[18/09 8:40 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 18/09/2017* 🕎
1⃣ தாண் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓
2⃣ தாண் கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்ன❓
3⃣ தாண் கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓
4⃣ *தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.ஆதியாகமம் 49: 17* என்ற தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் என்ன❓
5⃣ வெளிப்படுத்தின விசேஷத்தில் 7 வது அதிகாரத்தில் *முத்திரை போடப்பட்டவர்களில் ஏன் தாண் கோத்திரத்தார் இல்லை*❓
12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், இன்றைக்கு தாண் கோத்திரத்தைக் குறித்து தியானிக்கலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[18/09 7:53 am] Aa Pradeesh Arun Kumar VTT: ஆதியாகமம் 49: 17தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
[18/09 7:56 am] Aa Pradeesh Arun Kumar VTT: இந்த வசனத்தை குறித்து விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
[18/09 8:05 am] Aa Darvin Sekar Brother VDM: வெளி :7 வது அதிகாரத்தில் முத்திரை போடப்பட்டவர்களில் ஏன் தாண் கோத்திரத்தார் இல்லை?
[18/09 8:22 am] Thirumurugan VTT: அபிஷேகம் என்றால் என்ன என்று இவ்வளவு தெளிவாக திருமறையில் இருந்து கற்றுக்கொண்ட பிறகும் அபிஷேகத்திற்காக ஜெபிக்க சொல்லுவது, ஏற்கனவே கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை அபிஷேகித்தவரை மீண்டும் அபிஷேகியுங்கள் என்று கூறுவது தேவனை அவமான படுத்துவதும் அவர் நமக்கு அளித்ததை அறிந்து கொள்ளாமையும் ஆகாதா? எப்பொழுது தான் இப்படி ஜெபிப்பதை நிறுத்தப்போகிறார்கள்? தேவனே நேரில் தரிசனமாகி கூறினாலும், கேட்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக தான் இருக்கும்.
[18/09 8:26 am] Aa Jeyaseelan Bro VDM: *தாண், எப்பிராயீம் ஆகிய இரண்டு கோத்திரங்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை. இதற்கு வேதத்தில் காரணம் கொடுக்கப்பட்டுள்ளது:*
"ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டுஅகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலுமஸ்திரியாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும்உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள். அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளையுக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக் கொள்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன் மேல் புகையும். இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு குலைத்துப் போடுவார். இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிரக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்கு தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கி போடுவார்." (உபாகமம்: 29:18-21)
கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு எச்சரிப்பை கொடுத்திருந்தாலும் இதில் கூறப்பட்டுள்ள சாபத்திற்கு ஏற்றார்போல் தாண், எப்பிராயீம் கோத்திரத்தார் நடந்து கொண்டனர். (நியாயாதிபதிகள்: 18:2-31).
"ஆகையால், தேசத்தை உளவு பார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிறசோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய் தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடு சொன்னார்கள்; அவர்கள் எப்பீராயீம் மலைத் தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடு மட்டும் போய், அங்கே இராத் தங்கினார்கள்" (நியாயாதிபதிகள்: 18:2).
""அப்பொழுது தாண் புத்திரர் அந்த சுரூபத்தை தங்களுக்கு ஸ்தாபித்துக் கொண்டார்கள். மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள் மட்டும் தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள். தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டு பண்ணின சுரூபத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள்". (நியாயாதிபதிகள்: 18:30,31).
"ஒன்றை பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுகுட்டிக்காகத் தாண் மட்டும் போவார்கள்". (1இராஜாக்கள்: 12:29,30).
"கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சமாய் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலமோன் அவர்கள் மேல் ஆசை வைத்து, அவர்களோடே ஐக்கியமாயிருந்தான்." (1இராஜாக்கள்: 11:2).
ஓசியா: 5:1-7 வாசித்துப் பாருங்கள். எப்பிராயீமின் பாவங்கள் பற்றி எழுதப்பட்டிருப்பதை காணலாம். மேற் கண்ட வசனங்களிலெல்லாம் உள்ளபடி தாண், எப்பிராயீம் கோத்திரத்தார் பாவ வழிகளில் நடந்து சொரூபத்தையும்', பொன் கன்றுகுட்டியையும் வணங்கினர் என்று பார்க்கிறோம். எனவே, இவர்களுடைய கோத்திரத்தின் பெயர் சொல்லப்படவில்லை.
[18/09 8:44 am] Thirumurugan VTT: இதற்கு ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய முந்தைய பதிவுகளை பாருங்கள்.
[18/09 8:47 am] Aa Jeyaseelan Bro VDM: *தாண் - ஆதியாகமம் 49"16-18.*
1. தாண் என்பதன் பொருள் ’நியாத்தீர்ப்பு’. இப்பெயர் ராகேலால் கொடுக்கப்பட்டது, தனது வேலைக்காரியாகிய பில்காலை யாக்கோபுக்கு கொடுத்த போது அவள் யாக்கோபுக்கு பெற்றெடுத்த குமாரன் ஆகும் இவனது பிறப்பு குறித்த விவரம் ஆதியகமம் 30:5,6ல் கொடுக்கப்பட்டுள்ளது.
2. ராகேலினால் யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்காரி, அக்காலத்தின் பழக்கவழக்கமாய் இருந்தது என்பது ஹமுராபியின் சட்டம் உறுதிபடுத்துகிறதாய் இருக்கிறது.
3. இஸ்ரவேலில் தாணின் ஸ்தானம் மற்ற முற்பிதாக்களைப் போன்று முழு கோத்திரங்களாய் கருதப்பட்டது, வேலைக்காரிகளாகிய பில்காள், சில்பாள் இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளும் இவ்வாறே கருதப்படுகிறது. யாக்கோபு தாணைக்குறித்து கூறும்போது, மற்ற கோத்திரங்களைப்போல தாணும் இஸ்ரவேலில் அரசாளுவான் என்கிறான்.
4. தாண் கோத்திரத்தின் மிகப்பெரிய நியாதிபதி சிம்சோன் (நியாதிபதிகள் 13), இவன் தாண் வம்சத்தினரின் குணாதிசயத்தைப் போன்றே கீழ்ப்படியாமையைக் காட்டுகிறவனாய் இருக்கிறான்.
5. தாணுக்கு மத்தியத்தரைக்கடலின் தென் மேற்கு கரையோரப்பகுதியில் தேசம் பகுத்துக் கொடுக்கப்பட்டது (யோசுவா 19:40-48). இவர்கள் பெலிஸ்தியரால் நெருக்கப்படுகிற காலங்களில், சிம்சோன் தனது மிகப்பெரிய சக்தியை பயன்படுத்தி அவர்கள் படையெடுப்பிலிருந்து தாணைப் பாதுக்காக்க முடிந்தது.
6. தாண் வம்சத்தினர் வெளிப்படையாய் தங்களது காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதைப் பார்க்கிலும், தந்திரமாய் தங்களது காரியங்களை நிறைவேற்றிக்கொண்டனர்.
7. யாக்கோபின் தீர்க்கதரிசனத்தில் தாண் சாத்தானின் தாக்கங்களுக்கு உட்பட்டு நடப்பான் எனக்காட்டுகிறது. லாகீசை முற்றுகையிட்டது இதற்கு உதாரணமாய் இருக்கிறது (நியாதிபதிகள் 18:1-31). தாண் சந்ததியினர் 600 யுத்த வீரர்களைக் கூட்டிக்கொண்டு துரோகியான லேவியனையும் அவனோடு வார்ப்பிக்க விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, லாகீசுக்குச் சென்று அதை வென்று அதற்கி தாண் எனப் பெயர்சூட்டினர். அவர்கள் அந்த விக்கிரகத்தை அங்கு ஸ்தாபித்து அதை நமஸ்கரித்து வந்தனர்.
8. யெரோபெயாம், சாலமோனின் குமாரனாகிய ரெகோபெயாமுக்கு விரோதமாய் கலகம் செய்த போது, விக்கிரக ஆராதணையை ஊக்குவித்து ஜனங்கள் தென்தேசத்திற்குச் செல்வதை தவிர்த்தான். (1 இராஜாக்கள் 12:28-30). யெரோபெயாம் இரண்டு பொன் கன்றுக்குட்டிகளை வார்ப்பித்து, அவைகளில் ஒன்றை பெத்தேலிலும், மற்றொன்றை தாணிலும் வைத்தான். ஜனங்கள் தாணுக்குச் சென்று அப்பொன்கன்றுக்குட்டியை வணங்கி வந்தனர்.
9. 2 இராஜாக்கள் 10:29 ல் இஸ்ரவேலில் எழுப்புதல் உண்டான போதும், விக்கிரக ஆராதணை தாணில் நிலைகொண்டிருந்தது.
10. தாணுக்கு மட்டும் இறுதியாய் வாக்குத்தத்த தேசத்தில் தாபரிக்கும் ஸ்தலம் பங்கிடப்பட்டது (யோசுவா 19:40-49).
11. வெளிப்படுத்தல் 7 ம் அதிகாரத்தில், உபத்திரவக்காலத்தில் 1,44,000 சாட்சிகளின் பட்டியலில் தாண் இடம் பெறவில்லை மாறாக யோசேப்பும் மனாசேயும் இரு மடங்கு ஆசீர்வாதத்தை யோசேப்பின் சார்பில் பெற்றுக்கொண்டனர்.
12. எப்படியிருப்பினும் தாண் ஆயர வருட அரசாட்சியில் கோத்திர சுதந்திர வீதத்தை பெற்றுக்கொள்வான் (எசேக்கியேல் 48:1,2).
[18/09 9:27 am] Thirumurugan VTT: *யாக்கோபு தன்னுடைய இறுதி காலத்தில் தன்னுடைய 12 புத்திரர்களைக் குறித்ததான தீர்க்கதரிசனத்தை உற்றுநோக்கிய பொழுது உதித்த 5 காரியங்கள்...*
1⃣ முதலாவதாக, இது யாக்கோபுடைய கடைசி வார்த்தைகள். தன் மரண படுக்கையில் இருந்தபொழுது யாக்கோபு உரைத்த காரியங்களாகும். காரணம் இவைகளை யாக்கோபு கூறி முடித்தவுடன் மரணம் நிகழ்வதை காணலாம் (ஆதி. 49:33).
2⃣ இரண்டாவதாக, இது கவிதை வடிவில் கூறப்பட்டுள்ளது. யாக்கோபு மொழிந்த இந்த கவிதை வரிகளுக்கு முன்னும் பின்னும் உள்ள பகுதிகளை நோக்கும் பொழுது இந்த பகுதி மட்டும் எபிரேய எழுத்து நடையில் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆக, இது எபிரேய மொழியில் கொடுக்கப்பட்டுள்ள கவித்துவமுள்ள காரியங்களாக இருக்கிறபடியினால், கூறப்பட்டுள்ள காரியங்களுக்கு சட்டென்று அர்த்தம் கொடுத்துவிட முடியாது. கவனமான பகுத்தாய்வு மிக அவசியம்.
3⃣ மூன்றாவதாக, இது கவிதை மட்டுமல்ல, மாறாக தீர்க்கதரிசனமும் கூட. கொடுக்கப்பட்டுள்ள நடை தான் கவிதை உள்ளடக்கம் மற்றும் காரியங்கள் அனைத்தும் 12 கோத்திரங்களைக் குறித்ததான தீர்க்கதரிசனங்களாகும். மேலும் இந்த காரியங்கள் எல்லாம் 12 தனி நபர்களுக்கு மட்டும் உரியதல்ல மாறாக 12 கோத்திரங்களை உள்ளடக்கிய ஒரு தேசத்திற்குரியதாகும் (ஆதி. 49:28).
4⃣ நான்காவதாக, யாக்கோபு இங்கே மொழிந்த காரியங்கள் யாவும் பொதுவாகவே 12 கோத்திரங்களுக்குரிய ஆசிர்வாதங்களாகும் (சில கோத்திரங்களுக்கு சில எச்சரிக்கைகளும் உண்டு). ஆதி. 49:28 ல் யாக்கோபு, அவனவனுக்குரிய *ஆசீர்வாதம்* சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான் என்று வாசிக்கிறோம்.
5⃣ ஐந்தாவதாக, எதிர்காலத்தில் இனி சம்பவிக்கப்போகிறதாக முன்னறிவிக்கப்பட்ட இந்த காரியங்களெல்லாம் தன்னிச்சையாக அல்லது சுயாதீனமாக ஒரு கடந்த காலத்தை வரையறுத்து அல்ல, மாறாக ஒரு நீட்டிப்பு ஆகும். அதாவது மேசியா வரும்வரை (prophecy, then, is not detached from history, but an extension of it into the future).
[18/09 9:29 am] Elango: *தாண் என்பது அவர் நீதியை சரிக்கட்டுகிறார் என அர்த்தம்*
[18/09 9:30 am] Elango: ஆதியாகமம் 49:16
[16]தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
[18/09 9:36 am] Elango: நாம் இந்த உலக ஜீவியத்தில் எப்படியும் வாழலாம் ஆனால் தேவன் நம் நடையின் மேல் நோக்கமாயிருந்து, நம் கிரியைக்கு தக்க நீதியை சரிக்கட்டும் தேவன் அவர்.
நாகூம் 1:2
[2]கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; *கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர்,* உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர் அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
பிரசங்கி 11:9
[9]வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; *ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.*
[18/09 11:07 am] Thirumurugan VTT: *தாண் கோத்திரத்தில் இருந்து சில காரியங்கள்...*
👉👉 யாக்கோபின் ஐந்தாவது மகனாகிய தாணிலிருந்து வந்தவர்கள்தான் இந்த தாண் கோத்திரத்தார்கள்.
👉👉 தாண் கோத்திர வரலாறு நமக்கு ஒரு போதனை பொக்கிஷமாக இருக்கிறது. மனிதர்கள் வகுத்த கோட்பாடுகளில் சென்று அவைகளை பின்பற்றி விசுவாசத்தை விட்டு வழி விலகி சோரம்போனவர்கள் தான் இந்த தாண் கோத்திரத்தார்.
👉👉 தாண் கோத்திர மக்கள் நாம் எப்படி இருக்க கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள். ஆக, இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய காரியங்கள் உண்டு.
👉👉 இஸ்ரவேலர்கள் கானான் தேசத்தை சுதந்தரித்தபொழுது, மற்ற கோத்திரங்களை விட ஒரு சிறிய அளவிலான பாதை நிலம் மட்டுமே தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த இடம் மத்தியத்தரைக்கடல் ஓரத்தில் மிகவும் செழிப்பான இடமாயிருந்தது. மீன் பிடி தொழிலுக்கும் மற்ற வாணிபத்திலும் பேர்பெற்று விளங்கிற்று.
👉👉 துக்ககரமான காரியம் என்னவென்றால், தாண் கோத்திரத்திற்கு உண்டாயிருந்த அவிசுவாசத்தினாலே, அவர்களுக்கு கிடைத்த வீதத்தை முழுமையாய் சுதந்தரிக்காமல் போனார்கள். இந்த காரியம் மற்ற கோத்திரங்களுக்கும் பொருந்தும்.
👉👉 நியா. 18:1–31 வரையுள்ள வசனங்கள் தாண் கோத்திரம் விக்கிரக ஆராதனையில் வீழ்ந்ததை எடுத்துரைக்கிறது.
👉👉 தாண் கோத்திரத்திற்கு கிடைத்த சுதந்திர வீதத்தை அவர்கள் விரும்பவில்லை. அதனால் வேறே நல்ல இடத்தை சுதந்தரிக்கும்படி வேவுகாரர்களை அனுப்பினார்கள்.
👉👉 வடக்கில் ஒரு நல்ல இடம் உள்ளதென அறிந்து அங்கே சமாதானத்துடன் வாழ்ந்து வந்த குடிகளை யோர்தான் வரையுமுள்ள எல்லைவரை அவர்களை அகற்றிவிட்டு அங்கே குடியேறினார்கள்.
👉👉 அந்த இடத்தில் "தாண்" என்னும் தலைநகரத்தை நிருவினார்கள். இந்நாட்களில், லீபனோனின் தென் பாகத்தில் இது அமைந்துள்ளது.
👉👉 சாலமோனிற்கு பிறகு இரண்டாக பிளவுபட்ட ராஜ்ஜியத்தில் தாண் கோத்திரம் வடக்கு ராஜ்ஜியத்திற்குள்ளானது.
👉👉 ராஜ்ஜியத்தை தக்கவைத்துக்கொள்ளவும் ஆராதனை செய்யும்படி வட தேசத்து மக்களை எருசலேம் செல்வதை தடைபண்ணும் படியாகவும் எரோபேயாம் விக்கிரகங்களை உண்டுபண்ணி ஒன்றை *தாணிலும்* (வடக்கு) மற்றொன்றை *பெத்தேலிலும்* (தெற்கு) வைத்தான் (1 ராஜா. 12:25–33).
*"So we need to learn from the mistakes of Dan would be to worship the God of the Bible alone and live for Him by faith."*

Post a Comment
0 Comments