Type Here to Get Search Results !

சங்கீதம் 8 தியானம்

[19/10 10:31 am] Elango: 🎷🎸 *இன்றைய (19/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 8⃣*🎺🎸

1⃣ *மனுஷனை* நீர் நினைக்கிறதற்கும், *மனுஷகுமாரனை* நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். சங்கீதம் 8:4

இந்த வசனம் எதன் அடிப்படையில் *யாரால்*  எழுதப்பட்டது....❓

2⃣ இதில் மனுஷனையும், *மனுஷகுமாரனையும்*  குறிப்பிடுவது ஏன்....❓

3⃣ நீர் நினைக்கிறதற்கும்,  விசாரிக்கிறதற்கும் அவன் *எம்மாத்திரம்* என்பதன் அர்த்தம் என்ன❓

4⃣ தேவனுடைய வலதுபாரிசத்தில் ( அப்போஸ்தலர் 7:55)  இருக்கும்
இயேசுகிறிஸ்துவுக்கும் இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்ட *விசாரித்தல்* என்பதற்க்கு ஏதாவது தொடர்பு உண்டா❓

5⃣ சங்கீதம் 8 ல் நீங்கள் கற்ற ஆவிக்குரிய பாடம் என்ன❓

6⃣ பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் *உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.* சங்கீதம் 8:2

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

7⃣ எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, *உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.* சங்கீதம் 8:9

இந்த வசனத்தை விளக்குங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[19/10 10:43 am] Jeyarani VTT: அன்பான எங்கள் பரம பிதாவே புழுதிக்கு சமமான எங்கள் மீது நீர் பாராட்டின உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது வேத்த்தின் மகத்துவங்களை நாங்கள் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவும். உமது தூய ஆவியானவர் தாமே எங்களோடு பேசும் படியாக தியானிக்கும் ஒவ்வொரு வரையும் ஒப்புக்கொடுக்கிறோம். எங்கள் குற்றங்குறைகளை ஒரு விசை மன்னித்து இரங்கும்படியாக எங்கள் மீட்பராம் இயேசுவின் ஈடு இணையற்ற இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே- ஆமென்.

[19/10 10:44 am] Elango: 5⃣ சங்கீதம் 8 ல் நீங்கள் கற்ற ஆவிக்குரிய பாடம் என்ன❓

இந்த சங்கீதத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் - *தேவ மகிமையும், மனிதர்களுக்காக மனிதனாக பிறந்த கிறிஸ்துவின் உயர்வையும்* பற்றி பாடப்படுகிற சங்கீதம்.

தேவனுடைய பண்புகளையும் மகத்துவங்களையும் பாடும் சங்கீதம்.

இந்த சங்கதத்தை பரிசுத்த ஆவியினாலே *தாவீது* எழுதி பாடப்பட்ட சங்கீதம்.

[19/10 10:48 am] Jeyarani VTT: மனுஷகுமாரன் என்று வேதத்தில் குறிப்பிடப்படுவது இயேசுவைத்தானே? மனுசன் என்பது நாம். தேவன் நம்மை விசாரிக்கிறார். அது நம் மீது உள்ள கிருபை் மனுஷகுமாரனை? தவறாக கேட்டிருந்தால் மன்னித்து விளக்கவும்

[19/10 10:50 am] Jeyarani VTT: நம்மையும் நமது பிள்ளைகளுயுமா?

[19/10 11:04 am] Elango: 2⃣ இதில் மனுஷனையும், *மனுஷகுமாரனையும்*  குறிப்பிடுவது ஏன்....❓

தேவனுக்கும் தேவதூதர்களுக்கும் அடுத்தப்படியாக மனிதன் இருக்கிறான். தேவ தூதர்கள் பணிவிடை ஆவிகளாக இருக்கின்றார்கள். என்றென்றும் தேவ தூதர்கள் அப்படியே இருப்பார்கள். எபிரேயர் 1:14

எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:14
[14] இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு *அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?*

ஆனால் மனிதன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது தேவனுடைய பிள்ளையாக மாறும் அதிகாரம் பெறுகிறான். யோவான் 1:12

யோவான் 1:12
[12]அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, *அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.*

*தேவ தூதர்களையும் நீயாயந்தீர்க்கும் அதிகாரம் பிள்ளைகளாகிய நமக்கே உரியது.*

கிறிஸ்துவோடு உட்கார்ந்து அரசாளும் உன்னத நிலை மனிதர்களுக்கு உண்டு. தேவ தூதர்களுக்கு இல்லை❗

1 கொரிந்தியர் 6:3
[3] *தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?* அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?

வெளிப்படுத்தின விசேஷம் 20:6
[6]முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; *இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.*👑👑👑

[19/10 11:08 am] Jeyarani VTT: அப்படியென்றால் மனுஷகுமாரனும் நம்மைத்தான் குறிக்கிறதா பிரதர்

[19/10 11:09 am] Elango: ஆதியாகமம் 1:26-28
[26]பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; *அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்👈👆🏻 என்றார்.*

[27]தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

[28]பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, *அதைக் கீழ்ப்படுத்தி,*👈👆🏻 சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் *ஆண்டுகொள்ளுங்கள்* என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

[19/10 11:16 am] Elango: *மனுஷகுமாரன் என்பது மனிதனாக வந்த கிறிஸ்துவை குறிக்கிறது.*

ஆதியில் மனிதனுக்கு ( ஆதாமுக்கு ) கொடுத்த ஆளுகையை அவன் இழந்தான்.

அந்த ஆளுகையை,  மனிதனாக வந்த கிறிஸ்துவின் மூலம் நாம் திரும்ப பெற்றுக்கொள்ளப்போகிறோம்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:5-8
[5]இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, *அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.*

[6]ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

[7] *அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்* என்று சொன்னான்.

[8] *சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார்* என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.

[19/10 11:34 am] Elango: 2⃣ இதில் மனுஷனையும், *மனுஷகுமாரனையும்*  குறிப்பிடுவது ஏன்....❓

பழைய ஏற்ப்பாட்டில் சில வசனங்களில் *மனுஷன் அல்லது மனுஷகுமாரன்* என்று வருவது இயேசுகிறிஸ்துவை குறிக்கிறதாக இருக்கிறது.

*பழைய ஏற்பாடு*

தானியேல் 7:13
[13]இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, *மனுஷகுமாரனுடைய* சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:6-8
[6]ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
[7] *அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்* என்று சொன்னான்.

[8]சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.

எபேசியர் 1:19-23
[19]தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
[20]எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
[21] *அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,*👑👑👑👑

[22] *எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,*

[23]எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

[19/10 11:38 am] Elango: புதிய ஏற்ப்பாட்டில் கிறிஸ்துவை குறிக்கும்படி *மனுஷகுமாரன்* என்றே எழுதப்பட்டிருக்கிறது.

1⃣ அவருடைய மானிடத்தன்மை

லூக்கா 7:34
[34] *மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்;* அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.

2⃣ அவருடைய தாழ்மை

மத்தேயு 8:20
[20]அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; *மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை* என்றார்.

3⃣ மனிதனின் இரக்க சுபாவம்.

லூக்கா 19:10
[10] *இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்* என்றார்.

[19/10 11:41 am] Elango:
சங்கீதம் 8 விளக்கவுரை

தலைப்பு:- கர்த்தரின் மகத்துவம்

வச.1 முகவுரை- கர்த்தரின் மேன்மை, வச.2 குழந்தைகளின் வாயினால் பெலன், வச 3-8 மனிதனுக்கு தேவன் அருளிய நிலை, வச.9 முகவுரை கர்த்தரின் மேன்மை.


வசனங்களுக்கான விளக்கம்:-

சங்கீதம் 8:1

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

இந்த சங்கீதத்தின் கருப்பொருள் இந்த வசனத்தில் உள்ளது. இந்த சங்கீதத்தில் உள்ள கர்த்தரின் செயல்களை வரிசையாக பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றையும் தியானியுங்கள். மேசியா குறித்த சங்கீதங்களில் இது இரண்டாவது சங்கீதம் ஆகும்.

சங்கீதம் 8:2

பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

இயேசு எருசலேமுக்குப் பயணியாக வந்தபோது தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட தக்கவர் உன்னதத்தில் ஓசன்னா என்று பாடினபோது நிறைவேறின தாக இயேசு கூறினார் (மத் 21:9,15-16). குழந்தைகள் எளிதாக கர்த்தரை நம்புவதைப்போல் நம்புவதற்கு எனக்குக் கிருபை தாரும் என்று வேண்டிக் கொள்வோமாக.

சங்கீதம் 8:3

உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

கர்த்தரின் செயல்களையும் அவரின் மகாபெரிய படைப்புகளையும் மனிதனையும் ஒப்பிட்டு பாருங்கள். அவருடைய கெம்பீரத்தை உணருங்கள். சூரியனை பற்றி கூறாததால் இது இரவில் வானத்தைப் பார்த்து பிரமிச்சு பாடிய பாடல் என்று கருதலாம். மகா பெரிய விண்மீன்களை உண்டாக்கிய சிறப்பான ஆற்றலை சிறிய அணுவின் படைப்பிலும் காணலாம். ஒரு சிறிய புல்லின் இலையானது ஆகாரம் சேகரித்தல் சுவாசித்தல் போன்ற செயல்கள் செய்வதை சிந்தித்து பாருங்கள். இப்படி எந்த ஒரு பொருளையும் நன்கு ஆராய்ந்து பார்க்கிறவன் அது மிகுந்த ஞானமாக படைக்கப்பட்டுள்ளதை கண்டறிவான். எல்லாவற்றிலும் தேவனுடைய செயலை ஆவிக்குரிய மனம் கண்டு கொள்ளும். சூரியன் சந்திரன் விண்மீன்கள் யாவும் இவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும் மண்ணினால் உருவாக்கப்பட்ட எனக்கு அவர் அருளிய உணர்வும் ஆராயும் உள்ளமும் அவற்றிற்கு இல்லை
(சங் 139:14).

சங்கீதம் 8:4

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

கர்த்தரின் மாபெரும் படைப்புகளை உற்று நோக்கும்போது மனிதனை குறித்து அவர் ஏண் இவ்வளவு அக்கறை கொள்கிறார் என்பது ஆச்சரியத்தை தருகிறது. கர்த்தரின் பார்வையில் மனிதன் மதிப்பு உடையவன். எந்த மனிதனையும் ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதக்கூடாது. அவனை கர்த்தர் தன் சாயலிலும் உருவத்திலும் உருவாக்கியுள்ளார். அவனுக்காக தன் ஒரேபேரான குமாரனை பலியாக கொடுக்கும் அளவிற்கு மனிதன் மதிப்பு மிக்கவன்.

சங்கீதம் 8:5

நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

தேவனுக்கும் தேவதூதர் களுக்கும் அடுத்த நிலையில் மனிதன் உள்ளான். தேவதூதர்கள் பனிவிடை ஆவியா இருக்கிறார்கள் (எபி 1:14). ஆனால் மனிதன் இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது தேவனுடைய பிள்ளை ஆகும் படியான அதிகாரத்தைப் பெறுகிறான் (யோவா 1:12). இறுதியாக தேவனுடைய பிள்ளையாக இருந்து தேவதூதர் களையும் நியாயம் தீர்க்கும் அளவிற்கு உயர்த்தப்பட இருக்கிறான் (1 கொரி 6:3). கிறிஸ்துவோடு உட்கார்ந்து (எபே 2:7) அரசாலும் (வெளி 20:6) உன்னத நிலை மனிதனுக்கு உண்டு . அவை தூதர்களுக்கு இல்லை.

சங்கீதம் 8:6

உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.

7 ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,

8 ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

எல்லாவற்றையும் ஆள்வது என்றால் நமது விருப்பப்படி நடத்துவது மட்டுமல்ல அவற்றின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது ஆகும். எபி 2:6-9 இல் இந்த பகுதி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சங்கீதம் 8:6

உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.

மனிதனுக்கு கீழ் படுத்தப்பட்டவை அநேகம் உண்டு. ஆகிலும் சகலமும் அவனுக்கு கீழ் பட்டிருக்கும் காலம் இனி வரை இருக்கிறது (ரோம 8:19-23; ஏபி 2:5-8).

- http://charlesmsk.blogspot.in/2017/10/8.html?m=1

[19/10 12:10 pm] Jeyanti Pastor VDM: 8:4-6 புதிய ஏற்பாடு இந்த வசனங்களை (செப்து விந்து) பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழி பெயர்ப்பிலிருந்து குறிப்பிடுகிறது

[19/10 12:12 pm] Elango: செப்து என்றால் என்ன பாஸ்டர்

[19/10 12:13 pm] Jeyanti Pastor VDM: செப்துவஜிந்து

[19/10 12:14 pm] Jeyanti Pastor VDM: கிரேக்க வார்த்தையாம் மனுஷகுமாரனை குறிக்கிறதாம்

[19/10 12:15 pm] Sam Jebadurai Pastor VDM: ❌❌ தவறு

[19/10 12:16 pm] Jeyanti Pastor VDM: Is it? Then tell me Pastor, for its mentioned in other Bible

[19/10 12:18 pm] Sam Jebadurai Pastor VDM: செப்துவஜிந்து என்பது LXX அல்லது  எழுபதின்மர் மொழி பெயர்ப்பு எனப்படும் பழமை ஏற்பாட்டின் முதல் மொழி பெயர்ப்பான கிரேக்க மொழிபெயர்ப்பின் பெயராகும். எழுபது பேர் மொழி பெயர்த்ததால் இது எழுபதின்மர் மொழிபெயர்ப்பு என அழைக்கப்படுகிறது.

[19/10 12:19 pm] Elango: 3⃣ நீர் நினைக்கிறதற்கும்,  விசாரிக்கிறதற்கும் அவன் *எம்மாத்திரம்* என்பதன் அர்த்தம் என்ன❓

கர்த்தரின் மாபெரும் படைப்புகளை உற்று நோக்கும்போது மனிதனை குறித்து அவர் ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறார் என்பது ஆச்சரியத்தை தருகிறது.❤❤❤❤

 கர்த்தரின் பார்வையில் மனிதன் மதிப்பு உடையவன். எந்த மனிதனையும் ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதக்கூடாது. அவனை கர்த்தர் தன் சாயலிலும் உருவத்திலும் உருவாக்கியுள்ளார்.

 அவனுக்காக தன் ஒரேபேரான குமாரனை பலியாக கொடுக்கும் அளவிற்கு மனிதன் மதிப்பு மிக்கவன்.❤💛💛💚💚

மத்தேயு 10:31
[31]ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் *நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.*

1 யோவான் 3:2
[2]பிரியமானவர்களே, *இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்,* இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

[19/10 12:19 pm] Jeyanti Pastor VDM: K. Then it seems total translation.

[19/10 12:20 pm] Jeyanti Pastor VDM: Yes,

[19/10 12:23 pm] Sam Jebadurai Pastor VDM: இந்த மொழிபெயர்ப்பில் எபிரேயத்தில் ஆதாமின் மகன் அல்லது மனிதனின் மகன் என்ற பதம் வருகிறது. இது கிரேக்க மொழி பெயர்ப்பில் அந்த்ரபோஸ் குகியோஸ் மனுஷன் குமாரன் என வருகிறது.

[19/10 12:25 pm] Senthil Kumar Bro VTT: Thanks pastor

[19/10 12:25 pm] Sam Jebadurai Pastor VDM: எபிரேயத்தில் ஆதாம் என்ற வார்த்தைக்கு மனிதன் என அர்த்தம். இதன் மூல வார்த்தை ஆவ்டாம் இதற்கு சிகப்பு, இரத்தம், இரத்தத்தால் தோய்க்கபட்ட என அர்த்தம்.

[19/10 12:45 pm] Elango: 4⃣ தேவனுடைய வலதுபாரிசத்தில் ( அப்போஸ்தலர் 7:55)  இருக்கும்
இயேசுகிறிஸ்துவுக்கும் இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்ட *விசாரித்தல்* என்பதற்க்கு ஏதாவது தொடர்பு உண்டா❓

[19/10 1:40 pm] Premraj 2 VTT: Nice explanation, Thank you

[19/10 1:58 pm] Tamilmani Ayya VDM: _*சங்கீதம் 8: 2- சிறுபிள்ளைகளின் வரம்*_

1. சிறுபிள்ளைகளுக்கு கர்த்தர்
தீர்க்கதரிசன வரத்தை தந்திருக்கிறார்.

2. அவர்களுக்கு சீரான துதியை தந்திருக்கிறார்.

3. அவர்கள் வாயில் பெலனை – வல்லமையை  கொடுத்து இருக்கிறார். அந்த வல்லமையால் எதிரிகளையும் பழிகாரர்களையும் அடக்கிப்போட (Silent பண்ண) முடியும்.

இயேசு கிறிஸ்து கடைசியாக எருசலேமிற்க்கு கழுதை மேல் அமர்ந்து வந்த பொழது நடந்த உரையாடலை படியுங்கள்.

“இயேசு செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,

சிறுபிள்ளைகள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ? என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி (Perfectly Praise) உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
– மத்தேயு 21: 15 – 16

பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் (Strength) உண்டுபண்ணினீர்.
– சங்கீதம் 8: 2

“அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் (Prophecy) சொல்லுவார்கள்;”
  – யோவேல் 2: 28

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் (Prophecy) தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்;
  – அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 17

இன்றைய திருச்சபைகளிலே குழந்தைகளை தீர்க்கதரிசிகளாக எழுப்ப சபைகளிலே  அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இதுதான் கடைசி நாட்கள். உறுதியாகவே சொல்லுகிறேன்,  அவர்கள் துதியில் பெலன் உண்டு. எதிரிகள், பழிகாரர்கள் அடங்கிப்போவார்கள். குழந்தைகள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
ஆமென். 

நாம் இப்போது எந்த காலத்தில் இருக்கிறோம்? குழந்தைகள் அறிந்துக்கொள்ள வேண்டியது என்ன?

நாம் இப்போது வேதாகமத்தின் கடைசி புத்தகமான _வெளிப்படுத்தின விசேஷம்/ திருவெளிப்பாடு புத்தகத்தின் காலத்தில் இருக்கிறோம். ஆகவே பரிசுத்த ஆவியானவர் தந்தருளின அந்த புத்தகத்தை ஆவியானவர் துணையுடன் நாம் படிக்க வேண்டும். வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் பக்கங்களை திருப்ப ஆரம்பியுங்கள்.
-த. ம

குழந்தைகளுக்கான தீர்க்கதரிசன
ஜெப வேண்டுகோள்கள்

1. கர்த்தரின் பெரிதான சிறந்த சித்தம் குழந்தைகளுக்கு குறிக்கப்பட்டுள்ளதால் அவைகள் ஜெயமாக செய்து முடிக்கப்பபட ஜெபியுங்கள். குழந்தைகள் எந்த தடையுமில்லாமல் அசாதாரணமான வரங்களைப்பெறவும் ஆவிக்குரிய சந்திப்புகளை பெறவும் ஜெபியுங்கள்.

2. குழந்தைகளின் பெற்றோர்கள் பிள்ளைகள் கர்த்தருடைய முகத்தைத் தேடுவதற்கு உதவ நடத்தையுள்ள சூழலை திட்டமிட வேண்டி ஜெபியுங்கள். அண்மைக்காலமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கடவுளைப்பற்றி கற்றுக்கொள்வதைப் அவர்கள் பயிலுபவைகள் மற்றும் கல்வி அம்சங்களை வெளிப்படுத்தும் அதே வழியில் அதேவிதமான உணர்வை வெளிப்படுத்தவில்லை.

3. சாத்தானின் அழிக்கும் செயல்கள் கட்டப்பட ஜெபியுங்கள்.

4. வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான சாத்தானின் செயல்கள் தடுக்கப்பபட ஜெபியுங்கள்.

5. குழந்தைகளை கடத்தி  விபச்சாரத்திற்க்கு வற்புறுத்தும் சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட ஜெபியுங்கள். பள்ளிக்கூடத்திற்க்குச் செல்லும் குழந்தைகள் நடுவில் போதை மருந்துகள் பயன்படுத்துவது  வேகமாக அதிகரித்து வருகிறது. குழந்தைகள் வழிதவறிப்போக செய்ய இவைகள் சாத்தானின் தந்திரமாகும். இந்த கிரியைகள் முழுவதுமாக அழிக்கப்பட ஜெபியுங்கள்.

[19/10 5:58 pm] Elango: சங்கீதம் 8:6
[6] *உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து,*

இயேசுகிறிஸ்துவில் மாத்திரமே இந்த சத்தியம் பூரணமாக நிறைவேறும்.

*மனித குலத்தின் பிரதிநிதியாக அவர் இருப்பதால் எல்லா சிருஷ்டிப்பின் மீதும் முழு ஆளுகையும் அவருக்கு மாத்திரமே கொடுக்கப்படும்.*

பிலிப்பியர் 2:9-11
[9]ஆதலால் *தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,*

[10]இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

[11]பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

[19/10 6:11 pm] Elango: சங்கீதம் 8:5
[5]நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; *மகிமையினாலும் கனத்தினாலும்* அவனை முடிசூட்டினீர்.

மனித இனத்தின் மீது தேவன் வைத்திருக்கும் சிறப்பையும் கனத்தையும் இச்சங்கீதம் வெளிப்படுத்துகிறது.

மனிதர்கள் மட்டுமே தேவ சாயலில் பிரத்தியேகமாக ஒரு மகிமையான நோக்கத்திற்க்காக  சிருஷ்டிக்கப்பட்ட  ஒரு படைப்பு.

*நாம் மிருகங்கள் அல்ல, மிருகங்கள், பறவைகளை விட தேவனுக்கு விசேஷமானவர்கள்.*

மத்தேயு 6:26
[26]ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; *அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்* அல்லவா?

நாம் தேவனுக்கு அவ்வளவு விலையேறப்பெற்றவர்களும், அவருடைய கரிசனைக்கும் பிரியத்திற்க்கும் சிறப்பு வாய்ந்தவர்கள் நாம்.

*தமது சிருஷ்டிப்பின் மேல் ஆளுகை செய்வதற்க்கு என்று மனிதனை தெரிந்துக்கொண்டிருப்பதன் மூலம் நம்மை அவர் கனப்படுத்தியிருக்கிறார்*

ஆதியாகமம் 1:28
[28]பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் *ஆண்டுகொள்ளுங்கள்* என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம் 2:15,19
[15] *தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.*

[19]தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, *ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்;* அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

நமது சிருஷ்டி கர்த்தாவாகிய அவருக்கு நாம் எப்பொழுதும் நன்றியையும் மகிமையையும் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

[19/10 6:11 pm] Elango: யோபு 36:24-25
[24] *மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.*

[25]எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.

[19/10 6:20 pm] Elango: ரோமர் 1:21
[21]அவர்கள் தேவனை அறிந்தும், *அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து,* தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.🌑🌑🌑🌑

சர்வத்தையும் படைத்த நம் பரம தகப்பனுக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

அப்படி அவருக்கு மகிமையை செலுத்தாதவர்கள் தன்னிடமுள்ள ஒளியை இழப்பார்கள். அவர்கள் இருதயம் இருளடையும்.

[19/10 6:21 pm] Elango: 1 சாமுவேல் 2:8
[8]அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

மனிதனுக்காக யாவையும் செய்கிறவர். மனிதனாகவே வந்தவர்.

[19/10 6:22 pm] Elango: சங்கீதம் 19:1
[1]வானங்கள் *தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,* ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

[19/10 7:23 pm] Elango: 🎷🎸 *இன்றைய (19/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 8⃣*🎺🎸

1⃣ *மனுஷனை* நீர் நினைக்கிறதற்கும், *மனுஷகுமாரனை* நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். சங்கீதம் 8:4

இந்த வசனம் எதன் அடிப்படையில் *யாரால்*  எழுதப்பட்டது....❓

2⃣ இதில் மனுஷனையும், *மனுஷகுமாரனையும்*  குறிப்பிடுவது ஏன்....❓

3⃣ நீர் நினைக்கிறதற்கும்,  விசாரிக்கிறதற்கும் அவன் *எம்மாத்திரம்* என்பதன் அர்த்தம் என்ன❓

4⃣ தேவனுடைய வலதுபாரிசத்தில் ( அப்போஸ்தலர் 7:55)  இருக்கும்
இயேசுகிறிஸ்துவுக்கும் இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்ட *விசாரித்தல்* என்பதற்க்கு ஏதாவது தொடர்பு உண்டா❓

5⃣ சங்கீதம் 8 ல் நீங்கள் கற்ற ஆவிக்குரிய பாடம் என்ன❓

6⃣ பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் *உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.* சங்கீதம் 8:2

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

7⃣ எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, *உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.* சங்கீதம் 8:9

இந்த வசனத்தை விளக்குங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[19/10 11:09 pm] Elango: 7⃣ எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது. சங்கீதம் 8:9

இந்த வசனத்தை விளக்குங்கள்.

தேவனுடைய நாமம் பரிசுத்தமானது, அவருக்கே உரியது. அவரது நாமத்தை நாம் வீணீலே வழங்க கூடாது.

லூக்கா 1:49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

 மோசேயிடம் தேவன் சொன்னார்  ’இருக்கிறேன்’ என்பவர் உன்னை அனுப்பினவராய் இருக்கிறேன் என்றார். நான் "இருக்கிறவராகவே இருக்கிறேன்", நான் எப்பொழுதும் தொடர்ந்து இப்படியே இருக்கிறேன் என்றார்.

 *எல்லாக் காலங்களிலும் நான் இருக்கிறவராக இருக்கிறேன்.*

 இப்படிப்பட்ட பெயரானது நமக்கும் தேவனுக்குமிடையே பெரிய வேறுபாட்டை வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது.

 நாம் ஒருவரும் "இருக்கிறவர்" என்கிற நாமத்தை இந்த அர்த்தத்தில் சொல்லமுடியாது, சிருஷ்டிகர் மட்டுமே இப்படிப்பட்ட நாமத்தை சொல்லமுடியும்.

 நாம் இடம் மற்றும் காலத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கிறோம்.

 தேவனோ இடம் அல்லது காலம் இவற்றிற்கு அப்பாற்பட்டவராய் இருக்கிறார்.


மல்கியா 1:11 சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், *என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்;* எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; *என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்* என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

[19/10 11:21 pm] Elango: 6⃣ பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். சங்கீதம் 8:2

இந்த வசனத்தின் அர்த்தம் என்ன❓

பாலகர் குழந்தைகள் என்பதற்கு நாம் அப்படியே எழுத்தியல் ரீதியாகவும் குழந்தைகள் என்று எடுக்கலாம்.

*பாலகர் குழந்தைகள் என்பதற்கு குழந்தையை போல்  யார் தன்னை தாழ்த்துகிறார்கள்களோ அவர்களையும் பாலகர் குழந்தைகள் என்று சொல்லலாம்*

லூக்கா 10:21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, *பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்;* ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
[19/10 11:30 pm] Elango: 15. *எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல்* தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். Mark 10:15

குழந்தைகளின் சுபாவங்களை கொண்டவர்களை அதாவது தாழ்மை, அப்படியே தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிதல், செவிசாய்த்தல்...

[19/10 11:39 pm] Elango: *பாலகர் குழந்தைகள் என்பதற்கு குழந்தையை போல்  யார் தன்னை தாழ்த்துகிறார்கள்களோ அவர்களையும் பாலகர் குழந்தைகள் என்று சொல்லலாம்*

மத்தேயு 18:3 நீங்கள் *மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல்* ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:4 ஆகையால் *இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன்* எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

மத்தேயு 19:14 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; *பரலோகராஜ்யம் <<<அப்படிப்பட்டவர்களுடையது* >>>> என்று சொல்லி,

[19/10 11:45 pm] Jeyanti Pastor VDM: Very Beautiful Meditation இன்னைக்கு, ஒவ்வொரு நாள் காலையிலும் நான் ஆவலுடன் வாசிக்கும் சங்கீதம். I love this Passage so much Pastors. Thank you. 🙏🏼🙏🏼👍🏾

[19/10 11:46 pm] Elango: லூக்கா 10:17,20-21
[17]பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: *ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.*☝☝☝☝☝☝☝☝☝☝☝

[20]ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.☝☝☝☝👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

[21]அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, *பாலகருக்கு* வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

*சீஷர்களை தான் அங்கே ஆண்டவர் இயேசு பாலகர் என்று சொல்லுகிறார்*

நாமும் பாலகராக மாறுவோமா... குழந்தையை போல தாழ்த்துவோமோ ...

🙏🙏🚶🚶

Post a Comment

0 Comments