[03/11 10:38 am] Elango: 🎻🎸 *இன்றைய (03/11/2017) வேத தியானம் - சங்கீதம் 19* 🎻🎸
1⃣ சங்கீதம் 19 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 19 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ எந்தெந்த சிருஷ்டியில் எல்லாம் நீங்கள் தேவனுடைய மகிமை வெளிப்பட்டிருக்கிறதை கண்டு உணர்ந்திருக்கிறீர்கள்❓
4⃣ எத்தனை வானங்கள் இருப்பதாக வேதம் நமக்கு கற்ப்பிக்கின்றது❓அவைகள் எவைகள்❓
5⃣ சங்கீதம் 19:14
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, *என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக.*
இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
6⃣ கர்த்தருடைய வேதம் குறைவற்றதுமாக, உயிர்ப்பிக்ககூடியதாக, ஞானத்தை கொடுக்கக்கூடியதாக இருப்பதை உங்கள் நீங்கள் உணர்ந்ததுண்டா❓
7⃣ சங்கீதம் 19:11
[11]அன்றியும் *அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;* *அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.*
வேதம் உங்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் எச்சரிக்கை செய்திருக்கிறது❓
8⃣ *பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.*சங்கீதம் 19:2
சங்கீதம் 9:2 குறிப்பிடுவது என்ன❓பகலுக்கு பகலுக்கு.....
இரவுக்கு இரவு......
இதன் அர்த்தம் என்ன❓
9⃣ மறைவான மற்றும் துணிவான பாவங்கள் என்றால் என்ன❓
1⃣0⃣ சங்கீதம் 19:12
[12] *தன் பிழைகளை உணருகிறவன் யார்?* மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
நம்முடைய பிழைகளை நாம் எப்படியெல்லாம் உணர்ந்துக்கொள்ளலாம்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[03/11 11:01 am] Elango: *சங்கீதம் 19 சுருக்கவுரை*
இச்சங்கீதத்தைத் தேவனுடைய மகத்துவத்தின் வெளிப்பாடுகள் என அழைக்கலாம்.
வசனங்கள் 1-4 : *கர்த்தரின் படைப்பின் மகிமை.*
வசனங்கள் 5-6 : *கர்த்தர் படைத்த சூரியனின் மகிமை.*
வசனங்கள் 7-11 : *கர்த்தரின் வேத்தின் மகிமை*
வசனங்கள் 12-14 : *கர்த்தரின் வழி நடத்துதலின் மகிமை.*
மகத்தான அளவில் பேரண்டத்தையும், சூரியனையும் படைத்த தேவன், மனுக்குலத்தின் இரட்சிப்பிற்க்காக வேதத்தையும் உண்டாக்கி நமக்குத் தந்துள்ளார்.
பேரண்டத்தின் ப்டைப்பில் தேவனின் மாபெரும் ஆற்றலையும் அவருடைய இரக்கம், அருள், அன்பு ஆகியவற்றையும் காண்கிறோம்.
[03/11 11:09 am] Elango: 4⃣ எத்தனை வானங்கள் இருப்பதாக வேதம் நமக்கு கற்ப்பிக்கின்றது❓அவைகள் எவைகள்❓
*முதலாம் வானம்* -
மேக மண்டலம். இது ஆகாய விரிவு என்று ஆதியாகம் 1:8-9 இல் கூறப்பட்டுள்ளது மத்தேயும் 24:30
*இரண்டாம் வானம்* -
சூரியன், சந்திரன், விண்மீங்காள் அடங்கிய பேரண்டமாகிய வானம். ஆதி 1:14-18 இல் இதுவும் வானம் என்றும் ஆகாய விரிவு என்றும் அழைக்கப்படுகிறது. ஆதியாகம் 15:5 இல் இது வானம் என்று அழைக்கப்படுகிறது.
*மூன்றாம் வானம்* -
இதை வானம் என்று கூறுவதைவிட பரலோகம் என்று கூறலாம். 2 கொரிந்தியர் 12:2 இல் இது மூன்றாம் வானம் என்று அழைக்கப்படுகிறது. தேவனி தமது சிங்காசனத்தின் விற்றிருக்கும். இந்த இடம் பூமியிலிருந்து வடதிசையிலுள்ளது.✅✍ ஏசாயா 14:13
[03/11 11:15 am] Elango: வடதுருவ நட்சத்திரத்தின் திசையில் இருக்கும் ஒரு கோளமாக இது இருக்கக்கூடும் என *மூன்றாம் வானத்தை* கருதுகின்றனர்.
பரலோகத்தில் தேவனோடு தேவசேனை, தேவதூதர் ஆகிய பலர் உண்டு. 1 இராஜா 22:19, லூக்கா 15:7-10
என்னுடைய பிதாவின் வீடு என்று இதை ஆண்டவர் இயேசு குறிப்பிட்டார். இங்கு பல உறைவிடங்களை ஆயத்தம் பண்ணுவதற்க்காக இயேசு சென்றுள்ளார். இரகசிய வருகையின்போது வந்து, ஆயத்தமாயிருப்பவர்களை அங்கு அழைத்து செல்வார். யோவான் 14:2-3
இதில் இருக்கும் எருசலேம் என்ற புதிய நரகம் கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சிக்குப் பின்னர் புதியவானம், புதியபூமி உண்டாக்கப்பட்டதும் பூமிக்கு இறங்கிவந்து புதிய பூமியின் தலைநகரமாக செயல்படும் என்பதை வெளிப்படுத்தின விசேஷத்தில் 21,22 அறிகிறோம். பிதாவாகிய தேவனும் பூமிக்கு வருவார்கள்.
*பிதாவும், குமாரனும் புதிய எருசலேம் நகரில் என்றென்றும் வீற்றிருந்து சகலத்தையும் அரசாளுவார்கள். அதாவது பேரண்டத்தின் தலைநகரமாகச் செயல்படும் புதிய எருசலேம் நகரம் புதிய பூமியில் இருக்கும்.*
[03/11 11:22 am] Elango: இந்த உலகம் எப்படி படைக்கப்பட்டது என்பதையும், அறிவியலை பற்றியும் அநேக புத்தகங்களும், ஆராய்ச்சியாளரும், விஞ்சானிகாளும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் தேவனுக்கு முன்பாக மட்டும் அவர்கள் மண்டியிட மாட்டார்கள். 🤔🤔🤔🙄😢😢😢
*ஆனால் நாம் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிறோம்.. ஒருநாள் இந்த பூமியை சால்வையை போல சுருட்டப்போகிறவரை நாங்கள் ஆராதிக்கிறோம்.*🙏🙏🙏🙏🙏🙏🙏
வேதம் சொல்லுகிறது, இயேசுகிறிஸ்துவினால் சகலமும் உண்டாயிற்று, உண்டானதொன்றும் இயேசுகிறிஸ்துனாலேயல்லாமல் உண்டாகவில்லை.
இன்னும் வேதம் சொல்லுகிறது - *ஏசாயா 45:23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும்....*
[03/11 11:23 am] Elango: சகலத்தையும் படைத்தவர் நம் தேவன்.
*வானங்களையும்* நட்சத்திரங்களையும், கோள்களையும், சூரிய சந்திரனை படைத்தவர்.
வல்லமை, அதிகாரம், சத்துவம் நிறைந்தவர் ஆனால் அவர் அன்பாகவே இருக்கிறார். அவரது சிருஷ்டியை நேசிக்கிறார். அவரை நோக்கி இருதயத்தில் நொருங்குண்டு, தன்னை தாழ்த்துகிறவனை தேவன் பார்க்கிறார். அவனின் கூப்பிடுதலை கேட்கிறார்.👂👂👂❤❤❤❤❤
[03/11 11:39 am] Elango: 1⃣0⃣ சங்கீதம் 19:12

*வெளிச்சமானது உங்கள் வாழ்வில் அதிக அதிகமாய் பிரகாசிக்க ஆரம்பிக்கும் போது, உங்கள் வாழ்வில் இருள் உள்ள மூலை, முடுக்குகள் தென்படுவதாய் இருக்கும்.*✨✨✨✨🌟🌟⭐⭐
நீங்கள் கிறிஸ்தவர்களாய் வளரும் போது, நீங்கள் அதிக அதிகமான சிறிய பாவங்களைக் கண்டு, அவைகள் உங்களை வருத்தப்படுத்துகிறதாய் இருக்கும். நீங்கள் வளரும் போது பலதரப்பட்ட பாவங்களை உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் இணங்கண்டு கொண்டு அவைகளை அறிக்கை செய்கிறவர்களாய் இருப்பீர்கள். 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[03/11 11:39 am] Elango: *ஒரேவிதமான பாவத்தை தொடர்ந்து இருபது ஆண்டுகள் அறிக்கை செய்து கொண்டே இருப்பீர்களானால், நீங்கள் இன்னும் வளர்ச்சியடையாது இருக்கிறீர்கள் என்பதைக்காட்டுகிறதாய் இருக்கிறது.*
[03/11 11:45 am] Elango: உங்களை எளிதாய் அடக்கியாளும் பாவத்தை, நீங்கள் ஆண்டு கொண்டு கீழடக்கப்போகிறீர்களா அல்லது அதை தொடர்ந்து செய்து அது உங்கள் மீது ஆளுகை செய்ய அதற்கு கீழ் இருக்கப்போகிறீர்களா?
*உங்கள் ஆத்துமாவில் கர்த்தரது வெளிச்சம் அதிகமாய் பிரகாசிக்கும் போது, உங்களது குறைகள், குற்றங்கள் (பாவங்கள்) அதிகமாய்த் தோன்றி உங்களுக்குத் தென்படும், அவற்றை நீங்கள் அதிகமாய் அறிக்கை செய்யும் போது, மற்றும் அவகைகளை விட்டுவிடும்போது நீங்கள் அதிக அதிகமாய் கர்த்தருக்குள் வளர ஆரம்பிப்பீர்கள்.*🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋
[03/11 11:59 am] Jeyanti Pastor VDM: மனம் மாற்றமும் செயல் மாற்றமும் மிகவும் அவசியம். தேவ பெலத்தால் இப்படிப்பட்ட மாறாத குணங்களை சிறைப்படுத்தலாம் அல்லவா பாஸ்டர்? 4 எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 10:4
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 10:5
[03/11 12:05 pm] Elango: Yes Pastor
சுயத்தை அடக்கயாளவும், தேவ சுபாவத்தை வெளிப்படுத்துவதுமே ஆவியானவர் அருளப்பட்டுருக்கிறார்.
1 கொரிந்தியர் 15:57
[57]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
[03/11 12:16 pm] Jeyanti Pastor VDM: Yes ,உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
2 தீமோத்தேயு 1:14. என்று எழுதியிருக்கிறதே
[03/11 12:23 pm] Elango: *நீங்கள் அநேக மாதங்கள் பாவம் செய்யவில்லை எனக்கூறுவீர்களானால் நீங்கள் பொய்யராய் இருக்கிறீர்கள்*
நாம் கீழ்க்கண்டவாறு பரிசீலனை செய்ய வேண்டும்.
[அ] நம்மை நாமே சோதித்து அறிதல் வேண்டும் -- 1 கொரிந்தியர் 13:5; சங்கீதம் 4:4.
[ஆ] நீங்கள் எதைக்காண்கிறீர்களோ அதன்படி செயல்படுங்கள் -- யாக்கோபு 4:7-10.
[இ] அறிக்கை செய்யுங்கள் -- 1 யோவான் 1:9, லேவியராகமம் 5:5.
[ஈ] அறிக்கை செய்தவற்றை மறந்து விடுங்கள் -- பிலிப்பியர் 3:13,14, சங்கீதம் 103 :12,
[உ] பெலவீனப் பகுதிகளை அறிந்து உணருங்கள் - எபிரெயர் 12:15, இது தனிமைப் படுத்தும் பாவமாய் இருக்கிறது. இது உங்களை பெலவீனப்படுத்துமேயானால், அதற்கு விரோதமாய் ஒரு காவலாலியை ஏற்படுத்துங்கள்.
[ஊ] ஒப்புரவாகுங்கள் - நீங்கள் பாவம் செய்யும் போது, தேவனிடமிருந்தும் மற்றும் உடனிருக்கும் மனிதரிடமிருந்தும் ஐக்கியத்தை இழக்கிறவர்களாகிறீர்கள். உரிய பொருளை அதன் உரிமையாளரிடம் கொடுப்பது இதற்கு அவசியமாகிறது. யாக்கோபு 5:16, மத்தேயு 5:2324, லேவியராகமம் 6:25.
[எ] முன் சென்று வளர்ந்தோங்குங்கள் -- 2 பேதுரு 3:18 பெலவீன பகுதிகளை தவிர்த்து ஆவிக்குரிய ரீதியில் வளர்ச்சியடையுங்கள்.
*மனிதனுக்கும் தேவனுக்கும் விரோதமான பாவங்களை அறிக்கை செய்து ஒப்புரவாகுவது எழுப்புதலை கொண்டுவருகிறதாய் இருக்கிறது. பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள், புதியதான நிலையில் தேவனது வார்த்தையை சார்ந்து இருக்க பழகுங்கள், தேவனது வார்த்தையின் படியே வாழுங்கள்*
[03/11 12:29 pm] Jeyanti Pastor VDM: Excellent yes 👆🏻👆🏻👆🏻 இப்படிப்பட்ட காரியங்களே, நம்மை கிறிஸ்துவுக்கு, உகந்தவர்களாக்கும்.
5 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
2 பேதுரு 1:5
6 ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
2 பேதுரு 1:6
7 தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
2 பேதுரு 1:7
8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
2 பேதுரு 1:8
9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
2 பேதுரு 1:9
[03/11 12:44 pm] Elango: வானங்களை குறித்து குழுவினருக்கு வித்தியாசமான கண்ணோட்டம் இருந்தால் உங்கள் கருத்தையும் பகிரலாம்.
ஏழு வானங்கள் உண்டு என்று சிலர் சொல்லுவதுண்டு.
[03/11 1:32 pm] Elango: *சிருஷ்டிப்பை குறித்து வேதாகமம் நமக்கு போதிக்கும் சத்தியம்*
*ஆதியிலே தேவன் வானத்தையும்👈 பூமியையும்👈 சிருஷ்டித்தார்.* ஆதியாகமம் 1:1
a) "ஆதியிலே தேவன்" - தேவன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. - இது நாஸ்திக கொள்கையாகிய தேவன் இல்லை என்பதை எதிர்க்கிறது,
b) *"தேவன் சிருஷ்டித்தார்" - இது நித்திய சிருஷ்டிகரைக் காட்டுகிறது. மற்ற வேதபகுதிகளில் சிருஷ்டிகர் இயேசுக்கிறிஸ்து என அறிகிறோம். (கொலோசியர்1:16). இது பலதெய்வ கோட்பாடுகளை எதிர்க்கிறது.*
c) "வானங்களும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்டன" - இது பரிணாம வளர்ச்சியை எதிர்க்கிறது, எல்லா வஸ்துகளும் தேவனால் சிருஷ்டிக்கப்படவை.
d) "தேவன் சிருஷ்டித்தார்" - இது சர்வவல்லமையை விவரிக்கிறது அல்லது தேவனின் சர்வ சக்தியை காட்டுகிறது, இது எல்லாம் கடவுள் என்கிற கோட்பாடை எதிர்க்கிறது, மற்றும் எல்லாவற்றையும் ஆராதிக்கும் முறையை எதிர்க்கிறது.
e) "தேவன் சிருஷ்டித்தார்" - இது தேவனுடைய சுயாதீனத்தையும், அவரது சித்தத்தையும் விவரிக்கிறது, விதியின் மேல் நம்பிக்கை வைப்பதை எதிர்க்கிறது.
f) எல்லாம் இயற்கையே என்பதை எதிர்க்க, இவ்வசனத்திற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடு அவசியப்படுகிறது, இயற்கை மற்றும் பௌதீக விதிகள் தெய்வீக வெளிப்பாடின்றி, விவரிக்க போதுமானதாய் இருக்கிறது.
g) இவ்வசனம் விசுவாசத்தை உரிமைபாராட்டுகிறது, இது மனித தகுதிக்கு அப்பாற்பட்டது, பகுத்தறிவு வாதத்தையும், அனுபவ வாதத்தையும் எதிர்க்கிறது.
h) இவ்வசனம் மனிதனின் உதவியற்ற நிலையை சுட்டிக் காண்பித்து, மனிதக்கிரியைகள், அல்லது நற்கிரியைகள் மூலம் இரட்சிப்பை அடைவது போன்றவற்றிற்கு எதிர்த்து நிற்கிறது.
[03/11 2:12 pm] Elango: சங்கீதம் 19:7
[7]கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
*வேதாகமம் பிழையற்றது*
1. வேதம் முற்றிலும் சத்தியம் என மேற்கோள் காட்டப்படுகின்றன. .(தானியேல் 10:21, யோவான்10:35)
2. *வேதத்தின் ஆதாரம் தேவனாயிருக்கிறபடியால், தேவனில் பூரணமற்றத்தன்மையோ, பிழைகளோ இருக்க வாய்ப்பில்லை* (2 தீமோத்தேயு 3:16,
2 பேதுரு 1:20-21, 1 யோவான் 1:5, யாக்கோபு 1:17)
3. சர்ச்சைகளுக்குள்ள தீர்ப்பை வேதமே இறுதி செய்கிறதாய் இருக்கிறது (ரோமர் 4:3, 11:2, கலாத்தியர் 4:30)
4. வேதம் அதிகாரமுடையதாய் காணப்படுகிறது (மத்தேயு 26:31, மாற்கு 14:27, லூக்கா 4:8, அப்போஸ்தலர் 23:5 ரோமர்11:8)
5. *வேதத்தில் பிழை இல்லை, நம்முடைய புரிதலில் பிழை இருக்கலாம்* (மாற்கு 12:24)
6. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து வேதத்தை விசுவாசித்தார்:-
a) ஒரே ஒரு ஏசாயா மட்டுமே இருந்தார் என புரிந்து வைத்திருந்தார். (ஏசாயா 61:1,2 லூக்கா4:16-21, ஏசாயா 53:1, and ஏசாயா 6:1-4, 9-10 யோவான் 12:38-41)
b) யோனா ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார் கட்டுக்கதை அல்ல. (மத்தேயு 12:39, லூக்கா11:29)
c) தானியேல் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார். (மத்தேயு 24:15, மாற்கு13:14)
A) ஆதாம் ஏவாள் இருவரும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். (மத்தேயு 19:8)
7. *வேதாகமம் தேவனுடைய வார்த்தை என அழைக்கப்படுகிறது.* (மாற்கு 7:13, லூக்கா 5:1, 11:28, யோவான் 10:35,அப்போஸ்தலர் 6:7, 12:24,ரோமர் 10:17)
[03/11 2:37 pm] Kalaiyarasan VTT: Super. That's true..
[03/11 3:09 pm] Elango: நம்முடை தேவன் இயேசுவைப்போன்று இவ்வுலகில் வேறு தேவன் எவருமில்லர்.
அவர் இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாய் இருக்கிறார்.
இயேசு சொன்னார் என்னிடத்தில் வருகிற ஒருவரையும் நான் புறம்பே தள்ளுகிறதில்லை. மனந்திரும்பிய இருதயத்தோடு வரும் ஒவ்வொருவரையும் அனைத்துக்கொள்ள அவரது கரங்கள் காத்துக்கொண்டே இருக்கின்றன. *நீங்களும் விடுதலையாக முடியும், இன்று நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கை செய்து உங்கள் இருதயத்தில் இயேசுவை அழையுங்கள்.*🗣🗣🗣🗣🗣🗣
அவர் சிறைப்பட்டோரை விடுதலையாக்கும் படி இவ்வுலகில் வந்தார்.✝✝✝✝✝❤❤
[03/11 3:32 pm] Jeyanti Pastor VDM: விலையில்லா பொக்கிஷமே 👏🏻👏🏻🙌🏻🙌🏻🙌🏻
[03/11 3:39 pm] Jeyanti Pastor VDM: முன்பெல்லாம் சத்திய வேதம் என்ற பெயரில் தான் வேதம் அச்சிடப்பட்டது
[03/11 4:35 pm] Elango: இப்போது பரிசுத்த வேதாகமம் என்று வருகிறது
[03/11 9:06 pm] Elango: 8⃣ *பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.*சங்கீதம் 19:2

தாவீது தேவனின் மகிமையை அவருடைய சிருஷ்டிகள் வெளிப்படுத்துவதை விவரிக்கிறார். தேவனது படைப்புகள் நமக்கு ஏதாவது ஒரு வகையில் படிப்பினையை கொடுப்பதாக இருக்கிறது.
*சூரியனும், பூமியும் தேவன் நியமித்த இடைவெளியில் சரியாக தன்தன் அச்சில் சுற்றி வருகிறது.அவைகள் தன் நிலையை, அச்சை விட்டு விலகாதபடிக்கு தேவன் நியமித்த பாதையில் சுற்றிவருகிறது. பூமியும், சூரியனும் தன் பாதையிலிருந்து சிறிதளவு விலகிவிட்டால் போதும், பூமியில் வாழும் சகல உயிரினங்களும் மரித்துவிடும்*
இரவும், பகலும் நம்முடைய தேவனின் அதிசயங்களை குறித்து நம்மை சுற்றியிருக்கும் அவரது படைப்புகள் நமக்கு பாடம் கற்பிக்கிறதாயிருக்கிறது. ஆனால் மனிதர்களோ அவைகளை கவனிக்க தவறிவிடுகிறார்கள்.
மனிதர்கள் தேவனின் சிருஷ்டிப்புகளான நம்மை சுற்றி இருப்ப்தையும், நம்முடைய சரீரத்திற்க்குள் அவர் உருவாக்கிய பாகங்களை குறித்தும் நாம் கவனித்து, தியானித்து, தேவனுக்கு நன்றி சொல்ல தவறிவிடுகிறோம்.
[03/11 9:07 pm] Elango: தேவனின் படைப்புகளை எல்லாவற்றிலும் தேவன் நமக்கு பாடத்தை கற்பிக்க விரும்புகிறார், அவரது மகிமை தெரிவிக்கிறார், அவரது கிருபைகளை நாம் அவற்றில் கற்றுக்கொள்ளலாம். சலோமோனின் ஆடையை பார்க்கிலும் இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுபுஷ்பங்களுக்கும், புல்லுக்கும் மகிமையை உடுப்பிக்கிறார். நம் தேவன்.
*அவரின் படைப்புகளில் நாம் தேவனின் குண்ங்களை, கிரியைகளை, மகிமையை காணலாம்.*
[03/11 9:09 pm] Elango: ரோமர் 11:33-36
[33] *ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!* அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
[34]கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
[35]தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
[36]சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
[03/11 9:13 pm] Jeyanti Pastor VDM: Ya sure, 4 கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன்.
சங்கீதம் 92:4
5 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
சங்கீதம் 92:5, 6 மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.
சங்கீதம் 92:6
[03/11 9:15 pm] Elango: *எலிகூ, தேவனின் மகிமையான கிரியைகளை வெளிப்படுத்துகிறார்*👇🏻👇🏻👇🏻
யோபு 37:5-7,11-22
[5]தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; *நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.*👍👍👍👍👍
[6]அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
[7]தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
[11] *அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.*⛈⛈🌧🌧🌧🌧🌧🌧⛈🌧
[12]அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, *அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்பட*👈👈👈👌👌👌👌👌ியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
[13]ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
[14]யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று *தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.*🤔🤔🤔🤔👌👌👌👌👍👍👍👍
[15]தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ?
[16]மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
[17]தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ?
[18]வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?
[19] அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.
[20] *நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே.*
[21]இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிறசமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது,
[22] *ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.*👑👑👑👑👑✨✨✨✨⚡⚡⚡
[03/11 9:17 pm] Elango: 1 *வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.*👍👌👌👌👌👌👌
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:1
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:2
3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:3
4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:4
[03/11 9:19 pm] Jeyanti Pastor VDM: 15 அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
எரேமியா 51:15
16 அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது: அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.
எரேமியா 51:16
[03/11 9:23 pm] Elango: 8⃣ *பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.*சங்கீதம் 19:2

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
*வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.*
தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன. சங்கீதம் 19.1
*ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும்.ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்.* சங்கீதம் 19.2
[03/11 9:24 pm] Jeyanti Pastor VDM: அதனதன் ஸ்தானத்தில் மகிழ்ச்சியாக இருப்பதால், இந்த பெயரோ?
[03/11 9:26 pm] Elango: *தேவனுடைய படைப்புகள் அவர் ஜீவனுள்ள தேவனாக இருப்பதையும், அவரின் மகத்துவான கிரியைகளையும் வெளிப்படுத்துகிறது*
தேவன் இல்லை என்று எந்த மதிகேடனும் சாக்குபோக்கு சொல்லவே முடியாது.
ரோமர் 1:19-20
[19] *தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.*
[20]எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; *ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.*
[03/11 9:27 pm] Elango: என்ன பெயர் பாஸ்டர்?
[03/11 9:27 pm] Jeyanti Pastor VDM: 3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
சங்கீதம் 19:3, 4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது, அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 19:4
5 அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
சங்கீதம் 19:5
6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது, அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
சங்கீதம் 19:6
கர்த்தர் கொடுத்த பாதையை, ஏற்றுக் கொண்டு செயல் படுவதே காரணம். நம்மில் அநேகர் கர்த்தர் கொடுத்த வழியில் ஓட சந்தோஷமாக இல்லையே.
[03/11 9:28 pm] Jeyanti Pastor VDM: சூரியன் தான்
[03/11 9:30 pm] Elango: ஆம் உண்மையே. எல்லா கிரியைகளும் அவருக்கு அடங்கி கீழ்ப்படிந்து போகிறது.
சுயாதீனத்தை பெற்ற மனிதர்களும், தேவ தூதர்களுகமே தேவனுக்கு கீழ்ப்படியாமல் அவர் வழியில் ஓடாமல் தனக்கு பிடித்த பாதையில் ஓடுகிறார்கள்.
[03/11 9:31 pm] Elango: சூரியனுக்கும், பூமிக்கும் தேவன் சுயாதீனத்தை கொடுத்திருந்தால் என்னவாகும்?🤔🤔😀
[03/11 9:31 pm] Jeyanti Pastor VDM: Yes. 3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
ஆதியாகமம் 6:3
5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
ஆதியாகமம் 6:5
6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
ஆதியாகமம் 6:6
[03/11 9:33 pm] Elango: பிரசங்கி 7:29
[29] *இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்;*✅✅✅✅✅
*அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.*😢😢😢😢😢
[03/11 9:34 pm] Jeyanti Pastor VDM: இது கடினமான கேள்வி. மனிதனையோ எல்லாரையும் விட, எல்லாவற்றையும் விட நேசித்து, அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினாரே, இதுவல்லவா கிருபை பாஸ்டர்
[03/11 9:34 pm] Jeyanti Pastor VDM: Very fact.
[03/11 9:34 pm] Devakirubai Alexander VTT New: I'm enjoying PSALMS MEDITAION 🙏🏻
[03/11 9:36 pm] Jeyanti Pastor VDM: S. Nice to enjoy. Keep it up. 👏🏻👏🏻
[03/11 9:37 pm] Elango: Yes amma...
சூரியனின் மகிமை வேறே, சந்திரனின் மகிமை வேறே...
ஆனால் மனிதனையோ தன்னுடைய சாயலில், தன்னுடைய மகிமையை பகிர்ந்தளித்தாரே.✨✨👌👌👌❤❤❤❤
1 கொரிந்தியர் 11:7
[7] *புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால்,* 👑👑👑👑👑✨✨✨✨தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
[03/11 9:38 pm] Devakirubai Alexander VTT New: 1 இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
ஆதியாகமம் 2:1
7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆதியாகமம் 2:7
Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com
[03/11 9:38 pm] Kamal VTT: உண்மையே!
[03/11 9:40 pm] Devakirubai Alexander VTT New: What a Wonderful !!! God's Love !!!
[03/11 9:55 pm] Elango: 5⃣ சங்கீதம் 19:14

நம் வாழ்வில் இரட்சிப்பிபைப் கிரியை செயல்படுவதற்க்கு சரியான பதில், பாவத்திலிருந்தும், இந்த பொல்லாத உலத்திலிருந்தும் நம் இருதயத்தையும், வார்த்தை மற்றும் வாழ்க்கையை காத்து, அவைகள் தேவனுக்கு பிரியமாக இருக்கிறதா என்பதை நிதானித்து தேவனிடம் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
*நம்முடைய இருதயத்தின் தியானமும், நம் மனதின் எண்ணங்களும் தேவனுக்கு பிரியமாக இருக்க வேண்டும்*
சங்கீதம் 143:10
[10]உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக
[03/11 9:56 pm] Elango: சங்கீதம் 25:4-5,8,12,21
[4]கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
[5] *உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;* நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
[8] *கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.*
[12]கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
[21]உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
[03/11 9:59 pm] Jeyanti Pastor VDM: Very important verse
[03/11 10:04 pm] Elango: 5⃣ சங்கீதம் 19:14

நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளும், வாயின் வார்த்தைகளும் தேவனுக்கு பிரியமாக, உகந்ததாக இருக்க வேண்டும்.
14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! *என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:14
*என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.*
கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர். சங்கீதம் 19.14
[03/11 10:07 pm] Elango: 9⃣ மறைவான மற்றும் துணிவான பாவங்கள் என்றால் என்ன❓
*பாவத்தின் நான்கு நிலைகள் வரிசையாகக் கூறப்பட்டுள்ளன.*
1. பிழைகளில் தொடர்ந்து வாழ்கிறவன், 2.மறைவான குற்றங்களில் ஈடுபடுவான். 3. இதற்கு அடுத்த நிலை துணிகரமான பாவங்கள். 4. இறுதிநிலை பெரும் பாதகங்களில் ஈடுபடுதல்.
*ஆரம்பத்திலேயே பிழைகளை உணர்ந்து மனந்திரும்பினால் அதற்கடுத்த நிலைகளுக்குச் செல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம்.*
[03/11 10:14 pm] Peter David Ayya: அவ்வளவு அன்பு நம்மீது 👌🙏🏻
[03/11 10:15 pm] Peter David Ayya: விலை மதிப்பில்லாத பொக்கிஷமே 👌🙏🏻
[03/11 10:18 pm] Peter David Ayya: அவரின் மகிமையை பாடப்பாட வாயும் இனிக்கும் எழுத எழுத எழுத்தும் இனிக்கும்🙏🏻
[03/11 10:19 pm] Jeyanti Pastor VDM: This is the sin which is measured more by God in righteous life. Mourning of mind n no peace of Spiritual field
[03/11 11:47 pm] Elango: 👌👌👌👍👍👍
சங்கீதம் 19:14
[14]என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் *பிரியமாய்* இருப்பதாக.
*பிரியமாய்* என்று தானே இருக்குது அம்மா. பிரீதியாக என்று இல்லையே அம்மா...
[03/11 11:53 pm] Saranya Sister VDM: 14 இதோ, *வானங்களும் வானாதிவானங்களும்,* பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.
உபாகமம் 10
26 யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை, அவர் உனக்குச் சகாயமாய் *வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும்* ஏறிவருகிறார்.
உபாகமம் 33
27 தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, *வானங்களும் வானாதி வானங்களும்* உம்மைக் கொள்ளாதே, நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
1 இராஜாக்கள் 8
6 நீர் ஒருவரே கர்த்தர். நீர் *வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும்,* பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர். அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர். வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
நெகேமியா 9
9 பூமியைப்பார்க்கிலும் *வானங்கள்* எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
ஏசாயா 55
14 *வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன* தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
எபிரேயர் 4
12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், *வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்* நமக்குப் போராட்டம் உண்டு.
எபேசியர் 6
So எண்ண முடியாத நிறைய வானங்கள் இருக்கலாம் 🤔
[04/11 12:02 am] Elango: yes ✅✅
The word refers to acceptableness, agreeableness, delightfulness🙏
[04/11 12:02 am] Elango: ஒரே மனம்👍👍👍
[04/11 7:36 am] Elango: *வேதத்தில் மகிமை என்பதை குறித்து பார்க்கலாம் - ஷெக்கினா மகிமை* -
1. ஷெக்கினா மகிமை என்பது தேவனுடைய மகிமையைக் காணக்கூடிய தேவப்பிரசன்னத்தால் வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. வழக்கமாய் இச்சொல் தேவமகிமையை குறிப்பிதுவதாய் இருக்கிறது.
2. இச்சொல் "ஷசான்" ("shachan" ) என்ற எபிரெயச்சொல்லில் வந்தது.
3. வெளிச்சம், நெருப்பு, மேகம் போன்ற உருவிலோ அல்லது மூன்றும் கலந்த நிலையிலோ காணப்படும்.
4. ஷெக்கினா மகிமை கீழ்க்கண்டவற்றோடு இணைந்து காணப்படும், யெஹோவாவின் தூதர், பரிசுத்த ஆவியானவர், கேருபீன் மற்றும் அடர்ந்த காரிருள்.
5. *ஷெக்கினா மகிமை பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட இடங்கள்:*
ஏதேன் தோட்டம் [ஆதியாகமம் 3:8].
ஆபிரகாமின் உடன்படிக்கையின்போது [ஆதியாகமம் 15:12-18].
எரிகிற முட்செடியில் [யாத்திராகமம் 3:1-5].
யாத்திராகமத்தில் [யாத்திராகமம் 13:21,22].
சீனாய் மலையில் [ யாத்திராகமம் 19:16-20].
விஷேசித்த நிலையில் மோசேக்கு காணப்பட்டபோது [யாத்திராகமம் 33:17-23].
ஆசரிப்பு கூடாரத்திலும், உடன்படிக்கை பெட்டியிலும் [ யாத்திராகமம் 29:42-46].
லேவியராகமத்தில் [லேவியராகமத்தில் 9:6-7, 22-24].
எண்ணாகமத்தில் [எண்ணாகமம் 13:30-14:45, 16:1-50, 20:6-13].
யோசுவா மற்றும் நியாதிபதிகள் காலத்தில் [ 1 சாமுவேல் 4:21-22].
சாலமோனின் தேவாலயத்தில் [1 இராஜாக்கள் 8:1-13, 2 நாளாகமம் 5:2-7:3].
ஷெக்கினா மகிமை புறப்படுதல் [எசேக்கியேல் 1:28, 3:12,23, 8:3-4, 9:3a, 10:4, 18-19, 11:22-23].
இரண்டாவது ஆலயத்தில் ஷெக்கினா மகிமை இல்லை ஆகாய் 2:3,9.
6. *புதிய ஏற்பாட்டில் காணப்பட்ட ஷெக்கினா மகிமை.*
மேய்ப்பர்களுக்கு லூக்கா 2:8-9.
கிறிஸ்துவின் பிறப்பில் வழிநடத்திய நட்சத்திரம். மத்தேயு 2:1-12.
புதிய அமைப்பில் வெளிப்பட்ட ஷெக்கினா மகிமை யோவான் 1:1-14.
மறுரூப மலையில் ஷெக்கினா மகிமை மத்தேயு 17:1-8, மாற்கு 9:2-8, லூக்கா 9:288-36, 2 பேதுரு 1:16-18.
அந்த மகிமையை பிரதிபலித்தல் 2 கொரிந்தியர் 3:12-18.
அப்போஸ்தலநடபடிகளில் ஷெக்கினா மகிமை. அப்போஸ்தலர் 2:1-3, 9:3-8, 22:6-11, 26:13-18.
வெளிப்படுத்தலில் ஷெக்கினா மகிமை. வெளிப்படுத்தல் 1:12-16,
உபத்திரவக்காலத்தில் ஷெக்கினா மகிமை. வெளிப்படுத்தல் 15:8.
இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஷெக்கினா மகிமை. மத்தேயு 16:27, 24:30, மாற்கு 13:26, லூக்கா 21:27.
ஆயிரவருட ஆழுகையில் ஷெக்கினா மகிமை. எசேக்கியேல் 43:1-7a, 44:1-2, சகரியா 2:4-5, ஏசாயா 36:1-2, 58:8-9a, 60:1-3.
நித்திய நிலையில் ஷெக்கினா மகிமை. வெளிப்படுத்தல் 21:1-3, 21:23-24.
[04/11 7:36 am] Elango: சங்கீதம் 19:8. *கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.*
*தேவனால் நமக்கு கொடுக்கப்பட்ட, தேவ மனிதர்கள் தேவ ஆவியினாலே எழுதப்பட்ட வார்த்தைகை - தெய்வீக அகத்தூண்டுதலாகவே இருக்கிறது.*
1. *தெய்வீக அகத்தூண்டுதலின் அடிப்படை 2 தீமோத்தேயு 3:16 ல் காணப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் மனித எழுத்தாளர்களுக்கு, தேவனது முழுமையான திட்டத்தை அறிவித்தார்.*
(2 சாமுவேல் 23:2, 3,ஏசாயா 59:21, எரேமியா 1:9, மத்தேயு 22:42, 43, மாற்கு12:36, அப்போஸ்தலர்4:24, 25, 28:25) மனித வேத எழுத்தாளர்கள் தங்களது அந்தஸ்தை பொருட்படுத்தவில்லை, தேவனுடைய திட்டத்தை, அவர்கள் எழுதிய மொழியில் பூரணமாகவும், துள்ளியமாகவும் எழுதி அறிவித்தனர்.
2. வேதத்தின் துவக்கம் மனிதக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. (2 பேதுரு 1:20,21)
3. சத்திய வேதம் கிறிஸ்துவின் சிந்தையாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 2:16) இதினிமித்தம் இது விசுவாசிகளுக்கு முழுமையான நிலையை ஏற்படுத்துகிறதாய் இருக்கிறது.
4. வேதாகமம் எழுதப்படுவதற்கு முன் தேவனது வெளிப்பாடுகள் அனைத்தும், பரிசுத்தாவியனவர் மூலம் நிகழ்ந்துள்ளது. மோசேயின் காலம் வரை எகுதப்பட்ட வேதம் இல்லை. (2 சாமுவேல் 23:2,எசேக்கியேல் 2:2, 8:3, 11:1, 24,மீகா 3:8, எபிரெயர் 3:7)
5. பழைய ஏற்பாட்டு வெளிப்பாடுகள் நான்கு தொகுப்புகளாக இருக்கின்றன:
a) உரைக்கப்பட்ட வார்த்தை - கர்த்தர் சொல்லுகிறதாவது (ஏசாயா 6:9, 10, அப்போஸ்தலர் 28:25)
b) சொப்பனம். (எண்ணாகமம் 12:6 ஆதியாகமம் 15:12, 31:10-13, 31:24, தானியேல் 10:9) - அயர்ந்த நித்திரையின் போது
c) தரிசனங்கள். (ஏசாயா 1:1, 6:1, 1 இராஜாக்கள் 22:19) - தெளிவுடன் விழித்திருக்கும்போது
d) தூதரின் போதனைகள். (உபாகமம் 33:2, அப்போஸ்தலர் 7:53, கலாத்தியர் 3:19, சங்கீதம் 68:17)
6. வெளிப்படுத்தலின் விரிவாக்கம்.
a) அறியப்படாத கடந்த காலம் - வெளிப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட நிலையில், கடந்தகால சரித்திர விளக்கங்களை வேதம் வர்ணிக்கிறது. (ஆதியாகமம் 1-11). இச்சரித்திர உண்மைகளின் துள்ளியம் தெய்வீக அகத்தூண்டுதலினால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. உ.ம். சிருஷ்டிப்பு, நோவாகாலத்து ஜலப்பிரளயம்.
b) பழங்கால சரித்திரம் - வேதாகமம், சரித்திரங்களை விளக்கும் பாட நூல் அல்ல, எல்லா சரித்திர நிகழ்வுகளும் துள்ளியமாக இருக்கின்றன.
c) நோக்கமுடைய நியாயப்பிரமாணம்: பழைய ஏற்பாடு தேசிய வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிற்கும் அநேக நியாயப்பிரமாணங்களை உள்ளடக்கியுள்ளது. இப்படிப்பட்ட நியாயபிரமாணங்கள் யாருக்கு எழுதப்பட்டதோ அவர்களுக்கு தேவனின் பூரணமான சிந்தையை தெரியப்படுத்தியுள்ளது.
d) சில வேத பகுதி தேவனது நேரடி மேற்கோள்களை கொண்டுள்ளது. தெய்வீக அகத்தூண்டுதல் உபதேசப்படி, தேவன் எப்படி விரும்புகிறாரோ அப்படியே, அவரது மேற்கோள்கள் சரியாக எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
e) தேவன் குறிப்பிட்ட விசுவாசிகளுக்கு, அவர்களது மனவெழுச்சிகள், உபத்திரவம், வெற்றி இவைகளை பயன்படுத்தி தமது கிருபையை அறிவிக்கிறார். இவைகள் தியான புஸ்தகங்களாகிய சஙீதம், உன்னதப்பாட்டு போன்ற புஸ்தகங்களில் விளங்க பண்ணுகிறார்.
f) தெய்வீக அகத்தூண்டுதல், தவறானவர்கள் கூறியவற்றைகூட அவர்கள் கூறிய வண்ணம் எழுதி பதிவு செய்துள்ளது. சாத்தான் (ஆதியாகமம் 3:4)
g) *தெய்வீக அகத்தூண்டுதல் எழுதப்பட்ட எல்லா தீர்க்கதரிசன வார்த்தைகள் மிகத்துள்ளியமானவை என உறுதி அளிக்கிறது*
[04/11 7:36 am] Elango: சங்கீதம் 19:7. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
*பரிசுத்த வேதாகமும், விசுவாசியும்*
*1. வேதம் கீழ்க்கண்ட தன்மைகள் ஒரு விசுவாசி பெற்று இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.*
a) பிரகாசிக்கப்பண்ணுகிறது (சங்கீதம் 119:130)
b) பேதையை ஞானியாக்குகிறது (சங்கீதம் 19:7)
c) விசுவாசத்தை உருவாக்குகிறது (யோவான்20:31), நம்பிக்கையை உருவாக்குகிறது (Psalm 119:49, Romans 15:4), மற்றும் கீழ்ப்படிதலை உருவாக்குகிறது (உபாகமம்17:19-20)
d) இருதத்தை சுத்திகரிக்கிறது (யோவான் 15:3, Ephesians 5:26)மற்றும் வழிகளை சுத்திகரிக்கிறது (Psalm 119:9)
e) அழிவுக்குரிய பாதைகளிலிருந்து நம்மை காக்கிறது (சஙீதம் 17:4)
f) ஜீவனை ஆதரிக்கிறது (மத்தேயு 4:4 cf உபாகமம் 8:3)
g) விசுவாசத்தில் கட்டி எழுப்புகிறது (அப்போஸ்தலர் 20:32)
h) ஆறுதல் படுத்துகிறது (சங்கீதம் 119:82, ரோமர் 15:4)
i) கிருபையில் வளரச்செய்கிறது (1 பேதுரு 2:2)
j) எச்சரிக்கிறது (1 கொரிந்தியர் 10:11)
k) இருதயத்தை களிகூறச்செய்கிறது (சங்கீதம் 119:18,111)
l) பரிசுத்தமாக்குகிறது (யோவான் 17:17,எபேசியர் 5:26)
*2. வேதம் இப்படி இருக்கவேண்டும்:*
a) விசுவாசிக்கக்கூட்யதாகவும் (யோவான் 2:22)மற்றும் கீழ்ப்படியக்கூடியதாகவும் (யாக்கோபு 1:22)
b) போதிப்பதற்கு நிலையானதாய் இருக்கவேண்டும் (பேதுரு 4:11)
c) ஆர்வமுள்ளதாயிருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 1:31, 1பேதுரு1:16)
d) பொதுவாய் எல்லோருக்கும் வாசிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். (அப்போஸ்தலர்13:15)
e) அறியப்பட்டதாயிருக்க வேண்டும் (2தீமோத்தேயு 3:15)
f) தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளப் படுவதாயிருக்கவேண்டும் (1 தெசலோனிக்கேயர் 2:13) சாந்தத்துடன் (யாக்கோபு1:21)
g) ஆராயப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் (யோவான் 5:39,அப்போஸ்தலர் 17:11)
h) நமது ஆவிக்குரிய எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடியதாய் இருக்கவேண்டும். (எபேசியர் 6:11,17)
i) ஒவ்வொருவருக்கும் மற்றும் சிறுபிள்ளைகளுக்குக்கூட போதிக்கப்படக்கூடியதாய் இருக்க வேண்டும். (உபாகமம் 6:7, 11:19, நெகேமியா 8:7-8)
j) தொடர்ந்து பேசக்கூடியதாய் இருக்கவேண்டும் (உபாகமம் 6:7)
k) வஞ்சிப்பதற்கேதுவாய் பயன்படுத்தக்கூடாததாய் இருக்கவேண்டும். (2 கொரிந்தியர் 4:2)
*3. அவிசுவாசிக்கு வேதம் இப்படி இருக்கவேண்டும்:-*
a) மறுபடி ஜெனிப்பிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும்.(யாக்கோபு1:18, 1 பேதுரு 1:23)
b) துரிதப்படுத்துவதாயிருக்க வேண்டும். (சங்கீதம் 119:50,93)
c) ஆத்துமாவை ஆதாயப்படுத்துவதாய் இருக்க வேண்டும் (சங்கீதம் 19:7)
[04/11 7:36 am] Elango: சங்கீதம் 19:11. அன்றியும் *அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;* அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு
தேவனுடைய வார்த்தையானது துன்மார்க்கனை அவனுடைய துன்மார்க்கத்தனத்தில் வாழக்கூடாதபடிக்கு எச்சரிக்கை செய்கிறதாக இருக்கிறது. அதே தேவனுடைய வார்த்தையானது, நீதிமானையும் அவன் தன்னுடைய நல்ல வழியிலிருந்து தொடர்ந்து செய்யும்படிக்கும், அவன் அதை விட்டு விலகாதபடிக்கும் எச்சரிக்கின்றது.
நாம் அறியாத அல்லது நாம் தெரியாமல் செய்யும் பாவங்களையும் தேவன் அறிந்தவராகயிருக்கிறார். அவைகளையும் தேவன் நமக்கு வெளிப்படுத்தும் படிக்கு ஜெபிக்கவேண்டும்.
[04/11 7:37 am] Elango: சங்கீதம் 19:12. தன் பிழைகளை உணருகிறவன் யார்? *மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்*
உண்மையான விசுவாசிகாள் தங்கள் முழு இருதயத்தோடு தேவனை நேசிக்கவும், ஊழியம் செய்யவும் போராடுகிறார்கள். உபாகமம் 6:5
ஏனெனில் இந்த வாழ்க்கையில் இன்னும் குறியவுள்ளவர்காளாகவே இருக்கிறார்காள், இருந்த போதிலும், தேவனுடைய சித்தததையறியாதபடியால், அதைச் செய்ய்த தவறுவதால் அவர்கள் குறைவுள்ளவர்கள் ஆகலாம். ஆகவே அவர்காள் தங்கள் தவறுக்கலுக்காகவும், மறைவான குற்றங்களுக்காகவும், மறைவான குற்றாங்களுக்காகவும் தேவனுடைய மன்னிப்பைத் தேட வேண்டிய அவசியமாகிறஹ்டு.
லேவியராகமம் 5:2-4 மற்றொரு வகையில், துணிகரமான அல்லது வேண்டுமென்றே பெருமையினால் செய்கிற பாவங்கள் ஒரு மிகப்பெரிய மீறுதலாகும் சங்கீதம் 19:13.
அது தேவனையும், அவருடைய வசனத்தையும் அசட்டைப் பண்ணுவதற்கும், அவருடைய இராஜ்யத்தில் ஒரு இடத்தை இழந்து போய் விடுவதற்க்கு ஏதுவாகும். எண்ணாகமம 15:3031, கலாத்தியர் 5:19-21
[04/11 7:37 am] Elango: சங்கீதம் 19:1 *வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது,*
இந்த இயல்பான உலகமானது தேவனுடைய மகிமையையும், சிருஷ்டிப்பின் வல்லமையையும் வெளிப்படுத்துகிறதாக யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் காண்கிறார்கள். சங்கீதம் 148:3-5 , ரோமர் 1:18-20
அநேக அவிசுவாசிகளின் கண்ணோட்டம் என்பது சிருஷ்டிப்பு மனிதனுடைய விதியை நிர்ணயிக்கும் ஒரு ஆற்றல் மிக்க ஒரு தெய்வீகபொருள் என்பதாகும். ஏசாயா 47:13, உபாகமம் $:19, 2 இராஜாக்கள் 23:5
மற்றர்வர்களோ இந்த சிருஷ்டிப்பு என்பது தற்செயலாக வந்தது என்கிறார்கள்.
உண்மையான விசுவாசியோ, மேலுள்ள் கண்ணோட்டத்தை புறக்கணித்து விட்டு, தேவனின் எல்லா சிருஷ்டிப்பையும் பற்றிய வேதாகமத்தின் வெளிப்பாட்டினை ஏற்றுக்கொள்ளுகிறான். இவ்விதமாக உண்டாக்கினவரை துதிப்பவருக்கு நடத்தப்படுகிறான். சங்கீதம் 89:5-8.
[04/11 7:37 am] Elango: சங்கீதம் 19:7. *கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்,*
இந்த மேலுள்ள் வசனமானது, தேவனுடைய கற்பனைகள், வார்த்தைகள் இவற்றின் தன்மை, நன்மை, மதிப்பு இவற்றைப் பற்றிக் கூறுகின்றன.
இதிலடங்கும் 5 உண்மைகள்:-
1. *கர்த்தருடைய வேதத்தின் விதி* - கர்த்தருடைய சித்ததை நமக்கு வெளிப்படுத்திக்காட்டும் ஒரு பொதுவான சொல். கர்த்தருடைய வேதம் ஒரு மனிதனுக்கு அவன் தேவனோடு சரியான உறவுகொள்ளும் வழியைக் காட்டுகிறது. சங்கீதம் 19:7
2. *சாட்சிகள்* - இது தேவனுடைய மெய்யான் வார்த்தைகள், அவருடைய குணாதியங்களை, சித்தத்தையும் சாட்சி பகிருகின்றது. 1 யோவான் 5:9. இதைப் படிப்பதன் மூலம் பேதையும் ஞானியாவான்.
3. *போதனைகள்* - தேவ பக்திய்ள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நீதியான வாழ்க்கை வாழ்வதற்க்குரிய தேவனுடைய திட்டவட்டமான நெறிமுறைகளை இவை காட்டுகின்றன.
4. *கட்டளைகள்* - தேவனுடைய வழிகளைத் தேடுகிற விசுவாசிகளுக்கு வழிகாட்டும் ஒளியாக அதிகாரமுள்ள தேவ கட்டளைகள். அப்போஸ்தலர் 26:18, தேவனுடியய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அவருக்குப் பயப்படும் பயமாகும். இது பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை தருகிறது.
5. *நியமனங்கள்* - உலகில் நியாயமான முறையில் நேர்மையோடு வாழ்க்கை வாழ வழிகாட்டும் சமுதாய விதிகள்.
[04/11 8:45 am] Kalaiyarasan VTT: பிரீதி - பிரியமான..
ஏற்றதாக..
மகிழ்ச்சி அளிக்க கூடிய என்று பொருள் படும்...
[04/11 9:28 am] Jeyanti Pastor VDM: I mentioned is to tell the meaning of the word in English, that's all Pr. Not to hurt u Past. 🙏🏼

Post a Comment
0 Comments