[20/10 11:07 am] Elango: 🎻🎸 *இன்றைய (20/10/2017) வேத தியானம் - சங்கீதம் 9⃣* 🎻🎸
1⃣ சங்கீதம் 9 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ *தேவனை முழு இருதயத்தோடு எப்படி துதிக்கலாம்*❓சங்கீதம் 9:1 துதித்தலின் முறைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன❓
3⃣ சீயோன் குமாரத்தியின் வாசல் இது எங்கே இருக்கிறது....❓சங்கீதம் 9:13
4⃣தேவனுக்குள் நாம் எப்படியெல்லாம் களிகூறலாம்❓சங்கீதம் 9:2
5⃣ நியாயம் தீர்த்தல் என்பது நிகழ்காலத்தில் நடப்பதை போன்று வசனம் 9:4 காட்டுகிறது;
ஆனால், சங்கீதம் 9:8 ல் எதிர்காலத்தில் நடப்பதை குறிப்பதாக உள்ளது!
நியாயத்தீர்ப்பு எப்பொழுது நடக்கும்❓ நாம் வாழும் போதே நடக்குமா அல்லது நம் இறந்தபோது ஆத்துமாவிற்க்கு நடக்குமா❓
6⃣ பூச்சக்கரம் என்று எதை குறிக்கிறார்...❓சங்கீதம் 9:8
7⃣ எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. சங்கீதம் 9:18
இந்த வசனத்தை பற்றி உங்களுடைய கருத்து என்ன❓
8⃣ சங்கீதம் 9:17 ல் மறக்கிற எல்லா ஜாதிகளும் என்று எழுதி இருக்கிறது, அப்படியானால் எல்லா ஜாதிகளும் நிச்சயம் கர்த்தரை அறிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்❓ஆனால் நம் சமூகத்திலேயே எத்தனையோ ஜாதிகள் இன்னும் கர்த்தரை *அறியவில்லையே*...❓
9⃣ *ஜாதிகள்*
*ஜாதிகள்* என்று சொல்லப்பட்டு இருக்கிறதே அது ஏன்... ❓அங்கு சொல்லப்பட்ட ஜாதிகள் என்பது யார்❓
வேதாகமத்தில் ஜாதிகள் *எப்போது யாரால் உருவானது...*❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[20/10 11:11 am] Jotham Brad VTT: சங்கீதம், Chapter 9
18. எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
[20/10 11:20 am] Jotham Brad VTT: மத்தேயு, Chapter 5
3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
👆🏻👆🏻👆🏻👆🏻
ஆவிக்குரிய வாழ்க்கையில் மட்டுமே எளிமை இருப்பது போதுமானதா???அல்லது உலகத்துண்டானவற்றையும் குறிக்கிறதா ???
[20/10 11:20 am] Jotham Brad VTT: சற்று விளக்கவும்
[20/10 12:52 pm] Stella Joseph VTT: 3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 9:3
6 எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 9:6
1.பின்னிட்டு திரும்ப போகும் எதிரிகள்
2.ஒழிந்த எதிரிகள் என்பது யார் யாரை குறிக்கிறது? தயவுசெய்து விளக்கவும்??
[20/10 12:55 pm] Elango: கண்டிப்பாக விளக்கம் தருவார்கள்.🙏
[20/10 12:57 pm] Elango: சங்கீத வேத தியானத்தில் குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு தேவன் இந்த சங்கீதத்தின் மூலம் உங்களுக்கு கற்றுத்தந்ததை இங்கே பகிரலாம். அநேகர் வாஞ்சையாக இருக்கிறார்கள்.🙏👍
[20/10 1:12 pm] Elango: *சங்கீதம் 9 விளக்கவுரை*
*தலைப்பு :* தேவனுடைய நியாயத்தீர்ப்புக்காக ஜெபமும், துதியும்.
*சுருக்கம் :*
துதி - வசனங்கள் 1-2
ஏன் துதி- வசனங்கள் 3-6
நியாயத்தீர்ப்பு - வசனங்கள் 7-8
கர்த்தரே தஞ்சம் - வசனங்கள் 9 -10
துதித்து அறிவியுங்கள் - வசனங்கள் 11-12
தனக்காக ஜெபம் - வசனங்கள் 13-14
துன்மார்க்கரின் முடிவு - 15-17
எளியவன் - வசனம் 18
நியாயத்தீர்ப்புக்காக வேண்டுதல் - வசனங்கள் 19-20
[20/10 1:27 pm] Elango: சங்கீதம் 9:1-2
[1]கர்த்தாவே, *என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;* உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
[2]உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, *உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.*
கர்த்தரை முழு இருதயத்தோடு துதித்து அவரைப்பற்றி மற்றவர்களிடம் தாவீதுப்போன்று நாமும் சாட்சி பகிர வேண்டும்.
1 நாளாகமம் 16:8-9
[8] *கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்;* அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
[9]அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, *அவருடைய அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.*
[20/10 1:34 pm] Elango: கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பல நிலையை உள்ளடிக்கியது, தேவனோடு நிமிடந்தோறும் சஞ்சரிப்பதை குறிக்கிறது.
இதில் *அவரை துதிப்பது* மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நம் ஆவிக்குரிய வாழ்க்கையில்...
ஏசாயா 12:4-5
[4]அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.
[5]கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
[20/10 1:38 pm] Elango: *கிறிஸ்தவர்களின் அனுதின வாழ்க்கை முறை*
❇சரியான காரியங்களை தேவனிடம் கேட்க வேண்டும் மூலம் 1 இராஜாக்கள் 3:9, 10
❇ உலகத்தோடு ஒத்த வாழ்க்கை வாழாமல் வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும். எபிரெயர் 13:20, 21
❇அவரது சித்தத்தை அறிய வேண்டும். எபிரெயர் 13:20, 21
❇அவருடன் ஐக்கியப்பட்டு அவரோடு நடத்தல் வேண்டும். எபிரெயர்11:5, ஆதியாகமம் 5:24
❇ தேவனைத் துதிக்க வேண்டும் சங்கீதம் 69:30, 31
❇ தேவன் பலனளிப்பவர் என விசுவாசித்து அவரில் அமர்ந்து இருத்தல் வேண்டும் எபிரெயர்11:6
[20/10 1:45 pm] Elango: 2⃣ தேவனை முழு இருதயத்தோடு எப்படி துதிக்கலாம்❓சங்கீதம் 9:1 துதித்தலின் முறைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன❓
*தேவனை நாம் எப்படி முழு உள்ளதோடு துதிக்கலாம்? துதியின் முக்கிய பங்கு என்ன?*
1. ஆராதணை என்ற சொல்லுக்கு உபயோகப்படுத்தப்படும் எபிரெய சொல் "Shoko" ’ஷோக்கோ’ - இதன் பொருள் தாழக்குணிதல்.
2. கிரேக்க வார்த்தைகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:-
a) proskueo ’ப்ராஸ்குஓ’ - தாழ விழுந்து பணிதல்
b) sebomai ’செபோமாய்’ - பெருமையின்றி தாழ்மைப்படுதல்
c) sebazomai ’செபஜோமாய்’ - பயபக்தியுடன் பணிதல்
d) eusebeo ’யூசேபெஓ’ - தெய்வபயத்துடன் செயல்படுதல்.
3. ஆராதித்தல் என்பது ஒருவிசுவாசி தேவனிடம் சேரும்பொழுது மிகுந்த மரியாதையுடன், பயத்துடன் பக்தியுடன் காணப்படுதல் ஆகும் (1 நாளாகமம் 29:20, மத்தேயு 22:21, ரோமர் 13:17).
4. நாம் ஒருபோதும் தற்செயலாகவோ அல்லது பொறுப்பற்ற நிலையில் தேவனுடன் இருக்கக்கூடாது. (யோவான் 13:13, எபிரெயர் 10:19-21).
5. ஆராதணை என்பது ஒருவிசுவாசிக்குள் உள்ள வேத உபதேசங்களை செயல்படுத்துவது ஆகும். உபதேசங்கள் அணைத்தையும் வெளிப்படுத்துவதே ஆராதணை. (நெகேமியா 8:6-10, 9:3).
6. நாம் தேவனை ஆவியில் ஆராதிக்கவேண்டும், தேவ ஆவியினால் ஆண்டுகொள்ளப்பட்டு, சத்தியத்துடனும், உபதேசங்களை துள்ளியமாய் பிரதிபலிக்கிற நிலையில் அவரை ஆராதிக்க வேண்டும். (யோவான் 4:23-24).
[20/10 1:45 pm] Elango: 7. இதினிமித்தம் வேதாகம உபதேசங்களை அநுசரித்து அவரை ஆராதிப்பது அதிக முக்கியமானதாய் இருக்கிறது. இதைப்போன்றே பாடும்பொழுதும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம், இனிய இசைக்கருவிகளுடன் பாடும் பொழுது பாடப்படும் பாடலின் பொருள், அர்த்தம் இவைகளை மறந்து பாடுதல் ஆராதணையில் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
8. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை ஜனங்கள் ஆராதித்தனர். (மத்தேயு 2:11, 9:38).
9. ஜனங்கள் தேவனை ஆராதிக்கவில்லை எனில் அவர்கள் பிசாசுகளை ஆராதிப்பார்கள். (உபாகமம் 8:19-20, 11:16, 30:17-20, ரோமர் 1:25).
10. எல்லோரும் இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக வணங்கி அவரை கர்த்தர் என அறிந்துகொள்ள் வேண்டும். ஆசீர்வதிக்கப்பட அல்லது நித்திய நியாயத்தீர்ப்புின் போது அவ்வாறு செய்தல் வேண்டும். (ஏசாயா 45:23, ரோமர் 14:11, பிலிப்பியர் 2:10).
11. நித்தியத்தில் பூரணமான ஆராதணை இருக்கும், மற்றும் உபதேசங்களைக்குறித்த பூரணமான அறிவு உண்டாயிருக்கும். (வெளிப்படுத்தல் 4:8-11).
12. ஆராதணை இரட்சிப்பில் துவங்குகிறது. (மாற்கு 5:1-10, 18-20).
13. ஆராதணை ஒரு விசுவாசி அவரது கர்த்தர் மீது தனது மனதை ஒருநிலைப்படுத்துவதை தெரிவிக்கிறது. (சங்கீதம் 29, 66, 96 , யோவான் 12:1-11).
14. ஆராதணையின் பாடல்கள். (1 நாளாகமம் 16:7-36).
[20/10 1:46 pm] Elango: *நாம் கீழ்க்கண்டவற்றின் மூலம் தேவனை ஆராதிக்கிறோம்:*
- தேவனுடய வசனங்களை வாசிப்பதன் மூலம் (கொலோசெயர் 4:16, 1 தெசலோனிக்கேயர் 5:27, 1 தீமோத்தேயு 4:13).
- தேவனுடைய வசனங்களை கற்றுக்கொள்வதன் மூலம். (2 தீமோத்தேயு 2:15, 3:15).
- தேவனுடைய வசனங்களை போதிப்பதன் மூலம். (அப்போஸ்தலர் 2:42, 6:7, 12:24, 18:28, 1 தீமோத்தேயு 4:6, 2 தீமோத்தேயு 1:13, 2:2).
- தேவனுடைய வசனங்களை பிரசிங்கிப்பதன் மூலம். (2 தீமோத்தேயு 4:2).
- *துதிபலியின் மூலம்.* (எபிரெயர் 13:15).
- நமது நற்கிரியைகளாகிய பலியின் மூலம். (எபிரெயர் 13:16).
- நமது சரீரத்தை ஜீவபலியாய் அற்பணிப்பதன் மூலம். (ரோமர் 12:1).
[20/10 2:02 pm] Elango: *எளியவன் என்றென்றைக்கும் மறக்கப்படுவதில்லை* வசனம் 18
➖எளியவர்களும், தேவனுடைய இராஜ்யத்திற்க்காக உபத்திரப்படுகிறவர்களுக்கும் தேவனுடைய *கவனத்துக்குரியவர்கள்*
➖அவர்களை தேவன் கைவிடுவதில்லை என்ற வாக்குத்தத்தம் அவர்களுக்கு உண்டு.
➖அவர்களுடைய ஜெபத்தை தேவன் நினைவு கூறுவார்.
➖எளிமையானவர்களுடைய நம்பிக்கையின்படி அவர்களுக்கு காரியங்களை நிறைவேற்றுவார்.
➖எளியவன் தேவனிடம் விசுவாசம் வைக்கும் போது அவன் தேவனுடைய பார்வையில் ஐசுவரியவான்
➖உன்னதவரின் பிள்ளையாக எளிமையாக கஷ்டப்படுவதை விட, அற்பமான இச்சையான உலக ஐசுவரியம் நமக்கு மேலானதல்ல.
➖ *நாய்களால் நக்கப்பட்டு படு வேதனையில் இருந்த லாசரு ஆபிரகாமின் மடியில் அல்லவா இளைப்பாற இடங்கிடைத்தது.
➖ பஞ்சு மெத்தையில் படுத்துறங்கும் பணத்தாசை பிடித்த பாவிக்கு கிடைக்கும் தூக்கத்தை விட, தேவ பிரசனத்தில் ஏழையான எளிமையானவனுடைய தூக்கம் மிகவும் இன்பமாக சமாதானமாக இருக்கும்.
➖பக்தியுள்ள எளியவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிகுந்த பராமரிப்பு பரலோகத்தில் உண்டு.
[20/10 2:07 pm] Elango: *எளியவர்கள் ஏழைகள் மேல் தேவனுக்கு மிகவும் கரிசனை எப்போதும் உண்டு*
உபாகமம் 15:3-4,7-11
[3]அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.
[4] *எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்;* இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்.,
[7]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் *உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.*❤❤❤❤❤❤❤
[9]விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, *உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு;*
அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.
[10]அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
[11] *தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும்* என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
[20/10 2:28 pm] Elango: 3⃣ *சீயோன் குமாரத்தியின் வாசல்* இது எங்கே இருக்கிறது....❓சங்கீதம் 9:13
*சீயோன் குமாரத்தின் வாசல் என்றால் எருசலேம் பட்டணத்தார்* என்று நினைக்கிறேன். மற்றவர்களுடைய கருத்தையும் கேட்கலாம்.
*சீயோன் - Zion என்றால் என்❓*
எருசலேம் பட்டணத்தில் நான்கு குன்றுகள் உண்டு.
2 சாமுவேல் 5:7
ஆனாலும் தாவீது *சீயோன் கோட்டையைப்* பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
🌇சீயோன் என்பது இன்னோம் பள்ளத்தாக்குக்கும், கீதரோனௌ பள்ளத்தாக்குக்கும் இடையிலுள்ள தென்கிழக்குக் குன்றை குறித்தது.
🌇சீயோன் என்பதற்க்கு தாவீதின் ஊர் என சொல்லப்பட்டது.
சங்கீதம் 74:2
[2]நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த *சீயோன் பர்வதத்தையும்* நினைத்தருளும்.
மீகா 4:2
[2]திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் *சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து* கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
எரேமியா 8:19
[19]இதோ, *சீயோனில் கர்த்தர் இல்லையோ?* அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.
ஏசாயா 8:18
[18]இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் *சீயோன் பர்வதத்தில்* வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
🌇 *சீயோன் என்பது பலமுறை எருசலேமை குறிக்கிறது.*
[20/10 2:33 pm] Elango: சங்கீதம் 9:13 ல் சொல்லப்பட்ட *சீயோன் குமாரத்தின் வாசல்* என்றால் எருசலேம் பட்டணத்தார்* என்று நினைக்கிறேன். மற்றவர்களுடைய கருத்தையும் கேட்கலாம்.
[20/10 2:56 pm] Elango: வேதத்தில் எருசலேம் தேவாலயத்திற்க்கு இருந்த *வாசல்கள்* எவைகள் என்பதை கீழே பார்க்கலாம்...
*இன்னோம் பள்ளத்தாக்கை நோக்கியிருக்கும் வாசல்கள்*
பள்ளத்தாக்கின் வாசல் நெகே. 3:13
குப்பைமேட்டு வாசல் நெகே. 3:13
*கீதரோன் ஆற்றை நோக்கியிருக்கும் வாசல்கள்*
ஊருணி வாசல் நெகே. 3:15
தண்ணீர் வாசல் நெகே. 3:26
*வடபக்கத்திலுள்ள வாசல்கள்*
குதிரை வாசல் நெகே. 3:28
கிழக்கு வாசல் நெகே. 3:29
மிப்காத் வாசல் - சேனை கூடுகிற வாசல். நெகே. 3:31
ஆட்டு வாசல் நெகே. 3:32, யோவான் 5:2
மீன் வாசல் நெகே. 3:3
பழைய வாசல் நெகே. 3:6
எப்பிராயீம் வாசல் 2 இராஜா 14:13
மூலை வாசல் 2 இராஜா 14:13
*தேவாலயத்திற்க்கு இன்னும் சில வாசல்கள் இருந்தன*
சூர் வாசல் 2 இராஜா 11:6
காவலின் பிறகே இருக்கிற வாசல் 2 இராஜா 11:6
சல்லெகெத் அல்லது மேற்ப்புறமான வாசல் 1 நாளா. 26:16
பர்பார் அல்லது வெளிப்புறமான வாசல் 1 இராஜா 26:18
கிழக்கு வாசல் எசே. 11:1
அலங்கார வாசல் அப். 3:10
[20/10 2:59 pm] Elango: யோவான் 10:9
[9] *நானே வாசல்* என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
*ஜீவ வாசல் - நம் ஆண்டவர் இயேசுநாதர்*
[20/10 3:05 pm] Jeyakumar Toothukudi VTT: praise the Lord
முழு இருதயம் அப்படின்னா என்ன? அதன் தன்மை எப்படி இருக்கும்? வசனத்தோடு உதாரணத்துடன் விளக்குங்க ஐயா!
BRO. R.Jeyakumar
[20/10 3:06 pm] Elango: நல்ல கேள்வி👌 .. முழு இருதயத்தோடு தேவனை துதிப்பேன் என்கிறார் தாவீது.
சங்கீதம் 9:1

[20/10 3:10 pm] Elango: தேவ ஊழியர்கள் பதில் கொடுங்களேன்🙏🙏
*முழு இருதயம்*
[20/10 3:11 pm] Edwin Devadoss Ayya VDM: 🎻🎸 *இன்றைய (20/10/2017) வேத தியானம் - சங்கீதம் 9

வேதாகமத்தில் ஜாதிகள் என்ற இடத்தில் *குடும்பம்*என்று வாசிக்க வேண்டும்.
[20/10 3:11 pm] Elango: டாக்டர் அம்மா சொல்லுங்களேன்...
முழு இருதயத்தோடு துதித்தல்
[20/10 3:14 pm] Elango: நல்ல விளக்கம் எட்வின் ஐயா. நன்றி👍👍👍👍🙏
[20/10 3:22 pm] Elango: நாம் நூற்றுக்கு நூறு மனிதர்களாக இருப்பதால், நிறைய விதத்தில் நமக்கு இடஞ்சல்கள், இடையூறுகள் இருப்பதுண்டு...
எல்லா நேரத்திலேயும் தெளிவான மனநிலையோடு இருக்கமுடியாது.அதனால் முழு இருதயம் என்ற Situation நமக்கு வராது.
அதனால் தான் நாம் சபைக்கு போகிறோம் அங்கே நாம் *குடும்பத்தின் காரியம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து முழுஇருதயத்தோடு ஆண்டவரை துதிக்கிறோம்*
*முழு இருதயம் என்றால் எல்லா சிந்தைகளையும், எல்லா எண்ணங்களையும் விட்டுவிட்டு தேவனை மாத்திரம் நோக்கி பார்க்கிற ஒரு இருதயம் அது தான் முழு இருதயம்*
- ஐயா எட்வின் @Edwin Devadoss Ayya VDM
[20/10 3:24 pm] Jeyanti Pastor VDM: Exactly Pastor
[20/10 3:35 pm] Dhanapal VTTT: It's true, pastor.
[20/10 3:42 pm] Elango: அநேக இடங்களில் கர்த்தரை துதிக்கும் போது ஒரு பாரம்பரியத்திற்க்காக துதிப்பார்கள்.அநேக நேரங்களில் அநேகருடைய இருதயம் ஆராதனையில் இருக்காது. முழு இருதயத்தையும் கர்த்தரிடத்தில் செலுத்துவது அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும்.
தாவீது சொல்லுகிறார்..👇🏻👇🏻
சங்கீதம் 119:25
[25] *என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.*
உலகத்தோடு இசைந்துக்கொண்டு நாம் கர்த்தரை துதிக்கமுடியாது. ஒரே நேரத்தில் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
இருதயம் திருக்குள்ளதும் கேடுள்ளதுமாயிருக்கிறது அடிக்கடி மெய்வழியை விட்டு பொய்வழியை நாடும். நாம் நம் இருதயத்தையும் ஆண்டவர் இயேசுவுக்கு கொடுக்கும்போதுதான் அந்த ஆராதனையின் கோட்பாடு நிறைவேறும்.
முழுமையாக நம்மை அர்ப்பணித்து நம் பாதையை கர்த்தருக்கு நேராக அர்ப்பணித்து தேவனை ஆராதிக்க வேண்டும்.
யோசபாத்து போல கர்த்தருக்கு உண்மையாக நடக்க வேண்டும் என்று பல தீர்மானங்கள் நாம் எடுத்து தேவனிடம் நாம் Turn ஆக வேண்டும்.
தானியேல் அப்படிதான் முழு இருதயத்தோடு பலகணியை திறந்துக்கொண்டு எருசலேமை நோக்கி ஆராதித்தார்.
*நம் இருதயம் மண்ணோடு ஒட்டிக்கொள்ளாமல் முழுஇருதயத்தோடு மகிழ்ச்சியோடு இருதயம் நிரப்பப்பட்ட ஒரு அனுபவம் தான் முழு இருதயத்தோடு முழு பெலத்தோடு கர்த்தரை ஆராதிப்பது.*
ஆண்டவர் சொன்னார் *முழு இருதயத்தோடு நீங்கள் என்னை தேடுவீர்களானால் என்னை கண்டுப்பிடுப்பீர்கள்.*
நீதிமொழிகள் 23:26
[26] *என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா;* உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
- பாஸ்டர் ஜெயந்தி @Jeyanti Pastor VDM
[20/10 3:43 pm] Edwin Devadoss Ayya VDM: முழு இருதயம் = சர்வாங்க தகன பலி = ஜீவபலி
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12:1
[20/10 3:56 pm] Elango: இதை அவர்களிடம் சொன்னால் கோபம் வந்துவிடும்😃
[20/10 3:58 pm] Elango: கடின உபதேசமல்ல... நிதர்சமான உண்மை👍👍👍
[20/10 4:00 pm] Edwin Devadoss Ayya VDM: இதை சொன்னால் சிலர் கிறித்தவ தீவிரவாதிகள் என்று குறிப்பிடுகிறார்கள்
[20/10 4:10 pm] Elango: கிறிஸ்துவின் சேனாதிபதிகளுக்கு பல பட்டங்கள் உலகம் கொடுக்கும்😀
உலகத்தை கலக்குபவர்கள்
சாத்தான்
எத்தன்
வஞ்சகன்
வாயாடி
சம்மதிக்க வைப்பவன்
கொள்ளை நோய்
கலகம் ஏற்ப்படுத்துகிறவன்
உயிரோடிருக்க தகாதவர்கள்..
.....
[20/10 4:21 pm] Elango: சீயோன் குமாரத்தின் வாசலுக்கு வசனத்தோடு விளக்கம்🙏🙏🙏👍👍
[20/10 4:23 pm] Edwin Devadoss Ayya VDM: 19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
எபிரேயர் 10:19
20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10:20
21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10:21
22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
எபிரேயர் 10:22
23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரேயர் 10:23
[20/10 4:44 pm] Jeyanti Pastor VDM: 13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது, அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
ஏசாயா 29
[20/10 4:45 pm] Jeyanti Pastor VDM: 31 ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை, அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது.
எசேக்கியேல் 33
[20/10 4:47 pm] Jeyanti Pastor VDM: 👆🏻this is not whole heart
[20/10 5:46 pm] Elango: 🎻🎸 *இன்றைய (20/10/2017) வேத தியானம் - சங்கீதம் 9⃣* 🎻🎸

[20/10 5:53 pm] Benjamin Prasad 2 VDM: துன்மார்க்கரும், தேவனை *மறக்கிற* எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
சங்கீதம் 9:17
ஏசாயா 51 : 12 - நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை *மறக்கிறதற்கும்* நீ யார்?
[20/10 5:56 pm] Benjamin Prasad 2 VDM: அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை *மறந்தார்கள்*; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல், வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
சங்கீதம் 106:9-14 TOV-BSI
http://bible.com/339/psa.106.9-14.TOV-BSI
[20/10 5:57 pm] Benjamin Prasad 2 VDM: அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல், வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, தங்கள் இரட்சகரான தேவனை *மறந்தார்கள்.*
சங்கீதம் 106:9-14, 21-22 TOV-BSI
http://bible.com/339/psa.106.9-22.TOV-BSI
[20/10 5:59 pm] Benjamin Prasad 2 VDM: இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கிரியைகளையும், தேவன் செய்த நன்மைகளையும், தேவனையும் மறந்த சம்பவம்.
[20/10 6:22 pm] Elango: சங்கீதம் 9:4
மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்ளும்போது தவறாக குற்றம் சாட்டும் போதும் நமது செயல்களும் கருத்துக் காலம் புறக்கணிக்கணிக படும் போதும் கர்த்தரை தேடுவோம் யாவற்றையும் சரி செய்வார்
[20/10 6:30 pm] Elango: சங்கீதம் 9:7-12
இப்பகுதியில் வரும் கர்த்தரின் செயல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எழுதி யானை நன்றி செலுத்துங்கள் இப்பகுதியில் நாம் நம்புவதற்கு ஏற்ற வாக்குறுதிகள் உண்டு அவற்றை வேதத்தில் அடிக்கோடிடலாம் சிக்கலான நேரங்களில் கர்த்தர் நமக்கு அடைக்கலம் தருகிறவர் நம்மை அவர் கைவிடுவதில்லை என்பவற்றிற்காக ஊக்கமாக நன்றி செலுத்துவாமாக
கர்த்தர் நியாயத்தீர்ப்பு செய்யும் நாள் உண்டு என்பதை கருத்தில் கொண்டு வாழ்வோமாக
[20/10 6:33 pm] Elango: சங்கீதம் 9:12
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்புரிகிறறவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாள் உண்டு இரத்த பலிகளை குறித்து கவனமாக விசாரித்து தீர்மானிக்கப்படும்
[20/10 6:34 pm] Kamal VTT: 4 நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.
சங்கீதம் 9 :4
நியாயம் தீர்த்தல் என்பது நிகழ்காலத்தில் நடப்பதை போன்று இந்த வசனம் காட்டுகிறது
ஆனால்,
சங்கிதம் 9:8 ல் எதிர்காலத்தில் நடப்பதை குறிப்பதாக உள்ளது!
1.நியாத்திருப்பு எப்பொழுது நடக்கும்! வாழும் போதே நடக்குமா? இல்லை இறந்த போது ஆன்மாவிற்கு நடக்குமா?
தெளிவான விளக்கம் கிடைத்தால் இன்னும் ஞானம் அடைவேன்!
[20/10 6:39 pm] Elango: சங்கீதம் 9:13
கர்த்தரின் ஒரு பெயர் *மரண வாசல்களிலிருந்து என்னை தூக்கிவிடுகிற கர்த்தர் என்பதாகும்.*
இப்பெயரை சொல்லி துதி செலுத்தி வசனத்திலுள்ள இருவித வாசல்களை தியானிப்போம்
மரண வாசல்
ஜீவ வாசல்
[20/10 6:44 pm] Elango: வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு நாம் மரித்த பிறகே நடப்பது
இந்த பூமியில் தேவன் அவருடைய பிள்ளைகளை சிட்சித்து வழிநடத்துகிறார்
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:8
[8] *எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.*
1 கொரிந்தியர் 11:31-32
[31]நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
[32] *நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.*
[20/10 6:46 pm] Elango: சங்கீதம் 9:15
மக்கள் செய்யும் தீமைகள் இறுதியில் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும் இதை அறியாமல் இருக்கிறார்கள்
[20/10 6:47 pm] Kamal VTT: சிட்சித்தல் அங்கு சொல்லபட்டு இருப்பதாக தெரியவில்லையே என் வழக்கையும் நியாயத்தையும் தீர்த்து என வருகிறதே!
[20/10 6:49 pm] Elango: சங்கீதம் 9:20
கர்த்தருடைய மகத்துவத்தை உணராததால் அவருக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகச் செயல்படுகின்றனர்
கர்த்தருக்கு முன்பாக தாங்கள் எல்லாவிதத்திலும் மிகவும் குறைந்தவர்கள் என்பதையும் திடீரென மரணமடைய நேரிடலாம் என்பதை நினைவில் கொண்டால் அவ்வாறு செய்ய மாட்டார்கள்
[20/10 6:51 pm] Elango: 4 நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்; *என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 9:4
தாவீது தேவனிடத்தில் கேட்கிறார் நீதியை நியாயத்தை அவருக்கு வேண்டியது நீதி நியாயம்
[20/10 6:51 pm] Elango: 8 *உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.*
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 9:8
[20/10 7:22 pm] Benjamin Prasad 2 VDM: இந்த வசனம் நியாயத்தீர்ப்பு பற்றி பேசுவதாக தெரியவில்லை சகோ
[20/10 7:23 pm] Benjamin Prasad 2 VDM: கர்த்தர் என் வழக்கை தீர்த்து வைத்தார். நீதி செய்தார் என்று தாவீது சொல்கிறார்....
[20/10 7:28 pm] Elango: சங்கீதம் 9:13-14
தேவன் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறவர்கள் அனேகர்.
தனக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேட்கின்றனர்
தாவீதின் கர்த்தருடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்க்கு மட்டுமன்றி அவருடைய துதியை மற்றவர்களுக்கு எடுத்துச் கூறுவதற்காகவும் தனக்கு உதவி கேட்கிறார்
கர்த்தர் உமக்கு செய்கிற நன்மைகளை எடுத்துக்கூறி ஊழியம் செய்கிறோம் நான் விண்ணப்பங்களின் நோக்கம் என்ன?
[20/10 7:31 pm] Elango: சங்கீதம் 9:17
கர்த்தர் நல்லவர் என்பது உண்மைதான் ஆனால் நரகம் என்று உண்டு அது வெறுமையாக இருக்காது இவைகளை கூறி பாவத்தில் இருப்பவர்களை நாம் எச்சரிக்கை செய்ய வேண்டும்
[20/10 7:31 pm] Benjamin Prasad 2 VDM: நிச்சயமாக சகோ
[20/10 7:34 pm] Elango: சங்கீதம் 9:18
அரசாங்கங்கள் அதிகாரிகள் செல்வந்தர்கள் போன்றவர்கள் - எளியவர்களை மறக்கலாம் ஆனால் தேவன் அவர்களை மறப்பதில்லை
[20/10 7:36 pm] Benjamin Prasad 2 VDM: *கர்த்தரை குறித்து அவருடைய மகத்துவங்களை குறித்து, கர்த்தரின் அவசியமான செய்கைகளை குறித்து நாம் மற்றவரிடம் சாட்சி பகர வேண்டும் என்கிற தேவ ஆலோசனையை சங்கீதம் 9 மூலம் நான் இன்று கற்றுக்கொண்டது மகிழ்ச்சி.*
[20/10 7:39 pm] Benjamin Prasad 2 VDM: ஆம் சகோ. நம் தேவன் சிறுமைப்பட்டவர்களுக்கு, எளியவர்களுக்கு நீதி செய்கிற தேவன்.
சங்கீதம் 82 : 3 - ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
[20/10 7:40 pm] Benjamin Prasad 2 VDM: சங்கீதம் 35 : 10 - சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.
http://onelink.to/p7hdt5
[20/10 7:41 pm] Benjamin Prasad 2 VDM: Sorry. அவசியமான அல்ல அதிசயமான......
[20/10 7:48 pm] Elango: 👍👍
ஏசாயா 25:4
[4] *கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.*❤❤❤❤❤❤
[20/10 11:23 pm] Elango: 👍👍
8 *உலகிற்கு* அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.

Post a Comment
0 Comments