Type Here to Get Search Results !

சங்கீதம் 18 தியானம்

[01/11 10:46 am] Elango: 🎻🎸 *இன்றைய (01/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 18* 🎻🎸

1⃣ சங்கீதம் 18 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 18 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ சங்கீதம் 18 [2]கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

அடிக்கடி தாவீது தன் பாடல்களில் ஏன் கன்மலை, கோட்டை, துருகம், அடைக்கலம், கேடகம், கொம்பு என தேவனுக்கு ஒப்பிடுகிறார்❓

4⃣ சங்கீதம் 18 [20]கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

தேவன் நமக்கு அவருடைய கிருபையின் இரங்குவாரா அல்லது நம்முடைய உத்தமத்தின் படியேயும் நீதி செய்வாரா❓

5⃣ சங்கீதம் 18 [23]அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, *என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.*

*துர்க்குணத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்❓*

6⃣ சங்கீதம் 18:25-26 [25]தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;[26]புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

7⃣ சங்கீதம் 18 [34]வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

இந்த வசனத்தை உங்கள் வாழ்க்கையில் எப்படி அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்கள்❓

8⃣ சங்கீதம் 18 [47]அவர் *எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.* அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

பழிவாங்குவது தேவனுக்குரியது என்றாலும், நாம் ஏன் பல நேரங்களில் பழிவாங்க துடிக்கிறோம்❓

9⃣ சங்கீதம் 18 [1] *என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.*

தேவனை தன் பெலனாக ஏன் உணர்கிறார்❓

1⃣0⃣ *தேவனிடத்தில் எப்படியெல்லாம் அன்பு கூறலாம்❓*

1⃣1⃣ சங்கீதம் 18 ம், 2 சாமுவேல் 22 ம் ஏன் ஒரே வசனங்களை கொண்டிருக்கிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[01/11 9:56 pm] Elango: 1⃣ சங்கீதம் 18 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

இந்த 18 ஆம் சங்கீதத்தை எழுதியது தாவீது. இதே சங்கீதம் சில மாறுதல்களோடு 2 சாமூவேல் 22 ஆம் அதிகாரத்தில் வருகிறது.

இந்த சங்கீதமானது தாவீது இராஜாவாக ஆளுவதற்க்கும், அவர் பத்சேபாளுடன் பாவத்தில் விழுவதற்க்கு முன்பாக எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.

இச்சங்கீதமானது கிறிஸ்துவைப்பற்றி தீர்க்கதரிசனமாக சொல்லப்படுகிறது. இந்த சங்கீதத்தில் 49 வசனத்தை குறிப்பிட்டு பவுலடிகளாரும் மேசியா மூலமாக, சகல ஜனங்களும் தேவனை துதிக்கும் நாள் வரும் என்று சொல்லுகிறார்.

ரோமர் 15 [9]புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: *இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.*

சங்கீதம் 18 [49] *இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.*

[01/11 10:05 pm] Elango: 2⃣ சங்கீதம் 18 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

தேவனையே நம்பி வாழும் தேவ பிள்ளைகளுக்கு தேவனே அவர்களுக்கு பலத்த பாதுகாப்புமாக இருந்து, அவர்களின் கூப்பிடுதலுக்கு செவிக்கொடுத்து, சத்துருக்களுக்கு விடுவித்து, அவர்களுக்கு கிருபைகளை அளித்து, அவர்களின்  பாதையை விசாலமாக்கி அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை உயர்ந்த ஸ்தலத்தில் நிற்க செய்கிறார்.

சங்கீதம் 18 [18] என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

*எரேமியா 17:7-8 [7]கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.[8]அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.*

[01/11 10:20 pm] Elango: *நெருக்கங்களும், சூள்நிலைகளூம் ஒருவனை செத்தவனை போல தள்ளாட செய்யும் போது, தேவ பிள்ளையின் வேத வாக்கியங்களின் மேல் விசுவாசத்தின் மூலமாகவும், ஜெபத்தின் மூலமாகவும் அவனை ஜீவனுள்ளனாக மாற்றுகிறது*

⏹கிறிஸ்தவ வாழ்க்கை முழுதும் விசுவாசத்தை சார்ந்தே ஆரம்பமாகிறது ரோமர் 3:28

⏹ஆபிரகாமின் விசுவாசமானது தேவனை முதலிடத்தில் வைக்க காரணமாய் அமைந்தது. ஆதியாகமம் 12:8; எபிரெயர் 11:10

⏹ தேவனில் உள்ள விசுவாசமானது பெருந்தன்மையுள்ள செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது கலாத்தியர் 5:23

⏹ *விசுவாசமானது அபாய காலகட்டத்தில் தைரியத்தை அளிக்கிறதாய் இருக்கிறது, விஷேசமாய் போர் சம்பந்தபட்ட காரியங்களில் மிகுந்த தைரியத்தை அளிக்கிறது* சங்கீதம் 18:39💪💪💪

⏹வேத வசனங்களைக் குறித்த அறிவு, உபதேசங்கள், மற்றும் அடிப்படை சித்தாந்தங்கள் போன்றவைகளை விசுவாசத்துடன் பயன்படுத்தும்போது கவலையை அவைகள் அகற்றுகின்றனவாய் இருக்கின்றன.👍👍👍😀😀 ஆதியாகமம் 15:6; சங்கீதம் 43:5

*நம்பிக்கையற்ற சூழலில் தேவன் சகாயம் அளிக்கிறவராய் இருக்கிறார். மிக நெருக்கடியான சூழலில் தவிப்போருக்கு விசுவாசம் ஆறுதலுக்கு காரணங்களை கண்டுகொள்கிறதாய் இருக்கிறது* சங்கீதம் 18:6💪💪💪💪💪

⏹விசுவாசம், தேவன் தனது பிள்ளைகளுக்கு பெரிய சகாயராய் இருக்கிறார் எனக் காண்கிறது  மத்தேயு 6:26

⏹விசுவாசம் என்பது மனிதனுக்கும் தேவனுக்குமிடையே உள்ள ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே  உறவாய் திகழ்கிறது, மற்றும் தேவன் மனித தகுதிக்கு அப்பாற்பட்ட நிலையில் ஏற்றுக்கொள்ளப் படத்தக்கவராய் இருக்கிறார். ரோமர் 3:27

⏹விசுவாசமானது ஒருவரின் எதிர்கால நிச்சயத்தை உறுதி செய்கிறதாய் இருக்கிறது, மற்றும் ஒருவரது குடும்பத்தின் எதிர்காலமாயும் இருக்கிறது. உபாகமம் 5:10

⏹விசுவாசத்தினால் எல்லாம் ஆகும்  மத்தேயு 17:20


சங்கீதம் 27:13-14
[ *13]நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.*
[14]கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.

[01/11 10:50 pm] Elango: 3⃣ சங்கீதம் 18 [2]கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

அடிக்கடி தாவீது தன் பாடல்களில் ஏன் கன்மலை, கோட்டை, துருகம், அடைக்கலம், கேடகம், கொம்பு என தேவனுக்கு ஒப்பிடுகிறார்❓

இந்த வசனத்தின் உருவகங்கள், இக்காலத்தில் விசுவாசிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடும் மாம்சம், பழைய சுபாவம் மற்றும் ஆவிக்குரிய சக்திகளுக்கு ஒப்பிடலாம்.

*தேவ பிள்ளைகளூக்கு தேவன் பல விதங்களில் அவருடைய பாதுகாப்பின் உத்திரவாதத்தை கொடுக்கிறவராயிருக்கிறார்*

*என் கன்மலை* - தேவன் நமக்கு அசைவில்லாத பலமு, ஆபத்தில்லாத இடமுமாக இருக்கிறார். சங்கீதம் 31:2-3, 62:7

*என் கோட்டை* - விரோதியானவன் உட்ச்செல்லமுடியாத பத்திரமான, அடைக்கலமான இடம்.

சங்கீதம் 144:14
[14]எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; *சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது;* எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.

*என் இரட்சகர்* - நம் ஜீவனின் பாதுகாவளர்.

*என் கேடகம்* - தீங்குக்கும், நமக்கும் இடையில் தடுப்பாக இருப்பவர்.

*என் இரட்சண்ய கொம்பு* - நம்மை பாதுகாக்கவும், விடுவிக்கவும் தேவன் நமக்கு வெற்றியின் வல்லமையாக இருக்கிறார்.

*என் உயர்ந்த அடைக்களமானவர்* - நம் வாழ்வின் எல்லா ஆபத்துகளிலிருந்து விடுவித்து நம்மை பாதுகாப்பாக உயர்ந்த இடத்தில் நிற்க வைக்கும் உயர்ந்த ஸ்தலம்.

சங்கீதம் 18:33
[33] *அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.*

[01/11 11:03 pm] Elango: 9⃣ சங்கீதம் 18 [1] *என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.*

தேவனை தன் பெலனாக ஏன் உணர்கிறார்❓

தேவனுடைய வல்லமையையும், கிருபையையும், சர்வத்தையும் அவர் ஆளுகிறதையும், அவராலேயல்லாமல் அவரை மீறி எதுவும் நடக்காது என்பதையும் தான் பலவீனன் என்பதையும், தேவனாலே தேவனுடைய பெலத்தினாலே ஒரு சேனைக்குள்ளும் பாயமுடியும் என்பதை தாவீது நன்றாக அறிந்திருந்தார்.

சங்கீதம் 18:17,29
[17]என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

[29] *உம்மாலே* ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்;

*என் தேவனாலே* ஒரு மதிலைத் தாண்டுவேன்.

[01/11 11:08 pm] Elango: சிலருக்கு அவர்களின் படிப்பே தன் பெலனாக இருக்கும்!

சிலருக்கு அவர்களின் செல்வமும், சொத்தும் தன் பெலனாக இருக்கும்!

சிலருக்கு அவர்களின் பதவியே பெலனாக இருக்கும்!

சிலருக்கு அவர்களின் பேச்சே பெலனாக இருக்கும்!

சிலருக்கு அவர்களின் மாம்ச பெலமே பெலனாக இருக்கும்!

*நாமோ கர்த்தரை மட்டுமே பெலனாக கொண்டிருப்போம்*!

சங்கீதம் 20:7-8
[7]சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
[8]அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; *நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.*👍💪

[01/11 11:14 pm] Elango: ❤ *தேவன் சகலத்தையும்  அறிகிறவராயிருக்கையிவ் நாம் ஏன் நாளைய தினத்தை குறித்து கவலைப்பட வேண்டும்❓அவரையே சார்ந்தால் அவரிடம் சகல கவலைகளையும் கொடுத்தால் நமக்கு பூரண சமாதானத்தை நமக்கு கொடுப்பார்*

நம் வேதனைகளை அறிகிறவர் யாத்திராகமம்3:7

நமது தியானங்களை அறிகிறவர் 2 நாளாகமம்16:9

நமது சிந்தனைகளை அற்கிறவர். சங்கீதம்44:21

நமது புத்தியீனங்களை அறிகிறவர். சங்கீதம் 69:5

நமது உருவம் இன்னதென அறிபவர் சங்கீதம் 103:14

நமது கிரியைகளை அறிபவர் சங்கீதம் 139:2

நமது வார்த்தைகளை அறிகிறவர் சங்கீதம் 139:4

நட்சத்திர இலக்கங்களை எண்ணி பெயரிடுபவர் சங்கீதம் 147:4

எல்லா காரியங்களையும் அறிபவர் நீதிமொழிகள்15:3

நமது தேவைகளை அறிபவர்: மத்தேயு6:32

விலங்கினங்களின் சிருஷ்டிப்பைக் குறித்து அறிபவர் மத்தேயு10:29

மனுக்குலத்தை அறிபவர் மத்தேயு10:30

என்ன நடக்கவிருக்கிறது அல்லது அது எப்படியிருக்கப்போகிறது என்பதை அறிகிறவர் மத்தேயு 11:23

தமக்கு சொந்தமானவர்களை அறிகிறவர். யோவான்10:14

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறிபவர் அப்போஸ்தலர் 15:18

[01/11 11:17 pm] Elango: *கர்த்தர் நம்மேல் நம்முடைய பாதுகாப்பிற்க்காக கரிசனையுள்ளவராக இருக்க, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்*❓🤔

 1. தேவன் வல்லவராய் இருக்கிறார்.
கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார். - எபிரெயர்7:25
ஒவ்வொரு தேவைகளையும் சந்திக்க வல்லவராய் இருக்கிறார். - 2 கொரிந்தியர்9:8
2. சோதிக்கப்படுகிற எல்லோரையும் விடுவிக்க வல்லவராய் இருக்கிறார். - எபிரெயர்  2:18
*பெலவீன விசுவாசிகளைத் தாங்கி அவர்களை நிற்க செய்கிறார்* - ரோமர்14:4
வழுவாமல் நம்மைப்பாதுகாத்து, குற்றமற்றவர்களாகுகிறார். - யூதா 24,25
நாம் நினப்பதற்கும், வேண்டிகொள்வதற்கும் அதிகமாய் கிரியை செய்கிறவர் - எபேசியர் 3:20
தனது குமாரனின் சாயலுக்கொப்பாக, உயிர்த்தெழுதலில் நம்மை எழுப்புகிறார். - எபிரெயர் 11:19

3. தேவனால் எல்லாம் கூடும் - மத்தேயு 19:26

4. *தேவனை மிஞ்சி எதுவும் நமது வாழ்வில் நிகழ்வதில்லை*  (1 கொரிந்தியர் 10:13)

5. தேவனுடைய பண்புகள் நிலையானது:
*தேவன் நம் பட்சத்தில் இருந்தால் நமக்கு விரோதி யார்?*❓❓❓❓ (ரோமர்8:31-34)
என்ன நேரிடினும், பொருட்டல்ல, தேவனுடைய அன்பு நிலையானது.  (ரோமர்8:35-39).

6. தேவனின் வாக்குத்தத்தங்கள் பாதுகாப்பனது காரணம் *அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்.* (மத்தேயு 28:19-20, எரேமியா1:19).

7. தேவனின் வல்லமை எப்பொழுதும் ஒரே விதமாய் இருக்கிறது.
அவர் எப்பொழுதும் நம்மை காக்கிறவர்.  (யோவான்10:29, 2 தீமோத்தேயு 1:12,).
தேவன் நம்மை மறக்கிறவர் அல்ல அல்லது நம்மை பாதுகாக்க அவரது வல்லமை இழக்கப்படுவதும் இல்லை (யூதா24).
ஒருவேளை ஐக்கியத்தினின்று நாம் விழுந்துபோக நேரிடினும், நாம் இரட்சிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம்.  (2 தீமோத்தேயு 2:13).

8. *நமக்கு என்னதேவை என்பதை தேவன் முன்கூட்டியே அறிகிறவராய் இருக்கிறார், நமது தேவைகள் அனைத்தையும் அவர் சந்திக்கிறார்.*
(பிலிப்பியர் 4:19, எபிரெயர்4:16,  எபேசியர்3:12,).

9. நம்மை ஆசீர்வதிக்க தேவன் வல்லமையுடையவராய் இருக்கிறார். (2 கொரிந்தியர் 9:8).

10. தேவன் எல்லா கிருபையையும் நம்மில் பெருகச்செய்கிறவராய் இருக்கிறார். (எபேசியர் 3:20).

[02/11 6:19 am] Ebi Kannan Pastor VDM: சங்கீதம் 18:4-6
[4]மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
[5]பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டதன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
[6]எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

[02/11 9:18 am] Elango: 🎻🎸 *இன்றைய (01-02/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 18* 🎻🎸

1⃣ சங்கீதம் 18 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 18 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ சங்கீதம் 18 [2]கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
u
அடிக்கடி தாவீது தன் பாடல்களில் ஏன் கன்மலை, கோட்டை, துருகம், அடைக்கலம், கேடகம், கொம்பு என தேவனுக்கு ஒப்பிடுகிறார்❓

4⃣ சங்கீதம் 18 [20]கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

தேவன் நமக்கு அவருடைய கிருபையின் இரங்குவாரா அல்லது நம்முடைய உத்தமத்தின் படியேயும் நீதி செய்வாரா❓

5⃣ சங்கீதம் 18 [23]அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, *என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.*

*துர்க்குணத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்❓*

6⃣ சங்கீதம் 18:25-26 [25]தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;[26]புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.uu

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

7⃣ சங்கீதம் 18 [34]வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

இந்த வசனத்தை உங்கள் வாழ்க்கையில் எப்படி அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்கள்❓

8⃣ சங்கீதம் 18 [47]அவர் *எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.* அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

பழிவாங்குவது தேவனுக்குரியது என்றாலும், நாம் ஏன் பல நேரங்களில் பழிவாங்க துடிக்கிறோம்❓

9⃣ சங்கீதம் 18 [1] *என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.*

தேவனை தன் பெலனாக ஏன் உணர்கிறார்❓

1⃣0⃣ *தேவனிடத்தில் எப்படியெல்லாம் அன்பு கூறலாம்❓*

1⃣1⃣ சங்கீதம் 18 ம், 2 சாமுவேல் 22 ம் ஏன் ஒரே வசனங்களை கொண்டிருக்கிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[02/11 9:49 am] Elango: 11⃣0⃣ *தேவனிடத்தில் எப்படியெல்லாம் அன்பு கூறலாம்❓*

*தேவனிடத்தில் அன்பு கூறுதல்* -

தேவன் நமது அடைக்கலமும், பெலனுமானவர். அவரிடத்தில் நாம் அன்பு கூறுகிறோம் ஏனென்றால் அவர் நம்மிடத்தில் முதலில் அன்பு செலுத்தியபடியினாலும், அவருடைய அன்பை நம் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் மூலம் அதே அன்பை நிரப்பியிருப்பதாலும். ரோமர் 5:5. தேவனுடைய அன்பை நாம் பிறரிடத்தில் அன்பாக இருப்பதன் மூலமும், பிறருக்காக கிறிஸ்துவை போல ஜீவனை கொடுப்பதற்க்காகவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். எபேசியர் 5:1-2

1 யோவான் 4:19
[19]அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

*என் பெலனாகிய கர்த்தாவே* -

தேவன் நம் பெலனாக இருக்கிறார். நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே நாம் எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலனுண்டு. பிலிப்பியர் 4:13

[02/11 9:50 am] Elango: *தேவனிடத்தில் எப்படியெல்லாம் அன்பு கூற வேண்டும்?*

1. நமக்கானவைகளை சிந்தியாமல் தேவனுக்குரியவைகளை தேடும்போது அவரை நேசிக்கிறவர்களாக இருக்கிறோம்.

 2 தேவன் செய்தவகளுக்காக, அவரது எல்லா நன்மைகளுக்காகவும் அவரில் அன்புகூறுவது முழுமையான பாராட்டுதலுக்குரியதாய் இருக்கிறது.

3. *நமது ஆண்டவர், யோவான் 21:15-19 ல் அன்பினால் தன்னுடன் உறவுகொள்ளவேண்டும் என்கிற உண்மையை பேதுருவுக்கு தெளிவுபடுத்தினார். அன்பின் மூலம் கர்த்தருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார், மற்றும் விசுவாசிகள் மற்ற விசுவாசிகளிடம் அன்பை வெளிப்படுத்துதல் வேண்டும் என்பதும் இதில் அடங்கியுள்ள பாடம் ஆகும்.*

4. இவ்வுலகம் அளிக்கும் பொருட்கள் மீது அன்பு கூறாதிருங்கள் 1 யோவான்2:15-17.

5. -
*உண்மையான தேவ அன்பு எப்பொழுதும் சகோதர அன்புக்கு வழிநடத்தும்* 1 யோவான்  1:3 -11,  1 யோவான் 3:1-3, 10, 4:7 -12, 19,

6. *மெய் அன்பு ஆராதணையிலும், சேவையிலும் வெளிப்படுத்தப்படுகிறது* 1யோவான்   5:1-5.

7. தேவனிடத்தில் கொள்ளும் அன்பு அவரது வார்த்தையின் அறிவினால் பெருக்கெடுக்கிறது மற்றும் வளருகிறது
1 கொரிந்தியர்2:9.

8. இந்த ஆழமான அன்பு கர்த்தரைக் குறித்து மற்றவர்களிடம் சாட்சி பகருவதில் வெளிப்படுகிறது. 2 கொரிந்தியர் 5:14.

9. தேவன் பூரணமான, மாற்றமில்லாத அன்பினால் ஒவ்வொரு விசுவாசியையும் நேசிக்கிறார், காரணம் அவரது நேசக்குமாரனுடன் நாம் இணக்கப்பட்டுள்ளோம்.

[02/11 9:51 am] Elango: 7⃣ சங்கீதம் 18 [34]வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

இந்த வசனத்தை உங்கள் வாழ்க்கையில் எப்படி அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்கள்❓

*தேவன் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் அவர் இடைபடுகிறவராய் இருக்கிறார். சிட்சிக்கிறார், தட்டிக்கொடுகிறார், ஆலோசனை தருகிறார், அடிக்கிறார் கட்டுகிறார், தேற்றுகிறார், ஆற்றுகிறார் புடமிடுகிறார்.நம்மை கிறிஸ்துவைப்போலவே தேறினவர்களாக நிறுத்தவே அவர் பிரயாசப்படுகிறார்.*

 கழுகு தனது கூட்டை கன்மலை வெடிப்பில், வனாந்திர முட்களைக் கொண்டு அமைக்கிறது. பின்னர் அது தனது மார்பக இறகுகளை பிடுங்கி அதன் மீது வைத்து தனது குஞ்சுகளை அம்முட்கள் பாதிக்காவண்ணம்  செய்கிறது. குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும் தருணத்தில், கூட்டில் உள்ள அவ்விறகுகளை களைத்துவிட்டு முட்கள் தென்படச்செய்கின்றன, இதன் நோக்கம் குஞ்சுகள் கூட்டைவிட்டு நிரந்தரமாய்ச் சென்று பறக்கவேண்டும் என்பதாகும்.

இந்த விதமாக தேவன் தனது மக்களுடன் இடைபடுகிறவராய் இருக்கிறார். *கர்த்தர் உங்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் சேவை செய்யும்படி உங்களை விட்டுவிடுகிறார். அவர் உங்களைச் சுமப்பவராய் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார். இந்த உலகத்தில் உள்ளவனைவிட உங்களோடு இருப்பவர் பெரியவர். ஆவிக்குரிய வளர்ச்சியடைந்து அவருக்கு உங்களால் இயன்ற வண்ணம் சேவை செய்யுங்கள்.

தேவன் உங்களது கூட்டைக்கலைப்பாரானால், நீங்கள் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் எப்படியிருப்பினும் உறுதிசெய்து கொண்டு கர்த்தரின் நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து முதிர்ச்சியடையாத குஞ்சுகளாய் கூட்டிலேயே இராதபடிக்கு முன்செல்கிறவர்களாய் இருத்தல் வேண்டும். நாம் ஆட்டுக்குட்டிகளை பரமாரித்து பாதுகாத்தல் வேண்டும், அவைகளுக்கு நல்ல ஆகாரம் அளிக்கிறோமா என்பதை உறுதிசெய்துகொள்ளல் வேண்டும். இவைகள் மற்ற கிறிஸ்தவர்களுடன் சென்று என்ன நிகழ்கிறது எனக்கண்டறிதல் முக்கியம் வாந்தது. காரியங்களை அவர்களாகவே செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொள்ளாதிருங்கள், அவர்களால் செய்ய இயலாது. நீங்கள் சிறப்பான முன்மாதிரியாய் இருப்பீர்களானால் அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இயலும்.

[02/11 9:51 am] Elango: *நம்மை ஆவிக்குரிய யுத்தத்திற்க்கு பழக்குவிக்கும் தேவன்*

ஆமோஸ் 7:14-15
[14]ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், *காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.*

[15]ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.

காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனை தீர்க்கதரியாக மாற்றிய தேவனால்லவா நம் தேவன்!!!

ஆட்டின் பின் ஓடியவனை, நாட்டை ஆள அழைத்தவரல்லாவா நம் தேவன்!!!

சங்கீதம் 18:35
[35]உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; *உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.*

[02/11 9:51 am] Elango: நியாயாதிபதிகள் 3:1-3
[1] *கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,[2]இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்:*

[3]பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால்எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.

[02/11 9:53 am] Elango: தேவன் அன்புள்ளவர், பூரணர், நிலையானவர், நீதியுள்ளவர், *அவர் கன்மலையாய் இருக்கிறார்.*

நாம் அந்தக்கன்மலையின் ஒரு பகுதியாய்,  துண்டாய் இருத்தல் வேண்டும். நாம் வாழ்வை தேவனுடன் சரிசெய்து கொள்ளும் போது நம் வாழ்வும் நிலையானதாகவும், ஸ்திரமாகவும், ஒருவரும் நம் விசுவாசத்தை தகர்க்கக்கூடாத படியாகவும், நம்முடைய விசுவாசம் பறையில் போட்ட அஸ்திபாரமாகவும் இருக்கும்.

[02/11 9:54 am] Elango: *தேவன் என் கன்மலை* -

தேவனுடைய பரிசுத்த சுபாவத்தின் மீது, அவருடைய பரிசுத்த வார்த்தையின் மீது, அவருடைய பரிசுத்த திட்டத்தையும் மீது நாம் அவருக்குள் கட்டப்பட்டிருக்கிறோம்;

தேவனுடைய ஊழியத்திற்காக அவருடைய
 திட்டத்தின்படியும், நோக்கங்களின்படியேயும் முழுமையான ஸ்திரத்தன்மை நமக்கு உண்டு, ஏனெனில் நாம் அழைக்கப்பட்ட ஊழியம் நம்முடையதல்ல,  அந்த ஊழியம் தேவனுடையது.
 அவரே நமக்கு கன்மலை - நம் வாழ்க்கையின் புயல்களில் நம் தேவனை தவிர  வேறு எந்த கன்மலையும்  நமக்கு பாதுகாப்பானது அல்ல.
*நமது கன்மலை* -

1. கிறிஸ்து *இரட்சிப்பின் கன்மலையாய்* இருக்கிறார். யாத்திராகமம் 17:1-7, 1 கொரிந்தியர் 10:4

2. கிறிஸ்து *நியாத்தீர்ப்பின் கன்மலையாய்* இருக்கிறார்.. ஏசாயா 8:1 4, 1 பேதுரு 2:8

3. கிறிஸ்து *நித்திய கன்மலையாய்* இருக்கிறார். ஏசாயா 26:3, 4

4. கிறிஸ்து  *அஸ்திபாரக் கன்மலையாய்* இருக்கிறார்.. ஏசாயா 28:16, சங்கீதம் 118:22

5. கிறிஸ்து *சபையின் அஸ்திபாரக் கன்மலையாய்* இருக்கிறார். மத்தேயு 16:16, 18, 1 கொரிந்தியர் 3:11, எபேசியர் 2:20-22

6. கிறிஸ்து *கையால் பெயர்த்தெடுக்கப்படாத கல்லாய் தகர்க்கும் கன்மலையாய் இருக்கிறார்.* தானியேல் 2:35

[02/11 10:01 am] Elango: 8⃣ சங்கீதம் 18 [47]அவர் *எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.* அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

பழிவாங்குவது தேவனுக்குரியது என்றாலும், நாம் ஏன் பல நேரங்களில் பழிவாங்க துடிக்கிறோம்❓

பழிவாங்குவது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஒரு பகுதியாகவும், துன்மார்க்கருக்கு சரிகட்டும் நாளாகவும் இருக்கிறது.

ஆதியாகமம் 9:5
[5]உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்,

*பழிவாங்குவதும், சரிக்கட்டுவதும் தேவனுக்குரியது. மன்னிப்பதும் விட்டுக்கொடுப்பதுமே நாம் செய்ய வேண்டியது*

உபாகமம் 32:35
[35]பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்

[02/11 10:05 am] Elango: பழிவாங்குவதும், திரும்ப பதிலளிப்பதும் தேவனுக்கே உரியது.

பழிவாங்குவதை என்று நாம் நம் கையில் எடுக்கிறோமோ அது பிசாசின் கிரியையாக இருக்கிறது.

சங்கீதம் 18:47
[47] *அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.* அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

தேவன் நமக்காக பழிவாங்குகிறவராயிருக்க, நாம் பழிவாங்காமல் தேவனிடத்தில் விடுவது தானே சரி. ❤✅✅✅✅

ரோமர் 12:19,21
[19]பிரியமானவர்களே, *பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.*

[21]நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

[02/11 10:21 am] Elango: *சங்கீதம் 18:2 ல் கொம்பு என்பது பெலத்தையும், ஆளுகையும் குறிப்பதாக இருக்கிறது*

சங்கீதம் 75:10
[10]துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; *நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.*

நம்முடைய இரட்சண்யகொம்பாக இருக்கிறவர் நம்முடைய இரட்சகர் இயேசுவே.

லூக்கா 1:75
[75]தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே *நமக்கு இரட்சணியக்கொம்பை* ஏற்படுத்தினார்.

[02/11 10:24 am] Elango: பேச்சு வழக்கில் நாம் பேசுவதுண்டு.👇🏻

நீ என்ன பெரிய கொம்பனா? கொம்பா?

*கொம்பு என்பது பெலத்தை குறிப்பதாக இருப்பதால், பெலத்தின் மேல் நாம் பெலனடைந்து தேவனுக்குரிய காரியங்களை இன்னும் வல்லமையாக, உற்சாகமாக செய்யும் வேண்டிக்கொள்வோம்*

[02/11 10:31 am] Elango: நாம் பெலனடைய நம்முடைய கொம்பு அதாவது நம்முடைய பெலன் பலமடங்காக அபிஷேகம் பண்ணபட வேண்டும்.

அபிஷேகம் இல்லாமல் பெலனும் இல்லை, சாட்சியும் இல்லை, சத்துவமும் இல்லை.

நம்முடைய கொஞ்ச பெலத்தை இன்னும் அதிகமாக அபிஷேகிக்கும்படியாக நாம் தேவனை வாஞ்சையோடு கேட்போமாக!

அப்போஸ்தலர் 1:8
[8] *பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,* எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

அப்போஸ்தலர் 6:8
[8] *ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.*💪💪💪💪💪💪

[02/11 10:42 am] Elango: [02/11 10:37 am] Jeyanti Pastor VDM: 10 என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர், புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.
சங்கீதம் 92:10

[02/11 10:40 am] Jeyanti Pastor VDM: 8 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்,; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு, அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
எண்ணாகமம் 24:8

[02/11 10:42 am] Elango: 6⃣ சங்கீதம் 18:25-26 [25]தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;[26]புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

*கர்த்தர் அவனவன் செயலுக்கு தக்கவாறு பலனளிப்பார்.*

சிறுமையானைவர்களுக்கும், தாழ்மையானவர்களுக்கும், தேவனுக்கு பயபக்தியாய் இருப்பவர்களுக்கும், தேவனிடத்தில் அன்பாயிருக்கிறவர்களுக்கு தேவன் கிருபையும், இரட்சிப்பையும் அருளுவார்.

மேட்டிமையானவர்கள் தூரத்திலிருந்து அறிகிறார். உலக ஞானிகளை அவர்களுடைய தந்திரங்களினாலே பிடிக்கிறார். துன்மார்க்கர் வெட்டின குழியிலேயே அவர்களை விழப்பண்ணுகிறார்.

[02/11 10:42 am] Elango: யோபு 5:12-13,15
[12] *தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.*

[13]அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.

[15] *ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.*❤❤❤❤✅✅

[02/11 10:48 am] Jeyanti Pastor VDM: 5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 12
[02/11 10:50 am] Elango: லூக்கா 18:9-14
[9]அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
[10]இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
[11]பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
[12]வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
[13]ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
[14]அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

*நொறுங்குண்டு, சிறுமைப்பட்டு தேவனை நோக்கி பார்க்கும்  தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையை அளிக்கும் தேவன்*

[02/11 10:51 am] Jeyanti Pastor VDM: I love this Passage much Pastor.  Most beautiful.

[02/11 10:52 am] Jeyanti Pastor VDM: 1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி, நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?
ஏசாயா 66:1

2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
ஏசாயா 66:2

[02/11 10:53 am] Elango: நீதிமொழிகள் 11:20-21
[20]மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; *உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.*😍😍❤

[21]கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
[02/11 10:56 am] Elango: சங்கீதம் 18:3
[3] *துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை* நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.

கர்த்தரை நாம் துதிக்க காரணம் என்னவென்றால் அவர் துதிக்கு பாத்திரர், அவர் ஒருவரே துதிக்கப்பட தகுதியுள்ளவர்.

சங்கீதம் 34:1
[1] கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; *அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.*

[02/11 10:58 am] Jeyanti Pastor VDM: ஆபத்தில் கர்த்தரைத் துதிப்பதே நமக்கு பெலன்

[02/11 11:01 am] Elango: ஏசாயா 42:8
[8] *நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.*

நம் தேவன் அவருடைய மகிமையையும், துதியையும் வேறொருவருக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லும்போது, நாம் அவருக்கு கொடுக்க வேண்டிய துதியை வேறொருவருக்கு, வேறொரு விக்கிரகத்திற்க்கு கொடுக்கலாகாது.

[02/11 11:05 am] Elango: யாத்திராகமம் 14:14
[14]கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

[02/11 11:07 am] Elango: சும்மா என்பதற்க்கு  நாம் ஒன்றும் செய்யாமல், தேவன் மேல் நம்பிக்கையாக இருப்பதை  சொல்லலாமா பாஸ்டர்.

[02/11 11:16 am] Jeyanti Pastor VDM: But with Glorious Praises Pastors

[02/11 3:10 pm] Moses 3 VTT: Yes,  praise God.

[02/11 3:58 pm] Jeyanti Pastor VDM: Your Spiritual experience is Excellent. Thank you very much Past.  A pointable answer for my burdenable prayer.  🙏🏼🙏🏼🙏🏼

[02/11 4:01 pm] Elango: 5⃣ சங்கீதம் 18 [23]அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, *என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.*

*துர்க்குணத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்❓*

எல்லாவற்றை பார்க்கிலும் நம் இருதயமே திருக்குள்ளதும் கேடுள்ளதுமாக இருக்கிறது.

நாம் இரட்சிக்கப்பட்ட பிறகும், பரிசுத்த ஆவியை பெற்ற பிறகும், தேவ அன்பையும், பரம ஈவை ருசி பார்த்த பிறகும் நாம் நம்மமுடைய துர்குணங்களை விட மறுக்கிறோம் ஏன்?

ஏனென்றால் மனிதனின் இயற்கையான சுபாவமே ஒளியை விட இருளையே அதிகமாக விரும்புகிறதாக இருக்கிறது. John 3:19

யோவான் 3:19
[19]ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் *மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால்* அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

[02/11 4:01 pm] Elango: தேவனை சாராமல், நம்முடைய மாம்ச சிந்தை, எண்ணம், சுயமாக முடிவெடுத்தல் போன்றவை மரணத்தை பிரதிபலிக்கிறாய் இருக்கிறது.

ரோமர் 8:6-8
[6]மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

[7]எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

[8] *மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.*

[02/11 4:05 pm] Jeyanti Pastor VDM: 17 மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5:17

18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
கலாத்தியர் 5:18

19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
கலாத்தியர் 5:19

20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
கலாத்தியர் 5:20

24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர் 5:24

[02/11 4:05 pm] Elango: நாம் இந்த சரீரத்தை விட்டு பிரியும் வரை அல்லது ஆண்டவரின் வருகை வரை நமக்கு இந்த போராட்டம் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது.

*மாம்ச இச்சை போராட்டங்கள், பிசாசின் அந்தகார போராட்டங்கள், வானமண்டங்களின் ஆவிகளோடு போரட்டங்கள் என பல ஆவிக்குரிய மனிதர்களுக்கு இருந்தாலும் கிறிஸ்துவின் இரத்தத்தினாலும், அவர்மேலுள்ள விசுவாசத்தின் மூலமாகவும் பரிசுத்த ஆவியினால் இந்த போராட்டாத்தில் ஜெயங்கொள்ள முடியும்.*

[02/11 4:09 pm] Elango: *விசுவாசிகளின் வாழ்க்கையை, அவர்களின் இருதயங்களை ஆராய்ந்து அதற்க்கேற்ற கிரியைகளையும் தேவன் நடப்பிக்கிறவராய் இருக்கிறார். அவர் நம்மை சிட்சிக்கும் போது நாம் சோர்ந்துப்போகக்கூடாது என வேதம் போதிக்கிறது*

1.  ஒரு விசுவாசி தேவ சித்தத்திற்கு கீழ்படியாதிருக்கும்ப்போது, தெய்வீக சிட்சையே அதன் விளைவய் இருக்கிறது.

2. உண்மையான பிள்ளைகள் அனைவரையும் தேவன் சிட்சிக்கிறார். உண்மையற்ற பிள்ளைகள் சிட்சையை அறியாதிருக்கிறார்கள்
(12:8; 1 பேதுரு 5:9-10).

3. தேவன் விசுவாசிகளை சிட்சிப்பதை கீழ்க்கண்ட வேதபகுதிகளில் காணலாம்.
பழைய ஏற்பாடு (நீதிமொழிகள் 3:11-12)
புதிய ஏற்பாடு (எபிரெயர்12:3-13; வெளிப்படுத்தல் 3:19).

4. தேவனது சிட்சை பற்றிய மனப்பான்மை ( எபிரெயர் 12:3-15).

சிட்சகளின் மூலம் பயனடைதல் மற்றும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். (வச 11).

5. *தேவனுடைய சிட்சையால் உண்டாகும் பலன்:*

சிட்சை விசுவாசிகளுக்கு ஆசீர்வாதங்களை அருளுகின்றது (சங்கீதம் 94:12)

ஜீவியம் மாற்றப்படுகிறது (எபிரெயர் 12:11)

*சிட்சை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே*(1 பேதுரு1:6,7)
இது விசுவாசிகளின் நன்மைக்காய் இருக்கிறது (எபிரெயர் 12:10)

6. *விசுவாசி மனந்திரும்ப மறுப்பானேயானால் சிட்சை மரணபரியந்தம் தொடரும்*😣😣😖😖😖😩😫😫😫🤜🤜🤛🤛✊✊✊ (1 கொரிந்தியர் 11:30-31, 1 யோவா 5:16)

7. *தெய்வீக சிட்சை ஒருபோதும் இரட்சிப்பு இழக்கப்படுவதை தெரிவிப்பதில்லை.*👂👂👂👂 கலாத்தியர் 3:26, 2 தீமோத்தேயு 2:11-13.)

[02/11 4:10 pm] Moses Pas VTTT: Very inspiring Pastr

[02/11 4:14 pm] Jeyanti Pastor VDM: 11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
சங்கீதம் 7:11

12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார், அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
சங்கீதம் 7:12

13 அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார், தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
சங்கீதம் 7:13

[02/11 4:15 pm] Jeyanti Pastor VDM: நிச்சயம் மனந்திரும்பியே ஆக வேண்டும்.  😥😥

[02/11 4:22 pm] Elango: 5⃣ சங்கீதம் 18 [23]அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, *என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.*

*துர்க்குணத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்❓*

இரட்சிக்கப்பட்ட தேவ மனிதர் பாவத்தில் விழ முடியுமா முடியாதா என்றால்... அவருடைய சுயாதீனத்தை பொறுத்தது அது அவர் அவருடைய சிந்தையை, சரீரத்தை எதற்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கிறாரோ அதற்கு அடிமையாகி விடுவார்.

மாம்ச பழைய சுபாவத்திற்க்கு அவன் தன்னை வித்துப்போட்டு ஒப்புக்கொடுத்தால் அவர் பாவத்தில் விழுவார்.

தேவ ஆவியானவரின் சத்தத்திற்க்கு செவிக்கொடுத்து ஆண்டவரின் சித்தத்திற்க்கு தன்னை ஒப்புக்கொடுத்தால் அவர் பாவம் செய்கிறதில்லை.

ரோமர் 6:16,19
[16] *மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?❓❓❓❓❓❓❓*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

[19]உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது *பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.*✅✅✅✅

[02/11 4:24 pm] Elango: *இரட்சிக்கப்பட்ட பிறகு நம்மை நாமே நிதானித்து அறிந்து சுத்திகரிக்க வேண்டிய காரியங்கள் உண்டு* அது மாம்ச கிரியைகளாக இருக்கட்டும், அல்லது உலகத்திற்க்கு ஒத்த காரியங்களாக இருக்கட்டும் நம்மை அதை விட்டு விலகி வாழ்தல் தேவ பக்தியாகும்.

1. வழக்கமாய் மாம்சீகத்துக்குரிய விசுவாசிகளைவிட்டு பிரிந்து வாழ விசுவாசிகள் போதிக்கப்படுகின்றனர்.
(1 கொரிந்தியர் 5:10, 11).

2. அவிசுவாசிகள் மற்றும் விக்கிரகங்களை விட்டு வேறுபிரிந்து வாழ விசுவாசிகள் கட்டளையிடப்பட்டுள்ளனர்.
(2 கொரிந்தியர் 6:14).

3. அவிசுவாசிகள் மற்றும் அவர்கள் உறவுகளை விட்டு பிரிந்துவாழ விசுவாசிகள் கட்டளையிடப்படுள்ளனர்.
(2 கொரிந்தியர்6:14 ff).

4. மனிதக் கண்ணோட்டத்தில் வேறுபிரிந்து வாழ்தல் கட்டளையிடப்பட்டுள்ளது. (ரோமர் 12:2, ரோமர்16:17, 18).

5. கற்றுக்கொண்ட உபதேசங்களுக்கு விரோதமாய் பிரிவினைகள், இடறல்களை உண்டாக்குகிறவர்களைவிட்டு பிரிந்து வாழ கட்டளையிடப்படுகின்றனர். (ரோமர் 16:17, 18).

6. *புறஜாதிய இஷ்டப்படி, காமவிகாரம், துரிச்சை, மதுபானம்பண்ணுதல், களியாட்டுக்கள், வெறிகொள்ளுதல், அருவருப்பான விக்கிரக ஆராதணை போன்றவற்றிற்கு விலகியிருக்க கட்டளை பெறுதல்* (1 பேதுரு 4:3,4).

7. வேதாகம உபதேசங்களை மறுதலித்து வாழும் மற்ற விசுவாசிகளுடன் வேறுபிரிந்து வாழ கட்டளை பெற்றனர்.
 (2 தெசலோனிக்கேயர் 3:14, 15)

[02/11 4:26 pm] Elango: 2 தீமோத்தேயு 2:19-21
[19]ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், *கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.*

[20]ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

[21]ஆகையால் ஒருவன் *இவைகளைவிட்டு,👈👈👈👆🏻👆🏻👆🏻👆🏻 தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.*✨✨✨🌟🌟⭐⭐🌞🌞🌝🌝

[02/11 4:49 pm] Elango: *சங்கீதம் 18 - சுருக்கவுரை*

வசனம் 1 : தேவனை தாவீது நேசித்தல்

வசனம் 2 - தேவனின் பாதுகாப்பு

வசனங்கள் 3- 6 : ஆபத்தின் போது ஜெபம்.

 வசனங்கள் 7-15 : கர்த்தர் ஜெபத்தை கேட்டு எதிரிகளின் மேல் கோபம் கொள்தல்

வசனங்கள் 16-24 : கர்த்தர் அளித்த விடுதலை

வசனங்கள் 25-27 : கர்த்தரின் பண்புகள்

வசனங்கள் 28-29 : தாவீதின் விசுவாசம்

வசனங்கள் 30-31 : கர்த்தரே கேடகம், கன்மலை

வசனங்கள் 32-36 : வாழ்க்கை பாதைக்கு கர்த்தர் நம்மை ஆயத்தப்படுத்துதல்

வசனங்கள் 37-42 - கர்த்தர் ஆயத்தப்படுத்தியதின் விளைவு,  விசுவாசத்தால் வெற்றி

வசனங்கள் 43-50 : கர்த்தரின் செயல்களும், துதியும்

[02/11 5:12 pm] Jeyanti Pastor VDM: Nice meditation.  ஒவ்வொரு தலைப்பு வைத்து,  தனி தனியே தேவ செய்தி ஆயத்தப் படுத்தலாம்.  பிரயோஜனமாகிய பதிப்பு
[02/11 7:03 pm] Elango: 🎻🎸 *இன்றைய (01-02/11/2017)  வேத தியானம் -  சங்கீதம் 18* 🎻🎸

1⃣ சங்கீதம் 18 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 18 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ சங்கீதம் 18 [2]கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
அடிக்கடி தாவீது தன் பாடல்களில் ஏன் கன்மலை, கோட்டை, துருகம், அடைக்கலம், கேடகம், கொம்பு என தேவனுக்கு ஒப்பிடுகிறார்❓

4⃣ சங்கீதம் 18 [20]கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

தேவன் நமக்கு அவருடைய கிருபையின் இரங்குவாரா அல்லது நம்முடைய உத்தமத்தின் படியேயும் நீதி செய்வாரா❓

5⃣ சங்கீதம் 18 [23]அவர் முன்பாக நான் உத்தமனாயிருந்து, *என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.*

*துர்க்குணத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்❓*

6⃣ சங்கீதம் 18:25-26 [25]தயவுள்ளவனுக்கு நீர்u தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;[26]புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

7⃣ சங்கீதம் 18 [34]வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

இந்த வசனத்தை உங்கள் வாழ்க்கையில் எப்படி அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்கள்❓

8⃣ சங்கீதம் 18 [47]அவர் *எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.* அவர் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.

பழிவாங்குவது தேவனுக்குரியது என்றாலும், நாம் ஏன் பல நேரங்களில் பழிவாங்க துடிக்கிறோம்❓

9⃣ சங்கீதம் 18 [1] *என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.*

தேவனை தன் பெலனாக ஏன் உணர்கிறார்❓

1⃣0⃣ *தேவனிடத்தில் எப்படியெல்லாம் அன்பு கூறலாம்❓*

1⃣1⃣ சங்கீதம் 18 ம், 2 சாமுவேல் 22 ம் ஏன் ஒரே வசனங்களை கொண்டிருக்கிறது❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[02/11 7:14 pm] Aa Pushparaj VTT: இயேசு கிறிஸ்து இவ்வாறு விலகி தான் ஊழியம் செய்தாரா?

[02/11 7:17 pm] Jeyanti Pastor VDM: Yes .

[02/11 7:17 pm] Jeyanti Pastor VDM: அவரே வேறு.  நாமே வேறு

[02/11 7:18 pm] Jeyanti Pastor VDM: நாம் கட்டாயம் நிதானித்து வாழ வேண்டும்

[02/11 7:21 pm] Elango: Yes

[02/11 7:21 pm] Elango: 26 *பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும்,* வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
எபிரேயர் 7:26

[02/11 7:23 pm] Jeyanti Pastor VDM: 31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

1 கொரிந்தியர் 11

[02/11 7:24 pm] Elango: 1 கொரிந்தியர் 10:22-23
[22]நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? *அவரிலும் நாம் பலவான்களா?*❓❓❓❓

[23]எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, *ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.*

ஆண்டவரை விட நாம் பரிசுத்தவான்களா?

தீயில் கை வைத்தால் சுடாது என்றால் நீங்கள் கை வைக்கலாம்🤔🤔

பாவத்தில் விழுந்த பிறகு என்னால் உடனே எழுந்துவிட முடியும் என்றால் நீங்கள் பாவத்தோடு விளையாடலாம்.🤔🤔

[02/11 7:25 pm] Jeyanti Pastor VDM: 15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
எபிரேயர் 4:15

[02/11 7:32 pm] Elango: நாம் உலக மனிதர்களோடு பழகும் முறை  என்பது கிறிஸ்துவ விசுவாசிகளோடு வைக்கும் ஐக்கியத்திலிருந்து வேறுபடுகிறது.

ஊழியத்தின் நிமித்தம் நாம் அநேக மக்களோடு பழகும் வாய்ப்பு வரலாம். ஆனால் அவர்களோடு ஐக்கியம் வைப்பது கூடாது. அதாவது நெருங்கி பழகுதல், அவர்கள் சொல்லுவதற்க்கெல்லாம் இணங்கி போதல், அவர்களுக்காக நாம் உலக வேசமும், பாவத்திற்க்குள்ளும் விழுந்துவிடக்கூடாது.

[02/11 7:33 pm] Elango: 1 கொரிந்தியர் 5:6,9-11
[6]நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?❓❓❓❓❓❓❓❓

[9]விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

[10]ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
[11] *நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால்,*✍✍✍✍✍✍✍✍👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.❌❌❌❌❌

[02/11 7:35 pm] Jeyanti Pastor VDM: Yes இந்த பழகுமுறை கர்த்தருடைய அழைப்பை நம்மை மனப்பூர்வமாக செய்ய விடாது.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

[02/11 7:36 pm] Jeyanti Pastor VDM: அதுவும் விசுவாச மக்களிடம்

[02/11 7:38 pm] Elango: Yes✅🙏

[02/11 7:39 pm] Jeyanti Pastor VDM: 24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
யோவான் 2:24

25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
யோவான் 2:25

[02/11 7:44 pm] Elango: *மனுஷருள்ளத்தில் என்ன இருக்கும்*🤔🤔👇🏻👇🏻

மாற்கு 7:21-22
[21]எப்படியெனில், *மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,*
[22] *களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.*

[02/11 8:50 pm] Elango: சங்கீதம் 18:43. *ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து,* ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.

நாம் புரிந்துக்கொள்ள முடியாத, நாம் உணர்ந்துக்கொள்ளா முடியாத அளவுக்கு தேவன் நமக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார்.

எத்தனையோ சூழ்நிலையில் நாம் மரித்திருக்க வேண்டும் ஆனால் நாம் இன்னும் உயிர் வாழ்கிறோம்.
எத்தனையோ முறைகள் நம்முடைய ஊழியத்தின் மத்தியிலும் பல அச்சுறுத்தல்களை நாம் கேட்டிருக்கலாம். ஆனால் அந்த தீங்கும் எதும் நம்மை தொடவில்லை, அவர்களின் பற்களுக்கு இரையாக நம்மை ஒப்புக்கொடுக்காத தேவனுக்கு ஸ்த்தோதிரம் உண்டாகுவதாக!!!!

தேவன் நமக்கு எல்லா சூழ்நிலையிலும் போதுமானராகவே இருக்கிறார் என்பதை தாவீது நமக்கு இந்த வசனத்தின் மூலம் தெரிவுப்படுத்துகிறார்.

[02/11 8:51 pm] Elango: எப்போதும் கலவரங்களையும், குழப்பங்களையும் உண்டாக்கும் மக்கள் எல்லா இடங்களிலும் உண்டு. சிலர் தங்களின் பார்வைக்கு ஞானியாகவும், பெரிய நபர்களாகவும் காண்டப்படுகின்றனர். இந்த சுபாவமானது விழுந்த மனித சுபாவம், பழைய சுபாவம்.

தேவ ஆவியானவர் எப்பொழுதும் சமாதானத்தையும், தாழ்மையையும் நமக்கு அருளுகிறவராக இருக்கிறார். மனிதர்களுக்கு மத்தியில் பெருமையையும், சர்ச்சைக்குரியதும், தேவனுக்கு விரோதனமான எந்த காரியங்களையும் எப்போதும் பிசாசு கொண்டு வருகிறவனாக இருக்கிறான்.

தேவன் நம்மை "தலைவராகவும், வழிகாட்டிகளாகவும், வெற்றியாளர்களாகவும்" ஆக்குகிறார். ஏனென்றால், ஆண்டவர் நம் தலையை உயர்த்துகிறவருமாய், சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.

*சங்கீதம் 3:3 ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்*

[02/11 9:08 pm] Elango: சங்கீதம் 18:44-45  *அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்;* அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள். 45. அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.

தேவனோடு நடந்து, சஞ்சரித்து, நெருங்கி வாழும் இராஜாவுக்கு முன்பாக. சத்துருவின் சகல படைகளும் பயப்படும். தாவீது தேவனோடு இருந்ததால், தேவனுடைய வல்லமை தாவீது மூலம் வெளிப்பட்டதை சத்துருக்கள் காணும்போது முறிந்து விழுந்தார்கள்.  தாவீதின் எதிரிகள் தாவீதின் பெலன் அவருடைய தேவன் என்று அறிந்து அவருக்கு முன்பாக தலை குணிந்து வணங்கினார்கள்.

நாம் தேவனோடு இருந்தால் அவர் நம்மோடிருப்பார், நாம் அவரை விட்டுவிட்டால் அவரும் நம்மை விட்டு விடுவார். II நாளாகமம் 15:2
*தேவன் நம் பட்சத்தில் இருந்தால் நமக்கு விரோதியாக இருப்பவர் யார்?*

சங்கீதம் 118:6 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

ஏசாயா 54:15 இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.

[02/11 9:29 pm] Elango: சங்கீதம் 18:3,49
[3]துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.
[49]இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே *உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.*

*தேவனுடைய நாமத்தை சொல்லி நம் ஜெப வேளையில் துதித்து ஸ்தோத்தரிக்கலாம்.🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋🙋🙋🙋🙋*

பழைய ஏற்பாட்டில் தேவன் தன்னையும் தனது குணங்களையும் தனது நாமங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்👇🏻👇🏻👇🏻

1. *எல் EL* - பலத்த அரணானவர் (ஒருமை) -  2 சாமுவேல் 22:33.

2. *எல் எலியோன் EL ELYON* - உன்னதமான தேவன் - ஆதியாகமம் 14:18-22.

3. *எல் ஓலாம் EL OLAM*  - சதாகாலமுமுள்ள தேவன் - ஆதியாகமம் 21:33.

4. *எல் ஷடாய் EL SHADDAI  - சர்வ வல்லமையுள்ள தேவன்* -  ஆதியாகமம் 17:1.

5. *ஏலோஹிம் - ELOHIM* - எல்லாம் வல்ல தேவன் (பன்மை) - ஆதியாகமம் 1:1.

6. *யெஹோவா - JEHOVAH* - சுயமாய் வியாபித்திருப்பவர் - இருக்கிறேன் என்றவர் யாத்திரகாமம் 3:14.

7. *யெஹோவா ஏலோஹிம் JEHOVAH-ELOHIM* - தேவனாகிய கர்த்தர் சிருஷ்டிகர் - ஆதியாகமம் 2:4.

8. *யெஹோவா யீரே JEHOVAH-JIREH* - யெஹோவா பார்த்துக்கொள்வார் -  ஆதியாகமம் 22:13, 14.

9. *யெஹோவா நிசி JEHOVAH -NISSI*  - யெஹோவா என் ஜெயக்கொடி - யாத்திராகமம் 17:15.

10. *யெஹோவா ரா JEHOVAH-RAAH* -  யெஹோவா என் மேய்ப்பர் - சங்கீதம் 23:1.

11. *யெஹோவா ரஃப்பா JEHOVAH-RAPHA* - குணமாக்கும் யெஹோவா - யாத்திராகமம் 15:25, 26.

12. *யெஹோவா சாபோத் JEHOVAH-SABOATH* - சேனைகளின் கர்த்தர் - சங்கீதம்  46:7, 11.

13 *யெஹோவா ஷாலோம் JEHOVAH-SHALOM  - சமாதானத்தின் யெஹோவா* - நியாதிபதிகள் 6:24.

14. *யெஹோவா ஷம்மா JEHOVAH-SHAMMAH* - யெஹோவா அங்கு இருக்கிறார் - எசேக்கியேல் 48:35.

15. *யெஹோவா சிட்கெனு JEHOVAH TSID KENU* - யெஹோவா எங்கள் நீதி -  எரேமியா 33:16.

[02/11 10:01 pm] Elango: தேவனுக்கு

நாசி, வாய் (வசனம் 8),
பாதங்கள் (வசனம் 9)
உடல் ( வசனம் 11,12)
சுவாசம் ( வசனம் 15)
கை ( வசனம் 16)

போன்ற ஆவிக்குரிய சரீரம் உண்டு, ஆனால் அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறார் என்றும்.

மற்றொரு தரப்பினர் - தேவன் சரீரம் இல்லாதவர், காணக்கூடாதவர், உருவம் அற்றவர் என்றும் சொல்லுவதுண்டு.

Post a Comment

0 Comments