Type Here to Get Search Results !

கிறிஸ்தவர்கள் பறவைகள், விலங்குகளை கண்காட்சிக்காக வளர்க்கலாமா❓

[04/09 10:14 am] Elango: 🌿🌳🕊🐑 *இன்றைய வேத தியானம் - 02, 04/09/2017* 🌿🌳🕊🐑

1⃣  *உன்னதபாட்டு 2:3  கிச்சிலி மரம் பற்றி வேதம் என்ன கூறுகிறது❓* கிச்சலி மரம் என்பது யாரை குறிக்கிறது, கிச்சிலி மரம் எப்படிப்பட்டது, அதின் சுபாவம் என்ன, அதின் நிழலை யாருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது, நிழலின் கீழ் நாம் செல்லவேண்டுமா, அல்லது நிழல் நம்மை தேடி வருமா, நிழலின் கீழ் சென்றால் தான் கனி  கிடைக்குமா, எப்படி செல்ல வேண்டும்❓

2⃣ யாத்திராகமம் 30:23 - 25 வசனத்தில் சொல்லப்பட்ட *அபிஷேகத்துக்கு பயன்படுத்திய சுகந்தவர்க்கங்களை  பற்றி வேதம் கற்றுத்தரும் பாடம் என்ன❓*

3⃣  ஆதியாகமம் 30:16 சொல்லப்பட்ட, தூதாயீம் என்ற பழம்  இப்போதும் இருக்கிறதா,
தூதாயீம் கிடைக்க கூடாத அறிய வகை பழமா❓

4⃣ பூனை என்ற விலங்கை பற்றி வேதத்தில் ஏதும் குறிப்பு உள்ளது போல் இல்லையே,  அதற்கு வேறு ஏதும் பெயர் வேதத்தில் இருக்கிறதா ❓

5⃣ கிறிஸ்தவர்கள் கிளி, *புறா, மீன்களை கூண்டில் அடைத்து வைத்து கண்காட்சிக்காக வளர்க்கலாமா*❓

6⃣ *பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்* என்றார்; ஆதியாகமம் 1:30
*சகல  மிருகஜீவன்களுக்கும், பறவைகளுக்கும், பிராணிகளுக்கும் தாவரங்களையே உணவாக தேவன் கொடுத்திருக்க, சிங்கம், புலி, கழுகு என்பவைகள் ஏன் எப்பொழுதிலிருந்து விலங்கு, பறலை, மனித மாம்சத்தை ஆகாரமாக தின்ன துவங்கின❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

 [04/09 9:38 am] Aa Peter David Bro VDM: சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:3
[3]காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

[04/09 9:39 am] Aa Peter David Bro VDM: கிச்சிலி மரம் கனி நிழல் பற்றி கூறுங்கள்

[04/09 9:40 am] Aa Robert Pastor VDM: ஸ்தோத்திரம் ஐயா,
   .யாத்திராகமம் 30:23 - 25 இதில் சொல்லப்பட்ட அபிஷேகத்துக்கு பயன்படுத்திய சுகந்தவர்க்கங்களை  பற்றிய முழுமையான விளக்கம்  தந்தால் அது மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும் ஐயா.🙏

[04/09 9:54 am] Jebajayaraj Bro VTT: தூதாயீம் என்பது பழம் அது இப்போதும் இருக்கிறதா..
தூதாயீம் கிடைக்க கூடாத அறிய வகை பழமா..தூதாயீம் பழத்திற்காக நான் உம்மை கொண்டேன் என்று வேதத்தில் வாசிகிறோமே

[04/09 9:54 am] Jebajayaraj Bro VTT: பூனை என்ற விலங்கை பற்றி வேதத்தில் ஏதும் குறிப்பு உள்ளது போல் இல்ல. அதற்கு வேறு ஏதும் பெயர் இருக்கிறதா .

 [04/09 10:15 am] Jebajayaraj Bro VTT: நோவாவின் பேழை இதில் சர்பமும் இருந்திருக்குமோ

[04/09 10:29 am] Aa Levi Bensam Pastor VDM: https://en.m.wikipedia.org/wiki/Mandrake

[04/09 10:30 am] Aa Levi Bensam Pastor VDM: தூதாயிம் 👆👆👆👆👆

[04/09 12:28 pm] Elango: *தூதாயிம் கனி மலட்டுத்தன்மையை நீக்கும், கருத்தரிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது*

1. *ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு,* தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: *எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்* என்றாள்.
2. அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ *உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்,* நான் தேவனா? என்றான்.

ராகேல் ஏன் லேயாளிடம் அந்த தூதாயிம் கனியை கேட்டாள் என்றாள், அந்த *தூதாயின் கனி கருத்தரிப்பதற்கும் அதன் மூலம் மலடி என்ற நிந்தையை போக்குவதற்கும் இந்த தூதாயீம் கனிகள் உதவும் என அவள் ஒருவேளை நினைத்திருக்கலாம்* என்று வேத அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இங்கே கீழே பாருங்கள்... மலடியாயிருந்த ராகேல் அந்த பலத்தை தின்ற பிறகு கருத்தரிக்கிறாள் என்றும், தேவன் அவளை நினைத்தருளினார் என்றும் வேதம் கூறுகிறது.

22. *தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.*
23. *அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,*
24. இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். ஆதியாகம் 30:22-24

பல வருடங்களாக குழந்தை பாக்கியமில்லாமல் இருக்கும் பலருக்கு கேள்வி எழும்பலாம்... இந்த பழம் இப்போது இருக்கிறதா?

அந்த பழத்தை தின்றதால் தான் அவள் கர்த்தரித்தாள் என்றாள், தேவன் அவளை நினைத்தருளினதினால் தான் அவள் கருத்தரித்தாள் என்று சொல்லுவதுண்டு. எது உண்மை என்று கேள்வி எழும்?

[04/09 12:30 pm] Aa Bhascaran Ayya VDM: ஆமேன் இந்த குழுவில் இணைந்து அருமையான பணியை செய்து கொண்டிருக்கிற ஒவ்வொரு தேவபிள்ளைகளையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிப்பாராக🙏🙏💐

[04/09 12:31 pm] Elango: *பூர்வ காலங்களில், தூதாயீம் கனி ( mandrake ) மயக்க மருந்தாகவும் வலிப்பு நோயைத் தடுக்கவும் அல்லது அதிலிருந்து விடுபடவும் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது*

தியாஸ்காரிதெஸ் என்ற பண்டைய கிரேக்க மருத்துவர், மேன்ட்ரேக்ஸ் ( mandrake) என்ற மூலிகையை ஒயினுடன் கலந்து தயாரித்த பானம் மரத்துப்போக செய்யும் தன்மையுடையது என்பதாக உரிமை பாராட்டினார். இவர்தான் முதன்முதலில் “அனஸ்தீஸியா” என்ற வார்த்தையையும் பயன்படுத்தியதாக தெரிகிறது.

[04/09 12:33 pm] Elango: ஆமென். பல நாட்கள் கழித்து பார்க்க முடிகிறது பாஸ்கரன் ஐயா... நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் ஐயா... 😀

[04/09 1:30 pm] Elango: 🌿🌳🕊🐑 *இன்றைய வேத தியானம் - 04/09/2017* 🌿🌳🕊🐑

1⃣  *உன்னதபாட்டு 2:3  கிச்சிலி மரம் பற்றி வேதம் என்ன கூறுகிறது❓* கிச்சலி மரம் என்பது யாரை குறிக்கிறது, கிச்சிலி மரம் எப்படிப்பட்டது, அதின் சுபாவம் என்ன, அதின் நிழலை யாருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது, நிழலின் கீழ் நாம் செல்லவேண்டுமா, அல்லது நிழல் நம்மை தேடி வருமா, நிழலின் கீழ் சென்றால் தான் கனி  கிடைக்குமா, எப்படி செல்ல வேண்டும்❓

2⃣ யாத்திராகமம் 30:23 - 25 வசனத்தில் சொல்லப்பட்ட *அபிஷேகத்துக்கு பயன்படுத்திய சுகந்தவர்க்கங்களை  பற்றி வேதம் கற்றுத்தரும் பாடம் என்ன❓*

3⃣  ஆதியாகமம் 30:16 சொல்லப்பட்ட, தூதாயீம் என்ற பழம்  இப்போதும் இருக்கிறதா,
தூதாயீம் கிடைக்க கூடாத அறிய வகை பழமா❓

4⃣ பூனை என்ற விலங்கை பற்றி வேதத்தில் ஏதும் குறிப்பு உள்ளது போல் இல்லையே,  அதற்கு வேறு ஏதும் பெயர் வேதத்தில் இருக்கிறதா ❓

5⃣ கிறிஸ்தவர்கள் கிளி, *புறா, மீன்களை கூண்டில் அடைத்து வைத்து கண்காட்சிக்காக வளர்க்கலாமா*❓

6⃣ *பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்* என்றார்; ஆதியாகமம் 1:30
*சகல  மிருகஜீவன்களுக்கும், பறவைகளுக்கும், பிராணிகளுக்கும் தாவரங்களையே உணவாக தேவன் கொடுத்திருக்க, சிங்கம், புலி, கழுகு என்பவைகள் ஏன் எப்பொழுதிலிருந்து விலங்கு, பறலை, மனித மாம்சத்தை ஆகாரமாக தின்ன துவங்கின❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[04/09 2:14 pm] Aa Rooban Pastor VDM: 🌳கிச்சிலி என்பது ஆங்கில வேதாகமத்தில் ஆப்பிள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதை சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஆரஞ்சு என்றும் சொல்லுகிறார்கள் எபிரேய வேதாகமத்தில் இதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் எபிரேய பதம் எந்த பழத்தை குறிக்கிறது என்பது இன்றுவரை சந்தேகமே👋👋👋😇

[04/09 2:48 pm] Aa Rooban Pastor VDM: 🍀இந்த எபிரேய பதம் ஆகிய தூதாயீம் ஒருவகையான செடியைக் குறிக்கிறது ஆனால் இன்ன விதமான செடியைத் தான் குறிக்கும் என்று இன்றுவரை உறுதி பட தெரியாது அநேக வேத சாஸ்திரிகள் இது ஒரு வகையான கிழங்கு தான் என்று நினைக்கின்றனர் இதனுடைய வாசனை நித்திரை மயக்கம் தரவல்லது இதை ஆதி காலத்து ஜனங்களுக்கு வைத்தியத்திற்கு உபயோகித்தனர் மற்றும் விசேசமாய் காம இச்சை ஏற்படுத்தவும் ஆதிகாலத்தில் ஜனங்கள் உபயோகப் படுத்தினார்கள் இதனுடைய விதை நச்சுத் தன்மை யுடையது இந்த தூதாயீம் கனியை ராகேல் லேயாளிடத்தில் வாங்கின பிறகு தான் ராகேலுக்கு குழந்தை பிறக்கிறது ஆதலால் சில வேத சாஸ்திரிகள் குறிப்பிட்ட காரணத்திற்காக ராகேல் அந்தக் கனியை வாங்கினார்கள் என்று கூறுகிறார்கள் இந்த தூதாயிம் கனியினுடைய தெளிவான விளக்கத்தை பெருவது இன்றுவரை எட்டாகனியே😇👋👋👋👋

[04/09 3:27 pm] Aa Rooban Pastor VDM: 🐱வேதத்தில் பூனையைக் குறிப்பிடும் வசனங்கள் இல்லை பூர்வ கால எகிப்தியர்கள் பூனையை தெய்வமாக கிறார்கள் அதற்கு எகிப்தியர்கள் கொடுத்த பெயர் bastet ஆகும் இது கீழ் எகிப்தின் பாதுகாவல் தெய்வமாகும் இது ஒரு பெண் தெய்வமாகும் இந்த பூனை என்கிற பெயர் தள்ளுபடி ஆகமங்களில் உள்ள பரூக் புத்தகத்தில் 6 ஆம் அதிகாரத்தில் 21 ஆம் வசனத்தில் மாத்திரமே இடம்பெறுகிறது
 பூனை என்பதன் கிரேக்க வார்த்தை "AILOUROS" ஆகும் நன்றி👋👋😇

[04/09 3:27 pm] Aa Rooban Pastor VDM: ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்வோமாக வணங்கினார்கள்

[04/09 3:28 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: தன் மிருக ஜுவன்கள் bible la ieruki so athoda veru peyaraka ierukuma bro

[04/09 3:29 pm] Aa Rooban Pastor VDM: புரியவில்லை சகோதரரே

[04/09 3:30 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: நீதிமொழிகள் 12

10 . நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; so cat iethula adankuma bro

[04/09 3:31 pm] Elango: புலி,  சிங்கம், சிறுத்தை போன்றவைகள் பூனையின் வம்சத்தை சார்ந்ததா?

[04/09 3:32 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: Face same ierukum bro

[04/09 3:32 pm] Aa Prabhu Sasirekha Sis VTT: But sizes different

[04/09 3:34 pm] Elango: மனுச வம்சத்திலிருந்து மனுஷன் தான் வர முடியும்.

அது போல புலி வம்சம் பூனையாகாது.

புலி வம்சத்தில் புலியே வரும்.

புலி வம்சம் வேறு,  பூனை வம்சம் வேறு.

*குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதும் கட்டுக்கதையே, இறைவன் படைப்பை அறியாத அறிவியலின் பொய்யே.*

ஒவ்வொரு மிருகத்திற்க்கும் தேவன் தனித்துவத்தை கொடுத்திருந்தார்.

*மற்றவர்களுடைய கருத்தையும் அறிய விரும்புகிறேன்*

[04/09 3:34 pm] Aa Rooban Pastor VDM: இதை பற்றி கொள்ள வேண்டும் என்றால் zoology படித்தால் தான் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்  சகோதரரே😇👋👋👋

[04/09 3:36 pm] Aa Thomas Pastor Brunei VDM: They all belong to same Feline family

[04/09 3:37 pm] Elango: நாம் அறிவியலை நம்பாமல், தேவன் என்ன சொல்கிறாரோ, வேதம் என்ன சொல்கிறதோ அதையே நம்ப வேண்டும்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறது சயின்ஸ்.

மனித இனத்தை படைத்தது தேவன்.

குரங்கிலிருந்து வந்தவனல்ல மனிதன்.

[04/09 3:38 pm] Aa Thomas Pastor Brunei VDM: Usually called 'Cat Family'

[04/09 3:38 pm] Aa Thomas Pastor Brunei VDM: Science doesn't contradict bible

[04/09 3:40 pm] Aa Thomas Pastor Brunei VDM: Evolution is a theory by Darwin, such as Big Bang...

[04/09 3:42 pm] Elango: குரங்கிலிருந்து மனிதன் வந்தான், ஒரு அணுவிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவானது என்று சயின்ஸ் சொல்லுகிறது.

இது வேதத்திற்க்கு முரண்பாடு இல்லையா ஐயா?

[04/09 3:44 pm] Aa Thomas Pastor Brunei VDM: Bro evolution is a theory

[04/09 3:45 pm] Aa Rooban Pastor VDM: யூதர்கள் தங்களுக்கு பிரயோஜனமான விலங்குகளை மாத்திரமே வீடுகளில் வளர்ப்பார்கள் எடுத்துக்காட்டாக கழுதை குதிரை ஒட்டகம் ஆடு மாடு மற்றும் பல நாய் பூனை மற்றும் பல விலங்குகள் யூதர்களுக்கு அருவருப்பானவை ஆகும் ஆதலால் பூனையை வீட்டில் வளர்த்திருக்க சாத்தியமில்லை என்று வரலாற்றில் ஒரு சில பதிவுகள் குறிப்பிடுகின்றன நன்றி😇👋👋👋

[04/09 3:47 pm] Aa Rooban Pastor VDM: இதில் பூனை அடங்காது என்பது என்னுடைய கருத்து நன்றி👋👋👋😇

[04/09 3:58 pm] Elango: பரிணாமம் ஒரு கோட்பாடு என்று சொல்லும்போது... பரிணாமம் வேதத்தை சார்ந்ததே என்று சொல்ல வாறீங்களா ஐயா... கொஞ்சம் எடுத்துக்க்ககாட்டு தந்து விளக்குங்க ஐயா... ப்ளீஸ்

[04/09 4:00 pm] Elango: ஆதாம், ஏதாமை பரிணாம கொள்கை அங்கிகரிக்கிறதா ஐயா... ஏற்றுக்கொள்கிறதா ஐயா?

[04/09 4:03 pm] Elango: தேவ கிருபையால்.. பல பட்டங்கள் பெற்ற அறிவியல் ஆசிரியர் .. சங்கர் சார்... நீங்க சொல்லுங்களேன்... அறிவியலும்.. வேதமும் ஒத்துப்போகிறதா... பரிமாணத்தை பற்றி உங்கள் கருத்து சொல்லுங்களேன்... @Aa Sankar Sir Madurai VDM

[04/09 5:02 pm] Aa Thomas Pastor Brunei VDM: Evolution is a deduction from this assumption, and it is essentially the idea that things made themselves. It includes these unproven ideas: nothing gave rise to something at an alleged ‘big bang,’ non-living matter gave rise to life, single-celled organisms gave rise to many-celled organisms

[04/09 5:03 pm] Aa Thomas Pastor Brunei VDM: In science you have Discoveries and Inventions..

[04/09 5:03 pm] Aa Robert Pastor VDM: @Aa Sam Jebadurai Pastor VDM Pastor ஐயா,
    உன்னதப்பாட்டு 2:3 *கிச்சலி மரம் பற்றிய* முழு விளக்கம்.
   யாத்திராகமம் 30: 23 - 25 யில் சொல்லப்பட்ட *அபிஷேகத்துக்கு பயன்படுத்திய சுகந்தவர்க்கங்களை பற்றிய*முழு விளக்கம் வேண்டும் ஐயா. 
    *வெள்ளைப்போளத்தை* பற்றி நீங்கள் கொடுத்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதைப்போலவே *கிச்சலி மரம் பற்றியும் மற்றும் அபிஷேகத்திற்கு பயன்படுத்திய சுகந்தவர்க்கங்களை பற்றியும்* *ஆழமான இரகசியங்களை* நான் எதிர்பார்க்கிறேன் ஐயா. 🙏🙏🙏

[04/09 5:07 pm] Aa Thomas Pastor Brunei VDM: Regarding Evolution... Evolution [is] a theory universally accepted not because it can be proven by logically coherent evidence to be true, but because the only alternative, special creation, is clearly incredible..

[04/09 5:11 pm] Aa Thomas Pastor Brunei VDM: Scientific Discoveries changes with time where as Inventions are improved with time...

[04/09 5:12 pm] Aa Thomas Pastor Brunei VDM: Man is still discovering new things from what was discovered earlier..

[04/09 5:13 pm] Aa Nithyanath VTT: மர் மரம்: Myrrh Tree 👇

கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசத்தின் மோரியா மலை அடிவாரம். அங்கு கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்த பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்துக்கு “ மர் “( எபிரேய பெயர் ) என்று பெயர். அந்த மரம் மிக உயரம் குறைவானது; அதனால் மிகப் பெரிதாக வளர முடியவில்லை; அதன் அதிக பட்ச உயரமே 12 அடிதான்; அவ்வளவே அதன் உயரம்; ஆகையால் அதைச் செடி என்றும் சிலர் கருதுவதுண்டு. அதன் கிளைகளும் அவ்வளவு பெரிதாக வளரவில்லை; அதன் தண்டுப்பகுதி மிக கடினமான ஒன்றாயிருந்தது; அதன் இலைகளும் அவ்வளவு அடர்த்தியாயில்லை. ஆனாலும் மஞ்சள் நிறப்பூக்களோடும், திராட்சைப் பழ வடிவில் அதன் சிறிய கனிகளோடும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்பட்டது.

       இஸ்ரவேலர்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட நற்கனிகளைத் தேடி மலைக்கு வருவது வழக்கம். அந்தப் பிரகாரம் பழங்களைத் தேடி அநேக இஸ்ரவேலர் வந்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தின் அருகே ஒருவர் கூட வரவில்லை. அந்த மரத்தைப் பார்க்கிற போதே எல்லாருக்கும் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. மற்ற மரங்களை எல்லாம் விரும்பி நாடிச் சென்றவர்கள் இந்த மர் மரத்தை மட்டும் உதாசீனப்படுத்தினார்கள்.

       சரி மனிதர்கள்தான் இப்படி என்றால் பறவையினங்களும் ஒன்று கூட அதன் கிளைகளில் வந்து அமரவோ அதன் கனிகளைப் புசிக்கவோ வரவில்லை. இது ஏன் என்று அந்த மரத்துக்கு புரியவேயில்லை. இது அந்த மர் மரத்துக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.

       ஒரு நாள் அந்த மரம் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் அருகில் நின்ற ஒலிவ மரத்தில் அநேகர் ஒலிவப் பழங்களைப் பறித்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தை ஒருவர் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. அந்த மர் மரம் மனமுடைந்து போனது. அது பார்த்துக் கொண்டிருக்கையில் இஸ்ரவேலனாகிய ஒரு சிறுவன் ஓடி வந்து மர் மரத்தின் கனிகளில் சிலதைப் பறித்தான். மர் மரத்துக்கோ மிகுந்த சந்தோஷம்.

       தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சிறு பையன் தன் கனிகளைப் பறித்துப் புசிக்கப் போவதை ஆவலாய்ப் பார்த்தது. ஆனால் அதற்குள் அந்த சிறு பையனுடைய தகப்பன் விரைந்து வந்து அவன் கையில் இருந்த மர் மரத்தின் கனிகளைத் தட்டிவிட்டான். அவன் அந்தப் பையனிடம் அந்த மர் மரத்தைக் காட்டி, “ இந்த மர் மரத்தின் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை அத்தனையும் கசப்பு சுவை உடையது. அதைத் தொடாதே ” என்றான்.

       மர் மரத்துக்கு அப்பொழுதுதான் காரியம் புரிய ஆரம்பித்தது. தன் பூ, இலை, கனி, மரப்பட்டை, வேர் என்றூ அத்தனை பாகங்களும் கசப்பு ( Bitterness ) மிகுந்தது என்று. ஆம் அதன் சகல பாகங்களும் வாயில் வைக்க முடியாத அளவு கசப்பானது. அந்த மரம் மிகவும் துயருற்றது.

       மர் மரம் தன் அருகே நின்றவர்களை எல்லாம் கூப்பிட்டு புலம்ப ஆரம்பித்தது. “ ஐயா கசப்போடு படைக்கப்பட்டது என் தவறல்ல, என் கசப்புச் சுவைக்கு நான் காரணமல்ல, உங்களைப் படைத்த தேவன் தான் என்னையும் படைத்தார். அவர் தான் இந்த கசப்பை என்னுள் வைத்துவிட்டார். நான் என்ன செய்வது. ஐயா என்னைப் புறக்கனிக்காதீர்கள், என் கனிகளிலும் சிலதை எடுத்துச் செல்லுங்கள். ஐயா எடுத்துச் செல்லுங்கள் “ என்று கெஞ்சியது. ஆனால் ஒருவர் கூட அதன் சத்தத்தைக் கேட்கவில்லை.

மனிதர்கள் தான் தனக்குச் செவிகொடுக்கவில்லை. பறவைகளையாவது கூப்பிடலாம் என்று அவற்றையும் கூப்பிட்டுப் பார்த்தது. ஆனால் பறவைகளோ மாறுத்தரமாக “ நாங்கள் எத்தனையோ கசப்பான மரங்களின் கனிகளைப் புசிக்கிறோம். ஆனால் உன்னுடைய கனிகளைப் போல் கசப்பான கனியை நாங்கள் பார்த்ததில்லை. அது எங்களுக்கு வேண்டாம். அவை புசிக்கத் தகாதவை “ என்று சொல்லி விட்டன. மர் மரம் தன்னுள் உடைந்து போனது.

       அந்த மர் மரம் தேவனை நோக்கி கூப்பிட ஆரம்பித்தது.      “ என்னை உருவாக்கின என் தேவனே, எத்தனையோ சிருஷ்டிப்புகள் இருக்கின்றன. எத்தனையோ விதமான மரங்கள் உள்ளன. ஆனால் எனக்குள் மட்டும் இப்படி ஒரு கசப்பை நீர் வைத்ததென்ன ? கசப்போடு படைக்கப்பட்டது என்னுடைய தவறா? நான் என்ன செய்வேன் ? ஏன் என் வாழ்க்கையில் இவ்வளவு கசப்பு ? ஏன் என் வாழ்க்கையில் இந்த கசப்பை அனுமதித்தீர் ? என் கசப்பை என்னிடத்தில் இருந்து எடுத்துவிடும், என்னை மாற்றும் “ என்று கெஞ்ச ஆரம்பித்தது..

       தன்னை நோக்கி கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் பதில் கொடுக்கிற இரக்கமுள்ள தேவன் அல்லவா அவர். தேவன்  பதில் கொடுத்தார். அவர் கொடுத்த பதில் இதுதான், “ காத்திரு “ என்பதே. தேவனுடைய வார்த்தையை நம்பி மர் மரமும் காத்திருந்தது. மாதங்கள் சென்றது. வருஷங்கள் கடந்தது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அதன் வளர்த்தியிலோ உருவத்திலோ அதன் சுவையிலோ எந்த மாற்றமும் வரவில்லை.

       மர் மரம் தினமும் பரலோகத்தின் தேவனை நோக்கிப் பார்த்து கூப்பிட ஆரம்பித்தது. தன்னைப படைத்த தேவனிடத்தில் முறையிட்டது. சில நேரங்கள பதில் வந்தது. பல நேரங்களில் பரலோகம் மெளனமாயிருந்தது.  மர் மரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னுடைய கசப்பைக்  குறித்த தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் பொய்த்து விட்டனவோ என்று கூட எண்ணியது. தன் வாழ்க்கையில் ஏன் இந்த கசப்பு ? ஏன் இந்த Bitterness ? ஏன் இந்தக் குறை ? இயற்கைக்கு அப்பாற்பட்டு என் வாழ்க்கையில் ஏன் இப்படி ? என்று அங்கலாய்த்தது. மர் மரமும் எத்தனை நாள் தான் பொறுத்திருக்கும் ?

       ஒரு நாள் வியாகுலத்தின் மிகுதியால் உரத்த சத்தத்தோடு தேவனிடத்தில் விண்ணப்பிக்க ஆரம்பித்தது.     “ என் தேவனே எனக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம் என்னவாயிற்று ? என் கசப்பு என்றைக்கு ஐயா மாறும் ? என் வாழ்க்கையில் உள்ள கசப்பைக் குறித்து உம்முடைய திட்டம்தான் என்ன ? ஏன் அதை என் வாழ்க்கையில் அனுமதித்தீர் ? என்னுடைய மனக்குறை என்றைக்கு தீரும் ? நானும் மற்றவர்களைப் போல் ஆசீர்வதிக்கப்படுவது எப்போது? என்னுடைய ஏக்கங்களுக்கெல்லாம் ஒரு முடிவில்லையா ? என்னுடைய கசப்பை மாற்ற மாட்டீரா ? எனக்கு ஒரு அற்புதத்தைச் செய்ய மாட்டீரா ? தேவனே எனக்கு இரங்கும், இரங்கும் “ என்று கதற ஆரம்பித்தது.

       அதன் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை தேவனை நோக்கி கூப்பிட்டன. அதன் ஆழ் மனதில் இருந்து அங்கலாய்ப்பு வெளிப்பட்டது. அந்த மரத்தின் கூக்குரல் மேலெழும்ப ஆரம்பித்தது. அதன் பெருமூச்சு அதிகமாயிற்று. அதன் வியாகுலத்தினால் அதன் கனத்த இருதயம் வெடித்து விடும் போல் இருந்தது.

       அதன் உள்ளமெல்லாம் உடைய ஆரம்பித்தது. அதன் இருதயம் நொறுங்க ஆரம்பித்தது. தன் இருதயத்தை உடைத்து ஊற்றி அது அழ ஆரம்பித்தது. அதன் வேதனையை அதனால் தாங்கிக் கொள்ள முடியாமல் மர் மரம் வியாகுலத்தால் கண்ணீர் விட்டது. அதன் பட்டைகள் எல்லாம் உறிய ஆரம்பித்ததன. அதன் தண்டு பகுதிகளெல்லாம் வெடிக்க ஆரம்பித்தது. அதன் கிளைகளில் கீறல்கள் விழுந்தன. அதன் கிளை மூட்டுகளில் எல்லாம் விரிசல் ஏற்பட்டது. அவற்றின் வழியே அதன் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிவர ஆரம்பித்தது. அதன் கசப்பான அதன் தாவர உயிர்ச்சாறு ( Sap ) எல்லாம் வெடிப்புகள் வழியாய் கொட்ட ஆரம்பித்தது. அது வேதனையை அடக்கமாட்டாமல் அதன் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதன் கூக்குரல் பரலோகத்தை எட்டியது.

 மர் மரத்தின் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிப்பட வெளிப்பட அந்தப் பகுதியில் இருந்த எல்லோரும் ஒரு தெய்வீக வாசனையை உணர ஆரம்பித்தார்கள். உலகம் அதுவரை கண்டிராத வாசனை. அப்படி ஒரு சுகந்த வாசனையை மனுஷர் நுகர்ந்ததேயில்லை. அந்த பிராந்தியமே நறுமணத்தால் நிரம்பினது. அந்த வாசனையை நுகர்ந்தவர்கள் அத்தனை பேரையும் அது தன்பால் சுண்டி இழுக்க ஆரம்பித்தது. அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று தேடி அலைய ஆரம்பித்தார்கள். எல்லாரும் அந்த வாசனை வந்த திசையை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்கள்.

       அந்த வாசனை வருவது மர் மரத்தில் இருந்துதான் என்பதை எல்லோரும் அறிந்து கொண்டார்கள். மர் மரம் வடித்த அதன் கசப்பான கண்ணீர் ( Tears ) அதன் தண்டைச் சுற்றிலும் பிசினாக வடிந்து நின்றது. அதன் கிளைகளிலிருந்து தரையெல்லாம் சிந்தியிருந்தது. எல்லோரும் அதை போட்டி போட்டு பொறுக்கினார்கள். அதன் பிசினையெல்லாம் எனக்கு உனக்கு என்று பிய்த்து எடுத்தார்கள். அந்த மர் மரத்தின் கசப்பு எழும்பப் பண்ணின வாசனை அவ்வளாவாய் அவர்களை ஈர்த்தது. அந்த கசப்பான மர் மரத்தின் கண்ணீருக்கு ( பிசினுக்கு ) வேதம் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது     “ வெள்ளைப்போளம் ”

       யாத்திராகமம் 30 : 23-25 ல் ஆசரிப்புக் கூடார பரிசுத்த அபிஷேக தைலத்துக்கு தேவையான ஐந்து பொருள்களில் முதலாவதாய் தேவனால் குறிக்கப்பட்டது இந்த வெள்ளைப்போளம் தான். மர் மரத்தின் கசப்பு தெய்வத்தின் பார்வையிலே மட்டுமல்ல. உலகத்தின் பார்வையிலும் பிரீதியாய்க் காணப்படுகிறது. மர் மரத்தின் கசப்பான கண்ணீர் தான் வெள்ளைப்போளம் ( Myrrh Tears ) என்ற பெயரில் உலகமே விரும்பப்படத் தக்க ஒன்றாய் மாறிவிட்டது.

 வெள்ளைப்போளத்தை வணிகர்கள் இன்றும் Myrrh Tears (வெள்ளைப்போள மரத்தின் கண்ணீர்) என்றே அழைக்கிறார்கள். தங்கத்தைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மர் மரத்தின் கசப்புதான் (Bitter) அதன் சிறப்பாக (Better) மாறிவிட்டது. மர் மரத்தின் Bitterness ஐ எல்லாம் தேவன் அதன் Betterness ஆக மாற்றிவிட்டார்.

       எனக்கன்பானவர்களே, மர் மரத்தைப் போல் உங்கள் வாழ்க்கையில் உள்ள சில குறைவுகள், அல்லது நீங்கள் சந்தித்த நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி இருக்கிறதா ? கசப்பான காரியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களோ ? இயற்கைகு அப்பாற்பட்டு காரியங்கள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி விட்டதா  ? கலங்க வேண்டாம். நிச்சயமாய் உங்கள் வாழ்க்கையின் Bitterness  ஐ எல்லாம் உங்களுடைய Betterness ஆக மாற்ற தேவன் போதுமானவர்.

       அன்னாளுடைய Bitterness என்ன ? பிள்ளையில்லாதது. ஆனால் அன்னாளுடைய Betterness சாமுவேல் என்கிற பிள்ளை.

       ரூத்தினுடைய Bitterness  என்ன ? தன் கணவனை இழந்தது. ஆனால் ரூத்தின் Betterness  போவாஸ் அல்லவா ?

       கிறிஸ்துவின் Bitterness என்ன ? சிலுவை. ஆனால் கிறிஸ்துவின் Betterness  ம் சிலுவை தானே.

       உங்கள் வாழ்க்கையில் ஒரு Bitterness   உண்டானால் நிச்சயமாய் ஒரு Betterness  உண்டு.

       பரிசுத்த வேதாகமத்தில் சிலரோடு இந்த வெள்ளைப்போளம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

 அவர்களில் முதல் நபர் யோசேப்பு. இரண்டு இடங்களில் யோசேப்பின் வாழ்க்கையில் வெள்ளைப்போளம் பற்றி குறிக்கப்பட்டுள்ளது.

 வெள்ளைப்போளம் விற்கச் சென்ற இஸ்மவேலரிடத்தில்தான் யோசேப்பு விற்கப்பட்டதுதான் ( ஆதி :37:25 ) யோசேப்பின் வாழ்க்கையில் Bitterness  ஆன தருணம். ஆனால் அதையே யோசேப்பின் Betterness  ஆன வாழ்க்கைக்கு அச்சாரமாய் தேவன் மாற்றிப் போட்டார்.

வெள்ளைப்போள வியாபாரிகளிடத்தில் விற்கப்பட்டபோது துவங்கிய யோசேப்பின் Bitterness  எல்லாவற்றையும் - யோசேப்பின் தகப்பன் யோசேப்புக்கு வெள்ளைப்போளம் கொடுத்தனுப்பின போது (ஆதி:43:11) Betterness ஆக தேவன் மாற்றியிருந்தார்.

       கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவருடைய சிரசின் மீது வெள்ளைக்கல் பரணியில் இருந்த வெள்ளைப்போளத்தை ஊற்றினாள். அவள் வாழ்க்கையின் கசப்பு (Bitterness) என்ன என்று தெரியவில்லை. ஆனால் அதை Betterness  ஆக கர்த்தர் மாற்றினார்.

சுவிசேஷம் அறிவிக்கப்படும் இடங்களில் எல்லாம் அவளைக் குறித்தும் அறிவிக்கப்படுகிறதே. இதுதான் அவளுடைய Betterness. (மத்தேயு:26:13 )

       நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவையே கண்ணோக்கிப் பார்ப்போமே. அவருடைய வாழ்க்கையின் Bitterness என்ன ?

 பரலோகத்தைத் துறந்து பூமியில் வந்து ஏழ்மைக்கோலம் எடுத்து பிறந்ததா ? அவர் சிலுவையிலே பட்ட பாடுகளா ? அல்லது ஜீவனுள்ள தேவனாகிய அவர் மரணத்தை ருசி பார்த்தாரே அதுவா ? ஆம் இவை மூன்றுமே நம் இரட்சகர் அநுபவித்த கசப்பான காரியங்கள் தான்.

அவருடைய பிறப்பு - பாடுகள் – இறப்பு. இவை மூன்றிலுமே வெள்ளைபோளம் பற்றி குறிப்பிடப்பட்டூள்ளது.

கர்த்தர் பிறந்தபோது வெள்ளைப்போளம் காணிக்கையாக கொடுக்கப்பட்டது (மத்தேயு : 2 : 11).

 கர்த்தர் சிலுவையில் பாடுகளை அனுபவித்த போது திராட்சரசத்தின் காடியில் வெள்ளைபோளம் கலந்து கொடுக்கப்பட்டது. (மாற்கு:15:23.,மத்தேயு 27:34)

கர்த்தர் மரித்து அடக்கம் பண்ணும் போதும் அவர் சரீரத்தில் வெள்ளைப்போளம் பூசினார் நிக்கோதேமு (யோவான் 19:39,40)  இதன் அடையாளம் என்ன ?

 இவை எல்லாம் கர்த்தர் கடந்து வந்த கசப்பான பாதைகள். ஆனால் கர்த்தருடைய Bitterness எல்லாம் முழு உலகத்துக்கும் Betterness ஆக மாறிவிட்டதே.

       அன்பான தேவ ஜனமே உங்கள் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் மிகுந்துள்ளதா ? கலங்க வேண்டாம். நீங்கள் கர்த்தரின் பார்வையில் வெள்ளைப்போளம். கர்த்தர் நம் வாழ்க்கையில் சில கசப்புகளை அனுமதிப்பது நம் வாழ்க்கை கசந்து போகவேண்டும் என்பதற்காய் அல்ல; நம்மைக் கொண்டு அநேகருடைய வாழ்க்கையை இனிமையானதாக மாற்ற கர்த்தர் விரும்புகிறார்.

 வெள்ளைப்போளத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது எதன் மீதெல்லாம் படுகிறதோ அவை எல்லாவற்றயும் இனிமையானதாக மாற்றிவிடும்.

 உங்களைகொண்டு லட்சங்களுடைய வாழ்க்கையை கர்த்தர் இனிமையானதாக மாற்ற விரும்புவதால் தான் உங்கள் வாழ்க்கையில் சில கசப்புகளை அனுமதித்திருக்கிறார்.

 பொறுத்திருங்கள். உங்கள் Bitterness எல்லாம் Betterness ஆக மாறும்.

       “ மர் “ ( கசப்பு என்று பொருள் ) என்ற பெயரில் இருந்துதான் “ மாரா “ என்ற சொல் பிறந்தது. இதற்கும் கசப்பு என்றே பொருள். மாராவிலே இஸ்ரவேல் ஜனங்கள் குடிக்கக் கூடாதபடி தண்ணீர் கசப்பாயிருந்தது. அப்போது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை தண்ணீரில் போட்டபோது அது இனிமையானதாக மாறிற்று. அந்த மரம் இந்த மர் மரம் தான் என்பது மேலான வேதபண்டிதர்கள் ஏற்றுக்கொண்ட ஒன்று. மர் மரம் ஒரு கசப்பான மரம் ஆயிற்றே, அதைப் போட்டால் எப்படி தண்ணீரி கசப்பு நீங்கும்  என்று நினையாமல் மோசே கர்த்தருக்கு கீழ்படிந்தான். மர் மரத்தின் கசப்பைக் கொண்டே கர்த்தர் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றினார். உங்கள் கசப்பான அநுபவங்களையே நினைத்துக் கொண்டிராமல் கர்த்தருக்கு கீழ்படிந்திருங்கள். உங்களைக் கொண்டு அநேகருடைய கசப்பான வாழ்க்கையை கர்த்தர் மாற்ற திட்டம் பண்ணியிருக்கிறார். உங்கள் வாழ்வின் கசப்பான அனுபவங்களுக்குள் அநேகருடைய வாழ்வின் கசப்பை மாற்றும் வல்லமையைக் கர்த்தர் வைத்திருக்கிறார்.

       கடைசியாக, எலியாவின் அபிஷேகம் எலிசா மீது இரண்டு பங்காக ஊற்றப்பட்டது. எலியா உயிரோடிருக்கையில் மொத்தம் எட்டு அற்புதங்களைச் செய்தார்.

 அப்படியானால் எலிசா எத்தனை அற்புதங்களைச் செய்யவேண்டும் ? பதினாறல்லவா. ஆனால் எலிசா உயிறோடிருந்த காலத்தில் அவர் பதினைந்து அற்புதங்களையே செய்தார். அதற்குப் பிறகு அவர் வியாதிப்பட்டு மரித்துப் போனார். எல்லோரும் எண்ணினார்கள். கர்த்தர் எலிசாவுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை. இனி அவ்வளவுதான். வார்த்தை நிறைவேறாது. எலிசாவே மரித்தாயிற்று. இனி அவருக்கு கொடுத்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும் என எண்ணினார்கள்.

 எலிசா மரித்து மறு வருஷமாயிற்று. எல்லாரும் எலிசாவை மறந்து போனார்கள். ஆனால் கர்த்தரோ எலிசாவையும் மறக்கல. அவருக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்ததையும் மறக்கல. இஸ்ரவேலில் ஒரு வாலிபன் மரிக்கப்பண்ணி, அவன் சடலத்தை எலிசாவின் கல்லறயிலே போடும்படியான சூழலை கர்த்தர் உண்டுபண்ணுகிறார். அப்படியே அவனை எலிசாவின் கல்லறையிலே போட்டார்கள். வாலிபனின் சரீரம் எலிசாவின் எலும்புகள் மேல்பட்டவுடனே வாலிபன் உயிர்த்தான். எலிசாவின் எலும்புகளைக் கொண்டு பதினாறாவது அற்புதத்தைச் செய்து கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றினார்.

       தேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறாத நிலையில், முழு உலகமுமே அழிஞ்சாலும் சரி கர்த்தர் ஒரு புது உலகத்தை உண்டுபண்ணி அதிலே உங்களை வைத்து உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றியே தீருவார். கலங்க வேண்டாம்.

       உங்கள் கசப்பு எல்லாம் களிப்பாக மாறும். உங்கள் வாழ்க்கையின் Bitterness  எல்லாவற்றையும் அவர் Betterness  ஆக மாற்றியே தீருவார். ஏனெனில் நீங்கள் கர்த்தரின் பார்வையிலே வெள்ளைபோளம்.

👍👍👍👍👍👍👍👍

[04/09 5:32 pm] Aa Thomas Pastor Brunei VDM: Cats, Cheetahs, Lions, Tigers, Leopards all come under same family Felidae..

[04/09 5:37 pm] Aa Rooban Pastor VDM: 🏺சுகந்த வர்க்கம் என்பது தூபத்திற்காக  பயன்படுத்தப்படும் சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பொதுவான பெயராகும்
எகிப்தியர்கள் பிரேத அடக்கத்தில் சுகந்த வர்க்கம் இடுவது வழக்கம் அவர்கள் புதைக்கும் சரீரம் கெட்டு போகாத படி சுகந்த வர்க்கமிட்டு சிலகாலம் மருந்தில் வைத்து அதனை நீளமான துணிகளால் கெட்டியாக கட்டி ஈரமில்லாத கல்லறைகளில் அடக்கம் பண்ணுவார்கள் அதனால்தான் பல நூற்றாண்டுகளாக அந்த பிரேதங்கள் அழியாமல் இருந்தன
யாக்கோபுக்கும் யோசேப்புக்கும் இந்த அலங்காரம் செய்யப்பட்டது ஆதியாகமம் 50:2-26 வரை வாசித்துப் பார்க்கவும்
 யூதர்கள் எகிப்தியர் செய்ததைப் போன்று செய்யவில்லை ஆனால் வாசனை திரவியங்களை உபயோகப் படுத்தினார்கள் அதாவது நம்ஊர்களில் இறந்தவர்களுக்கு சென்ட் அடிப்பதை போன்றதே. இயேசு கிறிஸ்துவுக்கும் இதேபோன்றுதான் கந்த வர்க்கம் இடப்பட்டது 

யாத்திரகாமத்தில் தேவனால் சொல்லப்பட்டு உருவாக்கப்படும் அபிஷேக தையிலம் முற்றிலும் விஷேசமானது இதில் வெள்ளைப்போளம் என்ற கந்த வர்க்கம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது நன்றி👋👋👋👋😇

[04/09 5:39 pm] Aa Jeyanti Pastor VDM: Ithu than sari,  palli,  udambu mathi

[04/09 5:40 pm] Aa Rooban Pastor VDM: 🤝அபிஷேக தைலத்தை குறித்து நாம் அறிவதற்கு முன்பதாக அபிஷேகம் என்றால் என்ன என்று நாம் முதலில் அறிந்து கொள்வது அவசியமாகும்
[04/09 5:49 pm] Elango: 6⃣ *பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்* என்றார்; ஆதியாகமம் 1:30
*சகல  மிருகஜீவன்களுக்கும், பறவைகளுக்கும், பிராணிகளுக்கும் தாவரங்களையே உணவாக தேவன் கொடுத்திருக்க, சிங்கம், புலி, கழுகு என்பவைகள் ஏன் எப்பொழுதிலிருந்து விலங்கு, பறலை, மனித மாம்சத்தை ஆகாரமாக தின்ன துவங்கின❓*

விலங்குகள் பறவைகள் அனைத்தும் கடவுள் படைக்கும் போது தாவர உண்ணிகளாக தானே படைத்தார்... மேலே வசனம்.

பின்பு எப்படி அவைகளின் சுபாவம் *மாம்ச உண்ணிகளாக* மாறியது?
[04/09 6:02 pm] Aa Thomas Pastor Brunei VDM: I have a question to Bro Sankar... Lack of food made some animals to become carnivorous... In Somalia man eat man because of famine.. Well... Is there a difference in the dental anatomy of herbivorous and carnicorous animls?
[04/09 6:03 pm] Elango: தாவர உண்ணிகளாக இருந்தவைகள் மாம்ச உண்ணிகளாக மாறியதற்க்கு தாவங்கள் பற்றக்குறையினால் என்று நீங்கள் சொல்லும்போது...

தாவரங்கள் அதிகமாக இருந்தும் ஏன் புலி சிங்கள் தாவரங்களையே சாப்பிடுவதில்லை?

[04/09 6:04 pm] Aa Thomas Pastor Brunei VDM: This is where science comes in..

[04/09 6:05 pm] Elango: 6⃣ *பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்* என்றார்; ஆதியாகமம் 1:30

[04/09 6:09 pm] Elango: ஏசாயா 65:25
[25] *ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்;* *சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்;* ❓❓❓❓புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

[04/09 6:11 pm] Elango: Ok sir... அப்படின்னா அவைகள் herbivorous ஆக இருந்தது Carnivorous ஆக மாறியதற்க்கு மனிதன் பாவத்தின் நிமித்தம் வந்தது என்று சில வேத வல்லுனர்கள் சொல்லுகின்றனரே சார்...

[04/09 6:12 pm] Aa Thomas Pastor Brunei VDM: Please do not mistake or misunderstand me... Cow  sheep as we know are herbivorous.. eats only plants and grass.. a Lion or a wolf eats meat.. If you see the anatomy of their creation the Canine and the Incisors are meant for bite tear and maul..

[04/09 6:12 pm] Aa Jeyanti Pastor VDM: சரியே

[04/09 6:13 pm] Elango: வசனம் தாங்க அம்மா😀

[04/09 6:14 pm] Aa Jeyanti Pastor VDM: புலி பசி்த்தாலும் புல்லைத் தின்னாது

[04/09 6:15 pm] Aa Jeyanti Pastor VDM: மனிதனை மனிதன் சாப்பிடுவது பாவத்தால் வந்தது

[04/09 6:15 pm] Elango: அப்படின்னா சிங்கம் புல்லை ஏன் தின்கிறது👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

ஏசாயா 65:25
[25] *ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்;* *சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்;* ❓❓❓❓புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
[04/09 6:17 pm] Elango: உண்மை... ஏட்டு சுரைக்காயை ஏற்றுக்கொள்ள முடியாது👌😀

[04/09 6:18 pm] Aa Jeyanti Pastor VDM: This spiritual meaning is enterly different Pastor.

[04/09 6:18 pm] Aa Thomas Pastor Brunei VDM: We have to know about the different food habits 1. in the garden of Eden 2. Antediluvian Period (Before the Flood of Noah) 3. Post Flood Period and 4. Millennium Period..

[04/09 6:19 pm] Elango: Yes... I think God wud restore their original state...

[04/09 6:20 pm] Aa Thomas Pastor Brunei VDM: I do not think that God made the incisors of Lion Tiger Dog Cat etc longer afterthought..

[04/09 6:21 pm] Aa Thomas Pastor Brunei VDM: They were created as they were created by God..

[04/09 6:21 pm] Aa Sankar Sir Madurai VDM: Driving now

[04/09 6:21 pm] Aa Jeyanti Pastor VDM: லேவியராகமம் 26:26  உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்
27  இன்னும் இவைகள் எல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
28  நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.
29  உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
30  நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.

[04/09 6:24 pm] Elango: மனிதர்கள் மாறவில்லையே ஐயா..

மனிதர்கள் இரண்டையும் சாப்பிடுகிறார்களே...

விலங்குகள் மாற மனித பாவம், தேவனுக்கு கீழ்ப்படியாமையாக இருக்கலாமா?

[04/09 6:25 pm] Elango: ரோமர் 8:22
[22]ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் *சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.*

இதில் விலங்கும் அடங்குமா ஐயா?

[04/09 6:38 pm] Aa Thomas Pastor Brunei VDM: மனிதர்கள் மாறவில்லையே ஐயா..

மனிதர்கள் இரண்டையும் சாப்பிடுகிறார்களே...   In the Garden of Eden original diet for both humans and animals was plants Genesis 1:29,30

[04/09 6:38 pm] Elango: இது தற்காலிமாக தானே... இதனால் நாம் தொடர்ந்து மனித மாம்சத்தையே சாப்பிட்டுக்க்கொகொண்டிருப்பதில்லையே...

[04/09 6:40 pm] Aa Jeyanti Pastor VDM: ம். ஆனால்,  பாவத்தில்,  சாபம் உண்டு பாஸ்டர்

[04/09 6:41 pm] Aa Jeyanti Pastor VDM: Yes,  Pastor. That is my openion too.

[04/09 6:42 pm] Elango: Yes correct ayya.. thank you.

Genesis 1:30. *பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்* என்றார்; அது அப்படியே ஆயிற்று.

அப்படியென்றால், மனிதனும் herbivorous ஆக இருந்தது Carnivorous மாறியிருக்கிறான் என்றாலும்... விலங்குகள் completely எப்படி carnivorous ஆக மாறி விட்டது... என்று எனக்கு சந்தேகம் ஐயா...

[04/09 6:43 pm] Aa Thomas Pastor Brunei VDM: Leviticus 26:26 to 30 was literally fulfilled in 2 Kings 6:29

[04/09 6:44 pm] Aa Thomas Pastor Brunei VDM: Genesis 9:3... God allowed man to eat plants and animals..

[04/09 6:46 pm] Elango: gen 9:3. *நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.*

[04/09 6:47 pm] Elango: gen.9:2. *உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்;* பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

சிங்கம்,புலி நம்மை பாத்து பயப்படுகிறதா ஐயா... நாம் தானே அதற்கு பயப்படுகிறோம்... எனக்கு என்ன சந்தேகம் என்றால் விலங்குகளின் இந்த மாற்றம் ஏன் எப்படி வந்தது...

[04/09 6:51 pm] Aa Thomas Pastor Brunei VDM: The reason i believe from the Bible is because of Sin. The consequence of the evil of Sin made animals to devour each other.. But God in His Divine wisdom and Omniscience had created some animals with carnivorous facilty.. 😀😀

[04/09 6:52 pm] Aa Thomas Pastor Brunei VDM: The Sovereignty of God is displayed..

[04/09 6:52 pm] Elango: புலி சிங்கத்தின் பற்களும் அப்படியே இருக்கின்றன

[04/09 6:53 pm] Elango: நன்றி... பாவமே எல்லாத்திற்க்கு காரணம் என்று தெரிகிறது...

ஐயா வசனம் மட்டும் கொடுங்களேன்🙏

[04/09 7:00 pm] Aa Thomas Pastor Brunei VDM: The ground which was cursed by God still bears the curse..

[04/09 7:01 pm] Aa Thomas Pastor Brunei VDM: Bro Elango i'm not sure about a direct verse about it..

[04/09 7:04 pm] Aa Thomas Pastor Brunei VDM: There are so many mutations and mutagens taking place since the Flood..

[04/09 7:08 pm] Aa Thomas Pastor Brunei VDM: Pathogenic virus are evidence of something gone wrong, a mutation or the accidental movement of genes, and not evidence of a system deliberately designed to cause human disease and suffering.

[04/09 7:43 pm] Elango: 5⃣ கிறிஸ்தவர்கள் கிளி, *புறா, மீன்களை கூண்டில் அடைத்து வைத்து கண்காட்சிக்காக வளர்க்கலாமா*❓

[04/09 7:51 pm] Aa uma Sister VDM: Athoda freedom poirumle nga na 🤔

[04/09 8:12 pm] Elango: ஆதியாகமம் 9:3
[3] *நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக;* பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

ஆகாரமாக தேவன் அவைகளை கொடுத்திருக்கிறார்...கூண்டுக்குள்  அடைத்துப்போட்டு வைப்பது அவைகளின் சுதந்திர வாழ்க்கையை பாதிக்குமா ஐயா...

பட்சிகளை விட மனிதன் மேலானவன் தான் ...ஆனால் கூண்டுகளில் அவைகளை அடைத்து வைப்பது மனிதனின் நோக்கம் சரியா பாஸ்டர்.

[04/09 8:52 pm] Joshua anandaraj VTT: Devayanal vaithukollalam, athinal aavikkuriya lapam yenna .illavittal vittuviduvom,athu pavakanakil varathu.

[04/09 9:26 pm] Aa Tamilmani Ayya VDM: பறவைகளையும் மிருகங்களையும் சுதந்திரமாய் விடுவது நல்லது. நம்மை படைத்ததுப்போலவே அவைகளையும் ஆண்டவர் படைத்திருக்கிறார். சுதந்திரமான காற்றை சுவாசிக்க தட்பவெப்பம் நிலை மாற்றங்களுக்கு தங்கள் உடலை பாதுகாப்பது எல்லாம் அவர்களுக்கும் உண்டு. ஒவ்வொரு பிரதேசத்திற்க்கும் ஒவ்வொரு ரக பறவைகள். எல்லாவற்றையும் போஷிக்கிறார். நாமும் காக்கை குருவிகளுக்கு அறிந்தும் அறியாமலும் கொடுக்கிறோம். பிடித்த உணவை உண்ணக்கூட சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும், அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு, இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள், ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே, *மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல, எல்லாம் மாயையே.*
பிரசங்கி 3:19

[04/09 9:29 pm] Elango: *மிருக பறவைகளை விட மனுஷன் விசேஷித்தவனே*

மத்தேயு 6:26
[26]ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; *அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?*

மத்தேயு 12:12
[12] *ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்!* ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார்.

[04/09 10:04 pm] Elango: 🌿🌳🕊🐑 *இன்றைய வேத தியானம் - 04/09/2017* 🌿🌳🕊🐑

1⃣  *உன்னதபாட்டு 2:3  கிச்சிலி மரம் பற்றி வேதம் என்ன கூறுகிறது❓* கிச்சலி மரம் என்பது யாரை குறிக்கிறது, கிச்சிலி மரம் எப்படிப்பட்டது, அதின் சுபாவம் என்ன, அதின் நிழலை யாருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது, நிழலின் கீழ் நாம் செல்லவேண்டுமா, அல்லது நிழல் நம்மை தேடி வருமா, நிழலின் கீழ் சென்றால் தான் கனி  கிடைக்குமா, எப்படி செல்ல வேண்டும்❓

2⃣ யாத்திராகமம் 30:23 - 25 வசனத்தில் சொல்லப்பட்ட *அபிஷேகத்துக்கு பயன்படுத்திய சுகந்தவர்க்கங்களை  பற்றி வேதம் கற்றுத்தரும் பாடம் என்ன❓*

3⃣  ஆதியாகமம் 30:16 சொல்லப்பட்ட, தூதாயீம் என்ற பழம்  இப்போதும் இருக்கிறதா,
தூதாயீம் கிடைக்க கூடாத அறிய வகை பழமா❓

4⃣ பூனை என்ற விலங்கை பற்றி வேதத்தில் ஏதும் குறிப்பு உள்ளது போல் இல்லையே,  அதற்கு வேறு ஏதும் பெயர் வேதத்தில் இருக்கிறதா ❓

5⃣ கிறிஸ்தவர்கள் கிளி, *புறா, மீன்களை கூண்டில் அடைத்து வைத்து கண்காட்சிக்காக வளர்க்கலாமா*❓

6⃣ *பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்* என்றார்; ஆதியாகமம் 1:30
*சகல  மிருகஜீவன்களுக்கும், பறவைகளுக்கும், பிராணிகளுக்கும் தாவரங்களையே உணவாக தேவன் கொடுத்திருக்க, சிங்கம், புலி, கழுகு என்பவைகள் ஏன் எப்பொழுதிலிருந்து விலங்கு, பறலை, மனித மாம்சத்தை ஆகாரமாக தின்ன துவங்கின❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[05/09 12:07 am] Elango: 6⃣ *பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்* என்றார்; ஆதியாகமம் 1:30
*சகல  மிருகஜீவன்களுக்கும், பறவைகளுக்கும், பிராணிகளுக்கும் தாவரங்களையே உணவாக தேவன் கொடுத்திருக்க, சிங்கம், புலி, கழுகு என்பவைகள் ஏன் எப்பொழுதிலிருந்து விலங்கு, பறலை, மனித மாம்சத்தை ஆகாரமாக தின்ன துவங்கின❓*

உணவு பற்றாக்குறை ஏற்ப்படுகிற போது, தாவர உண்ணிகள் மாம்ச உண்ணிகளாக மாறுகிறது.

*சோமாலியா நாட்டில் கூட மனிதர்களுக்கு உணவு பற்றாக்குறை வந்த போது,  மனிதன் மனிதனையே உண்ணும் பழக்கமாக மாறியிருக்கிறது.*


பாவ்லர் வாட்சன் என்பவர்கள் மிகப்பெரிய உளவியல் அறிஞர்கள், ஒரு உயிரியையோ அல்லது மனிதனையோ தொடர்ந்து ஒரு நல்ல சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டு வந்தால் அந்த சூழ்நிலைக்கு ஏற்றால்போல் அந்த உயிரினம் மாறிவிடும்.

நீங்கள் ஒரு சிங்கக்குட்டியை சிறிய குட்டிமுதல் வளர்த்து வாருங்கள், நீங்கள் உண்ணக்கூடிய பொருட்களையே வழங்குங்கள், ஆறு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இறைச்சியை அதற்கு கொடுத்தால் அது இறைச்சியை உண்ண தகுதியற்றது. அது சாப்பிடாது. இதைத்தான் பலமுறை சோதனை கண்டு வெற்றி கண்டவர்.

விலங்குகளுக்கென்று சில சுபாவங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். ஒரு அறையிலேயே கன்றுகுட்டிகள்,   வாத்து பன்றி ..

அறையை திறக்கும் போது வாத்தானது தண்ணீரை பார்த்ததும் வாத்து நீந்தி செல்லுகிறது.

பன்றியானது சகதியான இடத்தை நோக்கி ஓடுகிறது.

கன்றுக்குட்டிகளெல்லாம் மேய்வதற்க்காக செல்லுகிறது.

இயற்கையிலேயே அவைகளுக்கு சில சுபாவங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். சில விலங்குகள் கத்துவதற்க்காகவும் சண்டைப்போடுவதற்க்காகவும், மாம்ச உணவுகளை உட்கொள்ளவது பாரம்பரியமாக பின்பற்றுக்கொள்வதாகவும் இருக்கலாம்.

இது குறித்து உங்கள் கருத்துக்களை சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன்.

- சங்கர் ஐயா

[05/09 12:23 am] Elango: 5⃣ கிறிஸ்தவர்கள் கிளி, *புறா, மீன்களை கூண்டில் அடைத்து வைத்து கண்காட்சிக்காக வளர்க்கலாமா*❓

மீன்களை, பறவைகளை அழகுக்கு வைக்கலாமா என்று சரியாக தெரியவில்லை..வேண்டுமானால் நாம் வைத்துக்கொள்ளலாம் ஏனென்றால் சாலமோன் இராஜாவும் கூட தன்னுடைய அந்தபுர அறையை அலங்கரிக்கும் வண்ணமாக இந்தியாவிலிருந்து மயில் குரங்குகளை இறக்குமதி செய்து தன்னுடைய அந்தபுர அறையை அலங்கரித்தார் என்று சில குறிப்புகள் சொல்லுகின்றன.

பறவைகளை அப்படி வைப்பதன் மூலம் அதன் Freedom பறிபோகிறது என்று சொன்னால் நாம் மீன் சாப்பிடக்கூடாது, புறாக்கள் இவைகளை பழைய ஏற்பாட்டில் பலியிட்டிருக்கக்கூடாது.

நமக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கொள்ளலாம். ஆண்டவர் சொல்லியிருக்கிறார் சுத்த மிருகம், அசுத்த மிருகம்.. It's upto you.

மிருகங்களுக்கு பறவைகளுக்கு நம்மைப்போல பகுத்தறிவு கிடையாது, அன்றைய நாட்களில் யூதர்கள் சிட்டுக்குருவிகளையும் புறாக்களையும் இவைகளை கூண்டுக்குள்ளாக அடைத்து வைத்து அதனுடைய புஷ்டியாக குலுகுலுவென்று இருப்பது காட்டி அவர்கள் தேவாலயத்தில் விற்றார்கள்.

இதை பார்த்து பலியிட வந்ததான மக்கள் இது நல்லதாக புஷ்டியாக இருக்கிறதா  என்று பார்த்து பலி செலுத்தினார்கள்.

கூண்டுக்குள் அடைத்து வைப்பது என்பது அலங்கார பொருளாக காட்டி அவர்கள் பலி செலுத்த வரும் மக்களிடம்  விற்கிறார்கள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வீட்டிற்க்கு அழகுபடுத்தும் பொருளாக அவர்கள் அதை வளர்க்கிறார்கள். இது என்னுடைய பதில், மற்ற ஊழியர்களின் கருத்தும் சொல்வார்களேயானால் இன்னும் நன்றாக இருக்கும்.

- பாஸ்டர் ஆசைஇளவேந்தன்.

[05/09 12:29 am] Elango: பரிசுத்த வேதாகமத்திலே சில பறவைகளின் பெயர்களும், மயில்களின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

மயில் - பெருமைக்குறிய அடையாளமாகவும்.

யானை தந்தம் - சுகபோகத்திற்க்குரிய வாழ்க்கைக்குரியதாகவும்.

குதிரை - போர்க்களத்திற்க்கும், பந்தயபொருளுக்கும் அடையாளமாகவும்.

காகம் - அசுத்தமான ஜீவியத்திற்க்கு அடையாளமாகவும்.

புறா  - கபடமற்ற வாழ்க்கைக்காகவும்

மீன் - ஆத்துமாக்களை குறிக்கக்கூடியதாகவும்.

குரங்கு - பாவ ஜீவியத்திற்க்கு அடையாளமாகவும்.

சிலந்தி - முயர்ச்சிக்காகவும்.

எறும்பு - சுறுசுறுப்பாக இருப்பதற்க்கு உரியதாகவும் காணப்படுகிறது.

- சங்கர் ஐயா.

[05/09 12:33 am] Elango: 5⃣ கிறிஸ்தவர்கள் கிளி, *புறா, மீன்களை கூண்டில் அடைத்து வைத்து கண்காட்சிக்காக வளர்க்கலாமா*❓

ஆதிக்காலத்திலே கிளியை அஞ்ஞனம் பார்க்கிறதற்க்காகவும், கிளியை கூண்டுக்குள் அடைத்து நல்ல செய்தி ஒன்று கொண்டுவா என்று சொல்லி அதை வளர்த்து வந்தார்கள்.

எனவே கிளியை கிறிஸ்தவர்கள் அடைத்து வைப்பது கூடாத காரியம்.

புறா என்பது இராஜக்கள் காலத்திலே நற்செய்தியை கொண்டு போவதற்க்கு தூதாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

- சங்கர் ஐயா

[05/09 12:39 am] Elango: விலங்குகளுக்கு குறைவான அறிவு என்று சொல்ல முடியாது. சில விலங்குகளுக்கு 6 வது அறிவையும் தாண்டி 7 வது அறிவும் இருக்கிறது.

துப்பறியும் துறையில் நாய்கள் மனிதனால் கண்டுபிடிக்கமுடியாத கொலை வழக்குகளுக்கு பயனுள்ள கண்டுபிடிப்பாளாராக அது இருக்கிறது.

சிம்பன்சி என்ற குரங்கு 32 ஆங்கில வார்த்தைகளுக்கு சரியாக அடையாம் காட்டுகிறது.

கிளி பேசுவதற்க்கு கூட பழக்கப்படுத்துகிறார்கள்.

ஒரு சில விலங்குகளெல்லாம் பெயர் சொன்னால் வருகிறது ஆடுகள் இவைகளெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.

- சங்கர் ஐயா.

[05/09 12:42 am] Jebajayaraj Bro VTT: மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா மிகுந்த பிரயோஜனம் நிறைந்தவை தாங்கள் கூறிய விஷயங்கள் அந்த மரத்தின் பெயர் மர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் மர் மரம் வேதத்தில் உள்ளதா

[05/09 12:48 am] Elango: ஆஸ்திரேலியாவில் இருக்கக்கூடிய சில பறவைகள், வேடன்தாங்கலுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் சரியாக வந்து சேர்கிறது.

அதேப்போல வேடன்தாங்களில் இருக்கக்கூடிய ஒருசில பறவைகள், பல ஆயிரம் மையில்களை தாண்டி வேறு நாடுகளுக்கு செல்கின்றது.

அந்த காலங்களை அது சரியாக கணிக்கிறது. வேடன்தாங்களில் இருக்கக்கூடிய பறவை ஆஸ்திரேலியாவில் செல்லும் போது அங்குள்ள பறவைகளை இவைகளை வறவேற்கிறதை பார்க்கின்றோம்.

இந்திய பறவைகள் மனிதனுக்கு பயந்து மரங்களிலேயே கூடுக்கட்டுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு சில பறவைகள் பூமியில் தரைமீது சுத்தம் செய்து கூடிகட்டி அழகான பூவை பூவைக்கொண்டு வந்து வைத்து அழகு பார்க்கிறது.

*தேவனுடைய பார்வையிலே பறவைகளெல்லாம் விசேஷமானவைகளாக இருக்கிறது. அவைகளை சுதந்திரமாக விடுவது நல்லது*

- சங்கர் ஐயா

[05/09 12:56 am] Elango: நான் ஒரு பறவைகளின் ஆராய்ச்சியாளர் புத்தகம் ஒன்று படித்தேன்.பறவைகள் மிகவும் நுட்பமான அறிவை உடையது. அது பல mile அப்பால் சென்று தன் இனத்தை சந்தித்து வருகிறது. அது செல்லக்கூடிய காலங்கள் நேரங்கள் அந்த நாட்டு பவைக்கு சரியாக தெரியும்.

பறவைகளுக்கு விசேஷித்த குணங்கள் இருக்கின்றது. அதனுடைய மொழியை யாரும் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சரியாக தன் குஞ்சுகளை அழைப்பது, சைகைகளின் மூலம் தன் மொழியை உணர்த்துவது எல்லாம் மர்மமாக இருக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்.

பறவைகள் சைகை மூலம் பேசுவதை இதுவரைக்கும் எந்த ஆராய்ச்சியாளரும் சரியாக கண்டுபிடிக்காத நிலையில் இருக்கிறார்கள் என்று எமது பறவைகளின் ஆராய்ச்சியாளர் தன் புஸ்தகத்தில் எழுதி வைத்துள்ளார்.

*எல்லாம் தேவனுடைய விசேஷித்த படைப்புகள்*

- சங்கர் ஐயா

[05/09 1:14 am] Elango: மிருகங்கள், பறவைகளை விட மனிதன் விசேஷித்தமானவன்,  கடவுள் அவனை அவ்வாறு உருவாக்கியுள்ளார்.

நீதிமொழிகள் 30:25-26
[25]அவையாவன: *அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,*
[26] *சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,*

வெட்டுக்கிளிகள் என்பது ஆவிக்குரிய ஜீவியத்தை வீழ்த்துவதற்க்கு ஒரு நிழலாட்டமாகும். எகிப்தில் வந்த வாதைகளில் இதுவும் ஒன்று.

பேன் தலை குனிவை ஏற்ப்படுத்தும்.

தவளை என்பது அருவருப்புக்குரிய அடையாளம்.

அடைக்கலான் குருவியை பார்க்கிலும் நாம் விசேஷித்தவர்கள். ஆண்டவர் மனிதர்களை விசேஷித்தவர்களாக படைத்திருக்கிறார்.

நிலையில்லாமல் அலையும் கிறிஸ்தவ வாழ்க்கையும் அடைக்கலான் குருவி போன்றது.

நாரைகள் விரக்தியடைந்து வனாந்தரத்திலே,  ஒற்றைக்காலிலே நிற்கும், தண்ணீர் செல்லக்கூடிய இடங்களிலும் , வனாந்தரத்திலும் தனக்கு தேவையானது கிடைக்காவிட்டால் விரக்தியடைந்த ஒரு ஜீவியம். இது பார்ப்பதற்க்கு வெண்மையா காணப்படும், இருந்தாலும் அதன் குணநலன்களை மாற்றிக்கொள்ளாது.

எந்நேரமும் ஒரு மினுக்காக காத்துக்கொண்டிருக்கி ஒரு ஜீவியம்.

ஆந்தையை குறித்து பாழான இடத்திலே தங்கக்கூடியதாக இருக்கிறது என்று வேதத்தில் வாசிக்கிறோம்👇🏻👇🏻

சங்கீதம் 102:6
[6]வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; *பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.*

சில பறவைகள் அன்புல்லதாகவும், சில பறவைகள் அன்பற்றதாகவும் இருக்கிறது.

கூடுகளை மாற்றி முட்டையிடும் பறவைகளும் உண்டு,  குயில் தன்னுடைய முட்டைகளை காகத்தின் கூடுகளிலும் இடும். சில பறவைகள் தான் இடக்கூடிய முட்டைகளை தன் கால்களாலே மிதித்து அதை உடைத்துவிடும்.

எனவே பறவைகளில் நல்ல குணங்கள் இருந்தாலும், அவைகளை விட விசேஷித்தவர்களாக தேன் மனிதர்களை படைத்திருக்கிறார்.

ஆடுகளை ஓநாய்களுக்க்குள்ளாக அனுப்புவது போல நம்மையும் இந்த சமூகத்தில் தேவனுடைய அன்பை கசியும்படி தேவன் அனுப்பிவைத்திருக்கிறார். அவர் நோக்கத்தையும் நீதிகளையும் அனைவர்களுக்கும் பகிர வேண்டும்.

- சங்கர் ஐயா

Post a Comment

0 Comments