Type Here to Get Search Results !

சங்கீதம் 15 தியானம்

[27/10 10:15 am] Elango: 🎻🎸 *இன்றைய (27/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 15* 🎻🎸

1⃣ சங்கீதம் 15 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 15 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? சங்கீதம் 15:1

அவருடைய கூடாரம்  எது...❓அவருடைய பரிசுத்த பர்வதம்  எது...❓இதில் நாம் எப்படி ...எப்போது தங்கி வாசம் செய்வது...❓

4⃣ தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 15:5

வட்டி கடையில் சம்பளத்துக்கு வேலை செய்யலாமா...❓ *குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம்* வாங்காமல், மற்ற சூழ்நிலையில் பரிதானம் வாங்கலாமா....❓

5⃣ *ஆகாதவன்* அவன் பார்வைக்குத் *தீழ்ப்பானவன்* , கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான், ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.சங்கீதம் 15:4

ஆகாதவன் யார்..❓
தீழ்ப்பானவன் யார்..❓

6⃣ வட்டி வாங்கக்கூடாது என்று வேதம் சொல்லும்போது, வங்கியில், நாமே சேமிப்பு பணத்திற்க்கு கிடைக்கும் வட்டியை வாங்கலாமா❓FD ( Fixed Deposit)  மூலம் வாங்கியில் நம் பணத்தை சேமித்து அதன் வட்டிப்பணத்தில் நாம் வாழலாமா❓

7⃣ சங்கீதம் 15:3 
*அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.*

இந்த வசனத்திற்க்கு விளக்கம் தாருங்களேன்.

8⃣ சங்கீதம் 15:4 
ஆகாதவன் அவன் பார்வைக்குத் அற்பமானவன்; *கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்;*

*ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்..*

இந்த வசனத்திற்க்கு விளக்கம் தாருங்களேன்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[27/10 11:51 am] Elango: 5⃣ *ஆகாதவன்* அவன் பார்வைக்குத் *தீழ்ப்பானவன்* , கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான், ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.சங்கீதம் 15:4

ஆகாதவன் யார்..❓
தீழ்ப்பானவன் யார்..❓

ஆகாதவன் என்பது *நெறிதவறி,முறை தவறி, நீதியின் வழியை விட்டு நடப்பவன்* ஐ குறிக்கிறது.

தீழ்ப்பானவன் என்பது *இழிவானவன், வெறுப்புக்குரியவன்* என்பது பொருள்.

4 *நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;* ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 15:4

[27/10 7:47 pm] Elango: 1⃣ சங்கீதம் 15 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

*சங்கீதம் 15 எழுதியவர் - தாவீது.*

*நோக்கம்* - யார் தங்குவான்? யார் வாசம் பண்ணுவான்? என்ற கேள்வியோடு, தேவ மனிதர்களின் குணங்களையும் சங்கீதக்காரன் விவரிக்கிறார்.

இந்த சங்கீதமானது தேவனோடு யார் வாழ முடியும், அவருடைய சமூகத்தை யார் நெருங்க முடியும், யார் அவருடைய அய்க்கியம் அனுபவிக்க முடியும்? என்பதை தெளிவுப்படுத்துகிறது.

அநீதி, வஞ்சகம், அவதூறு, மற்றும் தன்னலம் ஆகியவற்றை நம் வாழ்விலிருந்து ஆராய்ந்து பார்த்து, தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை விட்டுவிட்டு அவருக்கு பிரியமானதை செய்தால் நாமும் தேவனோடு வாசம் செய்யலாம், அவரோடு சஞ்சரிக்கலாம்.

*இப்படியாக அனுதினமும் நமது நடக்கைகளை சோதித்து, நமது பாவத்தை அறிக்கைச் செய்து, அவற்றினின்று விலகி, கிறிஸ்துவால் அங்கிகரிக்கப்பட்டவர்களாக கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நம்மைத் தாமே ஒப்புக் கொடுக்கும்படி தொடர்ந்து நாட வேண்டும். 2 தீமொத்தேயு 2:15*

தேவனோடுள்ள தொடர்பை இழந்துவிட்டால் நாம் எல்லாவற்றாய்யும் இழப்பதற்குச் சமம் என்பதை உணர வேண்டும். 1 யோவான் 1:6-7,    2:3-6, 3:21-24

[27/10 7:49 pm] Elango: 15. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் *உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு* 2 Tim. 2:15

[27/10 7:50 pm] Elango: 6. *நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்* 1 Yovan 1:6

[27/10 7:50 pm] Elango: 7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.1 John 1:7

[27/10 7:51 pm] Elango: 3. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

4. *அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை*

5. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
6. அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.1 John 2:3-6

[27/10 7:52 pm] Elango: 21. பிரியமானவர்களே, *நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால்,*📌📌📌📌💔💔💔💔💔💔💔💔⚠⚠⚠⚠ நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,

22. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.1 John 3:21-22

[27/10 7:57 pm] Elango: தீத்து 1:16
[16]அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

*நம்முடைய அறிக்கையிடும் விசுவாச வார்த்தையும், நம் நடக்கையும் ஒன்றுக்கொன்று ஒத்திருக்க வேண்டும்.*✅✅✅✅

[27/10 8:31 pm] Elango: 2⃣ சங்கீதம் 15 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

*இங்கே தாவீது இரண்டு கேள்வியை எழுப்பிய பிறகு, பதிலையும் கூறுகிறார். இந்த கேள்விக்கு முழுமை பதிலாக வாழ்ந்தவர் நம் ஆண்டவர் ஒருவர் மட்டுமே*

மாற்றமில்லா சுத்தச் சொற்களையும், நேர்மையான அன்பையும், மாசற்றா சிந்தையையும் இதயத்தின் உருக்கமாக உருகி வழியும் தண்ணீரையும் தாங்கி, வானுக்கும் பூமிக்கும் இடைவெளி தூரம் போன்று அக்கிரம மனிதரிடையே வாழ்ந்து காட்டிய தேவ குமாரனே இக்கேள்விக்கு சரியான பதிலை தன் வாழ்க்கையில் வாழ்ந்து நிருபித்தார்.

*அவரது அடிச்சுவடுகளை தொடரும்படி அழைக்கப்பட்ட பரிசுத்தவாங்களான நமக்கு இது அறைகூவல்.*

*உத்தம நடக்கை* - உத்தம் நடக்கைக்கு ஆளற்ற உலகில் விசுவாசியின் நடக்கை, இருளில் தீபமென ஒளிரவேண்டும்.

* நீதியின் செய்கை* - நீதி கெட்ட உலகில் நீதியுள்ளா செயல்களில் உறைவிடமாக விசுவாசி விளங்க வேண்டும்.

*மனதார சத்தியப் பேச்சு* - பொய்யின்றி வாழ முடியாத உலகில் ஓர் அறைகூவலாக விசுவாசி வாழ வேண்டும்.

*புறங்கூறாத நாவு* - எவருடைய முதுக்குப் பின்னும் நமது நாவு செயலாற்றக் கூச வேண்டும்.

*அயலானுக்கு நன்மை* - பிறருக்குத் தீமை செய்ய நமது வாழ்வு துணியக் கூடாது.

*தீய பேச்சுக்கு விடை* - நம்மை நம்புவோருக்கு உண்மையாக விளங்கவும், துன்புறுத்தப்படுவோருக்கு உறுதுண்யாக விளங்கவும் வேண்டுமே தவிர நிந்தை பேச்சுக்கு பக்கதாளம் போடக்கூடாது.

*தேவ பயமுடையோருக்குக் கனம்* - தேவ பக்தியுடைய நற்செய்கைக்காரரை மதிக்க வேண்டும்.

*ஆகாதவருக்கு விலக்கு* - ஆகாத வாழ்வை உடையவரை அகற்றி நிறுத்த வேண்டும்.

*ஆணையில் உண்மை* - சொத்தில் இழப்பு ஏற்பட்டாலும் சொல்லில் இழப்பு ஏற்பட அனுமதிக்கூடாது.

*செல்வத்தில் உத்தமம்* - நமக்கு கொடுக்க்ப்பட்ட பணம் உதவுவதற்க்காகவே தவிர, பிறரை உறிஞ்சிப் பெருக்க அல்ல.

*பொறுப்பில் உத்தமம்* - லஞ்சம் வாங்கி அந்தி செய்யக்கூடது.

[27/10 8:45 pm] Elango: 4⃣ தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 15:5

வட்டி கடையில் சம்பளத்துக்கு வேலை செய்யலாமா...❓ குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமல், மற்ற சூழ்நிலையில் பரிதானம் வாங்கலாமா....❓

*வட்டி👈 வாங்கக்கூடாது என்பது கர்த்தரின் கட்டளை. யாத்திராகம் 22;25, லேவியராகம் 25:35-37.*

மிகவும் உயர்வாக வட்டி வாங்குஅதையும், அதிக ஆதாயம் தேடுவதையும் கர்த்தர் வெறுக்கிறார். நீதிமொழிகாள் 28:8 .

வங்கியில் பணம் சேர்த்தால் வட்டி உண்டு. இதை வாங்குவது தவறு என்று வேதம் கூறவில்லை. மத்தேயு 25:27, லூக்கா 19:23.  மேலும் அன்றன்றுள்ள ஆகாரத்தைத் தாரும் என்று கேட்க வேண்டிய நாம் கடன்வாங்குவது நமது தகுதிக்கு மிஞ்சியதா, கடன் வாங்கியவன் கடன் கொடுத்தனுக்கு அடிமை என்று வேதம் சொல்லுவதை நாம் நிதானித்து, அன்பை தவிர பிறருக்கு வேறு எதிலும் நாம் கடன் பட வேண்டாம் என்று வேதம் நமக்கு போதிக்கிறது.

[27/10 9:07 pm] Elango: 4⃣ தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 15:5

வட்டி கடையில் சம்பளத்துக்கு வேலை செய்யலாமா...❓

*பொதுவாகவே பெரும்பாலும் உலகபிரகாரமான 90 சதவீதம் தொழில்களில் ஏமாற்றுத்தனம் இருக்கவே செய்கிறது*

*அதற்க்காக நாம் மதுகடையில், சிகரெட் கம்பனியில், டான்ஸ் பாரில், வட்டிக்கடையில் வேலைப்பார்ப்பது என்று கிறிஸ்தவர்களுக்கு தகுதியாயிராது என்பது எனது கருத்து.*

*எனக்கு தெரிந்த ஒரு சகோதரி சிகரெட் கம்பனியிலும், இன்னோரு சகோதரன் டாஸ்மாக்கிலும் வேலை பார்த்து வருகின்றனர்*

வட்டிக்கடையில் வேலைப் பார்க்க கூடாதென்றால் வட்டி கொடுக்கும், வட்டி வாங்கும் பேங்கில்  வேலை பார்க்கலாமா என்ற கேள்வியையும் கேட்பீர்கள். நம்முடைய ஜீவியத்திற்க்கும், பிறருடைய விசுவாசத்திற்க்கு இடறலடையாத படிக்கு நம்முடைய வாழ்க்கை இருக்க வேண்டும்.
 குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமல், மற்ற சூழ்நிலையில் பரிதானம் வாங்கலாமா....❓

[27/10 9:07 pm] Elango: 1 கொரிந்தியர் 5:9-11
[9]விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

[10] *ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே*🤔🤔🤔🤔🤔

[11]நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

[27/10 9:10 pm] Elango: குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமல், *மற்ற சூழ்நிலையில் பரிதானம் வாங்கலாமா....❓*

*தானாக முன் வந்து பரிதானம், லஞ்சம், வரதட்சணை  வாங்குவதும் தவறு, பரிதானம், லஞ்சம், வரதட்சணை கொடுப்பதும் தவறு.*

யாத்திராகமம் 23:8
[8] *பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.*⚠⚠⚠⚠⚠❌❌❌❌

[27/10 9:12 pm] Elango: உபாகமம் 16:19
[19] *நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம்பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.*👈⚠⚠⚠

[27/10 9:15 pm] Elango: 1 சாமுவேல் 8:3
[3]ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

ஏசாயா 5:20,23
[20] *தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி,* இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!

[23] *பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!*💔💔💔📌📌📌⚠⚠⚠⚠

[27/10 9:19 pm] Elango: *சிலர் கேட்பார்கள், லஞ்சம் பரிதானம் கொடுக்கக்கூடாது என்றால், சர்ச் கட்ட பெர்மிஷன் வாங்க கவர்மென்ட் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் கொடுப்பது சரியா என்று?🤔🤔*

இதற்கு ஊழியர்களே பதில் தருவார்கள்.

[27/10 9:35 pm] Elango: *ஒரு சபையில் நடந்த சம்பவம்... இதை லஞ்சம் என்று சொல்லலாமா என்று நீங்கள் நிதானியுங்கள்..👇🏻👇🏻*

கிறிஸ்தவ ஆராதனை அன்று பெண்கள் நகை, நட்டு அதிகமாக போட்டு வருவது. பெரும்பாலும் கிறிஸ்தவ ஆரானை இரவு நேரம் நடப்பதால் செயின் பறிப்பு களவு நடக்கக்கூடாதென்று அதற்க்காக பாதுகாப்பிற்க்கென்று போலீஸ் சபைக்கு வெளியே பாதுகாப்பிற்க்காக நிற்ப்பதுண்டு வருடாவருடம்.

ஆரானை முடிந்ததும் கேக்கை கொண்டு போலீஸ்காரர்களிடம் கொடுப்பதுண்டு.

இதில் சில மூப்பர்கள் ஓடிச்சென்று போதகரிடம் சென்று... ஐயா இவ்வளவு நேரம் நமக்காக போலீஸ்காரங்க காவலுக்கு நின்றாங்களே அவங்களுக்கு ஒரு 200 300 ரூபா கொடுக்கனும் கொடுங்க என்பார்கள்.

யாராவது அவர்களை எதிர்த்து இது அவர்களுடைய கடமை தானே அவர்களுக்கு பணம் கொடுக்க அவசியமில்லை என்று சொன்னால் ... நீ உலகம் தெரியாத ஆளா இருக்கிறீயே என்பதுண்டு.

இப்படி பாதுகாவலுக்கு நிற்கும் போலீஸீற்க்கு கொடுப்பது லஞ்சமா அல்லது மனப்பூர்வமான சந்தோஷத்தில் அன்பாக கொடுப்பதா? இதை எப்படி எடுப்பது?

இது வருடா வருடம் நடக்கும் சம்பவம்.

[27/10 9:38 pm] Elango: *சங்கீதம் 15 க்கு ஒத்த இன்னோரு சங்கீத வசனங்கள்*👇🏻👇🏻👇🏻

சங்கீதம் 24:3-6
[3]யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்❓🤔 யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்❓🤔

[4] *கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.*✅✅✅✅

[5]அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

[6] *இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா).*

[27/10 9:40 pm] Elango: சகரியா 8:16-17
[16]நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: *அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.*

[17] *ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.*

யார் பரிசுத்த பர்வதத்தில் ஏறுவான்?👆🏻👆🏻

[27/10 9:42 pm] Elango: யாத்திராகமம் 23:1-2
[1]அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; *கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.*

[2] *தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.*

[27/10 9:48 pm] Elango: இந்த வசனங்களும் சங்கீதம் 15 க்கு இணையான வசனங்களே👇🏻👇🏻

ஏசாயா 33:15-16
[15]

✅நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி,

✅இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து,

✅ பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி,

✅ இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து,

✅ பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

[16] *அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.*

[27/10 9:50 pm] Elango: *எளியான நடையில் சங்கீதம் 15*👇🏻

1 ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 15:1
2 மாசற்றவராய் நடப்போரே! -இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுபவர்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 15:2
3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 15:3
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 15:4
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; -இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 15:5

[27/10 9:55 pm] Elango: *எளியான நடையில் சங்கீதம் 15*👇🏻👇🏻

தாவீதின் பாடல்
கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?   சங்கீதம்  15.1

தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும். சங்கீதம்  15.2

அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.   சங்கீதம்  15.3

தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.   சங்கீதம்  15.4

*அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.*
*குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.*
*அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.* சங்கீதம்  15.5

[27/10 9:56 pm] Elango: நீங்களே சொல்லுங்க அது லஞ்சமா அல்லது *அன்பான உபசரிப்பா*

[27/10 9:58 pm] Devakirubai Alexander VTT New: Bribe with love

[27/10 9:59 pm] Elango: Love of world?

[27/10 9:59 pm] Devakirubai Alexander VTT New: Yes

[27/10 10:09 pm] Elango: சங்கீதம் 15 ஐ சுட்டிக்காட்டி சிலர் கேட்கலாம், இப்படிப்பட்ட நற்கிரியைகள் கொண்டர்வர்கள் தானே  தேவ சமூகத்தை நெருங்க முடியும், தேவ சமூகத்தில் வாழ முடியும் ஆகையால் *இரட்சிப்பு என்பது கிரியையின் அடிப்படை தான் என்று வாதிடுவதுண்டு.*

வேதம் தெளிவாக சொல்லுகிறது - இரட்சிப்பு என்பது கிருபையினால் கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் கிடைப்பது.

எபேசியர் 2:8-9
[8] *கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்;* இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

[9]ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

ஆகவே ஒருவர் தான் இரட்சிக்கப்பட்டதை விசுவாசத்தின் கிரியைகள் மூலம் வெளிக்காட்ட வேண்டும்.

[27/10 10:12 pm] Elango: 🎻🎸 *இன்றைய (27/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 15* 🎻🎸

1⃣ சங்கீதம் 15 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 15 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? சங்கீதம் 15:1

அவருடைய கூடாரம்  எது...❓அவருடைய பரிசுத்த பர்வதம்  எது...❓இதில் நாம் எப்படி ...எப்போது தங்கி வாசம் செய்வது...❓

4⃣ தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 15:5

வட்டி கடையில் சம்பளத்துக்கு வேலை செய்யலாமா...❓ *குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம்* வாங்காமல், மற்ற சூழ்நிலையில் பரிதானம் வாங்கலாமா....❓

5⃣ *ஆகாதவன்* அவன் பார்வைக்குத் *தீழ்ப்பானவன்* , கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான், ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.சங்கீதம் 15:4

ஆகாதவன் யார்..❓
தீழ்ப்பானவன் யார்..❓

6⃣ வட்டி வாங்கக்கூடாது என்று வேதம் சொல்லும்போது, வங்கியில், நாமே சேமிப்பு பணத்திற்க்கு கிடைக்கும் வட்டியை வாங்கலாமா❓FD ( Fixed Deposit)  மூலம் வாங்கியில் நம் பணத்தை சேமித்து அதன் வட்டிப்பணத்தில் நாம் வாழலாமா❓

7⃣ சங்கீதம் 15:3
*அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.*

இந்த வசனத்திற்க்கு விளக்கம் தாருங்களேன்.

8⃣ சங்கீதம் 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் அற்பமானவன்; *கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்;*

*ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்..*

இந்த வசனத்திற்க்கு விளக்கம் தாருங்களேன்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[27/10 10:23 pm] Elango: சங்கீதம் 15 ல் தாவீது வரிசைப்படுத்திய குண லன்களை ஒருவர் அனுதினமும் நம் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டுமானால், அவர் சுயத்தினால், சுய பெலத்தினால் இப்படிப்பட்ட குணநலன்களை பெற முடியாது.

*பரிசுத்த ஆவியில் நடத்தப்படுகிறவர்கள், தன் சரிரத்தை தேவனுக்கு பிரியமான சுகந்த பலியாக ஒப்புக்கொடுப்பவர்கள் மட்டுமே தாவீது வரிசைப்படுத்தும் குண நலன்களை கொண்டிருக்க முடியும்.*
ரோமர் 8:8,14
[8] *மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.*😩😩😩😩😩😩😖😖😖😖

[14]மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.❤❤❤❤❤

[27/10 10:23 pm] Elango: ரோமர் 12:1-2
[1]அப்படியிருக்க, சகோதரரே, *நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,* தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

[2]நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[27/10 10:28 pm] Elango: 3⃣ கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? சங்கீதம் 15:1

அவருடைய கூடாரம்  எது...❓

அவருடைய பரிசுத்த பர்வதம்  எது...❓

இதில் நாம் எப்படி ...எப்போது தங்கி வாசம் செய்வது...❓

👇🏻👇🏻👇🏻

[27/10 10:37 pm] Elango: தாவீது இங்கே சொல்லும் கூடாரம், பர்வதம் என்பது தேவன் வாசம் செய்யும், இஸ்ரவேலரை சந்திக்கும் இடமாகிய  ஆசரிப்புக்கூடாரத்தையும், சீயோன் பர்வத்தையும் மனதில் வைத்து எழுதுகிறார்.

யாத்திராகமம் 25:8-9
[8] *அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.*
[9]நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.

யாத்திராகமம் 29:42-43
[42]உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.

[43] *அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்;* அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.

சிலர் இங்கே பர்வதம் என்பதை தேவன் வாசம் செய்யும் பரலோகத்தையும் குறிக்கிறது என்பர்.

[27/10 10:48 pm] Elango: *பரிசுத்த பர்வதம்*

*எருசலேமின் மலைகளில் ஒன்றான மோரியா மலை உச்சியில் தாவீது  ஒரு கூடாரத்தை எழுப்பினார்*

2 சாமுவேல் 24:18,25
[18]அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: *நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.*

[25] *அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,* சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

 2 சாமுவேல் 24:15 ,1 நாளாகமம் 21:15

 சாலொமோன் பின்னர் அதே இடத்தில் கர்த்தருக்கு  தேவாலயத்தை (2 நாளாகமம் 3: 1) கட்டினார்..

[27/10 10:53 pm] Elango: *ஆசரிப்புக்கூடாரமும், சீயோன் மலையும் தாவீதின் மனதில் இருந்தது. தேவன் மனிதனோடு உறவாடும் இடம் அது.*

புதிய ஏற்ப்பாட்டில் பரிசுத்த பர்வதம் என்பது கிறிஸ்துவின் அவயவங்களான நம்மையே குறிக்கும்.

1 கொரிந்தியர் 3:16-17
[16] *நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?*

[17]ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

[27/10 11:00 pm] Kalaiyarasan VTT: யாத்திராகமம் 29:42-43 ம் வசனத்தின்படி( சங்15:1கூடாரம் என்பது)ஆசரிப்பு கூடாரத்தையும்,பர்வதம் என்பது, ஆசரிப்பு கூடாரம் அமைக்கப்படுகின்ற மலையையும் குறிக்கிறது.(இந்த மலைதான் என்று குறிப்பிடமுடியவில்லை.எகா;சீனாய்மலை,மோரியாமலை,எருசலேம் மலை)

[27/10 11:00 pm] Elango: சங்கீதம் 65:4
[4] *உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.*

[27/10 11:02 pm] Elango: சங்கீதம் 84:1-2,4,10
[1]சேனைகளின் கர்த்தாவே, *உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!*

[2]என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

[4] *உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா).*

[10] *ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;*

ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் *என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.*

Post a Comment

0 Comments