[31/10 11:12 am] Elango: 🎻🎸 *இன்றைய (31/10/2017) வேத தியானம் - சங்கீதம் 17* 🎻🎸
1⃣ சங்கீதம் 17 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ சங்கீதம் 17 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓
3⃣ சங்கீதம் 17:1 [1]கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; *கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.*
என்ற வசனத்தின் அர்த்தம் என்ன்❓
4⃣ சங்கீதம் 17:,5
[5] *என் நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என் காலடிகள் வழுவிப்போகவிலலை.*
என்ற வசனத்தின் அர்த்தம் என்ன்❓
5⃣ சங்கீதம் 17:8.[8]கண்மணியைப்போல என்னைக் காத்து,
என்று தாவீது ஏன் கூறுகிறார்❓
6⃣ சங்கீதம் 17:14.[14]கர்த்தாவே, மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; *அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்;* அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.
என்ற வசனத்தின் அர்த்தம் என்ன்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[31/10 2:29 pm] Elango: இந்த சங்கீதத்தை எழுதியது *தாவீது*
இந்த சங்கீதத்திற்க்கு சுருக்கமாக சொன்னால் - *எதிரிகளின் உபத்திரவங்களிலிருந்து விடுவிக்கும்படியாக தாவீதின் விண்ணப்பம்*
வசனங்கள் 1-2 : தன் ஜெபத்தை செவிக்கொடுக்கும்படி தாவீது வேண்டுதல்.
வசனங்கள் 3-4 : தன்னை காத்துக்கொள்ளுதலை பற்றி சொல்லுகிறார்.
வசனங்கள் 5-9 : தான் வழுவாதப்படிக்கும், சத்துக்களுக்களிடமிருந்து தன்னை பாதுகாக்க தேவனிடம் வேண்டுதல்.
வசனங்கள் 10-12 : பகைவரின் துர்குணங்கள்
வசனங்கள் 13-14 - பகைவரிடமிருந்து விடுவிக்க வேண்டி நிற்தல்
வசனங்கள் 15 - *இரட்சிப்பின் நிச்சயம்*
[31/10 6:40 pm] Jeyanti Pastor VDM: தாவீது சத்துருவை சிங்கத்திற்கு சமமாய், பேசுகிறார். ஆம், நாமும் சத்துருவை அடையாளங் கண்டுக் கொள்ள வேண்டும்.
சங்கீதம், Chapter 22:21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
என்றான்.
இப்படியாய் போராட்ட பாதைகள் சிங்கத்தின், நாவாக, ஆத்துமாவை சிறைப்பிடிப்பாக இருக்கிறது.
1 பேதுரு, Chapter 5:8. தௌpந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். இங்கு சாத்தானே, சிங்கம்போல இருக்கிறான். கர்த்தரோ,
அவருடைய செட்டைகளின் மறைவுகளில் வைத்து, கிருபையான வாக்கும் கொடுத்திருக்கிறாா்.
[31/10 7:58 pm] Elango: *தாவீது தேவனிடத்தில் ஜெப விண்ணப்பம் பண்ணும்போது தன்னுடைய உத்தம குணங்களை தேவனிடம் தெரிவிக்கிறார்*
சங்கீதம் 17:1-5 [1]கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; *கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.[2]உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவனவாக.[3]நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணியிருக்கிறேன்,[4]மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.[5] *என் நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என் காலடிகள் வழுவிப்போகவிலலை.*
[31/10 8:01 pm] Elango: இப்படி தாவீது தன்னுடைய உத்தம குணங்களை தேவனுக்கு முன்பாக பரிச்சேயனை போல மேட்டிமையான ஜெப விண்ணப்பம் அல்ல.
தாழ்மையாக தன்னுடைய உத்தம குணங்களை தெரிவிக்கிறார்.
[31/10 8:12 pm] Elango: லூக்கா 18:11-13 [11]பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்
.[12]வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்
.[13]ஆயக்காரன் தூரத்திலே நின்று, *தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.*
லூக்கா 18 [14] *அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.*
[31/10 8:17 pm] Elango: *எசேக்கியா இராஜாவும் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய உத்தமத்தை தேவனிடம் சொல்லி ஜெபிக்கிறார்*
ஏசாயா 38:3-5 [3]ஆ *கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.*😭😭😭😭😭😭😭[4]அப்பொழுது எசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:[5]நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; *உன் கண்ணீரைக் கண்டேன்;* இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
[31/10 8:21 pm] Elango: நெகேமியா 5:14-19 [14]நான் யூதா தேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.[15]எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.[16]ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.[17]யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.[18]நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், *இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.[19]என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.*
*இதேப்போலவே நெகேமியாவும் தன்னுடைய உத்தம குணத்தை சொல்லி தேவன் அவரை நினைத்தருளும் படியாக வேண்டுகிறார்*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[31/10 8:26 pm] Elango: எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:10
[10]ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
*இந்த பூமியில் நாம் தேவனுக்காக நடப்பித்த கிரியைகளுக்கும் பலன் தருகிறவராக இருக்கிறார்*
ரோமர் 2:6-7 [6]தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்
.[7]சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
[31/10 8:31 pm] Elango: *நெருக்கத்தில், துன்பத்தில், சத்துருவின் சூழ்ச்சி நேரத்திலும் நாம் அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி கதறிவிட்டால்... நம் கண்ணீரை துடைத்து அருள் தரும் நம்பிக்கையையும் தரும் தேவன் அவர்*
தாவீது இச்சங்கீதத்தில் துவக்கத்தில் தேவனிடம் கெஞ்சி விண்ணப்பிக்கிறார் தன்னுடைய சத்துருவிடமிருந்து பாதுகாக்க.
கடைசியில் நம்பிக்கையோடு முடிவு சேய்கிறார்.
சங்கீதம் 17 [15] *நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.*
[31/10 8:34 pm] Elango: சங்கீதம் 62 [8]ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; *அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;*💔💔💔💔💔💔 தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா).
[31/10 8:43 pm] Elango: சவுலின் தொடர்ச்சியான துன்புறுத்தலின் போது, தாவீது சத்துருவிடமிருந்து பாதுகாப்பு வேண்டி தேவனிடம் ஜெபிக்கிறார்.
நமக்கும் சத்துருக்குள் உண்டு. அவர்கள் மனிதர்கள் அல்ல.
ஆனால் மனிதர்களுக்குள் இருந்து கோபத்தையும், சண்டையையும், குரோதத்தையும், கசப்பையும், எரிச்சலையும் மனிதர்களின் இருதயத்தில் நிரப்பி மனிதர்ளை நமக்கு சத்துருவாக காட்டுபவன்.
அன்பில்லாமையை விதைக்கும் சாத்தான் ஒருவனே நமக்கு எதிரி.
[31/10 8:57 pm] Jeyakumar Toothukudi VTT: praise the Lord
சங் 17 : 14 ல் உமது திரவியம் என சொல்லப்பட்டுள்ளதே , இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன ஐயா!
BRO . R. jeyakumar
[31/10 9:47 pm] Premraj 2 VTT: It's really wonderful explained. Go head. Thank you so much
[31/10 10:02 pm] Elango: 1. *கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும்,* என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும். சங்கீதம் 17;1
தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையின் அடிப்படையில் மாத்திரமல்ல, தேவனுடைய சித்தத்தின் படியேயும், அவருடைய வழிகளுக்கும் தன் சொந்த வாழ்க்கையிலுள்ள உண்மையான கீழ்ப்படிதலின் அடிப்படையில் அமைந்த தன் ஜெபத்தைக் கர்த்தர் கேட்கும் படி தாவீது வேண்டுகிறார்.
தேவன் தாவீதின் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து தம்மைப் பிரியப்படுத்துவதற்க்கான அவனுடைய விடாமுயற்சி பொய்யானதல்லை என்று தேவன் கண்டார்.
18. என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
19. இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
20.*நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.21.பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,* 1 யோவான் 3:18-21
[31/10 10:07 pm] Elango: நாமும் ஆண்டவரிடம் நம்முடைய உத்தமத்தை சொல்லி ஜெபிக்கலாம், அதாவது நம் தகப்பனிடம் ஏதாவது ஒரு காரியத்தை வேண்டி நிற்க்கும் போது, தகப்பன் நமக்கு தராத வேளையில் நாம் தகப்பனிடம் சொல்லுவோமே... அப்பா... நான் நீங்க சொன்னபடியெல்லாம் நடந்தேனே... உங்க சொல்லுக்கு கீழ்ப்படிந்தேனே....உங்களுக்கு பிரியமாக நடந்தேனே... இதை எனக்கு கொடுக்கமாட்டீங்களா என்று கேட்பது போல தாவீது பரம தகப்பனிடம் கெஞ்சி கேட்கிறார்... தன் உத்தம குணத்தை சொல்லுகிறார். நாமும் தேவனுக்கு பிரியமாக வாழ்ந்ததை, தேவனுக்காக விட்டுக்கொடுத்ததை, தேவனுக்காக சகலத்தையும் சகித்தை சொல்லி ஜெபிக்கலாம்... *இது மிரட்டல் அல்ல, தகப்பனிடம், தாழ்த்தி கண்ணீரோடு நிற்பது போன்று* இங்கு மேட்டிமைக்கு இடமேயில்லை... மேட்டிமையான ஜெபத்தை கர்த்தர் அருவருக்கிறார்.
[31/10 10:14 pm] Elango: தன் சொந்த தனிப்பட்ட வழ்ழ்க்கையிலுள்ள உண்மைத் தன்மையின் அடிப்படையில் தேவனிடத்தில் தாவீது வேண்டுதல் செய்தார். இச்செய்கை தம்மை நேசித்து கனம் பண்ணுகிறவர்களுடைய ஜெபங்களைக் கேட்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார் என்ற அடிப்படை சத்தியத்தை வெளிப்படுத்துகிறது.
*உண்மையான ஜெப்த்திற்கு முதலில் அத்தியாவசியமான நிபந்தனை என்னவென்றால் ஒரு தெளிந்த மனச்சாட்சியும், சுத்தமான வாழ்க்கையுமாகும்.*
[31/10 10:24 pm] Elango: உமது திரவியங்கள் என்பதற்க்கு உலக ஆசீர்வாதங்கள் என்ற அர்த்தர்த்தை கொடுக்கலாம்.
நல்லோருக்கும் தீயோருக்கும் மழையை பெய்விக்கிற தேவன், துன்மார்க்கரையும் போஷிக்கிறார்.
அவர்கள் உலக ஆசீர்வாதங்களிலேயே மூழ்கி விடுகிறார்கள். அவர்களுக்கு ஆவிக்குரிய பொக்கிஷங்களை குறித்த வாஞ்சை இல்லை. இலவசமாக தரும் இரட்சிப்பை குறித்து தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்தினாலும் *அப்பம் புசித்ததினால் ஆண்டவர் இயேசுவை மக்கள் தேடியதுபோல, இம்மைக்காக வாழும் கூட்டத்தார் அவர்கள்*
இம்மையில் இந்த உலகத்தில் அவிசுவாசிகள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை குறிக்கிறது.
[31/10 10:25 pm] Elango: *செழித்து வாழும் துன்மார்க்கரின் வேதனையான முடிவும், நீதிமானின் நம்பிக்கையும்*👇🏻👇🏻👇🏻
சங்கீதம் 73:1-28
[1]சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவேm இருக்கிறார்.❤❤❤
[2]ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.
[3] *துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.*😒😒😏😏😏😔😔😟😟
[4] *மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.*😕😕😕🙃🙃🤔🤔🤔🙄🙄🙄
[5]நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.😳😳😳😳😳😳
[6]ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
[7] *அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.*🙁🙁🙁🙁🙁😳😳😳😳
[8]அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
[9]தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
[10]ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.
[11]தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
[12]இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.🤔🤔🤔🤔🤔
[13]நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
[14]நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
[15]இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
[16]இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
[17]அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.😖😖😣😣😣😣
[18] *நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.*
[19] *அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.*😩😫😫😫😫😫
[20]நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர்விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
[21]இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
[22] *நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.*👈👈👈☝☝☝☝☝☝👂👂👂👂👂
[23]ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.❤❤❤❤❤
[24]உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
[25] *பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.*❤❤❤❤👂👂👂
[26]என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
[27] *இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.*👂👂
[28]எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
[31/10 10:34 pm] Elango: 5. கண்மணியைப்போல் என்னைக் காத்து -
என்று தாவீது ஏன் கூறுகிறார்?
தம்முடைய உண்மையான மக்களுக்கான தேவனுடைய அன்பையும், கரிசனையையும் நினைவு கூறுவதற்க்கு தாவீது இரண்டு உருவகங்களை பயன்படுத்துகிறார்.
1. *கண்ணின் மணி* எனபது கருவிழியாகும். இது மிகவும் விலை மதிப்புள்ளதும், பிரியமானதுமானவற்றை வெளிப்படுத்திக் கூறும் எபிரெய உருவகமாகும்.
2. *உம்மையுடைய செட்டைகளில் நிழலிலே* - ஒரு கோழி தன் குஞ்சுகளைஹ்ட் த செட்டைகளினால் பாதுகாப்பது என்பதிலிருந்து ஏற்பட்ட ஒரு உருவக எடுத்துக்காட்டாகும். இப்படி அது மென்மையான பாதுகாப்பினை வெளிப்படுத்துகிறது.
7. தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் *உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.* சங்கீதம் 36:7
1. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் *உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.* சங்கீதம் 57;1
*7. நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.* சங்கீதம் 63:7
[31/10 10:37 pm] Elango: *இஸ்ரவேலருக்கு தேவன் தம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்க்காக கிறிஸ்துவானவர் இந்த உருவகத்தை பயன்படுத்துவதை நாம் கீழுள்ள வசனத்தில் பார்க்கலாம்.*
37. எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே!❤❤❤❤❤❤❤❤❤ *கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்;* ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
[31/10 10:46 pm] Elango: 8. பிற்பாடு மகிமையுண்டாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
[31/10 10:48 pm] Elango: பரலோக பிதாவனாவர், ஒரு தாய்க் கோழியானது தனது குஞ்சுகாளை மூடிமறைப்பது போல, நம்மை மூடி மறைக்கவும் காக்கவும் எப்பொழுது ஆயத்தமாகவே இருக்கும்படியாகவும் நாம் ஜெபிக்க வேண்டும்.
[31/10 10:49 pm] Elango: 1. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2. நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
4. *அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்;* அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். சங்கீதம் 91:1-4
[31/10 11:02 pm] Elango: மனிதர்களுக்கு தேவ பிள்ளைகளுக்கு எதிராக வரும்போது, தேவனை விசுவாசிக்கும் உங்களை நோக்கி தீமையானவர்கள் எழும்பும்போது, பிசாசானவன் உங்களை சிதைக்க துடிக்கும்போது, சகரியா 2:8 இல் *உங்களைத் தொடுகிறவன் கர்த்தருடைய கண்மணியைத் தொடுகிறான்,* என்ற வாக்குத்தத்த வசனத்தை விசுவாசித்து கர்த்தரின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
[31/10 11:05 pm] Elango: *உலக மக்களின் ஆசீர்வாதங்களைப் பார்த்து கர்த்தருடைய பிள்ளைகள் நாம் சிலர் தங்களுக்கு அவை இல்லையே என ஏங்குவதைப் பார்த்திருக்கிறோம். இவ்வுலக ஆசீர்வாதங்களைவிட ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் மிகப்பெரியவ. கர்த்தருடைய பிள்ளைகாளின் ஆசீர்வாதம் என்றென்றுமாக நிலைத்து நிற்பவை, அளவிட முடியாதவை.* நமது வாஞ்சை, ஏக்கம், நம் இருதயம் எங்கிருக்கிறது எனபதை நாம் நிதானித்து அறிய வேண்டும்.
[31/10 11:09 pm] Elango: தாவீது சங்கீதம் 17:15 ல் *நானோ* என்று நம்பிக்கையோடு கூறுகிறதை பார்க்கமுடியும். உயிர்த்தெழுதலின் போது, நீதியில் கர்த்தருடைய முகத்தை நேரடியாகத் தரிசிப்போம். தாவீது கூறியுள்ளபடி ஒருநாள் வரும். அன்று கிறிஸ்துவின் சாயலாக நாம் மாறுவோம். அழுகை துக்கம், கண்ணீர், கவலை, சோர்பு, போராட்டம் எல்லாம் முடிவுக்கு வரும். நம் துக்கம் எல்லாம் சந்தோமாக மாற செய்யப்போகிற தேவ கிருபைக்காக தேவாதி தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக! ஆமென்.
[31/10 11:17 pm] Elango: சங்கீதம் 3. *நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்;* என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன். சங்கீதம் 17:3
இந்த வசனத்தை வைத்துக்கொண்டு, தாவீது பாவமே செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
*தாவீதின் பாவத்தை தேவன் மன்னித்தார், அவர் பரிசுத்தமானார்*. இக்கருத்தை நாம் சங்கீதம் 32:5, 51:1-17 ல் வாசிக்கலாம்.
நாமும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறாதா? நாம் தேவனுக்கு பிரியமாக வாழ்ந்து தேவனுக்கு நம் இருதயத்தை புடமிட ஒப்புக்கொடுத்தும் தேவன் ஒன்றும் காணாதிருக்கும் நிச்சய அனுபவத்தை நாம் அனுதினமும் நம்மை நாம் நிதானித்தறிவோமாக!
[31/10 11:27 pm] Elango: *தாவீது பரிசுத்த ஆவியினாலே இந்த பொக்கிஷ வார்த்தையை எழுதுகிறார் - கண்மணியைப் போல் என்னைக் காத்தருளும்.
கண்மணி என்பது உடலின் மிகவும் பாதுகாப்பான அவயவங்களில், மிகவும் பாதுகாப்பான பகுதியாகும். உடலின் மிகவும் மென்மை மிக்க உறுப்பில், மிகவும் மென்மை மிக்க பகுதியும் கூட. சிறந்த திரைச்சீலைகளைப் போன்று இமைக் கதவுகளுக்குப் பின் ஆபத்தில் ஓடி ஒளிக்கும் கண்மணியின் இயல்பு நம்மை வியக்க வைக்கும் தேவ படைப்புச் சிறப்புகளில் ஒன்றாகும்.
தூரத்தில் வரும் நெற்றி வியர்வையை தூரத்திலேயே விலக்க புருவங்கள் கோட்டைகளை போல அமைந்துள்ளது. தூசியையும், கூர்மையான எந்த பொருட்களும் கண்ணை தாக்க வரும்போது, முன்கூட்டியே அதை தடுக்கும் வகையில் செயல்படுகிறது.
மலைகளால் சூழப்பட்டதோர் அழகிய பட்டணம் போலவும், இரும்பு கோட்டைகளுக்குள் வைக்கப்பட்ட புதையலைப் போலவும், எலும்புகளால் அது உறுதியாக பாதுகாக்கப்படுகிறது.
*இத்தகையதொரு பலத்த பாதுகாப்பையும், மேன்மையான பாதுகாப்பையும் தேவனிடமிருந்து தாவீது கேட்டார். நாம் தேவனின் பார்வையில் கண்மணியாக இருப்பது எவ்வளவு மேன்மையான அனுபவம்*

Post a Comment
0 Comments