[16/09 10:51 am] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 16/09/2017* 🕎
1⃣ *பென்யமீன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*
2⃣ பென்யமீன் கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்ன❓
3⃣ *பென்யமீன் கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓*
12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், இன்றைக்கு *பென்யமீன்* கோத்திரத்தைக் குறித்து தியானிக்கலாம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Vedathiyanam offline / online application - https://goo.gl/JpGaev
Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE
Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1
Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam
Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[16/09 12:20 pm] Elango: *1⃣ பென்யமீன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*
*பென்யமீன் கோத்திரம்* ஆதியாகமம் 49:27.
1. பென்யமீன் பிறப்பின் போது ராகேல் மரணமடைந்தாள். அவள் மரிக்கும் முன்னர் இவனுக்கு பெனானி எனப்பெயர் சூட்டினாள், இதன் பொருள் ’வேதனையின் குமாரன்’ என்பதாகும். இருப்பினும் யாக்கோபு இவன் பனிரெண்டாவது குமாரனானபடியால் பென்யமீன் எனப்பெயர் சூட்டினான் இதன் பொருள் ’எனது வலது கை புத்திரன்’ என்பதாகும். (ஆதி. 35:18).
2. *யோசேப்பின் மறைவுக்குப் பின்னர், வயது சென்ற யாக்கோபு பென்யமீனை தனது அன்புக்கு மையமாய் வைத்துக்கொண்டான், முதல் எகிப்து பயணத்தின் போது இவனை அவன் அனுப்பவில்லை. (ஆதி. 42:4).*
3. மோசே பென்யமீனை ஆசீர்வதித்தார் உபாகமம் 33:12, 12. *பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்;* அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.
4. பென்யமீனுக்கு யூதா எப்ராயீம் இவர்களுக்கு நடுவாக சுதந்திர வீதம் அளிக்கப்பட்டது. இதில் சில முக்கியமான பட்டணங்கள் அடங்கியிருந்தது. எருசலேம் பட்டணம் இதில் உள்ளடங்கியிருந்தது (யோசுவா 19:28). அவன் அவரோடு சுகமாய் தங்கியிருப்பான் என்பதன் பொருள், தேவாலயம் எருசலேமில் கட்டப்பட்டது, அங்கு தேவனது சமூகம் வாசமாயிருந்து, இதை சம்பந்தப்படுத்தி கூறப்பட்டது.
5. பெஞ்சமின் சந்ததியினர் பீறுகிற ஓநாய் போன்றவர்கள், இதை அநேக சந்தர்ப்பங்களில் காண்கிறோம். அவைகளில் சில உதாரணங்கள்:
[அ] ஏகூத், இஸ்ரவேலின் இரண்டாம் நியாதிபதி, இவன் பென்யமீன் கோத்திரத்தான், இவன் எக்லோன் என்னும் மோவாபிய அரசனை மறைத்து வைத்திருந்த குத்துவாளால் படுகொலை செய்தான். இவ்வாறு இஸ்ரவேல் மக்களை 18 ஆண்டு காலங்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து இரட்சித்தான். மற்றும் 80 ஆண்டுகள் சமாதானம் அறிமுகப்படுத்தப்பட்டது.
[ஆ] உள்நாட்டு யுத்தத்தின் போது பென்யமீன் நடுவிலிருந்து யுத்தம் செய்தான். இச்சம்பவத்தின் போது, குறிப்பாக இவர்கள் மிகவும் வன்முறையில் ஈடுபட்டனர். (நியாதிபதிகள் 19). இதன் விளைவாக மற்ற கோத்திரத்தினர் பென்யமீனுக்கு விரோதமாய் வந்து இவனுக்கு தண்டனை அளித்தனர். இரு தினங்களின் யுத்தத்தில் 40,000 பேர் மடிந்து விழுந்தனர் (நியாதிபதிகள் 20:21,25), இறுதியில் இவர் மேற்கொண்டு 600 பேராய் குறைந்தனர். (நியாதிபதிகள் 20:47).
[இ] சவுல் முதல் அரசன் இவன் பென்யமீன் கோத்திரத்தான். இவன் தனது சத்துருக்களுடன் யுத்தம் செய்த விதம் மிகவும் கொடூரமானது. சவுலின் இராணுவத்தளபதி அப்னேர், ஆசகேலை கருணையின்றி படுகொலை செய்தான். இவன் இஸ்ரவேலை அரசாண்ட போது, சுற்றியுள்ள இராஜ்ஜியங்களில் இவனது ஆட்சிபலம் மற்றவர்களை பாதிக்கிறதாய் இருந்தது.
6. *இந்த கோத்திரத்தின் வீரியம் பெரிய ஆசீர்வாதங்களுக்கு வாய்க்காலாய் அமைந்தது:*
[அ] எஸ்தரும் மொர்தொகாயும் பெர்சிய அரசாங்கத்தினரிடமிருந்து யூதருக்கு மிகவும் தைரியமாய் இரட்சிப்பைக் கொண்டுவந்தனர். இது ஆதியாகமம் 49:27 ல் தீர்க்கதரிசனமாய் கூறப்பட்டுள்ளபடி நிறைவேறுகிறதாய் இருக்கிறது.
[ஆ] சவுலின் குமாரனாகிய யோனத்தான், இவனது வீரியம் கர்த்தரின் வழிக்கு தன்னை அற்பணித்துக்கொண்டதை காட்டுகிறது. இது தேவனது வாக்குத்தத்திற்கு இசைய செயல்படுகிறதாய் இருக்கிறது. (1 சாமுவேல் 14:6,12).
[இ] பவுல் சபைக்கு கொடுமை கொடுத்தவர், பென்யமீன் கோத்திரத்தானாய் இருந்தார். இவன் மனந்திரும்பியபோது இவரது வைராக்கியம் சுவிஷேச பிரபல்யத்தில் மாறிவிட்டது, மற்றும் தொடர்ந்துள்ள நெருக்கத்தின் மத்தியில் இவர் சுவிஷேசம் அறிவித்தார். சபைக்கு விரோதமாய் பீறுகிற ஓநாயான சவுல், பவுலாக மாறிய பின்னர் ஒரு வைராக்கியமுள்ள மிஷரியாய் செயல் பட்டார்.
[16/09 1:49 pm] Elango: *பென்யமீன் என்றால் வலது கரத்தின் மகன் என்று அர்த்தம்*
- யாக்கோபின் கடைசிமகனும், இளைய மகனும் ஆவார். கடைக்குட்டி பையன்.
- யாக்கோபின் புத்திரரில் இவன் மட்டும் கானான் தேசத்தில் பெத்லகேமுக்குக் கிட்ட பிறந்தவன்.
- இவன் தாயார் இவனுக்கு *துக்கத்தின் மகன்* என்று சொல்லி *பெனானி* என்று பெயர் இட்டாள் ஆனால் அவனுடைய தகப்பனோ இவனுக்கு என் வலது கரத்தின் மகன் என்று அர்த்தப்படும் *பென்யமீன்* என்ற பெயரை சூட்டினார்.
[16/09 1:58 pm] Elango: *பென்யமீன் குமாரர்களும், அவர்களின் குமாரர்களும்*...
6. *பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.*
7. பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.
8. பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.
9. தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.
10. யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
11. யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
12. சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன். 1 நாளாகமம் 7:6-12
[16/09 2:02 pm] Elango: *சவுல் இராஜாவும், அப்போஸ்தலன் பவுலும் பென்யமீன் கோத்திரத்தார்...* எரேமியா தீர்க்கதரிசியும் பென்யமீன் கோத்திரம் தான் என்று சொல்லப்படுகிறது.
I சாமுவேல் 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: *நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா?* பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
அப்போஸ்தலர் 13:21 அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜாவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் *பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை* நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.
ரோமர் 11:1 இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் *பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.*
பிலிப்பியர் 3:5 நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், *பென்யமீன் கோத்திரத்தான்,* எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
[16/09 2:09 pm] Elango: உபாகமம் 33:12 *பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.*
பென்யமீன் கோத்திரத்தை குறித்து மோசே தீர்க்கதரிசனமாக் உரைத்த வாக்கியங்கள்...
- கர்த்தருக்குப் பிரியமானவன்
- தேவனோட சுகமாய்த் தங்கியிருப்பான்
- தேவன் அவனை எந்நாளும் அவர் காப்பாற்றுவார்
- பென்யமீன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்
இதுபோன்ற ஆவிக்குரிய தீர்க்கதரிசனங்கள் நமக்கும் கிடைத்தால் எவ்வளவு ஆசீர்வாதம். இந்த நான்கையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்...
[16/09 2:56 pm] Thirumurugan VTT: *பென்யமீன் கோத்திரத்தில் இருந்து சில காரியங்கள்...*
👉👉 யாக்கோபின் கடைசி மகனாக பென்யமீன் அவனது தந்தையின் ஆசியைப் பெறுகிறான். அவன் தந்தை கூறியதாவது: *"பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்"* (ஆதி. 49:27).
👉👉 போர்க்குணமுள்ள இளையவனான பென்யமீன், வீரியத்திற்கும் பலத்திற்கும் பேர்பெற்றவனானான் (நியா. 20: 15-16; 1 நாளா. 8:40, 12: 2; 2 நாளா. 14: 8, 17:17).
👉👉 கிபியாவில் வசித்த பென்யமீனர் காண்பித்த பொல்லாப்பும் அருவருப்பும் மிகப்பெரிதாய் இருந்தது (நியா. 19-20 அதிகாரங்கள்).
👉👉 பென்யமீனின் ஆசி மூன்று பாகங்கள் உள்ளடக்கியது: (1) ஒரு ஓநாய்க்கு ஒப்பிடப்பட்டுள்ளது, காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் செய்யும் காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. (2) பட்சித்தல் மற்றும் பங்கிடுதல் என இரண்டு செயல்களை குறித்து வாசிக்கிறோம். (3) இரை மற்றும் கொள்ளை என இரண்டு விளைவுகளை காண்கிறோம்.
👉👉 பென்யமீன் பன்னிரண்டு கோத்திரங்களில் சிறியதாய் இருந்தும் (1 சாமு. 9:21) நான்கு பேர்பெற்ற மனிதர்கள் இந்த கோத்திரத்தில் இருந்து வந்தார்கள்: (1) இஸ்ரவேல் புத்திரரை மோவாபியர்களிடமிருந்து இரட்சித்த இடதுகைப் பழக்கமுள்ள பராக்கிரமசாலியான பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் *ஏகூத்* (நியா. 3: 12-30); (2) *சவுல்*, முதல் இஸ்ரவேலின் ராஜா (1 சாமு. 9: 15-27). (3) பெர்சிய ராஜ்ஜியத்தில் வாழ்ந்த பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த *மொர்தெகாயும்* (4) *எஸ்தரும்* (எஸ்தர் 2: 5-7); (5) இறுதியாக, புதிய ஏற்பாட்டிலுள்ள அப்போஸ்தலனாகிய *பவுல்* (ரோமர் 11: 1; பிலி. 3: 4-5).
[16/09 6:28 pm] Thirumurugan VTT: கிறிஸ்துவுக்குள் பிரியமான "வேத தியானம்" குழு அங்கத்தினர்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள். *"முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்"* என்று மத்தேயு 24:13ல் குறிப்பிட்டுள்ள காரியத்தைக் குறித்து விளக்கம் கேட்டு நம் குழுவில் உள்ள சில சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனது பதிலை பதிவிடுகிறேன். மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் தயவாய் பதிவிடுங்கள்.
இந்த வசனத்தை புரிந்துகொள்வதற்கு முன்பதாக மத்தேயு எழுதின சுவிசேஷம் 24 மற்றும் 25வது அதிகாரங்கள் கிறிஸ்து தமது சபைக்காக வருகிற வருகையைக் (Rapture) குறித்துச் கூறவில்லை என்பதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆகையால், இவற்றை முதலில் ஆராய்ந்தோமானால் *"முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்"* என்று மத்தேயு 24:13ல் குறிப்பிடுவது எந்த காரியத்தை என்பதை தெளிவாக விளங்கி கொள்ளலாம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமான குழு அன்பர்களே, காலாகாலமாக அநேகர் அப்போஸ்தலனாகிய மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் 24 மற்றும் 25-வது அதிகாரங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபையை எடுத்துக் கொள்வதற்காக வருகிற வருகையாக நினைத்தும் பிரசங்கித்தும் போதித்தும் வருகிறார்கள். ஆனால் திருமறை அதற்கு எதிராக போதிக்கிறது. இந்த அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள அடையாளங்களும் காரியங்களுமெல்லாம், இஸ்ரவேலருக்காய் கிறிஸ்து வருகின்ற வருகையாகும். இந்த வருகை பொதுவாக *”கிறிஸ்துவின் மகிமையுள்ள வெளிப்படுதல்”* என்று அறியப்படுகிறது.
மேலும் சீஷர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விகள் நம்மை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள வைக்கிறது (மத்தேயு 24:3). அதுமட்டுமல்ல, எல்லா சீஷர்களும் யூதர்கள் அல்லது யூத பின்னணியில் உள்ளவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களுடைய சிந்தைகள் முழுவதும் ராஜ்ஜியத்தையும் அது எப்பொழுது ஸ்தாபிக்கப்படும் என்பதையும் குறித்தே இருந்தது, இதை கிறிஸ்து உயிரோடு எழுந்த பின்பும் அவர்களில் காணலாம் (அப். 1:6).
(தொடரும்...)
[16/09 6:34 pm] Thirumurugan VTT: ஆக, மத்தேயு 24, 25 அதிகாரங்கள் கிறிஸ்து இஸ்ரவேல் தேசத்திற்காக வருகின்ற வருகையாகும் சபைக்காக அல்ல. பொதுவாக கர்த்தராகிய கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இரண்டு கட்டங்களாக இருப்பதை திருமறை தெளிவாக எடுத்துரைக்கிறது:
*1. வானத்தில் இருந்து இறங்கி மத்திய ஆகாயத்திற்கு வருதல் (சபையை எடுத்துக்கொள்வதற்காக சபைக்காக வரக்கூடிய வருகை, Rapture)*
*2. வானத்தில் இருந்து இறங்கி பூமிக்கு வருதல் (பிசாசினை முறியடித்து, இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து பிறகு முடிவில் உலகை நியாந்தீர்க்க சபையோடு வரக்கூடிய வருகை, Glorious Appearance of the Lord)*
எனவே, இந்த இரண்டு கட்டங்களையும் உங்கள் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இவைகளில் ஏதேனும் சந்தேகம் அல்லது புரிந்து கொள்ளாமை இருப்பின் தயவாய் பதிவு செய்யுங்கள்.
சரி, இப்பொழுது இந்த இரண்டு அதிகாரங்களை (மத்தேயு 24, 25) சபை எடுக்கப்படுதலுடனோ அல்லது சபைக்காக கிறிஸ்து வருதலாகவோ எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான நான்கு முக்கியமான காரணங்களை காண்போம் வாருங்கள்:
*1. “ஒரு குறிப்பிட்ட நேரம் / சமயம்” கூறப்பட்டுள்ளது, Specified Time (மத்தேயு 24:29)*
👉இந்த வருகை உபத்திரவம் நிறைந்த ஒரு காலமாயிருக்கும்.
👉உபத்திரவம் முடிந்தவுடனே கிறிஸ்துவின் வருகை இருக்கும்.
👉ஆனால் நமக்கு தெரியும் சபையானது உபத்திரவ காலத்தில் கடந்து போகாது.
👉சபையை எடுத்துக்கொள்ள கிறிஸ்து வருவதைக்குறித்த குறிப்பிட்ட சமயம் திருமறையில் கொடுக்கப்படவில்லை.
👉மேலும் சபைக்காக கிறிஸ்து வரும் வருகை எந்த நேரத்திலும் இருக்கலாம்.
👉ஆகவே இந்த அதிகாரங்கள் கிறிஸ்துவின் மகிமையுள்ள வெளிப்பதலைக் குறிக்கிறது. அதாவது இஸ்ரவேல் தேசத்திற்காக அவர் வரும் வருகை.
*2. “வெளியரங்கமான நான்கு அடையாளங்கள்”, Four Visible Signs (மத்தேயு 24:29)*
👉சூரியன் அந்தகாரப்படும்
👉சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும்
👉நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்
👉வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்
_ஆனால் கிறிஸ்து சபைக்காக வருகிற வருகையில் மேலே குறிப்பிட்டுள்ள அடையாளங்களில் ஒருக்கூட குறிப்பிடப்படவில்லை (யோவான் 14:1-4; பிலி. 3:20-21; 1 தெச. 4:13-18; 1 கொரி. 15:50-58)._ மாறாக வேறே சில காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:
👉கர்த்தர் தாமே ஆரவாரத்தோடு வருவார்
👉பிரதான தூதனுடைய சத்தம் கேட்கும்
👉தேவ எக்காளம் தொனிக்கும்
👉வானத்திலிருந்து இறங்கிவருவார்
👉கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மற்றும் உயிரோடிருப்பவர்கள் அவரை மத்திய வானில் சந்திப்பார்கள்
(தொடரும்...)
[16/09 7:10 pm] Elango: 🕎 *இன்றைய வேத தியானம் - 16/09/2017* 🕎

[16/09 7:41 pm] Thirumurugan VTT: *3. “சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்”, All the tribes of the earth will mourn (மத்தேயு 24:30)*
👉கிறிஸ்து சபைக்காக வரும்போது எந்த விசுவாசியும் புலம்புவதில்லை.
👉அது சபைக்கு மிகப்பெரிய ஆறுதல் மட்டும் சந்தோஷமாயிருக்கும்.
அப்படிஎன்றால், இங்கே குறிப்பிட்டுள்ள “சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” என்பது எதைக் காண்பிக்கிறது? அது கிறிஸ்து தாம் மகிமையோடு கூட பூமியிலே இறங்கி வருவது உலகை நியாயந்தீர்க்க என்பதை யாவரும் அறிந்து கொள்வதை குறிக்கிறது. அப்பொழுது மிகப்பெரிய பயமும் திகிலும் அவர்களை ஆட்கொள்ளும். அதை உணர்ந்தவர்களாய், சகல கோத்திரத்தாரும் அவரை கண்டு புலம்புவார்கள்.
*4. “மனுஷகுமாரன் வருவதை யாவரும் காண்பார்கள்”, They will see the Son of Man (மத்தேயு 24:30)*
👉மனுஷகுமாரன் வருவதை யாவரும் காண்பார்கள்.
👉விசேஷமாக யூத மக்கள் காண்பார்கள் (அப். 2:23; சகரியா 12:10).
👉ஆனால் கிறிஸ்து சபைக்காக வரும்போது அவருடைய மணவாட்டியாகிய சபையையல்லாமல் ஒருவரும் காணக்கூடாது.
👉அநேகரை காணவில்லை என்பது மட்டும் தான் இந்த உலகிற்கு தெரியும்.
👉பவுலோடு இருந்தவர்களுக்கு பவுலுக்கு என்ன சம்பவித்தது என்று அறியாதிருந்ததுபோல் இருக்கும் (அப். 9:7)
👉அதனால் தான் இது நம்மை தவிர்த்து பழைய ஏற்பாட்டில் வாழ்ந்தவர்களுக்கும் புதிய ஏற்பாட்டில் வாழ்கிரவர்களுக்கும் இது இரகசியமாகவே இருக்கிறது (1 கொரி. 15:51)
ஆக, மேலே கண்ட நான்கு காரணங்களும் நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கும் சத்தியம் என்னவென்றால், மத்தேயு 24, 25 அதிகாரங்கள் சபைக்காக கிறிஸ்து வருகிற வருகை அல்ல.
24:13-ன் பொருள் விளக்கத்தை அடுத்த பதிவில் காண்போம். தயவாய் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
(தொடரும்...)
[16/09 8:25 pm] Thirumurugan VTT: *மத்தேயு 24:13ன் பொருள் விளக்கம்*
இயேசு ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில் அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து மூன்று வினாக்களை எழுப்பினார்கள்:
*1. இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?*
*2. உம்முடைய வருகைக்குள்ள அடையாளம் என்ன?*
*3. உலகத்தின் முடிவுக்குள்ள அடையாளம் என்ன?*
தேவாலயத்தைப் பார்த்து எருசலேமே, எருசலேமே எனக்கூறி வரும் பேராபத்தை உணர்ந்தவராய் இயேசு அவற்றிற்காக மனதுருகினதை 23ஆம் அதிகார இறுதியில் காணலாம். பிறகு 23:38ல் *இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்* என்று இயேசு கூறுகிறார்.
இவைகளைக் கூறிய பிறகு இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில் அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்ததையும்; இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கூறினதையும் 24ஆம் அதிகாரத்தின் முதல் இரண்டு வசனங்களில். வாசிக்கிறோம். பிறகு இயேசு ஒலிவமலையின் மேல் சென்று அமர்ந்தபொழுதுதான் நாம் மேலே கண்ட வினாக்களை சீஷர்கள் எழுப்பினார்கள்.
இந்த வினாக்களுக்கு விடையாக இயேசு மொழிந்ததைதான் மத்தேயு அப்போஸ்தலன் 24 மற்றும் 25 அதிகாரங்களில் குறிப்பிடுகிறார். இந்த மூன்று வினாக்களில் முதல் வினாவிற்கு அதாவது *இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?* என்று கேட்டே கேள்வி ஏற்கனவே கி.பி.70ல் ரோமர்கள் ஆண்டபொழுதே நடந்தேறிவிட்டது. மீதமுள்ள இரண்டு வினாக்களுக்குள்ள விடையைத்தான் இரண்டு அதிகாரங்களிலும் காண்கிறோம். இதுதான் பின்னணி. இனி நமது வசனத்திற்கு வருவோம்.
(தொடரும்...)
[16/09 8:30 pm] Thirumurugan VTT: 13 வது வசனத்தை புரிந்து கொள்வதற்கு, மேலே கூறப்பட்ட பின்னணியோடு 24ஆம் அதிகாரம் வசனம் 9 லிருந்து 14 வரையுள்ள வசங்களையும் சேர்த்து நாம் கோர்வையாக வாசித்து தியானிக்கும்போது கூடுதல் தெளிவு பிறக்கும் அல்லது வெளிச்சம் கிடைக்கும்.
இங்கே வசனம் 9 ல் *அப்பொழுது* என்று இயேசு துவங்குவதை கவனியுங்கள். அதாவதி 7 வருட உபத்திரவ காலகட்டத்தின் மத்திய பாகத்தில் (அதாவது கிறிஸ்து பூமிக்கு வருகிறதற்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு) இஸ்ரவேல் தேசமும் ஜனமும் மிகப்பெரிய உபத்திரவத்திற்குள் செல்வார்கள். அப்பொழுது உலகத்தை ஆளக்கூடிய எதிர் கிறிஸ்து (அந்திகிறிஸ்து என்பது சரியான பதமல்ல) மிகுந்த வல்லமையோடும் பலத்தோடும் எழும்பி உலகையே கதிகலங்க வைப்பான். இஸ்ரவேலரோடு ஏற்படுத்தின உடன்படிக்கையை மீறுவான் (தானியேல் 9:27). இஸ்ரவேலர்கள் மேல் மிகப்பெரிய உபத்திரவத்தை கொண்டு வருவான் (தானியேல் 7:25). அதுமட்டுமல்ல அவனை ஆராதிக்கும் மத்திய பாகமாக எருசலேம் தேவாலயத்தை பயன்படுத்துவான் (2 தெச. 2:3-4).
இச்செயல் அநேகரை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க வழி வகுக்கும் (மத்தேயு 24:9) மற்றும் அநேகர் விசுவாசத்தில் இருந்து விலகி மற்றவர்களை மறுதலிப்பார்கள் / காட்டிக்கொடுப்பர்கள் (மத்தேயு 24:10). மேலும் அநேகர் கள்ளத்தீர்க்கதரிசிகளாலே வஞ்சிக்கப்படுவார்கள் (மத்தேயு 24:11; வெளி. 13:11-15). அக்கிரமம் மிகுதியாகி தலைவிரித்தாடும். அன்பிற்கு இடமில்லாமல் போகும் (மத்தேயு 24:12).
*ஆனாலும், கர்த்தருக்காக அவர்மேல் வைத்த விசுவாசத்தை மறுதலியாமல், மரணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் முடிவு வரை அல்லது 7 வருட உபத்திரவ காலத்தின் இறுதி வரை விசுவாசத்தை உறுதியாய் பற்றிக்கொண்டு வாழ்பவர்கள் தேவனுடைய இரட்சிப்பை அடைவார்கள் அதாவது *"சரீர மரணத்தை அடையாமல் ஆயிரமாண்டு ஆட்சியில் அடியெடுத்து வைப்பார்கள்"* (மத்தேயு 24:13).
*கவனியுங்கள்*: இது நித்திய ஜீவனை அடைவதற்கு அல்லது இரட்சிக்கப்படுவதற்கு ஒருவருடைய தனிப்பட்ட முயற்சியை காண்பிக்கவில்லை. மாறாக அவர்களுக்கு உபத்திரவ காலத்திலும் தேவன்பேரில் இருக்கும் அசைக்கமுடியாத விசுவாசத்தை காண்பிக்கிறது.
(Those who remain faithful to the Lord until the end of that period of time will be saved, that is, delivered. This does not refer to a personal self-effort at endurance that results in one’s eternal salvation, but to physical deliverance of those who trust in the Savior during the Tribulation. They will enter the kingdom in physical bodies.)
தயவாய் உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். சிலருக்கு இதுவரை கேட்டிராத காரியங்கள் போல தோன்றினாலும், வேறு விதமாக கேட்டிருந்தாலும் சத்தியம் இதுதான். இதற்கு மாற்றுக்கருத்துக்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின், பதிவிடுங்கள்.
[16/09 9:17 pm] Elango: உபாகமம் 33:12 பென்யமீனைக்குறித்து: *கர்த்தருக்குப் பிரியமானவன்,* அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.
*1. கர்த்தருக்குப் பிரியமானவன்* உபாகமம் 33:12
கர்த்தருக்கு பிரியமாக நாம் எப்படி இருக்க முடியும்? மறுபடியும் பிறந்தவன் கிறிஸ்துவின் சிந்தையை தரிந்தவன், அவனுக்கு உலக சிந்தையை கழித்துப்போட்டு தேவ சிந்தையை பெற்றிருப்பவன், தேவனுக்கு சித்தமானதையே சிந்திந்துக்கொண்டிருப்பவன். அவனுடைய பாதைகளை தேவன் விசாலமாக்குவார், அவனது எல்லைகளை விரிவாக்குவார், அவனது சத்துருவின் இஷ்டத்திற்க்கு அவனை விட்டு விடமாட்டார்.
சங்கீதம் 41:11 *என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.*
II சாமுவேல் 22:20 *என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.*
பாவ இச்சையான, பிசாசின் தந்திரம் நிறைந்த இவ்வுலகத்தில் விவேகமாக பரிசுத்த ஆவியானவரின் பலத்தில், தேவனுடைய கற்பனைகளுக்க் செவிசாய்த்து, அவர் பாதத்தில், அவர் சத்ததிற்க்கு செவிசாய்ப்பவர்கள் அவருக்கு ப்ரியமானவர்கள். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நாம் அனுதினமும் சோதித்துப்பார்க்கவேண்டும்.
யோவான் 8:29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
*தேவனுக்கு பிரியமானவைகளேயே நாம் செய்துக்கொண்டிருக்கும் போது, தேவன் நம்மோடிருப்பார்.*
[16/09 9:24 pm] Elango: அப்படியிருந்தும், *அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை,* ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. I கொரிந்தியர் 10:5
*நாம் உலகத்திற்க்கு பிரியமாகவும் சிநேகமாகவும், உலகத்திற்க்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாயும், மாமசத்தின் படியேயும் நடக்கிறவர்களாயும் இருக்கும்போது தேவன் பிரியமாக இருப்பதில்லை, தேவன் அன்பாயிருப்பதில்லை.*
1 யோவான் 2:15. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
[16/09 9:29 pm] Senthil Kumar Bro VTT: அப்படியே அப்பாலே நடந்துபோனார்கள். *பென்யமீன் நாட்டைச்* சேர்ந்த கிபியாவின் கிட்ட வருகையில், சூரியன் அஸ்தமனமாயிற்று.
நியாயாதிபதிகள் 19:14
பென்யமீன் பெயரில் நாடு எங்கே இருக்கிறது ஐயா...
[16/09 9:33 pm] Elango: - கர்த்தருக்கு பிரியமானவர் என்று சொல்லப்பட்டவர்கள் அநேகர் வேதத்தில் ...
- பிரியமான ஏனோக்கை மரணத்தை காணாதபடி எடுத்துக்கொண்டார் தேவன்... எவ்வளவு பாக்கியம்.
5. விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; *அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று* அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான். எபிரேயர் 11:5
- தானியேல் பிரியமானாக இருந்தபடியால், அவன் ஜெபித்தப்போதே அவனுக்கு அதற்க்குரிய கட்டளை பதிலை தேவன் அனுப்புகிறார்.*
23. நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.
- இயேசுகிறிதுவின் மேல் பிதாவின் பிரியம்.
1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், *என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்;* அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.
3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.
[16/09 9:51 pm] Elango: உபாகமம் 33:12 பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், *அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்;* அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.
2. *தேவனோடே சுகமாய்த் தங்கியிருத்தல்*, நம்மை எந்நாளும் அவர் காப்பாற்றி, நம் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.*
- தேவனோட நாம் செலவிடும் நேரம், அவர் பாத்தில் அமர்ந்து துதிக்கும் வேளை, அவர் சமூகத்தில் காத்திருந்து மகிழும் நேரம் மிகவும் இனிமையானது.
சங்கீதம் 84:4 *உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)*
சங்கீதம் 84:1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
- தேவன் வாசம் செய்யும் மனிதர்களும், தேவனோடு அனுதினமும் வாசம் செய்யும் மனிதர்களும் பாக்கியவான்கள். பரலோகத்தை பூமியில் கொண்டிருக்கும் தருணங்கள் .
15. நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், *பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.*
நாம் தேவனுக்கு பிரியமாக, நம்மை நாமே நிதானித்து அறிந்து, நம்மை சுத்திகரித்துக்கொண்டால் அவருக்கு உபயோகமான பாத்திரமாக இருப்போம். தேவன் நம்மிடத்திலும், நாம் அவரிடத்தில் தங்கும் வாசஸ்தலமாக இருப்போம்.
எசேக்கியேல் 37:27 என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
வெளி 21:3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, *அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.*
[16/09 10:06 pm] Elango: 🕎 இன்றைய வேத தியானம் - 16/09/2017 🕎
1⃣ பென்யமீன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

3⃣ பென்யமீன் கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓
12 கோத்திரங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோத்திரம் வீதமாக தியானித்து வருகிறோம், இன்றைக்கு பென்யமீன் கோத்திரத்தைக் குறித்து தியானிக்கலாம்.

Post a Comment
0 Comments