Type Here to Get Search Results !

எபேசு சபையின் குறைகள் என்ன❓ நிறைகள் என்ன❓

 [21/08 9:50 am] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 21/08/2017* 🙏

1⃣ எபேசு சபையின் குறைகள் என்னநிறைகள் என்ன

2⃣ இன்றைய சபைகளோடு, எபேசு சபையை எப்படி ஒப்பிடலாம்

3⃣ எபேசு சபை, ஆதியில் கொண்டிருந்த அன்பை ஏன் விட்டதுகாரணங்கள் என்ன

4⃣ விளக்குத்தண்டை நீக்கிவிடுவேன் என்பது அபிஷேகத்தையா, பரிசுத்த ஆவியானவரையா அல்லது இரட்சிப்பையா

5⃣  நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் எப்படிப்பட்டதாக இருந்தது

*⛪ வெளிப்படுத்திய விஷேசம் ஏழு சபைகளுக்கு கூறப்பட்ட வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வரலாற்று, இறையியல், வேதாகம பார்வையில் தியானிக்கலாம். இன்றைக்கு எபேசு சபையை குறித்து தியானிக்கலாம்.⛪*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[21/08 10:03 am] Aa Prabhu Sasirekha VTT: நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்  யார் ?ayya

[21/08 10:04 am] Aa Johnshan VDM: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; To him that overcometh will I give to eat of the tree of life, which is in the midst of the paradise of God.

வெளிப்படுத்தின விசேஷம ் 2:7
Tm-En Bible

[21/08 10:07 am] Elango: 🙏 *இன்றைய வேத தியானம் - 21/08/2017* 🙏

1⃣ எபேசு சபையின் குறைகள் என்னநிறைகள் என்ன

2⃣ இன்றைய சபைகளோடு, எபேசு சபையை எப்படி ஒப்பிடலாம்

3⃣ எபேசு சபை, ஆதியில் கொண்டிருந்த அன்பை ஏன் விட்டதுகாரணங்கள் என்ன

4⃣ விளக்குத்தண்டை நீக்கிவிடுவேன் என்பது அபிஷேகத்தையா, பரிசுத்த ஆவியானவரையா அல்லது இரட்சிப்பையா

5⃣ நிக்கோலாய் மதஸ்தர் யார்இன்னும் இப்படிப்பட்டவர்கள் உண்டா❓  நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் எப்படிப்பட்டதாக இருந்தது

6⃣ தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்பதன் அர்த்தம் என்ன

*⛪ வெளிப்படுத்திய விஷேசம் ஏழு சபைகளுக்கு கூறப்பட்ட வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வரலாற்று, இறையியல், வேதாகம பார்வையில் தியானிக்கலாம். இன்றைக்கு எபேசு சபையை குறித்து தியானிக்கலாம்.⛪*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[21/08 10:18 am] Aa Levi Bensam Pastor VDM: அப்போஸ்தலர் 6:5-7
[5]இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், *நிக்கானோரையும்,* தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
[6]அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
[7]தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

[21/08 10:29 am] Aa Levi Bensam Pastor VDM: *எபேசு சபையை பார்க்கும் போது அப்போஸ்தலர் காலத்தில் உள்ள ஆதி அன்பின் சபை*

[21/08 10:35 am] Elango: பாஸ்டர், இதுல வருகிற நிக்கானோரையா இல்லாட்டி நிக்கொலாவையா ...

[21/08 10:39 am] Aa Levi Bensam Pastor VDM: 🙏🙏🙏அப்போஸ்தலர் 6:5
[5]இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய *நிக்கொலாவையும்* தெரிந்துகொண்டு,

[21/08 10:53 am] Aa Levi Bensam Pastor VDM: *உசியா ஆதியில் கிரியைகள் 👌 👌 👌 ஆனால் பலப்பட்ட போது* 👇👇👇👇👇👇👇👇👇👇2 நாளாகமம் 26:9-16
[9]உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
[10]அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
[11]உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.
[12]பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
[13]இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
[14]இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
[15]கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; *அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.*👇👇👇👇👇👇👇👇👇👇👇
[16] *அவன் பலப்பட்டபோது,🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂ தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து*, தூபபீடத்தின்மேல் தூபங்காட்

[21/08 11:11 am] Aa Jenkins VDM: இரகசிய வருகைக்கு ஆயத்தப்படும்படி முதல் நூற்றாண்டில் ஆசியாவிலிருந்த ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட தூதுகள்

      அப்போஸ்தலனாகிய யோவானுடைய காலத்தில் ஆசியாவிலிருந்த ஏழு சபைகளும் கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தப்படவேண்டும் என்ற நோக்கிலே அவைகளுக்கு தூதுகள் கொடுக்கப்பட்டன. இந்த தூதுகளை நாம் ஏழு விதமாக வகைப்படுத்தலாம். முதலாவது கர்த்தராகிய இயேசு தம்மை யாரென்று வெளிப்படுத்தி அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கும் தூதானது சபைகளின் நிறைகளை பாராட்டியும் சபையின் குறைகளை சுட்டிக்காட்டியும் அந்த நிலவரத்திலே நீடித்திருந்தால் அதற்குரிய எச்சரிப்பும் கொடுக்கப்படுவதுடன் தேவ ஆலோசனையும் கொடுக்கப்படுகிறது. பின்னர் தமது இரகசிய வருகையை குறித்தும் முடிவாக ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறப்போகும் நித்திய பிரதிபலனோடுகூட தூது முடிவடைகிறது. ஆசியாவிலிருந்த ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்பட்ட தூதுகள் கடைசி காலத்தில் வந்திருக்கும் சபையுங்கூட வருகைக்கு ஆயத்தப்பட துரிதப்படுத்துகிறது.

 எபேசு சபை
  
1.அறிமுகம்

கர்த்தராகிய இயேசு ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவராக தம்மை வெளிப்படுத்துகிறார்.

2.நிறைகள்

எபேசு சபையின் கிரியைகளும், பிரயாசமும், பொறுமையையும், பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததும், கிறிஸ்துவின்  நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதும், நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை  வெறுக்கிறதும் எபேசு சபையின் நிறைகளாக காணப்பட்டது.

3.குறைகள்

எபேசு சபையானது ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்ட குறை அதனிடத்தில் காணப்பட்டது.

4.எச்சரிக்கை

எபேசு சபை மனந்திரும்பாதபட்சத்தில் அதன் விளக்குத்தண்டு அதனிடத்தினின்று நீக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

5.அறிவுரை

எபேசு சபையானது இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்யா வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.

6.இரகசிய வருகை

நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வருவேன் என்று கர்த்தராகிய இயேசுவின் இரகசிய வருகையைக் குறித்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

7.பிரதிபலன்

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனி புசிக்கக் கொடுக்கப்படும்

[21/08 4:51 pm] Aa Jenkins VDM: ஏதேனின் விருட்சங்கள்
  
      திரித்துவ தேவன் மனுஷனை சிருஷ்டித்து ஏதேனுக்கு உள்ளே ஒரு தோட்டத்தை உருவாக்கி அவனை அங்கே வைத்தார். மனுஷன் எல்லா பகுதியிலும் பூரண வளர்ச்சியை அடையும்படி மூன்று விதமான விருட்சங்களை தேவன் வைத்திருந்தார்.

 1.சகல விருட்சங்கள் 

 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், ..பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்ஆதியாகமம் 9:2

    பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களின் கனியானது மனிதனுக்கு ஆகாரமாக கொடுக்கப்பட்டது. இதை அவன் புசித்து சரீரத்தில் வளர்ச்சியடையவேண்டியவனாயிருந்தான். இதன் மூலம் இரத்தத்திலிருந்த சரீர ஜீவனில் மனுஷன் வளர வேண்டும்.
  
2.ஜீவவிருட்சம்
  
தேவனாகிய கர்த்தர், ..தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், ..பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.” ஆதியாகமம் 9:2

   தோட்டத்தின் நடுவிலே காணப்பட்ட ஜீவ விருட்சத்தின் கனியை புசித்து மனுஷன் நித்திய ஜீவனிலே வளர வேண்டும். அதாவது ஆத்துமாவிலிருந்த நித்திய ஜீவனில் வளர வேண்டியவனாயிருந்தான்.
  
3.நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்
  
தேவனாகிய கர்த்தர், ..நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.” ஆதியாகமம் 9:2

     மனுஷன் தனது சரீரத்திலும் ஆத்துமாவிலும் வளர்ச்சியடைந்தபின் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசித்து அதன் மூலம் அவன் தேவனை அறிகிற அறிவிலும், தேவனுடைய திவ்ய சுபாவங்களிலும் வளர வேண்டும் என்பதே தேவனுடைய ஒழுங்காயிருந்தது. எனினும் குறிப்பிட்ட காலம் வரைக்கும் மனுஷன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க தேவன் அனுமதிக்கவில்லை.

      நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்றும் அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றும் தேவன் எச்சரித்தது, மனிதன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதில் ஒரு பூரணத்தை அடைவது வரையுள்ள ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மட்டுமே ஆகும். இந்த காலகட்டத்தில் மனிதன் தனது சரீரத்திலும் ஆத்துமாவிலும் வளர்ச்சியடைந்து, தேவ கட்டளைக்கு கீழ்ப்படிவதிலும் பூரணத்தை அடைந்திருப்பானாயின் அவன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியையும் புசிக்க அனுமதிக்கப்பட்டு தேவனை அறிகிற அறிவில் வளர்ந்திருப்பான். ஆனால் பரிதாபம்! மனுஷனோ காலத்துக்கு முன்பாகவே தேவனை விட்டு விலகி கனியை புசித்தனிமித்தம் ஆத்துமாவில் மரித்தான். அதாவது தேவனை விட்டு பிரிந்து நித்திய ஜீவனை இழந்தான்.

[21/08 5:14 pm] Aa Aaron 2 VTT: ஆதி22:18 யாராவது எனக்கு இதை விளக்கி சொல்ல முடியுமா?

[21/08 5:15 pm] Aa Jeyanti Pastor VDM: நிக்கொலாய் மதஸ்தருடைய கொள்கை என்பதுசபையிலுள்ள விசுவாசிகளை சாதாரண மக்கள் என்றும்குருக்களாகிய அவர்கள் மற்றவர்களைவிட உயர் பிரிவினர் அல்லது அதிகாரம் வகிக்கும் வர்க்கத்தினர் என்றும் பிரித்துக்காட்டுவதாகும்

[21/08 5:19 pm] Aa Joseph Dhanaraj VDM: "Who are the Nicolaitans mentioned in Revelation 2:6, 14-15?"

Answer: The exact origin of the Nicolaitans is unclear. Some Bible commentators believe they were a heretical sect who followed the teachings of Nicolas—whose name means “one who conquers the people”—who was possibly one of the deacons of the early church mentioned in Acts 6:5. It is possible that Nicolas became an apostate, denying the true faith and became part of a group holding "the doctrine of Balaam," who taught Israel "to sin by eating food sacrificed to idols and by committing sexual immorality." Clement of Alexandria says, “They abandoned themselves to pleasure like goats, leading a life of self-indulgence.” Their teaching perverted grace and replaced liberty with license

[21/08 5:20 pm] Aa Sam Jebadurai Pastor VDM: ஆதித் திருச்சபையில் கம்யூனிஸ்ட்கள் இல்லையே

[21/08 5:21 pm] Aa Jenkins VDM: வீதி, ஜீவவிருட்சம்,  ஜீவத்தண்ணீருள்ள நதி

நகரத்து வீதியின் மத்தியிலும் நதியின் இரு கரையிலும் பன்னிரண்டுவிதமான கனிகளைத் தரும்  ஜீவவிருட்சம்  இருந்தது. அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்;..” வெளி 22:2

    ஒரு வீதி ஒரு விருட்சம், ஒரு நதி  என இவை அனைத்தும் ஒருமையில் கூறப்பட்டுள்ளன. ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வீதியின் வழியாக ஓடுகிறது. ஜீவவிருட்சம் வீதியின் மத்தியிலும் நதியின் இரு கரைகளிலுமிருக்கிறது. இது விநோதமாக தோன்றுகிறதன்றோ? பொதுவாக மரங்கள் வீதிகளின் ஓரத்தில்தான் நாட்டப்பட்டிருக்கும். இங்கேயோ நகரத்து வீதியின் மத்தியில் நிற்கிறது! இரண்டாவதாக நதியின் இரு கரைகளிலும் ஜீவ விருட்சம் இருந்தது. இங்கு ஒருமையில் கூறப்பட்டுள்ள ஜீவ விருட்சம் ஒரே நேரத்தில் எவ்வாறு நதியின் இரு கரைகளிலும் நிற்க முடியும்? அப்படியானால் நதியானது வீதியின் நடுவே பாய்ந்து செல்லுகிறதா? மூன்றாவதாக ஜீவவிருட்சமானது  மாதந்தோறும் பன்னிரண்டுவிதமான கனிகளை கொடுக்கிறது. ஒரு மரமானது ஒரு மாதம் ஆப்பிள், அடுத்த மாதம் மாம்பழம், மறுமாதத்தில் வாழைப்பழம் அதற்கடுத்த மதம் மாதுளை... இவ்வாறாக வெவ்வேறான கனிகளைக் கொடுக்கக் கூடுமோ? இக்காட்சியை இயற்கையான ரீதியில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. இவற்றை நாம் ஆவிக்குரியபிரகாரமாகவே விளங்கிக்கொள்ள வேண்டும்.

    மேற்கூறப்பட்டுள்ள புதிர் போல தோன்றும் யாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டு. நகரத்தின் வீதி, விருட்சம், நதி இவை அனைத்தும் கிறிஸ்துவையே குறிக்கின்றன. ஆம் கிறிஸ்து சீயோனில் எங்கும் நிறைந்திருக்கிறார்.

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.” வெளி 2:7

    மனிதன் ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய கட்டளையைக் காத்துக்கொண்டது வரை அவன் ஜீவ விருட்சத்தை அனுபவிக்கக் கூடிய சிலாக்கியமுள்ளவானாயிருந்தான். ஜீவ விருட்சத்தின் கனியை புசிப்பதின் மூலம் அவன் ஜீவனில் வளரவேண்டியவனாயிருந்தான். ஆனால் அவன் தேவனுடைய கட்டளையை மீறின அந்நேரமே தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டு ஜீவ விருட்சத்துக்கு போகும் வழி அடைக்கப்பட்டு காவல் பண்ணப்பட்டது. எனினும் புதிய எருசலேமில் பிரவேசிக்கும் ஜெயங்கொண்ட பரிசுத்தவான்கள் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின்மேல் (வெளி 2:7) அதிகாரம் பெற்று (வெளி 22:14), அது மாதந்தோறும் கொடுக்கும்  பன்னிரண்டுவிதமான கனிகளை (வெளி 22:2) புசிப்பார்கள் (வெளி 2:7).

பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.” வெளி 22:1

   பரலோகத்தில் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிற பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதியிலிருந்து ஊற்றானது பாய்ந்து வருகிறது (வெளி 22:1). புதிய எருசலேமை தங்களுடைய வாசஸ்தலமாக்கிக் கொண்டவர்கள் இந்நதியிலிருந்து இலவசமாக எப்பொழுதும் பானம் பண்ணுவார்கள்.

[21/08 5:25 pm] Aa Joseph Dhanaraj VDM: the real problem with the Ephesians was that they had lost something of their understanding of God’s love for them. They had forgotten that they were beloved sons of God. They were a busy church but their works were based on their love for God, rather than His love for them.

[21/08 5:28 pm] Aa Joseph Dhanaraj VDM: In writing to the Ephesians Paul prayed that they would know the love of Christ (Eph 3:18). He did not pray that they would grow in their love for Christ. Some people think we are filled with the nature of God to the degree that we love God but that’s not what Paul said. He said we’re filled to the degree to which we know the love of Christ.

[21/08 5:30 pm] Aa Joseph Dhanaraj VDM: What’s the solution? Like the Galatians and the Laodiceans, they need to repent. That is, they need to change their way of thinking. They need to change their theology. They need to do what they did at first which was presumably trust in the goodness and love of God as revealed in Jesus Christ.

[21/08 5:31 pm] Aa Jeyanti Pastor VDM: Hope there was a great seperation between Beleivers n Leaders

[21/08 5:33 pm] Aa Joseph Dhanaraj VDM: Nicolaitans were not so called from any man, but from the Greek word Nicolah, meaning "let us eat," as they often encouraged each other to eat things offered to idols. Whichever theory is true, it is certain that the deeds of the Nicolaitans were an abomination to Christ

[21/08 6:31 pm] Aa Thomas Ayya Brunei VDM: PTL. Nicolation is the English form of three Greek words. .
Niko, Laos and Ton

[21/08 6:32 pm] Aa Thomas Ayya Brunei VDM: There is some connection to this..

[21/08 6:32 pm] Aa Charles Pastor VDM: By IMMANUEL CHRISTIAN CHURCH WMM, Veppankuppam

* வெளி 2:1-3:22 வரை உள்ள வசனங்கள் ஏழு சபைகளை பற்றி கூறுகிறது. இதில் 
கூறப்பட்டுள்ள ஏழு சபைகளும் யோவான் காலத்து சபைகளாக இருந்தாலும் 
இவைகளுக்கு எழுதப்பட்ட செய்திகள் இக்காலத்திலுள்ள சபைகளுக்கும் 
பொருந்தும்

* ஒவ்வொரு கபைக்கும் கிறிஸ்து கூறியதை ஆவியானவரின் அருளினால் யோவான் 
எழுதினார். எனவே கிறிஸ்து கூறுவது போன்று தொடங்கி "ஆவியானவர் 
சொல்லுகிறதை" என்று முடிவதை ஒவ்வொரு சபைக்கு எழுதிய கடிதத்திலும் 
காண்கிறோம்

* கிறிஸ்து ஆவியானவர் மூலம் பேசினார் என்று இதன் மூலம் அறிகிறோம்

ஏழு சபைகளையும் குறித்து தியானிக்க ஒரு சுருக்கு வழி:- 

நீங்கள் இந்த சபைகளை தியானிக்க விரும்பினால் ஒவ்வொரு சபையை குறிக்கும் 
வசனங்களை படித்து அதில் நான் கீழே கொடுக்கும் கேள்விகளை எழுப்பி 
அதற்க்கான பதிலை கண்டுபிடித்து தியானியுங்கள் மிகவும் ஆசீர்வாதமாக 
இருக்கும். (ஒரு குறிபேட்டில் எழுதி தியானியுங்கள்). 

எழுப்ப வேண்டிய கேள்விகள்

1. முதலில் சபையின் பெயரை எழுதுக. (.கா.எபேசு

2. அந்த சபையை குறித்த வசனங்களை எழுதுக. (.கா. எபேசு சபையை குறித்து 
கூறும் வசனங்கள் வெளி 2:1-7) 

3. அந்த பகுதியில் பேசுகிறவர் பற்றிய விளக்கம் என்ன

4. சபையின் கிரியைகள் என்ன

5. சபையின் நிலை என்ன

6. சபையின் குறைகள் என்ன

7. சபைக்கு கர்த்தரின் ஆலோசனைகள் என்ன

8. சபைக்கு கர்த்தர் தரும் பாராட்டுகள் என்ன

9. சபைக்கு கர்த்தர் தரும் எச்சரிப்புகள் என்ன

10. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன

மேலே உள்ள கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடித்த பிறகு நீங்கள் உங்களை 
பார்த்து கேட்க்க வேண்டிய கேள்விகள்

1. முதலில் சபையோடு பேசுகிற கர்த்தரை மனக்கண்ணால் கற்பனை செய்து பாருங்கள்

2. இந்த ஏழு சபைகளில் காணப்படும் நற்கிரியைகள் என் சபையில் அல்லது 
என்னிடத்தில் உண்டா? ஆம் என்றால் தேவனுக்கு நன்றி சொல்லி துதியுங்கள் 
இல்லை என்றால் அதற்காக ஜெபியுங்கள்

3. நான் இருக்கும் சபையின் நிலைமை என்ன? என்னுடைய நிலைமை என்ன? தேவன் 
பாராட்டும் நிலைமையா அல்லது கண்டிக்கும் நிலைமையா

4. இந்த ஏழு சபைகளில் உள்ள குறைகள் நம்மிடத்தில் உள்ளதா? ஆம் என்றால் 
மனந்திரும்பி ஜெபிப்போம்

5. தேவன் நமக்கு கொடுக்கும் ஆலோசனைகள் என்ன? அதை கவனத்தோடு பின்பற்றுவோம்

6. கர்த்தரின் எச்சரிப்புகள் என்ன? இதை அற்பமாக என்னாமல் கர்த்தர்த்தர் 
சொல்வதை செய்ய தீர்மானிப்போம்

7. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் பலனை நினைத்து துதிப்போம். நாமும் 
ஜெயம் கொள்ளுகிற வாழ்க்கையை வாழ கர்த்தரிடம் கிருபை கேட்டு ஜெபிப்போம்

மேலே கூறியபடி நீங்கள் எழுதி தியானித்து பாருங்கள் கர்த்தர் ஒரு 
வித்யாசமான அனுபவத்திற்க்குள் உங்களை அழைத்து செல்வார்.

[21/08 6:34 pm] Aa Charles Pastor VDM: வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 அறிமுகம் :-

[21/08 6:38 pm] Aa Charles Pastor VDM: *வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 எபேசு சபை:*

By IMMANUEL CHRISTIAN CHURCH WMM, Veppankuppam- April 05, 2016

"எபேசு சபையை குறித்து அறிவதற்க்கு முன்பு எபேசு பட்டணத்தை பற்றியும் 
எபேசு மக்களை பற்றியும் சபை எவ்வாறு நிறுவப்பட்டது என்பதை பற்றியும் 
சுருக்கமாக பார்க்கலாம்." 

"எபேசு பட்டனம் குறித்த சில வரலாற்று உண்மைகள்:-" 

எபேசு என்ற வார்த்தைக்கு விரும்பப்பட்ட/பிரியமான என்று பொருள். ரோம 
ஆட்சியின் போது மிகப்பெரிய துறைமுகப் பட்டணமாக இப்பட்டணம் விளங்கியது
இப்பட்டணத்திலிருந்து புறப்படும் மூன்று மாபெரும் சாலைகள் உலகின் 
கிழக்கு(பாபிலோன்), வடக்கு, தெற்கு ஆகிய திசைகளை இணைத்தன

எபேசு அக்காலங்களில் வாணிபத்தில் கோலோச்சி விளங்கியது.ஆசியாவின் மாயச் 
சந்தை என்றும் எபேசு அழைக்கப்பட்டது

*1) தியானாள் கோவில்:* 
———————————— 
எபேசுவில் இருந்த தியானாள் எனப்படும் காமதேவதையின் ஆலயம் உலகப் புகழ் 
பெற்றது. (அப்போ 19:24) இக்கோவில் முதலாம் நூற்றாண்டின் உலக அதிசயங்களில் 
ஒன்றாக கருதப்பட்டது

லத்தீன் மொழியில் தியானாள் 
(டயனா) என அழைக்கபடும் இது, கிரேக்க மொழியின் அர்த்தெமி என்று அழைக்கப்படுகிறது

அர்த்தெமி என்பது கிரேக்கர்களின் அழகிய வனதேவதை. எபெசுவின் தியானாள் 
அர்த்தேமியை போல அழகான தேவதை அல்ல, இது வெறும் கருப்பு உருவம் கொண்ட ஒரு 
கல் அவ்வளவே

தங்கள் தேவதை வானத்திலிருந்து விழுந்தது என அவர்கள் உரிமைப் 
பாராட்டினார்கள். (அப்போ 19:35) உண்மையில் அது பெண் உருவு போன்ற ஓர் 
எரிக் கல்லாக இருக்க வேண்டும் என்பது பலர் கருத்து

இந்த தேவதையின் சொரூபங்களும் தாயத்துகளும் உலக மேன்மையை தருவதாக 
கருதப்பட்டது. எபேசிய எழுத்துக்கள் எனப்படும் தாயத்துக்கள் பெருமளவில் 
விற்கப்பட்டன. இக்கோவிலில் தேவதாசி முறையும் வழக்கத்தில் இருந்தது

ஒழுக்ககேடுகளும், மூடநம்பிக்கைகளும் அங்கு கோலோச்சி இருந்தன
உலகத்திற்கு நீங்கள் வெளிச்சமாய் இருக்கிறீர்கள் என்று வாக்குரைத்த இயேசு 
கிறிஸ்துவைப் பின்பற்றிய பவுலடியார், இப்பட்டணத்தின் இருள் நீக்கும் 
வெளிச்சமாய் கிபி 55 ஆம் ஆண்டு சுடர் விடத் துவங்கினார்

பவுலடியாரின் ஊழியம் இக்கோவிலுக்கும் அதை சார்ந்த மாய சந்தைக்கும் பெரும் 
அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறது. (அப்போ 19:27). 

*2) எபெசுவின் நூலகம் :* 
——————————— 
எபெசுவில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருந்தது. இதில் மாய தந்திரங்களை 
குறித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காணப்பட்டன. (அப்போ 19:19) இங்கு 
ஏறத்தாழ 15,000 க்கும் மேற்பட்ட புஸ்தக சுருள்கள் இருந்தன
'ஆசியாவின் ஆளுநராகிய செல்சஸ் என்பரின் கட்டுப்பாட்டுக்குள் இந்நூலகம் இருந்தது

பின்னாளில் செல்சஸின் கல்லறை இந்நூலகத்தில் அடியில் வைக்கப்பட்டது
சுவிசேஷத்தின் ஒளி எபேசுவில் பிரகாசித்த போது
"மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் 
கொண்டுவந்து எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்" என்று அறிகிறோம் 
(அப்போ 19:19) 

*3) வியாபார சந்தை:* 
—————————— 
எபெசுவில் 360 அடியில் சதுர வடிவிலான பிரசித்தி பெற்ற வியாபார சந்தை 
ஒன்று இருந்தது. இங்கு தான் ஆக்கிலாள், ப்ரிஸ்கிலாள் ஆகியோரோடு இணைந்து 
பவுலடியார் கூடாரம் பண்ணுகிற தொழிலை செய்திருக்க வேண்டும்
இச்சந்தைக்கு வருவோர் போவோரிடம் பவுலடியார் சுவிசேஷத்தை அவசியம் 
பிரசங்கித்திருப்பார்

*4) அரங்கசாலை:* 
————————– 
25,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கசாலை ஒன்று எபெசுவின் 
மையத்தில் இருந்தது. ரோமர்களால் இது பராமரிக்கப்பட்டு வந்தது
மல்யுத்தங்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டது. பவுலடியாரின் 
ஊழியம் தியானாளின் கோவிலுக்கும், மதம் சார்ந்த வாணிபத்திற்கும் பெரும் 
பாதிப்பை ஏற்படுத்திய போது, கலகக்காரர்கள் இந்த அரங்க சாலையில் தான் கூடி 
வந்தார்கள். (அப்போ 19:29) 

இந்த அரங்க சாலையில் "எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி 
நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்" (அப்போ 
19:29) 

*5) எபேசுவில் திருப்பணி:* 
——————————— 
விக்கிரக ஆராதனையும், பாவமும் நிறைந்த இந்தப் புறஜாதி பட்டணத்தில் கிபி 
55ல் அப்போஸ்தலனாகிய பவுல் முதல் சபையை ஸ்தாபித்தார். கிட்டத்தட்ட மூன்று 
ஆண்டுகள் அவர் அங்கே ஊழியம் செய்ததை அப்போஸ்தலருடைய நடபடிகள் 18,19 
அதிகாரங்கள் அறிவிக்கின்றன

யோவான், தீமத்தேயு முதலான பரிசுத்தவான்கள் சபையின் கண்காணிகளாக 
செயல்பட்டு வந்தார்கள். யோவானுடைய கல்லறை இந்தப் பட்டணத்தில் இன்றும் 
இருக்கிறது

எபேசு பட்டணத்தில் உள்ள சபைக்கு பவுலடியார் எழுதிய நிரூபம் 
வேதபுத்தகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது
பாவ இருளிலும், மூட நம்பிக்கைகளிலும் உழன்று கொண்டிருந்த எபேசு 
பட்டணத்தில் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசித்த போது பரிசுத்தர் கூட்டம் 
நடுவில் வாசம் செய்யும் கிறிஸ்து எபேசு சபையில் உலாவி வருவது தேவனுடைய 
கிருபையின் வெளிப்பாடு. (வெளி 2:1)

[21/08 6:45 pm] Aa Charles Pastor VDM: *வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 வசனங்கள் 4-5*

By IMMANUEL CHRISTIAN CHURCH WMM, Veppankuppam- 

4. ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் 
எனக்குக் குறை உண்டு

5. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து
மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் 
சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் 
விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்

*விளக்கம்:-* 

எபேசு சபையில் எத்தனையோ சிறப்புகள் இருந்த போதிலும் அவர்கள் ஆதியில் 
கொண்டிருந்த அன்பை விட்டு விலகிவிட்டனர்

இரட்சிக்கப்பட்டவுடன், ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவுடன், அநேகர் ஆவலோடு 
வேத தியானம், ஜெபம், ஐக்கியம், ஆத்தும ஆதாயம் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்

காலம் செல்லும் போது குளிர்ந்து போவார்கள். இப்படிப்பட்டவர்களை கர்த்தர் 
கடிந்து கொள்கிறார்

நீர் ஆதியில் அன்பு கொண்டிருந்தீரா

அதில் குறைவு ஏற்பட்டுள்ளதா

இயேசுவின் மீது அன்பு செலுத்த நீர் என்ன செய்து வருகிறீர்

கர்த்தரின் மீதுள்ள அன்பினால் ஏவப்பட்டு இன்னும் என்ன செய்யலாம்?


6. நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்
இது உன்னிடத்திலுண்டு

நிக்கொலா மதஸ்தர் என்பவர்கள் யார்? வாங்க ஒரு அலசு அலசுவோம்

வெளி2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப் பற்றி 
சொல்லப்பட்டுள்ளது

எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய் 
மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம்

யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்குள் யார் இவர்கள் என்று 
நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில்இருந்தனர் என்று 
யோவான் சொல்லவில்லை

அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்

அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை 
சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப்6:5) இரத்த 
சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபதுபேர்களில் ஒருவன்

ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன் தான் இந்த 
நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து 
போனதையும் காண்கிறோம். இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான் 
என்று குழப்பும்படி சொல்கின்றனர்

இவர் ஸ்தேவானைப் போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர் 
என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு

அப்2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு 
அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை 
வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை

Nicolaitan என்பதில் Nikan laos : இதற்கு conquer (வெற்றி பெறு
மற்றும் people (ஜனங்கள்) என்று பொருள் என்று கிரேக்க சொல்-வரலாற்றில் 
(etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில் 
சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு (clergy) சாதமாக 
மற்றவர்களை அமுக்கி/மட்டம்தட்டிவைத்ததாகவும் விவாதம் உள்ளது

இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில் 
இப்படிப்பட்ட ஒருசெய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து 
வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன

பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு 
வசனங்களும் இல்லை
பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர் 
என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை 
பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு"அப்படியே நிக்கொலாய் என்னும் 
கூட்டத்தாரை" (வெளி2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம்

யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வது போல் நிகொலா என்ற வார்த்தையானது 
பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம். (எப்படி 
மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும் அர்த்தம் ஒன்றுபோல
இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும் இந்த வசனத்துக்கும் 
பொருந்துகிறது என்பது ஒருபார்வை

எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப் பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும் 
ஏதோ சம்பந்தம் உள்ளது

யோவான் வெளி2ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்

1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளைபுசிப்பது

2 - வேசித்தனம்

ஆதிசபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நிய தேவர்களின் வழிபாட்டுடன் 
சற்றே அநுசரித்துபோன ஜனங்களாகும். அப்15:20, 29 மற்றும் 1 கொரி8--10 
ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். பவுல் மற்றும் யோவான் 
ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர்
பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரக 
கோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்

பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான் ஒன்று. இதை வெளி2:20,22-லும் 
யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது

பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால் 
வெளி2:20ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள்அல்ல

இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள்

இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு 
படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம்

மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை1 கொரி5:1; 
6:12-20 மற்றும் எபி13:4ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்


பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக 
இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள்

பழைய ஏற்பாட்டில் தேவனை விட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன் 
வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று). 

பேயோரின் ( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் எண்25:1-18) காணப்பட்ட 
பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை 
அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை 
புசிக்கும்ப்படியும் செய்தனர்

இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்
இவைகளைபார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய 
ஜனங்களைஅன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம் 
கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise) என்று புகுத்திய 
கூட்டத்தாரக காணமுடிகிறது

வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு
மற்ற சடங்குசம் பிரதாயங்களில் பங்குகொண்டால் தவறல்ல என்றும், தேசிய 
சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும் 
போதித்திருக்கின்றனர்

இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம் 
இயேசு சொல்லும் போது அந்த சபையின்மேல் பிரியப்படாமல் அதின்மேல் 
வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து சொல்லுகிறார்

இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே தான் 
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு
இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர்

இவர்கள் வேத புரட்டர்களாயிருந்து, இதுசெய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள்

அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக் கொள்ளமாட்டார். அவைகள் நியாயத் 
தீர்ப்பினை அடையும்

இன்னும் சிலர்

நிக்கொலா மதஸ்தர் அப் 6:5ல் கூறியிருக்கிற நிக்கொலாவின் கொள்கையின் 
அடிப்படையில் இயங்கிய ஒரு குழுவினர் என்றும் எபேசுவுக்கு வடமேற்கில் 80 
கி.மீ தொலைவில் இருந்த நிக்கொலாஸ் என்ற கடற்கரை பட்டணத்தை சார்ந்த ஒரு 
குழுவினர் என்றும் கருதுகிறார்கள்

நிக்கொலா மதஸ்தரின் கொள்கை:- 

"கிருபைக்குள் இருக்கிறவர்கள் என்ன பாவம் செய்தாலும் கிருபையை 
இழக்கமாட்டார்கள்" என்ற தவறான கொள்கை உடையவர்களாக இருந்தார்கள்

அதாவது, ஒரு முறை நாம் மனம்திரும்பி இயேசுவின் கிருபையால் பாவ மண்ணிப்பு 
பெற்று கொண்டால் அதன் பிறகு செய்யும் எந்த பாவத்தையும் அந்த கிருபை 
மூடிவிடும் என்பதே

நமக்கு கிருபை இருப்பதால் எவ்வளவு பாவம் செய்தாலும் நாம் அந்த கிருபையால் 
மன்னிக்கபடுவோம் என்பதே ஆகும்

இந்த நிக்கொலா மதஸ்தர் இன்றும் நம் தமிழ்நாட்டிலும் உலா வருகிறார்கள் 
இவர்கள் கூறுவது "ஒருவன் ஒரு முறை இரட்சிக்கப்பட்டு விட்டால் அவன் 
எவ்வளவு பாவம் செய்தாலும் நரகம் போவதில்லை என்பதே ஆகும்". 

இதை குறித்த வீடியோ க்ளிப் ஐ நம் சகோதர்கள் நம் ஹோலி ஃபிரன்ஸ் குரூபில் 
போட்டிருக்கிறார்கள் நாம் அனைவரும் பார்த்திருபோம் எனவே இந்த கடைசி 
காலத்தில் விழித்திருப்போம்.... 
தேவன் வெறுப்பதை வெறுப்போம்

7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற 
ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது

விளக்கம்:- 

தேவனுடைய பரதீசு என்பது புதிய எருசலேமிலுள்ள சிறந்த தோட்டமாகும்

இதன் நடுவில் ஜீவவிருட்சம் உள்ளது (வெளி 22:14). 

வெளி 
22 அதிகாரம் 

14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் 
நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் 
பாக்கியவான்கள்

பரதீசு என்ற சொல் தோட்டம் என்ற பொருள் கொண்டதாகும்

பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழியாக்கத்தில் ஏதேன் தோட்டத்திற்கும் இந்த 
சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது

ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு மட்டுமே ஆசீர்வாதங்கள் கூறப்பட்டுள்ளது

ஜெயம் கொள்ளுகிறவன் யார்

இயேசுவை விசுவாசித்து இறுதிவரை அவரை பின்பற்றி வாழ்கிறவனே ஜெயம் கொள்கிறவன் ஆவான்.

[21/08 7:11 pm] Aa Thomas Ayya Brunei VDM: “Nicolaitanism” is simply a corruption of delegated authority within the Church (or a local church), exercising this authority after a forbidden pattern — after the pattern set forth by those in the world.

[21/08 7:12 pm] Aa Thomas Ayya Brunei VDM: This pattern was evident during the time of Jesus, during Apostolic days and even today...

[21/08 7:52 pm] Aa Justin VTT: எபேசு சபை அது தன்னுடைய இருதயக்கடினத்தினிமித்தம் ஆதி அன்பை விட்டிருக்கும் என நிதானிக்கலாம். உதாரணம் மத்தேயு19:8 அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடாலமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார், 👉ஆதிமுதலாய்👈 அப்படி இருக்கவில்லை.....
..
ஆதியில் தேவகட்டளைகளை  அப்படியே ஏற்று கீழ்படிந்த நாமும் அல்லது இக்கால சபைகளும் நாளடைவில் நம் இருதயக்கடினத்தினிமித்தம் தேவ கட்டளைகளை நமக்கு சாதகமாக வளைத்து கொள்கிறோம்., இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற ஜாதிகளை போல தங்களுக்கும் ஒரு ராஜாவை ஏற்படுத்தி கொண்ட கடினத்தன்மை போல, ஆதியிலிருந்த அன்பு என்ன,எவைகள் என்பனபற்றியும் உற்று கவனித்தல் நலம்


[21/08 7:54 pm] Aa Rooban Pastor VDM: தேவனுக்கே மகிமை உண்டாவதாக அய்யா விளக்கங்கள் மிகவும் அருமை ஆனால் நிக்கோலாய்  என்பவரை குறித்து தாங்கள் கொடுத்த கருத்து அனேகர் கொடுத்த கருத்துகளில் ஒரு சாரார் கொடுத்த கருத்தாகும் வெளிப்படுத்தின விசேஷத்தை பொருத்தவரையில் அனேகர் அநேக விதமான கருத்துகளை கொடுக்கிறார்கள் வெளிப்படுத்தின விசேஷ விளக்கவுரைகள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளது முக்கால சபைப் பிதாக்களாகிய ஐரேனியஸ், ஹிப்போலிட்டஸ், எபிபானியஸ்(epiphanius),தியோடரெட் ஆகியோர் வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிக்கோலை மதஸ்தர் போதனைகளை கொண்டு வந்தது அப்போஸ்தலர் நடபடிகளில் இடம்பெறும் பந்திவிசாரிப்புக் செய்கிற ஏழு பேரில் ஒருவனாக இருந்த நிக்கோலா தான் என்று உறுதிப்படுத்துகிறார்கள் ஆனாலும் இவையும் பல கருத்துக்களில் ஒரு கருத்து இதைக்குறித்து இன்னும் அனேகர் அனேக விளக்கங்களை கொடுக்கின்றனர் இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் தங்களுடைய பதிவு மிகவும் அருமை நன்றி ஐயா 😇👍👋

[21/08 7:59 pm] Jeyaseelan bro VTT: 
எபேசு சபை என்பதற்கு "விரும்பப்படத்தக்கது" என்று பொருள். இப்பட்டணத்தில்தான் பரிசுத்த பவுல் ஊழியம் செய்து சபையை ஸ்தாபித்தார். இப்பட்டணத்தில் அநேகர் இயேசுவை ஏற்றுக் கொண்டு பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றனர்.(அப்போஸ்தலர்: 19:5,6). இச்சபையில் அற்புதங்கள் நடைபெற்றன. (அப்போஸ்தலர்: 19:11,12). மாயவித்தைக்காரர் அநேகர் தங்கள் புத்தகத்தை கொண்டு வந்து எரித்தனர். அதன் மதிப்பு அந்நாட்களில் 50,000 வெள்ளிக்காசாக மதிப்பிடப்பட்டது. 

யோவான் அப்போஸ்தலன் தனது கடைசிக் காலத்தில் எபேசுவில் தங்கி இருந்தார். இயேசுவின் தாயும் அவரிடமிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இச்சபைக்கு, தீமோத்தேயு கண்காணிப்பாக இருந்தார் என்றும், தியானாள் கோவிலில் நடைபெற்ற பெரிய பண்டிகை நாளில் அதற்கு விரோதமாய் தீமோத்தேயு பேசினபடியால் அவனை கொன்று போட்டார்கள் என்று பாரம்பரியம் கூறுகிறது.

எபேசு பட்டணம்

சின்ன ஆசியாவில் ஒரு முக்கியமான கடற்கரைப் பட்டணமாய் இருந்தது. இது சிமிர்னாவின் தென் கிழக்கில் 40 மைல் தொலைவில் இருந்தது. இப் பட்டணத்தின் அருகில் 'கெய்ஸ்டர்' என்ற நதி இருந்தபடியினால் வியாபாரத்துக்கு உதவியாக இருந்தது. மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் இப்பட்டணத்தின் வழியாக சென்றது. கிழக்கத்திய நாடுகளில் இருந்தும்  சின்ன ஆசியாவிலிருந்தும் இந்த நெடுஞ்சாலைகளின் வழியாய் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டிருந்தது.

ரோம சாம்ராஜ்யத்திலிருந்த  இராஜ்யங்களில் ஒன்றுக்கு எபேசு தலைமைப் பட்டணமாக இருந்தது. அப் பிரதேசக் கவர்னர் இப் பட்டணத்தில் வசித்து வந்தார். எனவே, இது அரசியல் சம்பந்தப்பட்ட  விஷயங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது. ஆதிகாலத்தில் 7 உலக அதிசயங்களில் ஒன்றான 'தியானா'ளின் கோவில் இப் பட்டணத்தில் இருந்தது.(அப்போஸ்தலர்: 19:28,29).

தியானாவின் கோவில் 425 அடி நீளம், 220 அடி அகலம், 60 அடி உயரம் உள்ளதாய் இருந்தது. இக்கோவில் உள்ளே 127 தூண்கள் இருந்தது. இவை பளிங்கு கற்களினால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தூண்களும் ஒவ்வொரு அரசனால் வெகுமதியாய் கொடுக்கப்பட்டது.

உள்ளே மகா பெரிய வெல்வெட் திரையும்,  அதற்குள் மறைக்கப்பட்ட தியானாளின் சிலையும் இருந்தது. ஆர்டிமிஸ் தேவதையின் சிலையும் இருந்தது. இச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்று அதன் பக்தர்களினால் நம்பப்படுகிறது.

இக் கோவிலில் ஒழுக்கக்கேடான காரியங்கள் அனுதினமும் நடைபெற்றன. இக்கோவில் குற்றவாளிகளுக்கு புகலிடமாக விளங்கிற்று. குற்றம் செய்த ஒருவன் அதிகாரிகளால் பிடிபடுமுன் இக் கோவிலுக்குள் போய் ஒளித்துக் கொண்டால் அவனைப் பிடிக்க அதிகாரம் இல்லை. எனவே, இக் கோவிலினுள் ஒழுக்கங்கெட்டவர்களும் குற்றவாளிகளுமே நிறைந்திருந்தனர்.

எபேசுவில் இன்றைய நிலை:

14 ஆம் நூற்றாண்டில் துருக்கியரும் மங்கோலியரும் தொடர்ந்து இப்பட்டணத்தை தாக்கினர். எனவே, தியானாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. அந்நாளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் இது அழிந்ததாய் எழுதி வைத்துள்ளனர். ஆங்காங்கே இடிந்து கிடக்கும் மதில்களையும், அஸ்திபாரத்தையும் இன்றும் நாம் காணலாம்.


எபேசு சபைக்கு செய்தி: (வெளிப்படுத்தல்: 2:1-7)

1. கிறிஸ்துவின் வெளிப்பாடு:

 ஏழு நட்சத்திரங்களை தமது கரத்தில் ஏந்திக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தேவனுடைய வலது கரத்தினால் காக்கப்படுகின்றனர். சபைகளுக்கு மத்தியில் கிறிஸ்து தமது ஆவியானவர் மூலம் அசைவாடிக் கொண்டிருக்கிறார். ஆவியானவரே சபையைக் கண்காணிக்கிறார். ஒரு தோட்டக்காரனுக்கு தன் தோட்டத்தில் உலவுகிறதற்கு எவ்வளவு சந்தோஷமோ, அது போல கிறிஸ்துவும் சபைக்கு மத்தியில் உலவுகிறதற்கு பிரியம் கொள்கிறார்.

2.சபையின் நற்குணங்கள்:  (வெளிப்படுத்தல்: 2:2,3)

இச் சபையில் பல நற்குணங்கள் இருந்தன. அவைகளை குறித்து கிறிஸ்து மெச்சிக் கொள்கிறார். இயேசு நமது நற்கிரியைகளை கவனிக்கிறார். அதற்கு பலனளிக்கிறார்.

3. தீமையான குணங்கள்: (வெளிப்படுத்தல்: 2:4-5)

ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டது. நற்குணங்களைப் புகழ்வதுபோல தீமைகளைக் கர்த்தர் கண்டிக்கிறார். பல நற்குணங்கள் இருப்பதினால் தீய குணமே இல்லை என்பது பொருளல்ல. பல நற்குணங்கள் இருப்பதனால் தீய குணங்களை பாரா முகமாக இருந்து விடுவார் என்று எண்ணி விடக் கூடாது. கர்த்தர் நீதியுள்ளவர்.

இச்சபையில் பெரிய பாவத்தை தேவன் காணவில்லை. அன்பே இல்லை என்று கூறவில்லை. ஆதியிலே கொண்டிருந்த அதே அன்பு இப்போது குறைந்து போனதே இச்சபையின் குறைவு. நாம் தீமை செய்யாமல் இருந்தாலும் கர்த்தரில் அன்பு கூர வேண்டிய அளவிற்கு அன்பு கூராமலிருப்பது குறையாகும்.

4. எச்சரிப்பு: (வெளிப்படுத்தல்: 2:5,6).

"இன்ன நிலையிலிருந்து விழுந்தாய் என்பதை நினை." நம்மிடமுள்ள நற்குணங்களை நினைத்துக் கொண்டிருப்பதனால் பிரயோஜனமில்லை. நமது பெலவீனத்தை, குறையை உணர்ந்து நமது ஆவிக்குரிய ஜீவிய நிலையை நன்கு உணர வேண்டும்.

மனந்திரும்பு: 

 குறையை உணர்ந்தால் மட்டும் போதாது. அதினின்று மனம் திரும்ப வேண்டும். அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். (1நாளாகமம்: 7:14).

ஆதியில் செய்த கிரியைகளை செய்: 

மனம் திரும்பினால் மட்டும் போதாது. ஆதியில் செய்த கிரியைகளை செய்ய வேண்டும். அன்பு கிரியையில் வெளிப்பட வேண்டும்.  

விளக்குத் தண்டை நீக்கி விடுதல்:

 மனம் திரும்பாவிடில் என்ன சம்பவிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆதி அன்பை விட்டு விட்டபடியால் (எரேமியா: 2:2 - பக்தி, நேசம்) உடனே தண்டனை கொடுக்கப்படவில்லை. மனம் திரும்ப கர்த்தர் சந்தர்ப்பம் கொடுக்கிறார். இது கர்த்தருடைய கிருபையைக் காட்டுகிறது. விளக்குத் தண்டு கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் காட்டுகிறது. தேவ மகிமையைக் குறிக்கிறது. இது எடுபட்டால் சபையில் இருள் வந்து விடும்.

காதுள்ளவன் கேட்கக்கடவன்:

கிறிஸ்து ஒருவனையும் கட்டாயப்படுத்துவது இல்லை. 'கேட்க மனதானால் கேள்' என்பதே பொருள்.

5. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தங்கள்: 

கிறிஸ்தவ ஜீவியம் ஜெயம் கொள்ளுகிற ஜீவியம். பாவத்தையும், மாம்சத்தையும், பிசாசையும் ஜெயித்தவர்களுக்கு பரலோக வாக்குத்தத்தம். 1யோவான்:5:4 - ல் "தேவனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்." வெற்றி பெற்றவர்களுக்கு விருது கொடுப்பது அவசியம்.

ஜீவ விருட்சத்தின் கனி:

ஆதியாகமம்: 2:9 - ல் ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஜீவ விருட்சம் இருந்ததாகப் பார்க்கிறோம். மனிதன் பாவம் செய்தபடியினால் ஜீவ விருட்சத்தின் மீதுள்ள அதிகாரத்தை இழந்தான். இங்கே ஜெயம் கொள்ளுகிறவனுக்கு இந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுக்கிறார். அதை புசித்து என்றும் உயிரோடிருக்கும்படி அப்படிச் செய்தார்.

எபேசு சபை முதல் நூற்றாண்டு அப்போஸ்தல சபைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. யோவான் இதை எழுதும்போது முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் மறைந்து இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் வாழ்ந்த காலம். அப்போஸ்தலர் காலத்திலிருந்த ஆர்வமும், உற்சாகமும் குறைய ஆரம்பித்தது. எனவே, ஆதியில் இருந்த அன்பை விட்டாய் என்று ஆண்டவர் எச்சரிக்கிறார்.

நிக்கொலாய் மதஸ்தர்: (வெளிப்படுத்தல்: 2:6)

ரோம சக்கரவர்த்திகளால் ஏற்பட்ட உபத்திரவங்களை சகிக்கமாட்டாமல் சில கிறிஸ்தவர்கள்  உலகத்தோடு ஒத்துப்போக விரும்பினர். விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை புசிப்பதினாலும், புறஜாதியாரின் பண்டிகைகளில் கலந்து கொள்வதினாலும் அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்வதினாலும் தவறில்லை என்று போதித்தனர். இவர்களுக்கு நிக்கொலாய் மதத்தினர் என்று பெயர்.

Read more: http://nesarin.blogspot.com/2012/09/blog-post_29.html#ixzz4riWJnJer

Post a Comment

0 Comments