Type Here to Get Search Results !

சங்கீதம் 21 தியானம்

[07/11 11:00 am] Elango: 🎷🎻 *இன்றைய (07/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 21* 🎷🎻

1⃣ சங்கீதம் 21 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 21 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ *இந்த சங்கீதத்தில் குறிப்பிடப்படும்  இராஜா யார்❓தாவீது இராஜாவா அல்லது கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனமா இந்த சங்கீதம்❓*

4⃣ *உத்தம ஆசீர்வாதங்களோடு* நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.சங்கீதம் 21:3

 *உத்தம ஆசீர்வாதங்கள்*  என்றால் என்ன...❓

5⃣ அவர்கள் கனியைப் பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.சங்கீதம் 21:10

 *அவர்கள் கனி்* என்று எதை குறிப்பிடுகிறார்..❓

6⃣ அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள், தீவினையை *எத்தனம்பண்ணினார்கள்,* ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.சங்கீதம் 21:11
 *எத்தனம்பண்ணினார்கள்*  இதன் அர்த்தம் ....❓

7⃣ சங்கீதம் 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா).

நம் மனவிருப்பத்தின் படி தேவன் தந்தருளவும், நம்முடைய உதடுகளின் விண்ணப்பத்தை தேவன் தள்ளாதிருக்கவும்படியாக நாம் என்ன செய்ய வேண்டும்❓எப்படி வாழ வேண்டும்❓

8⃣ சங்கீதம் 21:11
அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று. 

இதன் அர்த்தம் என்ன❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பழைய அனைத்து தியானங்களையும் PDF வடிவில் தரவிறக்கம் செய்ய*  - https://goo.gl/eXuRBd

*பழைய அனைத்து சங்கீத தியானங்களையும்  PDF வடிவில் தரவிறக்கம் செய்ய* -  https://goo.gl/1Kf2BV

*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


[07/11 11:08 am] Jeyanthi Pastor VDM: 🙏🏼இந்த சங்கீதம் தாவிது, எழுதினதானாலும், இவர் அதிகமாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனம் எனலாம்.  அதிக காரியங்கள்,  கர்த்தராகிய இயேசுவின் மகிமையை மேன்மைப் படுத்துவதாக இருக்கிறது.

[07/11 1:37 pm] Elango: 5⃣ அவர்கள் கனியைப் பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.சங்கீதம் 21:10

 *அவர்கள் கனி்* என்று எதை குறிப்பிடுகிறார்..❓

🔅அவர்களின் கனி என்றால் துன்மார்க்கர்களின் சந்ததி, பரம்பரை,  வம்சம் என அர்த்தம் கொள்ளலாம்.

10 *அவர்கள் தலைமுறையைப்* இவ்வுலகினின்று ஒழித்துவிடுவீர்; அவர்கள் வழிமரபை மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 21:10

[07/11 1:47 pm] Elango: அவரது பகைவர்களின் *குடும்பங்கள்* அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.   சங்கீதம்  21.1

[07/11 3:14 pm] Elango: 6⃣ அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள், தீவினையை *எத்தனம்பண்ணினார்கள்,* ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.சங்கீதம் 21:11
 *எத்தனம்பண்ணினார்கள்*  இதன் அர்த்தம் ....❓

*எத்தனம் என்றால் தீமையான காரியம் செய்ய திட்டமிடுதல், ஆயத்தப்படுதல்.*

11 உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், *சதித்திட்டம் தீட்டினாலும்,* அவர்களால் வெற்றிபெற இயலாது. திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 21:11

ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் *தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.*
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.   சங்கீதம்  21.11

[07/11 3:15 pm] Elango: அப்போஸ்தலர் 9:29
[29]கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் *கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.*

[07/11 4:41 pm] Elango: 1⃣ சங்கீதம் 21 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

*இதை வெற்றியின் சங்கீதம் என்று அழைக்கலாம், யுத்தத்தில் இராஜா ஜெயித்த பிறகு எழுதப்பட்ட சங்கீதம் இது*

இந்த பாடலை எழுதியவரைக் குறித்து இரு கண்ணோட்டம் சொல்லப்படுகிறது.

1. இந்த சங்கீதம் தாவீதினால் எழுதப்பட்டது; எனவே இதனை தாவீதின் சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது.
அல்லது தாவீது இராஜாவின் வெற்றியைக் குறித்து  வேறு சில நபரால் இந்த சங்கீதம் எழுதப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

2.கிறிஸ்துவுக்கு மாதிரியாக தாவீது இருப்பதால், இச்சங்கீதம் தாவீதின் குமாரனாகிய மேசியாவைக்குறித்து தாவீதினால் தீர்க்கதரிசனமாக பாடப்பட்ட சங்கீதம் ஆகும்.

எசேக்கியேல் 37:24
[24] *என் தாசனாகிய தாவீது என்பவர்* அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,

*என் தாசனாகிய தாவீது என்பவர் என்பது இங்கே கிறிஸ்துவை குறிப்பதாக இருக்கிறது*

[07/11 5:04 pm] Elango: 7⃣ சங்கீதம் 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா).

*நம் மனவிருப்பத்தின் படி தேவன் தந்தருளவும், நம்முடைய உதடுகளின் விண்ணப்பத்தை தேவன் தள்ளாதிருக்கவும்படியாக நாம் என்ன செய்ய வேண்டும்❓எப்படி வாழ வேண்டும்❓*

[07/11 5:12 pm] Jeyanthi Pastor VDM: கர்த்தருக்குப் பிரியமானவர்களாக வாழ வேண்டும்.

[07/11 5:18 pm] Jeyanthi Pastor VDM: 1, 14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்.
2 நாளாகமம் 7:14

15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
2 நாளாகமம் 7:15

[07/11 5:22 pm] Peter David Ayya: இதன் விளக்கம்
 யாருடைய
 தேவ பகைஞர்கள் யார் வேதம் கூறுவது என்ன?
உங்களை பகைக்கிறவர்களை சிநேகிக்க தானே  கூறுகிறது
 தேவனுக்கு விரோதமான பகை என்ன?

 [07/11 5:25 pm] Jeyanthi Pastor VDM: நாம் ஏறெடுக்கிற ஜெபம்
1. தாழ்மையாக இருக்க வேண்டும்.
2.   கர்த்தருடைய முகத்தை தேடி,  ஜெபிக்க வேண்டும்.
3.பொல்லாத வழிகளை  விட்டு திரும்ப வேண்டும். 

அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவன் கேட்டு, 
பாவத்தை மன்னித்து ஷேமத்தைக் கொடுப்பார்.

[07/11 5:42 pm] Peter David Ayya: நன்றி சிஸ்டர்
ஆனால் வசனம் இப்படி கூறுகிறது இதற்கும் விளக்கம் தாருங்கள்
லூக்கா 6:35
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.

[07/11 5:44 pm] Jeyanthi Pastor VDM: Yes.  Ithuvum discuss pannalam

[07/11 5:46 pm] ‪+91 97893 23208‬: உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே. 
ஏசாயா 44:2
இந்த வசனத்தில் வரும் யெஷூரன் என்பது யாரை குறித்து சொல்கிறது........... இதன் அர்த்தம் என்ன?

[07/11 6:04 pm] Peter David Ayya: நாம் எப்படி தாழ்த்தி விண்ணப்பம் பண்ணினால் ஷேமத்தை தருவேன்
இதற்கு உங்கள் விளக்கம் தாங்க சிஸ்டர்
26 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களைவிட்டுத் திரும்பினால்,
2 நாளாகமம் 6:26

27 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.
2 நாளாகமம் 6:27

இந்த வசனம் பற்றி விளக்கம். தாங்க சிஸ்டர்

[07/11 6:10 pm] Jeyanthi Pastor VDM: இதுவும் அது போலொத்த,  வசனம் தானே பாஸ்டர்

[07/11 6:24 pm] Elango: தேவனுக்கு பகைஞர்கள் நமக்கும் பகைஞர்களே.

துர்உபதேசகாரர்களோடு வாழ்த்துதலை சொல்லாமலும், வீட்டில் ஏற்றாமலும் இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது.

சத்துருவை நேசிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்,  உலக சிநேகத்தை  நாடக்கூடாது அது தேவனுக்கு விரோதமான பகை.

சங்கீதம் 139:21-22
[21] *கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ❓❓❓❓*

[22]முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.

[07/11 6:24 pm] Jeyanthi Pastor VDM: Yes தான்

[07/11 6:26 pm] Elango: சத்துருக்களை நேசிக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவர்களின் பொல்லாத கிரியைகளுக்கு நாம் இணங்கி போகலாம் என்ற அர்த்தம் ஆகாது.

[07/11 6:33 pm] Elango: யாக்கோபு 5:19-20
[19]சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,

[20] *தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.*

ஒருவரும் கேட்டுப்போவது தேவனுடைய விருப்பம் அல்ல, எல்லோரும் இரட்சிப்படையவும், தேவ இரஜ்யத்தை சுதந்தரிக்கவுமே தேவன் விரும்புகிறார்.

நாம் அவர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபிக்க வேண்டும்.

[07/11 6:54 pm] Peter David Ayya: துர்உபதேசகாரர்கள் துன்மார்கர்கள் வேறு பாடு என்ன சகோ

[07/11 7:04 pm] Elango: இருவமே தேவ சித்தத்திற்க்கு எதிரானவர்கள்.

2 கொரிந்தியர் 11:13-15
[13]அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

[14]அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

[15]ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; *அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.*

[07/11 7:11 pm] Peter David Ayya: இவர்கள் சத்தியத்தை அறிந்தவர்களா அறியாதவர்களா அறிந்தும் சத்தியத்தை மறுதலிக்கிறவர்களா அல்லது துணிகரக்காரர்களா

[07/11 7:27 pm] Elango: சத்தியத்தை அறியாதபடிக்கு பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம்.

[07/11 7:29 pm] Jeyanthi Pastor VDM: Yes

[07/11 7:46 pm] Elango: Yes... தாவீதிற்க்கும் சுத்தி சுத்தி சத்துருக்கள் தான்.

தேவ பிரியர்கள் அனைவருக்கு சத்துருக்கள் இல்லாமல் இருக்கவே முடியாது

[07/11 7:52 pm] Peter David Ayya: நீதிமொழிகள் 16:7
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
இந்த வசனம் இப்படி சொல்கிறதே இதன் விளக்கம் என்ன சகோ

[07/11 7:55 pm] Elango: மொர்தகாய்யின் வழிகள் தேவனுக்கு பிரியமாக இல்லையோ? ஆமானோடு சாமாதானம் ஆக்க...

தாவீதின் வழிகள் தேவனுக்கு பிரியமாக இல்லையோ? அசிரிய இராஜாவோடு சமாதானம் ஆக்க...

*உங்களுடைய புரிதல் என்ன ஐயா? சத்துரு என்பது யாரை நீங்கள் நினைக்கிறீர்கள்?

[07/11 7:59 pm] Peter David Ayya: எபேசியர் 6:12-13
[12]ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
[13]ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

[07/11 8:01 pm] Elango: மாம்சமான மனிதருக்குள்ளிலிருந்து பிசாசு கிரியைகளை செய்யமாட்டான்னு நினைக்கிறீங்களா?

[07/11 8:22 pm] Aa Darvin Sekar Brother VDM: 20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள், உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.

சங்கீதம் 139 :20

21 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?

சங்கீதம் 139 :21

22 முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன், அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.

சங்கீதம் 139 :22

[07/11 8:25 pm] Elango: எதிர் கேள்விகளையே அடுக்கடுக்காக கேட்பதை விட நம்முடைய கருத்தையும் தெரிவிக்க லேண்டும். அது தான் தியானம். எல்லோரும் கற்றுக்கொள்ள ஏதுவாகும்.

[07/11 8:40 pm] Peter David Ayya: ரோமர் 5:8-11,19
[8]நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
[9]இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
[10]நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
[11]அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
[19]அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

[07/11 8:43 pm] Peter David Ayya: 2 பேதுரு 3:9
[9]தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

[07/11 8:43 pm] Elango: பிசாசோடு நாம் சமாதானமாகும் படியாகவோ அல்லது பிசாசும் நம்மோடு சாமாதானமாகும் படியாகவும் ஒரு நாளும் தேவன் நினைக்க மாட்டார்.அப்படி செய்யவும் மாட்டார்.

[07/11 8:45 pm] Elango: இது பிசாசை மனிதர்களோடு ஒப்புரவாக்கும், சமாதானமாக்கும் வசனமல்ல...

மனந்திரும்பிய பாவிகளை, தேவனோடு ஒப்புரவாக்குதலை குறித்தது...

[07/11 8:46 pm] Jeyanthi Pastor VDM: Yes,  சத்துருக்கள் சத்துருக்களே

[07/11 8:47 pm] Elango: பிசாசும் நம்முடைய சத்துருதான், பிசாசின் கிரியைகளை செய்ய தன்னை வித்துப்போட்டவனும் நமக்கு சத்துரு தான்.

[07/11 8:48 pm] Jeyanthi Pastor VDM: சில இடங்களில் வீட்டாரே சத்துரு என்றும் வேதம் சொல்லுகிறது

[07/11 8:49 pm] Elango: Yes... பிசாசின் கிரியைகளோடு, உலகத்தோடு ஒத்து அவர்கள் வாழ்வதால்.

தேவனுடைய சித்தத்தை செய்பவர்கள் யாரும் அவரின் சத்துருக்கள் அல்ல.

[07/11 8:55 pm] Peter David Ayya: மாம்சமான மனிதனின் இருதயத்தில் உள்ள இருள் விலக வேண்டுமல்லவா அந்த 
மனிதனும் மீட்கப்பட்டு ஜீவ ஒளியை பெறவேண்டுமல்லவா
யோவான் 11:9-10
[9]இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.
[10]ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.

[07/11 8:55 pm] Elango: லூக்கா 19:27
[27]அன்றியும் தங்கள்மேல் *நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை*👈 இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

இங்கு கிறிஸ்துவை இராஜாவாக ஏற்காத மனிதர்கள் தேவனுக்கு சத்துருக்கள்.

[07/11 8:58 pm] Elango: தேவனுடைய சித்தத்தை சிந்திக்காமல் மறுரூபமாகாமல் இருக்கும் நம்முடைய மனமும் தேவனுக்கு விரோதியாக சத்துருவாக இருக்கிறது.


மத்தேயு 16:23
[23]அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, *சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்;* தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

[07/11 9:08 pm] Aa Darvin Sekar Brother VDM: ஆமாம் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிற மனதுவேண்டும் இல்லையென்றால் அப்படிபட்டவர்களுக்கு ஐயோ?

[07/11 9:13 pm] Elango: ஒருவரும் கெட்டுப்போவது தேவனுக்கு சித்தமல்ல, எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவ சித்தம்.

யோவான் 3:19
[19] *ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.*📌📌📌📌📌📌📌📌📌

[07/11 9:13 pm] Aa Darvin Sekar Brother VDM: இந்த எச்சரிப்பில் அவன் ஒளியை கண்டுகொண்டான் ஆகையால் அவன் தப்பிகொண்டான் பிசாசு அவனைவிட்டு ஓடிவிட்டான். அந்த ஒளியை (தேவவார்த்தை) அசட்டைசெய்திருந்தால் இருளிலே நடக்கிறவனாய் காணப்பட்டிருப்பான்

[07/11 9:21 pm] Jeyanthi Pastor VDM: 1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
நீதிமொழிகள் 29:1

[07/11 9:23 pm] Elango: ஏசாயா 1:19-20
[19] *நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.*🍏🍎🍐🍊🍊🍋🍌🍉🍇🍇🍅🥑🥑🍍🍈🍓🍆

[20]மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்;🗡🗡🗡🗡🗡🗡❣❣

*கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.*🗣🗣🗣🗣

[07/11 9:23 pm] Aa Darvin Sekar Brother VDM: Yes ஆமேன் அப்படியே ஆகும் இதை யாரும் மாற்ற முடியாது

[07/11 9:44 pm] Jeyanthi Pastor VDM: 10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான், நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.
ஏசாயா 26:10

11 கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள், ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கொண்டு வெட்கப்படுவார்கள், அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.
ஏசாயா 26:11

[08/11 8:39 am] Elango: *சங்கீதம் 21 சுருக்கவுரை* 

கர்த்தர் தனது ஜெபத்திற்க்கு பதிலளித்தபடியால் , அவருக்கு நன்றி செலுத்தியும், துதித்தும் பாடும் தாவீதின் பாடல். 

சங்கீதம் தலைப்பு - *மகிழ்ச்சியான அரசர்*

வசனங்கள் 1-7 :   *கர்த்தரும், அரசரும்*

வசனங்கள் 8-12 : *எதிரிகளின் அழிவு*

வசனங்கள் 13 :  *ஜெபமும், துதியும்*

மக்கள் சார்பாக இருந்து தாவீது இராஜா, இராஜாவைக் குறித்து இச்சங்கீதத்தை எழுதினார் என்ற கருத்தும் உண்டு. இராஜாவின் மனவிருப்பத்தின் படி தேவன் தந்தருளினார் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். நம் விரும்பியதெல்லாம் கிடைத்தால் நாம் எவ்வளவு பாக்கியவானாக இருப்போம்.

 தேவன் நம் மனவிருப்பத்தை நிறைவேற்றும்படியாக அவருக்கு பிரியமாக வாழ்ந்து, அவரையே நம்பிக்கையாக கொண்ட மனுஷனாக பாக்கியவானாக இருப்போம்.

*கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்* .5. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:4 -5

[08/11 8:40 am] Elango: இச்சங்கீதம் மேசியாவைக்குறித்து நான்காவது சங்கீதம் ஆகும்.

*இந்த சங்கீதமானது தாவீதைகுறித்தும், கிறிஸ்துவை குறித்தும் குறிப்பதாக இருக்கிறது.* இதை இரட்டைக் குறிப்பிடல் விதி என அழைக்கப்படும்.

*இச்சங்கீதத்திலுள்ளவை ஓரளவு நிறைவேறின. ஆனால் இது கிறிஸ்துவில் இனி முற்றிலும் நிறைவேற இருக்கின்றன்.*

[08/11 8:41 am] Elango: சங்கீதம் வசனங்கள்  21:1-6 :

 தாவீதைக் குறிப்பதாக இப்பகுதியிலுள்ள பல ஆசீர்வாதங்களை நோக்கும்போது தாவீது, தான் பெற்ற வெற்றிகள் ஆசீர்வாதங்கள் யாவும் கர்த்தரால் கிடைத்தவை என்று கூறுவதைக் காண்கிறோம்.

*நம்முடைய யாவும் கர்த்தரால் வந்தவை என்பதை உணர்ந்து நன்றியுடன் வாழ்வோமாக.*

[08/11 8:42 am] Elango: சங்கீதம் வசனங்கள் 21:1 -

தேவனுடைய வல்லமையில் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமாக தேவன் அருளும் இரட்சிப்பு அமைகிறாது. இரட்சிப்பின்றி வல்லமை மட்டும் இருந்தால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகாது.

[08/11 8:43 am] Elango: சங்கீதம் 20:11 *அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.* 

தேவனை பகைக்கிறவர்களாக சந்ததி சந்ததியாக இருப்பவர்களை தேவன் மூன்றாம் நான்காம் தலைமுறை வரைக்கும் விசாரிப்பவராக இருக்கிறார்.

9. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, *என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.* உபாகமம் 5:9 

17. ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், *குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்* என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, எண்ணாகமம் 14:17 

*நான்கு தலைமுறை சாபம்*

1. பொதுவான வேதபகுதி: (யாத்திராகமம் 20:4-6).

2. *தேவனது வார்த்தையின்றி வாழும் விசுவாசி கர்த்தரை வெறுக்கும் நிலையில் இருக்கிறார், ஒருவிசுவாசியும் தேவனது வார்த்தையின்றி அவரை நேசிக்கிறேன் எனக்கூறுவது இயலாத காரியம்.*

3. இருவகையான ஜனங்கள் தேவனை வெறுக்கிறவர்களாய் இருக்கின்றனர்:

a) அவிசுவாசிகள் - இரட்சிப்பின் போது தேவனது வார்த்தையை நிராகரித்தவர்கள்.
b) தேவன அவர்களை நேசித்த போதும், தேவனை புறக்கணித்து வாழும் விசுவாசிகள். 

4. *வேதவசனங்களில் ஒவ்வொரு சந்ததியிலும், தேவனை நிராகரித்து வாழும்போது மட்டுமே, 3 அல்லது 4 தலைமுறைவரை சிட்சை தொடர்கிறதாய் இருக்கிறது. <<<<<<< சிட்சையின் நோக்கம் அவிசுவாசியின் கவனம் கிறிஸ்து மீது பதிக்கப்படுவதற்காக ஆகும்.>>>>>*

[08/11 8:44 am] Elango: a) முதல் சந்ததி - தேவனுக்கு எதிரான கலகம் எங்கு இருக்கிறதோ அங்கு அவர் சிட்சிக்கிறவராய் இருக்கிறார். 

b) இரண்டாம் சந்ததி - தேவன் மறுபடியும் சிட்சிக்கிறவராய் இருக்கிறார் அந்த சந்ததியில் தொடர்ந்து அவருக்கு எதிரான கலகம் இருக்குமானால்.

c) மூன்றாம் சந்ததி - தொடர்ந்து கலகம் செய்வார்களானால் அவர்களை மறுபடியும் தண்டிக்கிறவராய் இருக்கிறார். 

d) நான்காம் சந்ததி - இச்சந்ததியிலும் தொடர்ந்து தேவனுக்கு எதிரான கலகம் நீடிக்குமானால் மறுபடியும் தண்டனை அளிக்கிறார் ஆனால் நான்காவது தலைமுறைக்குப் பிறகும் இக்கலகம் தொடருமானால், அங்கு மாற்றம் இடம்பெறுகிறது காரணம் அவர்கள் தொடர்ந்து மனித வர்க்கத்தில் இருப்பது நிராகரிக்கப்படுகிறது. 

4. இதில் ஏதாவதொரு சந்ததி கிறிஸ்துவை விசுவாசிக்குமேயானால், தேவனது சாபங்கள் ஆசீர்வாதங்களாய் மாற்றி அமைக்கப்படுகின்றன. 

5. "அவர் ஆயிரந்தலைமுறை வரைக்கும் இரக்கத்தை காட்டுகிறவராய் இருக்கிறார்" -- யாத்திராகமம் 20:6.
ஒவ்வொரு சந்ததியிலும் தேவன் அவர்களது பெற்றோரின் பாவங்களை சந்திக்காதவராய் இருக்கிறார் ஒருவேலை அவர்கள் கலகத்திற்கு உடபடாதவர்களாய் இருப்பார்களேயானால். ஒவ்வொரு சந்ததியும் அவர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் கடமைபட்டவர்களாய் இருக்கின்றனர்

[08/11 8:45 am] Elango: *ஏரோது வம்சாவழியினரின் மாதிரி, அவனுடைய ( கனி ) சந்ததி புமியிலிராதபடிக்கு அழிந்தது*

a) முதல் தலைமுறை - மகா ஏரோது (மத் 2). இவன் ஒரு அவிசுவாசியாய் இருந்தான் இவனுக்கு இயேசுக்கிறிஸ்துவை இரட்சகராய் ஏற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தன, இவன் தனது மூன்று குமாரர்களையும் கொன்று போட்டான், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை பெத்லகேமில் வைத்து கொலை செய்ய முயற்சித்தான் இறுதியில் மிகவும் வருத்தத்திற்குரிய மரணத்தைத் தழுவினான். இவன் ஒரு இளைஞனாய் மாபெரும் விளையாட்டு வீரனாய் திகழ்ந்தான், மிகவும் பேரழகு கொண்ட ஆண்மகனாய் திகழ்ந்தான், மாபெரும் ஆளுநராய் இருந்தான். இவன் படிப்படியாய் தரம்தாழ்ந்து இறுதியில் துன்பத்துக்குரிய மரணத்தைத் தழுவினான்.

b) இரண்டாவது தலைமுறை - நரி என அழைக்கப்படும் ஏரோது (மத். 14). ஏரோது தனது சகோதரியின் மகளாகிய ஏரோதியாளை மணமுடித்தான். இருவருக்கு இரட்சிப்படைய அநேக தருணங்கள் இருந்தன. இவர்கள் இருவரும் யோவான் ஸ்நானகனையும் மற்றும் இயேசுக்கிறிஸ்துவையும் முகமுகமாய் சந்தித்தனர். இருவரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட  சுவிஷேசத்தை புறக்கணித்தனர். ஸ்பெயின் தேசத்தில் இருவரும் சிறைவைக்கப்பட்டு பரிதாபத்துக்குரிய மரணத்தை தழுவினர். 

c) மூன்றாவது தலைமுறை - ஏரோது அகிரிப்பா 1 (அப்போஸ்தலர் 12) அகிரிப்பாவிற்கு சுவிஷேசம் அறிவிக்கப்பட்டும் அதை அகிரிப்பா நிராகரித்துவிட்டார். யாக்கோபை இரத்த சாட்சியாய் மரிக்கச்செய்ததற்கு இவனே காரணன் மற்றும் பேதுருவை காவலில் வைக்க இவனே கட்டளையிட்டான். இருப்பினும் பேதுரு தெய்வச்செயலால் அங்கிருந்து தப்பிச் சென்றார். அகிரிப்பா ஒரு அவிசுவாசியைப்போல மிகவும் வருத்தத்துடன் மரித்தார். 

d) நான்காவது தலைமுறை - ஏரோது அகிரிப்பா 2 (அப்போஸ்தலர் 24,25) அகிரிப்பாவும் அவனது இரண்டு சகோதரிகளும் நான்காம் தலைமுறையினரை இருக்கின்றனர். பவுலிடமிருந்து சுவிஷேசத்தை கேள்விப்பட்டு அதை மறுதலித்தனர். இவர்கள் அசாதாரண மரணத்தைத் தழுவினர். ஏரோதியரின் வம்சமானது கொஞ்ச கொஞ்சமாக மறையத் தொடங்கியது அவர்களது எஞ்சிய குடும்பத்தினரும் பாம்பேயில் Pompeii வைத்து வெசுவியஸ் கி.பி 78ல் வெடித்து சிதறிய போது மரித்தனர். 

*சாகிறவனுடைய சாவை விரும்பாமல் அவன் மன்ந்திரும்பி பிழைப்பதை விரும்புகிறார். அவரது சிட்சை என்பது ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க ஒரு திருப்புமுனையாக இருக்கிறது. நம்முடைய சந்த்தி அழிந்துப்போக வேண்டுமென்பது தேவ சித்தமல்ல, ஒரு சந்ததியாவது தேவனின் அன்பை ருசிக்க வேண்டுமென்று தேவன் விரும்பி சிட்சிக்கிறார்.*

[08/11 8:46 am] Elango: ஆனால் முதல் சந்ததி தேவனை பகைத்து அவரது வழியை விட்டு நடந்து மரிக்க, அந்த சந்ததியில் வரும் இரண்டாம் சந்ததி தேவ பிரியர்களாக வாழ்ந்தால் பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் விசாரிக்காத தேவன் நம் தேவன். பாவம் செய்த ஆத்துமாவே சாகும்.  எசேக்கியல் 18:4-28 
 
 2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?
3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
5. ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,

6. மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,
7. ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
8. வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து,
9. என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

10. ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,
11. இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
12. சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
13. வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

14. பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன்செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

15. மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
16. ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,
17. சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து தன் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
18. அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.
19. இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.

20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
21. துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
22. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

24. நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
25. நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
26. நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.
27. துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.

[08/11 8:48 am] Elango: *சங்கீதம் வசனங்கள் 21:11-12*

 கர்த்தருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் எதிராக இருப்பவர்கள் முன்னேறுவதுபோன்று தோன்றலாம்.

ஆனால் சிறிது காலத்தில் அவர்களுடைய முயற்சிகள் யாவும் அழியும்.

போராட்டங்களில் இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்காவும் அவர்களை துன்புறுத்துவோர் தோல்வியடைந்து கிறிஸ்துவைக் காண்பதற்க்காகவும் நாம் ஊக்கமாக விண்ணப்பம் செய்வோமாக!

Post a Comment

0 Comments