[14/11 10:27 am] Elango: 🎷🎻 *இன்றைய ( 14/11/2017) வேத தியானம் - சங்கீதம் 24* 🎷🎻
1⃣ சங்கீதம் 24 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 24 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 24:7
[7] *வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்;* மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்.
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
4⃣ சங்கீதம் 24:1
[1] *பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை.*
வசனம் இப்படியிருக்க,👆🏻 *இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தானை ஏன் வேதம் காட்டுகிறது❓யோவான் 14:30, 2 கொரிந்தியர் 4:4*
5⃣ மத்தேயு 4:8-9
[8]மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
[9]நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், *இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்* என்று சொன்னான்.
சகலமும் கர்த்தருடையதும், கர்த்தருக்கு சொந்தமாகவும் இருக்கையில், *இவைகளையெல்லாம்* உனக்கு தருவேன் என்று அவைகள் தன்னுடையது போல சாத்தான் ஏன் கூறுகிறான்❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[14/11 11:17 am] Elango: 1⃣ சங்கீதம் 24 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
*எழுதியவர்* - தாவீது அல்லது மற்றவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
*எழுதப்பட்ட சூழ்நிலை* - கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து, தாவீதின் நரகத்திற்க்கு கொண்டு வந்தபோது எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
II சாமுவேல் 6:12 *தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்*
[14/11 11:28 am] Elango: *சங்கீதம் 24 சுருக்கவுரை*
*வசனம் 1 -2* - கர்த்தருடைய படைப்புகளையும், அவரின் ஆளுகையையும் பேசப்படுகிறது.
*வசனம் 3-6* - யார் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியுடையவன்
*வசனம் 7-10* - நம் இருதய கதவை திறந்து, கிறிஸ்துவை நம் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக அறிவுரை
*கர்த்தவத்துவத்தை குறித்தும், மேசியாவைக் குறித்தும், சபையைக் குறித்தும், அதின் அவயவங்களைக் குறித்தும் தாவீது, தேவ ஆவியினாலே தீர்க்கதரிசனமாக பேசுகிறார்.*
[14/11 11:40 am] Elango: 1. கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
2. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
3. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
4. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. *சங்கீதம் 15: 1-5*
*சங்கீதம் 24:3-4 வசனங்களை ஒத்த வசனங்கள் சங்கீதம் 15 அதிகாரத்தில் காணலாம்.*
[14/11 11:45 am] Elango: 2⃣ சங்கீதம் 24 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
சகல அண்டா சராசரங்களையும் கர்த்தர் தம்முடைய வார்த்தையினாலே உண்டாக்கினார் என்பதையும், உலகத்தார் சொல்லுகிறபடி இந்த உலகம் உண்டாக்கப்படவில்லை என்பதையும், கர்த்தர் இந்த உலகத்தை ஆளுகிறவர், அவரே இந்த பூமிக்கு இராஜா என்பதையும் நமக்கு போதிக்கிறது.
அவர் சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்பதையும், நம்க்கு முழு பாதுகாப்பையும் நித்தியத்தையும் நமக்காக இன்னொரு உலகத்தையும் வைத்திருக்கிறார் என்பதையும் அந்த உலகத்திற்க்கு பிரவேசிக்க நாம் தகுதியுள்ளவர்களா என்பதை நாம் நிதானித்தறிய வேண்டும்.
கைகளில் சுத்தமுள்ளவனும்...
இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து...
தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும்...
கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே...
இப்படிப்பட்ட தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்பதையும், நாம் தேவ இராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியானாவர்களா? என்பதையும் நாம் அராய்ந்து நிதானித்து அறிய வேண்டும்.
[14/11 12:13 pm] Jeyanthi Pastor VDM: 6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
ஏசாயா 4:6
[14/11 12:15 pm] Jeyanthi Pastor VDM: சங்கீதம் 61:4 நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன், உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 27:5
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
ஏசாயா 4:6
கர்த்தருடைய கூடாரத்தில் கிடைக்கும் அடைக்கலம், பாதுகாப்பு, deliverance,
இவைகளை பெற்றுக் கொள்ள 24 சங்கீதத்தின் திவ்ய சுபாவங்கள் காணப்பட வேண்டும்.
[14/11 12:27 pm] Jeyanthi Pastor VDM: மனதார சத்தியத்தை பேசுவதில் சற்று நேரம் தியானிப்போமா பாஸ்டர்,?
[14/11 12:34 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தர் கொடுக்கிற சத்தியங்களை மறைக்கலாமா?
சங் 40: 10 உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை, உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன், உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
ஆம், கர்த்தர் உணர்த்தும் சத்தியத்தை, நீதியை நாம் மறைத்து வைக்க கூடாது, மனதார சத்தியத்தை பேசும்போது நமக்கும் விடுதலை. கேட்பவர்களுக்கு ஆவி உயிர்ப்பிக்கப் படும்
[14/11 12:36 pm] Elango: அப்போஸ்தலர் 20:26-27
[26] *தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,*👇🏻👇🏻👇🏻
[27]எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
[14/11 12:36 pm] Jeyanthi Pastor VDM: பவுல் மறைக்கவில்லை.
24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
அப்போஸ்தலர் 20:24
25 இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ;யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்வர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:25
26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,
அப்போஸ்தலர் 20:26
27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி, நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:27
28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
அப்போஸ்தலர் 20:28
[14/11 12:38 pm] Jeyanthi Pastor VDM: PS 15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
சங்கீதம் 71:15
16 கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன், உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
சங்கீதம் 71:16
17 தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
சங்கீதம் 71:17
18 இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.
சங்கீதம் 71:18
[14/11 12:39 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தருடைய பராக்கிரமத்தை அறிவிக்க நம் காலங்களை கர்த்தர் இந்த வாழ்க்கையில் கூட்டி தர வேண்டும்.
[14/11 12:44 pm] Jeyanthi Pastor VDM: 11 தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன். சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
யோபு 27:11
யோபு
👆🏻👆🏻
[14/11 12:46 pm] Elango: *அநாதி* கதவுகள் என்றால் என்ன அர்த்தம்? எதை குறிக்கிறது?
[14/11 12:48 pm] Jeyanthi Pastor VDM: 8 அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
யாத்திராகமம் 13:8
14 பிற்காலத்தில் உன் குமாரான்: இது என்ன என்று உன்னைக் கேட்டால், நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
யாத்திராகமம் 13:14
16 கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.
யாத்திராகமம் 13:16
[14/11 12:57 pm] Jeyanthi Pastor VDM: 1 அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு, இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.
ஏசாயா 26:1
2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
ஏசாயா 26:2
15 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
சங்கீதம் 118:15
19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள், நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
சங்கீதம் 118:19
20 கர்த்தரின் வாசல் இதுவே, நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
சங்கீதம் 118:20
👆🏻👆🏻👆🏻👆🏻 அநீதி கதவுகள்
[14/11 1:00 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தரைத் தேடி விசாரித்து நாட வேண்டிய இடம். அதாவது நாம் அங்கே, அவருடைய கூடாரத்தில் ஏற, தங்க, அவரோடு நிலைத்திருக்க, கர்த்தருடைய சமுகத்தை வாஞ்சையோடு தேட வேண்டும்.
[14/11 3:47 pm] Elango: வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், கர்த்தருடையவைகள். உபாகமம் 10:14
மேலும் நாம் கூட நமக்கு சொந்தமானவர்கள் அல்ல, நம்முடைய ஆத்துமா, சரீரமும் கர்த்தருடையதே.
1 கொரிந்தியர் 6:19
[19]உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், *நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?*
கர்த்தரை அறியாதவர்களும், அவரோடு ஐக்கியமில்லாதவர்கள் கூட அவருடையவர்களே...அவருடைய படைப்புகளே..
[14/11 3:47 pm] Elango: கொலோசெயர் 1:16
[16]ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் *அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.*
[14/11 6:54 pm] Jeyanthi Pastor VDM: 15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,
ஏசாயா 33:15
16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான், கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும், அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும், அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.
ஏசாயா 33:16
17 உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.
ஏசாயா 33:17
[14/11 7:06 pm] Jeyanthi Pastor VDM: அநாதி கதவுகள் sorry
[14/11 7:35 pm] Elango: சங்கீதம் 24:1-2
[1]பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை.
[2]ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக *ஸ்தாபித்தார்.*
*சிருஷ்டிப்பை குறித்து வேதாகமம் நமக்கு போதிக்கும் சத்தியம்*
*ஆதியிலே தேவன் வானத்தையும்👈 பூமியையும்👈 சிருஷ்டித்தார்.* ஆதியாகமம் 1:1
a) *ஆதியிலே தேவன் - தேவன் இருக்கிறார்* என்பதைக் காட்டுகிறது. - இது நாஸ்திக கொள்கையாகிய தேவன் இல்லை என்பதை எதிர்க்கிறது,
b) *தேவன் சிருஷ்டித்தார் இது- நித்திய சிருஷ்டிகரைக் காட்டுகிறது. மற்ற வேதபகுதிகளில் சிருஷ்டிகர் இயேசுக்கிறிஸ்து என அறிகிறோம் கொலோசியர்1:16 இது பலதெய்வ கோட்பாடுகளை எதிர்க்கிறது.*
c) *வானங்களும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்டன* - இது பரிணாம- வளர்ச்சியை எதிர்க்கிறது, எல்லா வஸ்துகளும் தேவனால் சிருஷ்டிக்கப்படவை.
d) *தேவன் சிருஷ்டித்தார்* - இது சர்வவல்லமையை விவரிக்கிறது அல்லது தேவனின் சர்வ சக்தியை காட்டுகிறது, இது எல்லாம் கடவுள் என்கிற கோட்பாடை எதிர்க்கிறது, மற்றும் எல்லாவற்றையும் ஆராதிக்கும் முறையை எதிர்க்கிறது.
e) *தேவன் சிருஷ்டித்தார்* - இது தேவனுடைய சுயாதீனத்தையும், அவரது சித்தத்தையும் விவரிக்கிறது, விதியின் மேல் நம்பிக்கை வைப்பதை எதிர்க்கிறது.
f) எல்லாம் இயற்கையே என்பதை எதிர்க்க, இவ்வசனத்திற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடு அவசியப்படுகிறது, இயற்கை மற்றும் பௌதீக விதிகள் தெய்வீக வெளிப்பாடின்றி, விவரிக்க போதுமானதாய் இருக்கிறது.
g) இவ்வசனம் விசுவாசத்தை உரிமைபாராட்டுகிறது, இது மனித தகுதிக்கு அப்பாற்பட்டது, பகுத்தறிவு வாதத்தையும், அனுபவ வாதத்தையும் எதிர்க்கிறது.
h) இவ்வசனம் மனிதனின் உதவியற்ற நிலையை சுட்டிக் காண்பித்து, மனிதக்கிரியைகள்,h அல்லது நற்கிரியைகள் மூலம் இரட்சிப்பை அடைவது போன்றவற்றிற்கு எதிர்த்து நிற்கிறது.
[14/11 8:37 pm] Elango: 5⃣ மத்தேயு 4:8-9

[9]நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
சகலமும் கர்த்தருடையதும், கர்த்தருக்கு சொந்தமாகவும் இருக்கையில், இவைகளையெல்லாம் உனக்கு தருவேன் என்று அவைகள் தன்னுடையது போல சாத்தான் ஏன் கூறுகிறான்❓
சாத்தான் வஞ்சிக்கிறவன், பொய்க்கு பிதா அவன், மோசம்போக்குகிறன், நம்மை ஏமாற்றுகிறவன், இந்த உலக ஐசுவரியத்தையும், உலக பொருட்களையும், இச்சையான காரியங்களை காட்டி நம்மை தேவனுக்கு விரோதமாக திருப்பி அவன் பக்கமாக வஞ்ச்சிக்கிறவன்.
சாத்தனையும தேவன் படைத்தவராக இருக்க( அதாவது அவனை தூதனாக படைத்தார், ஆனால் அவன் தன் மேட்டிமையினால் விழுந்துப்போனான் ), சாத்தான் எப்படி படைப்புக்கு அதிகாரியாக மாறமுடியும்? சாத்தானுக்கு சிருஷ்டிக்க அதிகாரம் இல்லை.
சகலத்தையும் தம் வார்த்தையினாலே படைத்தது நம் தேவன் மட்டுமே அவரே சகல் சிருஷ்டிகளுக்கும் காரணர், சிருஷ்டிகர்.
நீதிமொழிகள் 16:4 *கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்;* தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
எரேமியா 10:12 *அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி,* பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
ஆதியாகமம் 1:1 *ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.*
[14/11 8:54 pm] Elango: 4⃣ சங்கீதம் 24:1
[1] பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை.
வசனம் இப்படியிருக்க,👆🏻 இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தானை ஏன் வேதம் காட்டுகிறது❓யோவான் 14:30, 2 கொரிந்தியர் 4:4
வானத்திலும், பூமியிலும் நம் உயிர்ந்தெழுந்த ஆண்டவருக்கு சகல அதிகாரமும், கொடுக்கப்பட்டிருக்கிறது.மத்தேயும் 28:18 பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாக நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் 1:5
சாத்தான், தேவனுக்கு விரோதமாகவும், தேவ பிள்ளைகளுக்கு✅ விரோதமாக திட்டம் தீட்டி செயலபடுத்த முயன்றாலும், தேவன் அவற்றையெல்லாம் அவருடைய திட்டத்தை நிறைவேற்றவே அவனை பயன்படுத்துகிறார். சாத்தான் எவ்வளவு தான் முயன்றாலும் கடைசியில் தேவனுடைய திட்டத்தையே, சித்ததையே நிறைவேற்றுகிறானாக காணப்படுகிறான்.
*தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.* வெளிப்படுத்தின விசேஷம் 17:17
5. *என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.* 6. அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
7. அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான். ஏசாயா 10:5-7
கடைசியில் சாத்தானின் இராஜ்யத்தை வேரோடு வெட்டுவார்.
[14/11 9:04 pm] Elango: *உலகம் சாத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிறது*
👿 உலகை ஆழுபவன். யோவான் 12:31; 14:30; 16:11
👿இப்பிரபஞ்சத்தின் தேவன் என்னப்படுகிறவன் 2 கொரிந்தியர் 4:4
👿அவன் உலகை மோசம்போக்குகிறவன். வெளிப்படுத்தல் 12:9
👿சாத்தான் தனது பொய் உபதேசங்களினாலே இவ்வுலகை நிரப்புகிறான். 1 Tim 4:1
*இயேசுக்கிறிஸ்து இப்பூமியை சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1; ஏசாயா 45:18 அதன் ஆதிக்கத்தை மனிதர் கையில் கொடுத்தார். ஆதியாகமம் 1:28*
மனிதன் வீழ்ந்து போனபடியால் அதை இழந்து போனான் ஆதியாகமம் 3:6
👿பாவமும் ஆவிக்குரிய மரணமும் இவ்வுலகில் சாத்தானின் ஆதிக்கத்தின் அடிப்படையாக இருக்கிறது.
✝இதினிமித்தம், தேவன் இவ்வுலத்தில் அன்பு கூர்ந்து ஒரு இரட்சகரை தந்தருளினார். யோவான் 3:16, கிறிஸ்து இவ்வுலகின் ஒளியாய் இருக்கிறார். யோவான் 8:12; 9:5
✝இதினிமித்தம் கிறிஸ்து இவ்வுலக இரட்சகராய் இருக்கிறார்..யோவான் 16:33 இவ்வுலகிற்காய் தனது ஜீவனை கொடுத்த இரட்சகராய் இருக்கிறார் யோவான் 6:33
✝ *இதினிமித்தம் கிறிஸ்து இவ்வுலகை ஜெயித்தார்.யோவான் 16:33 ஆகையால் விசிவாசியும் உலகை ஜெயிக்கமுடியும் 1 யோவான் 5:4,5*
கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகள் இவ்வுலகில் அன்பு கூறக்கூடாது. 1 யோவான் 2:15,16 மட்டுமல்லாது விசுவாசிகள் இவ்வுலகிற்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது. ரோமர் 12:2
உலகப்பிரகாரம் என்பது, எதை சிந்திக்கிறோமோ அதை செய்து நிலைநாட்டுகிறவர்களாய் இருக்கிறோம்.
*சாத்தான் உலகை கட்டுப்படுத்துவது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நிறுத்தப்படும்.* எப்படிஇருப்பினும் விசுவாசிகள் எப்பொழுதும் தொடருவார்கள். 1 யோவான் 2:17
மற்றும் தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் நிலைத்து இருக்கும். 1 பேதுரு 1:23,25 *இப்பிரபஞ்சத்தை ஆளுகிறவனை ஜெயங்கொள்ளும் வண்ணம் அது வடிவமைக்கப்பட்டுள்ளது* 1 யோவான் 2:14 இதினிமித்தம் இவ்வுலகிற்கு ஒத்த வேஷம் தரியாது, வேத உபதேசம் மூலம் இவ்வுலகை ஜெயிக்க வேண்டும், அதன் மூலன் இவ்வுலக ஞானத்தை பைத்தியமாக்கியுள்ளார். 1 கொரிந்தியர் 1:20; 3:19
இதினிமித்தம் ஒரு விசுவாசியின் செயல்பாடு தேவனுடைய வசனத்தின் அடிப்படையில் இருப்பது மிகவும் அவசியம்
பிலிப்பியர் 2:5; 2 தீமோத்தேயு 1:7; ஏசாயா 26:3,4; பிலிப்பியர் 4:7; 2 கொரிந்தியர் 10:4,5; 1 கொரிந்தியர் 2:16; 2 கொரிந்தியர் 1:5,6,8
*பின்மாற்றம் என்பது இவ்வுலகத்தை சிநேகிப்பதன் மூலம் வருகிறதாய் இருக்கிறது.. யாக்கோபு 4:4*
[14/11 9:08 pm] Elango: சாத்தான் இவ்வுலகத்தின் அதிபதியாய் இருக்கிறான். தேவனுடைய திட்டத்திற்கு எதிராய் செயலாற்றுகிறவர்களை வஞ்சித்து மோசம்போக்க வல்லவனாய் இருக்கிறான் யோவான் 12:31, 14:30, 16:11, 1 கொரிந்தியர் 4:4, 1 பேதுரு 5:8,9.
ஆனால் ஜெயங்கொண்ட நம் ஆண்டவரின் இரத்தத்தினாலும், அவர் மேலுள்ள விசுவாசத்தினாலும், பரிசுத்த ஆவியின் பெலத்தினாலும் அவனின் உலக அமைப்பை ஜெயிக்கிறவர்களாக இருக்கிறோம்.
[14/11 9:13 pm] Elango: வெளிப்படுத்தின விசேஷம் 12:11
[11]மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
[14/11 9:21 pm] Elango: *நம்மை சிட்சிப்பதற்கு சாத்தானை, ஒரு கருவியாய் தேவன் பயன்படுத்துகிறான்*
✏பேதுரு சிட்சிக்கப்படுதல் விவரிக்கப்படுகிறது லூக்கா22:31, 32
✏கொரிந்து சபையில் காணப்பட்ட விபச்சாரக்காரனை சிட்சிக்க, சாத்தான் கையில் கொடுக்கப்பட்டான். 1 கொரிந்தியர்5:5
✏இம்மெனேயும், அலெக்ஸாண்டரும் சாத்தானால் சிட்சிக்கப்பட அவனது கையில், பவுலால் ஒப்படைக்கப்படுகின்றனர். 1 தீமோத்தேயு1:19,20
✏ஊழியர்கள் மற்றும் மூப்பர்கள் சிட்சிக்கப்பட சாத்தான் உட்படுத்தப்படுகிறான். 1தீமோத்தேயு 3:6, 7
✏விசுவாசிகள் மன்னிக்க முடியாத நிலையில், மற்றும் கிருபையை முற்றிலும் புறிந்துகொள்ள இயலாத நிலையில் சாத்தானால் தாக்கப்படுகிறார்கள். 2 கொரிந்தியர்2:10, 1I
*தேவனின் சித்தத்தை நிறைவேற்றவே அவன் இந்த பூமியில் விடப்பட்டிருக்கிறான்.*
[14/11 9:35 pm] Elango: சங்கீதம் 24:3-4
[3] யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
[4]கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
*இந்த கேள்விக்கு சரியான பதிலாக இருப்பவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து மட்டுமே.*
*அவரே பரிசுத்த பர்வதத்தில் பரலோக வாசலை நமக்காக திறந்தார், அவர் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலமாகவே நாமும் பரம பர்வதத்தில், தேவ இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.*
[14/11 9:36 pm] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:19-22
[19]ஆகையால், சகோதரரே, *நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,*✝✝✝✝
[20] *அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே*❣❣❣❣❣❣❣ நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
[21]தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
[22] *துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.*🚶♀🚶♀🚶🚶🚶
[14/11 9:43 pm] Elango: சங்கீதம் 24:6
[6]இதுவே அவரைத் தேடி விசாரித்து, *அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா).*
இங்கே *யாக்கோபு என்பது இஸ்ரவேலரை அதாவது மாம்சத்தின் படி பிறந்தவர்கள் எல்லோரும் அல்ல. கிறிஸ்துவின் மேல் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரரானவர்கள், உண்மையாக தேவனுக்கென்று வாழும் கிறிஸ்தவர்களை குறிக்கிறதாக இருக்கிறது*
ஏசாயா 29:22
[22]ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக்குறித்து:👇🏻👇🏻 *இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.*
[14/11 9:53 pm] Elango: சங்கீதம் 24:7
[7] *வாசல்களே,* உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்.
இங்கு வாசல் என்று சொல்லப்பட்டிருப்பதை மனிதனின் இருதயத்திற்க்கு ஒப்பிடலாம். ஆண்டவர் இந்த பூமியில் வந்த போது சிலர் அவருக்கு தங்களுடைய இருதய வாசலை திறந்து அவரை ஏற்றனர், சிலர் அவரை தங்களுடைய இருதயத்தை அடைத்து கடினப்படித்தி அவரை நிராகரித்தனர்.
*ஆனாலும் ஆண்டவர் இன்றும் நம் இருதய வாசலண்டே நின்று கதவை தட்டுகிறார்.. அவருக்கு நம் இருதய வாசலை திறப்போமா? அவரோடு போஜனம் புசிப்போமா? பிறருக்கும் அவரைப் பற்றி சாட்சி பகிர்வோமா?*
வெளிப்படுத்தின விசேஷம் 3:20
[20]👉 *இதோ, வாசற்படியிலே* 👈நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
[14/11 10:00 pm] Elango: லூக்கா 7:36-48
[36] *பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.*
[37]அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,
[38] *அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.*
[39]அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
[40]இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
[41]அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
[42]கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.
[43]சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
[44]ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; *நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.*
[45]நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
[46]நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
[47]ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;
[48]அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
*இங்கே பாவியாகிய ஒரு ஸ்திரி ஆண்டவருக்கு தன் இருதய வாசலை திறந்துக்கொடுத்தாள், ஆண்டவரின் பாவ மன்னிப்பை பெற்றாள்*❤❤❤❤❤
*ஆனால் தன்னுடைய வீட்டை திறந்துக்கொடுத்த பரிச்சேயன் சீமோனோ, அவருக்கு தன்னுடைய இருதய வீட்டை திறந்து காட்ட தவறினான்*💔💔💔💔💔💔💔💔
[14/11 10:06 pm] Elango: மத்தேயு 8:8
[8]நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
இந்த அதிபதி தன்னைத்தானே தாழ்த்துகிறான்.ஆண்டவர் மேல் விசுவாசம் வைக்கிறான்.
அவனுடைய வீட்டிற்க்குள் ஆண்டவர் பிரவேசிக்கவில்லையென்றாலும், அவனுடைய இருதய வாசலை ஆண்டவருக்கு அவன் திறந்துக்கொடுத்தான். அவனுடைய விசுவாசத்தை ஆண்டவர் பாராட்டுகிறார்.👏👏👏👏👏
மத்தேயு 8:10-11
[10]இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: *இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.*👍👍👍👍👍👍👌👌👌👌👌
[11]அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
[14/11 10:23 pm] Elango: மத்தேயு 8:34
[34]அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
*ஆண்டவர் பிரவேசிக்காதபடிக்கு அவர்களது இருதய வாசலை அடைத்தனர்*💔💔💔
[14/11 10:28 pm] Elango: சிலர் ஆண்டவருக்கு *தங்களது வீட்டு வாசலையும், இருதய வாசலையும் திறந்து கொடுத்து அவரை ஏற்றனர்.*
மார்த்தாள், மரியாள், லாசரஸ்...
லூக்கா 10:38-39
[38]பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ *அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.*❤
[39]அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; *அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.*👂👂👂👂
[14/11 11:24 pm] Jeyanthi Pastor VDM: கெனசரேத் சாத்தானால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த எல்லை. அங்கு ஆண்டவருக்கு இடமில்லை. ஆனால், மறு ஊரில் தேவ ஜனங்கள் காத்திருந்ததை பார்க்கிறோம். நமக்கும் ஏற்றுக் கொள்வார், தள்ளுபவர்கள் உண்டு. நம் கர்த்தரைப் போல மனரம்மியம் நமக்கும் கர்த்தர் தருவாராக.
[15/11 8:23 am] Elango: *பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.சங்கீதம் 24:1*
இந்த பூமியும், அதிலுள்ளவைகளும் கர்த்தருடையது. யாத்திராகமம் 9;29, 19:5, உபாகமம் 10:14, சங்கீதம் 50;12.
நேபுகாத்நேச்சரைப்போல நாமும் ஆகாதிருப்போமாக! கர்த்தர் ஒருவரே பூமிக்கெல்லாம் இராஜா, நாம் அவருடைய சித்தத்தை செய்யும் பாத்திரங்களே. தானேயேல் 4:25. இந்த பூமியில் உள்ளவைகளெல்லாம் கர்த்தருடையது.
*இந்த பிரபஞ்சத்தின் அதிபதிக்கு ஒரு அதிகாரமும் இல்லை. சாத்தானுக்கு அதிகமாக இந்த பூமியின் மேல் அதிகாரம் செலுத்த உரிமையில்லை, அவன் தோற்றுப்போனவன் 1 யோவான் 4;4*
மனிதன் பாவத்தில் விழுந்து போன பின்பும், கர்த்தரே இந்த பூமிக்கு இராஜாவாக இருக்கிறார். இந்த பூமியானது வேத வாக்கியம் சொல்லுகிறது போல பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். 2 பேதுரு 3:10. இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவரும் இந்த பூமியை படைத்த சிருஷ்டிகருக்கு ஒரு நாள் நம்மை குறித்து கணக்கு ஒப்புவிக்கவேண்டும். சாத்தானும் தேவனுக்கு கணக்கு கொடுக்கிறவனாக இருக்கிறான், முடிவாக அவன் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகி எரிநகரத்தில் பங்கடைவான்.
[15/11 8:24 am] Elango: பூமியும், அதில் வசிக்கிற யாவைகளும் கர்த்தருக்கு சொந்தமானவைகள். பூமியை உயிரனங்கள் வாழும் வளமான குடியிருப்புக்காக படைத்தார். இந்த பூமியானது வாழும் எல்லா ஜீவஜந்துக்களையும், மனிதர்களையும் உள்ளடக்கியது. எல்லா வாழும் உயிரினங்களும் கர்த்தருடையவைகள். 1 நாளாகமம் 29;16, சங்கீதம் 50:10-11, எரேமியா 27:5
ஏசாயா 45:18 வானங்களைச் சிருஷ்டித்து *பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து,* அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
[15/11 8:24 am] Elango: பூமி கர்த்தருடையது என்பதை மனிதர்கள் இதை நிராகரிக்கலாம். ஆனால் மனிதகுலம் எல்லாம் சிருஷ்டிகரை ஒருநாள் நேருக்கு நேர் சந்திக்கவேண்டும், மனிதர்களிடம் தேவன் கணக்கு கேட்கும் நாள் வரும்.
விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பும் - ரோமர் 14:10, 2 கொரிந்தியர் 5:10. அவிசுவாசிகளுக்கு வெள்ளைசிங்காசன நியாயத்தீர்ப்பும் உண்டு. அதற்கு ஒருவரும் தப்பமுடியாது.
[15/11 8:24 am] Elango: *யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?சங்கீதம் 24:3*
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் அவருக்கு ஊழியம் செய்வதற்க்கும், பணிவிடை காரியங்கள் செய்வதற்க்கும், ஆராதனை நடத்துவதற்கும், அவரை தொழு கொள்ளுவதற்கும் பழைய ஏற்ப்பாட்டில் அநேக சட்டதிட்டங்களும், ஒழுங்கு முறைகளும் இருந்தது.
*இந்த புதிய எற்பாடு காலத்தில் நாம் தேவன் சமூகத்தை நெருங்குவதற்க்கு ஒரே தகுதி - அவரது மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் நினைவுகூர்ந்து, விசுவாசித்து ஆவியின் படி நடத்தேலே அவரது பரிசுத்த ஸ்தலத்தில், பரிசுத்த பர்வதத்தில் நிற்க நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது.*
*எபிரெயர் 9:14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!*
[15/11 8:25 am] Elango: தன்னுடைய சுயகிரியையினாலே அல்லது சொந்த பெலத்தினாலோ பரிசுத்த தேவனை ஆராதிக்க, அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிற்க நம்மை தகுதிப்படுத்தாது; எல்லா மனிதர்களின் சுயக்கிரியையும் தேவனுக்கு முன்பாக தகுதியிராது ஆனால் அவரது சொந்த குமாரனின் இரத்தத்தினாலே நாம் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்க, ஆராதிக்க தகுதியுடையவர்களாக மாறுகிறோம். அவருடைய இரத்தமே நம்மை சுத்திகரித்து, நாம் அவருக்கு சுத்த மனசாட்சியோடு அவரை ஆராதனை செய்ய நம்மை தகுதிப்படுத்துகிறது. ரோமர் 5: 6-8, 6:10, 14: 9
[15/11 8:25 am] Elango: பலி முறைகளின் நோக்கம் என்னவென்றால், தேவ பிள்ளைகள் பரிசுத்தமாக பரிசுத்த தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதே. இதற்க்கு கிறிஸ்து ஒரே தரம் நமக்காக செலுத்திய இரத்தம் நம்மை சுத்திகரித்து நம்மை பரிசுத்தமாக்கி, பரிசுத்தமாக தேவனை ஆராதிக்க வைக்கிறார்.
*பரிசுத்த ஸ்தலமானது இப்போது சிலுவையின் இரத்தம் தோய்ந்த நிலையில் உள்ளது, இங்கு வருபவர் அனைவரும் பாவத்தை அறிக்கையிடுவதன் மூலமாக இரட்சிப்பு மற்றும் தேவனோடு ஐக்கியத்தையும் திரும்ப பெற முடியும்.*
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:12
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.1 யோவான் 1:9
1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.1 யோவான் 2:1-2
[15/11 8:25 am] Elango: அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், *தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.* சங்கீதம் 24:5
கர்த்தருக்கு முன்பாக முழங்காலிடுகிறவர்கள் அவருடைய ஆசீர்வாதத்தை பெறுவார்கள், அவருடைய ஆசீர்வாத்த்தை நாம் பெற்றுக்கொள்ளாதபடிக்கு தடுப்பது நம் பெருமை மட்டுமே.
நம்முடைய சுயக்கிரியைகள் யாவும் தேவனுக்கு முன்பாக அழுக்கான கந்தையாக இருக்கின்றன. ஏசாயா 64:6. கிறிஸ்துவின் இரத்தத்தை நாம் விசுவாசிப்பதன் மூலமாகவே நாம் ஆசீவாதத்தை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள ஒரே வழி.
இயேசுகிறிஸ்துவுக்குள் நம்மை நீதிமானாக அறிவிக்க விரும்புகிறார் தேவன். அவருடைய அன்பினாலும், இரக்கத்தினாலும் கிருபையால் இதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியும். தேவ நீதியானது நமக்கு கொடுக்கப்ப்ட்ட இலவச பரிசு, இது இரட்சிப்பை நமக்கு கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறது.

Post a Comment
0 Comments