[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: ⛪ *இன்றைய வேத தியானம் - 22/08/2017* ⛪
1⃣ சிமிர்னா சபைக்கு ஆண்டவரின் எச்சரிப்பின் சத்தம் என்ன❓
2⃣ இன்றைய சபைகளோடு, சிமிர்னா சபையை எப்படி ஒப்பிடலாம்❓
3⃣ *சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்* என்பதன் அர்த்தம் - ஒவ்வொரு சபைக்கும் ஒரு தூதன் ஆண்டவரால் நியமிக்கப்பட்டிருக்கின்றனரா❓
4⃣ *நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள்.* - விசுவாசிகளை சோதிக்கப்படும்படியாக சாத்தானை ...ஆண்டவர் அனுமதிக்க காரணமென்ன❓
5⃣ தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் என்று ஆண்டவர் யாரை.. என்ன காரணத்திற்க்காக சொல்லுகிறார்❓
*⛪ வெளிப்படுத்திய விஷேசம் ஏழு சபைகளுக்கு கூறப்பட்ட வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வரலாற்று, இறையியல், வேதாகம பார்வையில் தியானிக்கலாம். இன்றைக்கு சிமிர்னா சபையை குறித்து தியானிக்கலாம்.⛪*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Vedathiyanam offline / online application* - https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: 💥சிமிர்னா சபை💥
சிமிர்னா சபை (Smyrna)
வெளிப்படுத்தல்: 2:8-11
(உபத்திரவ கால சபை)
'சிமிர்னா' என்பதற்கு'வெள்ளைப்போளம்' என்று பொருள். எபேசு பட்டணத்திற்கு வடக்கே 50 மைல் தொலைவில் இருந்தது. இப் பட்டணம் அக் காலத்தில் திட்டமிடப்பட்ட அழகிய பட்டணம். பட்டணத்தின் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் நேர் தெருக்கள் இருந்தன. பொன் தெரு என அழைக்கப்பட்ட பெரிய தெருவில் 'சிவிலி' 'ஜீயஸ்' தேவதைகளின் கோவில்கள் இருந்தன.
வியாபாரத்திற்கு சிறந்த ஒரு பட்டணமாக இருந்தது. ஐசுவரியத்தில் உயர்ந்த ஒரு பட்டணமாக இருந்தது. இது ஆசியாவின்'அணிகலன்' என்றும் 'மணிமுடி'என்றும் அழைக்கப்பட்டது. இப்பட்டணம் திடீரென்று எதிரிகளால் அழிக்கப்பட்டு சிறு கிராமமாய் மாறிற்று. ஆனால், மீண்டும் சில காலத்துக்கு பின் பெரும் பட்டணமாயிற்று. இப்பட்டணம் பல முறை நில அதிர்வினால் சேதமடைந்தது உண்டு.
இன்றும் இப்பட்டணம் 'இஸ்மிர்' என்னும் பெயரில் துருக்கி நாட்டில் துறைமுகப்பட்டணமாக விளங்குகிறது. தற்போது இதன் ஜனத்தொகை 2,50,000. இப்பட்டணத்தில் சபை இல்லாத காலமே இல்லை.
*சிமிர்னா சபை:*
சிமிர்னா சபை பவுல் அப்போஸ்தலன் ஆரம்பித்தாக சிலர் கருதுகின்றனர்.'போலிகார்ப்' என்ற சபைப்பிதா சிமிர்னா சபையின் கண்கானியாக இருந்தார். போலிகார்ப் யூதர்களால் பிடிக்கப்பட்டு நியாயஸ்தலத்துக்கு முன் நிறுத்தப்பட்டார்.
கிறிஸ்துவை மறுதலிக்குமாறு அவரை வற்புறுத்தியபோது, போலிகார்ப், "86 வருடங்களாக கிறிஸ்துவை சேவித்து வந்தேன். அவர் ஒரு போதும் ஒரு தீங்கினையும் எனக்குச் செய்ததில்லை. இப்படிப்பட்ட என் இராஜாவும், இரட்சகருமானவரை எவ்விதமாய் நான் மறுதலிக்க முடியும்?" என்று அறிக்கையிட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
இச் சமயத்தில் ஒரே நேரத்தில் 1500 பேரும், மற்றொரு சமயம் 800 பேரும் கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாய் மரித்தனர்.
*1. இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு: (வெளிப்படுத்தல்: 2:8)*
முந்தினவரும் பிந்தினவரும் பிழைத்தவருமாக வெளிப்படுகிறார். மகா உபத்திரவத்தினூடே சென்ற சபைக்கு மரித்தோரிலிருந்து மரித்தோராக வெளிப்பட்டு அவர்களை ஆறுதல்படுத்துகிறார். உபத்திரவம் மரணத்தைக் கொண்டு வந்தாலும் பயப்பட வேண்டாம். நான் ஜீவிப்பதுபோல் நீங்களும் பிழைத்திருப்பீர்கள் என்ற பொருளில் வெளிப்படுத்துகிறார்.
*2. சபையின் நற்குணங்கள்:*
இச் சபை நற்குணங்கள் உள்ள சபையாக இருந்தது. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். எல்லா சபைகளுக்கும் ஆண்டவர் கூறும் வார்த்தை இதுவே. தேவனுடைய கண்காணிப்பை இது காட்டுகிறது. இச்சபை கிறிஸ்துவுக்காய் உபத்திரவப்பட்ட சபை. பாடுபட்ட சபை.
*3. ஆலோசனை:*
"நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும்..." - தரித்திரரும் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு வித விளக்கங்கள் உண்டு.
அ) இந்த ஊர் செல்வ நிலையில் இருந்தும், இச் சபையில் உள்ள விசுவாசிகள் தரித்திர நிலையில் இருந்தார்கள் என்பது ஒரு விளக்கம்.
ஆ) ஆவிக்குரிய காரியங்களில் இவ்விசுவாசிகள் ஐசுவரியவான்களாய் இருந்தார்கள். ஆனால், பொருளாதார நிலையில் மிகவும் தரித்திரராய் இருந்தார்கள் என்பது மற்றொரு விளக்கம்.
கர்த்தருடைய கூட்டத்தார்: (2:9)
யூதரில் சிலர் கிறிஸ்துவை மறுதலித்து சுவிசேஷத்திற்கு எதிர்த்து நின்றார்கள். தேவனுடைய ஜனமாய் இருந்தும் கிறிஸ்துவை மறுதலித்தபடியால் சாத்தானின் கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர்.
10 நாள் உபத்திரவம்: (2 :10)
*ரோம சக்கரவர்த்திகள் 10 பேர் சபையை துன்பப்படுத்தினதை இது குறிக்கிறது என சிலர் கருதுகின்றனர்.*
1. கி.பி. 64 ல் - நீரோ ராயன்
2. கி.பி. 81 ல் - டொமிசியன்
3. கி.பி. 98 ல் - ட்ராஜன்
4. கி.பி. 180 ல் - மார்க்கஸ்
5. கி.பி. 193 ல் - செப்டிமியஸ்சிவிரஸ்
6. கி.பி. 235 ல் - மாக்சிமஸ்
7. கி.பி. 249 ல் - டீளியஸ்
8. கி.பி. 254 ல் - வெல்லேரியன்
9. கி.பி. 270 ல் - ஆரிலியன்
10. கி.பி. 284 ல் - டயோகிளிஸியன்
உபத்திரவங்களை முன் அறிவித்த தேவன் மரணபரியந்தம் உண்மையாய் இரு என்று ததரியம் கூறுகிறார்.
*4.ஜெயங்கொள்ளுகிறவனுக்குரிய வாக்குத்தத்தம்:*
ஜெயங்கொள்கிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. மரணபரியந்தம் உண்மையாய் இரு. அப்பொழுது ஜீவ கிரீடம் உனக்கு தருவேன்.
மரணத்திற்கு எதிரானது ஜீவன். வெற்றிக்கு அடையாளமானது கிரீடம். மரணத்தின்மீது கொண்ட வெற்றியை காட்டுவதே இந்த ஜீவ கிரீடம்.
முதல் மரணம் என்பது சரீரத்தில் இருந்து ஆத்மா பிரிந்து செல்லுதல்.
இரண்டாம் மரணம் என்பது ஆத்துமா தேவனை விட்டு நித்தியமாய் பிரிக்கப்படுதல்.
மரணமும் பாதாளமும் அக்கினி கடலிலே தள்ளப்பட்டன. ஜீவபுஸ்தகத்தில் பேர் எழுதப்படாதவனும், அக்கினி கடலிலே தள்ளப்பட்டான். இதுவே இரண்டாம் மரணம். வெளிப்படுத்தல்: 20:14,15).
http://nesarin.blogspot.in/2012/11/blog-post_2.html?m=1
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: *வெளிப்படுத்தின விசேஷத்தை ஒரு புரியாத புதர் போலவும், எதிர் காலத்தைப் பற்றி மட்டுமே சுட்டிக் காட்டும் ஒரு காலச்சக்கரம் போலவும், இல்லாததை சொல்லி பலரையும் மயங்க வைக்க உதவும் ஒரு தீர்க்கதரிசன நூலாகவும் பலரும் பலவிதமாக இன்று அதைப் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால், ஏனைய வேத நூல்களைப் போல இதுவும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியமான ஆத்மீக உணவளிக்கும் வேத சத்தியமாகக் கருதி எவரும் இதைப்படிக்க முன்வருவதில்லை. இந்நூலைப்பற்றி உங்களுடைய மனத்தில் ஏற்கனவே பதிந்துபோயிருக்கும் எண்ணங்களையெல்லாம் அகற்றிவைத்துவிட்டு திறந்த மனத்தோடு நாம் தரப்போகும் விளக்கத்தை ஆராய்ந்து பாருங்கள்.*
முதல் பாகம் குத்துவிளக்குத் தண்டங்களின் மத்தியில் இருக்கின்ற கிறிஸ்துவைப்பற்றி விளக்குகின்றன (1:1 – 3:22). ஏழு விளக்குத்தண்டங்களும் ஏழு சபைகளைக் குறிக்கின்றன. *இந்த ஏழு சபைகளும் கிறிஸ்துவின் முதல் வருகையில் இருந்து இரண்டாம் வருகைவரையும் இந்த உலகில் இருக்கப் போகின்ற சபைகளைக்குறிப்பதாக இருக்கின்றன. “இந்தமுறையில் விளக்கும்போது ஒவ்வொரு சபையும் ஒரு ‘மாதிரியாக’ (Type) இருக்கின்றது. இம்மாதிரிகள் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை விளக்காமல் பல்வேறு சபைகளில் வாழ்க்கையிலும் தொடர்ச்சியாக மாறி மாறி நிகழ்ந்துவரும் சம்பவங்களைக் குறிப்பதாக இருக்கின்றன.” என்று ஹென்றிக்சன் கூறுகிறார்* கிறிஸ்துவின் முதலாவது வருகை பற்றி 1:5ல் விளக்கப்படுகிறது. அவரது இரண்டாம் வருகைபற்றி 1:7 விளக்குகிறது.
- https://biblelamp.me/2012/03/19/வெளிப்படுத்தின-விசேஷம்
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: 8. சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
9. *உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.*
10. *நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்*
11. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: சிமிர்னா சபை மிகுந்த உபத்திரத்தின் வழியாக கடந்து போகும் சபையாக இருந்தது.
*சிமிர்னா சபையைப் ப்ற்றி ஆண்டவர் குறைகள் ஒன்றும் சொல்லப்படவில்லை மாறாக , அவர்கள் கடைசி காலத்தில் படப்போகிற பாடுகளைக்குறித்து சொல்லுகிறார். எவ்வளவும் பயப்படாதே என்கிறார்.*
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: விசுவாசிகளுக்கு உபத்திரவம் முடிவல்ல,
பிலிப்பியர் 1:29
[29] *ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.*
அப்போஸ்தலர் 14:22
[22]சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, *நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.*
எப்போது அவன் உண்மையாக ஜீவிக்க துவங்குகிறானோ அப்போதிலிருந்தே வீட்டிலும், வெளியிலும், சாத்தானுனிடத்திலிருமிருந்து உபத்திரவம் தொடர்கிறது.
*கர்த்தர் விசுவாசிகளிடம் எதிர்பார்ப்பது மரணபரியந்தம் உண்மையையே. உண்மையாயிருக்கிறவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்டிருப்பது ஜீவகிரீடம், உலகத்தின் பதவிகளைக் காட்டிலும் பரலோகத்தில் ஜீவ கீரீடத்தை பெற்றுக் கொள்வது மேலானது.*
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். 32. *நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.* Luke&Chapter=22:31:32
நாம் தேவனுடைய இராஜ்யத்தின் பொருட்டு, கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம், பாடுபடுகிறவர்களாய் இருந்தால்... ஆண்டவர் நம்மை ஆறுதலான வார்த்தைகளையும், ஒருவரும் எடுத்துக்கொள்ளாத பூரண சமாதானத்தை தருவது நிச்சயம்.
4. *தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்*
5. எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. II_Corinthians&Chapter=1:4-5
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: 4⃣ *மரணபரியந்தமும் நம்மிடமிருந்து அவருக்கு உண்மையாக இருக்க எதிர்பார்க்கும் ஆண்டவர்*
மத்தேயு 25:23
[23]அவனுடைய எஜமான் அவனை நோக்கி: *நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்,* அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
லூக்கா 16:10
[10] *கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்,* கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
1 தீமோத்தேயு 1:12
[12]என்னைப் பலப்படுத்துகிற *நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி,* இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: மரணம் எல்லோருக்கும் வரும். ஆனாலும் தேவ கிருபையால் இதற்கு தப்பியவர்கள் ஏனோக்கு, எலியா போன்ற குறிப்பிட்ட மிகக்குறைவானர்களே.
உண்மையாக வாழும் சபை விசுவாசிகளுக்கு முதல் மரணத்தைப் பற்றிக் கவலை இல்லை.
ஆனால் சேதப்படுத்தக் கூடிய இரண்டாம் மரணத்தைக் குறித்து சபை எச்சரிப்பாயிருக்க வேண்டும் என்பதே ஆண்டவர் விருப்பம்.
லூக்கா 12:4-5
[4]என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: *சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.*
[5]நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: *கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள்* என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: எபிரெயருக்கு எழுதின நிருபம் 2:18
[18] *ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.*
1 கொரிந்தியர் 10:13
[13]மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: 4⃣ *நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள்.* - விசுவாசிகளை சோதிக்கப்படும்படியாக சாத்தானை ...ஆண்டவர் அனுமதிக்க காரணமென்ன❓
இங்கு ஆண்டவர் கூறும் *10 நாள்* என்பதும், ஆண்டவருடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது, ஆண்டவரின் அனுமதியின்றி பிசாசின் ஒரு அதிகாரமும் உபத்திரமும் விசுவாசிகளை நெருங்க இயலாது.
யோவான் 10:28-29
[28]நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, *ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.*
[29]அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
[05/09 2:54 pm] Aa Levi Bensam Pastor VDM: *சிமிர்னா சபை*
*பாடுகள் ஏன் என்ற கேள்வியா*??
*ஊழியத்தில் தூஷனமா??*
*ஆவிக்குரிய அலசல்*
*தன்மைகள்*
1. கிரியைகள்
*2. உபத்திரவம்*
*3. பொருளாதார தரித்திரம்*
*4. மனிதரின் தூக்ஷனம்*
5. பாடுகள்
*6. பிசாசின் சோதனை*
7. காவல்
8. சிறைச்சாலை
*தேவை*
*1. மரணபரியந்தம் உண்மை*
*பரிசு*
*1. பரலோகம்*
*2. ஜீவ கீரீடம்*
*Revelation*
*1. பொருளாதார தரித்திரம் ஊழியனுக்கு அனுமதிக்கப்படுகிறது*
*2. இருப்பினும் ஊழியத்தின் உண்மை பரலோகத்தில் மிகுந்த பலனை கொண்டு வரும்*
*3.பாடுகள் நம் உண்மையான பரலோக வைப்பு நிதி*
*4. பிசாசின் சோதனை நமது சாதனை*
*கர்த்தர் அனைத்தும் காண்கிறார்*
Be faithful till the death...heaven is waiting with crown and rewards
*Written by Joseph Dhanaraj*
*0096899011423*
Post a Comment
0 Comments