Type Here to Get Search Results !

சங்கீதம் 7 தியானம்

[18/10 10:12 am] Elango: 🎼🎸 *இன்றைய (18/10/2017)  வேத தியானம் -  சங்கீதம் 7⃣*🎼🎸

1⃣ சங்கீதம் 7 யாரால், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது அல்லது என்ன நோக்கத்திற்க்காக எழுதப்பட்டது❓

2⃣ சங்கீதம் 7 லிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன❓

3⃣ *ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.* சங்கீதம் 7:7

என்பதன் அர்த்தம் என்ன❓

4⃣ தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; *அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.* சங்கீதம் 7:11

நாள்தோறும் *பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்* என்று வசனம் சொல்லும்போது, பாவத்தை வெறுத்து பாவிகளை *நேசிக்கிறார்* என்ற கருத்து சரியானதா❓

5⃣ அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். சங்கீதம் 7:16

என்பதன் அர்த்தம் என்ன❓

6⃣ என் தேவனாகிய கர்த்தாவே, நான் *இதைச்* செய்ததும், என் *கைகளில்* *நியாயக்கேடிருக்கிறதும்* , சங்கீதம் 7:3

எதை செய்ததாக கூறுகிறார்❓
 *நியாயக்கேடு* என்றால் என்ன..?
அவர் கையில் அது இருக்கு என்றால் எப்படி❓

 7⃣ தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, *அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்* சங்கீதம் 7:11

இது இன்றும் தொடர்கிறதா❓சினம் வேறு கோபம் வேறா❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[18/10 9:48 am] Edwin Ayya VTT: சங்கீதம் 7 விளக்கவுரை

தலைப்பு:-

"பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவனின் ஜெபம்"

வச.1-2 விடுதலை செய்ய
விண்ணப்பித்தல்

வச.3-5 நான் தவறு செய்திருந்தால்

வச.6-9 நியாயத்திற்காக வேண்டுதல்

வச.7-13 தேவனின் செயல்கள்

வச.14-16 தீயோரின் முடிவு

வச.17 நான் கர்த்தரைத் துதிப்பேன்

வச.1-6 தான் செய்யாத தவறுக்காக குற்றம் சாட்டப்பட்டதால் வந்த வேதனையால் தாவீது பாடிய பாட்டு இது (வச.3-6). வேதனையுடன் பாடிய போதிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்ததை ஆரம்பத்திலே கூறியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை நம்புவீராக.


வசனங்களுக்கான விளக்கம்:-

சங்கீதம் 7:1

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அடைக்கலம் புகுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

a). "என்" தேவனாகிய கர்த்தாவே என்று சொல்லும் அளவு கர்த்தரில் நெருங்கி இருந்தார் சங்கீதகாரன். நாம் எந்தளவு கர்த்தருடன் வாழ்கிறோம்.

b). "நான் உம்மை நம்பியிருக்கிறேன்" கர்த்தரை நம்புவது எனில் அவர் நேரடியாக வந்து உதவி செய்வார் என்று நம்புவது என்பது அல்ல, நேரடியாகவோ மனிதர்கள் மூலமாகவோ அவர் தெரிந்தெடுக்கும் ஏதாவது ஒரு வழியில் உதவி செய்வார் என்று நம்புவது ஆகும். எந்த மனிதனிடமும் சூழ்நிலையிலும் மருந்திலும் உதவி கிடைக்கும் என்று நம்புவது சரியன்று. மனிதனோ சூழ்நிலையோ மருந்து எதுவாயினும் தேவனுடைய வழிநடத்துதல் இன்றி நமக்கு உதவ முடியாது.

சங்கீதம் 7:4

என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,

நன்மைக்கு தீமை செய்வது கொடுமை, நன்மைக்கு நன்மை செய்வது மனிதப் பண்பு, தீமைக்கு நன்மை செய்வது கிறிஸ்தவனின் கடமை (மத் 5:44; ரோம 12:20-21).

சங்கீதம் 7:8

கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

நியாயம் செய்யும்படி கர்த்தரிடம் வேண்டினார் தாவீது. மற்றவர்கள் நம்மை தவறாக குற்றம் சாட்டினால் நாம் என்ன செய்கிறோம்?. திருப்பிப் தாக்குவதை விட கர்த்தரிடம் விண்ணப்பம் செய்வது நல்லது (ரோம 12:17-21).

சங்கீதம் 7:9

துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

தேவன் மனிதர்களின் எண்ணங்களையும் அவர்களுடைய சுபாவங்களையும் அறிந்திருக்கிறார். பாவத்தில் வாழ்கிறவர்களுக்கு இது பயம் அளிப்பதாகவும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இது மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைகிறது இருந்தார் சீராக்குவார்.

சங்கீதம் 7:11

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

பாவம் செய்கிறவன் மீது தேவன் நான் தோறும் கோபம் கொண்டாலும் அவன் மனம் திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கிறார்.  தொடர்ந்து அவன் பாவத்தில் வாழ்ந்தால் இறுதியில் தண்டனை அடைகிறான்.

சங்கீதம் 7:15

குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

16 அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

மனம் திரும்பாத மனிதன் அவனுடைய செயல்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இவ்வசனங்கள் விளக்குகிறது.

சங்கீதம் 7:17

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

தான் என்ன செய்வதாக தாவீது கூறுகிறாரோ அதைச் நாம் செய்யலாமே. தேவனும் துதிக்கப் படவும் புகழ பாடவும் தகுதி உள்ளவர். எனவே சூழ்நிலை நன்மையாக மாறும் வரை காத்திராமல் எந்த நிலையிலும் கர்த்தரைப் புகழ்ந்து துதிப்பதும் அவருக்கு நன்றி செலுத்துவதும் சிறந்தது. இதுவே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1 தெச 5:18).

இந்த சங்கீதத்தில் வரும் தேவனுடைய பெயர்கள்:-

ஏன் என் தேவனாகிய கர்த்தர் , 
நீதி உள்ளவராய் இருக்கிற தேவரீர் ,
இருதயங்களையும் உள்ளம் திரியங்களையும் சோதிக்கிறார்,
செம்மையான இருதயம் உள்ளவர்களை ரச்சிக்கிற தேவன்,
நீதியுள்ள நியாயாதிபதி,
பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவன், உன்னதமான கர்த்தர்

[18/10 10:05 am] Senthil Kumar Bro VTT: என் தேவனாகிய கர்த்தாவே, நான் *இதைச்* செய்ததும், என் *கைகளில்* *நியாயக்கேடிருக்கிறதும்* ,
சங்கீதம் 7:3

எதை செய்ததாக கூறுகிறார்......???


 *நியாயக்கேடு என்றால் என்ன..?

அவர் கையில் அது இருக்கு என்றால் எப்படி....??

 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, *அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்* .
சங்கீதம் 7:11

இது இன்றும் தொடர்கிறதா...??

சினம் வேறு கோபம் வேறா...???

[18/10 3:04 pm] Elango: 👍👍👍

எசேக்கியேல் 18:32
[32]மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; *சாகிறவனுடைய சாவை நான் விரும்புவதில்லை* என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

[18/10 3:07 pm] Jeyanti Pastor VDM: 18 யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம், பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

பிரசங்கி 9

[18/10 3:23 pm] Elango: 1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:1
2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:2
3 என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால்-என் கை தவறிழைத்திருந்தால்,

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:3
4 என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால்-

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:4
5 எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்; என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்; என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:5
6 ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்; என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்; எனக்காக விழித்தெழும்; ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:6
7 எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்; அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:7
8 ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்; ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:8
9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:9
10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:10
11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:11
12 பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்; வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:12
13 கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்; அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:13
14 ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்; அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:14
15 அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்; அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்;

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:15
16 அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:16
17 ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்; உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்.

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 7:17

[18/10 3:42 pm] Elango: ⃣ சங்கீதம் 7 யாரால், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது அல்லது என்ன நோக்கத்திற்க்காக எழுதப்பட்டது❓

*கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல்,*

பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்

[18/10 3:44 pm] Elango: *சங்கீதம் 7 Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)*

7 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
    என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என்னை மீட்டுக்கொள்ளும்!
2 நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
    என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!

3 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
    நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்!
4 என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
    என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
5 ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
    அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.

6 கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
    என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
    கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
7 கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
    உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
8 கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
    எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
9 தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
    தேவனே, நீர் நல்லவர்.
    நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.

10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார்.
    தேவன் என்னைப் பாதுகாப்பார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
    எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். [a]

14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
    அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
    ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
    அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
    ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.

17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
    மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.

[18/10 5:08 pm] Kamal VTT: 12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார், அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.சங்கீதம் 7 :12
மனம் திரும்புதல் என்றால் என்ன?
எதைவிட்டெல்லாம் மனம் திரும்பனும்?
எப்படி திரும்புவது?

[18/10 5:10 pm] Kamal VTT: 11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

சங்கீதம் 7 :11

1.எது பாவம்?
2.யார் பாவி?

[18/10 5:11 pm] Jeyanti Pastor VDM: பாவத்தை விட்டு, பழைய வாழ்க்கையை விட்டு மனந்திரும்ப வேண்டும்.

[18/10 5:12 pm] Kamal VTT: புதிதாய் வரக்கூடியவர்களுக்கு Blog la படிக்கும் வகையில் தெளிவாய் சொன்னால் அவர்களுக்கு உதவியாய் இருக்குமே!!!

[18/10 5:14 pm] Jeyanti Pastor VDM: பழைய மனுஷனை ஒழித்து, புதிய மனுஷனை தரித்துக் கொள்ள வேண்டும்

[18/10 5:17 pm] Kamal VTT: நீங்கள் சொல்வது சரியே ஆனால் கிருஸ்த்துக்குள் இருக்கிறவர்களுக்கு புரியும் ஆனல் இயேசுவை அறியாத ஜனங்கள் blog la படிக்க நேரிட்டால் இன்னும் அவர்களுக்கு புரியும் வகையில் இருந்தால் நன்றாய் இருக்கும்

[18/10 5:18 pm] Kamal VTT: எது பாவம்?

[18/10 5:26 pm] Kamal VTT: பாவம் என்றால் என்ன?

[18/10 5:54 pm] Elango: தேவனுக்கு கீழ்ப்படியாமை.

அநீதி எல்லாம் பாவம் தான்.
விசுவாசத்தினால் வராதது யாவும் பாவமே அதாவது அவிசுவாசத்தினால் வருவது யாவும் பாவமே.

மீறுதல்கள்

[18/10 5:55 pm] Kamal VTT: நீங்கள் சொல்வது பாவத்தின் வகைகள்! பாவம் என்றால் என்ன? என்பதே கேள்வி?
அநேகர் பாவத்தின் வகைகளை சொல்லுகிறார்கள்?

[18/10 5:57 pm] Kamal VTT: வகையை குறிப்பதாக உள்ளது?  பாவம் என்றால் என்ன?  என்பதே கேள்வி அன்புள்ள சகோதரே!

[18/10 5:58 pm] Elango: ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பாவம் என்பது *தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படடியாமை*

[18/10 6:04 pm] Jeyanti Pastor VDM: K. தேவனை தேடாமை

[18/10 6:05 pm] Kamal VTT: நான் சொல்ல ஆசைப்படுகிறேன்
"தேவனை அறியாததே பாவம் "
தேவனை அறியாமல் சிலர் நிதியாய் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும் பாவிகளே!!

[18/10 6:08 pm] Kamal VTT: பிறகு
தேவ வார்த்தையை மீறுவதே பாவம்

[18/10 6:11 pm] Kamal VTT: அதன் பிறகு தான் கீழ்படிதல் எல்லாம் வரும் பிறகு தான் பாவத்தின் வகைகள்... சரி இல்லை என்றால் இதனை இன்னும் தியானிப்போம்!

[18/10 6:11 pm] Elango: தேவனை அறியாமல் தேடாமல் இருப்பதே ஒரு கீழ்ப்படிமை தானே

[18/10 6:11 pm] Kamal VTT: கீழ்படிதல் என்பது என்ன

[18/10 6:11 pm] Elango: தேவனை அறியாமல் என்பதன் அர்த்தம் என்ன? எப்படி அதை விளக்குகின்றீர்கள்?

[18/10 6:12 pm] Aa Aji VTT: Oh..... Vekraka arathana Pana kudathunu solraga... Aana Jesus nu oru photographer paint panunatha yalarum v2layum eruku

[18/10 6:12 pm] Levi Bensam Pastor VDM: *பாவம் என்றால்,🤔(1)தேவன் செய்ய வேண்டும் என்று சொன்னதை நாம் செய்யாமல் இருப்பது. (2)தேவன் செய்ய வேண்டாம் என்று சொன்னதை நாம் மீறி செய்வது*

[18/10 6:12 pm] Aa Aji VTT: And rc church la csi karaga narkarunai eduka kudathu... Ethu entha Bible la eruku

[18/10 6:13 pm] Aa Aji VTT: Bible la thavara yala visiyathayum follow panra ulagam.. Thanaku yatha mari Bible words ah pesura ulagam

[18/10 6:14 pm] Kamal VTT: நன்றாக பரிசயமான ஒருவரிடம் மட்டுமே நாம் செய்யும் பண்பு கீழ்படிதல் ஆகும் ஆண்டவரை அறியாத மக்கள் எப்படி கீழ்படிதலுக்குள் வர முடியும்?  அன்பு புரிந்தால் தான் கீழ்படிதல் வருமே

[18/10 6:15 pm] Elango: ஆதியிலே பாவம் நுழைந்தது எப்படி?

தேவன் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படியாமை தானே?

[18/10 6:15 pm] Bro David (Thirumal) VTT: கடவுளுடைய தராதரங்களுக்கு எதிரான எந்தவொரு செயலும், உணர்வும், எண்ணமும் பாவமாகும். கடவுளுடைய பார்வையில் தவறான, அதாவது அநீதியான, செயலைச் செய்து அவருடைய சட்டங்களை மீறுவதும் பாவமாகும். (1 யோவான் 3:4; 5:17) சரியானதைச் செய்யாமல் இருந்துவிடுவதும்கூட பாவம்தான் என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 4:17.

[18/10 6:16 pm] Elango: *அறியாமை* தான் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது என்று சொன்னால் அது தவறு

[18/10 6:17 pm] Elango: தேவன் அறிய வைத்தாரே இது ஆசீர்வாதம் இது சாபம் என்று...

மீறுதல் என்பது அறியாமையாகாது.

[18/10 6:18 pm] Elango: 3⃣ *ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.* சங்கீதம் 7:7

என்பதன் அர்த்தம் என்ன❓

[18/10 6:22 pm] Bro David (Thirumal) VTT: 1 யோவான் 3:4
[4]பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே *பாவம்*.

[18/10 7:01 pm] Jeyakumar Toothukudi VTT: Praise the Lord
,சங் 7:7 ல்  ஜனக்கூட்டம் என்பது  தேசங்களை குறிக்கிறது் அவர்களுக்காக திரும்பவும் உன்னத்த்திற்கு எழுந்தருளும்   _என்கிற  வசனத்தில்  திரும்பவும்  என்ற வார்த்தைக்கு விளக்கம் தாங்க ஐயா!
            BRO. R. jeyakumar

[18/10 7:08 pm] Jeyakumar Toothukudi VTT: 10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா  மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்

எபேசியர் 4
Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com

[18/10 7:16 pm] Jeyakumar Toothukudi VTT: 8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

எபேசியர் 4:8

9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

எபேசியர் 4:9

10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

எபேசியர் 4:10

Shared from Tamil Bible 3.8
https://goo.gl/xIdjuS
www.bible2all.com

[18/10 7:35 pm] Jeyanti Pastor VDM: எஸ். Exactly

[18/10 7:38 pm] Jeyakumar Toothukudi VTT: சங் 7:7  ல் திரும்பவும் உன்னத்த்திற்கு எழுந்தருளும்  என்ற  வார்த்தை   எபே 4 8_10  வரை உள்ள  வசனங்களின்படி நிறைவேறிவிட்டது. அப்படித்தானே! ஐயா.

[18/10 9:49 pm] Kamal VTT: நான் உங்களுக்கு சரியான விளக்கம் தருகிறேன்! வகுப்பு இருக்கிறது முடிந்ததும் சொல்கிறேன்!
அன்புடன்
நோவா

[18/10 10:25 pm] Kamal VTT: 19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது, தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரோமர் 1 :19

20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும், ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

ரோமர் 1 :20

21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

ரோமர் 1 :21

25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

ரோமர் 1 :25

28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

ரோமர் 1 :28


இதிலிருந்து நாம் அறியாமல் இருக்கிறதை அறிய முடிகிறது.

மேலும் ஆதியில் பாவம் கீழ்படியாமல் வந்தது என்பதையும் நான் நிராகரிப்பு செய்யவில்லை அது பாவம் வந்த வழியே தவிர அது பாவத்திற்கான விளக்கமாகது!

[18/10 10:48 pm] Elango: பாவத்திற்க்கு விளக்கம் கொடுங்க சகோ

[18/10 10:49 pm] Kamal VTT: 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.

யோவான்

இங்க இருந்து தான் அது துவங்குகிறது!

[18/10 10:51 pm] Elango: பாவம் இந்த உலகத்திலே வந்ததால் தான் அவர்களால் ஆண்டவரை அறிய முடியவில்லை...

[18/10 10:52 pm] Kamal VTT: தருகிறேன் நான் Bus la iruken audio anupa mudiyala villai

[18/10 10:55 pm] Elango: இங்கிருந்துதான் பாவம் தொடங்குகிறதா?

ஆதாம் ஏவாள் தேவனுடைய சத்தத்திற்க்கு கீழ்ப்படிமையினால் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது என்றல்லவா வேதம் கூறுகிறது.

ரோமர் 5:12,19
[12]இப்படியாக, *ஒரே மனுஷனாலே பாவமும்* பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
[19]அன்றியும் *ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல,* ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

[18/10 10:57 pm] Elango: அவர்களுக்கு மனசாட்சியை தேவன் கொடுக்கவில்லையா?

[18/10 10:59 pm] Elango: அவர்கள் அறியாமைக்கு அதாவது *தேவனை அறியாமல்* இருப்பதற்க்கு யார் காரணம்?

[18/10 11:01 pm] Elango: ரோமர் 2:15-16
[15]அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
[16]என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு *மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.*

[18/10 11:02 pm] Elango: ரோமர் 2:6,9-11
[6] *தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.*

[9]முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.

[10]முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

[11]தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

[18/10 11:02 pm] Kamal VTT: மற்றவர்கள் என்ன சொல்லுகீறிர்கள்!
[18/10 11:05 pm] Elango: அப்போஸ்தலர் 17:30-31
[30] *அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.*

[31]மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே *அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்;* அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

[18/10 11:56 pm] Elango: 5⃣ அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். சங்கீதம் 7:16

என்பதன் அர்த்தம் என்ன❓

படுகுழியை பிறருக்காக வெட்டுபவன், அதில் தானே விழுவான். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

மொர்தேகாக்கு விரோதமாக எவ்வளவு தீமையான திட்டம் போட்டார்களோ, அந்த தீமை அவர்களுக்கே வந்து முடிந்தது.

ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில் போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள். எஸ்தர் 9:25

21]தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; *நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.*

[22]கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; *அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.* சங்கீதம் 34:21-22

[19/10 12:05 am] Elango: 4⃣ தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; *அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.* சங்கீதம் 7:11

நாள்தோறும் *பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்* என்று வசனம் சொல்லும்போது, பாவத்தை வெறுத்து பாவிகளை *நேசிக்கிறார்* என்ற கருத்து சரியானதா❓

பாவம் செய்கிறவன்மீது தேவன் நாள்தோறும் கோபங்கொண்டபோதிலும் அவன் மனந்திரும்புவதற்க்கு வாய்ப்பை அளிக்கிறார். தொடர்ந்து அவன் பாவத்திலே வாழ்ந்தால் அவன் தண்டனை பெறுவான்.

யோபு 36:9-12
[9]அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,

[10] *அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.*

[11]அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.

[12]அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.

மத்தேயு 18:11
[11]மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.

லூக்கா 13:5
[5]அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

*நாம் பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டுமென்பதே, தேவனுடைய சித்தம்.*

நாம் ஒருவரும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல

யோவான் 3:16
[16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

இவ்வாறு தேவன் நம் மேல் அன்புகூர்ந்திருக்க அவருடைய இரட்சிப்பை நாம் அசட்டை செய்தால், அக்கினை அவசியம் உண்டு

யோவான் 3:19
[19] *ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.*

[19/10 12:12 am] Elango: 2⃣ சங்கீதம் 7 லிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன❓

*சத்துருக்களின் நெருக்கத்தின் மத்தியிலும் நம்பிக்கையோடு தேவனிடம் நியாயத்திற்க்காக வேண்டுகிறார்*

தேவனுக்கு தங்ளை உண்மையாய் அர்ப்பணித்துக்கொண்டவர்கள், எல்லா சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் நம்பிக்கையோடு தங்களை அவரிடம் ஒப்புவித்து நம்பிக்கையாயிருப்பர்.

[19/10 12:15 am] Elango: *தேவனே என் நீதியின்படி எனக்கு நியாயஞ்செய்யும்* என்று ஜெபிப்பதன் மூலம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஆவிக்குரிய நேர்மையை தேவனுக்கு வழியுறுத்த முடியும். அந்த விண்ணப்பம் விசுவாசத்தின் மூலம் தேவனுக்கு அன்பினால் சுத்திகரிக்கப்பட்ட உண்மையான இருதயத்திலிருந்து சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட உரிமை சுயநீதியானதல்ல.

[19/10 12:21 am] Elango: ⃣ *ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.* சங்கீதம் 7:7

என்பதன் அர்த்தம் என்ன❓

இந்த வசனம் இயேசுகிறிஸ்துவைப்பற்றி பரிசுத்த ஆவியின் மூலம் தாவீது எழுதியது. ஆண்டவர் இயேசுகிறிஸ்து பாவிகளாக நமக்காக மரித்து, நம்மை இராஜாக்களாகவும் ஆசாரியர்களாக ஆக்கி .. உன்னதத்திலிருந்து வரங்களை நமக்கு தந்தார்.

சங்கீதம் 68:18
[18]தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; *தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.*

எபேசியர் 4:8-10
[8]ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
[9]ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
[10]இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

[19/10 12:29 am] Elango: 7⃣ தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, *அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்* சங்கீதம் 7:11

இது இன்றும் தொடர்கிறதா❓சினம் வேறு கோபம் வேறா❓

பரிசுத்த தேவன் நம்மையும் பரிசுத்தமாக வாழவே விரும்புகிறார்.நாம் பாவத்தோடு வாழ்வது தேவனுக்கு விருப்பமில்லை.

அந்த பாவத்தை விட்டு நாம் பரிசுத்தமாக வாழும்படியாகவே அவரது ஒரே குமாரனை நமக்காக தந்தருளினார்.

ரோமர் 5:1
[1]இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய *இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.*

எபிரெயருக்கு எழுதின நிருபம் 12:28-29
[28]ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

[29] *நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.*

*நாம் பாவியாக பாவத்தோடு வாழ்வது தேவனுக்கு பிரியமில்லை, நம் பாவத்திற்க்கு செத்து நீதிக்கு பிழைக்க வேண்டுமென்பதற்க்காகவே அவருடைய சொந்த குமாரனை நமக்காக தந்து உலகத்தை இவ்வளவாய் நேசித்தார்.*

1 யோவான் 2:1-2
[1]என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
[2]நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

[19/10 1:20 am] Bhascaran Ayya VDM: ☝🏽நாம் மூலத்திலிருந்து (துவக்கத்திலிருந்து) இந்த *பாவம்* என்பதை குறித்து பார்ப்போம். இல்லையேனில் *முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிட வாய்ப்புண்டு!

நாம் கைகளில் வைத்து படிக்கும் வேதாகமம் பழைய ஏற்பாடு மூல மொழியாகிய *எபிரேய* மொழியிலிருந்தும், புதிய ஏற்பாடு *கிரேக்க* மொழியிலிருந்தும், *தமிழ், ஆங்கிலம் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து எழுதப்பட்டவை என்கின்தை அனைத்து கிறிஸ்தவர்களும் மறக்காது இருக்கவேண்டும்.

இந்த நிலையில் மிக முக்கியமான வார்த்தைகளை நாம் தியானிக்க எடுத்துக்கொள்ளும்போது, *தியானிக்க எடுத்துக்கொள்ளும் வார்த்தை* மூல மொழியில் அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பார்க்க முற்படவேண்டும். பின்பு அதை மையமாக வைத்து,அதனுடன் சேர்த்து வரும் வாத்தைகளை எந்த நோக்கத்துடன், யார் ஒருவர் யாருக்கு, எப்போது,எந்த சூழ்நிலையில் சொல்லியிருக்கிறார் என்று *பரிசுத்த ஆவியானவரின் துனையுடன்* தியானிக்க வேண்டும். அப்போதுதான் சொல்லப்பட்டுள்ள அந்த வார்த்தையின் *உள்ளபடியேயான சரியான அர்த்தம்* "சத்தியமாக" நமது ஆத்துமாவின் அறிதலுக்கு சென்றடையும்.

[19/10 1:23 am] Bhascaran Ayya VDM: பாவம் இதை இப்பொழுது உள்ள கிறிஸ்த்தவர்கள் எப்படி பார்க்கிறார்கள்👀👀👀

👇👇👇

கிறிஸ்த்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்ள்
மத நல்லொழுக்கத்தையும்
நன்னெறி போதனைகளையும் சார்ந்து வாழ கூடியவர்கள்.
அதனால் அவர்களிடம் பாவத்தை குறித்ததான அறிவும் தெளிவும் இருக்க வாய்ப்பில்லை.
எனவேதான் அவர்களிடம் பாவத்தை குறித்து வசனத்தின் அடிப்படையில் கேட்டால்.
அவர்கள் சொல்வது வேதத்தில் ஏதோ ஒரு வசனத்தை மாத்திரம் மேற்கோள்காட்டி சொல்லமாட்டார்கள்.
வேதத்தில் எங்கு எல்லாம் பாவம் என்ற வார்த்தை வருகிறதோ அதை எல்லாம் பாவம் என்று அவர்களுடைய வைராக்கியத்தில் நிலைநிறுத்திக்கொண்டு. அதையெல்லாம் செய்யக்கூடாது என்கின்ற ஒரு நிலைபாட்டில் இருப்பார்கள்.
ஆனால் அதனால் அவர்களுடைய வாழ்க்கையில் கிடைக்கும் பலாபலன்கள் என்னவென்று பார்த்தால் *விழுவதும் பின்பு எழுந்திருப்பதுமே*
தான் மிஞ்சும் ஆனாலும் தங்களுடைய வைராக்கியத்தில் முயற்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
*பாவத்தின் உண்மை நிலை அதன் பொருள்*

👇👇👇
இப்பொழுது உள்ள வேதம் 66 புஸ்தகத்திலும் எந்த வார்த்தை அதிகமாக இடம் பெற்றுள்ளது என்று கணக்கிட்டால் *பாவம்* என்ற வார்த்தையே மிஞ்சும்.
ஆனால் இந்த பாவம் என்கின்ற வார்த்தைக்கும் இப்பொழுது நாம் எது எல்லாம் பாவம் என்று நினைத்து வைத்திருக்கிறோமா அது எல்லாம் பாவம் என்று பொருள்படாது.
ஆம் எதுக்கெடுத்தாலும் *பாவம்* ஒருவன் தவறி கீழே விழுந்தால் *பாவம்* அகால மரணம் அடைந்தால் *பாவம்*
அய்யோ *பாவம்* அம்மா *பாவம்*
*பாவம்* என்கின்ற வார்த்தைக்கு என்னதான் பொருள் என்று பார்த்தால் (பாவத்தை குறித்து தேவன் வைத்திருக்கும் நிலை)
ஆதாம் ஒருவன் செய்ததே *பாவம்*
அவன் என்ன செய்தான்❓

👇👇👇
தேவன் அவனுக்கென்று ஒரு வழியை வைத்து அதில் நடக்க சொன்னார் நடக்கும் பொழுது இதை செய் இதை செய்யாதே என்று சென்னார்.
ஆனால் அவன் செய்தது என்ன❓
👇👇👇

அவர் வைத்த பாதையில் இருந்து வழி விலகினான் இதுதான் தேவனுடைய பார்வையில் பாவமாக கருதப்படுகிறது. ஆம் *பாவம்* என்ற வார்த்தைக்கு மூல மொழியில் சென்று அர்த்தம் பார்த்தால் (அமர்ஷியா) இருக்கிறது அதாவது *குறி தவறுதல்* (அல்லது)
*வழி விலகுதல்*
*CONCLUSION*
👇👇👇
எனவே தேவன் நமக்கு வைத்திருக்கும் பாதையில் *நாமல்ல* அவர் நம்மை நடத்துகிறாரா என்று நம்மை நாமே ஆவியானவர் துனையோடு நிதானித்துப் பார்ப்போம்.🙏

Post a Comment

0 Comments