[21/10 10:28 am] Elango: 🎻🎸 *இன்றைய (21/10/2017) வேத தியானம் - சங்கீதம் 1⃣0⃣* 🎻🎸
1⃣ சங்கீதம் 10 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
2⃣ கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? சங்கீதம் 10:1
நம் பிரச்சனையின் வேளையில், தேவன் நமக்கு நீதியை செய்ய தாமதம் ஆவது போல் ஏன் நமக்கு தெரிகிறது❓
3⃣ கர்த்தாவே, எழுந்தருளும்; *தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும்.*சங்கீதம் 10:12
சிறுமைப்பட்டவர்களுக்கும் நீதி நியாயம் உடனே கிடைக்காமலும், துன்மார்க்கருக்கு தான் இச்சித்ததெல்லாம் கிடைக்கிறது போல் தெரிகிறதே அது ஏன்❓
4⃣ கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
*இதன் அர்த்தம் என்ன...❓ இந்த கேள்வி உரிமையுடன் கேட்கப்பட்டதா அல்லது வேதனையுடன் உளரப்பட்டதா❓இந்த கேள்வியை தாவீது கேட்டது சரியா...❓*
5⃣ துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும், அவனுடைய *ஆகாமியம்* காணாமற்போகுமட்டும்அதைத் தேடி விசாரியும்.
சங்கீதம் 10:15
*ஆகாமியம்* என்றால் என்ன...❓
6⃣ கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே *குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிரmுக்கின்றன.*
தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; *ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.*
*திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.*
பொல்லாதவர்களின் துர்கிரியைகள் பலத்திருக்க காரணமென்ன❓எளியவர்களுக்கும், ஏழைகளுக்கு தேவனுடைய பாதுகாப்பு எப்படிப்பட்டது❓
7⃣ சங்கீதம் 10:7
*அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.*
இந்த வசனத்தின் அர்த்த என்ன❓
8⃣ சங்கீதம் 10:15
*துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்கம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.*
பொல்லாதவர்களை குறித்து நம்மிடம் வேண்டுதல் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்❓
9⃣ *சங்கீதம் 10 ன் மொத்த கருத்து என்ன❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[21/10 10:46 am] Elango: சங்கீதம் 10 முழுவதின் சாரமும், பொல்லாதவர்களின் துர்குணம் பலத்திருப்பதையும், அவர்கள் சிறுமையானவர்களை ஒடுக்குவதையும், தாவீது அவர்களுக்காக தேவனிடம் மன்றாடுவதையும் காட்டுகிறதாக இருக்கிறது.
*சிறுமைப்பட்டவர்களுக்காக, ஏழைகளுக்காக நாம் எப்போதும் கரிசனையுள்ளவர்களாகவும், தேவனிடம் விண்ணப்பம் செய்கிறவர்களாகவும் இருத்தல் வேண்டும்*
சங்கீதம் 41:1-3
[1] *சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.*
[2]கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.
[3]படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
[21/10 10:51 am] Elango: சங்கீதம் 10:1
[1]கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
தாவீது இப்படி ஜெபித்தாலும் தேவன் உண்மையுள்ளவர், நீதிமானையும் எளியவர்களையும் பலத்தவர்களின் கையுக்கு விலக்கி பாதுகாக்கிறவராக இருக்கிறார்.
சங்கீதம் 37:28
[28]கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; *அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்;*👍👍👍👍👍👍 துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோகும்.
[21/10 11:04 am] Elango: 2⃣ கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? சங்கீதம் 10:1

*தேவனுடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாக இருக்கிறது. தேவன் நமக்கு தூரமாக இருப்பது போல் தெரிவது நம்முடைய ஆவிக்குரிய முதிர்ச்சிக்காக இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை விட்டு விலகுவதில்லை. அவர் சர்வ வியாபி எல்லா இடத்திலும் இருக்கிறவர்*
கீழ்க்கண்ட வாக்குத்தத்தங்களை சமயத்திற்கேற்றவாறு பயன்படுத்தக்கற்றுக்கொள்ள வேண்டும்..👇🏻
☘கடினமான சூழ்நிலைகளில் (ரோமர் 8:28).
☘பாவம் செய்த பொழுது (1 யோவான் 1:9).
☘கவலைப்படும்பொழுது (1 பேதுரு 5:7).
☘நீங்கள் தவறிழைக்கும் போது (1 தெசலோ. 5:18).
☘ஜெபம் (மத்தேயு 7:7).
தனிமையில் (எபிரெயர் 13:5).
☘சந்தேகிக்கும் பொழுது (பிலிப்பியர் 4:13).
☘வேதாகமம் ( எபிரெயர் 4:12).
☘தூக்கமற்ற வேளைகளில் (சங்கீதம் 4:8).
☘மகிழ்ச்சியற்ற வேளைகளில் ( சங்கீதம் 147:3).
☘பழிவாங்கும்படி சோதிக்கப்படுகையில் (ரோமர் 12:17,19).
☘அபாயகரமான வேளைகளில் ( சங்கீதம் 23:4).
[21/10 11:07 am] Elango: ❤❤❤ *தேவன் ஏழைகளை குறித்து கவனம் உள்ளவராக இருக்க்கிறார், அவர்களை காக்கிறார்* ❤❤❤
💟1. தேவன் எப்பொழுதும் தேவை நிறைந்த ஏழைகள், பலவீனர், ஒடுக்கப்பட்டோர் போன்றோரைக்குறித்து அக்கறை உள்ளவராக இருக்கிறார். யாத்திராகமம் 22:21-27, உபாகமம் 15:11, 24:14 , 15.
💟2. *அநாதைகள், விதவைகள் இவர்கள் மீது ஆரம்பத்திலிருந்தே தேவன் விஷேச கவனம் செலுத்தி வருகிறார்.* உபாகமம்10:18எசேக்கியேல் 22:7.
💟3. *தேவன் ஏழைகளை குறிப்பிட்டு, அவர்களது சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்கிறார்.* மத்தேயு11:28-30,லூக்கா 4:18, 6:20.
💟4. விழுந்து போன உலகில் ஏழைகளாய் இருக்கும் ஜனங்கள் இருக்கின்றனர் என தேவன் இனங்கண்டுகொள்கிறார். மத்தேயு26:11, மாற்கு 14:7.
💟5. அநேக ஆதி சபையினர் தங்களது உலக சொத்துக்களை விற்று, தேவையுள்ள மற்ற கிறிஸ்தவர்களுக்கு கொடுத்து வந்தனர் அப்போ 4:32-37.
💟6. சபை ஏழைகளுக்கு அநுதினமும் சபை மூப்பர்கள் மூலம் அவர்களது அன்றாடத் தேவகளை சந்தித்து வந்தனர். ரோமர் 15:26, கலாத்தியர்2:10, யாக்கோபு 2:2 -7.
💟7. *ஜனங்கள் வேலை செய்கிறவர்களாயிருந்து அவர்கள் ஏழைகளாய் இருந்தார்களானால், அவர்களிடமிருந்து சபை ஒன்றையும் எதிர்பார்ப்பது இல்லை* 1தெசலோனிக்கேயர் 2:9-12, 2தெசலோனிக்கேயர்3:7-12.
[21/10 11:18 am] Elango: 2⃣ கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? சங்கீதம் 10:1

தேவன் நம் துன்ப நேரத்தில் ஏன் விலகி நிற்கிறார் போல் தெரிகிறது? அது நம்முடைய நன்மைக்காகவே அவர் முற்றிலும் விலகி நிற்கிறார்.
*நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் நன்மைக்காகவும், இந்த பூமியில் அவருடன் நம்முடைய உறவை வளப்படுத்தவும், சாத்தானுடைய வல்லமையை எதிர்க்கவும் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டிருக்கும் கடினமான காலங்கள் அது ஆனாலும் அவர் உன்னை விட்டு விலகமாட்டார், உன்னைக் கைவிடமாட்டார்* என்று அனுபவத்தில் இருந்து அறிந்துகொள்வதற்கு நம்மைத் தூண்டுகிறது.
ஆதியாகமம் 28:15;
உபாகமம் 31: 6,
உபாகமம் 31: 8;
யோசுவா 1: 5;
1 சாமுவேல் 12:22;
1 நாளாகமம் 28:20;
சங்கீதம் 37:25,
சங்கீதம் 37:28;
ஏசாயா 41:10,
ஏசாயா 41:17;
எபிரெயர் 13: 5.
ஏசாயா 41:10
[10] *நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்;* என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
[21/10 11:46 am] Jeyakumar Toothukudi VTT: praise the Lord
சங் 10:1 ல் ஆபத்து நேரிடுகிற சமயங்களில் தூரத்தில் நிற்கிறீர் ஏன்?என தாவீது கேட்டுள்ளார்
இதே தாவீதுதான்
கீழ்கண்ட சங்கீதங்களில் எப்படி கேட்டிருக்கிறார. பாருங்கள்.
2சாமு 22:19_
சங். 18:18_என் ஆபத்து நாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள். கர்த்தரோ எனக்கு ஆறுதலாயிருந்தார். _என்று கூறியுள்ளாரே.
சங் 46;1 ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங் 50:15. ஆபத்துக்காலத்தில் விடுவிப்பவர் என்றும் கூறியவர இந்த வசனத்தில் மட்டும் ஏன்? எதற்காக அப்படி சொல்ல வேண்டும்?அப்படி என்ன சம்பவம் நடந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்.
_Explain ஐயா!.
BRO. R . jeyakumar
[21/10 11:50 am] Elango: 5⃣ துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும், அவனுடைய *ஆகாமியம்* காணாமற்போகுமட்டும்அதைத் தேடி விசாரியும்.
சங்கீதம் 10:15
*ஆகாமியம்* என்றால் என்ன...❓
ஆகாமியம் என்றால் தீய குணம், பொல்லாப்பு, மூர்க்கத்தன்மை.
15 பொல்லார் மற்றும் தீயோர் கைகளை முறித்துவிடும்; அவர்களது *பொல்லாங்கைத்* தேடிக் கண்டுபிடித்து, அது அற்றுப்போகச் செய்யும். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 10:15
[21/10 11:51 am] Elango: சங்கீதம் 10Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
10 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்?
தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.
2 பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள்.
அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.
3 தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள்.
பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள்.
4 தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள்.
தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள்.
5 தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள்.
அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. [a]
தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள்.
6 தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள்.
அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.
7 அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள்.
அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள்.
8 அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.
ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள்.
ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
9 மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.
ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.
நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!”
என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.
12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்!
தேவனே, அத்தீயோரைத் தண்டியும்!
ஏழைகளை மறவாதேயும்!
13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள்.
ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.
14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர்.
அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்!
தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள்.
கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர்.
எனவே அவர்களுக்கு உதவும்!
15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.
16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.
அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.
அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.
துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும்.
தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.
*மற்றொரு மொழிப்பெயர்ப்பில் சங்கீதம் 10*
[21/10 11:53 am] Senthil Kumar Bro VTT: 7 என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.
நீதிமொழிகள் 8:7
[21/10 11:55 am] Senthil Kumar Bro VTT: 18 ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது, அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும்.
ஏசாயா 9:18
இதன் அர்த்தம் என்ன...??
[21/10 12:19 pm] Elango: 18 *கொடுமை* தீயைப்போல் கொழுந்து விட்டு எரிந்தது; அது முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது; காட்டின் அடர்ந்த பகுதிகளை அது கொளுத்தி விட்டது; அதனால் புகைமண்டலம் சுழன்று மேலே எழுந்தது.
எசாயா 9:18
*கொடுமை, தீமை, பொல்லாப்பு போன்றவை ஆகாமியம் என்பதற்க்கான வார்த்தைகள் தான்*
[21/10 1:41 pm] Kamal VTT: கொடுமையை விட அக்கிரமம் தான் சரியாக பொருந்தும்
[21/10 3:38 pm] Elango: 🎻🎸 *இன்றைய (21/10/2017) வேத தியானம் - சங்கீதம் 1⃣0⃣* 🎻🎸

1⃣0⃣ சங் 10:1 ல் ஆபத்து நேரிடுகிற சமயங்களில் தூரத்தில் நிற்கிறீர் ஏன்?என தாவீது கேட்டுள்ளார்

சங் 50:15. ஆபத்துக்காலத்தில் விடுவிப்பவர் என்றும் கூறியவர இந்த வசனத்தில் மட்டும் ஏன்❓ எதற்காக அப்படி சொல்ல வேண்டும்❓அப்படி என்ன சம்பவம் நடந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்.❓

[21/10 8:23 pm] Elango: 2⃣ கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? சங்கீதம் 10:1

இச்சங்கீதத்தில் துன்மார்க்கரின் கை பலத்திருப்பதையும், சிறுமைப்பட்டவர்களை அவர்கள் ஒடுக்கவதைப்பற்றியும், தேவன் அதை காணதவர் போலவும் நீதியை உடனே செலுத்தாமல் இருப்பது போல் தாவீது எழுதுகிறார்.
ஆவிக்குரிய ஜீவியத்தை பல நிலைகளை நாம் கடக்க வேண்டும்.
பல விதமான சோதனைகளில், துன்பங்களில் நாம் சிக்கும்போது பொறுமை மிகவும் அவசியமாக இருக்கிறது. உலகத்தில் நீதிமான்களுக்கு அநேக துன்பங்களும் பிரச்சனைகளும் இருந்தாலும் உலகத்தை ஜெயித்தவர் நம்மோடிருந்து எல்லா துன்பத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறவராக இருக்கிறார். சோதனையை நாம் ஜெபத்தில் பொறுமையோடு சகித்தே ஆக வேண்டும். *சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் என்கிறதே வேதம்*
யாக்கோபு 1:2-4,12
[2]என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
[3]உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
[4]நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.
[12] *சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.*
[21/10 8:23 pm] Elango: துன்மார்க்கருக்கு உடனே சீக்கிரமாக நியாயத்தீர்ப்பை தேவன் கொடுக்காமல் தாமதிப்பதன் காரணம், அவர்களும் மனந்திரும்ப வேண்டும் அவர்களும் குணப்பட வேண்டும் என்ற அன்பு தேவனின் ஒரே நோக்கமே.
ரோமர் 2:4
[4] *அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?*❓❓❓❓
[21/10 8:26 pm] Elango: 1⃣ சங்கீதம் 10 எந்த சூழ்நிலையில் அல்லது என்ன நோக்கத்திற்க்காக யாரால் எழுதப்பட்டது❓
*எழுதியவர்*:
இந்த சங்கீதத்தை எழுதியது யார் என்று தெரியாவிட்டாலும், *தாவீது எழுதியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது ஏனென்றால் கடந்த சங்கீதம் 9 ம் இந்த சங்கீதத்தீற்க்கு ஒத்து✅✅ இருப்பதால் இந்த கருத்தை சொல்லுகின்றனர்.*
*எழுதப்பட்ட சூழ்நிலை*:
இந்த சங்கீதமானது துன்மார்க்கரை குறித்த துன்மார்க்கத்தையும், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் குறித்தும் சொல்லுகிறது.
*துன்மார்க்கர் எப்படியெல்லாம் வாழுகின்றனர் என்பதையும், தேவன் அவர்களை கடைசியில் நியாயந்தீர்ப்பார் என்பதையும், சிறுமைப்பட்டவர்களையும், திக்கற்றவர்களுக்கும் நீதி நியாயம் தேவன் செய்வார் என்று உற்சாகமான நம்பிக்கையை இச்சங்கீதம் தருகிறது*
[21/10 8:47 pm] Elango: பரலோகத்தில் நமக்கு பல கிரீடங்கள் தேவன் கொடுப்பார். ஆனால் அதற்க்கு நாம் பல ஆவிக்குரிய கட்டங்களை ஜெயிக்க வேண்டும். 👑👑👑👑🤴🤴🤴👸👸👸👸
*முக்கியமாக சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான், அவன் ஜெயித்தால் தேவன் அவனுக்கு வாக்குத்தத்தம் செய்த ஜெயகிரீடத்தை கொடுப்பார்* 🤴🤴👸👸👸👸
*தேவனித்திலிருந்து நமக்கு கிடைக்கும் பிரதிபலன்கள் மற்றும் கிரீடங்கள்*
வேதாகமத்தில் பிரதிபலன்கள் மற்றும் இரட்சிப்பு இவை இரண்டும் மிகக்கவனமாக வேறுபிரித்துக் கூறப்பட்டுள்ளது.
👉 இரட்சிப்பு என்பது இலவசம், தேவனிடமிருந்து கிடைக்கும் ஈவு.
👉 பிரதிபலன் என்பது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் புகழ்ச்சிக்கேதுவாக ஆற்றப்படும் சேவையாய் இருக்கிறது.
👑 *இரட்சிப்பு - இழந்து போனோருக்கு அளிக்கப்படும் இலவச ஈவு.* எபேசியர்2:8-9, ரோமர்6:23, யோவான்4:10. நித்திய ஜீவன். யோவான் 3:36, யோவான் 5:24, யோவான் 6:47
👑 *பிரதிபலன் - இது கர்த்தருக்காக உண்மையுடன் உழைக்கும் இரட்சிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படுவது*. 1 கொரிந்தியர் 9:24, 25, வெளிப்படுத்தல்22:12. - இது கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பில் பகிர்ந்தளிக்கப்படும். 1கொரிந்தியர் 3:11-15, 2கொரிந்தியர் 5:10, ரோமர்14:10).
👑 *கிரீடங்களான பிரதிபலன்கள்:-*
👑மாசற்ற கிரீடம் - இச்சையடக்கத்தில் உண்மையுள்ளோருக்கு. 1 கொரிந்தியர் 9:24-27
👑மகிமையின் கிரீடம். - உபத்திரவங்களில் உண்மையுள்ளோருக்கு. 1 பேதுரு5:4
👑ஜீவ கிரீடம் - பாடுகளின் கீழ் உண்மையுள்ளோருக்கு யாக்கோபு1:12, வெளிப்படுத்தல்2:10
👑நீதியின் கிரீடம் - சாட்சியில் உண்மையுள்ளோருக்கு. 2 தீமோத்தேயு 4:8
👑மகிழ்ச்சியின் கிரீடம் - உண்மையாய் உழைத்தவர்களுக்கு 1 தெசலோனிக்கேயர்2:19, 20, பிலிப்பியர்4:1
[21/10 9:14 pm] Elango: 6⃣ கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே *குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிரmுக்கின்றன.*

பிரசங்கி 8:11
[11]துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
துர்மார்க்கரின் துர்கிரியைகள் பலத்திருக்க காரணம் அவர்களுக்கு உடனே தேவன் சரிக்கட்டாமலும், பிசாசு அவர்கள் மூலமாக துர்கிரியைகளை தூண்டிவிடுவதாலும் அவர்களின் கிரியைகள் பலத்திருக்கிறது.
ஆனால் தேவன் எளியவர்களையும், நீதிமான்களையும் பாதுகாக்கிறவராக இருக்கிறார். நீதிமான்களுக்கு ஏற்ப்டும் தீமைகளையும் நன்மைகளாக மாற்றுகிறார் நம் தேவன்.
*தேவ பிள்ளைகளின் துன்பங்களையும் நன்மையாக மாற்றும் தேவன்*
ஆதியாகமம் 50:20
[20]நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
ரோமர் 8:28
[28] அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
*சிறுமைப்பட்டவர்களுக்கும் நீதிமான்களையும் திக்கற்றவர்களையும் தேவன் பாதுகாக்கிறார், துன்மார்க்கரை கவிழ்த்துப்போடுகிறார்.*
சங்கீதம் 146:7-10
[7]அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.
[8]குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.
[9] *பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.*
[10]கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.
சகரியா 7:10
[10]விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.
கொடுமையான துன்மார்க்கரின் கர்வமான மனப்பான்மையையும் அவர்களுடைய போலியான வெற்றியையும் குறித்து சங்கீதக்காரன் துக்கப்படுகிறான்.
*தேவன் துன்மார்க்கரை கவிழ்த்துப்போட்டு திக்கற்றவர்களுக்கு உதவி செய்யும்படியாகவும், பாவத்தையும் பயங்கரத்தையும் அகற்றிப்போடும்படியாகவும் அவரே சகலத்தையும் ஆளுகிற இராஜாவாகவும் ஆளுகை செய்யும் படி தாவீது ஜெபிக்கிறான்.*
தேவன் சகலத்தையும் காண்கிறவராயிருக்கிறார். 👍👍👍👍👍
[21/10 9:28 pm] Elango: 8⃣ சங்கீதம் 10:15

தேவனை விட்டு தூரமாக வாழும் எந்த மனிதனின் நிலையும் இதுவே. இயற்கையாகவே தேவனை இழந்த, தேவன் இல்லாத மனிதனின் இருதயம் திருக்குள்ளதாயும், கேடுள்ளதாயும் இருக்கிறது.
புதிய ஏற்ப்பாட்டில் துன்மார்க்கருடைய இரட்சிப்பை குறித்து கவனமுடையவர்களாக கரிசனையுடையவர்களாக இருக்க வேண்டும்.
அதே வேளையில் கிறிஸ்துவானவர் பொல்லாப்பு எல்லாவற்றையும் அழித்துப்போடும் வவரைக்கும் , பாவமும் கொடுமையும், தீமையும் ஒருபோதும் முழுவதுமாக நசுக்கப்பட முடியாது என்பதையும், நீதிமான்கள் அரசாள முடியாது என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். வெளிப்படுத்தின விசேஷம் 19:11-20:10
ஆகவே தேவன் பொல்லாப்பு அனைத்தையும் சீக்கிரமாக அழித்துப்போடவும், கிறிஸ்துவானவர் என்றைக்கும் அரசாளவும், பாவமும் துக்கமும் ஒழிந்துப்போகவும் நாம் ஜெபிக்க வேண்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:10-11
[10]அவர்கள்: *பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.*
[11]அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
[21/10 9:40 pm] Elango: 3⃣ கர்த்தாவே, எழுந்தருளும்; *தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும்.*சங்கீதம் 10:12

துன்மார்க்கருடைய வாழக்கையையும், அவன் இச்சிப்பதெல்லாம் கிடைப்பதையும், அவன் எளியவர்களை துன்புறுத்ததலையும் தேவன் காண்கிறார். அவர்களுக்கு நேரிடும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சடுதியாக இருக்கும்.
யோபு 21:17-20,24,28,30
[17] *எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.*
[18]அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
[19]தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
[20] *அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.*
[24]அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
[28]பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறார்கள்?
[30] *துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.*
மக்களை கெடுக்கும் துன்மார்க்கர் தாங்கள் ஒருநாளில் தேவனுக்கு கணக்கு ஒப்புக்க வேண்டும் என்பதை மறக்கிறார்கள்.
*அவர்களின் கடைசி முடிவு வேதனைக்குறியது*
எந்த விசுவாசியும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் எதிலும் பங்கு கொள்ளக்கூடாது மாறாக அன்பிலும், மனதுருக்கத்திலும், கரிசனையிலும் மற்ற எல்லாருக்கும் உதவி செய்து அவர்களும் அப்படிப்பட்ட சோதனைகளை தவிர்க்க நாட வேண்டும்
[21/10 9:42 pm] Jeyanti Pastor VDM: நீதிமான் புடமிடப்படும் இடம் உபத்திரவத்தின் குகை.
[21/10 9:42 pm] Jeyanti Pastor VDM: எப்படி வேண்டுமானாலும் புடமிடுவார்.
[21/10 9:42 pm] Jeyanti Pastor VDM: ஆபத்து காலத்தில் காப்பாற்றுவார், விசுவாசத்தில் நிற்க வைப்பார். ஆனால் கடைசி வரை கைவிட மாட்டார்.
[21/10 9:42 pm] Jeyanti Pastor VDM: 2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும், சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும், நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே, ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.
பிரசங்கி 9:2
ஆனால் நீதிமான் கைவிடப் படுவதில்லை.
[21/10 9:45 pm] Elango: *செழித்து வாழும் துன்மார்க்கரின் வேதனையான முடிவும், நீதிமானின் நம்பிக்கையும்*👇🏻👇🏻👇🏻
சங்கீதம் 73:1-28
[1]சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவேm இருக்கிறார்.❤❤❤
[2]ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.
[3] *துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.*😒😒😏😏😏😔😔😟😟
[4] *மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.*😕😕😕🙃🙃🤔🤔🤔🙄🙄🙄
[5]நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.😳😳😳😳😳😳
[6]ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
[7] *அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.*🙁🙁🙁🙁🙁😳😳😳😳
[8]அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
[9]தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
[10]ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.
[11]தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
[12]இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.🤔🤔🤔🤔🤔
[13]நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
[14]நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
[15]இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
[16]இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
[17]அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.😖😖😣😣😣😣
[18] *நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.*
[19] *அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.*😩😫😫😫😫😫
[20]நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர்விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
[21]இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
[22] *நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.*👈👈👈☝☝☝☝☝☝👂👂👂👂👂
[23]ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.❤❤❤❤❤
[24]உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
[25] *பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.*❤❤❤❤👂👂👂
[26]என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
[27] *இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.*👂👂
[28]எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
[21/10 10:00 pm] Elango: 9⃣ *சங்கீதம் 10 ன் மொத்த கருத்து என்ன❓*
கர்த்தர் தூரத்திலிருக்கிறார் மறைந்திலுக்கிறார் என்று கருதியபோதும், தீயோரின் செயல்களை பற்றி கூறவும், பெலன் குறைந்தவர்களுக்காக விண்ணப்பிக்கவும் சங்கீதக்காரன் கருத்தாயிருந்தார்.
*ஆனால் நம் கர்த்தர் தூரத்திலில்லை அவர் நம்மோடிருக்கிறார். இதை தாம் உணர்ந்தால் நம்மால் ஜெபிக்காமலும்,துதிக்காமலும் இருக்கவே முடியாது. கர்த்தர் சர்வத்தையும் ஆளுகிறவர், கர்த்தர் சர்வ வியாபி, அவர் அறியாமல் ஒரு காரியமும் நடக்காது*
*நம்மை திருத்துவதற்க்காகவும், நம்மை ஸ்திரப்படுத்துவதற்க்காகவும் உபத்திரவங்களை அவர் அனுமதிக்கும் போது அவர் பிரசன்னத்தை நாம் உணர முடியாமல் போகலாம்.உலக தகப்பன் தன் பிள்ளையை சிட்சிக்கும் போது சிரித்துக்கொண்டிருக்க மாட்டார் மாறாக தகப்பனுடைய உள்ளத்தில் அன்பு இருக்கும், தன் மகன் திருந்த வேண்டும் என்ற நோக்கமிருக்கும்*
தேவன் நம்மை திருத்தும்போது தேவன் நம்மை கைவிட்டுவிட்டாரோ என்ற எண்ணம் வரலாம் ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை, அவர் நம்மை கைவிடுவதில்லை என்ற வாக்குத்தத்தை நாம் எப்போதும் மறக்கவே கூடாது.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:6-8,11
[6] *கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்* என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
[7]நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
[8]எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
[11] *எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.*
*இச்சங்கீதத்தில் உள்ள தீயோரின் குணங்களில் ஏதாவது நம்மிடம் இருந்தால் அதை அறிக்கையிட்டு விட்டுவிட்டால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் அவருடைய பிரசன்னத்தினால் நம்மை நிரப்புவாராக ஆமென்.*
சங்கீதம் 139:23-24
[23] *தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.*
[24] *வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.*
இதுவே நம்முடைய ஜெபமாக தேவனிடத்தில் அடிக்கடி ஏறெடுப்போமாக. ஆமென்.
🙏🙏🙏🚶🚶🚶
[21/10 10:03 pm] Elango: *குழுவினர் அனைவரும் அமைதியாக இருக்கின்றனரே, சங்கீதம் 10 ஐ பற்றிய உங்களுடைய கருத்தையும் பிறருக்கு பிரயோஜனப்படும்படி பகிரலாமே*
[21/10 10:36 pm] Saranya Sister VDM: *கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்*
34 ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
35 உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
36 மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
புலம்பல் 3:36
37 ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
புலம்பல் 3
*கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர், அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.*
57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
புலம்பல் 3:57
58 ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர், என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
புலம்பல் 3:58
*துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வானேன்? அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே, நீர் பதிலளிப்பீர், ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான், திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.*
60 அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
புலம்பல் 3:60
61 கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
புலம்பல் 3:61
62 எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
புலம்பல் 3:62
63 அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும், நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
புலம்பல் 3:63
64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
புலம்பல் 3:64
65 அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
புலம்பல் 3:65
66 கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.
புலம்பல் 3:66
[21/10 11:53 pm] Elango: 4⃣ கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

தேவனுடைய நீதிக்கான வெற்றி தாமாதம் ஆவதாக தோன்றுவதை குறித்தே இச்சங்கீதக்காரன் தேவன் ஜெபத்தோடு மன்றாடுகிறான்.
இதே சத்தம் தான் பரிசுத்தவான்களின் கதறலாகவும் இருந்தது அதற்கு தேவன் என்ன பதிலளித்தார்...வெளி. 6:9-10
வெளிப்படுத்தின விசேஷம் 6:9-11
[9]அவர் ஐந்தாம் முத்திரையை உடைந்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.

[11]அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், *அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.*
தற்காலத்தில் பொல்லாப்பும் அநியாயமும் பரவி காணப்படுகிறது. சில சமயங்களில் தேவன் தூரத்தில் நிற்ப்பது போல் நமக்கு தோன்றுகிறது.
தேவன் பொல்லாப்பையும், பாடுகளையும் தடுத்து நிறுத்தும்படி நாம் ஜெபிக்க வேண்டும்.
*அதே நேரத்தில் தேவன் நமக்கு நீதியை உடனே செய்யாவிட்டாலும், கர்த்தர் நம் ஜெபத்தை கேட்டிருக்கிறார் அவர் நமக்கு பதில் தருவார் என்ற நம்பிக்கையின் நிச்சயத்தோடு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும்*
லூக்கா 18:7-8
[7] *அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?*
[8] *சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
[21/10 11:56 pm] Elango: *எளியவர்களுக்கும், ஏழைகளுக்கு தேவனுடைய பாதுகாப்பு எப்படிப்பட்டது❓ கேள்வி 5 பின்பகுதி*
*கர்த்தருடைய பாதுகாப்பு அவருடைய பிள்ளைகளின் மேல் எப்போதும் உண்டு*❤❤❤❤❤❤
சங்கீதம் 124:1-8
[1]மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
[2] *கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,*❤❤❤❤
[3]அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
[4]அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
[5]கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
[6] *நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂
[7]வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.🏃🏃🏃🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀
[8] *நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.*👍👍👍👍👍👍👏👏👏💪💪💪💪

Post a Comment
0 Comments