[08/11 11:45 am] Elango: 🎷🎻 *இன்றைய (08/11/2017) வேத தியானம் - சங்கீதம் 22* 🎷🎻
1⃣ சங்கீதம் 22 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 22 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 22 ல் சொல்லப்பட்ட சம்பவங்கள் தாவீதின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களா அல்லது இச்சங்கீதம் கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனமா❓
4⃣ சங்கீதம் 22:1
[1]என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு இரட்ச்சியாமலும் செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
நாமும் சில வேளையில் தேவ பிரசன்னம் இல்லாமலும், தேவன் நமக்கு தூரமாக இருப்பது போல் ஏன் உணர்கிறோம்❓
5⃣ சங்கீதம் 22:12
[12]அநேகம் *காளைகள்* என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த *எருதுகள்* என்னை வளைந்து கொண்டன.
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
6⃣ சங்கீதம் 22:16
[16]நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கினறன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; *என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.*
இச்சங்கீதத்தை எழுதிய தாவீதின் கைகளையும், கால்களையும் எங்காவது யாராவது குத்தியதுண்டா❓
7⃣ சங்கீதம் 22:24
[24]உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
இந்த வசனத்தின் அர்த்தம் விளக்குங்களேன்.
8⃣ சங்கீதம் 22:29
[29]பூமியின் செல்வந்தர் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்;jj *புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.*
இந்த வசனத்தின் அர்த்தம் விளக்குங்களேன்.
______________________________________
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/eXuRBd
*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* - https://goo.gl/1Kf2BV
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
______________________________________
[08/11 12:53 pm] Elango: *அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.*
[08/11 12:55 pm] Elango: *சங்கீதம் 22 - சுருக்கவுரை*
அகிலேத் ஷகார் என்பது "காலை மான் என்று பொருபடும். காலை வேளையில் வேட்டையாடப்படும் மானின் நிலையை விளக்குமாறு அமைந்துள்ளது இச்சங்கீதம்.
சிலுவைச் சங்கீதம் என்பது மிகவும் பொருத்தமான பெயர். பயபக்தியுடன் கவனமாக வாசிக்கப்படவேண்டிய வேதபகுதி இது.
வசனங்கள் 1-2 : *கைவிடப்பட்டவரின் கதறல்*
வசனங்கள் 3-5 : *நம்பிக்கை*
வசனங்கள் 6-8 , 11-18 : *வேதனைகள்*
வசனங்கள் 9-10 : *நீரே என் நம்பிக்கை*
வசனங்கள் 11,19-20 *விண்ணப்பம்*
வசனங்கள் 21-22,24 - *விண்ணப்பம் கேட்கப்படல்*
வசனங்கள் 23 : *துதிக்குபடி இஸ்ரவேலரைக் கேட்டல்.*
வசனங்கள் 25 : *விண்ணப்பம் கேட்கப்பட்டதற்கு நன்றி.*
வசனங்கள் 26-31 : *தீர்க்கதரிசன வசங்கள்.*
*மேசியாவைக் குறித்த 5வது சங்கீதம் இது. மேசியாவின் மரணத்தைக் குறித்த அநேககுறிப்புகள் மிகவும் தெளிவாக இதில் முன்னுரைக்கப்பட்டுள்ளன.*
இக்குறிப்புகளில் வேறு யாருக்கும் பொருந்தாதவை பல உள்ளன.
[08/11 1:09 pm] Elango: மெய்யான விடுதலை என்பது, கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவினால் மட்டுமே ஒரு நபருக்கு கிடைக்கிறதாய் இருக்கிறது. இயேசுவே பதிலாய் இருக்கிறார்.
*அவர் சாத்தானை நமக்காய் சிலுவைக்கு சென்ற போது வென்றுவிட்டார்.*
[08/11 3:33 pm] Elango: 4⃣ சங்கீதம் 22:1

22:1 என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்?
தம்முடைய பரம பிதாவானவர் அவருடைய கரிசனையும், பாதுகாக்கக்கூடியதுமான சமூகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள, சிலுவையின் மேல் இயேசு தெரிவித்த அச்சம் நிறைந்த சத்தமாகும் இது.
ஏசாயா 53:10-12 , 2 கொரி. 5:21, மத்தேயு 27:46
பாவிகளுக்கு பதிலாக அவர் பாடுபட்டு, நமக்காக அவர் ஒரு சாபமானபடியினால், இயேசு தேவனால் கைவிடப்பட்டார்.
[13]மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, *கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்*
கலாத்தியர் 3:13
ரோமர் 8:3
[3]அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, *தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.*
விசுவாசியான நாமும், இயேசுவைப் போலவே தேவனால் கைவிடப்பட்டதைப்போல், சில சமயங்களில் உணரலாம். இப்படி நிகழும் போது தேவனில் நம்முடைய விசுவாசத்தைப் ப்ற்றிக்கொண்டு, ஜெபத்திலும், நம்பிக்கையிலும் நிலைத்திருக்க வேண்டும்.
புலம்பல் 3:31-32
[31] *ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.*
[32]அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
[08/11 3:36 pm] Elango: ஏசாயா 54:7-8
[7] *இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்;* ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
[8] *அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்;* ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
[08/11 3:39 pm] Elango: சங்கீதம் 22:1
*சிலுவையில் இயேசு பட்ட பாடுகளில் மிகவும் கொடுரமானது அவர் தனது பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்டாதாகும்.*
எல்லாப் பாடுகளையும் பொறுமையோடு சகித்த அவர் இதைத் தாங்க முடியாமல் கதறினார். மனுக்குலத்தின் பாவங்கள் பிதாவையும், மகனையும் பிரித்தபோது பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் நமது பிரதிநிதியாகப் பிதாவை நோக்கி, என் தேவனே என் தேவனே என்று அழைத்தார்.
[08/11 3:47 pm] Elango: அவர் எல்லாவற்றையும், சகித்தார், தாங்கினார், பொறுத்துக்கொண்டார், ஆனால் பிதாவின் உறவின் பிரசன்னத்தை, உறவை இழந்த போது அதை தாங்க முடியாதிருந்த வேதனையாக இருந்தது.
தேவனோடு நடந்தவர்கள், எப்போதும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தவர்கள் அவரின் பிரசன்னத்தை எப்போதாவது அவரின் உறவை இழந்தது போல் நாம் உணரும் போது அது மகா கொடிய வேதனை. தேவ மனிதன் தேவனை நோக்கி கதறி விடுவான்
யூதாஸ் காட்டிக் கொடுக்கலாம் ,
சீடர்கள் ஓடிப்போகலாம், குட்டப்படலாம்,
முட்கிரீடம் சூட்டப்படலாம்,
கோலால் அடிக்கப்படலாம்,
ஏளனம் செய்யப்படலாம், துப்பப்படலாம் ,
சுவுக்கால் அடிக்கப்படலாம்,
சுலுவையைச் சுமந்து செல்ல வைக்கப்படலாம்,
கோரமாக ஸ்லுவையில் ஆணிகடாவப்படலாம்.
*ஆனால் அனால் இவை ஒன்றுக்கும் இயேசு கலங்கவில்லை. கதறவுமில்லை. ஆனால் பிதாவிடமிருந்து பிரிக்கப்பட்டபொழுது அவர் என் தேவனே நீர் ஏன் கைவிட்டீர் என்று கதறினார்.*
மற்றவர்கள் கைவிடலாம், நீர் ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறினார். கைவிடப்படுதலில் உள்ள துயரத்தையும் இயேசு அனுபவிப்பதற்க்காக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பிதாவும் குமாரனும் நமக்காக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
*பிதாவும், குமாரனும் நமக்காக அனுபவித்த இவ்வேதனைக்காக என்றென்றும் நாம் துதிக்கக்கடவோம்.*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[08/11 3:47 pm] Elango: ஐயோ என் ஒரேபேறான மகனைக் கைவிட நேர்ந்ததே என்று பிதாவும் துடித்திருப்பாரன்றோ! கைவிடப்படுவதின் வேதனையை அனுபவித்தால் நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என வாக்குறுதி தந்துள்ளார். எபிரேயர் 13:5
பிதாவானவர் குமாரனுக்குப் பிதாவாகவும், தேவனாகவும் இருக்கின்றார்.
யோவான் 20:17, எபிரேயர் 1:9, வெளிப்படுத்தின விசேஷம் 1:6.
[08/11 3:50 pm] Elango: ஏசாயா 53:1-12
[1]எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
[2]இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
[3]அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
[4]மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
[5] *நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.*
[6]நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; *கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.*
[7]அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
[8]இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; *என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.*
[9]துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
[10]கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; *அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது,* அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
[11]அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; *என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[12] *அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.👍👍👍👍👍*
[08/11 3:55 pm] Elango: பாவம் முதல் நிலையாகிய தேவனது திட்டத்தைத் தீர்மானிக்கச் செய்கிறதாய் இருக்கிறது. சிலுவையில் பாவமானது நியாந்தீர்க்கப்பட்டுவிட்டது. மனிதனுக்கும், தேவனுக்குமிடையே இருந்தத் தடைச்சுவரானது அகற்றப்பட்டுவிட்டது, ஆகையால் மனிதன் தேவனோடு கொள்ளும் உறவானது அவனது சுயசித்தத்தைச் சார்ந்ததாய் இருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நபர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது, தெரிந்துகொள்ளப்பட்ட தேவ தூதர்கள் மகிழ்ந்து களிகூறுகின்றனர். ஏதேன் தோட்டத்தில் மனிதன் அறியாமையுள்ளவனாய் இருந்தான், அவன் செய்ய வேண்டியதெல்லாம், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திற்கு விலகி இருத்தல் ஆகும். *இப்பொழுது மனிதன் குற்ற உணர்வுடன் இருப்பதால், அவன் சிலுவை மரத்தண்டைக்கு வர வேண்டியவனாய் இருக்கிறான்.*
1 பேதுரு 2:24
[24]நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
[08/11 3:57 pm] Elango: நம்முடைய ஆராதனையில் முதலாவதாக, எப்பொழுதும் சிலுவை, மற்றும் உயிர்த்தெழுதல், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து உயர்த்தப்படுதல் அவசியம்.
[08/11 3:58 pm] Elango: அப்பம், அவரது சரீரம் நமது பாவங்களுக்காக சிலுவையில் நொறுக்கப்பட்டதை பிரதிபலிக்கிறது. 1கொரிந்தியர்11:24
திராட்சை ரசம், அவரது இரத்தத்தை பிரதிபளிக்கிறது மற்றும் நமது இரட்சிப்புக்கு உத்திரவாதமாய் இருக்கிறது. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. 1 கொரிந்தியர். 11:25
[08/11 3:58 pm] Elango: கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது, மனுக்குலத்தின் பாவத்திற்க்குரிய அனைத்துக் கடன்களுக்குரிய கிரயமும் செலுத்தப்பட்டு தீர்ந்தாயிற்று. எபிரெயர் 9:23-28
[08/11 3:59 pm] Elango: மரணம் என்பது சிலுவையினால் மேற்கொள்ளப்பட்டு, தோற்கடிக்கப்பட்டுள்ளது, இதற்கு காலியான கல்லறையானது உயிர்த்தெழுதலுக்கு ஆதாரமாய் விளங்கி வருகிறது.
[08/11 3:59 pm] Elango: கிறிஸ்துவின்நீதி நம்மைப் பாதுகாக்கின்றது. நாம் அவரது நீதியில் மட்டும் நிற்கிறவர்களாய் இருக்க வேண்டும். கிறிஸ்து தமது நீதியை சிலுவையில் நமக்காய் தந்தருளினார். 2 கொரிந்தியர் 5:21
[08/11 4:00 pm] Elango: கிறிஸ்து தனக்கே விருப்பமுள்ளவராய் நடந்துகொள்ளவில்லை. நமக்கு ஒருபோதும் இல்லாத அளவுக்கு, அவர் மனிதனாய் இருந்தபோது நெருக்கங்களை சந்தித்தவராய் இருந்தார்.
பழைய ஏற்பாட்டில் இவ்வாறு கூறப்படுகிறது, "உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது, உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது" சங்கீதம் 69:9
நமது பாவங்களை கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்தபோது, மிகுந்த நெருக்கங்களுக்கு உட்பட்டார்.
[08/11 4:32 pm] Elango: 👍👍 யெஸ் நம்முடைய வாழ்க்கையையும் வேத வசனத்தனோடோ ஒப்பிட்டு பார்க்கும் போது எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்கும்.
[08/11 4:42 pm] Jeyanthi Pastor VDM: முதல் இரண்டு வசனங்களும் ஜெபமாகவும் , மூன்றாவது துதியின் வசனமுமாக முடிந்தாலும்,
நான்காவது வசனம் வித்தியாசமான தியானமாக மாறுகிறது.
[08/11 4:44 pm] Jeyanthi Pastor VDM: 4 எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள், நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
சங்கீதம் 22:4
5 உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள், உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
சங்கீதம் 22:5
[08/11 9:45 pm] Elango: சிலுவையில் தான் பல கொடுமைகளை அனுபவிக்கும் நேரத்திலும் பிதாவைப் பரிசுத்தர் என்று கூறி யாவற்றையும் ஏற்றுக்கொண்டார் இயேசு கிறிஸ்து.
சங்கீதம் 22:3
[3]இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற *தேவரீரே பரிசுத்தர்.*
*தேவனுடை பிரசன்னத்திற்க்குச் செல்வதற்கு மிகவும் சிறந்த வழி துதித்தலாகும். ஏனெனில் அவர் துதிகளின் மத்தியில் வசம் செய்கிறார்.*
[08/11 9:48 pm] Elango: 5⃣ சங்கீதம் 22:12

களைகள், எருதுகள் என்பவை மேசியாவுக்கு எதிராகச் செயல் புரிந்த யூதத்தலைவர்களை, உலகின் பாவப்ப்பரத்தை அந்தகார சக்திகளை குறிப்பிடுகின்றன.
[08/11 10:09 pm] Elango: இயேசுவின் மரணம் பிதாவாகிய தேவனால் உலகத்தோற்றத்திற்க்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது வெளிப்படுத்தின விசேஷம். 13:8. ஆனால் பிதா தனது மகனைக் கொல்லவில்லை. மற்றவர்கள் அவரை கொல்வதற்கு அனுமதித்தார்.
இயேசு தனது எதிரிகளை எளிதில் அழிக்க முடியும் யோவான் 18:5-6, மத்தேயு 26:53-54 ஆனால் அவர் தன்னைத் தாழ்த்தி சிலுவை மரணத்திற்க்கு ஒப்புக்கொடுத்தார். பிலிப்பியர் 2:8 தன்னைக் துன்புறுத்த இயேசு அனுமதித்தார்.
யோவான் 10:17-18
[17]நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
[18] *ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.* இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
[08/11 10:13 pm] Elango: யூதர்கள், தாங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாய் இருக்கிறோம், தேவன் எந்தவிதத்திலாகிலும் தங்களை இரட்சிப்பார் என்கின்றனர்.
எப்படியிருப்பினும், *ஒரே வழி மட்டும்தான் உண்டு அது சிலுவை மூலமாக, அதைத் தவிர வேறு வழியே இல்லை, நாம் அனைவரும் இரட்சிக்கப்படும்படிக்கு, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் நாமமேயன்றி வேறு நாம் கட்டளையிடப்படவில்லை என வேதகாமம் தெளிவுறக் கூறுகிறது* அப்போஸ்தலர் 4:12
சிலுவையின் மீது கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், எல்லா மனுக்குலத்தின் முழுமையான கடன்கள் செலுத்தப்பட்டாயிற்று👨⚖👨⚖👨⚖👨⚖⚖⚖⚖
[08/11 10:16 pm] Elango: மெய்யான விடுதலை என்பது, கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவினால் மட்டுமே ஒரு நபருக்கு கிடைக்கிறதாய் இருக்கிறது. இயேசுவே பதிலாய் இருக்கிறார். அவர் சாத்தானை நமக்காய் *சிலுவைக்கு* சென்ற போது வென்றுவிட்டார்.
[08/11 10:18 pm] Elango: சங்கீதம் 22:14
[14]தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டன, என் *இருதயம் மெழுகுபோலாகி,* என் குடல்களின் நடுவே உருகிற்று.
இருதயம் மெழுகு போலாகி, பிதாவின் சித்தத்திற்க்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து சரணடைந்ததையும், மனவேதனையையும் குறிக்கிறது.
[08/11 10:39 pm] Jeyanthi Pastor VDM: 4 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது, என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
சங்கீதம் 102:4
5 என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
சங்கீதம் 102:5
6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன், பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
சங்கீதம் 102:6
7 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
சங்கீதம் 102:7
8 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள், என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
சங்கீதம் 102:8
10 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
சங்கீதம் 102:10
[08/11 10:40 pm] Jeyanthi Pastor VDM: ஆம், கர்த்தர் போல, உண்மை ஊழியனின், நிலைமையிது
[08/11 10:42 pm] Jeyanthi Pastor VDM: அதான், கர்த்தர் சொன்னார், தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன் என்று
[09/11 8:59 am] Elango: 🎷🎻 *இன்றைய (08 -09/11/2017) வேத தியானம் - சங்கீதம் 22* 🎷🎻

[09/11 9:35 am] Elango: 1⃣ சங்கீதம் 22 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
இந்த சங்கீதம் தாவீது எழுதிய பாட்டு.
இந்த சங்கீதத்தை போல சர்ச்சைக்குறிய சங்கீதம் வேறு எந்த சங்கீதமும் இல்லை.
1. இந்த சங்கீதத்தை மேசியாவின் பாடுகளை விவரிக்கும் சங்கீதம் என்று ஆரம்பகால யூத வல்லுநர்கள் நம்பினார்கள்.
2. இன்னும் சிலர் இந்த சங்கீதம் தாவீதை பற்றியும், அவனுடைய உபத்திரவத்தை பற்றியும் விவரிக்கிறது என்று விசுவாசித்தார்கள்.
3. இன்னும் சிலர் இந்த சங்கீதம் நீதிமான்களின் பாடுகளை குறித்து அறிவிக்கிறதாக இருக்கிறது என்று நம்பினர். அதில் தீர்க்கதரிசிகளான எசேக்கியா அல்லது ஏசாயாவின் பாடுகளை குறித்ததாக இருக்கலாம் என்று விசுவாசித்தனர்.
4 . கிறிஸ்தவர்களான நம்முடைய விசுவாசமோ இந்த சங்கீதம் இயேசுகிறிஸ்துவின் பாடுகளை விவரிக்கும் சங்கீதம் என்பதே.
இந்த மாதிரி சூழ்நிலையை தாவீது கடந்து செல்லவில்லை... மேலும் தாவீது இந்த சங்கீதத்தை தன்னை பற்றி எழுதாமல், தேவ ஆவியினால் ஊந்தப்பட்டு மேசியாவின் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் குறித்து எழுதுகிறார்.*
இச்சங்கீதத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட அநேக வசனங்கள் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவில் நிறைவேறியது. மத்தேயு 27:35,46 ; மாற்கு 15:34; யோவான் 19:24 ; எபிரேயர் 2:12
[09/11 9:37 am] Elango: 2⃣ சங்கீதம் 22 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
இந்த சங்கீதத்தில் 1 லிருந்து 21 வசனங்கள் வரை நாம் நினைத்துப்பார்க்க முடியாத வேதனையை, உபத்திரவத்தை, நிந்தையை சகிக்கிறார்.
❤நம்முடைய ஆசீர்வாதத்திற்க்காக அவர் சாபமானார்...
❤நம்முடைய பரிசுத்தத்திற்க்காக அவர் பாவமானார்...
❤நம்முடைய உயர்வுக்காக அவர் தாழ்மையானார்...
❤நம்முடைய சமாதானத்திற்க்காக அவர் ஆக்கினையடைந்தார்...
❤நம்முடைய சந்தோஷத்திற்க்காக அவர் உபத்திரவப்பட்டார்!
❤நம்முடைய ஒப்புரவுக்காக அவர் கைவிடப்பட்டார்!
*அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.*
[09/11 9:38 am] Elango: 6⃣ சங்கீதம் 22:16

இல்லை. இப்படிப்பட்ட பாடுகளை ஒருவரும் அடைந்திருக்க முடீயாது. இந்த பாடுகள் சிலுவையில் நம்முடைய பாவத்திற்க்காக மேசியாவின் பாடுகளை பற்றியதாக இருக்கிறது.
[09/11 9:38 am] Elango: 3⃣ சங்கீதம் 22 ல் சொல்லப்பட்ட சம்பவங்கள் தாவீதின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களா அல்லது இச்சங்கீதம் கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனமா❓
தேவ ஆவியினால் ஊந்தப்பட்டு, தாவீது எழுதிய சங்கீதம் இது.
[09/11 9:38 am] Elango: யோவான் 3:14-15
[14]சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்,
[15]தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
*சிலுவை இல்லாமல் நமக்கு வெற்றியுமில்லை, இரத்தத் சிந்தப்படாமல் பாவ மன்னிப்பும் இல்லை*
[09/11 9:39 am] Elango: இந்த சங்கீதமானது இரண்டு முக்கியமான தலைப்பின் கீழ் கொண்டு வரலாம்.
1. வசனங்கள் 1:21 : கிறிஸ்துவின் உபத்திவத்தின் மத்தியில் விண்ணப்பமும், ஜெபமும். உதவிக்காக மிகுந்த வேதனையான கதறல்.
2. 22-31 : விடுவிக்கப்பட்ட பிறகு பாடப்படும் மகிழ்ச்சியான பாடல்
[09/11 9:40 am] Elango: சங்கீதம் 22 சுருக்க தலைப்பும், வசன சுருக்கமும்!
தலைப்பு : *சிலுவையில் மேசியா*
வசனங்கள் ஒவ்வொன்றாக :
1. கதறுதல்.
2. புகார்.
3. ஒப்புதல்
4-5 மாறுபாடு
6. நிந்தனை.
7. பரியாசம்
8. இகழ்ச்சி
9,10. மேல்முறையீடு.
11. வேண்டுகோள்.
12, 13. தாக்குதல்.
14. மயக்கம்.
15. சோர்வு.
16. துளைத்தல்.
17. இளைத்தல்
17. அவமதிக்கும் பார்வை.
18. ஆடைகள் பகிர்வு.
19-21. முக்கியத்துவம்
21. விடுதலை.
22. நன்றி.
23. அழைப்பிதழ்.
24. சாட்சி.
25. சத்தியம்.
26. சாந்தகுணமுள்ளோரின் திருப்தி; தேவனை தேடுவோரின் துதி
27. உலக மாற்றங்கள்.
28. முடிசூட்டுதல்
29. விசுவாசத்தை துவக்குபவரும், முடிப்பவரும்
30. விதை.
31. விசுவாசத்தின் முடிவு.
[09/11 1:06 pm] Jeyakumar Toothukudi VTT: praise the Lord
சங் 22:20 ல் பட்டயம்
லூக் 2:35 ல் பட்டயம் என்று வருகிற த் இதற்கான வித்தியாசமும் இதன் ஆவிக்குரிய அர்த்தங்களையும் விவரியுங்கள் ஐயா!
BRO. R. Jeyakumar.
[09/11 1:24 pm] Elango: சிலுவையின் சங்கீதம் அல்லது மேசியாவின் பாடு என்று அழைக்கப்படும் இச்சங்கீதத்தில், ஆண்டவரின் மரண வேதனையும், பிதாவோடு உள்ள தொடர்பை இழந்து தவிப்பதையும், சங்கீதத்தின் முன்பகுதியிலும், அவருடைய உயிர்த்தெழுதலையும், ஆளுகையை குறித்தும் பின் பகுதியில் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் *என் தேவனே, என் தேவனே* என்று கதறுதலோடு தொடங்கும் சங்கீதம், முடிவில் நம்பிக்கையோடு முடிவடைகிறது.
*நம்முடைய வாழ்க்கையிலும் துக்கமான, இக்கட்டான வேளையில் நாம் நம் இருதயத்தை ஊற்றிவிட்டால் அவர் நம்மை நம்பிக்கையோடும் ஆனந்தகளிப்போடும் நம்மை நிரப்புவார்.*
சங்கீதம் 30:5,11-12
[5]ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; *சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.*
[11] *என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்;* என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்.
[12]என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
[09/11 1:32 pm] Premraj 2 VDM: According to the psalms whatever problems will in the Christian life we should not leave a lord Jesus Christ relationship ( psalms 22 teach us, really Amazing
[09/11 1:36 pm] Jeyanthi Pastor VDM: Yes of course
[09/11 1:36 pm] Elango: பிதாவின் பிரசன்னத்தை இழந்து ஆண்டவர் இயேசு தவித்த தவிப்பு இருக்கிறதே... அதே தவிப்பும் தேவனுடைய பிரசன்னத்தை இழக்கும் வேளையில் நாமும் தவித்தால் கதறினால் தேவன் கண்டிப்பாக செவிக்கொடுக்கிறவராக இருக்கிறார்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 5:7-9
[7]அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, *பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,*👂👂👂👂👂👂👂
[8]அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
[9]தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
[09/11 1:43 pm] Jeyanthi Pastor VDM: அது போல வேறு வேதனை என்ன இருக்க முடியும் பாஸ்டர்.
கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர், உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்
சங்கீதம் 30:7
[09/11 1:58 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தர் தம் முகத்தை மறைக்கும் போது, எல்லா உயிர்களுமே கஷ்டம்தான்.
27 ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
சங்கீதம் 104:27,28 நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும், நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
சங்கீதம் 104:28,29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும், நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
சங்கீதம் 104:29
[09/11 1:59 pm] Elango: Yes
[09/11 2:24 pm] Premraj 2 VDM: And also psalms 22 says us we are partner of Christ's suffering ( Peter : 4 : 13 ) David says lord ur my portion now we can say lord ur my portion, we are carrying little bit Christ's Barden & passion it's wonderful relationship with lord Jesus . Really we are blessed people
[09/11 2:31 pm] Elango: எபேசியர் 5:2
[2] *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.*
[09/11 2:32 pm] Elango: 2 தீமோத்தேயு 2:12
[12] *அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;*
[09/11 2:33 pm] Jeyanthi Pastor VDM: Yes Pastor
[09/11 4:38 pm] Elango: Psalms 22:20 ல் *பட்டயம் என்பது "ரோம ஆளுநரின் அதிகாரத்தை அடையாளப்படுத்துகிறது*
அந்த ரோமரின் அதிகாரத்தின் மூலமாகவே ஆண்டவர் இயேசு மரணத்திற்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தார்.
அது தேவனால் அனுமதிக்கப்பட்டிருந்தது.
யோவான் 19:11
[11]இயேசு பிரதியுத்தரமாக: *பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது;* ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
[09/11 5:00 pm] Elango: சரியான விளக்கம் பாஸ்டர்.👍👍
இன்னொரு விளக்கமும் லூக்கா 2:35 சொல்றாங்க. அதாவது மரியாள் இரத்தசாட்சியாக மரித்ததை, வாளால் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் சொல்லுகிறார்கள். ஆகையால் பட்டயம் உருவிப்போகும் என்ற தீர்க்கதரிசனம் அங்கே நிறைவேறியது என்றும் சில வேத வல்லுனர்கள் சொல்கின்றனர்.
[09/11 5:05 pm] Jeyanthi Pastor VDM: Is it? அப்படியா பாஸ்டர். இது பற்றி தெரியவில்லை. பாஸ்டர். வேற்று சத்தியமா? நம்முடையதா?
[09/11 5:21 pm] Jeyarani VTT: ஒரு ஊழியர் கூற நான் கேட்டதுண்டு மரியாளின் இதயத்தை ஊடுருவிய பட்டயம்(தாங்க முடியாத துக்கம்) இயேசுவின் இறப்பு
என்று.... மன்னிக்கவும் நான் கேள்விப்பட்டதை கேட்டேன். எனக்கு அந்தளவுக்கு ஞானம் கிடையாது
[09/11 5:41 pm] Elango: Yes pastor.
எந்த பட்டயமும் ஆத்துமாவை உருவி போக முடியாது தான்.
லூக்கா 2:35 சிமியோன் சொல்லும் அந்த தீர்க்கதரிசன வசனம், சிலுவையில் தன் மகனின் சிலுவை பாடுகளை கண்டு மரியாள் இருதயத்தில் வேதனையடைந்ததையே பட்டயம் உருவிப்போகும் என்ற வசனம் நிறைவேறியது.
[09/11 6:12 pm] Elango: ஒரு பாஸ்டர் அம்மாவுக்கு வந்த தீர்க்கதரிசனம் - *உன் சரீரத்தில் பல முறை கத்தி கிழிக்கும்* என்று...
இந்த தீர்க்கதரிசனம் அப்படியே அவர்களுக்கு நடந்தது. அவர்கடைய சரீரத்தில் பிரச்சனை காரணமாக பல முறை ஆபரேசன் பண்ணினார்கள்.
அவர்கள் சபையில் சொன்ன சாட்சி.
மேலும் நம் ஆத்துமாவை பட்டயம் உருவிப்போகும் என்பது...நம்முடைய வாழ்க்கையிலும் நிறைவேறலாம். ஆனால் நம் தேவன் நமக்கு மிஞ்சின சோதனையை கஷ்டத்தை கொடுக்க மாட்டார். அப்படியே கொடுத்தாலும் அவர் அதற்க்கான தாங்கிக்கொள்ளும் பெலத்தையும் நமக்கு தருவார்.
ரோமர் 8:18
[18]ஆதலால் *இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.*
[09/11 6:16 pm] Jeyanthi Pastor VDM: 👍🏻
But... This happened, not in body but in soul
[09/11 6:50 pm] Elango: சங்கீதம் 22:6
[6] *நானோ ஒரு புழு, மனுஷனல்ல;* மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
நம் ஆண்டவர் ஏன் தன்னை சிலுவையில் புழு என்கிறார்?
இதை விளக்குங்களேன்🙏🏻🙏🏻
[09/11 7:03 pm] Kamal VTT: தவறான கேள்வி ஆண்டவர் தன்னை அப்படி சொல்லவில்லை!
[09/11 7:03 pm] Kamal VTT: அது தாவீது ஐயா சொல்வது
[09/11 7:04 pm] Kamal VTT: சிறுமைப்பட்ட மனநிலையில் மற்றவர்கள் ஏளனமாக எண்ணப்பட்ட போது அவ்வாறு சொல்லுகிறார்
[09/11 7:04 pm] Kamal VTT: மற்றவர் தன்னை புழுவைபோல எண்ணி மனுசன் என்று எண்ணாமல் அவ்வளவு கீழ்தரமாக நடத்துவதை எண்ணியே நான் புழு
என்றும் மனிதன் இல்லை எனவும் சொல்கிறார்
[09/11 7:04 pm] Kamal VTT: ஜனங்கள் புழுவை ஒரு பொறுட்டாக எண்ணமாட்டார்கள்! அதுபோல தாவிது ஐயாவையும் எண்ணவில்லை!
[09/11 7:06 pm] Elango: சங்கீதம் 22 முழுவதும் மேசியாவை குறித்த தீர்க்கதரிசனம்.
தாவீது, பரிசுத்த ஆவியினால் ஊந்தப்பட்டு எழுதுகிறார்ர
[09/11 7:08 pm] Kamal VTT: இயேசு மனுசகுமாரனாய் வெளிப்பட்டார் என்பதை நாம் நன்கு அறிந்ததே! அவர் Real மனிதன் எப்படி இருந்தான் என்பதை
காட்டினார்
[09/11 7:09 pm] Elango: சங்கீதம் 22 ல் எந்த வசனமெல்லாம் தாவீதை பற்றியும், எந்த வசனமெல்லாம் கிறிஸ்துவை குறிக்கிறது என்று பதிவிடுங்களேன் சகோ?
[09/11 7:25 pm] Elango: சங்கீதம் 22:6 கிறிஸ்துவின் பாடுகளையே சொல்லுகிறது.
*நானோ ஒரு புழு, மனுஷன் இல்லை*(யோபு 25: 6, ஏசாயா 41:14).
புழு என்பது மிகவும் பலவீனம் மற்றும் உதவியில்லாமையின் அடையாளமாக இருக்கிறது.
புழுவை பார்த்தாலும் இயல்பாகவே எல்லோரும் வெறுப்பார்கள்,அசட்டையாக, அற்பமாக நினைப்பார்கள்.
இந்த நிலையில் தான் கர்த்தர் சிலுவையில் பாடுகளை சகித்துக்கொண்டு, பலகீனமாக, உதவி அற்ற நிலையில் இருந்தார்.😪😪😪😪
ஏசாயா 49:7
[7] *இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும்,* அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.
[09/11 7:30 pm] Elango: மத்தேயு 27:39-44,49
[39]அந்த வழியாய் *நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:*
[40]தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்தித்துக்கொள்; *நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.*
[41]அப்படியே பிரதான *ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:*
[42] *மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை;* இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது *சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.*
[43]தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; *அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.*
[44]அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை *நிந்தித்தார்கள்.*
[49] *மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.*
[09/11 7:42 pm] Elango: *கிறிஸ்துவை எவ்வளவாக மக்களால் அவமதிக்கப்பட்டார், ஏளனமாக, பரியாசமாக பார்க்கப்பட்டார் என்பதை இவ்வசனம் தீர்க்கதரிசனமாக பேசுகிறது.*
கிறிஸ்துவானவர், ஜனங்களால் எவ்வளவாக ஒடுக்கப்பட்டார் என்பது காட்டுகிறது சங்கீதம் 22:6.
அப்போஸ்தலர் 3:14-15
[14] *பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை பண்ணவேண்டுமென்று கேட்டு,*
[15]ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
[09/11 9:04 pm] Elango: சங்கீதம் 22:12
[12] *அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;* பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.
எருமைகளுக்கும், காளைகளுக்கு ஒரு சுபாவம் உண்டு, ஏதாவது அவைகளுக்கு தெரியாத அல்லது விநோதமான பொருட்களை கண்டால் போதும், அந்த பொருளை சுற்றி வளைந்து கூட்டமாக நின்றுக்கொண்டு தங்களுடைய கொம்புகளால் முட்டி, கிண்டி அந்த விநோத பொருளின் உருவத்தையே உருக்குலைத்து சிதைத்து விடும்.
அதேபோலவே பரிசுத்த தேவ குமாரனான கிறிஸ்துவை, அறியாமல் போர்சேவகர்கள் சூழ்ந்துக்கொண்டு அவரை துன்புறுத்தி அவரை உருக்குலைத்தனர்.
போர் சேவகர்கள் கூட்டமாக சூழ்ந்துக்கொண்டு கிறிஸ்துவை துன்பப்படுத்துவதையே இங்கு *காளைகள்* என்று உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
[09/11 10:50 pm] Elango: கிறிஸ்துவைப் பற்றிய சங்கீதம் என்று இன்று தியானித்து வரும்பொழுது, கிறிஸ்துவைப் பற்றியும் தியானிக்கலாம்.
*இயேசுகிறிஸ்து யார்?*
1. இயேசுகிறிஸ்து வார்த்தையாய் இருக்கிறார். யோவான் 1:1-5,14.
2. இயேசுகிறிஸ்து தேவனாய் இருந்து நித்தியகாலமாய் பிதாவாகிய தேவனுடனும், பரிசுத்தாவியானவருடனும், இருந்து வருகிறவராய் இருக்கிறார். ( யோவான் 1:1-5)
3. மனிதனாய் பிறந்த இயேசுக்கிறிஸ்து, பரிசுத்தாவியானவரால் கர்ப்பந்தரிக்கப்பட்டவராய் இருந்தார். (மத்தேயு 1:20)
4. யூதகுல கன்னிகையான மரியாளிடத்தில் (மத்தேயு 1:18) பெத்லேகேம் என்னும் ஊரில் கி.மு. 6 ம் வருடத்தில், பிறந்தார். அவரது உலகப்பிரகாரமான தந்தை யோசேப்பு. யோசேப்பும் (மத்தேயு 1:16) மரியாளும் (லூக்கா 3:23) தாவீதின் வம்சா வழியில் வந்தவர்கள், அதாவது சாலமோன் மற்றும் நாத்தான் மூலம் அவர்களது வம்சா வழி பிரிகிறது.
5. எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்யப்பட்டார். (லூக்கா 2:21-24). அவர் அறிவிலும் கிருபையிலும் வளர்ந்தார்.
6. அவரது உறவின் முறையான யோவான் ஸ்நானகனால், யோர்தான் நதியில், அவரது ஊழிய துவக்கத்தில் ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3:13-17)
7. அதன் பின்னர், அவர் வனாந்திரத்திற்குச் சென்று, 40 நாளளவும், இரவும் பகலும் பிசாசானவனால் (சோதனைக்காரனால்) சோதிக்கப்பட்டார். (மத்தேயு 4:1-11)
8. அதைத்தொடர்ந்து மூன்று வருடங்கள் பாலஸ்தீனாவை சுற்றி நடந்து, வியாதிப்பட்டோரை குணமாக்கி, பிரசங்கம் செய்து, போதித்து மற்றும் ஆறுதல் படுத்தி, தேவனண்டை திரும்பிய அணைவருக்கும், ஊழியம் செய்து வந்தார்.
9. பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் ஸ்காரியோத் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு, மரிக்கும் முன்னர் யூதர்களாலும், ரோம ஆழுநர்களாலும் ஆறு நியாய விசாரணைகளால் துன்பமடைந்தார்.
10. சிலுவையின் மீது கி.பி. 32 ல் பஸ்கா தினத்தன்று. தனது பூரணமான ஊழியத்தையும், பூமியில் அவரது வாழ்வையும் நிறைவு செய்துகொண்டு, இரட்சிப்பை உறுதிபடுத்தினார்.
11. தேவன் இயேசுக்கிறிஸ்துவை, மூன்றாம் நாளாகிய, முதற்பலனை சேர்க்கும் அந்நாளில் உயிருடன் எழுப்பினார்.
12. அவர் ஒலிவமலையில், பஸ்கா பண்டிகைக்கு பத்து தினங்களுக்கு முன்னர், பரமேறிச்சென்றார். (அப்போஸ்தலர் 1:8-11).
13. பரலோகில் பிதாவின் வலது பாரிசத்தில் புகழ்ச்சிக்குறிய இடம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
14. அங்கிருந்து கொண்டு நமக்காய் பரிந்து பேசவும், அவரது சத்துருக்களை பாதபடியாக்கி போடவும் காத்துக்கொண்டு இருக்கிறார்.
15. இயேசுக்கிறிஸ்து, தனது பரிசுத்தவான்களுடன் 1000 வருடம் அரசாள பூமிக்குத்திரும்புவார். (வெளி 20:1-6)
16. அவிசுவாசிகளை இறுதி நியாயத்தீர்ப்பில் நியாயந்தீர்ப்பார் (வெளி 20:11-15). விசுவாசிகள் தங்களது நித்தியத்தை இயேசுக்கிறிஸ்துவுடன் மகிழ்ச்சியுடன் களிப்பர்.
[09/11 11:01 pm] Elango: *இயேசுகிறிஸ்து நமக்காக பட்டபாடு, பிதாவின் அன்பிற்க்காகவும், அவரது சித்தத்தை நிறைவேற்றவும் சகித்த நிந்தை*
a) அவர் பாவத்தினிமித்தம் தேவனின் பூரண தியாக பலியாய் வந்தார் (யோவான் 1:29)
b) அவர் உயர்த்தப்படும்படி வந்தார் (யோவான் 3:13-15)
c) *நம் வாழ்வுக்கு அப்பமாக அவர் வந்தார்.* (யோவான் 6:50-51)
d) நல்ல மேய்ப்பனாய் அவர் வந்தார் (யோவான் 10:10-11)
e) ஜனங்களுக்காய் மரிக்கும்படி அவர் வந்தார் ( யோவான் 10:49-52)
f) அவரது சிலுவை அவரது கிரீடத்திற்கு முன்பாக வந்தது (யோவான் 12:23-24)
g) *சிலுவையில் நீதியும் நியாயத்தீர்ப்பும் சந்தித்தன, இதினிமித்தமே, தேவன் மனிதனை கிறிஸ்துவில் அன்புகூற சுதந்திரம் உண்டானது.* (யோவான்15:12-14)
[09/11 11:32 pm] Elango: *சிலுவையின் சங்கீதம் 22*
இந்த சங்கீத இராகத்தின் பொருள் விடியலின் மான் ( அகிலேத் ஷகார் ) என்பதாகும்.
அழகானதொரு மான் வேட்டைக்காரரிடம் சிக்கி சின்னாபின்னமாக்கப்படுவதைப் போன்றாதொரு காட்சி இங்குச் சித்தரிக்கப்படுகிறது. முதல் 21 வசனங்கள் துயரத்தைக் கூறும்போது, 22 வசனம் முதல் கடைசி வரை இருளின் துயர நாட்களுக்க்ப் பின் வரும் விடியலின் வெற்றிக் கொண்டாட்டத்தைக் கூறுகின்றன.
காளைகளும், பாசானின் கொழுத்த எருதுகளும், நாய்களும், சிங்கம் போன்ற பாய்ச்சல்களால் மோதிக் கிழிக்க, இரத்தம் வடியும் கோலத்தில் சதைகள் கிழிந்து தொங்க பாரச் சிலுவையைசி சுமந்துச் செல்லும் தேவ ஆட்டுக்குடியின் ஒரு புகைபடக் கவிதை வரிகளை இங்குத் தரிசிக்கிறோம்.
கிறிஸ்துவின் மரண நேரச் சொற்களையும், இறுதி துளி கண்ணீரையும், கோர வேதனையின் நொடிகளையும் ஓவியமாக்க்கும் *இவ்வரிகள் தாவீதின் அனுபவங்களை அல்ல, மேசியாவின் அவலங்களையே நம்முன் அடுக்கி வைக்கின்றன.* மேசியாவின் தெளிந்த காட்சி, தாவீதை மங்கி மறையச் செய்துவிடுகின்றன.
*முதலாம் ஆதாம் நம்மைப் பாவத்தால் நிர்வாணமாக்க, இதோ இந்த இரண்டாம் ஆதாம் தமது ஆடைகளைக் கூட ஒப்புக்கொடுத்து நிர்வாணக் கோலமாக சிலுவையில் உயர்த்தப்பட்டு நமக்கு இரட்சிப்பின் ஆடையே உடுத்துவித்தார்.* பாவத்தின் விளைவுகளை எவ்வளவாக அவர் சிலுவையில் அனுபவித்தார் என்பதற்க்கு சிலுவைக்காட்சி ஒரு பதச்சோறு.
*நானோ ஒரு புழு என்பதில் வரும் நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பவரின் புழு என்றா நிலையிலான தாழ்த்துதல் எவ்வளவு அழமானதாக இருந்தது*. இதனை விட அடிமையின் ரூபமெடுக்க அவரால் இயலுமா? அச்செயலை இதனைவிட அழகாக சொல்லால் வடிக்கவும் இயலுமா?
*உயிரோடு உயிராகப் பிணைத்த பிதாவின் கைவிடுதலுக்கு உள்ளானதை விட நரக வேதனை என்ன உண்டு!!!!* அந்தப் பிரிவல்லவா நரகவேதனை. இந்த நேசத்தைக் காணும்போது தனது அவல நிலையை அறிந்த எந்த ஆத்துமாவின் இதயம் அன்பில் உருகி வழியாதிருக்கும்?
யூதராஜ சிங்கத்தின் எதையும் தாங்கும் இதயம் தீப்பட்ட மெழுகுபோல் உருகுமளவு பாவத்தின் தண்டனைப் படு கோரமாக இருந்தது. வரப்போகும் தேவ கோபாக்கினையின் நாளில் எந்த மனிதனின் வீரம் பேசும் இதயம் நிலைத்திருக்க முடியும்!?
*நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை அண்டாமல், எவரால் தப்ப முடியும்?!*
[10/11 7:01 am] Premraj 2 VDM: 👌👏🏿👍🙏 wonderful explanation
[10/11 10:29 am] Elango: *சிலுவையின் அடியில் சீட்டு*
💔 முப்பது வெள்ளி காசுக்கு அடிமையாக விற்கப்பட்ட மேசியா, *சிலுவையில் கரடுமுரடான மரச் சிலுவையில் இரத்தம் ஒழுக நிர்வாண கோலச் சதைப் பிண்டமாக எலும்புகள் தெரிய கோர வேதனையில் முனகியபடி தொங்கிக்கொண்டிருக்கிறார்.*
💔அதன் அடியில் சிலுவையின் நிழலில் அமர்ந்து அந்த தேவ மகனின் இரத்தம் புரண்ட ஆடையச் சொந்தமாக்கிக் கொள்ளும்படி போர்ச்சேவகர் சீட்டிட்டுக் கொண்டிருந்தனர். *சர்வ லோகத்தின் பாவங்களையும் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி அவர்களுக்கு வேண்டாம். அவரது இரத்தம் தோய்ந்த ஆடை போதும். அவர்கள் பார்வையில் அதுதான் பெரும் விலமதிப்புடையதாக தோன்றியது.*
💔 *சிலுவையில் தொங்கியபடி ஒரு கள்ளன் அவரைச் சொந்தமாக்கினான். மற்றொருவன் அவரை வெறுத்து ஒதுக்கினான்.*
💔 இன்றும் சிலுவைப் பலியான கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் வரும் இரட்சிப்பு எவருக்கும் தேவையில்லை. அவரது இரத்த வேர்வையால் நனைந்த சில அற்புதங்களும், ஆசீர்வாதங்களும் மட்டும் போதும். *அதற்க்காக சீட்டிடும் மக்கள் மிகுதி. ஆனால் அந்த ஆடை அழியும். கிறிஸ்துவின் இரட்சண்யமோ நிலைக்கும்.*
[10/11 10:32 am] Elango: *நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது;* பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
🐶🐶🐶🐶 *நாய்கள்* என்பது கிறிஸ்துவை கொடுரமாக துன்புறுத்திய ரோம போர்ச்சேவகர்களை குறிக்கும். *கிழக்கத்திய நாடுகளில் உள்ள நாய்கள் காட்டுமிராண்டித்தனமானவை மற்றும் அசுத்த பழக்கவழக்கமுடையவைகள்.* இந்த பதம் இன்றும் கிழக்கத்திய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது.
27. அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, *அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,*
30. *அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.*
31. *அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி,* அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
32. போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, *அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.*
33. கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,
34. கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
35. அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது
[10/11 10:33 am] Jeyanthi Pastor VDM: 18 நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும், என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.
சங்கீதம் 69:18
19 தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர், என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
சங்கீதம் 69:19
20 நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது, நான் மிகவும் வேதனைப்படுகிறேன், எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை, தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
சங்கீதம் 69:20
21 என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
சங்கீதம் 69:21
[10/11 10:35 am] Elango: சங்கீதம் 22:6. *நானோ ஒரு புழு, மனுஷனல்ல;* மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
✝ நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவை மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போது கிறிஸ்துவின் நிலையை படமாக காட்டுகிறது இந்த வசனம். *மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்ற வேத வசனத்தின் படி, கிறிஸ்து நமக்காக சாபமானார்.* கலாத்தியர் 3:13. சிலுவையில் அவர் நொறுக்கப்பட்டிருந்தார், சிதைக்கப்பட்டிருந்தார் நமக்காக, அவரின் இரத்தம் நமக்காக பூமியில் சிந்தியது.
*அவர் அங்கே மனுஷனை போல் ரூபம் காணப்படவில்லை, உருவம் குலைந்திருந்தது. போர்சேவகரின் தண்டனையானது அவரது உருவம் இன்னதென்று அறியமுடியாதிருந்தது.*
1⃣ *புழு* - ஒரு தாழ்மையான ஆத்துமா தன்னைதானே வெறுமையாக எண்ணுவது. தாழ்மையான மனிதர்கள் தங்களை பிறர் எண்ணுவது காட்டிலும் தன்னை மிகவும் தாழ்மையாக காட்டும்.
2⃣ *புழு* - யூதர்கள் கிறிஸ்துவை ஒரு புழுவாக அற்பமாக எண்ணி, அவரை துன்புறுத்தி, போர்சேவகரினால் துப்ப வைத்து,நிந்தித்து காலில் கீழ் போட்டு சிதைத்தனர். கிறிஸ்து எல்லாவற்றையும் சகித்தார், தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார்.
3⃣ *புழு* - கிறிஸ்து தேவனாகவும் இருந்தது போல, மனிதனாகவும் இருந்தார். சிலுவையில் நமது பிரதிநிதியாக மனிதனாகத் தன்னைப் புழு என்று கூறினார். கிறிஸ்து தன்னை ஒரு புழு என்று சொல்லுகிறார் என்றால், நாம் யார்? நமது பெருமைக்கு இது ஒரு சவால். கிறிஸ்து கொடுமைப்படுத்தப்படியாலும், அவமானப்படுத்தப்பட்டபடியாலும் மனிதரில் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டதை மனுஷனல்ல என்று கூறினார்.
*மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.* ஏசாயா 52:14
4⃣ *புழு* - தூண்டிலில் மீன் பிடிக்கிறவர், தூண்டிலில் முள்ளை அப்படியே போடுவதில்லை. தூண்டில் முள்ளை மறைக்கும்படியாக புழுவை அதில் கோர்த்திருப்பார். மீன்கள் புழுவை உண்ண வரும்பொழுது தூண்டில் முள்ளில் சிக்கிக்கொள்ளும்.
இது போலவே மேசியாவும் மீட்பின் பெரிய வேலையை செய்ய வந்தார், அவருடைய தேவத்துவத்தை இந்த புழுவான மனித சாயலில் மறைத்துக்கொண்டிருந்தார். தேவ சாயலை மறைத்து மனித சாயலில் வெளிப்பட்ட கிறிஸ்துவை, விழுங்க நினைத்த சர்ப்பம், லேவியதான், சாத்தான் ... அவரது தேவ சாயல் என்னும் தூண்டில் முள்ளில் சிக்கியது. சாத்தான் என்னும் பெரிய மீன் கொக்கியில் சிக்கியது, அந்த கொக்கி அவனை நசுக்கியது. மேசியாவை அழிக்க நினைத்த பிசாசின் இராஜ்யமே அழிந்துபோனது.
5⃣ *புழு* - இதில் கவனிக்கப்படக்கூடியது புழுவின் இரத்தம், பண்டைய காலங்களில் அரச வஸ்திரங்களை புழுவின் இரத்தத்தால் சாயம் கட்டுவர், அவரது மரணத்தினால் ஆராய்ந்தறிவது, நாம் எந்நாளும் அணிந்து கொள்ளும் வண்ணம் அரச வஸ்திரங்களைப் பெற்று இருக்கிறோம். 1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 1 பேதுரு 2:9
[10/11 10:46 am] Elango: *சிலுவையில் நிறைவேறின தீர்க்கதரிசன சங்கீதம் 22*
💥சிலுவையிலிருந்து கதறுதல் வச 1 (மத்தேயு 27:46)
💥 வெளிச்சத்திற்கும் இருளுக்கும் உள்ள காலப்பகுதி (வச 2) (மத்தேயு 27:45)
💥தூஷிக்கும் திரள் கூட்டம் (வச 7-8). (மத்தேயு 27:39-43)
💥வஸ்திரத்தை பங்கிடுதல் (வச 18). (மத்தேயு 27:35)
💥வஸ்திரத்தின் மீது சீட்டுப்போடுதல் (வச 18). (மத்தேயு 27:35)
💥புறஜாதிய அவிசுவாசிகள் அங்கிருத்தல் (வச 16). (மத்தேயு 27:36)
💥கள்ளர்கள் நடுவே சிலுவையில் அறையப்படுதல் (வச 16). (மத்தேயு 27:38)
[10/11 10:51 am] Elango: *குறித்த தீர்க்கதரிசனங்கள்*
*நம்முடைய ஒரே குமாரனை நமக்காக தந்து இவ்வளவாக அன்பு கூர்ந்தார்* ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிலுவையில் அறைதல் ரோமர்களின் மரணதண்டணையாகும், இப்படிப்பட்ட தண்டணையை யூதர் ஒருவரும் தாவீதின் காலத்தில் கொடுத்ததில்லை.
சங்கீதம் 22:4-17 வசனங்களில் சிலுவை வேதனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 😭😭😭😢😰😰😩😫😫😣😖😖😖
1⃣ வச 14 சிலுவை மரணத்தின் போது எலும்புகள் கட்டுவிடும், அதோடு கொடிய வேதனைகளின்மித்தம் அதிகமான வியர்வை உண்டாகும்.
2⃣ வச 14 கொடிய அழுத்தம் மற்றும் உதவியற்ற நிலை.
3⃣ வச 15 மிகுந்த பெலவீனம் மற்றும் களைப்பு
4⃣ வச 15 மிகுந்த தாகம்
5⃣ வச 16 சிலுவை மரணத்தில் கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் சிலுவை மரத்துடன் அறையப்படுதல்.
6⃣ வச 17 கொடிய வேதனை
7⃣ வச 17 சிலுவையில் அறையப்படுபவர்கள் நிர்வாணிகளாயிருப்பார்கள்.
[10/11 10:54 am] Jeyanthi Pastor VDM: இந்த தீர்க்கதரிசனம் எப்போது சொல்லப் பட்டது, எப்போது நிறைவேறியது?
[10/11 10:57 am] Elango: நமக்கு இரட்சிப்பின் ஆடையை உடுக்க அவர் நிர்வாண கோலமானார்....😭😭😭😭
ஐயகோ... இது தாயின் அன்பை விட மேலானது... வார்த்தைகளால் இந்த அன்பை எழுத இயலாது😖😖😖
[10/11 11:04 am] Elango: சங்கீதம் 22:29 பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; *புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள்.* ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.*
👉 எல்லா மனுஷரும், கிறிஸ்துவின் முன்பாக விழுந்து வணங்குவார்கள்; 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙋♂🙋🙋🙋🙋♂ ஒன்று அவர்கள் ஆண்டவரை விருப்பத்தோடு பணிந்து வணங்குபவர்காளாக இருப்பார்கள் அல்லது விரோதியாக அவரது காலடியில் உள்ள மண்ணை நக்குவார்கள் அவருக்கு முன்பாக தோற்றதற்க்கு அடையாளமாக. ✌✌
*கிறிஸ்துவுக்குள் ஜீவன் இருக்கிறது. அவராலேயல்லாமல் ஒருவர் கூட, தன் ஆத்துமாவை உயிரோடே வைக்க முடியாது.* நம்முடைய ஜீவன் என்பது கிறிஸ்துவின் பரிசு; நம்முடைய ஆத்துமா அவரில்லாமல் ஜீவனுள்ளதாக இருக்க முடியாது ஆனால் அவருடைய உயிர்த்தெழுதலின் ஆவியினால் மட்டுமே கூடும். யோவான் 6:53, யோவான் 6:63 நம்முடைய ஆத்துமா ஜீவனுள்ள ஆத்துமாவாக இருக்க கிறிஸ்துவிடம் நம்மை ஒப்படைப்போமாக!
[10/11 11:59 am] Elango: *கிறிஸ்துவை சிலுவையில் அறையப்படுதலைக்குறித்த பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்களும், அவை புதிய ஏற்ப்பாட்டில் நிறைவேறுதலும்*
1. சிலுவையில் அறையப்படுதல் (ஆதியாகமம் 3:15), (யோவான் 19:18).
2. எலும்புகள் முறிக்கப்படுவது இல்லை (யாதிராகமம் 12:46, சங்கீதம் 34:20), (யோவான் 19:32-36).
3. இஸ்ரவேலின் தலைவர்கள் இயேசுவுக்கு விரோதமாய் ஆலோசனை செய்தல், (சங்கீதம் 2:2), (மத்தேயு 26:3-4).
4. சிலுவையில் இயேசு கூப்பிடுதல், (சங்கீதம் 22:1), (மத்தேயு 27:46).
5. ஜனக்கூட்டம் அவரை இகழ்தல், (சங்கீதம் 22:7-8), (மத்தேயு 27:39-44).
6. கூட்டம் அவரை பரியாசம் செய்தல், (சங்கீதம் 22:7-8), (மத்தேயு 27:39-44).
7. அவரை நோக்கிப்பார்த்த போர்சேவகர்கள், (சங்கீதம் 22:17), (மத்தேயு 27:36).
8. அவரது வஸ்திரங்களை சீட்டுப்போட்டு பங்கிடுதல், (சங்கீதம் 22:18), (மத்தேயு 27:35).
9. யூதர்களால் அவர் புறக்கணிக்கப்படுதல், (ஏசாயா 53:3), (யோவான் 1:11).
10. ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் மரித்தல், (ஏசாயா 53:5,6,10),(ரோமர் 5:6,8).
11. பிலாத்துவிற்கு முன் இயேசு வாய்திறவாது நிற்பது, (ஏசாயா 53:7), ( மத்தேயு 27:13-14).
12. கிறிஸ்துவின் நியாயமற்ற துன்பங்கள், ( ஏசாயா 53:8,9), (மாற்கு 15:1-25).
13. ஐசுவரியவானின் கல்லறை, (ஏசாயா 53:9), (மத்தேயு 27:57-60).
14. கள்ளர்களுடன் எண்ணப்படுதல், (ஏசாயா 53:12), (மாற்கு 15:27-28).
15. மேசியா சங்கரிக்கப்படுதலும் - காட்டிக்கொடுக்கப்படுதலும், (தானியேல் 9:26), (மத்தேயு 26:24).
16. நடுப்பகலில் இருள் சூழ்தல், (ஆமோஸ் 8:9), ( மத்தேயு 27:45).
17. முப்பது வெள்ளிக்காசு, (சகரியா 11:12), (மத்தேயு 26:15).
18. குயவனின் நிலம், ( சகரியா 11:13), (மத்தேயு 27:3-7).
19. அவர் விலாவிலே குத்தப்படுதல், ( சகரியா 12:10), (யோவான் 19:34).
20. சீஷர்கள் சிதறடிக்கப்படுதல், (சகரியா 13:7), ( மாற்கு 14:27,50)
[10/11 12:26 pm] Elango: சங்கீதம் 22:4-5
[4]எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் *நம்பிக்கை* வைத்தார்கள்; *நம்பின* அவர்களை நீர் விடுவித்தீர்.
[5]உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை *நம்பி* வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக இதுவே *தேவ சந்ததிகளின் பிரதான விதி - எந்த சூழ்நிலையிலும் தேவன் மேல் வைக்கும் நம்பிக்கை, அசைக்க முடியாத விசுவாசம்.*
நம் முற்பிதாக்கள் நெருக்கங்களிலும், கஷ்டத்திலும், உபத்திரவங்களிலும் தேவன் மேல் வைக்கும் விசுவாசத்திலிருந்து பின் வாங்கவே இல்லை.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6
[6] *விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.*
[10/11 12:56 pm] Elango: *நம்முடைய முற்ப்பிதாக்களின் வேண்டுதலை கேட்டு அவர்களை துன்பத்திலிருந்து விடுவித்த தேவன் இன்றும் மாறாமல் இருக்கிறார்.*
அவர்களின் ஜெபத்தை கேட்டாரென்றால், நம்முடைய ஜெபத்தையும் கேட்பார்.
அவர்களை விடுத்தாரால் நம்மையும் விடுவிப்பார்.
ஓசியா 11:8-9
[8] *எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?*❤❤❤👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙋♂🙋♂🙋♂ நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? *என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.*❤❤❤❤👍👍👍🙋♂🙋♂🙋♂
[9] *என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்;*❤❤❤👍👍👍🙋♂🙋♂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாகவரேன்.
[10/11 2:26 pm] Elango: நாய்கள் என்பது புறஜாதிகளை குறிக்கும்.
காணியாட்சிக்கு புறம்பே இருப்பவர்களை குறிக்கும்.
பின்மாற்றக்காரர்களை குறிக்கும்.
[10/11 3:17 pm] Elango: சங்கீதம் 44:1-4
[1] *தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.👂👂👂👂👂👂👂*
[2]தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி;m ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.🙋♂👍
[3] *அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.*
[4]தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
[10/11 4:06 pm] Jeyanthi Pastor VDM: Yes, இவர்களுக்கு ஜாக்பிரதையாயிருக்கும்படி பவுல் பிலி 3:2 ல் கூறுவது?
2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
பிலிப்பியர் 3:2
[10/11 4:06 pm] Jeyanthi Pastor VDM: அவர்கள் வேத சத்தியங்களை அந்நியக் காரியமாக எண்ணியதால் தானே பாஸ்டர்?
[10/11 4:45 pm] Elango: யூதர்கள் புறஜாதியினரை "நாய்கள்" என்று அழைத்தனர். (மத்தேயு 15:26, மத்தேயு 15:27 )
நாய்களுக்கு அசுத்தத்திற்க்கும், சுத்தத்திற்க்கும் வித்தியாசம் தெரியாது.
*அதாவது பரிசுத்தத்திற்க்கும், அசுத்தத்திற்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அசட்டை செய்ததால் அவர்கள் நாய்கள் அதாவது அசுத்தமானவர்கள் என அழைப்பட்டனர்.* பிலிப்பபியர் 3:2
வெளிப்படுத்தின விசேஷம் 22:15
[15] *நாய்களும்,* சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
[10/11 4:46 pm] Elango: http://www.biblemeanings.info/Words/Animal/Dog1.htm
நாய் என்பதற்கு அர்த்தம் என்ன?👆🏻
[10/11 5:31 pm] Elango: சங்கீதம் 22:28. *ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.*👑👑
கிறிஸ்து ராஜ்யத்தை எடுத்துக் கொண்டுள்ளார், இப்பொழுதும் அவரே பூமியில் ஆளப்படுகிறார். அவர் ஜாதிகளுக்குள் ஆளுநராக இருக்கிறார். *ஒரே ஒரு நாட்டின் கவர்னர் அல்ல, ஆனால் அனைவருக்கும்.*
வானத்திலும் பூமியிலும் அவருக்கு சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. *அவரே பூமிக்கெல்லாம் இராஜா. அவருக்கு அடங்கி சதா காலமும் சேவிக்கும் சந்ததியாக நாம் மாறுவோம்.*
எவ்வளவு பெரிய போரட்டங்கள் வந்தாலும், விடுபடாத பிரச்சனையில் தவித்தாலும், நாம் மறந்து போகக்கூடாது நம் அன்பு தேவன் இந்த உலகத்தையும், சகல அண்ட சராசரங்களையும் ஆளுகிறவர் என்பதை.
*அவர் அனுமதியில்லாம் நம் தலையில் ஒரு முடியாவது கீழே விழுவதில்லை. நம்முடைய முடியெல்லாம் அவரால் எண்ணப்பட்டிருக்கிறது*
10. *கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்,* ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். சங்கீதம் 96:10
*கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்;* பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது. 2. மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். சங்கீதம் 97:1-2
[10/11 6:16 pm] Elango: *உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.* சங்கீதம் 22:24
*தமக்கு உண்டான ப்யப்பக்தியினிமித்தம் கேட்கப்பட்டு...* எபிரேயர் 5:5:7
j
ஆத்துமாவிலும், உடலளவிலும் எந்த ஒரு மனிதனும் கிறிஸ்துவின் உபத்திரவ பாடுகளை நிந்தைகளை அனுபவித்திருக்க முடியாது.
தம்முடைய முகத்தை குமாரனுக்கு மறைத்தது என்பது நிரந்தரமும் அல்ல, நித்தியமானதுமல்ல. சர்வலோகத்தின் பாவத்தின் நிமித்தம் அது தற்காலிகமாகவே நிகழ்ந்த நிகழ்வாக இருந்தது.
கிறிஸ்துவைj எவ்வளவுக்கு எவ்வளவாக அவர உபத்திரவுக்கு உள்ளானாரோ அதற்கு அதிகமாக அவரை பிதாவாகிய தேவன் குமாரனை மகிமையினால் முடிசூட்டி அவரது வலது பாரிசத்தில் உட்கார வைத்தார்.
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு *தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.*
10. ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய *இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.* எபிரேயர் 2:9-10
[10/11 6:45 pm] Elango: *சிலுவையும், சாத்தானும்*
1. சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தினால் முழு உலகின் பாவத்திற்கு பரிகாரம் உண்டானது. (கொலோசெயர்1:15-22, 1 யோவான் 2:2)
2. *பாவம் அகற்றப்பட்டதுடன், தடையாய் இருந்த சாத்தானின் வல்லமையும் அகற்றப்பட்டது.* (யோவான் 12:31, 16:11, கொலோசெயர் 2:14, எபிரெயர் 2:14,)
3. சாத்தானின் மீது நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டாயிற்று ஆனாலும், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை, அவன் இன்னும் இவ்வுலகின் அதிபதியாய் இருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4 எபெசியர் 2:2)
4. *சாத்தான் இன்னும் புத்தியற்ற விசுவாசிகளை வஞ்சித்து மற்றும் பொய்களை நம்பச்செய்து அவர்களை வழிநடத்தி வருகிறான்.* (1 பேதுரு 5:8-9)
5. சிலுவையானது, தேவன் பேரில் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்புக்கேதுவான கிருபையை அளிக்கிறதாய் இருக்கிறது. சாத்தான், *இரட்சகரின்றி இரட்சிப்படைய முடியும் என தத்துவங்கள் மூலமும், இன்னும் பல உபாயங்கள் மூலமும் மனுக்குலத்தை வஞ்சித்து தாக்குதல் நடத்தி வருகிறான்.* (எபேசியர் 2:8-9)
6. *சாத்தானின் நியாயத்தீர்ப்பு, படிப்படியாக வெளிப்பட்டு வருகிறது.*👇🏻👇🏻
a) ஏதேன் தோட்டத்தில் (ஆதியாகமம் 3:15)
b) சிலுவையில் (யோவான்12:31)
c) உபத்திரவக்காலத்தில் (வெளிப்படுத்தல் 12:7-12)
d) கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ( வெளிப்படுத்தல் 20:1-3)
e) இறுதி நியாயத்தீர்ப்பில் ( வெளிப்படுத்தல் 20:10)
7. சாத்தானின் கலகத்தில் இரண்டு பாவங்கள் மையமாய் உள்ளன, பெருமை மற்றும் பொய் (ஏசாயா 14:12-24, எசேக்கியேல் 28:17, யோவான் 8:44)
8. சாத்தானின் வல்லமை மற்றும் பாவம் இவற்றை அகற்றி தேவன் இரட்சிப்பளிக்க அழைத்தல் என்பது, தேவனது திட்டமாய் இருக்கிறது. சிலுவையில் கிடைத்த மகத்தான வெற்றி தேவனுடைய மகிமைக்கு வழி நடத்துகிறது, மற்றும் நித்திய காலமெல்லாம் தேவனது நீதியை அறிவிக்கிறதாய் இருக்கிறது.
(1 யோவான் 3:8).
[10/11 6:52 pm] Jeyanthi Pastor VDM: 14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து,
கொலோசெயர் 2:14
15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.
கொலோசெயர் 2:15
[10/11 6:53 pm] Jeyanthi Pastor VDM: 🙏🏼🙏🏼🙏🏼 அருமையான சிலுவை உபதேசம்
[10/11 7:15 pm] George AYYA VDM: ரோமர்களையும் நாய்கள் என்று வேதம் கூறுகிறதே.
[10/11 7:15 pm] Elango: யூதரல்லாத மற்ற மனிதர்கள் யாவரையும் நாய்கள் என்று யூதர்கள் அழைத்தனர்.
[10/11 7:18 pm] George AYYA VDM: சங்கீதம் 22:16 ல் நாய்கள் என்ற வார்த்தை ரோமர்களைக் குறிக்கிறது
[10/11 7:25 pm] Jeyanthi Pastor VDM: Yes. Because அவங்க விருத்தசேதனத்தை முக்கியத்துவப் படுத்தினார்கள்.
[10/11 7:26 pm] Jeyanthi Pastor VDM: 3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3:3
4 மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
பிலிப்பியர் 3:4
[10/11 7:36 pm] George AYYA VDM: 15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22
[10/11 7:39 pm] Elango: ரோமர் 2:28-29
[28]ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
[29] *உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்;* இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
[10/11 7:40 pm] George AYYA VDM: மேலே சொல்லப்பட்ட இந்த வசனத்தில் நாய்கள் என்பது யாரைக்குறிக்கிறது?
[10/11 8:12 pm] Elango: உலக சரித்திரத்திலேயே
முதன்முறையாக
ஒரு குற்றவாளிக்காக
நீதிபதியே இறங்கி வந்து
வக்கீலாக மாறி
பரிந்து பேசி
அபராதமாக
தன் உயிரையே கொடுத்து
குற்றவாளியை மீட்ட
உன்னத சம்பவம்
நடந்தேறிய இடம்தான்
*சி .... லு ..... வை....!*
[10/11 8:15 pm] Elango: அசுத்த கிரியைகளை நடப்பிக்கிறவர்களை, அநியாயம் செய்கிறவர்களை குறிக்கும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:11
[11] *அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்;* நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
[10/11 8:25 pm] Elango: *கிறிஸ்து சிலுவையில் தொங்கினபோது நிகழ்ந்த சம்பவங்களும், வேதம் நமக்கு போதிக்கும் சத்தியங்களும்*
1. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரிக்கு முன்னர் இடைப்பட்ட ஆறு மணி நேரங்களில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
2. கிறிஸ்துவை பாடுகளுக்குட்படுத்த, சிலுவையில் அறையும் குழுவினர் கொல்கதாவில் சேர்ந்தனர். அவ்விடம் கபாலஸ்தலம் என அழைக்கபட்டது.
(மத்தேயு 27:33).
3. *கசப்பு கலந்த காடியை அவருக்கு கொடுத்தார்கள், அது அவரது சுயசித்தத்தை பெலவீனப்படுத்துவதாய் இருந்ததினிமித்தம் அவர் அதை மறுத்துவிட்டார்.* (மத்தேயு 27:34)
4. இரு கள்ளர்கள் இயேவிற்க்கு நடுவே சிலுவையில் அறையப்பட்டிருந்தார்.. (லூக்கா 23:32-34).
5. இயேசுக்கிறிஸ்துவின் ஜெபம், பிதாவை நோக்கி தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்க கேட்டுக்கொள்கிறார். இது முக்கியமானதாய் இருந்தது, காரணம் *அவர்களது பாவங்களுக்காகவும் இவர் நியாயந்தீர்க்கப்பட்டவராக இருந்தார்.*
6. போர்ச்சேவகர்கள் அவரது வஸ்திரத்தின் மீது சீட்டுப்போட்டனர். (மத்தேயு 27:35,36 சங்கீதம் 22:18).
7. வஸ்த்திரங்களை விற்று கிடைத்த பணத்தினால் சிவப்பு திராட்சை ரசம் வாங்கி பருகினர், *பாரம்பரியப்படி, சிலுவையில் அறையப்படுகிறவர்கள் நிர்வாண கோலத்தில் இருப்பார்கள்.*
8. யூதர்கள் அவரை பரிகாசம் செய்தனர். .(மத்தேயு 27:39-43) சிலுவையிலிருந்து இறங்கி வர அவரை சோதித்தனர். அவர்கள் சொற்படி அவர் செய்தால் அவரை விசுவாசிப்பதாய் கூறினர். (சங்கீதம் 22:7-8).
9, கள்ளர்களில் ஒருவர் அவரை நம்பினான். (லூக்கா 23:42) - எல்லா கள்ளரும் செய்யக்கூடியது விசுவாசிப்பதொன்றே அவர்களால் செய்ய இயலும். *இக்கள்ளன் ஞானஸ்நானம் பெறவில்லை, அவன் ஒரு சபையிலிருந்து வரவில்லை.*
10. கிறிஸ்துவின் சிலுவையின் கிரியைகளில் விசுவாசம் வைப்பது ஓர் தனிப்பட்ட நபரின் இரட்சிப்புக்கு வழியாக இருக்கிறது.
11. இயேசுவின் ஆத்தும பரதீசு சென்றது, அவரது சரீரம் கள்ளறைக்குச்சென்றது, அவரது ஆவி பிதாவினிடத்திற்குச் செம்றது. (லூக்கா 23:46).
12. பரதீசு அல்லது ஆபிரகாமின் மடி, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பாதாளத்தில் தற்காலிகமாய் தாபரிக்கும் ஸ்தலமாய் இருந்தது சிலுவை சரித்திர உண்மையாகும் வரை, அவர்கள் அங்கு தரித்து இருக்க நேர்ந்தது. அவிசுவாசியான கள்ளனும் தன்து மரணத்தில் பாதாளம் சென்று அங்கு வாதிக்கப்படுவான், இந்த இடத்திற்கும் பரதீசுக்கும் இடையே ஆழமான இடைவெளி பிரித்தது.
13. இரு கள்ளரும் மனுக்குலத்தின் இரு பகுதியினரை பிரதிபலிக்கின்றனர் - விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் (யோவான் 3:36).
14. இயேசு தனது தாயை "அம்மா" என அழைக்கவில்லை. அவர் எப்பொழுதும் "ஸ்திரீயே" என அழைத்தார். ஸ்திரீயின் வித்தாய் தோன்றின இயேசுக்கிறிஸ்துவுக்கு மனுஷீக நிலையில் தாயாக இருப்பதை அவர் வளியுறுத்தினாரே அல்லாது தேவனுக்கு தாயாக அல்ல. (ஆதியாகமம் 3:15) மரியாளை குறித்த எதிர்கால பிரச்சனைகளை முன்னதாகவேக் கண்டு, தேவனுக்கு அவள் தாய் என்கிற பிரச்சனையை தவிர்க்க மரியாளை அவர் ஸ்திரீயே என அழைத்தார்.
15. ஐந்தாம் கற்பனைக்கு கீழ்படியும் வண்ணம் "தாயையும் தந்தையையும் கனப்படுத்துவாயாக" (யாத்திராகமம் 20:12) அவர் தன் தாய்க்கு அடைக்கலத்தை ஏற்படுத்தும் வண்ணம், யோவானைப்பார்த்து, "அதோ உன் தாய்" என்றார். யோவான் 100 ஆண்டுகாலங்கள் வாழ்ந்தார் இது ஐந்தாம் கற்பனையின் பிற்பகுதி கூறும் வண்ணம், "உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும் படியாக" என்பதை குரிக்கிறது.
16. நண்பகல் 12 மணிக்கு அந்தகாரம் பூமியை சூழ்ந்தது. (மத்தேயு 27:45).
17. ( மத்தேயு 27:46; மாற்கு 15:34). "என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?"
( சங்கீதம் 22:1) கிறிஸ்து கைவிடப்பட்டார். இச்சொற்றொடர், இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்பட்டதை காட்டுகிறது.
(2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 2:24). பிதாவாகிய தேவனும், பரிசுத்த ஆவியானவரும் அவரைக் கைவிட்டனர் காரணம் அவர்கள் மட்டுமே பாவத்தை நியாந்தீர்க்க முடியும்.
(யோவான் 19:28) சிலுவையில் தனது பணியை கிறிஸ்து நிறைவேற்றி தீர்த்தார்., சங்கீதம் 69:21 ன் படி இவ்வேதவாக்கியத்தை நிறைவேற்றினார், கசப்பு கலந்த காடியை குடிப்பது.
18. அவர் மகா துயருற்றபோதும் தீர்க்கதரின வேதவாக்கியங்களை சரியான நேரத்தில் முற்றிலுமாய் நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இதற்கு முன்னர் அவருக்குக் குடிக்க கொடுத்தபோது அதை அவர் மறுத்தார் என்பதை நினைவில் கொள்க.
19. எல்லாம் முடிந்தது (யோவான் 19:28). இயேசுக்கிறிஸ்துவின் பணி பூமியில் நிறைவேறி தீர்ந்தது. சர்வலோகத்தின் பாவத்திற்காக அவர் நியாயந்தீர்க்கப்பட்டார். இரட்சிப்பின் பணி நிறைவேற்றபட்டு இருக்கிறது.
20. அடிப்படைச் ச்த்தியம்: மனிதனின் கிரியைகள் மூலம் இரட்சிப்பை அடையமுடியாது. இரட்சிபின் பணி முழுவதுமாய் கி.பி. 32 ல் கொல்கொதாவில் நிறைவேற்றப்பட்டு தீர்ந்தன. கிறிஸ்துவின் தியாகபலியைக்குறித்து ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் எவ்வாறு அதை கருதுகிறானோ அதைப்பொறுத்தே அவனது எதிர்கால நித்தியம் தீர்மானிக்கப்படுகிறது. *தனது சொந்த முயற்சியாலும், கிரியைகளாலும் பரலோகம் செல்ல முயற்சிக்கிறார்களா (ஏசாயா 64:6; எபேசியர் 2:9; தீத்து 3:5) அல்லது கிறிஸ்துவின் கிரியைகளை விசுவாசிப்பதன் மூலம் பரலோகம் செல்ல முயற்சிக்கிறார்களா?*
21. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (லூக்கா 23:46). *இது மிகவும் முக்கியம் வாய்ந்த வாக்கியம். கிறிஸ்து இனி ஒருபோதும் நமது பாவங்களை சுமக்க அவசியம் இல்லை. அவர் கைவிடப்பட்டிருந்த போதும் திரும்ப தனது உறவை பெற்றுக்கொண்டார்.* இயேசுக்கிறிஸ்து ஒவ்வொன்றையும் தக்க காலத்தில் செய்து நிறைவேற்றினார். தனது ஆவியை பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுப்பதும் பிதாவின் சித்தமாகவே இருந்தது.
22. கிறிஸ்து சரீரப்பிரகாரமாய் மாலை 3:00 மணியளவில் மரித்தார் (மத்தேயு 27:50), மரத்தில் தொங்கி மரிப்பவனின் பிரதேம் இரவு முழுவதும் தொங்கக்கூடாது என்பதை நிறைவேற்றினார். ஆகையால் அந்த நாளின் மாலை வேளையிலே அவர் அடக்கம் பண்ணப்பட்டார். (மத்தேயு 5:17;
உபாகமம் 21:22,23).
[10/11 10:31 pm] Elango: இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்க்கு கிட்டதட்ட 1000 ( கிமு 1000) வருடத்திற்க்கு முன்பாக தாவீதினால் சங்கீதம் 22 எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
[11/11 12:05 am] Sam Jebadurai Pastor VDM: ரோமர்கள் புறஇனத்தவர் அவர்களுக்கு விருத்தசேதனம் இல்லை
[11/11 12:05 am] Sam Jebadurai Pastor VDM: இல்லை
[11/11 12:05 am] George AYYA VDM: Eppadi solreenga
[11/11 12:13 am] Sam Jebadurai Pastor VDM: ரோமர்கள் என எப்படி சம்பந்தம் இல்லாமல் கொண்டு வருகிறீர்கள்.
[11/11 12:15 am] Sam Jebadurai Pastor VDM: இயேசுவை சிலுவையில் அறைந்தது ரோமர்களா இல்லை யூதர்களா?? இல்லை நமது பாவமா???
[11/11 12:16 am] George AYYA VDM: Yesu Christ siluvaiyil adikum pothu avarai Roman porsevagargal soozhnthu nintaargal. Avar udaiyin peril seettu pottargal
[11/11 12:17 am] Sam Jebadurai Pastor VDM: பின்மாற்றக்காரர் ஒவ்வொருவரும் நாய்களே.
2 Peter 2:22 (TBSI) "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது. "
Hebrews 6:5-7 (TBSI)
5 "தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,"
6 " *மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால்* , மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்."
7 "எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்."
[11/11 12:17 am] George AYYA VDM: Siluvaiyil araiya sonnathu Jews but arainthathu Romans. Nam ulaga makkal ellorudaiya paavatjirkkaga karthare baliyaanar
[11/11 12:18 am] Sam Jebadurai Pastor VDM: இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது நமது பாவமே
[11/11 12:19 am] Sam Jebadurai Pastor VDM: குறிப்பிட்ட இனமக்களை நாம் நாய்கள் என கூறுவது தவறான அணுகுமுறை ஆகும்
[11/11 12:19 am] George AYYA VDM: Samaritans kooda Jews naaigal entru kooruvathaga Kelvipattirukiren
[11/11 12:21 am] George AYYA VDM: Nan appadi oru nokkathil kooravillai. Sabaigalil and some bible preachers solliyathai kettirukiren
[11/11 12:26 am] Sam Jebadurai Pastor VDM: பலர் அப்படி விளக்குகிறார்கள். ஆனால் பொதுவான நோக்கில் அது தவறு இல்லையா
[11/11 12:29 am] George AYYA VDM: Nam kartharagiya yesu christhu setonikeya Sthri than mahalikaaha vendikollim pothu naaigalai patri koorinaar. Nan thavaraana nokkatjil solla villai

Post a Comment
0 Comments