[11/11 11:19 am] Elango: 🎷🎻 *இன்றைய ( 11/11/2017) வேத தியானம் - சங்கீதம் 23* 🎷🎻
1⃣ சங்கீதம் 23 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 23 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ *நான் தாழ்ச்சியடையேன்.* என்பதன் அர்த்தம் என்ன❓எதிலெல்லாம் நாம் தாழ்ச்சியடைய மாட்டோம்❓
4⃣ சங்கீதம் 23:2
[2] *அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.*
இந்த வசனத்தின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
5⃣ சங்கீதம் 23:3
[3]அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, *தம்முடைய நாமத்தினிமித்தம்* என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
தம்முடைய நாமத்தினிமித்தம் என்பதன் அர்த்தம் என்ன❓
6⃣ *மரண இருள் பள்ளத்தாக்கு* என்பது சரீரத்திற்க்குரிய மரணத்தை குறிக்கிறதா அல்லது வேறு அர்த்தமா❓
7⃣ சங்கீதம் 23:4
[4]நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; *உமது கோலும் உமது தடியும்* என்னைத் தேற்றும்.
கோலும், தடியும் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
8⃣ சங்கீதம் 23:5
[5]என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
*பந்தியை ஆயத்தப்படுத்தல், பாத்திரம் நிரம்பி வழிகிறது* என்பதன் அர்த்தம் என்ன❓
9⃣ சங்கீதம் 23:6
[6]என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[11/11 11:37 am] Jeyanthi Pastor VDM: 23. சங்கீதத்தில் தேவ அக்கரை மூன்று தனித்தன்மைகளைப் பார்க்கிறோம்
1. தேவனுடைய அக்கரை ஒவ்வொரு மனிதரையும் மனதில் கொண்டது.
2. அது படைப்பு செயல்பாடுள்ளது
3. அது பூரணமானது
வச : 1- தேவன் அனைத்துத் தேவைகளுக்கும் போதுமானவர்
வச: 2 - தேவன் இளைப்பாறுதலையும், உற்சாகத்தையும் அளிக்கிறார்.
வச :3 - தேவன் வழி நடத்துகிறார்
வச:4 - தேவன் பாது காக்கிறார், தேற்றுகிறார்
வச : 5 - தேவன் நம்பிக்கை தருகிறார், ஆற்றுகிறார், குணமளிக்கிறார், பொங்கி வழியும் வாழ்வு திருப்தியைத் தருகிறார்
வச: 6 - எதிர்காலம் நிச்சயமற்றதல்ல, தேவன் அருளும் நிலையான நன்மையும் தீராத கருணையும் கிடைப்பதுடன் இறுதியில் கர்த்தரின் ஆலயத்தில் அவரோடு வாழ்வோமென்ற உறுதியையும் அளித்துள்ளது.
[11/11 11:40 am] Levi Bensam Pastor VDM: நீதிமொழிகள் 12: 28
*நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.*
Proverbs 12: 28
*In the way of righteousness is life; and in the pathway thereof there is no death.*
[11/11 1:07 pm] Saranya Sister VDM: The 23rd Psalm
This is an eye opener; some probably never thought nor looked at this Psalm in this way, even though they say it over and over again.
The Lord is my Shepherd *That's* *Relationship* !
I shall not want *That's* *Supply* !
He maketh me to lie down in green pastures *That's Rest!*
He leadeth me beside the still waters *That's* *Refreshment* !
He restoreth my soul *That's Healing!*
He leadeth me in the paths of righteousness *That's Guidance!*
For His name sake *That's Purpose!*
Yea, though I walk through the valley of the shadow of death *That's* *Testing* !
I will fear no evil *That's* *Protection* ! For Thou art with me *That's Faithfulness* ! Thy rod and Thy staff they comfort me *That's* *Discipline* ! Thou preparest a table before me in the presence of mine enemies *That's Hope!* Thou annointest my head with oil *That's* *Consecration*
! My cup runneth over *That's Abundance* ! Surely goodness and mercy shall follow me all the days of my life *That's Blessing!* And I will dwell in the house of the Lord *That's* *Security* ! Forever *That's Eternity!* Face it, the Lord is crazy about you.
Please meditate this..
Stay blessed.....
[11/11 1:27 pm] Elango: மத்தேயு 9:36
[36]அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, *அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,*❤❤❤
இயேசுவை தன் மேய்ப்பனாக ஏற்காத ஆடுகள் வழித்தப்பியும், ஓநாய்களின் தாக்குதலுக்கும், அதிருப்தியாக அலைவதையும் கண்டு ஆண்டவரின் மனம் உருகுகிறது.❤
கர்த்தரை தன் மேய்ப்பனாக கொண்ட ஆடுகள் பாக்கியமானவைகள்
[11/11 1:31 pm] Jeyanthi Pastor VDM: 5 மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின, சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
எசேக்கியேல் 34:5
6 என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது, விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.
எசேக்கியேல் 34:6
7 ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
எசேக்கியேல் 34:7
8 கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின, என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
எசேக்கியேல் 34:8
10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
எசேக்கியேல் 34:10
11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.
எசேக்கியேல் 34:11
12 ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி,
எசேக்கியேல் 34:12
13 அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.
எசேக்கியேல் 34:13
14 அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன், இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும், அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
எசேக்கியேல் 34:14
15 என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 34:15
👆🏻👆🏻👆🏻
[11/11 1:34 pm] Jeyanthi Pastor VDM: ஆடுகள் அலைந்து திரிவதை, கைவிடப்படுவதை கர்த்தர் விரும்புவதில்லை.
மேய்ம்பர்கள் ஆடுகளை விசாரித்து. அவைகளை மேய்க்கவே வேண்டும் என விரும்புகிறார்.
[11/11 1:34 pm] Jeyanthi Pastor VDM: மந்தையை கைவிடக்கூடாது என்பதும், கர்த்தரின் கட்டளையே
[11/11 1:36 pm] Jeyanthi Pastor VDM: ஆழமாக தியானிக்க சபை மேய்ப்பர்களுக்குக், கர்த்தர் தரும் ஆலோசனைகளையும் பகிரலாமா பாஸ்டர்?
[11/11 1:40 pm] Jeyanthi Pastor VDM: நீங்க permit panna, நல்ல மேய்ப்பனாகிய இயேசுவைப் போல மாறிக் கொள்ள ஏற்றதாயிருக்குமே
[11/11 1:41 pm] Jeyanthi Pastor VDM: அவர் பிரதான மேய்ப்பர்
[11/11 1:47 pm] Jeyanthi Pastor VDM: 2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
1 பேதுரு 5:3 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
1 பேதுரு 5:3:4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
1 பேதுரு 5:4
[11/11 1:49 pm] Jeyanthi Pastor VDM: 23 உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்: உன் மந்தைகளின்மேல் கவனமயாயிரு.
நீதிமொழிகள் 27:23
[11/11 1:53 pm] Elango: *மூன்று தொடர் சங்கீதங்களில் கிறிஸ்து மேய்ப்பராய் தோன்றுகிறார்.*
அ] சங்கீதம் 22 - நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11). அவர் வாசலாய் இருக்கிறார் (யோவான் 10:9).
ஆ] சங்கீதம் 23. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் - ஆடுகளின் பெரிய மேய்ப்பர் (எபிரெயர் 13:20)
இ] சங்கீதம் 24 - தனது மகிமையில் பிரதாண மேய்ப்பர் தோன்றுவார். (1 பேதுரு 5:4)
[11/11 1:53 pm] Elango: *கிறிஸ்து மேய்ப்பராய் இருக்கிறார்.*
1. *வேதாகமத்தில், செம்மறி ஆடுகள் விசுவாசிகளுக்கு ஒப்பிடப்படுகிறார்கள் - மத்தேயு 15:33-34 - வெள்ளாடு (அவிசுவாசிகள்) இவைகள் செம்மறி ஆடுகளுக்கு முறண்பாடாய் இருக்கிறது.*
2. செம்மறி ஆடுகள் உதவியற்றவைகளாய் இருக்கின்றன. அவைகளுக்கு வழி நடத்துபவர் அவசியப்படுகிறார், மற்றும் போஷிக்க, பராமரிக்க ஒருவர் அவசியப்படுகிறார்.
3. இஸ்ரவேல் மந்தையின் ஆடுகள் என அழைக்கப்படுகின்றனர் (சங்கீதம் 74:1, 79:13, 95:7, 100:3எரேமியா 23:1).
4. கர்த்தர்தாமே மெய்யான மேய்ப்பராய் இருக்கிறார். (யோவான் 10:10-16).
5. கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து ஐந்து வித்தியாசமான வழிகளில் மேய்பராய் விளங்குகிறார். 1 பேதுரு 2:21-25.
அ] . பாடுபடும் மேய்ப்பர் (வச 21)
ஆ] . பாவமில்லாத மேய்ப்பர் (வச 22)
இ] அற்பணம் செய்யும் மேய்ப்பர் (வச 23)
ஈ] நமக்குப் பதிலாக பலியான மேய்ப்பர் (வச 24)
உ] தேடுகிற மேய்ப்பர் (வச 25).
*இவைகள் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காய் தனது ஜீவனை கொடுப்பதையும், உயிர்த்தெழுந்த மேய்ப்பனானவர் தனது ஆடுகளை பராமரிக்கிறவரும், பாதுகாக்கிறவருமாய் இருப்பதையும், வெளிப்படப்போகும் எதிர்கால மேய்ப்பர் தனது ஆடுகளின் மீது ஆழுகை செய்ய இருக்கிறார் என்பதையும் காட்டுகிறதாய் இருக்கிறது.*
[11/11 2:06 pm] Elango: *கர்த்தரின் மேய்க்கும் தன்மை*
a) செம்மறி ஆடானது வேதாகமத்தின் முழுவதிலும் விசுவாசிகளைக் குறிக்கிறதாய் இருக்கிறது. மத்தேயு 25:34 - அவைகள் வெள்ளாடுகளில் இருந்து வேறுபட்டதாய் இருக்கிறது.
b) செம்மறி ஆடுகள் உதவியற்ற நிலையில் இருக்கின்றன, அவைகளை வழி நடத்த, போஷிக்க, பாதுகாக்க ஒருவர் தேவை. அவைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள இயலாது.
c) பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்கள் தனது மந்தையின் செம்மறி ஆடுகள் என அழைக்கப்பட்டனர். சங்கீதம் 74:1, 79:13, 95:7, 100:3 எரேமியா23:1.
d) *கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இஸ்ரவேலின் மந்தைக்குக் கடந்து வந்தார், சில ஆடுகள் அவர் சத்தத்திற்குச் செவிசாய்த்தது, அதிமான ஆடுகள் அவரைப் புறக்கணித்தது, கர்த்தர் தமது ஆடுகளுக்காய் ஒரு புதிய மந்தையை ஏற்படுத்தி தமது ஆடுகளை அவற்றில் சேர்த்தார்.* யோவான் 10:16.
e) யூதாயிஸம் கர்த்தரால் வேறுபிரிக்கப்பட்டு, அதிலிருந்த தமது ஆடுகளை அவற்றிலிருந்து பிரித்தெடுத்து, ஒரு புதிய மந்தையை அமைத்து விடுதலையாக்கி மலையின் மீது விட்டிருக்கிறார். தொழுவத்திற்கும் மந்தைக்குமுள்ள வேறுபாடானது இங்கு விவரிக்கப்படுகிறது. இனி தொழுவம் ஒரு போதும் இருக்கப்போவது இல்லை. தொழுவமானது யூதாயிஸம் மற்றும் சட்டதிட்டங்களாய் [பிரமாணங்கள்] இருந்தது, இப்பொழுது மறைந்துவிட்டன. *இப்பொழுது யூதனென்றோ, கிரேக்கனென்றொ இல்லை எல்லோரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகிவிட்டனர். இதன் மையப்பொருளை உடைய புத்தகங்களே கலாத்தியர், ரோமர், எபிரெயர் புத்தகங்களாகும். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். நமது சபையானது, பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டில், கர்த்தருடன் நடக்கப்பழகும் ஸ்தலமாய் இருக்கிறது. தொழுவத்திற்குள்ளான ஆடுகள், நான்கு சுவருக்குள் அமைந்து, மேய்ப்பன் ஒருவனின் பாதுகாப்பிற்குள்ளும், கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து, போஷித்து பராமரிக்கப்பட்டும் வருகின்றன.* இதுவே ஆவியில் நடப்பது இடம் பெறும் ஸ்தலமாய் இருக்கிறது. கிறிஸ்தவம் என்பது உறவு சம்பந்தப்பட்டதாயும், செயல்படுகின்ற ஒன்றாயும் இருக்கிறது. கலாத்தியர் 1:6-9. இங்கு பவுல் ஆவியில் நடந்து கொள்வது குறித்து சொல்கிறார், யூதாயிஸத்தில் உள்ளது போன்று மிகுதியான சட்டங்களோ, பிரமாணங்களோ இங்கு இல்லை. நாம் நமது எதிராளியுடன் சண்டையிட வேண்டியவர்களாய் இருக்கிறோம். மலைமீது இவ்வுலகில், *இவ்வுலகில் இருந்தும் இவ்வுலகத்தார் அல்லாதவர்களாய் இருக்கிறோம்.*
f) *கர்த்தர்தாமே உண்மையான மேய்ப்பராய் இருக்கிறார், அவரது அறிமுக ஆவணம் சிலுவையாய் இருக்கிறது யோவான் 10:10-16. கர்த்தாமே ஐக்கியத்திற்கான ஒரே வாசலாய் இருக்கிறார்.* அப். 4:12, யோவான் 3:36, யோவான் 10:28,29.
g) ஒரே தொழுவம் மட்டுமே உள்ளது, இதை ஆடுகள் எல்லாம் அறிந்திருக்க வேண்டும். விசுவாசிகள் ஆடுகளைப்போன்ற தங்களது சுபாவத்தை காட்டி, மேய்ப்பரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறவர்களாய் இருத்தல் வேண்டும். சபை போதகராகிய நீங்கள் மேய்ப்பரின் பிரதிநிதியாய் இருக்கிறீர்கள், ஆடுகளை பரமாரிப்பதற்கு, பயிற்சி அளிப்பதற்கு, போஷிப்பதற்கு, உற்சாகமளிப்பதற்கு, பாதுகாப்பதற்கு, பெலப்படுத்துவதற்கான உத்திரவாதங்களை நீங்கள் அவருக்கு அளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்.
[11/11 2:08 pm] Jeyanthi Pastor VDM: 7 அவர் நம்முடைய தேவன், நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர்கைக்குள்ளான ஆடுகளுமாமே.
சங்கீதம் 95:7
[11/11 2:14 pm] Elango: *யெஹோவா ரா JEHOVAH-RAAH - யெஹோவா என் மேய்ப்பர் - சங்கீதம் 23:1*
[11/11 2:14 pm] Elango: *JEHOVAH-RAAH - Jehovah is my Shepherd - யெஹோவா ரா யெஹோவா என் மேய்ப்பராய் இருக்கிறார் சங். 23:1*
[11/11 2:14 pm] Elango: *நானே ஆடுகளுக்கு வாசலாய் இருக்கிறேன். (யோவான் 10:7). - தேவனுடைய திட்டத்திற்குள் பிரவேசிக்க, இயேசுக்கிறிஸ்து ஒருவரே வழியாய் இருக்கிறார்.*
[11/11 2:15 pm] Elango: *நானே நல்ல மேய்ப்பனாய் இருக்கிறேன். (நானே நல்ல மேய்ப்பன்) (யோவான் 10:11). - மெய்யான பராமரிப்பு செய்ய, உண்மையுள்ள கர்த்தரால் மட்டுமே ஆகும்.*
[11/11 2:17 pm] Elango: *பிரதான மேய்ப்பர் நியமித்த சபை மேய்ப்பர் சுபாவம்*
மோசே மூன்று மில்லியன் ஜனங்களுக்கு முன்பாய் நின்றார், அவர்கள் அடிக்கடி கூச்சலிட்டனர், அவரை கொலை செய்ய எத்தனித்தனர். போதிக்கிறவராய் இருக்கிற நீங்கள் அவர்களுக்காய் தனிப்பட்ட சூழலில் அழுது புலம்பலாம், ஆனாலும் தொடர்ந்து அவர்களுக்கு போதிக்கும் ஊழியத்தை நீங்கள் செய்தாக வேண்டும். அவர்கள் உங்களை கீழிறக்க விடாதிருங்கள் காரணம் அவர்கள் தேவனுடையவர்களாய் இருக்கின்றனர், அவர்கள் உங்களுக்குரியவர்கள் அல்லர்.
*நீங்கள் இரும்பைப் போன்று கடினமுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும், அதே சமயம் ஒரு மேய்ப்பனைப் போல மிருதுவானவர்களாய் இருத்தல் வேண்டும், அம்மேய்ப்பன் தனது ஆடுகளை நேசிக்கிறவனாகவும், சிலவேளைகளில் அவ்வாடுகள் தங்களது சொந்த புத்தியின்படியே ஓடிச்சென்று செங்குத்தான பாறைகளின் மேல் சென்று, நீங்கள் அவைகளை தடை செய்தாலும் பொருட்படுத்தாது செல்கிறதாய் இருக்கிறது.*
[11/11 2:17 pm] Elango: கிறிஸ்தவர்களாய் இருக்கும் ஒவ்வொருவரையும் அன்பு கூர்ந்து விரும்பும் நபர்களாய் ஏற்றுக்கொள்ளுதல் கூடாது.
*நீங்கள் ஒரு மேய்ப்பனாய் இருக்கும் போது, ஆடுகளின் தோலைப் போர்த்துக்கொண்டு வரும் ஓநாய்களை இனம் கண்டு கொண்டு அவைகளை மந்தையை விட்டு புறம்பாக்குதல் வேண்டும்.*
சபை விதிமுறைகளில் நீங்கள் இப்படிப்பட்டவர்களை விட்டு விலகி ஜீவிக்க தகுதியுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்.
[11/11 2:18 pm] Elango: *ஆடுகளின் உண்மையுள்ள மேய்ப்பன் வெறுக்கப்படத்தக்க ஆடுகளை ஒதுக்கித் தள்ளுவதில்லை.*
இங்கு நாம் தேவனுடைய மந்தைக்கு பணிவிடை செய்யும்படி இருக்கிறோம். சில வேளைகளில் கர்த்தருடைய ஆடுகள் மிகவும் எரிச்சலடையச் செய்கிறதாய் இருக்கும்.
கர்த்தரது பரிசுத்த வார்த்தையிலிருந்து, அவர் அவரது ஆடுகளுக்கு ஆயத்தம் செய்து வைத்து இருக்கும் ஆகாரத்தை தொடர்ந்து பணிவுடன் அவைகளுக்கு அளிக்க, நாம் கடமைப்பட்டுள்ளோம்.
[11/11 2:21 pm] Elango: *இயேசுவை தன்னுடைய மேய்ப்பனாக கொண்ட ஆடுகளின் பாக்கியம்*
- ஒரு நன்மையும் குறைவுபடாது. சங்கீதம் 34:10,
- மேய்ப்பருக்கு கீழ்ப்படிந்து நட்க்கும் ஆடுகளின் ஆசீர்வாதம் - எரேமியா 17:8 *அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.*
- மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்,
- பரலோக இராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள்.
நீங்கள் ஆண்டவருக்கு பிரியமான ஆடுகளா? ஆண்டவரின் மந்தைக்குள் அடங்கி வாழும் ஆடுகளா?
அப்படியென்றால் ஆசீர்வாதமும், பரிபூரணமும், நன்மையும், ஜீவனும்,கிருபையும் உங்களோடு தொடரும்!
[11/11 2:30 pm] Elango: 7⃣ சங்கீதம் 23:4
[4]நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; *உமது கோலும் உமது தடியும்* என்னைத் தேற்றும்.
கோலும், தடியும் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
இதற்கு அர்த்தம் சொல்லுங்களேன்
[11/11 2:30 pm] Jeyarani VTT: மேய்ப்பர்கள்(தனது செய்கைகளால்) ஆடுகளின் பின்மாற்றத்திற்கு காரணமாக இருக்க கூடாது இல்லையா ஐயா...
[11/11 2:31 pm] Jeyarani VTT: ஆடுகளிடம் பாரபட்சம் பார்க்க கூடாது அல்லவா
[11/11 2:37 pm] Jeyarani VTT: அவரை தவறை விசுவாசி(மூப்பர்) தனிப்பட்ட விதத்தில் கூறும் போது. பிரசங்கத்தில் மறைமுகமாக பேசி சாபம் கூறுவது தவறு இல்லையா. சக விசுவாசி களிடம் அவரையும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் பழி கூறுவது தவறல்லவா..
[11/11 2:38 pm] Jeyarani VTT: இல்லை ஐயா. நான் பாதிக்கப்பட்டதினால் கேட்கிறேன்.
[11/11 2:39 pm] Elango: Oh
கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.
தனிப்பட்ட காரியமென்றால் சொல்ல வேண்டாம்
[11/11 2:41 pm] Elango: பொது பிரசங்கம் சிலருக்கு குத்துவது இயல்பு தானே...
[11/11 2:45 pm] Jeyarani VTT: சபை காரியங்களை(ஆராதனை சம்பந்தப்பட்ட காரியம் அல்ல) சபை மக்களிடம் கேட்கச் சொன்னது தப்பா
[11/11 2:46 pm] Elango: 1 பேதுரு 5:1-4
[1]உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், *இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்:*👇🏻👇🏻👇🏻
[2]உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, *உற்சாக மனதோடும்,*
[3]சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, *மந்தைக்கு மாதிரிகளாகவும்,* கண்காணிப்பு செய்யுங்கள்.
[4] *அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.*👑👑👑👑👑
[11/11 2:46 pm] Elango: 1 பேதுரு 5:5-6
[5] *அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்;* பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
[6] *ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.*
[11/11 2:50 pm] Elango: Yes Pastor
ஆடுகள் வேறு மந்தைக்கு ஓடுவதற்க்கு காரணம் ஏதாவது சொல்ல வேண்டுமே...
அதுதான் ஊழியர் மேல் ஏதாவது ஒரு பழியை போட்டு விடுகின்றனர்.
[11/11 3:00 pm] Jeyarani VTT: ஐயா தயவு செய்து என்னை மேய்ப்பர்களுக்கு எதிரானவள் என்று நினைக்காதீர்கள்
[11/11 3:03 pm] Jeyarani VTT: நான் கேட்பது சபை மேய்ப்பர் மூப்பரிடம் ஆலோசனை கேட்கும் போது சரியானதை சரியென்றம் தவறை தவறென்றும் தானே கூறணும். இல்லையென்றால் அப்படி சொல்லக்கூடாதா
[11/11 3:05 pm] Jeyarani VTT: மேயப்பர்கள் தேவனுக்காக படும் பாடுகள் நான் அறிவேன்
[11/11 3:05 pm] Elango: இவருடைய விவரம் என் தனிசாட்டில் கொடுங்க ஐயா
[11/11 3:07 pm] Elango: இங்குள்ள தேவ ஊழியர்கள் இதைப்பற்றி ஆலோசனை தருவார்கள்
[11/11 3:22 pm] Elango: 🎷🎻 *இன்றைய ( 11/11/2017) வேத தியானம் - சங்கீதம் 23* 🎷🎻
1⃣ சங்கீதம் 23 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 23 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ *நான் தாழ்ச்சியடையேன்.* என்பதன் அர்த்தம் என்ன❓எதிலெல்லாம் நாம் தாழ்ச்சியடைய மாட்டோம்❓
4⃣ சங்கீதம் 23:2
[2] *அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.*
இந்த வசனத்தின் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
5⃣ சங்கீதம் 23:3
[3]அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, *தம்முடைய நாமத்தினிமித்தம்* என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
தம்முடைய நாமத்தினிமித்தம் என்பதன் அர்த்தம் என்ன❓
6⃣ *மரண இருள் பள்ளத்தாக்கு* என்பது சரீரத்திற்க்குரிய மரணத்தை குறிக்கிறதா அல்லது வேறு அர்த்தமா❓
7⃣ சங்கீதம் 23:4
[4]நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; *உமது கோலும் உமது தடியும்* என்னைத் தேற்றும்.
கோலும், தடியும் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
8⃣ சங்கீதம் 23:5
[5]என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
*பந்தியை ஆயத்தப்படுத்தல், பாத்திரம் நிரம்பி வழிகிறது* என்பதன் அர்த்தம் என்ன❓
9⃣ சங்கீதம் 23:6
[6]என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[11/11 3:24 pm] Jeyarani VTT: தாழ்ச்சி என்றால் வெட்கம் என்று அர்த்தமா?
[11/11 3:25 pm] Elango: தாழ்ச்சி என்றால் குறைச்சல்?
[11/11 3:26 pm] Jeyarani VTT: OK
[11/11 3:26 pm] Jeyanthi Pastor VDM: 9 அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள், அவர்களை வழி நடத்துவேன், அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன், இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
எரேமியா 31:9
இடறாத செம்மையான பாதை
நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தி செல்லும் பாதை
அவருடைய வழிகளில் நம்மை ஸ்திரப்படுத்தும் பாதை
[11/11 3:30 pm] Premraj 2 VDM: The lord is our shepherd( we keep ) means all our life days grace and goodness definitely follow
[11/11 3:30 pm] Elango: சங்கீதம் 119:35
[35] *உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்;* நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
[11/11 3:50 pm] Jeyanthi Pastor VDM: 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பன்பற்றுங்கள்.
எபிரேயர் 13:7
இவ்வாறு விசுவாசிகளுக்கு கூறப்பட்டாலும்,
17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
எபிரேயர் 13:17
இவ்வாறும் எழுதியிருக்கிறதே
[11/11 3:54 pm] Elango: கோலும், தடியும் ஏன் தேற்றுதலுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது..
தடி என்பது அடிக்கு தானே மேய்ப்பன் வைத்திருப்பார்
[11/11 3:56 pm] Jeyanthi Pastor VDM: கோல் - போஷிக்க என்று நினைக்கிறேன்
[11/11 4:06 pm] Jeyanthi Pastor VDM: Pastor this is the great unity of a church.
Unity in christ
Ch - Christ
Ur - you are
Chris - Christ
Church means u r midst of Christ
அதாவது கைக்குள் அடங்கின ஆடு, சபைக்கும் விசுவாச மக்களே மையம்.
அறிந்து செயல்பட்டால் நலமாயிருக்கும்
[11/11 4:08 pm] Levi Bensam Pastor VDM: சங்கீதம் 100: 3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; *நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்*.
Psalm 100: 3
Know ye that the LORD he is God: it is he that hath made us, and not we ourselves; we are his people,, *and the sheep of his pasture.*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[11/11 4:10 pm] Levi Bensam Pastor VDM: சங்கீதம் 95: 7
அவர் நம்முடைய தேவன்; *நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.*
Psalm 95: 7
For he is our God; *and we are the people of his pasture, and the sheep of his hand.* To day if ye will hear his voice,✅✅✅👍
[11/11 4:19 pm] Levi Bensam Pastor VDM: யோவான் 10:1,3-4,9,16
[1]மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
[3]வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான்.
[4]அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
[9]நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
[16] *இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும்,*👌👌👌👍 அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
[11/11 4:26 pm] Levi Bensam Pastor VDM: லூக்கா 14:15
[15] அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: *தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான்*😀😀😀🤝✅✅✅👍👌 என்றான்.
[11/11 4:30 pm] Levi Bensam Pastor VDM: *ஆடுகள் அதிகமாக நம்புவது கசாப்🔪🔪🔪🔪🔪 கடைக்காரர்களை தான்*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
[11/11 5:57 pm] Jeyanthi Pastor VDM: Goodness n mercy shall follow all the days of ur life Excellant promise, we can own it
[11/11 6:01 pm] Jeyanthi Pastor VDM: 12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள், அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும், அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
எரேமியா 31:12
13 அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள், நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
எரேமியா 31:13
14 ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன், என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 31:14
[11/11 6:02 pm] Jeyanthi Pastor VDM: இதுவே நம் தேவனாகிய கர்த்தரின் கிருபை
[11/11 6:03 pm] Jeyanthi Pastor VDM: 10 ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக்காப்பார் என்று சொல்லுங்கள்.
எரேமியா 31:10
[11/11 6:04 pm] Jeyanthi Pastor VDM: மேய்ப்பன் தன் தந்தையைக் காக்கும் வண்ணமாக......
[11/11 6:06 pm] Tamilmani Ayya VDM: *கர்த்தரின் விருந்தும் ஆட்டுக்ட்டியானவரின் விருந்தும்*
கர்த்தர் உங்களுக்காக ஒரு விருந்து தரப்போகிறார். இப்படி சங்கீதம் 23:5 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது.
அந்த உணவு சாதாரண உணவு அல்ல. பல்வகை உணவுகள் சேர்ந்த விருந்து (Feast). அதுவும் உங்களை மாத்திரமே அழைத்து இருக்கிறார். வேறு யாரும் கூட அல்ல. மேலும் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக ஆயத்தப்படுத்துகிறார்.
யூத ராஜா சிங்கம் தன் விசுவாசிக்கு கொடுக்க்ப்போகிற விருந்து. பின்னர் உங்களுடைய தலையை எண்ணையால் அபிஷேகம் பண்ணுகிறார். இது பரிசுத்த ஆவியின் அபிசேகம். இஸ்ரவேலின் முதல் ராஜா பெற்ற அபிஷேகம். ப. ஏ. காலத்தில் யாரோ சிலருக்கு அதிசயமாய் கிடைத்தது. இன்று நம் எல்லோருக்கும் கிடைக்கிறது. விருப்பத்தோடு கேளுங்கள். பெற்றுக் கொள்ளுங்கள். பரலோக ரகசியங்களை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசீர்வாதத்தால் நிரம்பி வழியுங்கள்.
"என் சத்துருக்களுக்கு முன்பாக
நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்
தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் (ஆசீர்வாத்தால்) நிரம்பி வழிகிறது."
(சங்கீதம் 23: 5)
அடுத்து ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்திற்க்கு ஆயத்தப்படுங்கள். மணவாட்டியாகிய சபையே ஆயத்தப்படு. கடைசி வரை நிலைத்து இருப்பவனே/ளே மணவாட்டி. இவள் தன்னையே ஆயத்திப்படுத்திக்கொள்ள வேண்டும். வேதம் இதை தெளிவாக சொல்லுகிறது. இது ரகசிய வருகையின்போது சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் நடக்கிறது. ரகசிய வருகை அந்திக்கிறிஸ்துவின் முத்திரைக்கு பிறகுதான் நடக்கும் என அறிந்துக்கொள்ளுங்கள்.
"ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" என்றெழுது என்றான். மேலும், "இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே (யோவானுடனே) சொன்னான்."
(வெளி. விசேஷம் 19: 9)
~ த.ம
[11/11 7:40 pm] Elango: ஆமென்.
பரலோகத்தில் ஆண்டவரோடு பந்தி உண்டு நமக்கு. பரலோகத்தில் சத்துருக்கள் யாரும் நுழைவதில்லை.
பூமியில் நமக்கு சத்துருவுக்கு முன்பாக அவர்களுக்கு முன்னால் நமக்கு ஒரு விசேஷித்த பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்.
இதுவே சங்கீதம் கூறும் பந்தி.
[11/11 7:47 pm] Elango: கர்த்தர் என் மூலைக்கல்லாயிருக்கிறார்!
நான் அசைக்கப்படேன்!
கர்த்தர் என் ஜீவதண்ணீராயிருக்கிறார்;
நான் தாகமடையேன்!
கர்த்தர் என் ஜீவஅப்பமாயிருக்கிறார்;
நான் பசியால் வாடேன்!
கர்த்தர் என் அரணாயிருக்கிறார்;
நான் சேதமடையேன்!
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;
நான் தாழ்ச்சியடையேன்!
*கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.* கொலோசெயர் 3:11
[11/11 9:16 pm] Jeyanthi Pastor VDM: சங்கீதம் 23ஐ பல ராகங்களில் கேட்டிருப்போம். பாடியிருப்போம். நம் வட இந்திய இசையாகிய இந்துஸ்தானி இசையில் இந்த சங்கீதத்தை கேளுங்கள். இனிமையை உணர்வீர்கள். பாடியவர் SPB.
[11/11 9:29 pm] Elango: . மேய்ப்பன் தன் கரத்தில் உள்ள கோலில் எந்த மிருகமும் மந்தையை நெருங்க விடாமல் காப்பார். அதே நேரம் வழிதவருகின்ற ஆடுகளை அந்த கோலினால் அடித்து தன்னிடமாய் சேர்த்து கொள்வார். கர்த்தருடைய கரத்தில் உள்ள கோலும் தடியும், நம்மை பாதுகாத்து நம்மை தேற்றும். ஆகவே அந்த கோலினால் நாம் ஒரு சில நேரம் தண்டனை பெற்றாலும், அதை அற்பமாக எண்ணாமல், அது நமது நன்மைக்கே என்று உணர வேண்டும்.
- சகோ ப்ரிண்ஸ் ( வேத தியானம் 2 விலிருந்து)
[13/11 9:57 am] Elango: *கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.சங்கீதம் 23:1*
நல்ல மேயப்பனை கொண்ட ஆடுகள் பாக்கியமானவைகள்.😇
🐏அவைகள் ஒருநாளும் பசியால் வாடாது
🐏 துஷ்ட மிருகத்தின் வாய்களில் சிக்கி உருக்கிலையாது
🐏தண்ணீர் கிடைக்குமா என்று கவலைப்படாது
🐏நாளைக்கு எங்கே புள் கிடைக்கும் என்று யோசிக்காது
🐏திருப்தியாக புசித்து இளைப்பாறும்
🐏மேய்ப்பனையே நம்பி இருக்கும்
🐏ஆட்டுக்குடிகள் மேய்ப்பனின் கைகளில் பாதுகாப்படையும்
🐏கறவலாடுகள் மேதுவாக நடத்தப்படும்
அவைகளின் பாதுகாப்பு உறுதியாயிருக்கும்
.....
*நாம் கர்த்தரையே மேய்ப்பனாக கொண்ட ஆடுகளா?🐏🐏🐏🐏🐏🐏🐏*
👉👉👉👉 *அப்படியென்றால் கர்த்த்ரை நாம் மேய்ப்பனாக வைக்கும் பட்சத்தில் நாம் வேண்டிக்கொள்கிறதற்க்கும், நினைப்பதற்க்கும் அதிகமாக கிரியைகளை செய்யும் தேவன் நம் வாழ்நாளெல்லாம் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களும், நன்மையும், கிருபையும் என்றென்றும் பின்தொடர்ந்து வரும்.*
[13/11 9:58 am] Elango: *சங்கீதம் 23*
☀மனப்பாடம் செய்த வசனம் மறந்துபோனால், குழந்தைகள் ஒப்பிப்பது இதிலுள்ள முதல் வசனமே❗
☀கர்த்தரையே உங்கள் மேய்ப்பராக்கினால் வாழ்க்கை மனரம்மியமாக மாறும் என்கிறது இதிலுள்ள இரண்டாம் வசனமே❗
☀தாய் போல் ஆத்துமாவை தேற்றி தகப்பன் போல் நீதியை காற்றுத்தருவது இதிலுள்ள மூன்றாவது வசனமே❗
☀மரண படுக்கையிலும் விசுவாசிகளுக்கு தைரியமூட்டுவது இதிலுள்ள நான்காம் வசனமே❗
☀சத்துருக்களின் நெருக்கத்தின் மத்தியிலும் தலை நிமிர செய்வது இதிலுள்ள ஐந்தாம் வசனமே❗
☀பரிசுத்தவான்களின் வாஞ்சையையும், நம்பிக்கையையும் படம்பிடித்து காட்டுவது, இதிலுள்ள கடைசி வசனமே❗
[13/11 10:03 am] Elango: தாவீதின் பாடல்
கர்த்தர் என் மேய்ப்பர்.
*எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.* சங்கீதம் 23.1
அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார். சங்கீதம் 23.2
அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார்.
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார். சங்கீதம் 23.3
*மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன்.*
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர்.
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும். சங்கீதம் 23.4
கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர்.
*என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது* சங்கீதம் 23.5
என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும்.
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன். சங்கீதம் 23.6
[13/11 10:03 am] Elango: -
1 ஆண்டவரே என் ஆயர்; *எனக்கேதும் குறையில்லை*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:1
2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; *அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:2
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:3
4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:4
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் ப+சுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:5
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:6
[13/11 10:07 am] Elango: 9⃣ சங்கீதம் 23:6
[6]என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
நன்மையான எந்த ஈவும் பரத்திலிருந்து ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது என்று நாம் பார்க்கிறோம். யாக்கோபு 1:17
*நன்மையையும், கிருபையையும் நம் வாழ்நாள் முழுவதும் நாம் பெற என்ன வழி என்று பார்க்கலாம்.*
1. கற்பனையை கைக்கொள்தல்
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். உபாகமம் 5:10
2. அவரிடத்தில் நாம் திரும்ப வேண்டும்.
நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; *உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்* 2 நாளாகமம் 30:9
3. தேவனின் மனஉருக்கமும், இரக்கமும்.
அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை. நெகேமியா 9:17
*ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.*சங்கீதம் 86:5
[13/11 10:07 am] Jeyanthi Pastor VDM: 11 கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை, இனி பூலோகக் குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை.
ஏசாயா 38:11,12 என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது, நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன், என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார், இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.
ஏசாயா 38:12
13 விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன், அவர் சிங்கம்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார், இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,
ஏசாயா 38:13
14 நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன், என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின, கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன், என் காரியத்தை மேற்போட்டுக் கொள்ளும் என்றேன்.
ஏசாயா 38:14
[13/11 10:18 am] Jeyanthi Pastor VDM: 12 நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன். அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொருக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
யோபு 16:12
13 அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துக்கொண்டார்கள். என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார். என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
யோபு 16:13
14 நொறுக்குதலின் மேல் நொறுக்குதலை என் மேல் வரப்பண்ணினார். பராக்கிரமசாலியைப் போல என் மேல் பாய்ந்தார்.
யோபு 16:14
15 நான் இரட்டுச் சேலையைத்தைத்து, என் தோலின்மேல் போர்த்துக் கொண்டேன். என் மகிமையைப் புழுதியிலே போட்டு விட்டேன்.
யோபு 16:15
16 அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது. மரண இருள் என் கண்ணிமைகளின் மேல் உண்டாயிருக்கிறது.
யோபு 16:16
17 என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
யோபு 16:17
[13/11 10:20 am] Elango: *நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;* தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.சங்கீதம் 23:4
இங்கு மரண இருளின்✅ பள்ளத்தாக்கு என்பதை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1⃣ சரீர மரணம்
2⃣ பாடுகள், வேதனை, துன்பம், உபத்திரவம்
3⃣ ஆவிக்குரிய மரணம்.
[13/11 10:23 am] Jeyanthi Pastor VDM: 👆🏻👆🏻 நீதிமானாகிய யோபுவின் கதறல், நீதிமானுடைய ஜெபங்கள் கேட்கப்படாவிட்டால் மரண இருள் போல தோன்றுமோ? இல்லை, இரண்டத்தனையான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கு முன் மரண இருள் போன்ற கைவிடப் பட்ட நிலைமை கட்டாயம் நீதிமான் அனுபவிக்க வேண்டுமா பாஸ்டர்?
[13/11 10:39 am] Elango: *இங்கு மரண இருளின் பள்ளத்தாக்கு என்பதை மூன்று வகையாக பிரிக்கலாம்.*
1⃣ சரீரர மரணம்
இச்சொல் உடல் சம்பந்தமான ஆவிக்குரிய பயன்பாட்டையே கொடுக்கிறது.
*மரணம் என்பது மரணமல்ல, அது இடமற்றமே ... நம் சரீரத்திலிருந்து விடுபட்டு, தேவனோடு இருக்க செல்லும் ஒரு நிகழ்வு மட்டுமே*
யோபு 10:21
[21] *காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும்,* இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே,
யோபு 38:17
[17] *மரணவாசல்கள்* உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?
2⃣ கண்ணீர், பாடு, வேதனை, உபத்திரவம், துன்பம்.
வாழ்க்கையில் அல்லது தேசத்தில் நெருக்கம் பாடுகளை குறிக்கிறது.
எரேமியா 2:5
[5]கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், *வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும்,* ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
சங்கீதம் 44:18
[18]நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, *மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,*
3⃣ஆவிக்குரிய மரணம்.
ஏசாயா 9:2
[2]இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; *மரண இருளின் தேசத்தில்* குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
மத்தேயு 4:15
[15]இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; *மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,*
[13/11 10:41 am] Elango: ஒவ்வொரு விசுவாசியும் மேலே குறிப்பிட்ட மூன்று மரணத்தின் வழியாக கடந்தே ஆக வேண்டும்.
நம் தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிப்பது எல்லாமே நன்மைக்கே ரோமர் 8:28 அவை இரட்டத்தனையான ஆசீர்வதத்தோடு முடியும்.
[13/11 10:45 am] Elango: மோட்ச பிரயாணம் புஸ்தகத்தை படிக்கும் போது, கிறிஸ்தியான் மரண இருளின் பள்ளத்தாக்கை கடக்கும் போது ஜெபித்துக்கொணேடே, அழுதுக்கொண்டே கடப்பான்...உண்மையிலேயே நமக்கும் அழுகை வந்துவிடும்...
[13/11 10:47 am] Jeyanthi Pastor VDM: Yes Pastor. Very nice, If it is real, Epdi irukum 👆🏻
[13/11 10:52 am] Elango: கஷ்டம் தான் வேதனையே...ஆனால் அதை கடந்த பிறகு கிறிஸ்தியான் தேவனை துதித்துக்கொண்டே போவான்...அதை படிக்கும் போது நமக்கும் சந்தோஷமாக இருக்கும்..😀😀😀
[13/11 10:53 am] Elango: 3⃣ *நான் தாழ்ச்சியடையேன்.* என்பதன் அர்த்தம் என்ன❓எதிலெல்லாம் நாம் தாழ்ச்சியடைய மாட்டோம்❓
தேவனை நம் மேய்ப்பனாக முன்நிறுத்தும் போது, அவரே நம் எல்லா தேவைகளையும் சந்திப்பார். நமக்கு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வார், ஒரு நன்மையும் தேவையும் குறைவு படாது.
*தேவனை முற்றிலும் சார்ந்து வாழும் தேவ மனிதர்கள் தங்களுடைய குறைவிலும் மனரம்மியமாக, மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்வார்.*
17. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
18. *நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்*
19. *ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்;* அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். ஆபுகூக் 3:17-19
11. என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; *ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.* பிலிப்பியர் 4:11
[13/11 11:03 am] Elango: தேவனுடைய வல்லமையை, அவரது பெலத்தை, குணத்தை நாம் முழுமையாகவும் அறிய முடியாது என்றாலும், *தேவன் தன்னை ஜனங்களுக்கு புரியும் மொழியில், புரியும் விதத்தில் ஜனங்களை ஆடுகளாகவும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு தன்னை ஒரு மேய்ப்பனாக காட்டுகிறார்.*
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? *உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?*சங்கீதம் 74:1
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், *உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.* சங்கீதம் 77:20
அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் *உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள்* உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.சங்கீதம் 79:13
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை *ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே,* செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.சங்கீதம் 80;1
அப்படிச் செய்தால் *பிரதான மேய்ப்பர்* வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.1 பேதுரு 5:4
*சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்;* இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.1 பேதுரு 2;25
*நானே நல்ல மேய்ப்பன்:* நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:11
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற *உமது சுதந்தரமான மந்தையாகிய* உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக. மீகா 7:14
சங்கீதம் 95:7, 100:3, 119:76, ஏசாயா 40:11, எரேமியா 31:10, 23:1-3, எசேக்கியல் 34:1-31, மத்தேயும் 15:24, 18;12, சகரியா 11:16,13:7 , எபிரேயர் 13:20, அப்போஸ்தலர் 20:28
[13/11 11:13 am] Jotham Brad VTT: யோபு, Chapter 10
21. காரிருளும் மரணாந்தகாரமுள்ள தேசமும், இருள் சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு நான் போகுமுன்னே,
இது நரகத்தை குறிக்கும் தானே......
[13/11 11:13 am] Jeyanthi Pastor VDM: தாழ்ச்சி என்பது குறைவூ
[13/11 11:13 am] Jeyanthi Pastor VDM: குறைவு
[13/11 11:14 am] Jeyanthi Pastor VDM: எல்லாக் காரியங்களிலும் வரும்
[13/11 11:15 am] Jeyanthi Pastor VDM: மழைத் தாழ்ச்சியிலிருந்து, எல்லா தேவைகளிலும் வரும்
[13/11 11:17 am] Jeyanthi Pastor VDM: Yes, but மரண இருளின் பள்ளதாக்கு இப்படியிருக்குமென குறிப்பிட்டேன் பாஸ்டர்
[13/11 11:19 am] Levi Bensam Pastor VDM: *யாருக்கு குறைவில்லை*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 சங்கீதம் 34:9-10
[9]கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; *அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.*
[10]சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் *குறைவுபடாது.*
[13/11 11:21 am] Levi Bensam Pastor VDM: மத்தேயு 4:14-16
[14]கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
[15]இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; *மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,*👇 👇 👇 👇 👇 👇 👇 👇
[16]ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
[13/11 11:26 am] Elango: *கர்த்தரையே மேய்ப்பனாக நான் கொண்டால், கர்த்தர் எனக்கு என்னவெல்லாம் தேவையென்று சித்தமாயிருக்கிறாரோ அவற்றில் ஒன்றில் கூட நான் குறைவுள்ளவனாக இருக்க மாட்டேன்.*
வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த தேவன் அவர்களின் தேவையை எல்லாம் அறிந்திருந்தார் அவற்றையெல்லாம் நிறைவேற்றினார்.
உபாகமம் 29:5 கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; *உங்கள்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.*
[13/11 11:29 am] Jeyanthi Pastor VDM: Ithu கிருபை. Excellant கிருபை.
[13/11 11:29 am] Levi Bensam Pastor VDM: 1 இராஜாக்கள் 9:11-13
[11]தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த *தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.*
[12]ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; *அவைகளில் அவன் பிரியப்படவில்லை*.
[13]அதனாலே அவன்: என் சகோதரனே, *நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்?*❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ ❓ என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.
[13/11 11:33 am] Levi Bensam Pastor VDM: *யாருமே விரும்பாத கலிலேயா பட்டணத்தில் இயேசு கால் பதித்தபோது, 👉 மரண இருள் மாறியது*👌👍
[13/11 11:34 am] Elango: யாத்திராகமம் 16:18 பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: *மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை;*அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
நமக்கு எது தேவை என்று கர்த்தர் அறிவார், ஆவிக்குரிய விதமாகவோ அல்லது இந்த மண்ணுக்குரிய தேவையாகவோ எந்த தேவையையும் பூர்த்தி செய்யும் தேவனாக இருக்கிறார்.
அப்பத்தை கேட்டால் கல்லைகொடுக்கமாட்டார், மீனை கேட்டால் பாம்பை கொடுக்கமாட்டார் நம் தகப்பன். கேளுங்கள் தரப்படும் என்று வாக்குறுதி செய்த தேவாதி தேவன், அவருடைய சித்தத்தின் படியே நாம் கேட்டால் அதை கண்டிப்பாக பெற்றுக்கொள்வோம் என்றும் நாம் அறிவோம். 1 யோவான் 5:14-15
[13/11 11:34 am] Elango: உபாகமம் 2:7 உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; *இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.*
*விசுவாச வாழ்க்கை என்பது நாம் விரும்பியது நாம் கேட்டது எல்லாம் பெற்றுக்கொண்டோம் என்பதல்ல, கர்த்தர் நமக்கு கொடுத்ததில் மனரம்மியமாக வாழ கற்றுக்கொள்வதே. எல்லாவற்றையும் கொடுக்கும் கர்த்தரே நம் பக்கம் இருந்தால், நமக்கு வேண்டியவைகளை அவர் அறியாமல் இருப்பாரோ?
நாம் தேவனிடம் கேட்டது உடனே பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தக்க சமயத்தில் நம் தேவைகளை எல்லாம் அவர் நிறைவேற்றுகிறவராக இருக்கிறார்.
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி❓❓❓❓❓❓❓🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ரோமர் 8:32
[13/11 11:38 am] Elango: *நாம் தேவனிடத்திலிருந்து எவ்வளவு பெற்றுக்கொண்டோமோ அவற்றில் நாம் சந்தோசமாக இருக்கிறோம் என்பதே நம் விசுவாச வாழ்க்கையை காட்டுகிறதாயும், பரம தகப்பனையே நம்பி வாழும் பிள்ளையும் காட்டுகிறது*
சங்கீதம் 34:9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; *அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.*
சங்கீதம் 34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; *கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.*
[13/11 11:39 am] Jeyanthi Pastor VDM: Amen 2 சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
யோபு 29:2
3 அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது. அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
யோபு 29:3
4 தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
யோபு 29:4
[13/11 12:04 pm] Levi Bensam Pastor VDM: *ஏன் குறைவு பட தொடங்குகிறோம்*👂👂👂👂👂
[13/11 12:09 pm] Jeyanthi Pastor VDM: கொடுப்பதில் குறைவு, தாழ்ச்சி வருமா,
[13/11 12:09 pm] Jeyanthi Pastor VDM: தசம பாகம்?
[13/11 12:14 pm] Levi Bensam Pastor VDM: லூக்கா 15:14-17
[14]எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது *அவன் குறைவுபடத்தொடங்கி,*👇 😭😭😭😭😭😭😭😭😭
[15]அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். *அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.*😭😭😭😭😭😭😭😭😭😭
[16]அப்பொழுது *பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான்,*😭😭😭😭😭😭😭 *ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.*🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂
[17]அவனுக்குப் *புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.*✅✅✅✅✅✅ *இன்று அநேகருடைய நிலமை இது போல் பரிதபிக்கபட்ட நிலைமைதான், புத்தி தெளியட்டும்*🙏🙏🙏🙏🙏🙏🙏
[13/11 12:30 pm] Elango: லூக்கா 6:38
[38] *கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்;* அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
[13/11 12:33 pm] Elango: ⃣ சங்கீதம் 23:4
[4]நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
*கோலும், தடியும் என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*
கோலும், தடியும் என்பது மேய்ப்பனின் பராமரிப்பையும், ஆளுகையும் குறிக்கும். தேவனுடைய ஆளுகையை - அதாவது அவருடைய நீதியை, விருப்பத்தை செய்யும் படியாக நம்மை கெட்ட பாதையிலிருந்து நல்ல சரியான பாதையில் அந்த தடி நம்மை திருத்துகிறதாகவும், கண்டிக்கிறதாகவும், சிட்சித்து ஜீவ பாதையில் வழிக்காட்டுகிறதாக இருக்கிறது.
தகப்பன் தன் புத்திரனை சிட்சித்து நல்ல வழியில் அவனுடைய பிரயோஜனத்திற்க்காகவே நடத்துவது போன்றது.
கோலும், தடியும் என்பது தேவனுடைய அன்பையும், வழிக்காட்டுதலையும் நமக்கு உணர்த்துகிறது.
அவர் சிட்சியாவிட்டால் நாம் வேசிப்பிள்ளையாக மாறியிருப்போமே!
அவர் கடிவாளம் இடாவிட்டால், மாற்றான் தோட்டத்தில் மாய்ந்திருப்போமே!
அவர் உணர்த்தாவிட்டால், நரக பாதையில் சென்றிருப்போமே!
அவர் அடி நமக்கு உறைக்காவிட்டால், நம் சிங்கம், புலியிடம் மாட்டியிருப்போமே!
அவர் நம்மை தடியால் உபத்திரபடுத்தாவிட்டால், நாம் அவர் கற்பனையை கைக்கொள்ளாமல் போயிருப்போமே!
என்னை ஆளும் கர்த்தாவே
என்னை நடத்தும் கர்த்தாவே
என்னை செம்மைபடுத்தும் கர்த்தாவே!
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள் 3:11-12
[13/11 12:41 pm] Elango: *சங்கீதம் 23 சுருக்கவுரை*
☀ வசனம் 1: கர்த்தர் என் மேய்ப்பனாயிருக்கும்போது, *நான் திருப்தியாகயிருப்பேன்*
☀வசனம் 2: கர்த்தர் என்னை எங்கே, எந்த இடத்தில் வைக்கிறார் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. *கர்த்தர் என்னை எந்த இடத்தில், எந்த நிலையில் வைத்தாலும் அவர் என்னை மகிழ்ச்சியாகவே, திருப்தியாகவே வைத்திருக்கிறார், வைத்திருப்பார்* என்ற விசுவாசம்.
☀வசனம் 3: *என் ஆத்துமா தொய்ந்து போகாதபடிக்கு, துக்கத்தில் ஆழ்ந்துவிடாத படிக்கு, அவரின் ஆவியால் என்னை நிரப்பி என்னை தேற்றுகிறார், ஆற்றுகிறார், உற்சாகப்படுத்துகிறார்.* அவருடைய மகிமைக்காக ஏற்படுத்தின பாத்திரம் நாம். அவருடைய நாமத்தின் நிமித்தம் நம் தேவைகளை எல்லாம் சந்திப்பார், நம்மை நீதியின் பாதையில் நடத்துவார்.
☀வசனம் 4: இந்த வசனத்தில் பயமின்மையை காட்டுகிறது. *மேய்ப்பனின் ஆட்டின் கையில் இருக்கும் ஆட்டுக்குட்டி பயப்படுமோ?* கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால் நமக்கு விரோதமாக எழும்புகிறார் யார்? நாம் கர்த்தரின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்று விசுவாசித்தால், நாம் ஒன்றுக்கும் கவலைப்பட மாட்டோம்.
☀வசனம் 5: *நான் உலகத்தை ஜெயித்தேன் என்பவருடைய ஆவி நம்முடன் இருக்கும்போது, எப்போது இந்த பொல்லாத உலகத்தில் சத்துருக்கள் முன்னிலையில் நமக்கு பந்தியை கர்த்தர் ஆயத்தப்படுத்துகிறவராயிருக்கிறார்.*
*என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்பது திருப்தியை, முழுமையை பெறுதல், நம்முடைய தேவைக்கு அதிகமாக கிருபைகளையும், அபிஷேகத்தையும், ஆசீர்வாதத்தையும் பெறுவதை குறிக்கிறது.*😇
அவருடைய பரிபூரணத்தினால் நாம் பரிபூரணமடைகிறோம், கிருபையின் மேல் கிருபை பெறுகிறோம்.
☀வசனம் 6: *கர்த்தருடைய வீட்டில் நாம் நீடித்த நாட்களாய் அவரோடு இருப்பதை, நித்திய பாதுகாப்பை நினைப்பூட்டி உறுதியளிக்கிறது இந்த கடைசி வசனம்.* கர்த்தரோடும், கர்த்தருடைய சமூகத்தையும் நாம் அனுதினுமும் தேடி வாஞ்சிக்கிறவர்களாக இருக்கவேண்டும்.
[13/11 2:00 pm] Elango: 2⃣ *சங்கீதம் 23 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓*
இந்த சங்கீதத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். 👇🏻👇🏻
1⃣ *மேய்ப்பன் ஆடுகளின் தேவையை சந்திக்கிறார்*
☀நம்முடைய இப்பூமிக்குரிய தேவைகளை தேவன் சந்திக்கிறவராயிருக்கிறார்.
*இந்த தற்காலிக பூமியில் நமக்கு தேவையானதை எல்லாவற்றையும் அவரை விசுவாசித்து வாழும் போது எல்லாவற்றையும் தருகிறவராயிருக்கிறார்.
சங்கீதம் 84:11-12
[11]தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; *உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.*
[12]சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
லூக்கா 12:22-32, வெளிப்படுத்தின விசேஷம் 7:17 , மத்தேயு 6:33, சங்கீதம் 34:9-10, 84:11, லூக்கா 12:30:32, ரோமர் 8:32, பிலிப்பியர் 4:19, எபிரேயர் 13:5
[13/11 2:12 pm] Elango: ஆவிக்குரிய தேவைகளை சந்திக்கிறவராய் இருக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19]நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
1 கொரிந்தியர் 10:13
[13]மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
[13/11 2:16 pm] Elango: 2⃣. *மேய்ப்பன் ஆடுகளை பாதுகாக்கிறார்*
மரண இருளின் பள்ளத்தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்கிறார். - எபிரேயர் 13:5-6, 12:5-11
சத்துருக்களிடமிருந்து - யோவான் 16:33, எபேசியர் 3:29
3⃣. *மேய்ப்பனின் நித்திய கிருபை எப்பொழுதும் நம்முடன் இருக்கிறது.*
2 தீமோத்தேயு 4:18
[18]கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, *தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்;* அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
யோவான் 14:1-3
[1]உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
[2]என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; *ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.*
[3]நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
[13/11 2:23 pm] Elango: 9⃣ சங்கீதம் 23:6
[6]என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
*இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓*
ஆண்டவரின் நன்மை எல்லா நேரங்களிலும், நம்மை சுற்றியே இருக்கிறது. தேவனுடைய நன்மையும் கிருபையும் நம்மை விட்டு ஒருநாளும் விலகாது நாம் அவரை விட்டு விலகாதவரைக்கும்.
*என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்;* என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர் சங்கீதம் 30:11
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் *தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.* ரோமர் 8:28
[13/11 2:24 pm] Elango: *கர்த்தருடைய * வீட்டில் நாம் நீடித்த நாட்களாய் அவரோடு இருப்பதை, நித்திய பாதுகாப்பை நினைப்பூட்டி உறுதியளிக்கிறது இந்த கடைசி வசனம்.* கர்த்தரோடும், கர்த்தருடைய சமூகத்தையும் நாம் அனுதினுமும் தேடி வாஞ்சிக்கிறவர்களாக இருக்கவேண்டும்.
*கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.* சங்கீதம் 27:4
கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். சங்கீதம் 26:8
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். சங்கீதம் 65:4
[13/11 2:40 pm] Jeyanthi Pastor VDM: Praise God. இந்த கிருபை நமக்குக் கர்த்தர் தர வேண்டும். இந்த ஒரே வாஞ்சையில் தான் விசுவாசத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறோம்.
[13/11 3:19 pm] Jeyanthi Pastor VDM: உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான், உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
சங்கீதம் 65:4
1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
சங்கீதம் 84:1
2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது, என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
சங்கீதம் 84:2
3 என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
சங்கீதம் 84:3
4 உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)
சங்கீதம் 84:4
[13/11 9:46 pm] Elango: சங்கீதம் 37:25
[25]நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; *ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.*
[13/11 9:46 pm] Elango: சங்கீதம் 37:28
[28]கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; *அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்;* துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோகும்.
[13/11 9:47 pm] Elango: சங்கீதம் 37:32-33
[32]துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
[33] *கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை;* அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
Post a Comment
0 Comments