Type Here to Get Search Results !

சங்கீதம் 13 தியானம்

[25/10 10:31 am] Elango: 🎻🎸 *இன்றைய (25/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 13* 🎻🎸

1⃣ சங்கீதம் 13 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 13 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும், நான் *மரணநித்திரை* அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.சங்கீதம் 13:3

மரணநித்திரை இதன் அர்த்தம் என்ன...❓ *மரணமும் நித்திரையும் ஒன்றா..❓*

4⃣ நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.சங்கீதம் 13 :5

*இரட்சிப்பு என்றால் என்ன❓*

5⃣ என் *இருதயத்திலே* சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் *ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணி* க்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்? 
சங்கீதம் 13:2

 இருதயத்திற்கும்
 ஆத்துமாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..❓இருதயத்திலே ஆலோசனைபண்ண முடியாதா...❓

6⃣ கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங்கீதம் 13:6

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

7⃣ அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். சங்கீதம் 13:4

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

8⃣ சங்கீதம் 13:1-2
[1]கர்த்தாவே, *எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?*
[2]என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? *எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?*

இங்கே *எதுவரைக்கும்*  என்ற கேள்விக்கு தேவனுடைய பதில் என்னவாக இருக்கும்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[25/10 11:31 am] Elango: *பாவத்தினால் தான் தேவனுடைய முகம் மறைக்கப்படுகிறது👌👍*

[25/10 11:37 am] Elango: ஏசாயா 1:15-17
[15] *நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.*‼‼‼

[16]உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.

[17]நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

*நம்முடைய ஜெபம் தேவனிடம் சேர தடையாக இருப்பது நம்முடைய பாவமே*

[25/10 11:45 am] Elango: சங்கீதம் 38:3-9,15,18
[3]உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
[4]என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
[5]என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
[6]நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
[7]என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
[8]நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
[9]ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
[15]கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.
[18]என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.

*பாவத்தின் விளைவுகள் பயங்கரமானது*

இரட்சிப்புக்குள் வந்த பிறகு, பாவம் செய்ததால் தேவ பிரசன்னத்தை இழந்தவர்கள் படும் பாடு இருக்கிறதே அப்பாப்பா சொல்ல முடியாது.😖😣😣😣😩😫😫😫

அந்த பிரசன்னம் மீண்டும் கிடைக்கும் வரை நாம் தேவ பாதத்தை விடக்கூடாது. மனந்திரும்பி அவர் பாதத்தில் அமர்ந்தால் நிச்சயம் அவருடைய ஆவியால் நிரப்பப்படுவோம்.

[25/10 11:46 am] Levi Bensam Pastor VDM: 2 கொரிந்தியர் 5:21
[21]நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, *பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.*🙏🙏🙏🙏🙏🙏

[25/10 11:48 am] Elango: புலம்பல் 3:25-26
[25]தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

[26] *கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது*✅✅✅✅✅.

[25/10 11:49 am] Levi Bensam Pastor VDM: *ஆமென், நமக்கு கடைசி மூச்சு நமக்கு இருக்கும் வரை, தேவன் தம்முடைய இரக்கத்தை நமக்கு தருவார்*👍👍👍👍🙏

[25/10 11:50 am] Elango: புலம்பல் 3:30-33,39-41
[30]தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

[31]ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.🤝🤝🤝🤝🤝🤝❤❤❤❤❤

[32]அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

[33]அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.❤❤💚💚💚💙💛❤❤💜💜💗💓💕💕

[39] *உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன*?❓❓❓❓❓❓🤔🤔🙄🙄🙄🙄

[40]நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.↩↩⤴⤴↪↪↪

[41] *நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.*😭😭😭😭👏👏👏👏👏👏

[25/10 11:56 am] Levi Bensam Pastor VDM: சங்கீதம் 51:8-13
[8]நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
[9] *என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 , என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
[10]தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
[11]உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
[12]உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
[13]அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.

[25/10 11:56 am] Jeyarani VTT: ஏதேன் தோட்டத்தில் ஆதம் பாவம் செய்த போது தேவனின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. பாவம் நம்மில் இருக்கும் வரை தேவனின் முகம் நமக்கு மறைவாக இருக்கும் அப்படித்தானே ஐயா

[25/10 11:57 am] Levi Bensam Pastor VDM: *ஒளிந்து கொண்டான்*

[25/10 12:01 pm] Elango: *இரட்சிக்கப்பட்ட ஒருவர் , தேவ அன்பை ருசித்தவர்  மாம்சத்துக்குரிய நடக்கையில் ஈடுபட்டு தேவ அன்பை விட்டு தூரமாக ஓடும்போது அவர் மாம்சீகம் CARNALITY ஜென்ம சுபாவத்தில் என்ற நிலையை அடைகிறார்.*

😩விசுவாசி இரட்சிப்படைந்த பின்னர் பழைய பாவ சுபாவத்தை பெற்று இருத்தல்  1யோவான் 1:8, ரோமர் 7:14,15

😩பழைய பாவ சுபாவம் மிகவும் கொடூரமானதாய் இருக்கிறது எரேமியா 17:9

😩விசுவாசி பழைய பாவ சுபாவத்தின் ஆதிக்கத்தில் இருப்பாரானால் அவர் மாம்சீகத்துக்குரிய குழந்தை என அழைக்கப்படுகிறார். 1கொரி. 3:1-3, ரோமர் 7:14

😩பழைய பாவ சுபாவம் ஒரு விசுவாசி விரும்பும் ஆவிக்குரிய செயல்களை தடைசெய்து, தான் விரும்பும் பாவங்களை செய்யத் தூண்டுகிறதாய் இருக்கிறது  ரோமர் 7:15

😩பழைய பாவ சுபாவத்தைக் குறித்த உணர்வு மாம்சீகப் பிறப்பின் போதிலிருந்து அவசியப்படுகிறதாய் இருக்கிறது. சங்கீதம் 51:5

😩 இதினிமித்தம் நமது மாம்சீகப் பிறப்பிலிருந்தே நாம் ஆவிக்குரிய மரணத்திலிருக்கிறோம் எனத் தீர்மானிக்கப்படுகிறது  ரோமர்  5:12

😩பழைய பாவசுபாவம் பலதரப்பட்ட முகங்களைக் கொண்டதாய் இருக்கிறது: இதன் பெலவீனப்பகுதி பாவங்களைப் பிறப்பிக்கிறதாய் இருக்கிறது, இதன் பெலமுள்ள பகுதி மனுஷீக நன்மைகளை பிறப்பிக்கிறதாய் இருக்கிறது. இது துறவரம் அல்லது சிற்றின்பம் இவைகளுக்கு நேராய் வழிநடத்தும் தன்மையுள்ளதாய் இருக்கிறது. அநேக விதங்களில் துறவறம் ஆவிக்குரியது என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

கலாத்தியர் 5:16
[16]பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், *ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.*

[25/10 12:07 pm] Levi Bensam Pastor VDM: *பாவம் செய்யும் போது ஏழு பிசாசு மாத்திரம் அல்ல, அநேக பிசாசுகளும் குடியிருக்க முடியும், முன்னிலை பார்க்கிலும் பின்னிலமை அதிக கேடாக இருக்கும்*

[25/10 12:10 pm] Elango: ✅✅✅
யோவான் 5:14
[14]அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், *அதிக கேடானதொன்றும்* உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

[25/10 12:18 pm] Elango: மீகா 3:3-4
[3]என் ஜனத்தின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.
[4] *அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும்*

*👉👉👉👉👉👉👉👇🏻👇🏻👇🏻👇🏻அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.*

[25/10 12:24 pm] Elango: எசேக்கியேல் 39:23-24,29
[23]இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள்.
[24] *👉👉👉‼‼‼‼👇🏻👇🏻👇🏻அவர்களுடைய அசுத்தத்துக்குத்தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.*‼‼‼👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻

[29]நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் *என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன்* ❤❤❤🤝🤝என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

*நாம் நம் பாவத்தை அறிக்கையிட்டு அவர் வழியில் நடந்தால் நம் ஜெபத்தை கேட்டார். அவர் மூகத்தை மறைக்க மாட்டார்*

[25/10 12:34 pm] Levi Bensam Pastor VDM: யோவான் 9:31
[31] *பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்;*👂👂👂👂👂👂 ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

[25/10 12:40 pm] Elango: உபாகமம் 31:16-18
[16]கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப் போகிறாய்; *இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.*😭😭😭😭😭

[17] *அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு,😡😡😡😡😡*

 *அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்;*

அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

[18]அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் *நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.*

*இவ்வளவு தூரம் ஆண்டவர் தெளிவாக அவர் முகத்தை மறைப்பேன் என்று சொல்லியும் நாம் ஏன் பாவம் செய்கிறோம்*😧

[25/10 12:42 pm] Levi Bensam Pastor VDM: *நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்*👌👌👌👌🙏

[25/10 12:47 pm] Peter David Ayya: இது இன்றைய தியானத்திற்கு சம்பந்தப்பட்ட வசனமா பிரதர்

[25/10 1:07 pm] Elango: நாம் பாவத்தில் விழுந்து, ஆண்டவர் நமக்கு அவர் முகத்தை மறைப்பது என்பது மிகவும் பரிதாபமான சூழ்நிலை, இந்த சூழ்நிலையை நாம் எல்லோரும் கடந்த வந்திருக்கலாம்.

*என்னுடைய அனுபவத்தை பொறுத்து, நான் பாவம் செய்து ஆண்டவர் எனக்கு அவர் முகத்தை மறைக்கும்போது நிகழும் சம்பவங்கள்.👇🏻👇🏻*

😭 ஆண்டவருடைய பிரசன்னம் இருக்காது.

😭 ஜெபித்தாலும் இருதயம் வெறுமையாக இருக்கும்.

😭எப்போதும் சமாதானமௌ இல்லாமல் இருப்போம்.

😭தவிப்பும் பயமும் இருக்கும்

😭வேதத்தை படித்தாலும் ஆவியானவரின் விளக்கம் கிடைக்காது

😭ஆவியானவரின் அசைவும் நிறைவும் இருக்காது இருதயத்தில்

😭கண்ணீரும் கவலைமையுமே மிஞ்சும்.

*ஒரே ஒரு வசனத்தை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி ஜெபிப்பதுண்டு*👇🏻👇🏻👇🏻

புலம்பல் 3:31-32
[31] *ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.*

[32] *அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.*

[25/10 1:09 pm] Levi Bensam Pastor VDM: 🎻🎸 *இன்றைய (25/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 13* 🎻🎸

1⃣ சங்கீதம் 13 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 13 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும், நான் *மரணநித்திரை* அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.சங்கீதம் 13:3

மரணநித்திரை இதன் அர்த்தம் என்ன...❓ *மரணமும் நித்திரையும் ஒன்றா..❓*

4⃣ நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.சங்கீதம் 13 :5

*இரட்சிப்பு என்றால் என்ன❓*

5⃣ என் *இருதயத்திலே* சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் *ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணி* க்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
சங்கீதம் 13:2

 இருதயத்திற்கும்
 ஆத்துமாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..❓இருதயத்திலே ஆலோசனைபண்ண முடியாதா...❓

6⃣ கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங்கீதம் 13:6

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

7⃣ அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். சங்கீதம் 13:4

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

8⃣ சங்கீதம் 13:1-2
[1]கர்த்தாவே, *எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?*
[2]என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? *எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?*

இங்கே *எதுவரைக்கும்*  என்ற கேள்விக்கு தேவனுடைய பதில் என்னவாக இருக்கும்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[25/10 1:17 pm] Elango: ரோமர் 7:19-20,24
[19]ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
[20]அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், *நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே 👈👈👆🏻👆🏻👆🏻அப்படிச் செய்கிறது.*
[24] *நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?*😭😭😭😩😩😩😩

[25/10 1:25 pm] Tamilmani Ayya VDM: *இரட்சிப்பு*

இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கண்டு அவரை தொழுது கொள்கிறவன்,  விசுவாசமுள்ளவனாக. மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்பவன் ரட்சிக்கப்படுவான். இந்த ரட்சிப்பை முடிவு பரியந்தம் காத்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் வாழும் எல்லோரும் இதை பெறலாம். எல்லோரும் இரட்சிப்பை காண்பார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இரட்சிப்பு பெற்றவன் அதை தான் மாத்திரமே 100 சதவீதம் அறிகிறான். அதை அறியாமல் சிலர் அவர்களை தூற்றி பழையவற்றைப்பேசுவது கோமாளித்தனமாக உள்ளது.

மத்தேயு 1 : 21                  அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.

*இரட்சிப்பின் தேவன் வேறு யாருமில்லை. பாவத்தை மன்னிக்கிறேன் என்று சொல்ல எந்த மனிதனுக்கு அதிகாரமுமில்லை. இதில் சாக்குப்போக்கச்சொல்ல ஏதுமில்லை. பாரம்பரியம் தேவனை அழகாக்காது.*

மத்தேயு 9 : 22            இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

*அந்நேரமே அவள் விசுவாசத்தால் இரட்சிப்பு பெற்றாள்.*

மத்தேயு 10 : 22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

*நீதிமாயினும் இறுதி வரை தேவனின் வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும். நல்ல ராஜா யோசியா இளம் வயதிலே கொல்லப்பட்டார். ஏன்? கீழ்படியாமை!*

மாற்கு 16 : 16. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

லூக்கா 3 : 5.     மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்.

ரோமர் 10 : 9        கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

லூக்கா 19 : 8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

9  இயேசு அவனை நோக்கி: *இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.*

10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

யோவான் 3 : 17  உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

யோவான் 5 : 24.     என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;* அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 10 : 9     நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

*ஆடு தன் கூடாரத்திற்க்கு நுழையும்போது கர்த்தரின் வாசல் வழியே நுழைகிறது. நாமும் அப்படியே. ஆகவே அவரே வாசல். இரட்சிப்பு இல்லாதவனுக்கு வாசல் திறக்காது. ஆத்மாவில் கறையிருக்கும்.*

அப். நடபடிகள் 2 : 21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

     இரட்சிப்பு  பகுதி – 2

அப். நடபடிகள் 2 : 36  ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
38  பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

அப். நடபடிகள் 4 : 12.        அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

அப். நடபடிகள் 13 : 47. நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.

அப். நடபடிகள் 16 : 31 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.

ரோமர் 1 : 16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

ரோமர் 5 : 9              இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

10  நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

13  ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

எபேசியர்  2
8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

1 தெசலோனிக்கேயா; 5 : 9.           
தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

எபிரெயர் 7 : 25       தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிக்கிறார்.

1 தீமோத்தேயு 1 : 15.  பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

1 தீமோத்தேயு 2 : 4   எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

பகுதி – 3

                   இரட்சிப்பு
13 முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.

14  மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

15 அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

யாக்கோபு 5 : 15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.   வெளிப்படுத்தின விசேஷம் 21 :24

யோபு 5 : 10 &15 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.

எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.

சங்கீதம் 3 : 8   இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.

சங்கீதம் 34 : 6. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

புலம்பல் 3 : 26. கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

யோவேல் 2 : 31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

32 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

[25/10 1:31 pm] Tamilmani Ayya VDM: சிலர் நான் ஏன் இரட்சிப்பு பெற வேண்டும்? என கேட்கிறார்கள்.

ஒரே மனுஷனாலே (ஆதாமினாலே) பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. (ரோமர் 5 :12)

இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
(சங்கீதம் 51 :5)

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி விட்டோம்.  (ரோமர் 3: 23)

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 
(ரோமர் 5: 8)

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (ரோமர் 6: 4)

தாவீது பாவஞ்செய்தார். தாவீது போருக்குச்செல்லாமல் வீட்டில் இருக்கும்போது பத்சேபாளை கண்டு பின் வீட்டிற்க்கு கூட்டி வந்தார். அவள் கணவன் நல்ல படை வீரனாய் இருந்தும் வஞ்சகமாக கொலை செய்தார்.  கர்த்தரை மீறி போருக்கு வீரர்களை கணக்கிட்டார்.  இத்துணை பாவங்கள் செய்தும் கர்த்தரிடம் எல்லாவற்றையும்   அறிக்கையிட்டு  ஒப்புவித்து  மனங்கசந்தார்.

சங்கீதம் 51 ல்
நீர் என்னை *ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
(சங்கீதம் 51: 7)
கர்த்தர் இதனாலேயே மனம் மாறி மன்னித்தார். கர்த்தருக்கு பிரியமானவராக இருந்தார்.

★ஈசோப்பு என்பது ஒரு "பரிசுத்த மூலிகைச் செடி" ஆகும். இதன் மூலிகைக் குணம் சரீரத்தின் வெளிப்படையான, உள்ளான காயங்களை ஆற்றி குணப்படுத்துவது.

மேலும் இயேசு கிறிஸ்து மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார்.

யோவான் 3: 3, 5 - 6
இயேசு : ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
(2 பேதுரு 3: 18)

நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
(வெளி. விசேஷம் 2: 10)

[25/10 1:36 pm] Stella Joseph VTT: Absolutely right Brother

[25/10 1:56 pm] Jeyarani VTT: 100% correct bro

[25/10 1:58 pm] Zechariah 2 VTT: பரிசுத்த ஆவியை குறித்து சொல்லுங்கள் சகாதரோர்களோ

[25/10 2:02 pm] Jeyarani VTT: When our mind is idle we have chance to fall sin. Bcz Satan occupy. So we fill it Bible verse and praise. If David went to battle he couldn't do that sin. Bcz of his idleness he did.

[25/10 2:48 pm] Zechariah 2 VTT: பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?

பதில்: பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர். வேறு சிலரோ பரிசுத்த ஆவி கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்காக தேவனால் அளிக்கப்படும் ஆள்தத்துவம் இல்லாத சக்தி என்று நினைக்கின்றனர். பரிசுத்த ஆவியானவரைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது? சுருக்கமாகக் கூறினால், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்று வேதாகமம் பறைசாற்றுகின்றது. மேலும், பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத் தன்மை உடையவர்; சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் அனைத்தும் உடைய ஒரு நபர் என்றும் வேதாகமம் கூறுகிறது.

பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பது வேதாகமத்தின் பல இடங்களில் தெளிவாகக் காணப் படுகிறது உதாரணமாக, அப்போஸ்தலர் 5: 3-4. இந்த வசனங்களில் பேதுரு அனனியாவிடம் அவன் ஏன் பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் கூறினான் என்று, அவன் “மனிதனிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னான்” என்றும் கண்டிக்கிறான். இது பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் கூறுவது என்பது தேவனிடத்தில் பொய் கூறுவதாகும் என்பதைக் காட்டுகின்றது. மேலும், தேவனுக்குரிய குணாதியங்களை உடையவராயிருப்பதாலும் பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, அவர் சர்வவியாபிகர் என்பதை சங்கீதம் 139: 7-8 ல் அறியலாம். “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.” மேலும், 1 கொரிந்தியர் 2: 10-11 வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பதையும் நாம் அறியலாம், “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்துருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.”

மேலும், பரிசுத்த ஆவியானவர் சிந்தை, உணர்வுகள் மற்றும் சித்தம் உடையவராயிருப்பதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நாம் அறியலாம். பரிசுத்த ஆவியானவர் சிந்திக்கிறவர் மற்றும் அறிகிறவர் (1 கொரிந்தியர் 2: 10). பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தமுடியும் (எபேசியர் 4:30). ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26-27). அவர் தமது சித்தத்தின் படி தீர்மானிக்கிறார் (1 கொரிந்தியர் 12:7-11). பரிசுத்த ஆவியானவர் தேவன், திரித்துவத்தில் மூன்றாம் நபர். இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்ததுபோல் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே தேற்றரவாளனாகவும், போதிக்கிறவராகவும் செயல்படமுடியும். (யோவான் 14: 16,26; 15:26)

[25/10 3:06 pm] Premraj 2 VTT: Please teach us clearly about Holy spiriter

[25/10 3:33 pm] Elango: 🎻🎸 *இன்றைய (25/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 13* 🎻🎸

1⃣ சங்கீதம் 13 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 13 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும், நான் *மரணநித்திரை* அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.சங்கீதம் 13:3

மரணநித்திரை இதன் அர்த்தம் என்ன...❓ *மரணமும் நித்திரையும் ஒன்றா..❓*

4⃣ நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.சங்கீதம் 13 :5

*இரட்சிப்பு என்றால் என்ன❓*

5⃣ என் *இருதயத்திலே* சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் *ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணி* க்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
சங்கீதம் 13:2

 இருதயத்திற்கும்
 ஆத்துமாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..❓இருதயத்திலே ஆலோசனைபண்ண முடியாதா...❓

6⃣ கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங்கீதம் 13:6

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

7⃣ அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். சங்கீதம் 13:4

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

8⃣ சங்கீதம் 13:1-2
[1]கர்த்தாவே, *எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?*
[2]என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? *எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?*

இங்கே *எதுவரைக்கும்*  என்ற கேள்விக்கு தேவனுடைய பதில் என்னவாக இருக்கும்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[25/10 4:06 pm] Kamal VTT: இரசிப்பு என்றால் என்ன?

[25/10 4:15 pm] Elango: 4⃣ நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.சங்கீதம் 13 :5

*இரட்சிப்பு என்றால் என்ன❓*

*மனுக்குலத்தில் உள்ள ஒவ்வொருக்கும் இரட்சிப்பு என்பது கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது.*

*இரட்சிப்பு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், தேவனின் அண்டசராசரத்தில் அனைவராலும் எடுத்துக்கொள்ளப் படக்கூடியதாயும் இருக்கிறது. பாவிகளின் இரட்சிப்பு என்பது தேவன் பாவத்தை கண்டும், காணாமல் கடந்து செல்லும் காரியமாகாது. தேவன் பாவிகளை முற்றிலும் நீதியின் அடிப்படையில், தனது தெய்வீக பரிசுத்த குணாதிசயத்தின் அடிப்படையில், இரட்சிக்கிறவராய் இருக்கிறார். இது கிருபை என அழைக்கப்படுகிறது. இது தேவனை மட்டும் சார்ந்ததாய் இருக்கிறது, இதற்கென மனிதன் எவ்வித கிரியையும் நடப்பிக்க அவசியமில்லை. அளவிட முடியாத இவ்வண்ட சராசரத்தின் சிருஷ்டிப்பானது, தேவன் பாவிகளை இரட்சிக்கும் திட்டத்தை விட,  மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.*✝✝✝✝✝✝

எப்படியிருப்பினும், தேவனுடைய இரட்சிப்பை ஒரு பாவி ஏற்றுக்கொள்வது என்பது வாழ்வில் மிக எளிதான ஒன்றாய் இருக்கிறது. ஒருவர் ஐசுவரியவானாய் இருத்தல் அவசியமற்றது, ஞானமுள்ளவராகவோ, மற்றும் படிப்பறிவுள்ளவராகவோ இருத்தல் அவசியமற்றது. வயதோ அல்லது தோலின் நிறமோ இதற்கு எவ்விதமான தடையையும் கொண்டுவருவது இல்லை. தேவனுடைய மீட்பில் இருக்கும் எண்ணிமுடியாத நன்மைகளானது, மிக எளிதாய் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் இருக்கிறது, இப்பரந்த அண்டசராசரத்தில் ஒருவரும் இதை அடைந்து கொள்வதற்கு விதிவிலக்கின்றி காணப்படுகின்றனர்.

[25/10 4:20 pm] Elango: *நான் இரட்சிப்பை பெறுவது எவ்வாறு?*

ஒரு எளிய படி எடுத்து வைப்பதை மூன்று பிரிவுகளாய் பிரிக்கலாம்.

1⃣ *முதலாவது, நான் ஒரு பாவியாய் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.* (ரோமர் 3:23; 6:23;  எசேக்கியேல் 18:4; யோவான் 5:24).

2⃣இரண்டாவதாக, பூரணமாய் இருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவனுடன் உறவுகொள்ளும் விருப்பத்தை உணருதல் வேண்டும், மற்றும் அவ்வாறு உறவுகொள்ள நான் பூரணமற்றவனாய் இருக்கிறேன் என்பதை உணருதல் வேண்டும், நான் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே ஒரே இரட்சகர் என்று கண்டுகொள்ள அவசியமாய் இருக்கிறது.  (1 கொரி. 15:3; 1 பேதுரு 2:24;  ஏசாயா 53:6; யோவான். 3:16).

3⃣மூன்றாவதாக, எனது சொந்த சுயசித்தத்தை பயன்படுத்தி கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை எனது இரட்சகராய் ஏற்றுக்கொண்டுள்ளேன் மற்றும் அவரை தனிப்பட்ட விதத்தில் அவர் எனக்காய் மரித்தார் என்று விசுவாசித்து, எனது தனிப்பட்ட வாழ்வின் வழியாகவும், அவரைத் தனிப்பட்ட ஒரு நபராகவும் ஏற்றுக்கொள்ளுதல் அவசியமான ஒன்றாய் இருக்கிறது.  (யோவான் 1:12; 3:36; அப். 16:31; 4:12).

[25/10 4:27 pm] Elango: *இரட்சிப்பின் பாக்கியங்கள்*✝✝👇🏻

இதன் பாக்கியங்கள் என்பது நம்புவதற்கரிய அற்புதமாய் இருக்கிறது:👇🏻👇🏻👇🏻

✝எனது பாவங்கள் அகற்றப்பட்டுவிட்டன. (யோவான் 1:29),

✝நான் தற்பொழுது நித்திய ஜீவனை அடைந்து இருக்கிறேன் (1 யோவான் 5:11,12),

✝நான் கிறிஸ்துவுக்குள் புது ஜீவியாய் மாறி இருக்கிறேன் (2 கொரி. 5:17),

✝பரிசுத்த ஆவியானவர் எனது வாழ்வை தமது வாசஸ்தலமாய் எடுத்துக் கொண்டுள்ளார் (1 கொரி. 6:19),

✝நான் ஒருபோதும் அழிந்து போவதில்லை (யோவான் 10:28-30).

இவ்வுண்மைகள் வாழ்வின் மிகப்பெரிய பரிமாற்றங்களாய் இருக்கின்றன. இதுவே எல்லா மக்களின் இலக்காய் இருக்கிறது; இதுவே நாம் இங்கிருப்பதற்கு மேலான நோக்கமாய் இருக்கிறது.

*கிறிஸ்தவராகதவர்களை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை பின்பற்றச் செய்யும் இவ்வெளிய போதனைகளால் உற்சாகப்படுத்தி, தேவனுடைய பரிசுத்த குடும்பத்தில் மறுபடி பிறந்த்து நித்திய வாழ்வையடைய உற்சாகப்படுத்துங்கள். (மத். 11:28; யோவான் 1:12; அப். 4:12; 16:31).*

[25/10 5:01 pm] Elango: 5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய *இரட்சிப்பினால்* என் இருதயம் களிகூரும்.

சங்கீதம் 13 :5

1.இரட்சிப்பு என்றால் என்ன?

எளிதாக சொல்ல வேண்டுமானால் *இரட்சிப்பு* என்றால் அடிமைத்தனத்திலிருந்து, பாவத்திலிருந்து, அந்தகாரத்திலிருந்து, சத்துருவிடமிருந்து பெறும் *விடுதலை* யை குறிக்கிறது.

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் *விடுதலையால்* என் இதயம் களிகூரும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 13:5

[25/10 6:07 pm] Elango: 1⃣ சங்கீதம் 13 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

இந்த சங்கீதம் *தாவீதினால்* எழுதப்பட்டு பாடப்பட்ட பாடல்.

[25/10 6:31 pm] Elango: 1⃣ சங்கீதம் 13 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

சங்கீதம் எழுதியவர் - தாவீது

*எழுதப்பட்ட சூழ்நிலை*

தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பலவீனங்களிலும் மற்றும் பாதிப்புகளிலும் எவ்வளவு நாள் அனுபவிக்கவிக்க வேண்டும்? தேவன் அவருடைய பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய மறந்துவிட்டாரா? இப்படிப்பட்ட சூழ்நிலை டேவிட் வாழ்க்கையில் அந்த நேரத்தில் இருந்ததால் அப்படி எழுதியிருக்கலாம்.

ஆனாலும் தேவன் மேல் தாவீது நம்பிக்கையாக இருக்கிறார்.

5 *நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்;* நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 13:5
6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், *அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.*

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 13:6

[25/10 6:38 pm] Elango: 2⃣ சங்கீதம் 13 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் நாம் தேவன் மேல் நம்பிக்கையாகயிருக்க வேண்டும்.

யோபு 13:15
[15] *அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;* ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.


தேவனையே சார்ந்து தேவனுடைய வழியில் நடப்பவர்களுக்கு தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாகவாக நடப்பிக்கிறார்.

ரோமர் 8:28
[28]அன்றியும், *அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.*✅✅✅✅✅

[25/10 6:38 pm] Elango: சங்கீதம் 27:13-14
[13] *நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.*👆🏻👆🏻👆🏻👍👍👍

[14]கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.

[25/10 6:53 pm] Tamilmani Ayya VDM: ஆண்டவர் யாரை இரட்சிக்கிறார்❓
அவர் யாரை முன்குறித்தாரோ அவர்களை இரட்சிக்கிறார். இது உண்மை என வேதம் சொல்லுகிறது. ஆனாலும் இரட்சிபப்பதற்க்கும் கர்த்தர் மனிதர்களையே பயன்படுத்துகிறார்.
👉 அல்லது நாமும் சுவிஷேசம் சொல்லி சிலரை இரட்சிக்க முடியுமா❓
*ஜெபத்தோடு மனிதர்களை அணுகுங்கள். Tracts கொடுங்கள். அன்பாய் பேசி இயேசுவைப்போல அணுகுங்கள். இரட்சிப்பை கர்த்தர் பார்த்துக்கொள்வார்.*
👉 அல்லது இரட்சிப்பை கர்த்தர் நம் கையில் கொடுத்திருக்கிறாரா❓

*நீங்கள் இயேசுவை வெளிப்டுத்தி வாழ்ந்தாலும் இரட்சிப்பு கர்த்தருடையது. சுவிஷேசத்தை அறிவியுங்கள். இரட்சிப்பு கர்த்தருடையது. இல்லையென்றால் என்னால்தான் இவர் இரட்சிக்கப்பட்டார் என்ற எண்ணம் வந்து விடும்.*
*அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4 :12*
👉 அல்லது தேவன் முன்குறித்தவர்களை மாத்திரம்தான் நமது முகாந்திரம் இரட்சித்துக்கொண்டிருக்கிறாரா❓
*இல்லை. எல்லோரையும் நேசிக்கிறார். (ஒருவனும் கெட்டுப்போகாதபடிக்கு வசனம்)*
👉 இயேசுவை நோக்கி பார்க்கிற கிருபை யார் தருகிறது❓நம்முடைய குடும்பத்திலேயே சிலர் அல்லது தெரிந்தவர்களில் சிலர் சுவிஷேசம் கேட்டும் இரட்சிப்புக்குள் கடந்து வராதது ஏன்❓அவர்கள் தேவனால் முன்குறிக்கப்படாததினாலேயா❓
*ஆம் அப்படியிருந்தால் மற்றவர்கள் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.*

கிருபை கிருபை கிருபை கர்த்தருடையது. நாம் மற்றவர்களுடன் கிருபை காட்டனும். நாம் வாழ்வது கர்த்தரின் கிருபையினாலே!!

[25/10 7:14 pm] Elango: *சங்கீதம் 13 சுருக்கவுரை*

இந்த சங்கீதத்திற்க்கு *எதுவரைக்கும்* என்ற பெயரை சூட்டலாம்.

வசனம் 1-2 : *எதுவரைக்கும் கர்த்தாவே ( எங்களுடைய துன்பம் இருக்கும், இந்த உபத்திரம் இருக்கும்)*

வசனம் 3-4 : *உதவி ஒத்தாசை வரும் கன்மலையை நோக்கி ஜெபித்தல்*

வசனம் 5 : *தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்*

வசனம் 6 : *விசுவாசத்தின் முடிவு - நன்மையும், பாடலுமாக இருக்கும்*

[25/10 7:27 pm] Elango: 8⃣ சங்கீதம் 13:1-2
[1]கர்த்தாவே, *எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?*
[2]என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? *எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?*

இங்கே *எதுவரைக்கும்*  என்ற கேள்விக்கு தேவனுடைய பதில் என்னவாக இருக்கும்❓

இதில் தாவீது கேட்கும் கேள்விகளுக்கு வேதம் தரும் பதில்கள். 👇🏻👇🏻

1. *கர்த்தர் நம்மை எப்போது மறப்பார்?*

அவருடைய வார்த்தையை பாரம் என்று கருதும் போது. எரேமியா 23:38-39 , வேதத்தை மறக்கும் போது ஓசியா 4:6 கர்த்தர் நம்மை மறப்பார்.

வேறு எந்த நிலையிலும் அவர் நம்மை மறப்பதில்லை. ஏசாயா 49:15❤✝🙏🏻

2. *கர்த்தர் எதுவரை தமது முகத்தை மறப்பார்?*

நாம் பாவத்தில் இருக்கும்வரை ஏசாயா 59:2

3. *எதுவரைக்கும் நம் ஆத்துமா சஞ்சலமாக இருக்கும்?*

நாம் விசுவாசிக்கும் வரை, ஏசாயா 28:16 ஜெயித்து நல்லவைகளை சிந்திக்க  ஆரம்பிக்கும் வரை. பிலிப்பியர் 4:6-8

4. *எதுவரை சத்துரு நம்மேல் கையை உயர்த்துவான்?*

நாம் பாவத்திலிருந்து வெளிவரும் வரை, மனந்திரும்பி திரும்பவும் தேவனோடு நடக்கும் வரை.நாம் தேவன்மீது அன்புக்கொண்டிருந்தால் இறுதியில் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடப்பிக்கிறார். ரோமர் 8:28

[25/10 7:33 pm] Elango: வேதனையிலிருக்கும் ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் இவ்வளவு போராட்டம், துன்பத்தை சகிக்க வேண்டும் என்று அங்காலாய்ப்பதுண்டு ஆனால் நாம் தாங்க கூடிய போராட்டத்தை மட்டுமே நமக்கு அனுமதிப்பார்.

1 கொரிந்தியர் 10:13
[13]மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; *உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.*

[25/10 7:48 pm] Elango: சங்கீதம் 13:1
[1]கர்த்தாவே, *எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?*

தாவீது இந்த கஷ்டமான சூழ்நிலையில் நம்பிக்கையிழந்து, தைரியமிழந்து காணப்படுகிறார். அவர் மிகுந்த ஆபத்தான நிலையில் துன்பத்தில் சிக்கி தவிக்கிறார். ஆகவே தேவன் மறைந்திருக்கிறார் என்றும், தேவன் அவருக்கு உதவி செய்ய விரும்பவில்லை என்று வருத்தப்படுகிறான்.

*இதில் கற்றுக்கொள்கிற முக்கியமான இரண்டு காரியங்கள் இருக்கிறது*

1. பக்தியுள்ளவர்களின் ஜெபம் உடனடியாக பதிலளிக்கப்படாமல், நம்முடைய விண்ணப்பத்திற்க்கு தேவன் செவி சாய்க்காதது போல் தோன்றலாம். இவ்வாறாக தேவனால் நாம் மறக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு நம்மை ஆட்க்கொள்ளலாம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இன்னும் தேவன் மேல் நம்பிக்கை வைத்து, அவரிடமிருந்து நன்மையை பெற்று களிகூறும்படியாக பரிசுத்த ஆவிக்கு ஜெபித்து அமர வேண்டும்.

2. தேவன் நம்முடைய ஜெபத்திற்க்கு தாமதிப்பது என்பது அவரால் நாம் மறக்கப்பட்டிருக்கிறோம் என்ற அர்த்தமல்ல. மாறாக சில காணக்கூடாத தேவனுடைய நோக்கத்தை தேவன் நம் வாழ்க்கையில் நிறைவேற்றும்படியாக தேவன் திட்டமிட்டிருக்கலாம்.2 cor 12:7-10, heb 12:10-11, james 1:2-4, 1 peter 1:6-7

[25/10 7:51 pm] Elango: 7⃣⃣ அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். சங்கீதம் 13:4

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

என்னுடைய பகைஞனான சாத்தான் மகிழ்ச்சியடையாத படி எனக்கு செவி கொடும் என்கிறார் தாவீது.

*என் வாழ்க்கையில் கர்த்தர் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நாம் வாழ வேண்டும்*

[25/10 8:23 pm] Elango: 5⃣ என் *இருதயத்திலே* சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் *ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணி* க்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
சங்கீதம் 13:2

 இருதயத்திற்கும்
 ஆத்துமாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..❓இருதயத்திலே ஆலோசனைபண்ண முடியாதா...❓

*ஆத்துமா:*
*1) வேதத்தில் ஒரு மனிதனின் முழுமையை (சிந்தனை, ஆசை, உணர்வு) குறிக்க ஆத்துமா என்னும் வார்த்தை பயன்படுகிறது.
சங்கீ 42.1. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
2. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்
லோத்தின் மனைவி ஓடிப் போகும் போது, சரீர பிரகாரம் மட்டுமே ஓடினாள். அவள் ஆத்துமா (சிந்தனை, ஆசை, உணர்வு)  அழிந்து கொண்டிருக்கும் பட்டணத்தின் மேலேயே இருந்ததால் திரும்பி பார்த்து உப்புத் தூண் ஆனாள்.
மாற்கு 12.33 ன் விளக்கம் :
33. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
இதையொத்த வசனங்கள் சிறிது சிறிது மாறி மத், லூக்கா, மாற்கு அதிகாரங்களில் வருகிறது. இது சரியாக இருப்பதாக பட்டதால் இந்த வசனத்தை எடுத்துக் கொண்டேன். (சிறிது மாற்றி)
1. முழு இருதயத்தோடும் (ஆசையோடும்) – கர்த்தரை தொழுது கொள்ள ஒரு உள்ளார்ந்த ஆசை எப்போதும் மனிதனிடம் இருக்க வேண்டும். எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனாக அவன் இருக்க வேண்டும்.
2. முழு அன்போடும் – அடுத்ததாக தன் துக்கங்கள், வேதனைகள் போன்ற உணர்வுகளை விட்டு தேவனிடம் முழுவதுமாக தேவனுக்காக மட்டுமே அன்பு கூர வேண்டும்.
3.. முழு மனதோடும் – பிறகு அலை பாயும் சிந்தனைகளை தேவனை நோக்கின விருப்பமாக மாற்ற வேண்டும்
4. முழு ஆத்துமாவோடும் – மேற்கண்ட மூன்றோடும் (ஒரே நேரத்தில்) கர்த்தரை ஆராதனை செய்ய வேண்டும்
5. முழுப் பலத்தோடும் – பிறகு சரீர பலத்தோடும் ஆராதனை செய்ய வேண்டும் (மொத்தம் நான்கு)
6. முழு மனதோடும் – மேற்கண்ட நான்கோடும் கர்த்தரை தொழும் போது சில சமயம் சிந்தனை மாறி விடும் அப்போது மறுபடியும் ஸ்டெப் மூன்றை பின்பற்ற வேண்டும்
2) ஒரு மனிதன் தனக்குதானே பேசிக் கொள்வது தன் ஆத்துமாவுடன் (சிந்தனையுடன்) பேசிக் கொள்வது எனப்படும்.
லூக்கா 12.19. பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
சங்கீ.42.11. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
3) மனிதனின் உடலில்லாத உள் பகுதி ஆத்துமா எனப்படுகிறது.
லூக்கா 12.20. தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
சங்கீ. 15. ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)
இந்த ஆத்துமாவை பாதிக்கும், பாவத்தில் விழ வைக்கும் காரணங்கள் உலகம் என்ற பெயரால் குறிப்பிடபடுகிறது. 1.யோவான் 2
15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
16. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
17. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்
இந்த உலகம் மூன்றாக பிரிக்கப்படுகிறது.
1.மாம்சத்தின் இச்சை (துர்குண சரீரத்தில் சொல்லப்பட்ட மாமிசம் வேறு. இந்த மாமிச இச்சை வேறு. இது சரீரத்துக்கு தேவையான பொருட்கள் மேல் உள்ள இச்சை என்ற பொருளில் வரும்)
2. கண்களின் இச்சையும் 3. ஜீவனத்தின் பெருமை
ஆத்துமாவின் பாவம் என்பது துர்குண சரீரத்தின் பாவத்தைப் போல மனிதன் மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்ல. இது சிந்தனையின் வழியாக கொஞ்ச கொஞ்சமாக பெருகி பாவத்துக்கு இட்டு செல்லும். தாவீது பெண்ணிடம் உறவு கொண்டது துர்குண சரீரத்தின் பாவம் ஆனால் அவள் கணவனை கொலை செய்தது ஆத்துமாவினால் செய்த பாவமாகும் (Planned Murder)காயீன் செய்த கொலை துர்குண சரீரத்தின் பாவம்.
பெரும்பாலான மக்களில் துர்குண சரீரம் பலமற்றதாக உள்ளது. ஆனால் அவர்கள் ஆத்துமாவின் மூலமாக பாவம் செய்து துர்குண சரீரத்தை வளர்க்கிறார்கள்.
இங்கே சோதாம் என்னும் பட்டணத்தை தேவன் அழிக்க காரணங்கள். இவர்கள் கொழுத்துப் போய்,  ஜீவனத்தின் பெருமையினால் (கர்வம்) பாவம் செய்தனர். மேலும் பாவத்தை மறைந்து, மறைந்து செய்யாமல் வெளிப்படையாக செய்யும் அளவுக்கு மனசாட்சி கெட்டிருந்தது. பாவம் செய்வது நாகரீகமும் (fashion) ,சுதந்தரமும், நாட்டினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருந்தது.
எசேக்கியேல் 16.49. இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
50. அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.
ஏசாயா 3.9. அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
எரே 23.14. எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.
உலகத்தின் இச்சையை வெல்வது எப்படி?
இது பற்றி தனி கட்டுரை ஒன்று வெளிவரும். ஆனால் கீழ்கண்ட வசனம் ஒரு வழியை சொல்கிறது அது
அந்நியர்களும் பரதேசிகளும் என்றெண்ணி நமக்கு சொந்தமில்லாத இந்த உலகத்தில் வாழ்வதுதான். (இது ஏறக்குறைய பகவத் கீதை சொல்லும் வழியைப் போன்றது)
11. பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,

- தமிழ்மணி ஐயா @Tamilmani Ayya VDM

[25/10 8:56 pm] Elango: 🎻🎸 *இன்றைய (25/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 13* 🎻🎸

1⃣ சங்கீதம் 13 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 13 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும், நான் *மரணநித்திரை* அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.சங்கீதம் 13:3

மரணநித்திரை இதன் அர்த்தம் என்ன...❓ *மரணமும் நித்திரையும் ஒன்றா..❓*

4⃣ நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.சங்கீதம் 13 :5

*இரட்சிப்பு என்றால் என்ன❓*

5⃣ என் *இருதயத்திலே* சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் *ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணி* க்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
சங்கீதம் 13:2

 இருதயத்திற்கும்
 ஆத்துமாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..❓இருதயத்திலே ஆலோசனைபண்ண முடியாதா...❓

6⃣ கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங்கீதம் 13:6

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

7⃣ அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். சங்கீதம் 13:4

இந்த வசனத்தை குறித்த உங்கள் கருத்து என்ன❓

8⃣ சங்கீதம் 13:1-2
[1]கர்த்தாவே, *எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?*
[2]என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? *எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?*

இங்கே *எதுவரைக்கும்*  என்ற கேள்விக்கு தேவனுடைய பதில் என்னவாக இருக்கும்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[25/10 10:53 pm] Elango: 3⃣ என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும், நான் *மரணநித்திரை* அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.சங்கீதம் 13:3

மரணநித்திரை இதன் அர்த்தம் என்ன...❓ *மரணமும் நித்திரையும் ஒன்றா..❓*

*சில இடங்களில் மரணத்தை நித்திரை என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டிருக்கும்*

மரண நித்திரை என்பது மரணத்தை குறிக்கும் சொல்லே.

Psalms 13:3
[3]Consider and hear me, O LORD my God: lighten mine eyes, lest I sleep the sleep of death;

Hebrew: מות
Transliteration: mâveth
Pronunciation: maw'-veth
Definition: From H4191; death (natural or violent); concretely the {dead} their place or state (hades); figuratively {pestilence} ruin: - (be) dead ({[-ly]}) {death} die (-d).
KJV Usage: death (128x), die (22x), dead (8x), deadly (1x), slay (1x).
Occurs: 160
In verses: 155

[25/10 10:57 pm] Elango: *சில இடங்களில் மரணத்தை நித்திரை என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டிருக்கும்*

வேதத்தில் மூன்று விதத்தில் *நித்திரை* என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
1. தூக்கம் / உறக்கம்

அப்போஸ்தலர் 12:6
[6]ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே *நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்;* காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

2. சரீர பிரகாரமான மரணம் / சாவு / இந்த உலகத்தை விட்டு கடத்தல்

1 தெசலோனிக்கேயர் 5:10
[10]நாம் விழித்திருப்பவர்களானாலும், *நித்திரையடைந்தவர்களானாலும்,* தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

3. நிர்விசாரமான பாவ வாழ்க்கை வாழ்தல், தேவனோடு உள்ள ஆவிக்குரிய உறவை இழந்த நிலை.

எபேசியர் 5:14
[14]ஆதலால், *தூங்குகிற நீ விழித்து,* மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

தாவீது சங்கீதம் 3 ல் குறிப்பிட்டிருக்கும் நித்திரை என்ற வார்த்தையான தூக்கம் உறக்கத்தை குறிக்கிறது.

 5 *நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;* ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 3:5

ஆண்டவர் கையில் நாம் எல்லாவற்றையும் ஒப்படைத்து அவரை சார்ந்து வாழும் போது அவரே நமக்கு இரவிலும் பகலிலும் முழு பாதுகாப்பு என்ற விசுவாசம் இருக்கும் போது நிம்மதியான தூக்கம் வரும்.

சங்கீதம் 4:8
[8] *சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்;* கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.

Post a Comment

0 Comments