Type Here to Get Search Results !

தியத்தீரா சபையைப் பற்றி ஆண்டவர் கூறும் குறைகள், நிறைகள் என்னென்ன❓

 [05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: ⛪ *இன்றைய வேத தியானம் - 24/08/2017* ⛪
1⃣ *தியத்தீரா என்பதன் அர்த்தம் என்ன❓*தியத்தீரா சபையைப் பற்றி ஆண்டவர் கூறும் குறைகள், நிறைகள் என்னென்ன❓

2⃣ இன்றைய சபைகளோடு, தியத்தீரா சபையை எப்படி ஒப்பிடலாம்❓

3⃣ தியத்தீரா சபைக்கு சொல்லப்பட்ட சத்தியத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்னென்ன❓

4⃣ *உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.Rev 2:25* - என்பதன் அர்த்தம் என்ன❓

5⃣ சாத்தானுடைய ஆழங்கள் என்பது என்ன❓நாம் சாத்தானுடைய ஆழங்களை அறிய வேண்டுமா ❓கூடாதா❓

6⃣  *நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.Rev. 2:26* - எந்த ஜாதிகளின் மேல் நமக்கு ஆண்டவர் அதிகாரம் கொடுப்பார்❓

⛪ வெளிப்படுத்திய விஷேசம் ஏழு சபைகளுக்கு கூறப்பட்ட வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வரலாற்று, இறையியல், வேதாகம பார்வையில் தியானிக்கலாம். *இன்றைக்கு தியத்தீரா சபையை குறித்து தியானிக்கலாம்.⛪*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: 💥தியத்தீரா சபை 💥

(வெளிப்படுத்தல்: 2:18-29)

(போப்பின் ஆளுகை சபை - விட்டுக் கொடுக்கும் தன்மை)

கி.பி.600 - 1517 - கால சபைக்கு ஒப்பிடலாம்

*தியத்தீரா பட்டணம்: (ஐரோப்பா)*

இது பெர்கமுவுக்கு 40 மைல் தென் கிழக்கில் அமைந்திருக்கிறது. வியாபாரத்திற்கு சிறந்த இடம். இரத்தாம்பர வியாபாரத்திற்கு பெயர் பெற்றது.

 அப்போஸ்தலர்: 16 ல் கூறப்பட்ட லீதியாள் இப்பட்டணத்தைச் சார்ந்தவள்.  இங்கே ஆடைகளுக்கு சாயம் தோய்க்கும் தொழில் சிறப்பாக நடந்து வந்தது. இந்த சாயம் காய்ச்சுவதற்கு உபயோகிக்கப்பட்ட  தாவரப் பொருள் இப்பட்டணத்தை சுற்றியுள்ள இடங்களில் தான் கிடைத்தன. லீதியாளின் மூலமாய் இப்பட்டணத்தில் சுவிசேஷம் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சாம்பதி என்ற தேவதையின் கோவில் இங்கிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இப்பட்டணம் இருந்த இடத்தில் சிறு கிராமம் இருக்கிறது. அசுத்தமான இடமாயும் தற்போது இருக்கிறது.

*இச் சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:*

பட்சிக்கிற அக்கினியாக கிறிஸ்து இச்சபைக்கு வெளிப்படுகிறார். இச்சபை மனம் திரும்பாவிட்டால் நியாயத் தீர்ப்பு சீக்கிரமாய் வரும் என்பதைக் காட்டுக்கிறது.

*நற்குணங்கள்:*

1. நற்கிரியை

2. அன்பு

3. நல்ல ஊழியம்

4. பொறுமை

5. விசுவாசம்

6. அதிகமான நற்கிரியை

*தீய குணங்கள்:*

யேசபேலுக்கு இடம் கொடுத்தல். அதாவது, வேசித்தனத்துக்கும் விக்கிரக ஆராதனைக்கும் இடம் கொடுத்தல்.

*யேசபேல்:*

பழைய ஏற்பாட்டில் ஆகாப் ராஜாவின் மனைவி, சீதோனிய ராஜாவின் மகள். புறஜாதிய ஸ்திரி. விக்கிரக ஆராதனை செய்தவள். இவள் திருமணம் ஆனவுடன் தன்னுடன் 450 பாகால் தீர்க்கதரிசிகளையும் 400 தோப்பு விக்கிரக தீர்க்கதரிசிகளையும் கொண்டு வந்தாள். (1ராஜாக்கள்: 16:31-33; 18:19; 19:2). இங்கே யேசபேல் என்று கூறப்பட்டிருப்பது இருண்ட காலத்தில் எழும்பிய போப்பின் ஆளுகையைக் குறிக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். இந்நாட்களில் பரிசுத்தவான்களுடைய மற்றும் தேவதூதர்களின் சிலைகள் வைக்கப்பட்டன. கி.பி. 381 ல் கன்னி மரியாளை வணங்கும் முறை ஆரம்பமாயிற்று. இவ்வாறு தேவனுடைய பிரம்மாணத்திற்கு விரோதமாய்  விக்கிரக ஆராதனையை சபைக்குள்ளே கொண்டு வந்த போப்பின் ஆளுகையையே யேசபேலின் போதனை என்று இங்கே கர்த்தர் சுட்டிக் காட்டுகிறார்.

*சாத்தானின் ஆழங்கள்:வெளிப்படுத்தல்: 2:24*

ஆவியின் வரத்தினால் கடவுளின் ஆழங்களை அறியக்கூடியவர்கள் என்று வீம்பு பாராட்டிய சிலர் இச்சபையிலிருந்தனர். இக் கொள்கையை உடையவர்களுக்கு நாஸ்டிக்ஸ் கொள்கையினர் என்று பெயர். அந்த வார்த்தை மாம்சமானது. அதாவது, கிறிஸ்து மனித உருவில் வந்தார் என்பதை மறுப்பவர்கள், தங்கள் அறிவினால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ள முடியும் எனக் கூறுகிறவர்கள் இவர்கள் தான். சாத்தானுடைய ஆழங்கள் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

*எச்சரிப்பு: *

மனம் திரும்பாவிடில் உபத்திரவங்களை அனுப்புவேனென்றும், இந்த உபதேசங்களைக் கைக் கொள்ளுகிறவர்களைக் கொல்லுவேன் என்றும் கிரியைகளுக்கேற்ற பலனளிப்பேன் என்றும் எச்சரிக்கிறார். சத்தியத்தில் நடப்பவர்களை முடிவு பரியந்தம் நிலை நிற்குமாறு ஆலோசனை கூறுகிறார்.

*ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்:*

ஜாதிகள் மேல் அதிகாரம். கிறிஸ்துவுடன் ஆளுகை செய்யும் சிலாக்கியம். விடிவெள்ளி நட்சத்திரத்தை அவருக்குக் கொடுப்பேன். கிறிஸ்துவே விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறார். வெளிப்படுத்தல்: 22:16. ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு தம்மையே கொடுக்கிறார் என்றும், விடிவெள்ளி என்பது 'இருள் நீங்கி வெளிச்சம் உண்டாவதற்கு அறிகுறியானபடியால் உனக்கு ஜெயத்தைக் கொடுப்பேன்' என்று கூறுகிறார் எனவும் பொருள் கொள்ளலாம்.

http://nesarin.blogspot.in/2012/11/blog-post_27.html?m=1

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: *தேவனை பற்றி கொண்டிருக்கிற அநேகருடைய பக்தி*👇 👇 👇 👇 👇 👇 👇 ஓசியா 6:4
[4] *எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் 😭😭😭👇👇👇👇👇ஒழிந்துபோகிறது.*

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: எபிரெய 3:10-14
[10]ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, *அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற❤❤❤ இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;*
[11]என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
[12]சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
[13]உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
[14] *நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்👇👇👇👇👇👇👇👇👇👇🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.*👍👍👍👍👍

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: ரோமர் 1:28-32
[28] *தேவனை அறியும் அறிவைப்👇👇👇👇👇👇 பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.*
[29]அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
[30]புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
[31]உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
[32]இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: சாத்தானின் சிலையும் சிம்மாசனமும் - பதிவு 1223Pm முழுமையாக படித்தால் நிறைய விசயம் இது சம்பந்தமாக அறியலாம். *காலம் கொடியது!!* இறக்கை கட்டி பறக்குது!! காலத்தை நிதானிப்போம்!!

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: எபிரெ 4:1-3,16
[1] *ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல்👇👇👇👇👇👇👇 பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.*
[2]ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
[3]விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
[16]ஆதலால், *நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.*

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: இரகசிய வருகைக்கு ஆயத்தப்படும்படி ஆசியாவிலிருந்த ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட தூதுகள்

      அப்போஸ்தலனாகிய யோவானுடைய காலத்தில் ஆசியாவிலிருந்த ஏழு சபைகளும் கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தப்படவேண்டும் என்ற நோக்கிலே அவைகளுக்கு தூதுகள் கொடுக்கப்பட்டன. இந்த தூதுகளை நாம் ஏழு விதமாக வகைப்படுத்தலாம். முதலாவது கர்த்தராகிய இயேசு தம்மை யாரென்று வெளிப்படுத்தி அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கும் தூதானது சபைகளின் நிறைகளை பாராட்டியும் சபையின் குறைகளை சுட்டிக்காட்டியும் அந்த நிலவரத்திலே நீடித்திருந்தால் அதற்குரிய எச்சரிப்பும் கொடுக்கப்படுவதுடன் தேவ ஆலோசனையும் கொடுக்கப்படுகிறது. பின்னர் தமது இரகசிய வருகையை குறித்தும் முடிவாக ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறப்போகும் நித்திய பிரதிபலனோடுகூட தூது முடிவடைகிறது. ஆசியாவிலிருந்த ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட தூதுகள் கடைசி காலத்தில் வந்திருக்கும் சபையுங்கூட வருகைக்கு ஆயத்தப்பட துரிதப்படுத்துகிறது.

 தியத்தீரா சபை

1.அறிமுகம்

கர்த்தராகிய இயேசு தம்மை அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரனாக வெளிப்படுத்துகிறார்.

2.நிறைகள்

தியத்தீரா சபையின் கிரியைகளும், அன்பும், ஊழியமும், விசுவாசமும், பொறுமையும், முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதும் நிறைகளாக காணப்பட்டது.

3.குறைகள்

தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி தியத்தீரா சபையானது அவளுக்கு இடங்கொடுத்தது அதன் குறையாகும்.

4.எச்சரிக்கை

இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.

5.அறிவுரை

தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். உங்களுக்குள்ளதை பற்றிக்கொண்டிருங்கள்

6.இரகசிய வருகை

“நான் வருமளவும்” என்று கர்த்தராகிய இயேசுவின் இரகசிய வருகையைக் குறித்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

7.பிரதிபலன்

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: *தியத்தீரா சபையும்
சாத்தானின் ஆழங்களும்*

சாத்தானைப்பற்றி நாம் ஏன் அறிந்துக்கொள்ளனும் அப்படின்னு நினைக்கலாம். எதிரியின் பலத்தை அறியாமல் எப்படி அவனை வெல்ல முடியும்? வெ.வி. 2: 24 ல் தியத்தீரா சபைக்கு எழுதும்போது
சாத்தானுடைய ஆழங்களை பற்றி (தியாத்தீரா சபை) சொல்லுகிறார்களே என கர்த்தர் கேட்கிறார். வெ. வி. புத்தகம் கடைசி காலங்களைப்பற்றி சொல்லுவதால் தியத்தீரா சபைக்கு ஏன் கூறுகிறார் என்பதை தியானிக்க வேண்டும். ஆகவே இந்த கடைசி காலத்தில் சாத்தானின் ஆழங்களை அறிந்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. வெ. வி. புத்தகத்தில் உள்ள ஏழு சபைகளுக்கும் கடைசி காலத்திற்க்கும் சம்பந்தம் இருப்பதாலேயே சேர்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வெ.வி. புத்தகம் 1 - 3 வரை ஏழு சபைகளைப் பற்றிச்சொல்லுகிறது. அவைகள் ஆதி திருச்சபை காலங்களில் இருந்த சபைகள். அதிகாரம் 4 முதல் இனி நடக்கப் போறவைகள்.

நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; (1: 19)

"தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன்.
வெளி. விசேஷம் 2 :24

 சாத்தானின் தந்திரங்கள்:

"சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே."
- 2 கொரிந்தியர் 2: 11

சாத்தானின் தந்திரங்களின் வகைகள் :

1. சரீர சோர்வு உண்டு பண்ணுவான. அதனால் துவண்டு போவோம்.

2. பிரர்ச்சனையை சுட்டிக்காட்டுவான்

3. பொய்யானவன் -
சரீர நோய் சில பொய்யானவை -
செக் பண்ணினா ஒண்ணும்
இருக்காது.

I. தேவ அன்பின்மேல் சந்தேகத்தை உண்டு பண்ணுவான்.
II. தேவ சித்தத்தின்படி கேள்வி கேட்கப் பண்ணுவான்.

4. இப்படித்தான் இருப்பாய் இறுதி வரை இப்படித்தான் ...
மனச்சோர்வை உண்டு பண்ணுவான்.

5. இயேசு கிறிஸ்துவைப் பற்றி விசுவாசத்தை குலைப்பான்.

6. சந்தேகத்தை உண்டுபண்ணுவான் - எப்படி புதுசா சிருஷ்டிக்க முடியும்ன்னு கேட்பான்

7. விசுவாசத்தை குறைந்து போகும்படி செய்வான்.

இதற்க்கும் மேலும் சாத்தானின் ஆழங்கள் உண்டு. அதை வேதத்திலிருந்து வெளிப்பாடுகள் மூலம் அறியலாம்.

சாத்தானின் தவறான எண்ணங்கள் என்ன?

1. ஸ்தானத்தை விட்டு பெரிய ஸ்தானத்தை அடைய நினைத்து செயல்படுத்துவது. அதுவும் தேவனின் உன்னதமான இடத்திற்க்கு போக நினைத்தான்.

ஏசா 24 : 13 - 14 ல் "நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று அவன் இருதயத்தில் சொன்னான்.

~ ஆழங்கள் தொடர நீங்களும் தியானியுங்கள். பதியுங்கள்.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: எபிரெய 12:28-29
[28]ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி *கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்*🤝🤝🤝🤝🤝.
[29]நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: இயேசு கிறிஸ்து தியத்தீரா சபைக்கு சொல்லுகிறபோது *சாத்தானுடைய ஆழங்களை அறிந்துக் கொள்ளாதிருக்கிறீர்கள்* என்கிறார்.

_தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்._
(வெளி. விசேஷம் 2 :24)

சாத்தானின் ஆழங்கள்:

★ வானத்திற்க்கு ஏறுவேன்
★ தேவனுடைய நட்சத்திரங்களுக்கு
    மேலாக
★ ராஜாவாக உயர்த்துவேன்
    சிங்காசனத்தில் உட்காருவேன்.

★ வடபுற ஆராதனை கூடம்
  உள்ள பரலோகத்திற்க்கு போக
  விரும்புகிறான்.(ஏசாயா 14)

★ திருச்சபை மேல் ஆதிக்கம்

அது மேட்டிமையானதை எல்லாம் அற்பமாய் எண்ணுகிறது.  அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது..
யோபு 41 :34

லவோத்கியா சபை அனலுமின்றி குளிருமின்றி ...... இதுதான் பிசாசு புகுந்த சபை.

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. -மத்தேயு 16 :18

ஸ்தானத்தை அடைய விரும்பினான்.
தாழ்மையே இல்லை லூசிபராய் இருந்தபோது.

*தாழ்மையை கைக்கொண்டால் இந்த எண்ணம் வராது.*தன் ~அன்பால் தேவனை கவர்ந்தான் என்பது உண்மை.~

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: சாத்தானின் ஆழங்கள்

பாவம் என்றால் என்ன, பாவத்தின் விளைவு, அந்த பாவத்திற்கு கிடைக்கும் சம்பளம் என்ன போன்றவைகளை தெரிந்து கொண்டிருப்பதற்கும்.... அதே பாவத்தை அறிவதற்கும் வித்தியாசம் உள்ளது.

உதாரணமாக வேசி ஆழமான படுகுழி, பரஸ்திரீயின் வாய் ஆழமான படுகுழி, பாவத்தின் சம்பளம் மரணம்.... என்பதெல்லாம் நாம் வேதத்தின் மூலம் தெரிந்து வைத்திருக்கிறோம் அதன் மூலம் தேவ எச்சரிப்பும் பெற்றுள்ளோம். இது தேவனை அறிதல் என்பதற்குரிய ஒன்று.

அதே நேரத்தில் வேசியோடு இசைந்திருத்தல் என்பது அந்த வேசியை அறிதல் என்பதாகும்.
சுருக்கமாக சொன்னால் வேசித்தனம் பாவம் என தெரிந்து அந்த பாவத்தை விட்டு விலகி ஓடி தொடர்ந்து பரிசுத்தத்தில் வாழ்ந்தால் தேவனை அறிதல், தேவனோடு இசைந்திருந்தல் ஆகும்.
ஆனால் வேசித்தனம் பாவம் என அறிந்திருந்தும் அதை  விட்டு விலகாமல் அந்த பாவத்தில் தொடர்ந்து  வாழ்ந்தால் அது வேசியை அறிதல், வேசியோடு இசைந்திருத்தல் ஆகும்.

பொய், திருடு, விபச்சாரம், விக்கிரகாராதனை...என தொடங்கி தேவனுக்கு மேலாக தன் சிங்காசனத்தை உயர்த்துதல் வரைக்கும் இப்படிப்பட்ட எல்லா பாவங்களிலும் இசைந்திருப்பது சாத்தானுடைய ஆழங்கள் என புரியலாம்.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: பொல்லாதவனை அறியமாட்டேன் என சங்கீதம் 101:4ல் தாவீது சொல்கிறார்.

1யோவான்3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனை கொலை செய்த காயீனைப்போல் இருக்க வேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலை செய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

தன் கிரியைகள் பொல்லாதவை என நன்றாக அறிந்திருந்தும் காயீன் தன் சகோதரனை கொலை செய்ததினிமித்தம் பொல்லாங்கனை அறிந்தான்..அதாவது பாவத்தை கர்ப்பந்தரித்து அதை பெற்றெடுத்தான்.

ஆனால் தாவீது சவுலை கொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தும் அவனை கொல்லாமல், சவுலின் வஸ்திர தொங்கலை மட்டும் அறுத்து சவுலின் குற்ற செயலை சவுலுக்கு உணர்த்துவித்தான். அந்த இடத்தில் பொல்லாதவனை அறிதல் என்ற பாவத்தை செய்யாமல் விலகி வந்தான்.
பாவத்தை பெற்றெடுத்தால் அதற்கு சம்பளம் மரணம், பாதாளம் என தெரிந்திருந்தும்
அந்த ஆழத்தை அறியாமல் அதாவது அதோடு இசையாமல் விலகி வந்தார் தாவீது.

ஆனால் சாத்தானுடைய ஆழங்கள் என்பது தற்காலத்தில் மிகவும் அருவருப்பான பல காரியங்களை கொண்டது. அது அநேகமாக எல்லாராலும் நிதானிக்க கூடியதே.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: விக்கிரக ஆராதனை என்பது விக்கிரகத்தை வழிபடுவது மாத்திரம் அல்ல.  தேவனைக்காட்டிலும் எதையாவது நாம் அதுகம் நேசித்தால் அது நமக்கு விக்கிரகமே.....

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: *சாத்தானுடைய ஆழங்கள்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 2கொரிந்தியர் 2: 11
*சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய👇👇👇👇👇👇👇👉 தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே*.

2 Corinthians 2: 11
*Lest Satan should get an advantage of us: for we are not ignorant of his devices.*👍👍👍

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: யோவான் 10: 10
*திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்👆👆👆👆👆👆👆. நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.*🖐🖐🖐🖐🖐🖐🙌

John 10: 10
The thief cometh not, but for to steal, and to kill, and to destroy: I am come that they might have life, and that they might have it more abundantly.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: *நாம் ஆராய வேண்டிய ஆழங்கள்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 ரோமர் 11:33-36
[33] *ஆ! தேவனுடைய ஐசுவரியம், 👍ஞானம்,👍 அறிவு👍 என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!*👌👌👌👌👌👌👌 அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
[34]கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?
[35]தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
[36]சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: எபேசியர் 4: 27
*பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.*✅✅✅✅✅

Ephesians 4: 27
*Neither give place to the devil.*⛔⛔⛔⛔⛔

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: *இயேசு கிறிஸ்துவின் ஆழம்*👇 👇 👇 👇 👇 எபேசியர் 3:18-19
[18] *சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய 👉👉👉அன்பின் 🤝🤝🤝அகலமும், 🤝🤝🤝நீளமும், 🤝🤝🤝ஆழமும்,🤝🤝🤝 உயரமும் 🤝🤝🤝இன்னதென்று உணர்ந்து;*👇👇👇👇👇👇👇👇
[19] *அறிவுக்கெட்டாத🤔🤔🤔🤔 அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்,💪 தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்🙌, அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே,👌👌👌👌 உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்*.🙏🙏🙏🙏

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: ஆவியானவர் கிறிஸ்துவின் ஆழங்ஹகளில் நாம் கடந்து செல்ல நம் ஆவியில் கிரியை செய்கிறார்.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: லூக்கா 19:15-19
[15]அவன் *ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது,👇👇👇👇👇👇 தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் *அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.*☝️ ☝️ 👆 👆 👆 👆 👆
[16]அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
[17] *எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.*
[18]அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
[19]அவனையும் அவன் நோக்கி: *நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு* என்றான்.

[05/09 3:03 pm] Aa Levi Bensam Pastor VDM: *இயேசுவோடு யார் ஆளுகை செய்ய முடியும்*👇 👇 👇 👇 👇 👇 2தீமோத்தேயு 2: 12
*அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;*👍👍👍👍👍 நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

2 Timothy 2: 12
If we suffer, we shall also reign with him: if we deny him, he also will deny us:

Post a Comment

0 Comments