[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: ⛪ *இன்றைய வேத தியானம் - 23/08/2017* ⛪
1⃣ *பெர்கமு என்பதன் அர்த்தம் என்ன❓*பெர்கமு சபையைப் பற்றி ஆண்டவர் கூறும் குறைகள், நிறைகள் என்னென்ன❓
2⃣ இன்றைய சபைகளோடு, பெர்கமு சபையை எப்படி ஒப்பிடலாம்❓
3⃣ *பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்* என்பதன் அர்த்தம் - ஒவ்வொரு சபைக்கும் ஒரு தூதன் ஆண்டவரால் நியமிக்கப்பட்டிருக்கின்றனரா❓
4⃣ *மறைவான மன்னா, வெண்மையான குறிக்கல், புதிய நாமம்* - Rev 2:17 என்பதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன❓
5⃣ உண்மையான சாட்சியான *அந்திப்பாவை* குறித்து வரலாறு என்ன கூறுகிறது❓Rev 2:13
6⃣ சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடம் எது❓ *சாத்தானின் சிங்காசனம்* என்பதன் அர்த்தம் என்ன❓
⛪ வெளிப்படுத்திய விஷேசம் ஏழு சபைகளுக்கு கூறப்பட்ட வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வரலாற்று, இறையியல், வேதாகம பார்வையில் தியானிக்கலாம். *இன்றைக்கு பெர்கமு சபையை குறித்து தியானிக்கலாம்.⛪*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: மல்கியா 2:7
[7] *ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்;* வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; *அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.*
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: The people of Pergamum were known as the "Temple-keepers of Asia." The city had three temples dedicated to the worship of the Roman emperor, another for the goddess Athena, and the Great Altar of Zeus, the king of the Greek gods. Many scholars believe this altar is the “Throne of Satan” mentioned in the book of Revelation.
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: 💥பெர்கமு சபை💥
பெர்கமு
(வெளிப்படுத்தல்: 2:12-17)
(இராஜாங்க சபை - கி.பி.313-476)
'பெர்கமு' என்றால்
'கல்யாணம்' என்று பொருள்படும்.
*பெர்கமு பட்டணம்:*
இது எபேசு பட்டணத்தின் வடகிழக்கில் சுமார் 50 மைல் தூரத்தில் உள்ளது. ரோமர் ஆட்சியில் இது ஆசியாவின் தலைநகராய் இருந்தது. இன்றுள்ள லண்டன், பாரீஸ், பெர்லின் ஆகிய பட்டணங்கள் போல அன்றுள்ள பெர்கமு மிக பிரபலமான பட்டணமாய் இருந்தது. அன்றிருந்த நூலக சாலைகளில் மிகப் பெரிய நூலக சாலை பெர்கமுவில் இருந்தது. கைகளினால் எழுதப்பட்ட அந்நாட்களிலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இந்நூலக சாலையில் இருந்தன. "பார்ச்சுமெண்ட்"(தோல் சுருள்) அக்காலத்தில் எழுத உபயோகிக்கப்பட்ட பொருள். இதை முதலில் பெர்கமுவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இது விக்கிரக ஆலயங்களுக்கும் பிரசித்தி பெற்றதாயிருந்தது. 'அஸ்குலாபியஸ்' என்ற கடவுள் 'ஆரோக்கியத்தின் கடவுள்' என்று போற்றப்பட்டு வந்தது.
இக்கடவுளின் சின்னம் சர்ப்பம். வியாதியுள்ளவர்கள் இக் கோவிலுக்குள்போய் ஒரு நாள் இரவு தங்குவார்கள். இக்கோவிலுக்குள் விஷமற்ற சர்ப்பங்கள் ஏராளம் இருந்தன. வியாதியஸ்தர்கள் இங்கு படுத்திருக்கும்போது, இப் பாம்புகள் ஊர்ந்து சென்று யார் யாரைத் தொடுகிறதோ அவர்கள் எல்லோருக்கும் சுகம் கிடைக்கும் என்று நம்பினர்.
இப்பட்டணத்தில் ஜீயஸ், அத்தேனே, ஜீப்பிட்டர், வீனஸ், அப்பல்லோ ஆகிய தேவதைகளின் கோவில்கள் இருந்தன. கோவில்களில் ரோம சக்ரவர்த்தியின் சிலைகளை ஜனங்கள் வணங்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
தற்போது இப் பட்டணம் இருந்த இடத்தில் பெர்கமா என்ற சிறு பட்டணம் இருக்கிறது. இது துருக்கி நாட்டில் இருக்கிறது.
*பெர்கமு சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:*
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவராய் வெளிப்படுகிறார். ரோம சக்கரவர்த்திகளை வணங்காத கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். எனவே, கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு தண்டனையும், உண்மை கிறிஸ்தவர்களுக்கு வெற்றியும் கொடுக்கிறவராக காட்சி அளிக்கிறார். "பட்டயம்" தேவ வசனத்தை குறிக்கும். (எபிரேயர்: 4:12; எபேசியர்: 6:12). இப்பட்டயம் பரிசுத்தவானுக்கு சுத்திகரிக்கும் கருவியாகவும், துன்மார்க்கனுக்கு சங்கரிக்கும் பட்டயமாகவும் இருக்கிறது.
*அ) நற்குணங்கள்:*
1. நற்கிரியை
2. கர்த்தரின் நாமத்தை பற்றிக் கொண்டிருத்தல்
3. உபத்திரவத்தின் நாட்களிலும் விசுவாசத்தை மறுதலியாமலிருத்தல்
*ஆ) தீய குணங்கள்:*
1. பிலேயாமின் போதகம் (பாபிலோனிய மந்திரவாதி)
2. நிக்கொலாய் மதஸ்தரின் போதகம்
*பிலேயாமின் போதனை:வெளிப்படுத்தல்: 2:16.*
(எண்ணாகமம்: 25:1-3; 31:16; 2பேதுரு: 2:14,15; யு+தா:11 வசனம்) இஸ்ரவேலரை விக்கிரக ஆராதனையிலும், விபசாரத்திலும் ஈடுபடுத்துவதற்கான வழிகளை செய்யும்படி பிலேயாம் பாலாக்கிற்கு போதகம் பண்ணினான்.
*அந்திப்பா: வெளிப்படுத்தல்: 2:13*
இவன் பெர்கமு சபையில் முதல் இரத்தசாட்சியாக மரித்தவன். ரோம சக்கரவர்த்தியின் சிலைக்கு ஒவ்வொரு பிரஜையும் வருடத்திற்கு ஒருமுறையாகிலும் தூபம்போட்டு அதற்குரியதான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அந்திப்பா என்பவன், "நான் இயேசு கிறிஸ்துவின் பிரஜை. ஆகவே, சிலைக்கு தூபம் காட்ட முடியாது"என்று கூறியபடியால் அவனை அக்கினியால் சுட்டெரித்துப் போட்டனர். இவ்விதமாக அந்திப்பா இயேசுவுக்கு இரத்தசாட்சியானான். ஆகிலும், இச்சபையினர் கிறிஸ்துவுக்கு உண்மையாய் இருந்தனர்.
*சாத்தானுடைய சிங்காசனம்: வெளிப்படுத்தல்: 2:13*
பெர்கமு ஆசியாவின் தலைநகராகவும் சக்கரவர்த்தியின் சிலை இருந்த இடமாகவும் இருந்தபடியால் - இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. மேலும், ஆஸ்குலாபியஸ் என்ற கடவுளின் சின்னம் சர்ப்பமாக இருந்தபடியினாலும், இதுவும் சாத்தானைக் குறிப்பிடுவதாக இருந்தது.
*ஆலோசனை: வெளிப்படுத்தல்: 2:16*
தீயபோதனைகளைவிட்டு மனந்திரும்பி, பாவி மட்டுமல்ல சபையும் மனம் திரும்ப வேண்டியிருக்கிறது. பாவி தன் பாவத்தினின்றும், சபை தன் தீய போதனையினின்றும் மனந்திரும்ப வேண்டும்.
*ஜெயம்கொள்ளுகிறவனுக்குரிய வாக்குத்தத்தம்:*
மறைவான மன்னா:(2:17)
இஸ்ரவேலர் வனாந்திரத்தில் வானத்திலிருந்து வந்த மன்னாவை புசித்தார்கள். இது தேவதூதனின் அப்பம். அதுபோல, கிறிஸ்தவ ஜீவியத்தில் வெற்றி பெறுகிறவர்களுக்கு ஆவிக்குரிய ஆகாரமாகிய தேவாசீர்வாதங்களை பரலோகத்திலிருந்து பொழிந்தருள்வார்.
*வெண்மையான குறிக்கல்:*
கிரேக்க பந்தயங்களில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வெகுமதி அளிக்குமுன் ஒரு வெள்ளைக்கல்லில் அதைக் குறித்துக் கொடுப்பார்கள். கிடைக்கப்போகும் வெகுமதிக்கு இது ஒரு உறுதிப் பொருளாகும்.
*புதிய நாமம்:*
அந்நாட்களில் உயர் பதவிக்கு வருகிறவர்களுக்கு புதிய பெயர் கொடுப்பது வழக்கம். அதுபோல் ஆவிக்குரிய ஜீவியத்தில் வெற்றி பெறுகிறவனுக்கு, அந்த நாமத்தைப் பெறுகிறவனுக்கேயன்றி வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் கொடுக்கப்படும்.
அதாவது, தேவன் அருளும் புதிய நிலையின்
மகிமையை அதை அனுபவிக்கிறவனே
யன்றி வேறொருவனுக்கும் தெரியாது.
http://nesarin.blogspot.in/2012/11/blog-post_5.html?m=1
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: பெர்கமுமின் மக்கள் "ஆசியாவின் கோவில்களே" என்று அழைக்கப்பட்டனர். ரோமானிய பேரரசரின் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்று கோயில்களும், அதீனா தேவிக்காகவும், கிரேக்க கடவுள்களின் அரசரான ஜீயஸின் பெரிய பலிபீடத்திற்காகவும் மூன்று கோயில்கள் இருந்தன. இந்த பலிபீடம் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "சாத்தானின் சிங்காசனம்" என பல வேத அறிஞர்கள் நம்புகிறார்கள்.
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: அந்திப்பா என்ற விசுவாசி உண்மையுள்ள சாட்சியாயிருந்தது 13ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல சபைகளில் சாட்சி சொல்லப்படுவதை நாம் கேட்கிறோம்.
சாட்சி சொல்லுகிறவர்கள் உண்மையான காரியங்களை சொல்லவும், உண்மையான சாட்சிகளாக வாழவும், கொல்லப்படும் நிலைமை வந்தாலும் சாட்சியை இழக்காமலிருக்கவும் கற்றுக் கொள்ளக்கொள்ள வேண்டும்.
சகரியா 8:8
[8]அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; *அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள்* நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: *முதல் கிறிஸ்தவ இரத்த சாட்சி - ஸ்தேவான்*❣❣❣❣
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: *இரத்தம் சிந்தி கொல்லப்பட்ட முதல் நீதிமான் - ஆபேல்*
மத்தேயு 23:35
[35] *நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல்* தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: பெர்கமு சபை
*சாத்தானின் சிங்காசனம்*
எங்கே உள்ளது?
*அவனின் கடைசி கால திட்டங்கள் என்ன?*
வெளி. விசேஷம் 2: 13
உன் கிரியைகளையும், *சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்*
நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
இது பெர்கமு சபைக்காக உரைத்தது. பெர்கமு சபை அக்கிரமங்கள் நிறைந்து இருந்தது.
*பெர்கமு சபையின் தீய குணங்கள்:*
1. பிலேயாமின் போதகம் (பாபிலோனிய மந்திரவாதி)
2. நிக்கொலாய் மதஸ்தரின் போதகம்
பிலேயாமின் போதனை:வெளிப்படுத்தல்: 2:16.
(எண்ணாகமம்: 25:1-3; 31:16; 2பேதுரு: 2:14,15; யூதா:11 வசனம்) இஸ்ரவேலரை விக்கிரக ஆராதனையிலும், விபசாரத்திலும் ஈடுபடுத்துவதற்கான வழிகளை செய்யும்படி பிலேயாம் பாலாக்கிற்கு போதகம் பண்ணினான்.
நிக்கொலாய் மதஸ்தர்
போதகம் :
ரோம சக்கரவர்த்திகளால் ஏற்பட்ட உபத்திரவங்களை சகிக்கமாட்டாமல் சில கிறிஸ்தவர்கள் உலகத்தோடு ஒத்துப்போக விரும்பினர். விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிப்பதினாலும், புறஜாதியாரின் பண்டிகைகளில் கலந்து கொள்வதினாலும் அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்வதினாலும் தவறில்லை என்று போதித்தனர். இவர்களுக்கு நிக்கொலாய் மதத்தினர் என்று பெயர்.
அங்கே இருந்தவர்கள் சர்ப்பத்தை தெய்வமாக வணங்கிக்கொண்டு வந்தனர். அதனால் சாத்தானின் சிங்காசனம் பெர்கமில் இருந்தது.
அந்த சிங்காசனம் ரத்தம் ஊற்றப்படுகிற கிண்ணம்போல இருக்கிறதாம். (உலகத்திலே பல இடங்களிலே கிறிஸ்தவர்களின் இரத்தம் சிந்தப்படும்) பின் அந்த சிங்காசனம் ரோமிற்க்கு சென்றது. ஏன் ரோமிற்க்கு சென்றதை விளக்க வேண்டினால் அதே பெர்கமு அக்கிரமங்கள்தான் அங்கே இருந்தன.
R.C. மக்கள் இதைப்படித்து கேட்டாலும் அதே அக்கிரமங்களைத்தான் சொல்ல முடியும்.
சாத்தானுடைய சிங்காசனம்:
இந்த சிங்காசனம் முதலில் பெர்கமுல் இருந்தது. பின் ரோம் நாட்டில் வாடிகனுக்கு வந்தது. இது எங்கே உள்ளதோ அங்கே பிலேயாமின் போதகம் (பாபிலோனிய மந்திரவாதி) & நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் இருக்கும். தற்போது ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் ஒரு மியூசியத்தில் மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த மியூசியத்தின் பெயர் என்ன தெரியுமா?
*பெர்கமு மியூசியம்*.
என்ன பொருத்தமான பெயர் பாருங்கள். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சாத்தான் சிங்காசனத்தை பாருங்கள்.....
https://youtu.be/6I1b5MZdWbM
அந்த மியூசியத்தில்
பாபேல் கோபுரத்தின் மாதிரியும் இருக்கிறது. இவையெல்லாம் அந்திக்கிறிஸ்து தான் அமைக்கவிருக்கும் இராஜ்ஜியத்தின் முன்னேற்பாடுகள். நமக்கு ஏன் கர்த்தர் இவற்றையெல்லாம் தற்போது சொல்ல வேண்டும்? கர்த்தர் தன் தீர்க்கதரிசிகளுக்கு மறைக்காமல் எதையும் செய்யார். ்.
கடைசி காலத்தில் பெர்லினில்தான் கிறிஸ்தவர்கள் சிந்தப்படும் இரத்தத்தோடு இரத்த சாட்சி நிறைவாகும்.
லூக்கா 8: 17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
அந்திக்கிறிஸ்து ராஜ்ஜியம்
என்ன?
1.எருசலேம் கொள்கை தலைநகரம் (CAPITAL OF POLICY)
இங்கேதான் தேவாலயத்திலே நுழைந்து தன் பாழாக்கும் அருவருப்பை செய்யப்போகிறான்.
2. பெர்லின் அரசியல் தலைநகரம் (CAPITAL OF POLITICS) - பெர்லினில் கிறிஸ்தவர்களை கொல்லப்போகிறான். அவர்கள் இரத்த சாட்சியாக மரிப்பார்கள்.
3. பாபிலோன் Business தலைநகரம் ( CAPITAL OF BUSINESS) ★ஈராக்
2 தெச 2:3 ல் சொல்லுகிறார், கேட்டின் மகன் கடைசி நாட்களில் வெளிப்டுவான் என்று.
2 தெசலோனிக்கேயர்
2: 3
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
அந்திக்கிறிஸ்துவின் தலையாய கெட்ட எண்ணமே
*நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்,* இவன் வானத்திலிருந்து தள்ளப்பட்டதற்க்கு முக்கிய காரணமே இந்த மேட்டிமையினால்தான்.
"நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,"
-ஏசாயா 14 :13
மத்தேயு 24: 15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.
வாசிக்கிற நீங்கள் சிந்தியுங்கள். கர்த்தர் தக்க சமயத்தில் ஏற்ற வேளையில் உரைக்கிறவர். கிறிஸ்தவர்களாகிய நாம்தான் தேவ ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும்.
மத்தேயு 24: 14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்,
அப்போது முடிவு வரும்.
*AND THEN THE END WILL COME*)
இது நம்மேல் விழுந்த கடமை. நாம் கடைசி காலத்தில் நிற்கிறோம். கடைசி நாட்கள் வெகு தூரமில்லை. தேவ இராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நாள் வந்து விட்டது.
மாரநாதா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே
சீக்கிரம் வாரும்!!
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: எபேசியர் 6: 12
ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், *வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்* நமக்குப் போராட்டம் உண்டு.
Ephesians 6: 12
For we wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this world, against spiritual wickedness in *high places.*
உண்மையிலேயே இப்போது சாத்தானின் சிங்காசனம் இப்போது எங்கே இருக்கிறது? பூமியிலா அல்லது வானமண்டலங்களிலா?
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: வெளி 16:10-11
[10] *ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்*; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,
[11]தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: ஆமாம்...👍👍 அப்படியென்றால் சாத்தானின் சிங்காசனம் இப்போது எங்கிருக்கிறது.
சாத்தானுடைய சிங்காசனம் என்பது ஒரு வெளிப்புறமான இருப்பிடத்தை குறிக்கிறதாயிருக்கிறதா அல்லது ஆவிக்குரிய அர்த்தமா....
வெளிப்படுத்தின விசேஷம் 13:2
[2]நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; *வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும்* மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
[05/09 2:58 pm] Aa Levi Bensam Pastor VDM: பாவம் எங்கேயோ அங்கே சாத்தானின் சிங்காசனமும் இருக்கிறது என்று சொன்னால்.... நம் இருதயமே சாத்தானின் சிங்காசனம் என்று சொல்ல வேண்டுமா ஐயா...?
மாற்கு 7:21-22
[21] *எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,*
[22] *களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.*
எரேமியா 17:9
[9] *எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?*
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: மனிதனுடைய இருதயத்தில் மேற்கண்ட பாவப்பட்டியல் குடிகொண்டிருக்குமாயின் அது சாத்தான் வாசம் பண்ணுமிடமே. ஏனெனில் அவன் பாவத்திலேயே வாசம் பண்ணுகிறவனாயிருக்கிறான்.
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: 👍👍
நன்றி ஐயா.🙏🏻🙏🏻
இரட்சிக்கப்பட்ட ஒருவர் அதாவது நானோ அல்லது நீங்களோ ... ஏதாவது தேவனுக்கு விரோதமான பாவம் செய்கிறோமென்றால் ... எடுத்துக்காட்டாக பொய், தேவையில்லாத கோபம், பதிலுக்கு பதில் பழிவாங்குதல், இச்சையில் விழுதல், மாம்ச இச்சைக்கு ஒப்புக்கொடுத்தல்....சகோதரனை பகைத்தல்...
இவைகளில் ஒன்றை நானோ நீங்களோ செய்தால்... சாத்தானுடைய சிங்காசனம் நம் இருதயத்தில் இருக்கிறது என்று அர்த்தப்படுமா ஐயா?
தேவனுடைய ஆலயமாக இருக்கும் நாம், சாத்தானுடைய சிங்காசமாகவும் இருக்கிறோமா ஐயா...?
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: நிச்சயமாக இருக்காது, இருக்கவும் முடியாது சகோ., பாவத்தை உணர்வது..உணர்ந்த பாவத்திலிருந்து விடுதலை பெற விரும்புவது...அதற்கு முயற்சி செய்வது...தேவன் வாசம் செய்யவிரும்பும் இருதயமாகும். உயர்த்தப்பட்டுள்ளது துணிகரமாக மேலும் மேலும் பாவத்தில் பெருகுவது சாத்தானின் சிங்காசனம் ஆகும். சாத்தானின் சிங்காசனம் என்பது பாவத்தின் உச்சநிலை என புரியலாம்
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
வெளி 3:21-22
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: ஆம், உதாரணம்...எசேக்கியேல்28:2 ........உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல....👈இதில் ஒரு மனுஷனின் இருதயம் எப்படி தேவனுக்கு விரோதமாக எழும்பியது என்பதை பார்க்கிறோம், எனவே மனிதனுடைய இருதயம் சாத்தானுடைய சிங்காசனமாகலாம்.
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: *பாதளத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று இயேசு கிறிஸ்துவை பார்த்து அசுத்த ஆவிகள் ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்❓❓❓❓❓*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 , ஏசாயா 14:9-15
[9] *கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, 👇👇👇👇👇👇உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.*
[10]அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.
[11]உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
[12]அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ👇👇👇👇 வானத்திலிருந்து *விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, *நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!*
[13]நான் வானத்துக்கு *ஏறுவேன்*, தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை *உயர்த்துவேன்;* வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே *வீற்றிருப்பேன்* என்றும்,
[14]நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் *ஏறுவேன்;* உன்னதமானவருக்கு *ஒப்பாவேன்* என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
[15] *ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.*
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: சாத்தானுக்கு பூமிக்குரிய சிங்காசனம் ஏழு உண்டு
1.எகிப்து
2.அசீரியா
3.பாபிலோன்
4.மேதியா பெர்சியா
5.கிரேக்கு
6.ரோம்
7.அந்தி கிறிஸ்துவின் வரப்போகும் ரோம்
அவைகள் ஏழு ராஜாக்களாம், இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை, வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும். வெளிப்படுத்தின விசேஷம் 17 :10
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: *தேவனுடைய சிங்காசனம்*
Vs
*சாத்தானுடைய சிங்காசனம்*
*தேவன் ஆவியாயிருக்கிறார்* அதைப்போல சாத்தானும் ஆவியாய்
இருக்கிறான்.
சாத்தான் எப்போதும் தேவனை போல மாற விரும்புகிறவன்.
1. *தேவனுடைய சிங்காசனம் பரலோகத்தில்.* சாத்தானுடைய சிங்காசனம் நரகத்தில்.
2. *2 அல்லது 3 பேர் கூடும் இடங்களில் கிறிஸ்து வருகிறார் துதியின் சிம்மாசனத்தில் அமர்கிறார்.* அதைப்போல சாத்தானுடைய மக்கள் சேரும் இடங்களில் சாத்தாநுக்கு சிம்மாசனம் அமைக்கப்படுகிறது. உதாரனம் மலைக்கோயில்கள். *பெயர் சொல்ல விருப்பமில்லை.
*3. கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக நம் இருதயத்தில் வசிப்பது போல சாத்தான் தீயவர் இதயத்தில் வாழ்கிறான்.*
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: பூமிக்குரிய சீயோன் மலையில் தனது சிங்காசனத்தை ஸ்தாபிக்கும் அந்திகிறிஸ்து
“சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.” தானியேல் 11:45
பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட பரலோக சீயோன் மலையை (வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதம்) அபகரித்துக்கொள்ள விரும்பி, அது தன்னுடைய இருதயத்தில் தோன்றிய உடனே நியாந்தீர்க்கப்பட்டு அகாதமான பாதாளத்திலே தள்ளப்பட்ட லூசிபர் (அவனது சேனைகளும்) மகா உபத்திரவகாலத்தில் அந்திகிறிஸ்துவினுள்ளிருந்து பூமிக்குரிய சீயோன் மலையில் (சிங்காரமான பரிசுத்த பர்வதம்) தனது சிங்காசனத்தை ஸ்தாபிப்பான்.
“நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,” ஏசாயா 14:13
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: 12. பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
13. உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
14. ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; *விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு*
15. *அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்*
16. நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
17. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: தேவனுக்கே மகிமை உண்டாவதாக அய்யா விளக்கங்கள் மிகவும் அருமை ஆனால் நிக்கோலாய் என்பவரை குறித்து தாங்கள் கொடுத்த கருத்து அனேகர் கொடுத்த கருத்துகளில் ஒரு சாரார் கொடுத்த கருத்தாகும் வெளிப்படுத்தின விசேஷத்தை பொருத்தவரையில் அனேகர் அநேக விதமான கருத்துகளை கொடுக்கிறார்கள் வெளிப்படுத்தின விசேஷ விளக்கவுரைகள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளது முக்கால சபைப் பிதாக்களாகிய ஐரேனியஸ், ஹிப்போலிட்டஸ், எபிபானியஸ்(epiphanius),தியோடரெட் ஆகியோர் வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிக்கோலை மதஸ்தர் போதனைகளை கொண்டு வந்தது அப்போஸ்தலர் நடபடிகளில் இடம்பெறும் பந்திவிசாரிப்புக் செய்கிற ஏழு பேரில் ஒருவனாக இருந்த நிக்கோலா தான் என்று உறுதிப்படுத்துகிறார்கள் ஆனாலும் இவையும் பல கருத்துக்களில் ஒரு கருத்து இதைக்குறித்து இன்னும் அனேகர் அனேக விளக்கங்களை கொடுக்கின்றனர் இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் தங்களுடைய பதிவு மிகவும் அருமை நன்றி ஐயா 😇👍👋
[05/09 2:59 pm] Aa Levi Bensam Pastor VDM: *நிக்கொலாய் மதஸ்தர் பற்றி விளக்கம்*
வெளி 2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய் மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம். யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்கு யார் இவர்கள் என்று நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில் இருந்தனர் என்று யோவான் சொல்லவில்லை.
அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்?
*அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப் 6:5) இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபது பேர்களில் ஒருவன். ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன்தான் இந்த நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து போனதையும் காண்கிறோம்.* இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான் என்று குழப்பும்படி சொல்கின்றனர். இவர் ஸ்தேவானைப்போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர் என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அப் 2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை. Nicolaitan என்பதில் Nikan + laos : இதற்கு conquer(வெற்றிபெறு) மற்றும் people(ஜனங்கள்) என்று பொருள் என்று கிரேக்க சொல்-வரலாற்றில் (etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு(clergy) சாதமாக மற்றவர்களை அமுக்கி/மட்டம்தட்டி வைத்ததாகவும் விவாதம் உள்ளது. இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு செய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன. பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு வசனங்களும் இல்லை.
பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு "அப்படியே நிக்கொலாய் என்னும் கூட்டத்தாரை" (வெளி 2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம். யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வதுபோல் நிகொலா என்ற வார்த்தையானது பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம். (எப்படி மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும் அர்த்தம் ஒன்றுபோல) இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும் இந்த வசனத்துக்கும் பொருந்துகிறது என்பது ஒருபார்வை. எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப்பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.
*யோவான் வெளி 2ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்.*
1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது.
2 - வேசித்தனம்.
ஆதி சபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நியதேவர்களின் வழிபாட்டுடன் சற்றே அநுசரித்து போன ஜனங்களாகும். அப் 15:20, 29 மற்றும் 1 கொரி 8--10 ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். பவுல் மற்றும் யோவான் ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர். பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரககோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்.
பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான ஒன்று. இதை வெளி 2:20,22-லும் யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது . பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால் வெளி 2:20ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள் அல்ல, இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள். இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம். மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை 1 கொரி 5:1; 6:12-20 மற்றும் எபி 13:4ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்.
பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள். பழைய ஏற்பாட்டில் தேவனைவிட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன் வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று).
பேயோரின்( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் எண் 25:1-18) காணப்பட்ட பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை புசிக்கும்ப்படியும் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்.
*இவைகளை பார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய ஜனங்களை அன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம் கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise) என்று புகுத்திய கூட்டத்தாரக காணமுடிகிறது. வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு, மற்ற சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு கொண்டால் தவறல்ல என்றும், தேசிய சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும் போதித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம் இயேசு சொல்லும்போது அந்த சபையின் மேல் பிரியப்படாமல் அதின்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து சொல்லுகிறார்.*
இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவேதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு.
*இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர். இவர்கள் வேதபுரட்டர்களாயிருந்து, இது செய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக்கொள்ளமாட்டார். அவைகள் நியாயத்தீர்ப்பினை அடையும்.*
Source - http://tamilbibleqanda.blogspot.in/2011/11/75.html
Post a Comment
0 Comments