாயா 7:14 cf மத்தேயு 1:18-25) அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பதும் உரைக்கப்பட்டுள்ளது (மீகா 5:2 cf மத்தேயு 2:1).
3. இராஜ்ஜியம் அப்பொழுதே அறிவிக்கப்பட்டதாய் இருந்தது ( மத்தேயு 4:17), ஆனால் யூதர்களால் ஒழுக்க ரீதியாகவும்
( மத்தேயு 11:20) அரசியல் கண்ணோட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டது ( மத்தேயு 21:42-43). அதன் விளைவு ராஜா முட்கிரீடம் சூட்டப்பட்டார்.
4. அதன் பின்னர் அவர் தனது சபையை கட்டுவதற்கான நோக்கத்தை அறிவித்தார். ( மத்தேயு16:18).
5. சபை மற்றும் பரலோக இராஜ்ஜியம் ஒன்றன்பின் ஒன்றாக இரகசியமாய் காணப்பட்டது - அவை இரண்டும் ஆவிக்குரிய இராஜ்ய சம்பந்தப்பட்டதைக் குறிக்கிறது. (எபேசியர் 3:9-11).
6. இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, அவர் ஆயிர வருட ஆழுகையை, மறு நித்தியம் துவங்குமுன்னர் ஸ்தாபிப்பார். ( மத்தேயு 24:27-30, லூக்கா 1:31-33, அப்போஸ்தலர் 15:14-17, வெளிப்படுத்தல் 20:1-10).
7. ஆயிர வருட ஆழுகையின் இறுதியில், இயேசுக்கிறிஸ்து இராஜ்ஜியத்தை பிதாவின் கரத்தில் ஒப்படைப்பார்.
(1 கொரிந்தியர் 15:24-28).
8. நித்திய சிங்காசனம் தேவனுடையதும், ஆட்டுக்குட்டியானவருடையதுமாய் இருக்கிறது (வெளிப்படுத்தல் 22:1).
[15/11 5:26 pm] Elango: 4⃣ *என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்;* கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.சங்கீதம் 25:7

[15/11 5:33 pm] Jeyanthi Pastor VDM: இல்லை, ஆனால் பாடுகள் அப்படி சிந்திக்க வைத்தது
[15/11 5:41 pm] Jeyanthi Pastor VDM: 10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
சங்கீதம் 103:10
11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
சங்கீதம் 103:11
12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
சங்கீதம் 103:12
[15/11 5:42 pm] Jeyanthi Pastor VDM: 19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மீகா 7:19
[15/11 5:46 pm] Jeyanthi Pastor VDM: 👆🏻👆🏻👆🏻 இப்படிப் பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கிருப்பதால் திடன் கொள்ளுகிறோம்
[15/11 5:47 pm] Jeyanthi Pastor VDM: 22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
ஏசாயா 44:22
[15/11 5:48 pm] Jeyanthi Pastor VDM: 34 இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை, அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
எரேமியா 31
[15/11 5:50 pm] Jeyanthi Pastor VDM: 14 வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
எபிரேயர் 4:14
15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
எபிரேயர் 4:15
16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எபிரேயர் 4:16
[15/11 5:57 pm] Jeyanthi Pastor VDM: பாவிக்குப் புகலிடம் இயேசு ரட்சகர்
[15/11 5:58 pm] Jeyanthi Pastor VDM: 28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரேயர் 9:28
[15/11 6:00 pm] Elango: யோபுவும் இதேப்போல வார்த்தைகளே பேசுவாரே...
தேடுகிறேன் வசனம் கிடைக்கவில்லை...
[15/11 6:15 pm] Elango: யோபு 10:5
[5] *நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,*
யோபு 7:21
[21] *என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?* இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.
[15/11 6:18 pm] Elango: நாமும் உபத்திரத்தின் வழியாக கடந்து போனால், இப்படிதான் புலம்புவோமோ?😰🤔🙄
[15/11 6:19 pm] Jeyanthi Pastor VDM: ம். தானாகவே வந்துவிடும். ஆனால், பாவ மன்னிப்பின் நிச்சயம் வேண்டும்
[15/11 6:21 pm] Soumraj Pastor VTT: (Romans 8:-1) we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
[15/11 6:21 pm] Jeyanthi Pastor VDM: 9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம், மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
ரோமர் 6:9
10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார், அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
ரோமர் 6:10
11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6:11
12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
ரோமர் 6:12
[15/11 6:40 pm] Elango: ஆதியாகமம் 45:5
[5]என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
ஆதியாகமம் 50:20
[20] *நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.*
[15/11 6:42 pm] Elango: தேவன் நமக்கு விழத்தள்ளுகிற பிரச்சனையை தருவதில்லை, உருவாக்குகிற பிரச்சனைகளையே அனுமதிக்கிறார்.
அருமை👍👍
[15/11 6:49 pm] Elango: 👍👍
எசேக்கியேல் 18:2-4
[2]பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன?
[3] *இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.*
[4]இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; *பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.*
[15/11 9:47 pm] Elango: 1. *கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.*சங்கீதம் 25:1
*நாம் தேவனை ஆராதனை செய்யும் பொழுதோ, ஜெபிக்கும் போதோ நம் கைகளையும், கண்களை மட்டுமல்ல, நம் இருதயத்தையும் தேவனுக்கு நேராக உயர்த்த வேண்டும்.உண்மையான ஜெபம் என்பது நம்முடைய ஆத்துமாவை பூமியிலிருந்து உயர்த்தி பரலோக தேவனோடு ஐக்கியக்கொள்ளுவதே ஆகும்.*
தாவீது ஒரு நல்ல ஆராதனை ஜெப வீரன். அவருக்கு தெரியும் எப்படி ஜெபிக்க வேண்டும்.
ஒத்தாசை வரும் பர்வத்தை நோக்கி தன் ஆத்துமாவை உயர்த்துகிறார்.
பல சூழ்நிலையில் நாம் இந்த உலக கவலைகளோடும், துக்கத்தோடு, உலக ஆஸ்திகளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் போதும், போராட்ட சூழ்நிலையில் இருக்கும் போதும் நம் ஆத்துமா மண்ணோடு மண்ணோடு ஒட்டிக்கொள்ளும்... சோர்ந்து போகும்... இதற்கு ஜெபமே நம் ஆத்துமாவுக்கு இறகுகளை முளைக்க செய்து சிறகடித்து தேவனிடம் வரை உயர உதவிசெய்து தேவனோடு ஐக்கியக்கொள்ள செய்கிறது.
*எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.சங்கீதம் 44:25*
*என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.* சங்கீதம் 119:25
கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
சங்கீதம் 25:1 - வேறொரு மொழிபெயர்ப்பில்... 👆
[15/11 10:04 pm] Elango: 1. *கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.*சங்கீதம் 25:1
பெரும்பாலும், சங்கீத்த்தில் தாவீது ஜெபத்திலும், விண்ணப்பத்திலும் தேவனிடம் கதறுவது நாம் பார்க்கலாம்.
ஜெபம் என்பது ஒரு கட்டிட பொறியாளர் கட்டிடத்தை கட்டுவது போன்றது. அவர் முதலில் அடித்தளம் போடுகிறார், பின்பு மறுநாள் வருகிறார், அடுத்த நாள் வருகிறார்... அந்த கட்டிடத்தை ஒரே நாளில் முடித்துவிட முடியாது, தினந்தோறும் அவர் வந்துக்கொண்டே இருப்பார் அந்த கட்டிடம் நேர்த்தியாக கட்டி முடிக்கும்வரையில்... இதுபோலவே ஜெபம் என்பதும் நம் ஆத்துமாவானது பரலோகம் வரை போகும்வரை, தேவனிடம் வரை சென்றடையும் வரையில் நாம் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஜெபம் என்பது வாய் மட்டும் தொடர்புடையதாக இருக்கக்கூடாது, ஆவியானவர் வாசம் செய்யும் இருதயமும் அதோடு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
*இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;* அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.ஏசாயா 29:13
[15/11 10:14 pm] Elango: நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார், நீயோ ஜெபம் பண்ணும்போது வீட்டுக்குள் பிரவேசித்து, கதவை பூட்டி,அஞ்ஞ்சானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாமலும், அந்தரங்கத்தில் இருக்கிற உங்கள் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு என்று... மத்தேயும் 6:6-7
*40. நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.41. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.* புலம்பல் 3:40-41
எரேமியா சொல்லுகிறார் - நம் கைகளோடுங்கூட இருதயத்தையும் தேனிடமாக உயர்த்துவோமாக என்று....
[15/11 10:17 pm] Elango: 1. *தேவன் கொடுக்கிறவர் என்பதை நாம் அறிந்து இருக்கலாம், ஆனால் நாம் அவருடன் சரியான தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால்தான் அவர் கொடுப்பதை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.*
a) ஜெபம் என்பது ஒரு விசுவாசி தேவனுடன் தொடர்பு கொள்ளும் வழிமுறையாய் இருக்கிறது.
b) பரிசுத்த வேதாகமம் தேவன் மனிதனுடன் தொடர்புகொள்ளும் வழியாய் இருக்கிறது.
[15/11 10:18 pm] Elango: *2. ஜெபத்தில் அடங்கியுள்ள வாக்குத்தத்தங்கள்*
a) மத்தேயு 21:22 விசுவாசத்துடன் நாம் கேட்கவேண்டும்.
b) மத்தேயு 18:19 குழுவாய் ஜெபித்தலின் வல்லமை.
c) சங்கீதம் 116:1,2. தேவன் எப்பொழுதும் நமது ஜெபத்தை கேட்கிறவராய் இருக்கிறார்.
d) ஏசாயா 65:24 நாம் ஜெபிக்கும்பொழுது தேவன் பதில் அளிப்பவராய் இருக்கிறார்.
e) மத்தேயு 7:7 நாம் ஜெபிக்க கட்டளை பெற்று இருக்கிறோம்.
f) யோவான் 14:13-14 அவரது நாமத்தினால் நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.
g) பிலிப்பியர் 4:6 ஜெபம் நன்றி செலுத்துதலுடன் இருக்க வேண்டும்.
h) 1 தெசலோனிக்கேயர் 5:17 நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்.
i) எபிரெயர் 4:16 நாம் தைரியமாய் கிருபாசனத்தண்டைக்கு வர முடியும்.
[15/11 10:18 pm] Elango: *3. ஜெபம் நான்கு பகுப்பாய் பிரிக்கப்படுகிறது*
a) பாவங்களை அறிக்கை செய்தல் (1 யோவான்1:9).
b) நன்றி செலுத்துதல் (1 தெசலோனிக்கேயர் 5:18).
c) மற்றவர்களுக்காய் பரிந்து பேசுதல் (எபேசியர் 6:18).
d) ஒருவரின் சுயத்தேவைகளுக்காய் விண்ணப்பித்தல் (எபிரெயர் 4:16).
[15/11 10:18 pm] Elango: *4. ஜெபத்தின் வல்லமை:*
a) தனிப்பட்ட நிலையில் - எலியாவும் சர்வாங்க தகனபலியும். (1 இராஜாக்கள்18:36-39).
b) கூடி ஜெபித்த பொழுது - சிறைச்சாலையிலிருந்து பேதுரு விடுவிக்கப்படுதல். (அப்போஸ்தலர்12:1-18).
[15/11 10:37 pm] Elango: 3⃣ கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். சங்கீதம் 25:4
தேவனுடைய வழிகளை நாம் எப்படியெல்லாம் அறிந்துக்கொள்ளலாம்❓
*இரண்டு வழிகள் உண்டு.*
ஒன்று மனிதனின் சுயமாக தெரிந்துக்கொள்ளப்பட்ட வழிகள், மற்றொன்று தேவனுடைய வழி.
பாவ வழி, நீதியின் வழி
பரலோகத்தை நோக்கி போகும் வழி, நரகத்தை நோக்கி போகும் வழி
.....
இப்படியாக இருவழிகள் எப்போதும் இருக்கிறது.
மனுஷனுக்கும் செம்மையாக தோன்றும் வழி அவன் கண்ணுக்கு நல்லதாக தெரியும், ஆனால் அது மரண வழியாக இருக்கும். ஆனால் கர்த்தருடைய வழியோ இடறிலில்லதாது, ஒரு தீங்கும் இல்லாதது, அது நம்மை பரலோக பாதையில் நடத்த செய்யும்.
பரலோக தேவனுக்கு மறைவானது ஒன்றும் கிடையாது, அவரிடம் நாம் கேட்டு நடக்கும் போதும் அவர் நம்மை சத்திய பாதையில், நீதியில் நடத்துவார்.
நாம் தேவனுடைய வழியில் நடக்க அவரோடு ஒருமனம் படவேண்டும், அவருடைய ஆவியில் நாம் நடத்தப்பட வேண்டும்.
*இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ? ஆமோஸ் 3:3*
[15/11 10:43 pm] Elango: *தேவனுடைய வழிகளை நாம் எப்படியெல்லாம் அறிந்துக்கொள்ளலாம்❓*
- வேத வசனங்களை படித்து, தியானிப்பதன் மூலம்
- பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை கேட்பதன் மூலம்
- தேவ ஆவியினால் தீர்க்கதரிசனத்தை கேட்டு உணர்த்துப்படுவதன் மூலம்
- ஜெபத்தில் அமர்ந்திப்பதன் மூலம்
[15/11 10:52 pm] Elango: *தேவன் சகலத்தையும் அறிகிறவர், அவரின் வழிகளை நாம் அறிந்து அதில் நடக்கும் போதும் நாம் பாதைக்கு வெளிச்சமாக தேவனுடைய வேதமே நமக்கு உதவும்.*
தேவன் நமது வேதனைகளை அறிகிறவர் (யாத்திராகமம்3:7)
தேவன் நமது தியானங்களை அறிகிறவர் (2 நாளாகமம்16:9)
தேவன் நமது சிந்தனைகளை அற்கிறவர். (சங்கீதம்44:21)
தேவன் நமது புத்தியீனங்களை அறிகிறவர். (சங்கீதம் 69:5)
தேவன் நமது உருவம் இன்னதென அறிபவர் ( சங்கீதம் 103:14)
தேவன் நமது கிரியைகளை அறிபவர் ( சங்கீதம் 139:2)
தேவன் நமது வார்த்தைகளை அறிகிறவர் (சங்கீதம் 139:4)
தேவன் நட்சத்திர இலக்கங்களை எண்ணி பெயரிடுபவர் (சங்கீதம் 147:4)
எல்லா காரியங்களையும் அறிபவர் (நீதிமொழிகள்15:3)
தேவன் நமது தேவைகளை அறிபவர்: (மத்தேயு6:32)
மனுக்குலத்தை அறிபவர் ( மத்தேயு10:30)
என்ன நடக்கவிருக்கிறது அல்லது அது எப்படியிருக்கப்போகிறது என்பதை அறிகிறவர் (மத்தேயு 11:23)
தமக்கு சொந்தமானவர்களை அறிகிறவர். (யோவான்10:14)
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறிபவர் (அப்போஸ்தலர் 15:18)
ஆகவே எல்லாம் தெரிந்த தேவனுடைய வழியில் நம்மை ஒப்புவித்து, அவரே சார்ந்து வாழ்வோமாக!
[15/11 11:07 pm] Elango: 4⃣ என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.சங்கீதம் 25:7
தேவன் நம் பழைய பாவங்களை நினைப்பவரா❓
*இங்கு தாவீது பட்சேபாளின் சம்பவத்தை நினைவுகூறுவதாக சொல்லப்படுகிறது, அதுவே அவரை மிகவும் பாதித்தது. ஆனால் அவர் மனந்திரும்பினார், தேவன் தாவீதிற்க்கு இரக்கம் காட்டினார். 2 சாமூவேல் 11:1-12:13*
நாம் தேவன் நம் பாவங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நமக்கு மன்னிக்கிறவராக இருக்கிறார். பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.
I யோவான் 1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; *அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.*
I யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
சங்கீதம் 103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
ஏசாயா 43:25 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; *உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்*
ஏசாயா 44:22 *உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்;* என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
மீகா 7:19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
[15/11 11:14 pm] Elango: *நம் பாவத்திற்க்கு தக்க தண்டனை கொடுப்பவரா❓*
இல்லை! ஆனால் சிட்சை உண்டு. I கொரிந்தியர் 11:32 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
*அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்* சங்கீதம் 103:10 என்கிறது வேதம், அவர் நமக்கு மன்னிக்கிற தேவனாகயிருந்தாலும் நாம் பாவத்தை விட்டு ஒழியும் வரை நம்மை சிட்சிக்க தேவனாக இருக்கிறார்.
நீதிமொழிகள் 11:31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்
எபிரெயர் 12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
*வெளி 3:19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.*
எரேமியா 30:14 உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், *உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.*
எரேமியா 30:15 உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? *திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.*
[15/11 11:14 pm] Elango: எபிரெயர் 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
*எபிரெயர் 10:17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்*
[16/11 9:32 am] Elango: கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் *பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.சங்கீதம் 25:8*
தேவன் அன்பாயிருக்கிறார், அவர் நீதியுள்ள தேவன், பராபட்சம் காட்டாத பரம் தகப்பன், ஒருவரையும் புறக்கணியாதவர், ஒருவரையும் கெட்டுப்போகட்டும் என்று விட்டு விடாதவர். அவர் பாவிகளின் மேல் சினங்கொள்ளுகிற தேவனாயிருந்தாலும், அவர் மனந்திரும்பும் போதும், பரலோகத்தில் மிகுந்த சந்தோஷப்படுகிறார்கள். ஆகவே பாவிகளுக்கும் மனந்திரும்ப வாய்ப்பளிக்கிறார். பாவிகளுக்கும் அவர் சத்தியத்தையும், நீதியையும், ஜீவனையும், சமாதானத்தையும் தெரிவிக்கிறார்.
*அவருடைய வழியை கேட்டு அவருக்கு செவிக்கொடுக்கிறவன் பயமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.* சங்கீதம் 1:33
[16/11 9:32 am] Elango: *சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.சங்கீதம் 25:9*
*சாந்தகுணமுள்ள என்ற வார்த்தை முதல் முறையாக எண்ணாகமம் 12:3 ல் மோசேயை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.* மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.எண்ணாகமம் 12:3
புதிய ஏற்பாட்டில் ஆவியின் கனியில் ஒன்று சாந்தம் கலாத்தியர் 5:23. இந்த சாந்தகுணமானது பரிசுத்த ஆவியின் படி நடக்கிறவர்களுக்கே உரியது. கலாத்தியர் 5:25, தேவனை பின்பற்றுகிறவர்களும், எபேசியர் 5:1, ஒளியின் பிள்ளைகளாக நடப்பவர்களுக்கும் எபேசியர் 5:8இந்த குணம் உரியது. இந்த வார்த்தையானது விசேஷமாக தேவனோடு விசுவாச ஐக்கியத்தை கொண்டிருப்பவர்களே இப்படிப்பட்ட சாந்தகுணத்தை பெற்றிருப்பர்.
[16/11 9:33 am] Elango: *சாந்தகுணமுள்ளவர்கள் தாழ்மையை தங்களில் தரித்திருப்பார்கள்.*
1. தாழ்மைத் தேடப்படவேண்டிய ஒன்று. செப்பனியா 2:3.
2. தாழ்மை காணப்படுகிற வரையறையில் இருக்கிறது லூக்கா 6:28-29.
3. பரிசுத்த ஆவியானவரால் தாழ்மை உருவாக்கப்படுகிறது. கலாத்தியர் 5:22-23.
4. போதனையில் தாழ்மை அவசியமான ஒன்று 2 தீமோத்தேயு 2:25.
5. கற்றுக்கொள்ளுதலில் தாழ்மை அவசியமான ஒன்று யாக்கோபு 1:21.
6. தாழ்மை தேவனுக்கு விலையேறப்பட்டது. நீதிமொழிகள் 3:34; யாக்கோபு 4:6, 1 பேதுரு 5:5.
7. தாழ்மை மேன்மைக்கு வழியாய் இருக்கிறது 1 பேதுரு 5:6.
8. தாழ்மை தன்னைத்தானே சோதித்தறிகிறது ரோமர் 12:3.
*9. தாழ்மைக்கு முன்மாதிரிகள்:*
a) மோசே - எண்ணாகமம் 12:3.
b) தாவீது - 2 சாமுவேல் 16:11.
c) எரேமியா - எரேமியா 26:14.
d) ஸ்தேவான் - அப்போஸ்தலர் 7:60.
e) பவுல் - 2 தீமோத்தேயு 4:16.
*10. தாழ்மைக்குறிய அறிகுறிகள்:*
a) மற்றவர்களைத் தாங்குதல் - எபேசியர் 4:2,6:9, கொலோசெயர் 3:13.
b) துன்பங்களை சகித்தல் - 1 கொரிந்தியர் 13:7, யாக்கோபு 1:12.
c) மனதுருக்கம் - 1 தெசலோனிக்கேயர் 2:7.
d) சமாதானமாயிருத்தல் - யாக்கோபு 3:17.
11. தாழ்மை கிறிஸ்துவின் ஆரம்ப குணாதிசயமாய் இருந்தது. - ஏசாயா 53:7, மத்தேயு 11:29, 21:5.
12. தாழ்மையுள்ளவர்களுக்குரிய வாக்குத்தத்தம் - சங்கீதம் 22;26, 37:11, 147:6, ஏசாயா 29:19.
[16/11 9:33 am] Elango: *சங்கீதம் 25 சுருக்கவுரை*
*வசனங்கள் 25:1,15* - ஜெபம் செய்கிற நிலை
*வசனங்கள் 25:6,7,11,18* - நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம் மன்னிப்பிற்க்காக ஜெபிக்க வேண்டும்
*வசனகள் 25:4-5* - தேவனுடைய வழியை நாம் அறிந்துக்கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும்.
*வசனங்கள் 25:8-14* - தேவனின் கருணை, கிருபை சொல்லி நாம் ஜெபித்தல் வேண்டும்.
*வசனங்கள் 25:16-17* - நம்முடைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்க ஜெபிக்க வேண்டும்
*வசனங்கள் 25:2,3,19-21* - சத்துருக்களிடமிருந்து பாதுகாப்புக்காக ஜெபித்தல் அவசியம்
*வசனங்கள் 25:22* - தேவனுடைய சபையின் இரட்சிப்புக்காக நாம் ஜெபித்தல் வேண்டும் .
[16/11 9:34 am] Elango: *கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்* சங்கீதம் 25:14
கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு அவர் தம்முடைய உடன்படிக்கை வார்த்தைகளை, அவரது வழிகளை, ஆவிக்குரிய இரகசியங்களை தெரிவிக்கிறார், அவர்களோடு வாசம் செய்கிறார். யோவான் 23-26., அவர்களுக்கு அவரது கற்பனைகளை போதிக்கிறார், அவர்கள் அதை கைக்கொள்ளும்படி அவர்களை ஆவியினால் நிரப்பி, அவர்களின் இருயத்தை விசாலாமாக்கி கற்பனைகளின் வழியே ஓட செய்து அவர்களை நீதியின் பாதையில் நடத்துகிறார்.
*தேவனுக்கு பயந்தவர்களுக்கு தேவன் கிருபை செய்கிறார். இந்த பயமானது பயந்து நடுங்குவது அல்ல, பிசாசுகளும் தேவனுக்கு பயந்து நடுங்குகின்றன. ஆனால் இந்த பயம் என்பது தேவனுக்கு கனம், மகிமை செலுத்துவது, அவரது செவி சாய்த்து, அவரது வழிகளில் நடப்பவர்களை குறிக்கிறது.*
சங்கீதம் 132:12 உன் குமாரர் *என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால்,* அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
*கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்,* அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. *அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.* சங்கீதம் 103:17-18
சங்கீதம் 25:10 கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
[16/11 9:35 am] Elango: யோபு 13:26
[26]மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; *என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.*

Post a Comment
0 Comments