Type Here to Get Search Results !

சங்கீதம் 20 தியானம்

[06/11 9:33 am] Elango: 🎷🎻 *இன்றைய (04,06 /11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 20* 🎷🎻

1⃣ சங்கீதம் 20 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 20 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ இந்த சங்கீதம் யாரால் யாருக்காக விண்ணப்பம் பண்ணப்பட்டதாக எழுதப்பட்டது❓

*உமது* வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
*உமது* ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
அவர் *உமது* மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, 
சீயோனிலிருந்து *உம்மை* ஆதரிப்பாராக.
ஆபத்துநாளிலே கர்த்தர் *உமது* விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக;

4⃣ சங்கீதம் 20:1
[1]ஆபத்துநாளிலே கர்த்தர் உமது விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக; *யாக்கோபின் தேவனுடைய* நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

*யாக்கோபின் தேவன், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன் என்று மனிதர்களுடைய பெயரைச்சொல்லி அவர்களுடைய தேவன் என்று வேதம் சொல்ல காரணமென்ன❓*

5⃣ சங்கீதம் 20:3
[3]நீர் செலுத்தும் *காணிக்கைகளையெல்லாம்* அவர் நினைத்து, உமது *சர்வாங்க தகனபலியைப்* பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா).

காணிக்கை மற்றும் தகன பலி என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓

6⃣ சங்கீதம் 20:4
[4]அவர் *உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.*

*நமது விருப்பத்தின் படி தேவன் நமக்கு செய்வாரா அல்லது அவரது சித்தமில்லாமல் இருந்தாலும் நமது விருப்பத்தின் படி செய்வாரா❓*

7⃣ சங்கீதம் 20:5
[5]நாங்கள் உமது *இரட்சிப்பினால் மகிழ்ந்து,* எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

இரட்சிப்பின் மகிழ்ச்சி எப்படிப்பட்டதா இருக்கும்❓

8⃣ சங்கீதம் 20:6
[6]கர்த்தர் தாம் *அபிஷேகம்பண்ணினவரை* இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணபத்துக்கு பதில்ருளுவார்.

அபிஷேகம் என்பது என்ன❓அபிஷேகம் பண்ணப்பட்டவரின் சுபாவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்❓

9⃣ சங்கீதம் 20:7
[7]சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் *தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.*

*கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவது என்றால் என்ன❓*

1⃣0⃣ சங்கீதம் 20:8
[8]அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

இந்த வசனத்தின் அர்த்தத்தை விளக்குங்களேன்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய*  - https://goo.gl/eXuRBd

*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும்  PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* -  https://goo.gl/1Kf2BV

*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


[06/11 9:55 am] Elango: 3⃣ இந்த சங்கீதம் யாரால் யாருக்காக விண்ணப்பம் பண்ணப்பட்டதாக எழுதப்பட்டது❓

*உமது*👈 வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
*உமது*👈 ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
அவர் *உமது*👈 மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,
சீயோனிலிருந்து *உம்மை* 👈ஆதரிப்பாராக.
ஆபத்துநாளிலே கர்த்தர் *உமது*👈 விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக;

🔅 இந்த சங்கீதம் *தாவீதினால் by David* எழுதப்பட்டது என்று பல வேத வல்லுனர்களும், மேசியாவை குறித்த தீர்க்கத்தரிசனம் அல்லது இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீதை குறித்து அவரே எழுதியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

🔅 இந்த சங்கீதம் *தாவீதுக்காக For David* எழுதப்பட்டது என்று சில வேத வல்லுனர்களும், மேசியாவை குறித்த தீர்க்கத்தரிசனம் அல்லது இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீதை குறித்து *வேறு ஒருவர்* எழுதியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

[06/11 10:11 am] Elango: 📝 சங்கீதம் 20 - சுருக்கவுரை

இச்சங்கீதத்திற்க்கு *நல்வாழ்த்துகள்* அல்லது யுத்ததிற்க்கு முன்பான *ஜெப விண்ணப்பம்* என்று பெயர் வைக்கலாம்.

வசனங்கள் 1-5 : *நல்வாழ்த்துகள்*

✏ வசனங்கள் 6  : *கர்த்தர் யாரை இரட்சிக்கிறார்*

✏ வசனங்கள் 7-8  : *நாம் யாரைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டும்*

✏ வசனங்கள் 9  : *கர்த்தர் செவிகொடுப்பார்*

[06/11 10:14 am] Elango: போர் துவங்குவதற்கு முன்பு, வீரர்கள் தங்களுடைய தேசத்தின் கீதத்தை பாடுவது வழக்கம். அதுபோல தாவீது யுத்தத்திற்க்கு போவதற்க்கு முன்பதாக *இஸ்ரவேலின் இராஜாவான தாவீதிற்க்காக எழுதப்பட்ட சங்கீதம். ஆனால் இதை எழுதியது தாவீது அல்ல, தாவீதிற்க்காக எழுதப்பட்ட பாடல்.* என்று ஒரு சாரார் சொல்லுவதுண்டு.

🔅தாவீது இது போன்ற போரை சந்திக்கும் சூழ்நிலை இருந்ததால் தான், நமக்கு இவ்வாறான அருமையான சங்கீதம் கிடைத்திருக்கிறது.  👍🙋

[06/11 10:16 am] Elango: 2⃣ சங்கீதம் 20 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

  மேலும் இச்சங்கீதமானது கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனம் என்கின்றனர் சில வேத அறிஞர்கள். *கிறிஸ்துவிற்க்கு மாதிரியாக, நிழலாக பழைய ஏற்ப்பாட்டில் தாவீது இருப்பதால்,* இங்கு இராஜா என்று சங்கீதக்காரன் எழுதியது கிறிஸ்துவைக் குறித்தே என்கின்றனர் சிலர்.

விசுவாசிகளான நம்முடைய வாழ்க்கையிலும் துன்பத்தையும், போராட்டத்தையும், சோதனைகளையும் கடந்தே சென்றாக வேண்டும், சகித்தே ஆக வேண்டும். சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் என்கிறது வேதம்.

யாக்கோபு 1:12
[12]சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.👑👑👑👑👑

[06/11 10:33 am] Elango: இச்சங்கீதத்தில் சொல்லப்பட்ட வாழ்த்துதல், ஆசீர்வாத விண்ணப்பம் நமக்கென்றும் உரிமைப்பாராட்டி கர்த்தரிடத்திலிருந்துj ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளலாம்.  👇🏻

 *இராஜாவை வாழ்த்தும்படியாக ஆசீர்வாத விண்ணப்பம்*

🔅 *ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக;*

🔅யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

🔅அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, *சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.*

🔅நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)

🔅அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,

🔅 உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

🔅நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து,

🔅எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்;

🔅 *உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.*

[06/11 10:48 am] Elango: 🔅நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய பங்கு ஒன்றே ஒன்று மட்டுமே உண்டு...
அது கர்த்தருடைய பாதப்படி!

🔅நாம் விரும்பி செய்ய வேண்டிய  காரியம் ஒன்றே ஒன்று மட்டுமே உண்டு...
அது கர்த்தருடைய சித்தம்!

🔅நாம் சுதந்தரிக்க வேண்டிய ஒரே ஒரு இடம் ஒன்றே ஒன்று மட்டும் உண்டு...
அது கர்த்தருடைய சுபாவம்!

🔅நாம் எப்போதும் நினைக்கக்கூடிய காரியம்  ஒன்றே ஒன்று மட்டும் உண்டு...
அது கர்தத்ருடைய நேசம்!

🔅நாம் மேன்மைப்பாராட்ட ஒன்றே ஒன்று மட்டுமே உண்டு...
அது கர்த்தருடைய நாமம்!

💪 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; *நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.* 👑💪👍சங்கீதம் 20:7

[06/11 10:51 am] Jeyanthi Pastor VDM: Beautiful

[06/11 10:53 am] Elango: இச்சங்கீதமானது போருக்கு முன்பாக ஏறெடுக்கப்பட்ட *தேசிய கீதம் அல்லது ஜெப விண்ணப்பம்* எனலாம்.

 கிறிஸ்துவில் விசுவாசிக்கிறவர்களாகிய நமக்கு, நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்திற்க்கு பொருத்தமானது.✊👍💪

நாம் இப்பொழுது காணாததும், ஆனால் மிக உண்மையானதுமான, பொல்லாத சேனைகளோடு போராடுகிறோம்.😓😪😖😣 மேலும் அவற்றின்மேல் வெற்றிக்காகவும், சாத்தான் மற்றும் பிசாசின் வல்ல்மையின்று விடுதலைக்காவும் நாம் ஏங்குகிறோம்.😑😰😢 எபேசியர் 6:12

[06/11 10:54 am] Elango: எபேசியர் 6:12-13
[12]ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, *துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.*✊👊🤜💪

[13]ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

[06/11 10:54 am] Jeyanthi Pastor VDM: 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
ரோமர் 16:20

[06/11 11:02 am] Jeyanthi Pastor VDM: 11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 12:11. கர்த்தராகிய இயேசு ஜெயித்தாா், நாமும் ஜெயிப்போம்

[06/11 11:03 am] Elango: இச்சங்கீதமானது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தேவனிடம் முன்வைக்கும் விண்ணப்பமாகவும், விசுவாசத்தையும் ஜெயத்தையும் அறிக்கையிடுவதாகவுமௌ இருக்கிறது.

[06/11 11:04 am] Elango: விசுவாச வீரர்கள் நல்லபோராட்டம் போராட கற்றறிந்தவர்கள்.

 அவர்கள் சாதாரணமாய், தங்கள் சொந்த வாழ்வுக்குரிய பொறுப்புகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், பிறர் வாழ்வுக்குரிய பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்கிறவர்களாய் இருக்கிறார்கள்.

*அவர்கள் எப்பொழுதும் விழுந்துபோனவர்களை தூக்கி எடுத்து, அவர்கள் காயங்களை ஆற்றி, அவர்களுக்கு ஊக்கமளித்து, அவர்கள் தேவைகளை சந்திக்கின்றனர்.*

[06/11 11:05 am] Elango: விசுவாச வீரர்கள் தவறு இழைக்கிறவர்களாய் இருந்தபோதிலும், தவறுகிறவர்களாய் இருந்த போதிலும், *அவர்கள் எப்பொழுதும் எழுந்து நிமிர்ந்து நிற்கிறவர்களாயும், திரும்பவும் யுத்தத்திற்கு செல்லும் ஆற்றல் உடையவர்களாய் இருக்கின்றனர்.*

சங்கீதம் 20:8
[8]அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; *நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.*

[06/11 11:07 am] Jeyanthi Pastor VDM: No failure for us,

[06/11 11:16 am] Elango: விழுதலும் எழுதலும் நீதிமானுக்கு இருந்தாலும் அவன் மீண்டும் எழுகிறவனாகவே, ஜெயிக்கிறவனவாக இருக்கிறான். அவன் அதே இடத்தில் விழுந்தே கிடக்கமாட்டான்.

நீதிமொழிகள் 24:16
[16] *நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.*

துன்மார்க்கருக்கு விழுந்தால் அதிலேயே விழுந்து கிடப்பார்கள்.  அவர்களே செத்த சிங்கம்.

பிரசங்கி 9:4
[4]இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; *செத்த சிங்கத்தைப்பார்க்கிலும்* உயிருள்ள நாய் வாசி.

[06/11 11:27 am] Elango: தேவனுடைய ஊழியத்தை வேலையை செய்யும் பரிசுத்தவான்களுக்கு நாம் ஜெபிக்கும், விண்ணப்பிக்கும், ஆசீர்வாத ஜெபமாக கூட இதை நாம் தேவ சமூகத்தில் சங்கீதம் 20 ஐமுன் வைக்கலாம்.

[06/11 11:34 am] Elango: தேவனது ஜனங்களை வழிநடத்துவது என்பது, மிகஜாக்கிரதையான ஒன்று என்பதை மனதில் கொள்ளவும். தலைமைத்துவத்திற்கு அறிவு, நற்பண்புகள், சக்தி/பெலன்,தேவ கிருபை  மற்றும் பகுத்தறிதல் போன்றவை மிகவும் அத்தியாவசியமானவைகளாய் விளங்குகின்றன. நாம் பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியும், பின்பற்றுவோரை நமது சபைமக்களாய் இருக்க விரும்பினால், முதலாவது நாம் புத்திசாலித்தனமான நிலையில் நமது கர்த்தரைப் பின்பற்றி, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நிறைந்து, தேவனது வசனமாகிய சத்தியத்தை உண்மையாய் பின்பற்றுகிறவர்களாய் இருத்தல் அத்தியாவசியமானதாய் இருக்கிறது. 

*பரிசுத்தவான்களுக்கு நாம் ஜெபிக்க விண்ணப்பிக்க கடமைப்பட்டவர்காளாக இருக்கிறோம் என்பதை இந்த சங்கீதம் நமக்கு போதிக்கிறது.*

[06/11 11:52 am] Kamal VTT: உண்மையான வார்த்தைகள்!

[06/11 2:54 pm] Elango: *சங்கீதம் 20 - சிறுவுரை*

🇮🇱 (சங்கீதம் 20: 1-4) ராஜாவின் வெற்றிக்கு ஒரு ஜெபம்.

🇮🇱 (சங்கீதம் 20: 5-7) தேவனிலும் அவருடைய அபிஷேகம் மீதும் நம்பிக்கை வைப்பதை வெளிப்படுத்துகிறது.

 🇮🇱 (சங்கீதம் 20: 8) எதிரிகளின் தோல்வி அறிவிக்கிறது,

🇮🇱 (சங்கீதம் 20: 9) தேவனிடம் ஒரு முடிவான வேண்டுகோள்.

[06/11 3:28 pm] Elango: 4⃣ சங்கீதம் 20:1
[1]ஆபத்துநாளிலே கர்த்தர் உமது விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக; *யாக்கோபின் தேவனுடைய* நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

*யாக்கோபின் தேவன், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன் என்று மனிதர்களுடைய பெயரைச்சொல்லி அவர்களுடைய தேவன் என்று வேதம் சொல்ல காரணமென்ன❓*

*யாக்கோபின் தேவன் என்று அங்கே குறிப்பிடப்படுவது - இக்கட்டுகளில், துன்ப நேரத்தில் பாதுகாக்கிற தேவன் என்பதை குறிக்கிறது*

நம் பரம தேவன் எல்லா உயிரினங்களுக்கும், பறவைகளுக்கும், தேவனாக இருந்தாலும், மனிதர்களின் மேல் அவருடைய அன்பு அதிகமானது.

மனிதனை தேடி வந்தார், *மனிதனின் தேவனென்று தன்னை அடையாளப்படுத்துகிறார், மனிதர்களோடு உடன்பபடிக்கை, வாக்குத்தத்தம் செய்து அதை நிறைவேற்றிய தேவன்.*❤❤❤❤❤❤

யாத்திராகமம் 3:15
[15]மேலும், தேவன் மோசேயை நோக்கி: *ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற* உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

[06/11 3:30 pm] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:11-16
[11]விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
[12]ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.
[13]இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
[14]இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
[15]தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
[16]அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்;

*ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை;*❤❤❤❤❤❤❤

 அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

 [06/11 3:52 pm] Elango: வேதத்தில் தேவன் பல இடங்களில் *தன்னை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன்* என்று தன்னை வெளிப்படுத்துவதன் முக்கிய காரணம்

தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் முன்க்குறிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களோடு தேவன் செய்த உடன்படிக்கையை நமக்கு தெரிவிக்கிறதாக இருக்கிறது.

ஆதியாகமம் 50:24; யாத்திராகமம் 3:15; அப்போஸ்தலர் 7:32

[06/11 3:55 pm] Elango: மத்தேயு 22:31-32
[31]மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

[32] *தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்* என்றார்.

[06/11 4:10 pm] Elango: யாத்திராகமம் 2:24-25
[24]தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, *தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்*

[25]தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; *தேவன் அவர்களை நினைத்தருளினார்.*

மனிதர்களோடு உடன்படிக்கையை ஏற்படுத்தும் தேவன், உடன்படிக்கையை நினைத்தருளும் தேவன், அதை நம் வாழ்க்கையில் நிறைவேற்றும் தேவன்.

தேவன் நமக்கும் பல இக்கட்டான சூழ்நிலையில் நம்மோடு சொப்பனத்தினாலாவது, தீர்க்கதரிசனத்தினாலாவது, தேவ மனிதர்களின் மூலமாவது,தேவ வார்த்தையின் மூலமாவது வாக்குத்ததம் செய்து அதை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார்.

[06/11 4:10 pm] Elango: லேவியராகமம் 26:42
[42]நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் *உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.*

[06/11 4:19 pm] Elango: *சகல ஜீவ ஜந்துகளுக்கு தேவனாக இருந்தாலும், அவர் தன்னை மனிதர்களின் தேவன் என்று தன்னை அழைத்துக்கொள்ள அவர் வெட்கப்படாத தேவன்*

தேவன் ஆபிரகாமுக்கு சொன்னது *உனது வித்தானது அந்நிய தேசத்திலே 400 ஆண்டுகள் அந்நியராய் இருப்பார்கள் என்பதை நீ நிச்சயமாய் அறியக்கடவாய் என்றார். மற்றும் தேவன், அவர்கள் நிமித்தம், அவர்கள் சேவித்த அந்த தேசத்தை நியாயந்தீர்ப்பேன் அவர்கள் வெகு பொருட்களுடன் அந்த தேசத்திலிருந்து திரும்பவருவார்கள் என்றார். அந்த காரிருள் திகிலில் ஆபிரகாமின் குடும்பத்திற்கு என்ன நிகழப்போகிறது என்பதை மட்டுமல்லாது எகிப்திற்கும் என்ன நிகழப்போகிறது என்பதை காண்பித்தார்.*

[06/11 4:20 pm] Elango: நிச்சயமாய் அறிந்து கொள்ள வேண்டியது -

 ஆபிரகாமுக்கு சொன்ன வார்த்தையை குறித்து முற்றிலும் நிச்சயத்துடன் இருக்கவேண்டியது அவசியம், தேவனாகிய கர்த்தர் நான் சொன்னதை நான் நிறைவேற்றுவேன். உன் சந்ததியினர் எகிப்திற்கு செல்வார்கள், அங்கு அவர்கள் உபத்திரவப்படுத்தப்படுவார்கள், சிலர் அங்கேயே அடிமைகளாய் மாண்டுபோவார்கள், இது தேவனது வாக்குத்தத்தமாய் இருக்கிறது.

 [06/11 4:34 pm] Elango: ஆபிரகாமும், யாக்கோபும், ஈசாக்கும் தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததை விசுவாசித்து வாழ்ந்தனர்.

நாமும் பிரச்சனைகளையே நோக்கிக்கொண்டு இராது நமது இரட்சகரை நோக்கிக்கொண்டே இருத்தல் வேண்டும். இதன் மூலம் மறைக்கப்படாத பெரிய திட்டத்தைக் காண்கிறவர்களாயிருந்து நம் மன நிலையில் அமைதி பெருகும்.

 தேவன் நம்முடைய ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக்கும் திட்டம் வகுத்துள்ளார். அவரது திட்டம் பல வருடங்கள் ஆனாலும் அவர் அதை நிறைவேற்றும் தேவனாக இருக்கிறார்.

ஆபிரகாமுக்கு கவலை மற்றும் சந்தேகம் இருந்தன ஆனால் அவைகளை தேவனுடைய வழியில் கையாண்டு மேற்கொண்டார். *அவர் அறிக்கை செய்து தேவனை நம்பினார். அவர் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தார் மற்றும் கவலைக்கான ஆதாரத்தையும் மற்றும் அதற்கான பரிகாரத்தையும் கண்டு உணர்ந்து கொண்டார்.* தேவனுடைய வார்த்தையானது நம்பிக்கைக்குரியதாய் இருக்கிறது.

[06/11 7:12 pm] Elango: 4⃣ சங்கீதம் 20:1
[1]ஆபத்துநாளிலே கர்த்தர் உமது விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக; *யாக்கோபின் தேவனுடைய* நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

*யாக்கோபின் தேவன், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன் என்று மனிதர்களுடைய பெயரைச்சொல்லி அவர்களுடைய தேவன் என்று வேதம் சொல்ல காரணமென்ன❓*

நம் தேவன் நம்மை பாதுகாக்கிற தேவன், அவர் யாக்கோபுக்கு வாக்கருளினார், *நான் உன்னை காத்து, உன்னோடிருப்பேன், உன்னை கைவிட மாட்டேன்* என்றார்.

இந்த சங்கீதமானது தங்களுடைய இரஜாவுக்கு ஆபத்து நெருக்கடியான சூழ்நிலையில் தேவனை நோக்கி மக்கள் விண்ணப்பிக்கும் ஜெபமாக இருக்கிறது.

ஆதியாகமம் 28:15
[15] நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் *உன்னைக் காத்து,* இந்தத் தேசத்துக்கு உன்னைத்திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

*யாக்கோபின் தேவன் என்றால், யாக்கோபை பாதுகாத்த தேவனே எங்களையும் பாதுகாப்பீராக என்று சொல்லலாம்*

[06/11 7:23 pm] Elango: கர்த்தருடைய எல்லா நாமமும், அவருடைய  குணாதிசியங்களை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது.

வசனம் 13 ல் தேவனது நாமம் உட்பட், ஒரே கேள்விகளால் நிறைந்து காணப்படுகிறது. வசனம்

மோசேயிடம்  தேவன் சொன்னார் ’இருக்கிறேன்’ என்பவர் உன்னை அனுப்பினவராய் இருக்கிறேன் என்றார். நான் "இருக்கிறவராகவே இருக்கிறேன்", நான் எப்பொழுதும் தொடர்ந்து இப்படியே இருக்கிறேன் என்றார். எல்லாக் காலங்களிலும் நான் இருக்கிறவராக இருக்கிறேன். இப்படிப்பட்ட பெயரானது நமக்கும் தேவனுக்குமிடையே பெரிய வேறுபாட்டை வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது. நாம் ஒருவரும் "இருக்கிறவர்" என்கிற நாமத்தை இந்த அர்த்தத்தில் சொல்லமுடியாது, சிருஷ்டிகர் மட்டுமே இப்படிப்பட்ட நாமத்தை சொல்லமுடியும். நாம் இடம் மற்றும் காலத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கிறோம்.

*தேவனோ இடம் அல்லது காலம் இவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருக்கிறார்.*

தேவனது குணாதிசயங்கள் என்பது எல்லா சூழல்களிலும் பொருந்தக்கூடிய உபதேசமாய் இருக்கிறது. தேவனது குணாதிசயம் உங்களை நிரம்பி வழியச்செய்யுமென்றால், உங்கள் வாழ்வில் எதை நீங்கள் சந்தித்தாலும், அதை அறிந்து கொண்டு அதற்கான பதிலை தேவனது குணாதிசயத்தில் கண்டுகொள்ள முடியும். உங்கள் மனதில் தேவனுடைய குணாதிசயம் குறித்த வரைபடத்தை எப்பொழுதும் சுமந்து சென்று, அதை உங்கள் நினைவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுதல் வேண்டும். இதுவே உங்களது ஆவிக்குரிய வாழ்வில் உயிரோடிருக்க ஒரு அரிய பெட்டகமாய் இருக்கிறது.

[06/11 7:50 pm] Elango: 1⃣ சங்கீதம் 20 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

இந்த சங்கீதமானது, ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து தேவனுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்க்கு வந்த பிறகு பாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. 2 சாமூவேல் 6:12

சீரியரோடு போரிடுவதற்க்கு முன்பாக இந்த சங்கீதம் 20 ம் எழுதப்பட்டது என்றும், சீரியரோடு போரிடுவதற்க்கு பின்பாக சங்கீதம் 21 ம் எழுதப்பட்டது என்றும் வேத ஆராய்ச்சியாளளர்கள் கருத்து தெரிவிக்கிறனர்.
2 சாமுவேல் 10:17-18
[17]அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது,

[18]சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரும் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.

[06/11 7:51 pm] Elango: *ஆகையால் சங்கீதம் 20 விண்ணப்பம் சங்கீதமாகவும், சங்கீதம் 21 மகிழ்ச்சியின் அல்லது வெற்றியின் சங்கீதம் என்று சொல்லப்படுகிறது.*

[06/11 8:11 pm] Elango: 1 நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:1
2 தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:2
3 உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வராக! உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:3
4 உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவாராக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:4
5 உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:5
6 ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:6
7 சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:7
8 அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்; நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:8
9 ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்; நாங்கள் கூப்பிடும் வேளையில் எங்களுக்குப் பதிலளியும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 20:9

[06/11 8:15 pm] Elango: *இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்*

தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.   சங்கீதம்  20.1

அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.   சங்கீதம்  20.2

நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.   சங்கீதம்  20.3

தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.   சங்கீதம்  20.4

தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.   சங்கீதம்  20.5

கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.   சங்கீதம்  20.6

சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.   சங்கீதம்  20.7

அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.   சங்கீதம்  20.8

கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!   சங்கீதம்  20.9

[06/11 8:34 pm] Elango: 6⃣ சங்கீதம் 20:4
[4]அவர் *உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.*

*நமது விருப்பத்தின் படி தேவன் நமக்கு செய்வாரா அல்லது அவரது சித்தமில்லாமல் இருந்தாலும் நமது விருப்பத்தின் படி செய்வாரா❓*

மனிதர்களை தேவன் நேசிக்கிறார். நம் ஒவ்வொருவரின் தேவையை அவர் அறிவார். நாம் கேட்பதற்க்கு முன்பாகவே அவர் நம் தேவையை அறிந்திருக்கிறார்.

நாம் பல நேரங்களில் அவருக்கு பிரியமில்லாததை, நமக்கு பிரியமானதை அவரிடம் கேட்டாலும், அவர் நமக்கு நன்மையானவைகளை மட்டுமே தருகிறவராக இருக்கிறார். மத்தேயு 7:11

அவரது பிள்ளைகளான நாம் அவரிடம் அவரது சித்தத்தை அறிந்து, அவருக்கு பிரியமானதை கேட்கும்படியே அவர் விரும்புகிறார். அப்படி கேட்கும்பட்சத்தில் நாமும் நாம் என்ன கேட்டோமோ அதை பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கிறோம். 1 யோவான் 5:14-15

மேலும் நாம் அவருக்குள்ளும், அவர் நமக்குள்ளும் இருப்பதால் அவர் சித்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார், அதன்படி அவரிடம் விண்ணப்பிக்கும் வாஞ்சையையும், அவருக்காக வைராக்கியமாக வாழும் பிரயாசத்தையும் நமக்குள் கொடுக்கிறார்.

🔅பிலிப்பியர் 2:13
[13]ஏனெனில் *தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்  உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.*

🔅1 கொரிந்தியர் 15:10
[10]ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; *அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.*

[06/11 8:42 pm] Elango: தேவனின் சித்தமில்லாமலும் நாம் தேவனிடம் கேட்கும் பட்சத்தில் அதாவது சுய இச்சையில், ஆசையில் கேட்கும் போது,  தேவன் அதற்கு செவிக்கொடுக்க மாட்டார்.

யாக்கோபு 4:2-3
[2]நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; *நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.*

[3] *நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.*☝☝☝👂👂❌❌❌❌❌🚫🚫🚫🚫
[06/11 8:45 pm] Elango: *நம்முடைய ஜெபம், நாம் தேவனிடம் கேட்பது நமக்கு சரியாக தோன்றினாலும், நம்முடைய சித்தமல்ல தேவனுடைய சித்தம் மட்டும் நிறைவேற வேண்டும் என்று தேவ கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

மாற்கு 14:36
[36]அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், *ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது* என்றார்.

[06/11 8:51 pm] Elango: *பதில் அளிக்கப்படாத ஜெபத்திற்கான காரணங்கள்:*

விசுவாசக்குறைவு. (மத்தேயு 21:22).

சுய விருப்பங்களுக்காய் ஜெபித்தல் (யாக்கோபு 4:3).

அறிக்கை செய்யப்படாத பாவங்கள்  (சங்கீதம் 66:18).

மனதுருக்கமற்ற நிலை (நீதிமொழிகள் 21:13).

பெருமை மற்றும் சுய நீதி (யோபு 35:12-13).

ஆவியானவரின் நிறைவு இல்லாமை (எபேசியர் 6:18).

கீழ்ப்படியாமை
(1 யோவான் 3:22).j

*தெய்வீக சித்தத்தில் இல்லாது இருப்பது*
 (1 யோவான் 5:14).


- @Tamilmani Ayya VDM

[06/11 8:54 pm] Jeyanthi Pastor VDM: செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 15:8
நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
நீதிமொழிகள் 15:29.
நான் விசுவாசிக்கிறேன்,  நம் விருப்பத்தின் படியும் கர்த்தர் நமக்குத் தருவார்.

"நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும்.
நீதிமொழிகள் 10:24

[06/11 8:57 pm] Elango: ஏசாயா 64:5
[5] *மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்;*❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.

[06/11 8:59 pm] Elango: 7⃣ சங்கீதம் 20:5
[5]நாங்கள் உமது *இரட்சிப்பினால் மகிழ்ந்து,* எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

இரட்சிப்பின் மகிழ்ச்சி எப்படிப்பட்டதா இருக்கும்❓

இந்த கேள்விக்கு பதில் கொடுங்களேன் குழுவினரே...

[07/11 8:10 am] Elango: 8⃣ சங்கீதம் 20:6
[6]கர்த்தர் தாம் *அபிஷேகம்பண்ணினவரை* இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணபத்துக்கு பதில்ருளுவார்.

*அபிஷேகம் என்பது என்ன ❓ * அபிஷேகம் பண்ணப்பட்டவரின் சுபாவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்❓

ஆங்கில வார்த்தைகளாகிய “appoint or ordain”  என்ற வார்த்தைகள் மூல பாஷையாகிய கிரேக்க மொழியில் பல கலாச்சார அர்த்தத்தினை உள்ளடக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்வதற்கென நியமிக்கப்படுதல், கரங்களை வைத்தல், யூதர்களின் மாதிரிப்படி, ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேறுபடுத்தப்பட்டு, புதிய அதிகாரம் அளிக்கப்பட்டு, நபர்களை அபிஷேகித்தல் / நியமித்தல் என்பதைக் குறிக்கிறது.

*பழைய ஏற்ப்பாட்டில் அபிஷேகித்தல் / பிரதிஷ்டை  என்பது* - அபிஷேகம் என்பது தேவனுடைய குறிப்பிட்ட வேலைக்காக பிரித்தெடுக்கப்பட்டு, தேவனுடைய ஊழியத்திற்க்காக தேர்ந்தெடுக்கப்படுவதை குறிக்கிறது. பழைய ஏற்ப்பாட்டில் இராஜாக்கள், ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் போன்றவர்கள் சில் குறிப்பிட்ட நோக்கத்திற்க்காக அபிஷேகம் பண்ணப்பட்டனர்.

ஆரோனை பரிசுத்தம் பண்ணும்படியாக மோசே அபிஷேக தைலமாகிய எண்ணெயை தலைமீது ஊற்றினார். மோசே ஆரோனின் குமாரரை கொண்டுவந்து அவர்களை உடுத்துவித்தார். எண்ணெய் பரிசுத்த ஆவியானவரைக் பிரதிபலிக்கிறது. மோசே ஆசரிப்பு கூடாரத்தில் பயன்படும் ஒவ்வொரு பொருட்களையும் பரிசுத்தப்படுத்தினார். எல்லா தட்டுமுட்டுகளும் போதனை அளிக்கும் உபகரணங்களாய் இருந்தன, பரிசுத்த ஆவியானவர் நமக்கு போதனைஅளிக்கிறவராய் இருக்கிறார். அவர்கள் மீது ஏழுமுறை தெளிக்கப்பட்டது, ஏழு என்ற எண் பூரணத்தைக் காட்டுகிறது. -- ஏசாயா 11:1,2.

*புதிய ஏற்ப்பாட்டில் அபிஷேகித்தல் / பிரதிஷ்டை  என்பது* -  வரம்பெற்றவர்களை, மற்றும் வேறுபிரிக்கப்பட்ட விசுவாசிகளை ஸ்தல சபையில் ஊழியத்திற்கென ஏற்படுத்துவது ஆகும்.

அப்போஸ்தலர் 14:20-23 வரையுள்ள வேதபகுதியை வாசிக்கவும். *இங்கு பவுல் ஸ்தாபிக்கப்பட்ட சபைகளில், மூப்பர்களை நியமணம் செய்வதைப் பார்க்கிறோம்.இவ்வாறு நியமணம் செய்யப்படுவோரைக் குறித்து நன்கு ஆய்வு செய்த பின்னர், ஜெபத்துடனும், உபவாசத்துடனும் சபைகளில் நியமணம் செய்யப்பட்டனர்*

ஆகையால் இங்கு இரு கருத்துக்களைக் காண்கிறோம், அநேக மக்களது அங்கீகாரம் பெறுதல், மற்றும் அப்போஸ்தலரின் பிரநிதிகளாய் அதிகாரம் பெறுதல். இப்படிப்பட்டவர்கள் அவர்களது குணாதிசயங்கள் மற்றும் தகுதி அடிப்படையில் ஜனங்களால் "அங்கீகாரம்" பெறுகிறவர்களாய் இருக்கின்றனர். 

கரங்களை வைத்தல் - அபிஷேகம் பெறும், அல்லது ஏற்படுத்தப்படும் நபர் சபையில், மூப்பர், டீக்கன் அல்லது டீக்கனஸ் ஆக அதிகாரம் பெற்று, சபைப் பொறுப்பில் பங்கேற்கிறவர்களாகிறார்கள். இது ஆரம்ப கால சபையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீது கரங்களை வைத்து ஜெபிப்பதன் மூலம், அவர்கள் சபையில் அதிகாரமுடையவர்களாவது உறுதி செய்யப்பட்டது.

*அபிஷேகம் என்பது இன்றைய விசுவாசிகளின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது, விசுவாசிகளான நாம் இராஜாக்கள், ஆசாரியர்கள் 1 பேதுரு 2:9, தீர்க்கதரிசிகள், நாம் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்.* 1 . பேதுரு 2:9, 1 கொரிந்தியர் 6:11

[07/11 8:11 am] Elango: 8⃣ சங்கீதம் 20:6
[6]கர்த்தர் தாம் *அபிஷேகம்பண்ணினவரை* இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணபத்துக்கு பதில்ருளுவார்.

அபிஷேகம் என்பது என்ன❓ *அபிஷேகம் பண்ணப்பட்டவரின் சுபாவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்❓*

- தேவ பக்தி, உண்மை, விசுவாசம், ஆவியின் வழி நடத்தல் ஆகியவற்றைப் பெற்றர்களாக இருக்க் வேண்டும். 1 தீமோத்தேயும் 3:1-10
- முன்மாதிரியுள்ள வாழ்க்கை செய்தல் அவசியம்.
- சபை அலுவலர் ஒரு பாவத்தில் விழுந்து விட்டால், அவர் எல்லோர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு கடிந்து கொள்ளப்படுதல் வேண்டும்.
-  ஒரு சாதாரண சபை அங்கத்தினர் பாவத்திற்காக தனிப்பட்ட நிலையில் பாவ அறிக்கை செய்து ஒப்புரவாக வேண்டும்,
-  கர்த்தருடைய பணிசெய்ய எல்லோருக்கும் முன்பாக கலங்கமற்றோராய் இருத்தல் மிகவும் அவசியம்.

அப்போஸ்தலர் 10:38 *நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்*

8. *ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.*
9. அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.
10. *அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.* அப்போஸ்தலர் 6:8-10

[07/11 8:13 am] Elango: 5⃣ சங்கீதம் 20:3
[3]நீர் செலுத்தும் *காணிக்கைகளையெல்லாம்* அவர் நினைத்து, உமது *சர்வாங்க தகனபலியைப்* பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா).

*காணிக்கை மற்றும் தகன பலி என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓*

- காணிக்கை என்பது தன்னையே முற்றிலுமாய் அற்பணித்தல் - 2 கொரி. 8:5.

- காணிக்கை கொடுப்பது, ஆராதனையின் ஒரு பகுதியாய் இருக்கிறது.
- சபையின் காணிக்கையானது, சபையின் ஆவிக்குரிய வளர்ச்சி காரியங்களைச் சுட்டிக்காட்டுகிறதாய் இருக்கிறது.
- விசுவாசிகளிடமிருந்து மட்டுமே காணிக்கைகள் சேகரித்தல் வேண்டும். கர்த்தர் அவிசுவாசிகளை விரும்புகிறார், அவர்கள் பணத்தை விரும்பவில்லை.

*சர்வாங்க தகன பலிகள்* - பலி செலுத்துபவரின் பாவங்களுக்காக பழுதற்ற ஒரு மிருகம் கொலைசெய்யப்பட்டது. சிலுவை மீது நமது பாவங்களுக்காக கிறிஸ்து மரித்ததை இது பிரதிபலிக்கிறது. லேவியராகமம் 1

1. ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, 2. *கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.* எபேசியர் 5:1-2

[07/11 8:13 am] Elango: 6. *கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை* இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.சங்கீதம் 20:6

மேசியா என்ற எபிரெய பதத்தின் அர்த்தம் அபிஷேகிக்கப்பட்ட ஒருவர், இதேபதம் கிரேக்க பாஷையில் கிறிஸ்து என அழைக்கப்படுகிறது இதன் பொருளும் அதே அர்த்தத்தை உடையதாய் இருக்கிறது. யூதாயிஸத்தில் மேசியா என்பவர் தேவ மனிதனல்ல, அவர் தேவனிடமிருந்து வந்த மனிதர். அவர் வரும் போது நான்கு காரியங்களைச் செய்கிறவராய் இருக்கிறார். யூத தேசத்திற்கு அவர்களது ஜென்ம பூமியை மீட்டு கொடுப்பார், அவர் எருசலேமில் உள்ள தேவாலயத்தை திரும்பக் கட்டுவிப்பார், அவர் இஸ்ரவேலுக்கு சமாதனத்தை அளிப்பார், யூத ஜனங்களை கொடுமையாய் நடத்திய புறஜாதியாரை நியாயந்தீர்ப்பார்.

இந்த சங்கீதம் 20 கிறிஸ்துவின் பாடுகளை குறித்த தீர்க்கதரிசனமும், பரிசுத்தவான்களின் ஜெப விண்ணப்பமாகவும் இருக்கிறது.

*இரண்டாம் வருகையில் கிறிஸ்து இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுவார்.*

[07/11 8:15 am] Elango: 7⃣ சங்கீதம் 20:5
[5]நாங்கள் உமது *இரட்சிப்பினால் மகிழ்ந்து,* எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

*இரட்சிப்பின் மகிழ்ச்சி எப்படிப்பட்டதா இருக்கும்❓*

- இரட்சிப்பின் மகிழ்ச்சி என்பது நம பாவ மன்னிப்பின் அடையாளமாக இருக்கிறது.

- இரட்சிப்பின் மகிழ்ச்சி என்பது நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானதை குறிக்கிறது, பிசாசின் கன்னிகள் தெறித்து நாம் தப்பித்தை குறிக்கிறது.

- இரட்சிப்பின் மகிழ்ச்சி என்பது பரலோகத்தில் ஜீவ புஸ்தகத்தில் நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறதன் அடையாளமாக இருக்கிறது.

- இரட்சிப்பின் மகிழ்ச்சி என்பது பரிசுத்த ஆவியானவர் நம்மோடு எப்போதும் வாசமாக இருப்பதை குறிக்கிறது.

- இரட்சிப்பின் மகிழ்ச்சி என்பது பொல்லாத இவ்வுலகத்திலிருந்து விடுதலையானதை குறிக்கிறது

- இரட்சிப்பின் மகிழ்ச்சி என்பது நாம் கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய பிள்ளையானதை அறிவிக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- இரட்சிப்பின் மகிழ்ச்சி என்பது நாம் நிச்சிய ஜீவனை பெற்றுக்கொண்டதன் அடையாமாக இருக்கிறது.

- கர்த்தருக்குள் எப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதே நமக்கு பெலன்.நெகேமியா 8:10
- கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்கிறார் பவுல். பிலிப்பியர் 4:4

அப்போஸ்தலர் 16:34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட *தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்*

[07/11 8:17 am] Elango: 9. கர்த்தருடைய நாமத்தை *குறித்தே* மேன்மைப்பாராட்டுவது என்றால் என்ன❓

இந்த உலத்தில் உள்ள எந்த உலகபிரகாரமான காரியங்களிலும் நாம் மேன்மைப்பாராட்டக்கூடாது. இந்த உலகத்தில் :

- நாம் செல்வந்தவர்களாக இருக்கலாம்

- உயர்ந்த அதிகாரத்தில் இருக்கலாம்

- படித்த மேதையாக இருக்கலாம்

- அழகாக இருக்கலாம்

- உடல பலத்தில் பெரிய ஆளாக இருக்கலாம்

- அதிக பட்டங்கள், பதக்கங்கள் பெற்றவர்களாக இருக்கலாம்...... *ஆனால்*

உலகப்பிரகாரமான எந்த காரியங்களாக இருந்தாலும், நாம் அதில் மேன்மைப்பாராட்டக்கூடாது.

- ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

- பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

- ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;  எரேமியா 9:23
*மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.*  எரேமியா 9:24

14. *இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். 1 நாளாகமம் 29:14* 

17. *மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்*. 18. தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.2 கொரிந்தியர் 10:17-18

*நம்முடைய நற்கிரியையை, வேலையை, குணத்தை, உதவியை, பெலத்தை, ஞானத்தை, செல்வாக்கை, படிப்பை, பெலத்தை குறித்து யாராவது நம்மை புகழ்ந்தால், நாம் அந்த புகழ்ச்சியை நமக்கு மாலையாக அணிவிக்காமல், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த கரத்தருக்கு ஸ்தோத்திரம் என்றே சொல்லக்கடவோம்.*

[07/11 8:18 am] Elango: 10. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். சங்கீதம் 20:8  - என்பதை அர்த்ததை விளக்குங்களேன்.

கர்த்தர் நம்மோடும், நாம் கர்த்தரோடு இருக்க போதும் நாம் ஜெயிக்கிறவர்களாக, நிமிர்ந்து நிற்கிறவர்களாக இருக்கிறோம். நம் தலையை உயர்த்தி, உயர்ந்த ஸ்தலத்தில் நடக்கப்பண்ணுகிறவர் நம் தேவனே.

சர்வலோகத்தையும் படைத்த சிருஷ்டிகர் நம்மோடிருக்க,நமக்காக யுத்தம் பண்ணும் போது நமக்கு எதிராக யுத்தம் செய்கிறவர்கள் ஒரு வழியாக வருவார்கள், பல வழியாக முறிந்து ஓடுவார்கள் .

சங்கீதம் 91:7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
நீதிமொழிகள் 28:1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

மோசேக்கு பிறகு, இஸ்ரவேலரை நடத்தி செல்லும் தலைவனாக கர்த்தர் யோசுவாவை தெரிந்தெடுத்து, யோசுவா பல பட்டணங்களை பிடித்தான், தேவ்ன் இஸ்ரவேலரோடு இருந்த்தால் அவர்கள் ஜெயிக்கிறவர்களாக இருந்தார்கள். ஆனால் ஆயி பட்டணத்திற்க்கு எதிரான யுத்தத்தில் தோற்றார்கள் ஏனென்றால் ஆகான் செய்த உடன்படிக்கையை மீறி, சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும் வஞ்சித்ததும் நிமித்தம்.

ஆகானைப்போல நாம் ஆவிக்குரிய போராட்டத்தில் இந்த உலக காரியங்களை இச்சித்து, உலக பொருட்களையே நேசித்து தேவ பகைஞராக இருப்பதால், நாம் பல சூழ்நிலையில் தோற்கிறவர்களாக காணப்படுகிறோம்.

13. எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு *உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்* யோசுவா 7:13

நாம் நம பாவத்தை அறிக்கையிட்டு, நம்மை நாமே நிதானித்து அறிந்து, தேவ சமூகத்தில் பரிசுத்தப்படுத்திக்கொண்டால்,  தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தால் தேவன் நம்மை சத்துருக்களுக்கு முன்பாகவும், பிசாசின் அந்தார சக்திகளை தோற்கடிக்கிறவராகவும் நம்மை பலப்படுத்துவார்.

[07/11 9:02 am] Aa Darvin Sekar Brother VDM: 🎷🎻 *இன்றைய (04,06 /11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 20* 🎷🎻

9⃣ சங்கீதம் 20:7
[7]சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் *தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.*

*கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவது என்றால் என்ன❓*

1⃣0⃣ சங்கீதம் 20:8
[8]அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

இந்த வசனத்தின் அர்த்தத்தை விளக்குங்களேன்.

[07/11 9:03 am] Aa Darvin Sekar Brother VDM: 37 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிகைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,

1 இராஜாக்கள் 8 :37

38 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

1 இராஜாக்கள் 8 :38

39 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

1 இராஜாக்கள் 8 :39

[07/11 9:13 am] Aa Darvin Sekar Brother VDM: 30 கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான், அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 18 :30

31 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள், அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள், நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும்,

2 இராஜாக்கள் 18 :31

33 ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டா?

2 இராஜாக்கள் 18 :33

34 ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டா?

2 இராஜாக்கள் 18 :34

35 கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார்? என்கிறார் என்று சொன்னான்.

2 இராஜாக்கள் 18 :35

37 அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

2 இராஜாக்கள் 18 :37

[07/11 9:20 am] Aa Darvin Sekar Brother VDM: 1 ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2 இராஜாக்கள் 19 :1

2 அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களில் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான்.

2 இராஜாக்கள் 19 :2

3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அனுபவிக்கிற நாள், பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

2 இராஜாக்கள் 19 :3

4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார், உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார், ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

2 இராஜாக்கள் 19 :4

5 இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

2 இராஜாக்கள் 19 :5

6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

2 இராஜாக்கள் 19 :6

7 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

2 இராஜாக்கள் 19 :7

8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்ற கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

2 இராஜாக்கள் 19 :8

15 கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர், நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

2 இராஜாக்கள் 19 :15

16 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும், கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

2 இராஜாக்கள் 19 :16

17 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

2 இராஜாக்கள் 19 :17

18 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான், அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே, ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

2 இராஜாக்கள் 19 :18

19 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

2 இராஜாக்கள் 19 :19

21 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள், எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

2 இராஜாக்கள் 19 :21

22 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

2 இராஜாக்கள் 19 :22

23 உன் ஸ்தானாபதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன், அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத் தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

2 இராஜாக்கள் 19 :23

24 நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன், என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

2 இராஜாக்கள் 19 :24

25 நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

2 இராஜாக்கள் 19 :25

28 நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 19 :28

33 அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.

2 இராஜாக்கள் 19 :33

34 என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

2 இராஜாக்கள் 19 :34

35 அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான், அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

2 இராஜாக்கள் 19 :35

36 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான்.

2 இராஜாக்கள் 19 :36

37 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள், அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

2 இராஜாக்கள் 19 :37

[07/11 9:34 am] Elango: 👍👍

ஏசாயா 31:1
[1] *சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!*

Post a Comment

0 Comments