Type Here to Get Search Results !

செபுலோன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

[14/09 10:54 am] Elango: 🕎  *இன்றைய வேத தியானம் - 14/09/2017* 🕎

1⃣ *செபுலோன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*

 2⃣ செபுலோன் கோத்திரத்தைக் குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ *செபுலோன் கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓*

4⃣ செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; *அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்;* அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். ஆதியாகமம் 49:13

செபுலோனைக் குறித்து மேலே👆 சொல்லப்பபட்ட தீர்க்கதரிசன வசனத்தின் அர்த்தம் என்ன❓

5⃣ செபுலோன் கோத்திரத்தார், இப்போது எந்த தேசத்திலெல்லாம் வாழ்கின்றனர்❓

6⃣  *செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையில் .. சந்தோஷமாயிரு* என்று மோசே கூறின தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் என்ன❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[14/09 9:52 am] Jp Solomon VTT: 1 Chronicles 2:1 These are the sons of Israel; Reuben, Simeon, Levi, and Judah, Issachar, and Zebulun,
Genesis 35:22-35:26
And it came to pass, when Israel dwelt in that land, that Reuben went and lay with Bilhah his father's concubine: and Israel heard it. Now the sons of Jacob were twelve:
Genesis 29:32-29:35
And Leah conceived, and bare a son, and she called his name Reuben: for she said, Surely the LORD hath looked upon my affliction; now therefore my husband will love me.
Genesis 30:5-30:24
And Bilhah conceived, and bare Jacob a son.
Genesis 35:18
And it came to pass, as her soul was in departing, (for she died) that she called his name Benoni: but his father called him Benjamin.
Numbers 1:5-1:15
And these are the names of the men that shall stand with you: of the tribe of Reuben; Elizur the son of Shedeur.
Numbers 13:4-13:15
And these were their names: of the tribe of Reuben, Shammua the son of Zaccur.
Genesis 49:2
Gather yourselves together, and hear, ye sons of Jacob; and hearken unto Israel your father.
Exodus 1:2-1:4
Reuben, Simeon, Levi, and Judah,
Numbers 26:5-26:65
Reuben, the eldest son of Israel: the children of Reuben; Hanoch, of whom cometh the family of the Hanochites: of Pallu, the family of the Palluites:
Genesis 32:28
And he said, Thy name shall be called no more Jacob, but Israel: for as a prince hast thou power with God and with men, and hast prevailed.
Genesis 49:4-49:28
Unstable as water, thou shalt not excel; because thou wentest up to thy father's bed; then defiledst thou it: he went up to my couch.
Revelation 7:5-7:8
Of the tribe of Juda were sealed twelve thousand. Of the tribe of Reuben were sealed twelve thousand. Of the tribe of Gad were sealed twelve thousand.
Genesis 46:8-46:27
And these are the names of the children of Israel, which came into Egypt, Jacob and his sons: Reuben, Jacob's firstborn.

[14/09 9:59 am] Senthil Kumar VTT: செபுலோன்

( *வாசஸ்தலம்* ) லேயாள் வயிற்றிலே யாக்கோபுக்கு  பிறந்த ஆறாம்குமாரன்.
[14/09 10:25 am] Aa Prabhu Sasirekha Sis VTT: ஆதியாகமம் 30

19 . அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
[14/09 10:25 am] Aa Prabhu Sasirekha Sis VTT: ஆதியாகமம் 30

20 . அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

[14/09 11:07 am] Aa Jeyaseelan Bro VDM: *செபுலோன் - ஆதியாகமம் 49:13.*

1. செபுலோன் என்பதன் பொருள் ’வாசம் செய்தல்’. இவன் லேயாளுடைய ஆறாவது குமாரன் - (ஆதியாகமம் 30:20).

2. செபுலோனைக் குறித்த யாக்கோபின் தீர்க்கதரிசனம் கப்பல் சம்பந்தமாய் இருந்தது, அக்கப்பல்கள் மூலம் வணிகம் செய்வதைப்பற்றியதாய் இருந்தது.

3. சமுத்திரம் என்ற வார்த்தைக்குப் பதிலாக எபிரெய பதத்தில்  ’சமுத்திரங்கள்’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டு இருப்பது நமது ஆர்வத்தைத் தூண்டுகிறதாய் இருக்கிறது. இது மத்தியத் தரைக்கடல் மற்றும் கலிலேயாக்கடல் போன்ற கடல்களை குறிப்பிடுகிறது.

4. உபாகமம் 33:18,19 ல் மோசே தீர்க்கதரிசனத்தை விரிவாக்கினார்.

5. செபுலோனுக்கு பங்கிடப்பட்ட இடமானது யோசுவா 19:10-16ல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பங்கிடப்பட்ட நிலப்பகுதி, யெஸ்ரயேலுக்கு மேற்கு எல்லைக்கு இறுதியில் இருந்தது, சீரியாவிலிருந்து எகிப்திற்குச் செல்லும் பெரும்பாதை இப்பகுதியில் அமைந்து இருந்தது. செபுலோனின் பெத்லகேம் என்னும் பட்டணம் இவர்களுக்காய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. (யோசுவா 19:!5).

6. இன்றைய அளவில் லெபனோனில் அமைந்துள்ள சீதோன் பட்டணமானது மிகப்பெரிய கானானிய பட்டணமாய் இருந்துவருகிறது. செபுலோன் கோத்திரத்திற்காய் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆசேர் கோத்திரமானது சீதோனை தங்களுக்காய் வேறுபடுத்திக்கொண்டனர். (யோசுவா 19:24-31). அஸ்தரோத்துகள் கானானியரை அவர்களது கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற முடியாது இருந்த்து. பிற்காலத்தில் செபுலோனியர்கள் இந்த சீதோன் பட்டணத்து எல்லைவரை நெருங்கிச் சென்று அதை ஆக்கிரமித்துக்கொண்டனர். இதனால் யாக்கோபின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறதாய் இருந்தது. 

7. இந்த கோத்திரத்தில் குறிப்பிடத்தக்க நபர் ஏலோன் இவன் இஸ்ரவேலரை பத்து ஆண்டுகள் காலம் நியாயம் விசாரித்தான். (நியாதிபதிகள் 12:11,12).

8. செபுலோனியர்கள் வீரமிக்கவர்களாய் இருந்தனர் (1 நாளாகமம் 12:33) மற்றும் ரூபனியர்களைப் போல் அல்லாது இவர்கள் ஸ்திரமானவர்களாய் இருந்தனர்.

[14/09 11:13 am] Aa Sam Jebadurai Pastor VDM: Matthew         4:13-15 (TBSI)
13 "நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்."
14 "கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,"
15 "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,"

[14/09 12:20 pm] Thirumurugan VTT: *"செபுலோன்" & "இசக்கார்"*
*_(ஆதி. 49: 13-15)_*

செபுலோன் பற்றிய தீர்க்கதரிசனத்தில் சிறிது குழப்பம் இருக்கிறது, ஏனெனில் அது இன்னும் நடந்தேறவில்லை:

*"செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்."* (ஆதியாகமம் 49:13).

யோசுவா 19:10-16 வரையுள்ள வசனங்களில் செபுலோனின் ஒதுக்கப்பட்ட நிலம் கடல்துறையோரம் வரை அடையவில்லை (அயல் கோத்திரமான ஆசேரை போல அல்லாமல் (நியா. 5: 7), அதுமட்டுமல்ல சீதோனுக்கு நெருக்கமான எல்லையிலும் இல்லை.

ஆனால் இருவரும் கடற்பாசி வர்த்தகத்தால் செழுமைப்படுத்த ப்படுவதற்கு போதுமானதாக கடற்கரை அருகில் இருந்தது இருந்தது (உபா. 33:19), வசனத்திலுள்ள  முன்னிடைச்சொல் 'நோக்கி' (towards) என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

யூதாவுக்கு ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில், சிங்கத்தைப்போல் தம் எதிரிகளைத் தாக்கியவர், இசக்கார் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார், அதன் விளைவாக கானானியருடைய சேவைக்கு தம்மை சமர்ப்பித்தார்.

[14/09 12:48 pm] Thirumurugan VTT: யாக்கோபுடைய ஏழு ஏற்றுக்கொள்ளப்பட்ட மகன்கள் பொறுப்புகள் கொடுக்கப் படுகிறார்கள் (49: 13-21, 27).

இந்த பத்து வசனங்களில், யாக்கோபு அவருடைய ஏழு மகன்களுடன் சுருக்கமான நிலையில் தமது வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்கிறார். வசனத்தின் கவித்துவ குணங்களைப் பொறுத்தவரை, மீதமுள்ள குமாரர்களின் விதியின் நிழலில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மகனின் பெயர்களை அல்லது நாமங்களை அடிப்படையாகக் கொண்டவை. (True to the poetic qualities of the text, the images of the destiny of the remaining sons are, in most cases, based on a wordplay of the son’s name.)

ஆதி. 49: 13-ல் யாக்கோபு இப்படியாக தொடங்குகிறார்: *"செபுலோன் கடற்கரையிலே குடியிருப்பார்; அவன் கப்பல்களுக்கு ஒரு புகலிடமாக இருப்பான்; அவன் சாய்ந்த சீதோன்வரைக்கும் இருக்கும்."* செபுலோன் பின்னாட்களில் மத்தியதரைக் கடலுக்கும் கலிலேயாக் கடலுக்கும் இடையே தனது வீதத்தை அடைந்தான்.

செபுலோன் ஒருபோதும் நிரந்தரமான கடலோர சொத்து உடையவனாக இல்லை என்கிற போதிலும், அவன் தாபரித்த இடம் செழித்தோங்கிய வணிகப் பகுதியாக இருந்தது. எதுவாக இருப்பினும், செபுலோனும், இசக்காரும் சில பகுதிகளைப் பகிர்ந்து கொண்டார்கள் (உபா. 33: 18-19), எனவே செபுலோன் கடல் எல்லை அருகாமையில் (கலிலேயா) உள்ள இடத்தை பெற்றிருக்கலாம்.

ஒருவேளை செபுலோனின் ஆட்கள் தங்கள் கடலோர வர்த்தகத்தில் பினீசியர்களுக்கு வேலை செய்திருக்கலாம் (உபா. 33:19). ஆனால் இனி வரும் காலங்களில் தேவன் 12 கோத்திரங்களை கூட்டிச் சேர்க்கும்போது விசேஷமாக 1000 வருட அரசாட்சி சமயத்தில் செபுலோன் தனது எல்லையை கடல் எல்லை வரைக்கும் நீட்டிக்கலாம். அப்பொழுது அவனது எல்லை  மத்திய தரைகடல் மட்டத்தில் இருந்து சீதோன் வரை நீடித்திருக்கும் (எசேக். 48: 1-8, 23-27).

[14/09 1:34 pm] Thirumurugan VTT: *"செபுலோன் கோத்திரத்தில் இருந்து சில காரியங்கள்..."*

👉👉செபுலோன் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றாகும்.

👉👉மோசேயின் காலத்தில் செபுலோனுடைய குடும்பம் அவனுடைய மூன்று குமாரர்களான *சேரேத்*, *ஏலோன்* மற்றும் *யாலேயேல்* நாமங்களில் மூன்றாக பிரிக்கப்பட்டார்கள் (எண்ணாகமம் 26:26).

👉👉யாக்கோபின் *பத்தாவது மகனாகிய செபுலோன்*, லேயாளுக்கு பிறந்த ஆறு மகன்களில் இளையவனாவான்.

👉👉செபுலோன் பிறந்தபோது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் *செபுலோன்* என்று பேரிட்டாள் (ஆதியாகமம் 30:20).

👉👉செபுலோன் என்றால் *"வசித்தல்/குடியிருப்பு"* என்று பொருள்.

👉👉 *"செபுலோன்"* பெயர் இரண்டு வெவ்வேறு எபிரேய சொற்களில் இருந்து வருகிறது. "சாவல்" *זָבַל*  (zaval) "வசித்தல்" மற்றும் "செவேட்" *זֵבֵד* (zeved) "பரிசு/ஈவு".

👉👉ஏபால் மலையில் நிற்பதற்கும் சாபத்தை உச்சரிப்பதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கோத்திரங்களுல் ஒரு கூடத்திரம் தான் செபுலோன் (உபாகமம் 27:13).

👉👉இந்த சாபங்கள் மூலம், மக்கள் அவர்களுடைய தீய வழிகளில் இருந்து விலகுவதாக தேவனிடத்தில் உறுதியளித்தார்கள். இவை எல்லாவற்றிலும், செபுலோன் அவர்களுக்கு புத்திமதிகளை வழங்கினான் (உபாகமம் 27: 15-26).

👉👉வாக்குப் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழைந்த பிறகு, செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டு கிறவர்களானார்கள் (நியா. 1:30).

👉👉அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்குங்கள் என்று தேவனுரைத்த கட்டளையை முழுமையாக கீழ்படியாத நிலையாகும் (எண்ணா. 33:52).

(தொடரும்...)

[14/09 4:00 pm] Thirumurugan VTT: *"செபுலோன் கோத்திரத்திலிருந்து சில காரியங்கள்..."*

(தொடர்ச்சி...)

👉👉கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாக செவிகொடுக்காத அல்லது கீழ்படியாத செபுலோன் கோத்திரம் நம்மெல்லாருக்கும் ஒரு பாடமாக இருக்கிறார்கள். நம் வாழ்விலும் நாம் பல்வேறு நிலைகளில் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடுவதும், கீழ்படியாமல் இருப்பதும் ஆசீர்வாதங்களை இழப்பதோடு அவருக்கு பிரியமில்லாமலும் போகிறோம்.

👉👉பின்னாட்களில், செபுலோன் கோத்திரத்தார் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள்ளும் படியாக தேவனிடத்தில் திரும்பினார்கள். *தேபோராள்* மற்றும் *பாராக்* தலைமையிலான யுத்தங்களில் பங்குபெற்று பலமாக போராடினார்கள் (நியா. 4: 6; 5:18).

👉👉நியாயாதிபதிகள் காலத்தில் செபுலோனியனாகிய *ஏலோன்* இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான் (நியா. 12:11).

👉👉இஸ்ரவேல் தேசம் ராஜாக்களால் ஆண்ட சமயத்தில், சவுலின் ராஜ்யபாரத்தை தாவீதுக்கு அளிப்பதற்காக எபிரோனுக்கு போனவர்களில்  செபுலோன் கோத்திரத்தாரும் அடங்கும் (1 நாளா. 12:23, 33, 40).

👉👉இங்கேயும் செபுலோன் கோத்திரத்தார் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறார்கள். அதாவது நாம் மீண்டும் தேவனிடத்திற்கு திரும்பும்போது, அவருடைய சித்தத்திற்கு இணங்கி அவர் பிரியப்படும் காரியங்களில் ஈடுபட நமது நாட்டத்தை காண்பிப்போம்.

👉👉செபுலோனின் பிராந்தியமானது பின்னர் வடக்கு இஸ்ரவேலில் கலிலேயா என அறியப்பட்டது. செபுலோன் கோத்திரத்தார் அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தில் தழைத்தோங்குவார்கள் என மோசே தீர்க்கத்தரிசனமாக முன்னறிவித்தார் (உபா. 33:18-19).

👉👉தேவன் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார் என்று ஏசாயா மூலம் தீர்க்கத்தரிசனமாக உரைக்கப்பட்டது (ஏசாயா 9:1).

👉👉கலிலேயா தேசத்திலே (செபுலோன் உட்பட) கிறிஸ்து முதன்முதலாக பிரசங்கித்து இந்த தேசம் கவுரவிக்கப்பட்ட காரியம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கி.மு.722ல் அசீரியர்களின் கைகளில் அவமானப்படுத்தப் பட்டதைவிட மேலானதாக காரியமாகும்.

[14/09 4:02 pm] Elango: 👍👍🙏கடைசி இரண்டு பாகத்திற்க்காக கர்த்தருக்கு ஸ்தோத்திம்்🙋♂🙋♂

[14/09 7:15 pm] Aa Peter David Bro VDM: செபுலோன் இன்றைய ஹாலந்து தேசத்தில் இருப்பவர்களா

[14/09 7:29 pm] Thirumurugan VTT: கர்த்தருக்குள் பிரியமான குழு அன்பர்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள். நமது குழுவிலுள்ள ஒரு சகோதரர் என்னிடத்தில் தனிப்பட்ட நிலையில் கேட்ட  கேள்விக்கு, எல்லோருக்கும் இல்லையென்றாலும் சிலருக்காவது பிரயோஜனமாய் இருக்கும் என்று கருதி, இங்கே குழுவில் பதிவிடுகிறேன்.

அதாவது யோபுவின் புத்தகம் 1:2-3 வரையுள்ள வசனங்களில், _"யோபுவுக்கு *ஏழு குமாரரும்*, *மூன்று குமாரத்திகளும்* பிறந்தார்கள். மேலும் அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்"_ என்று வாசிக்கிறோம்.

பிறகு கடைசி அதிகாரத்தில், அதாவது 42:12-13 வரையுள்ள வசனங்களில்,  _"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. *ஏழு குமாரரும்*, *மூன்று குமாரத்திகளும்* அவனுக்குப் பிறந்தார்கள்."_ என்று வாசிக்கிறோம்.

யோபு 42:10 ல் யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் *இரண்டத்தனையாய்க்* கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் என வாசிக்கிறோம். அதேபோல மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களில் யோபிவினுடைய *குமாரர்* மற்றும் *குமாரத்திகளைத்* தவிர்த்து மற்ற அனைத்தும் இரு மடங்காக ஆசிர்வதிக்கப்பட்டதை காணலாம்.

கேள்வி:

*யோபிவினுடைய குமாரர் குமாரத்திகள் விஷயத்தில் மட்டும் இரு மடங்கான ஆசீர்வாதம் இல்லையே ஏன்?*

நான் எனது பதிலை பதிவிடுகிறேன். தயவாய் குழு அன்பர்களும் உங்களது பதிலை பதிவு செய்யுங்கள்.

[14/09 8:03 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: யோபு 1

1 . ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
so ievara pola avunga pillaigal iellamal poyerukalamla bro

[14/09 8:34 pm] Elango: தேவனால் சாட்சி கொடுக்கபட்ட நீதிமான் யோபு அவனுடை 10 பிள்ளைகளும் திடீர் விபத்தில் மரித்து போயினர் 👇

*யோபு 42:10-13 ஐ வாசிக்கும் போது எல்லாவற்றையும் கர்த்தர் இரட்டத்தனையாக ஆசீர்வதித்தார் மிருக ஜீவன்களில் இரட்டிப்பாய் தந்தவர் பிள்ளைகள் மட்டும் 10 தான் தந்தார் காரணம் 👇20 பிள்ளைகளை ஏன் தரவில்லை?*

*யோபுவின் பிள்ளைகளின் ஆத்துமாவை தேவன் காப்பற்றியதே ஆகும் எப்படி? 👇👆👆👈👈*

*மிருகத்தின் ஆத்துமா பரலோகம் போவதில்லை ஆகவே அதை இரட்டிபாக மீண்டும் பூமியிலேயே கொடுத்து விட்டார்.* ஆனால் 👇

*யோபுவின் பிள்ளைகள் ஆத்துமா சேதம் இல்லாமல் தேவனிடத்தில் பாதுகாக்கபட்டது, எனவே முதல் பிள்ளைகளின் ஆத்துமா பரத்தில் 10;  மீண்டும் யோபுவின் பிள்ளைகள் பூமியில் 10;  ஆக மொத்தம் இரட்டிபான பிள்ளை செல்வங்கள் 20*

நம் தேவன் ஆத்துமாவிற்கு தீங்குவராமல் காக்கும் தேவன்.

- @Aa Charles Pastor VDM சார்ல்ஸ் பாஸ்டர் 👆 பழைய தியானத்திலிருந்து👇🏻

https://vedathiyanam.blogspot.in/2016/12/blog-post_87.html?m=0

[14/09 8:41 pm] Aa Johnson VTT 1: தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

[14/09 9:44 pm] Elango: ஆதியாகமம் 35:23
[23]யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

லேயாள், யாக்கோபுக்கு பிறந்த *முதல் மகன் ரூபன்.*

லேயாள், யாக்கோபுக்கு பிறந்த *கடைசி மகன் செபுலோன்.*

[14/09 9:54 pm] Elango: 3⃣ *செபுலோன் கோத்திரத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் என்னென்ன❓*

நியாயாதிபதிகள் 5:18
[18] செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே *தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.*

கிறிஸ்துவின் சேனாதிபதிகளாகிய நாமும், கிறிஸ்துவின் அன்பிற்க்காகவும், சுவிசேஷத்தின் நிமித்தமும், ஆத்தும பாரத்தின் தாகத்தின் நிமித்தமும் நாமும் நம் ஜீவனை மேலாக எண்ணாமல் கிறிஸ்துவின் போர்வீரர்களாக இருக்க வேண்டும்.

அப்போஸ்தலர் 20:24
[24]ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; *என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.*✝✝✝✝✝

மத்தேயு 10:28
[28] *ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.*

Post a Comment

0 Comments