Type Here to Get Search Results !

சங்கீதம் 12 தியானம்

[24/10 9:35 am] Elango: 🎻🎸 *இன்றைய (24/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 12* 🎻🎸
1⃣ சங்கீதம் 12 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 12 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ மனுபுத்திரரில் *சண்டாளர்* உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.சங்கீதம் 12:8

சண்டாளர் என்பது யார்❓

4⃣ அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள், *இச்சக* உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.சங்கீதம் 12:2

இச்சகம் என்றால் என்ன...❓

5⃣ *கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.*சங்கீதம் 12:6

இதன் அர்த்தம் என்ன...❓

6⃣ இரட்சியும் கர்த்தாவே, *பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்* உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சங்கீதம் 12:1

பக்தியுள்ளவன் என்பது யார்...❓
அவனுடைய பக்தி எப்படி இருக்கணும்...❓

7⃣பக்தியுள்ளவன் ஏன் அற்றுப்போகிறான் காரணமென்ன❓ அவனைத்தான் கர்த்தர் தெரிந்து கொண்டாரே....⁉

8⃣ சங்கீதம் 12:4 *அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

9⃣ சங்கீதம் 12:8
*மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[24/10 10:01 am] Bro David Thirumal VTT: சங்கீதம் 12:2
[2]அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
சங்கீதம் 28:3
[3]அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.

[24/10 10:08 am] Elango: சங்கீதம் 15:3
[3]அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், *தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும்,* தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

நீதிமானின் உத்தமமான சுபாவங்களில் ஒன்று!☝☝

[24/10 10:53 am] Kamal VTT: 6 கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
சங்கீதம் 12 :6
1. கர்த்தருடைய சொற்கள் ஏன் குறிப்பாக வெள்ளியுடன் ஒப்பிடபடுகிறது?  தங்கமுடன் ஏன் சொல்லவில்லை?
2.மண் குகை இருக்கிறதா?
பாறை குகை தானே உண்டு.
3.மண் குகையின் அர்த்தம் என்ன?

[24/10 1:25 pm] Elango: 1 ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:1
2 ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்; தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:2
3 தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவாராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:3
4 'எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை; எங்களுக்குத் தலைவர் வேறு யார்?' என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:4
5 'எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;; அவர்கள் ஏங்குகின்றபடி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்' என்கின்றார் ஆண்டவர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:5
6 ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:6
7 ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்; இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:7
8 பொல்லார் எம்மருங்கும் உலாவருகின்றனர்; மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:8

[24/10 2:15 pm] Elango: 1⃣ சங்கீதம் 12 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

*இந்த சங்கீதத்தை எழுதியது தாவீது*

( Carnal men ) மாம்சத்துக்குரியவர்களை குறித்தும், அவர்களுடைய பொல்லாத நினைவுகளையும், துர்கிரியைகளை குறித்தும் தாவீது எழுதி பாடுகிறார்.

தேவன் மனிதனை அவருடைய சாயலில் சிருஷ்டித்தார் ஆனால் மனிதன் கீழ்ப்படியாமையினாலே தேவ மகிமையை இழந்து தேவனை விட்டு விலகி தூரமாக துன்மார்க்கமாக வாழ்கிறார்கள்.

பிரசங்கி 7:29
[29] *இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.*

தேவனுடைய சித்தத்திற்க்கும், நோக்கத்திற்க்கும் விரோதமாக வாழ்வதை விவரிக்கிறது. எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. தேவன் நீதியாக நியாந்தீர்ப்பார்.

பிரசங்கி 12:14
[14]ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்

[24/10 2:23 pm] Elango: 🖌 *பாவத்தில் விழுவதற்க்கு முன்பு மனிதனின் சுபாவம் - தேவ சுபாவம்*👇🏻👇🏻

ஆதியாகமம் 1:26-27
[26]பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
[27]தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

🖌 *மனிதன் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவத்தில் விழந்தபோது அவன் நிலைமை*👇🏻👇🏻

ஆதியாகமம் 6:5-7
[5]மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், *அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,*😭😭😭😭😭😭

[6]தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

[7]அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; *நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.*

🖌 *ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலம் விழுந்துப்போன மனுஷனை திரும்பவும் தேவ சாயலை கொடுக்கும் தேவ திட்டம்*👇🏻👇🏻

ரோமர் 8:29-30
[29]தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, *தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.*✝✝✝✝✝✝✨✨✨✨✨✨✨✨

[30]எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

எபேசியர் 4:22-24
[22]அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,

[23]உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,

[24] *மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்*.

[24/10 2:45 pm] Elango: 2⃣ சங்கீதம் 12 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

*இதுவரைக்கும் பார்த்த சங்கீதத்தில் தாவீது ஏழைகளுக்காக, எளியவர்களுக்கு எப்படி பாரத்தோடு ஜெபிக்கிறார் என்பதை கற்றுக்கொண்டேன். ஏழை எளிய மக்களுக்களுக்காக நாமும் ஜெபிக்க வேண்டும் என்பதை புரிந்து நானும் பாரமாக ஜெபிக்க ஆரம்பித்து விட்டேன்.*

துன்மார்க்கருக்கு நீதியை செய்ய வேண்டும் என்று தாவீது ஜெபிக்கிறார், எளியவர்களை பொல்லாதவர்களை கைகளுக்கு விலக்கி தேவன் காக்கும்படி ஜெபிக்கிறார்.

நாமும் அதுபோல துன்மார்க்கர் மனந்திரும்ப வேண்டியும், எழை எளிய ஜனங்கள் தேவன் கிருபை செய்யும் படி ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம்.

2 பேதுரு 3:9
[9]தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; *ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.*

அப்போஸ்தலர் 17:30
[30] *அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.*

[24/10 2:48 pm] Elango: 5⃣ *கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.*சங்கீதம் 12:6
இதன் அர்த்தம் என்ன...❓

[24/10 5:23 pm] Senthil Kumar Bro VTT: 4⃣ அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள், *இச்சக* உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.சங்கீதம் 12:2

இச்சகம் என்றால் என்ன...❓

2சாமுவேல் 22: 45
அந்நியர் *இச்சகம்* பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

யோபு 32: 21
நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் *இச்சகம்* பேசாமலும் இருப்பேனாக.

யோபு 32: 22
நான் *இச்சகம்* பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
சங்கீதம் 35: 16
அப்பத்திற்காக *இச்சகம்* பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.

 *இச்சகம் என்பது முகஸ்துதி.., போலிப்புகழ்ச்சி..*
 *Flattery*
இதை  பேசித்தான் இன்று நிறையபேர் சுகமாய் வாழ்ந்து வருகிறார்கள்....

நல்லவனாய் வாழும் பலரை முகஸ்துதி செய்து...போலியாகப்புகழ்ந்து உன்னால் முடியும் உன்னால் மட்டுமே முடியும் என்று  அவனை தவறு செய்ய வழி வகுகிறார்கள்...

இப்படிப்பட்ட நண்பர்களிடம் இருந்து நாம் நம்மை காத்துக்கொள்ள ஜெபம் செய்ய வேண்டும்....

[24/10 6:45 pm] Elango: 4⃣ அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள், *இச்சக* உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.சங்கீதம் 12:2

இச்சகம் என்றால் என்ன...❓

சொற்களால் மனின் செய்யும் தவறுகளை நாம் கவனிக்க வேண்டும்.

*பொய் பேசுதல், முகத்துதி செய்தல், இருமனதாக பேசுதல்,பெருமையாக பேசுதல், சொற்களால் மேற்க்கொள்ளுதல் போன்றவைகள கர்த்தர் வெறுக்கிறார்.*

நம்முடைய சொற்களை குறித்து கவனமாக இருத்தல் வேண்டும்.

மத்தேயு 12:36-37
[36] *மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[37]ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

[24/10 6:49 pm] Elango: நாவான்மையால் மக்களை ஏமாற்றும் காலமிது.

உண்மையை புரட்டி, சத்தியத்தை மறைத்து பொய்யை பரப்பும் காலமிது.

தீத்து 1:10-11
[10]அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், *அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.*😛😛😜😜😍😍🗣🗣🗣🗣

[11] *அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்;*🤐🤐🤐🤐🤐 அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

[24/10 6:52 pm] Elango: மக்களை ஏமாற்றும் தொழில் நிறுவனங்கள், வாயின் திறமையால் மக்களை ஏமாற்றும் அரசுகள், தொழில் நிறுவனங்கள், மதத்தலைவர்கள் உள்ள இக்காலத்திற்க்கு இச்சங்கீதம் பொருத்தமானது.

சங்கீதம் 59:7
[7] *இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.*

[24/10 6:55 pm] Elango: நாம் நம்முடைய வாயின் வார்த்தைகளை குறித்து கவனமாக இருத்தல் அவசியம்.

1 பேதுரு 3:10-11
[10]ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் *பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும்👅👅👅👅🗣🗣🗣 விலக்கிக்காத்து,*

[11]பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்.

சங்கீதம் 120:2
[2]கர்த்தாவே, *பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.*

[24/10 7:03 pm] Elango: *நம்முடைய நாவைக்குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் அமைதியாக பேசாமல் இருந்தால் ஞானி போல கருதப்படுவார்கள் ஆனால் பேசிவிட்டால் எதிர்மறை நிலை தான்*

சங்கீதம் 141:3
[3]கர்த்தாவே, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.😷😷😷😷😷😷😷😷

யாக்கோபு 3:6,8,13
[6]நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!

[8]நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.

[13] *உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.*

[24/10 7:55 pm] Senthil Kumar Bro VTT: 3⃣ மனுபுத்திரரில் *சண்டாளர்* உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.சங்கீதம் 12:8
சண்டாளர் என்பது யார்❓
 *சண்டாளர்*  என்றால்

 *தீயவர்; கொலைஞர்.* என்று தமிழ் அகராதியில் இருக்கு....⁉⁉

[24/10 8:17 pm] Elango: 3⃣ மனுபுத்திரரில் *சண்டாளர்* உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.சங்கீதம் 12:8
சண்டாளர் என்பது யார்❓

 *சண்டாளர்*  என்றால் என்ன❓
8 *பொல்லார்* எம்மருங்கும் உலாவருகின்றனர்; மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:8

ஆங்கிலத்தில் இந்த வார்த்தையை - vileness, worthlessness என்று அர்த்தப்படுத்தலாம்.

*துன்மார்க்கமாக ஜீவிப்பவரை குறிக்கும் சொல்*

[24/10 8:23 pm] Elango: சங்கீதம் 12:8
[8] *மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.*

இந்த உலகம் தீயோரின் கையில் அரசாட்சி சென்றால் என்ன நடக்கும் என்பதை விளக்குகிறது இந்த வசனம்.

யோபு 9:24
[24] *உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது;*🤜🤜🤛🤛✊✊✊✊ அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார்.

1 யோவான் 5:19
[19]நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், *உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.*

[24/10 8:27 pm] Elango: 5⃣ *கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.*சங்கீதம் 12:6

இதன் அர்த்தம் என்ன...❓

*கர்த்தருடைய வார்த்தையை மிகவும் அருமையாக விளக்கியிருக்கிறது கீழுள்ள வசனங்கள்*

சங்கீதம் 19:7-11

⏹கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்,

 ⏹ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;

⏹கர்த்தருடைய சாட்சி முழுமையானதும்,

⏹ பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

⏹கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும்,

⏹ இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது;

⏹ கர்த்தருடைய கற்பனை தூய்மையும்,

⏹ கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது.

⏹கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,

⏹என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது;

⏹கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும்,

⏹அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.

⏹அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும்,

⏹தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன.

⏹அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;

⏹ *அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.*

[24/10 8:29 pm] Elango: வசனம் 12:6

கர்த்தரின் சொற்கள் மிகவும் நம்பத்தகுந்தவை. கர்த்தரின் வேதத்திற்க்காக அவரை துதித்து அவரது சொற்களை அனுதினமும் வாசித்து அவருடன் அனுதினமும் பேச வேண்டும்.

[24/10 8:33 pm] Elango: *சங்கீதம் 12 ன் சுருக்கமான விளக்கவுரை*

தலைப்பு - இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் பாதுகாப்பார்.

வசனம் 1 - மக்கள் இரட்சிக்கப்பட வேண்டுதல்

வசனம் 2-4 - மக்களின் பாவமும் இறுமாப்பும்

வசனம் 5 - கர்த்தரின் பதில், செயல்பட வாக்குறுதி

வசனம் 6 - கர்த்தரின் சொற்களின் தூய்மை

வசனம் 7 - கர்த்தர் காப்பார்

வசனம் 8 - சண்டாளர் உயர்ந்திருப்பதின் விளைவு.

[24/10 9:20 pm] Elango: 6⃣ இரட்சியும் கர்த்தாவே, *பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்* உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சங்கீதம் 12:1

*பக்தியுள்ளவன் என்பது யார்...❓அவனுடைய பக்தி எப்படி இருக்கணும்...❓*

பக்தியுள்ளவனின் தேவனுக்குள்ளான சுபாவங்கள் பல உண்டு.

வேதம் நம்மை
அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.தீத்து 2:12-13

*ஒருவன் தேவனுக்கு பிரியமான பக்திமானாக எப்படி வாழ்வது*?

சரியான காரியங்களை கேட்பதன் மூலம். 1 இராஜாக்கள்3:9, 10

⏹வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதன் மூலம். 2 தீமோத்தேயு2:4

⏹அவரது சித்தத்தை செய்வதன் மூலம்.  எபிரெயர்13:20, 21

⏹அவருடன் உறவுகொண்டு நடப்பதன் மூலம். எபிரெயர் 11:5, ஆதியாகமம் 5:24

⏹தேவனை துதிப்பதன் மூலம். சங்கீதம் 69:30,31

⏹விசுவாசத்தினால் தேவன் அளிக்கும் காரியங்களைச் சார்ந்து ஓய்வுடன் இருப்பதன் மூலம். எபிரெயர்  11:6

[24/10 9:26 pm] Elango: *பக்தியுள்ளவன்  என்பவன் அவனது  வாழ்க்கை நடப்பதை உள்ளடக்கியுள்ளது*

🚶சத்தியத்தில் நடப்பது. 2 யோவான்4

🚶விசுவாசத்தின் வழியில் ஞானமாய் நடப்பது. 2 கொரிந்தியர்5:7, கொலோசெயர்4:5

🚶ஆவியானவரில் நடந்து கொள்ளுதல் கலாத்தியர்5:16, 25

🚶அன்பில் நடந்துகொள்ளுதல் எபேசியர் 5:2

🚶வாழ்க்கை புதிதாக்குலில் நடந்துகொள்ளுதல் ரோமர்6:4

🚶அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரமாய் நடந்துகொள்ளுதல் எபேசியர் 4:1

🚶 கர்த்தருக்குப் பாத்திரமாய் நடந்துகொள்ளுதல் கொலோசெயர் 1:10, 1 தெசலோனிக்கேயர் 2:12

🚶 பகலில் நடக்கிறவர்களைப் போல சீராய் நடக்கக்கடவோம்  ரோமர்.13:13

🚶 நற்கிரியைகளில் நடக்கக்கடவோம் எபேசியர் 2:10

🚶 ஒளியில் நடக்கக்கடவோம் எபேசியர்  5:8, 1 யோவான்1:7

🚶 கிறிஸ்துவுக்குள்ளாய் நடக்கக்கடவோம் கொலோசெயர் 2:6

🚶 ஞானமுள்ளவர்களைப் போல கவனமாய் நடக்கக்கடவோம் எபேசியர் 5:15,16

🚶 தேவனுக்குப் பிரியமுள்ளவர்களாய் நடக்கக்கடவோம் 1தெசலோனிக்கேயர்  4:1

[24/10 9:31 pm] Elango: *பக்தியுள்ளவனின் வாழ்க்கை தேவனுக்கு பிரியமான வாழ்க்கையாக இருக்கும்*

💜பிறரிடத்தில் அன்பு கூறுதல். கலாத்தியர் 2:10, 2 கொரி. 8:8 நம்மைவிட துரதிஷ்டவாதிகளாய் இருப்பவருக்கு, உதவி செய்ய ஆர்வம் காட்டுதல் வேண்டும், குறிப்பாக சுவிஷேசத்தை அளிப்பதில் மிகவும் அக்கரை செலுத்துதல் வேண்டும்.

💜 பரிசுத்தவான்களை மற்ற விசுவாசிகளை பராமரிப்பதில், மிகவும் ஆர்வம் காட்ட வேண்டும்.  எபிரெயர் 6:11, 2 கொரி. 7:12, 2 கொரி. 8:16,17, 2 தீமோத்தேயு 1:17

💜தேவனது கொள்கைகள் மற்றும் அவரது வாக்குத்தத்தங்களைச் சார்ந்து, ஓய்வு கொள்ள ஆர்வமுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். தேவனது வாக்குத்தத்தங்களில் ஓய்வுவில்லாது செயல்பட்டவர்களின் மாதிரி யாத்திராகமச் சந்ததியினர். எபிரெயர் 4:11

💜நமது அழைப்பை உறுதிசெய்து கொள்ளுதல் அவசியம். 2 பேதுரு 1:5; 2 பேதுரு 1:10 நாம் கிறிஸ்துவைக் குறித்து, ஆர்வத்துடனும், வைராக்கியத்துடனும் சாட்சி பகருதல் அவசியம்.

💜 சரீரமாகிய சபையின் ஒற்றுமையை பேணிக்காத்தல் அவசியம். எபேசியர்4:3 சரீரமாகிய சபையின் ஒற்றுமையை வைராக்கியத்துடன் பரமாரிப்பது மிகவும் அவசியம்.

💜 தேவனது புகழ்ச்சிக்கேதுவாய் நடந்து கொள்ளுதல் அவசியம். 2 தீமோத்தேயு2:15 நீங்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்ட ஆர்வத்துடன் இருங்கள்.

💜மாசற்ற குற்றமற்ற வாழ்க்கை செய்யுங்கள். 2 பேதுரு 3:14 நாம் தேவனுக்கு மிகவும் அருகில் நடத்தல் வேண்டும், மற்றும் தேவையற்ற சோதனைக்குரிய பகுதிகளில் நம்மை வெளிக்காட்டாது இருத்தல் வேண்டும்.

[24/10 9:36 pm] Elango: 7⃣பக்தியுள்ளவன் ஏன் அற்றுப்போகிறான் காரணமென்ன❓ அவனைத்தான் கர்த்தர் தெரிந்து கொண்டாரே....⁉

ஓசியா 6:4
[4]எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? *உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.*

[24/10 9:38 pm] Elango: *கிறிஸ்தவ வாழ்க்கையின் முன்னுரிமைகள்*

1. முதல் நபர் - இயேசுக் கிறிஸ்துவே நமது வாழ்வில் எல்லாவற்றிற்கும் மேலான முன்னுரிமை பெறக்கூடியவர் - கொலோ. 1:16-18.

2. முதல் உடமைகள் - தேவனது இராஜ்ஜியம், தலைசிறந்த வெகுமதி - மத்தேயு 6:33.

3. முதல் காணிக்கை - நம்மை நாமே அற்பணிப்பது - 2 கொரி. 8:5.

4. முதல் மறுதலிப்பு - சுயத்தை மறுதலிப்பது - மத்தேயு 7:5.

5. முதல் ஒழுங்கு - ஜெப ஒழுங்கு - 1 தீமோத்தேயு 2:1-4.

6. முதல் கட்டளை - தேவனை எல்லாவற்றிற்கும் மேலாக அன்புகூறுதல் - மத்தேயு 22:37-38.

7. முதல் மன்னிப்பு - தேவனுக்கென்று நேரம் அளிக்காது மிகவும் வேலை அலுவலாய் இருத்தல். மத்தேயு 8:21-22.

[24/10 9:38 pm] Elango: *நம்முடைய பக்தி காலையில் காணும் மேகத்தை போலவும், விடியர்காலையில் தோன்றும் பணியை போலவும் ஒழிந்து போக காரணம் தேவனின் கிறிஸ்தவ வாழ்க்கையின் முன்னுரிமைகளை நாம் அசட்டை பண்ணுவதால் தான்.*‼‼

[24/10 9:45 pm] Elango: *நாம் பக்தியுள்ளவன் என்பதை பிறர் நம் நடக்கையில் மூலமாக நம்மை பக்தியுள்ளவன் என்று சொல்லவேண்டும்*

✅மற்றவர்களுக்கு முன்பாக நாம் நல்ல முன்மாதிரியாய் இருத்தல் வேண்டும். ரோமர்14:7; 1 தீமோத்தேயு 4:12

நமது அழைப்பிற்குப் பாத்திரராய் நடந்து கொள்ளுதல் வேண்டும். எபேசியர் 4:1

✅நேர்மையுடன் நடந்துகொள்ளுதல் வேண்டும். 2கொரிந்தியர்  8:21

✅பொல்லாங்காய் தோன்றும் அனைத்தையும் விட்டு விலகுதல் வேண்டும்.  1 தெசலோனிக்கேயர்5:22

✅அயலகத்தாருக்கு உதவியாய் இருத்தல் வேண்டும். ரோமர்12:18; 15:2

பிறருக்கு இடறலாய் இருத்தல் கூடாது. ரோமர்14:13

✅பெற்றோரைக் கனப்படுத்துதல் வேண்டும் கொலோசெயர் 3:20

அரசாங்கத்தைக் கனப்படுத்துதல் வேண்டும். தீத்து 3:1

✅அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாது இருப்பீர்களாக.

✅பிறரை நியாயந்தீர்க்கக்கூடாது. ரோமர்14:10-13

✅நமது செய்கைகளால் பிறர் இடறுவதற்கு ஏதுவுண்டாக்கக்கூடாது. ரோமர் 14:15,21-23

[24/10 10:07 pm] Elango: 6 கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
சங்கீதம் 12 :6
1. கர்த்தருடைய சொற்கள் ஏன் குறிப்பாக வெள்ளியுடன் ஒப்பிடபடுகிறது?  தங்கமுடன் ஏன் சொல்லவில்லை?
2.மண் குகை இருக்கிறதா?
பாறை குகை தானே உண்டு.
3.மண் குகையின் அர்த்தம் என்ன?

தேவனுடைய வார்த்தை அன்பிற்க்கும் பரிசுத்தத்திற்க்கு, நீதி நியாயத்திற்க்கு, தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:17

சுத்த வெள்ளியானது எப்படி களிம்பு இல்லாமல் இருக்குமோ அதுபோல தேவனுடைய வார்த்தையானது கலப்படமில்லாத ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.

மண் சூளையில் எப்படி களிம்புகளை நீக்கும்படியாக, ஒரு உலோகத்தை எப்படி அதன் களிம்புகள் நீக்கும்வரை அந்த உளைக்குள் உருக்கப்படுவது போல, ஏழு முறை சூளைக்கு வைக்கப்பட்டு அதன் அசுத்தங்களிலிருந்து விடுப்பட்டு ஒரு நேர்த்தியான உலோகமாக மாற உருக்கியெடுப்பார்களோ அதுபோல தேவனுடைய வார்த்தை எழு தரம் புடமிடப்பட்டு சுத்த சொற்களாக இருக்கின்றன.

*இங்கு ஏழு  என்று எண்ணிக்கை முழுமையை, முடிந்தது, ஆயிற்று, பரிபூரணம் என்பதை குறிப்பதாக இருக்கிறது. அதனால் தான் அங்கே ஏழு முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*

[24/10 10:09 pm] Elango: ஏசாயா 1:22,25
[22]உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது.

[25]நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.

*வெள்ளியில் களிம்பு, ஈயம் இருப்பது எல்லாம் உலையில் புடமிடும் போது நீங்கக்கூடியது*

[24/10 10:11 pm] Elango: 6 *ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.*

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 12:6

[24/10 10:12 pm] Elango: 🎻🎸 *இன்றைய (24/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 12* 🎻🎸

1⃣ சங்கீதம் 12 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 12 ன் மூலம் தேவன் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன❓

3⃣ மனுபுத்திரரில் *சண்டாளர்* உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.சங்கீதம் 12:8

சண்டாளர் என்பது யார்❓

4⃣ அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள், *இச்சக* உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.சங்கீதம் 12:2

இச்சகம் என்றால் என்ன...❓

5⃣ *கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.*சங்கீதம் 12:6

இதன் அர்த்தம் என்ன...❓

6⃣ இரட்சியும் கர்த்தாவே, *பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்* உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சங்கீதம் 12:1

பக்தியுள்ளவன் என்பது யார்...❓
அவனுடைய பக்தி எப்படி இருக்கணும்...❓

7⃣பக்தியுள்ளவன் ஏன் அற்றுப்போகிறான் காரணமென்ன❓ அவனைத்தான் கர்த்தர் தெரிந்து கொண்டாரே....⁉

8⃣ சங்கீதம் 12:4 *அவர்கள், எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

9⃣ சங்கீதம் 12:8
*மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.*

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

1⃣0⃣ 6 கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. சங்கீதம் 12 :6

1. கர்த்தருடைய சொற்கள் ஏன் குறிப்பாக வெள்ளியுடன் ஒப்பிடபடுகிறது?  தங்கமுடன் ஏன் சொல்லவில்லை?
2.மண் குகை இருக்கிறதா?
பாறை குகை தானே உண்டு.
3.மண் குகையின் அர்த்தம் என்ன?
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*சங்கீதம் பழைய தியானம்* - https://vedathiyanam.blogspot.in/search/label/சங்கீதங்களின்_தியானம்?m=1

 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[24/10 10:47 pm] Elango: 5⃣ *கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.*சங்கீதம் 12:6

இதன் அர்த்தம் என்ன...❓

2 சாமுவேல் 22:31
[31]தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

*தேவனுடைய வார்த்தையை நாம் தியானிப்பதன் மூலம்,  கீழ்க்காணும் பதில்களை நாம் அறிய முடியும்.*

- நான் எங்கிருந்து வந்தேன்.
- நான் இப்போது எங்கே இருக்கிறேன்
- ‎நான் எங்கே செல்வேன்

📝 *கர்த்தருடைய வார்த்தை நம்மை சுத்தமாக வைத்திருக்கிறது.*

சங்கீதம் 119:9
[9]வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.

📝 *கர்த்தருடைய வார்த்தை நமக்கு ஒளியாக இருக்கிறது*

2 பேதுரு 1:19
[19]அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

📝 *கர்த்தருடைய வார்த்தை படைக்கக்கூடியது*

சங்கீதம் 33:6
[6]கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. எபிரேயர் 1:3

📝 *கர்த்தருடைய வார்த்தை நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சியை தருகிறது.*

1 கொரிந்தியர் 3:1-2
[1]மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
[2]நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.

1 பேதுரு 2:3
[3]நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

📝 *கர்த்தருடைய வார்த்தை ஜீவனை தரக்கூடியது.*

யோவான் 6:63
[63]ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.


📝  *கர்த்தருடைய வார்த்தை பட்டயத்தை போன்றது.*

எபேசியர் 6:17
[17]இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

📝 *கர்த்தருடைய வசனம் பலமாக இருக்கிறது*

மத்தேயு 7:24-26
[24]ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
[25]பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
[26]நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

📝 *கர்த்தருடைய வார்த்தை விதையாக இருக்கிறது*

லூக்கா 8:14-15
[14]முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
[15]நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

2 கொரிந்தியர் 9:10
[10]விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

[24/10 10:51 pm] Elango: தேவன் எதை வாக்களித்தாரோ அதை அருளுகிறவராய் இருக்கிறார் என்றும் ஒரு வேளை ஈசாக்கு பலியிடப்பட்டு மரித்துப்போன நிலையிலும் அவனை உயிரோடு எழுப்ப தேவனால் ஆகும் என ஆபிரகாம்,  முழு நிச்சயத்துடன் காணப்பட்டார்.

இங்குதான் உங்களது விசுவாசம் உங்களை எடுத்துச் செல்கிறதாய் இருக்கிறது, *தேவனுடைய வார்த்தை அதிக உண்மையுள்ளதாய் உங்களது பரீட்சையைக்காட்டிலும் இருக்கிறது. உங்களது சூழ்நிலை எவ்வளவு அஞ்சத்தக்கதாய் இருப்பினும் நீங்கள் தேவனது வார்த்தையை சொந்தம் பாராட்டுகிறவர்களாயிருப்பீர்கள்.* நீங்கள் தேவனுடைய கரத்தில் விட்டுவிடுகிறவர்களாய் இருப்பீர்கள். மலைமீது ஈசாக்குடன் ஏறிச்செல்லும் போது ஆபிரகாம் தேவனது கரத்தில் இருந்தார். அவர் தனது உறையிலிருந்து கத்தியை எடுத்து உயர்த்தும் போது அவர் தேவனது கரத்தில் இருந்தார், *அவர் தேவனது சத்தத்தை கேட்டு சுற்றுமுற்றிலும் பார்த்தபோது அவர் தேவனது கரத்தில் இருந்தார்.*

[24/10 10:52 pm] Elango: *நாம் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையின் மூலமே காணவேண்டும்,* ஒவ்வொரு காரியத்தையும் தெய்வீக கண்ணோட்டத்தில் காணவேண்டும். ஆபிரகாம் கர்த்தரை தனது தேவைகள் சந்திக்கப்பட்டதற்காய் துதித்தான் மற்றும் ஈசாக்கு பதிலாகும் உபதேச அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான்.

நாம் சிறிய காரியத்தில் கூட தேவனை நம்பும் பழக்கத்தை கட்டியெழுப்புதல் வேண்டும், பெரிய காரியங்கள் வரும்போது தானாகவே தேவன் மேல் நம்பிக்கை வைக்க உறுதியுடன் காணப்படுவோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவனை நம்ப வேண்டும், *ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை தியானித்தல்  வேண்டும், இதுவே நமது கிறிஸ்தவ வாழ்வில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் காணப்படுகிறது. 1 தீமோத்தேயு 4:15, யாக்கோபு 1:19.*

Post a Comment

0 Comments