Type Here to Get Search Results !

சர்தை சபையைப் பற்றி வேதம் கூறுகிறது என்ன?

 [30/08 10:40 pm] Aa uma Sister VDM: ⛪ *இன்றைய வேத தியானம் - 25/08/2017* ⛪

1⃣ *சர்தை என்பதன் அர்த்தம் என்ன❓*சர்தை சபையைப் பற்றி ஆண்டவர் கூறும் குறைகள், நிறைகள் என்னென்ன

2⃣ இன்றைய சபைகளோடு, சர்தை சபையை எப்படி ஒப்பிடலாம்

3⃣ *உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் Rev. 3:1* என்பதன் அர்த்தம் என்ன

4⃣ நிறைவற்ற கிரியைகள் என்பது எவைகள் ❓ Rev. 3:2

5⃣ கேட்டுப் பெற்றுக்கொண்டது எவைகளை❓ Rev. 3:3

6⃣ இரட்சிப்பை பெற்ற ஒருவருடைய பெயர் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போட படுமாஎப்பொழுது ஒருவருடைய பெயர் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடப்படும்

வெளிப்படுத்திய விஷேசம் ஏழு சபைகளுக்கு கூறப்பட்ட வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வரலாற்று, இறையியல், வேதாகம பார்வையில் தியானிக்கலாம்.
 *இன்றைக்கு 5 வது சபையான சர்தையை குறித்து தியானிக்கலாம்.⛪*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[30/08 10:40 pm] Aa uma Sister VDM: 💥 சர்தை சபை 💥

வெளிப்படுத்தல்: 3:1-6

(கி.பி.1517 - மறுமலர்ச்சிக் கால சபை)

'சர்தை'  என்றால் மீதியாயிருப்பது, தப்பிக் கொள்வது, சந்தோஷத்தின் அதிபதி என்று பொருள்.

*சர்தை பட்டணம்:*

இது தியத்தீராவுக்கு தென் கிழக்கில் சுமார் 30 மைல் தூரத்திலுள்ளது. இப்பட்டணத்தின் வழியாக 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் சென்றன. இது நல்ல வியாபார ஸ்தலமாயிருந்தது. முற்காலத்தில் லிதியா ராஜ்யத்திற்கு இது தலைநகராக இருந்தது. சுமார் கி.மு.20 ல் பயங்கர நில நடுக்கத்தால் இப்பட்டணம் அழிந்தது. அந்நாட்களில் அரசாண்ட திபேரியுராயன் 5 வருட வரியை வசுலியாமல் இப்பட்டணத்தை, அப்பணத்தைக் கொண்டு கட்டினான். இப்போது சர்தை முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. ஒருசில குடிசைகளே இவ்விடத்திலிருக்கிறது. இப்போது இவ்விடத்தில் ஒரு கிறிஸ்தவர் கூட இல்லை.

*1. இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:*

ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் - கிறிஸ்து சபையின் பாதுகாவலர் என்பதைக் குறிக்கிறது. சபை கிறிஸ்துவின் பரிபூரண ஆவியினால் நிரப்பப்பட்டு அவருடைய கரத்தால் நடத்தப்பட வேண்டிய ஒன்று என்று வெளிப்படுத்துகிறார்.

*2. நற்குணம்:*

அதிகமாய் ஒன்றும் சொல்லப்படவில்லை. "தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலர் சர்தை சபையிலும் உண்டு. அநேகர் விழுந்துபோன சமயத்திலும் சிலர் தங்களை பரிசுத்தமாகக் காத்துக் கொண்டனர்.

*3. தீய குணம்:*

ஆவிக்குரிய வாழ்க்கையின் செத்த நிலை - பெரிய சபை கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட விசுவாசிகள் என்றும் பெயர் பெற்றும், ஆவிக்குரிய நிலையில்உயிரற்றுக் காணப்பட்டனர். திருப்தி அற்ற நிலைகள் காணப்பட்டன. தானியேல்: 5:25 - 28 ல் சொல்லப்பட்டதுபோல.

*4. எச்சரிப்பு:* 

"நீ விழித்துக் கொண்டு சாகிறதற்கு ஏதுவானவைகளை ஸ்திரப்படுத்து". பிறரை ஸ்திரப்படுத்துமுன் தான் உயிர் மீட்சி அடைய வேண்டியது அவசியமாயிற்று. தேவனிடத்தில் பெற்ற கிரியைகளை பயன்படுத்தி மனந் திரும்பாவிட்டால் சீக்கிரத்தில் அழிவு வரும்.

இப்பட்டணம் அழிந்ததற்கு இதனுடைய அஜாக்கிரதையே காரணம். சர்தையின் அரசனாய் இருந்த கிரீசஸ், பெர்சிய அரசனான கோரேசுடன் போரிட்டான்சர்தை பட்டணம் செங்குத்தான மலையின்மேல் கட்டப்பட்டிருந்தது. எதிரிகள் அதை எளிதில் அடையக் கூடாத நிலையிலிருந்தது. கோரேஸ் 14 நாட்கள் முற்றிக்கை போட்டும் அதைப் பிடிக்கமுடியவில்லை. கோட்டைக்குள் செல்லும் வழியை கண்டுபிடிப்பவனுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தான். சர்தையின் வீரன் ஒருவன் தவறி விழுந்த தன் தலைச்சீராவை எடுக்க பாறைக்கு இடையில் இறங்குவதை பெர்சிய வீரன் ஒருவன் கண்டான். பின்பு எதிரிகள் அப்பாறை வெடிப்பின் வழியாக கோட்டைக்குள் சென்று பிடித்தனர். கி.மு. 549 ல் இது நடந்தது. கி.மு.218 லும் இதே போன்று சர்தையின் விழிப்பற்ற தன்மையால் பெரிய அந்தியோக்கஸ் கைப்பற்றினான்.

*ஜெயங் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:*

வெண் வஸ்திரம் - வெளிப்படுத்தல்: 19:8 - ன் படி இது நீதியின் வஸ்திரம். ஜீவ புஸ்தகத்தில் இவன் பெயர் நிலைத்திருக்கும். அதாவது, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளுவான். பிதாவுக்கும் தூதர்களுக்கும் முன்பாகவும் அவனுடைய நாமத்தை கிறிஸ்து அறிக்கையிடுவார். இவ்வுலகத்தில் கிறிஸ்துவின் நாமத்தை ததரியமாய் மற்றவர்களுக்கு அறிக்கையிடுகிறவர்கள் - இவர்களைப் பற்றி கிறிஸ்துவும் ஒரு நாளில் அறிக்கையிடுவார்.


http://nesarin.blogspot.in/2012/11/blog-post_7457.html?m=1

[30/08 10:41 pm] Aa uma Sister VDM: The Church of Christ is supposedly a conquering Church in many ways..
Romans 8:37

[30/08 10:41 pm] Aa uma Sister VDM: The promises that are mentioned to the 7 churches are for the Church of Christ

[30/08 10:41 pm] Aa uma Sister VDM: If we link each promise of overcoming to that particular church.... We may have many different interpretations..

[30/08 10:42 pm] Aa uma Sister VDM: Which may not what the Holy Spirit intended..

[30/08 10:42 pm] Aa uma Sister VDM: The 7 Churches are historical Church eras..

[30/08 10:42 pm] Aa uma Sister VDM: Certainly we have a lot to learn from each Church in Revelation for our spiritual growth.

[30/08 10:42 pm] Aa uma Sister VDM: Things appreciated by God and things detested by God

[30/08 10:42 pm] Aa uma Sister VDM: Kartharudaya namam makimai pauvathaga

[30/08 10:43 pm] Aa uma Sister VDM: Number 7 means perfection, completeness..

Starting from Ephesus Church to Laodicea Church marks the completeness of Church from born to bride stages

[30/08 10:43 pm] Aa uma Sister VDM: *_இயேசு கிறிஸ்து 7 சபைகளுக்குச்சொன்ன ரகசியம்*

*சர்தை என்றால் மீதியான (That which remains) அல்லது மகிழ்ச்சியின் பிரபு* ( Once for all Christ's sacrifice)
*Sardis was a city of Asia Minor, formerly the capital of that wealthy monarch Croesus, king of Lydians.*

சர்தை சபையை இன்றுள்ள  பிரிவுகளான சபைகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த 7 சபைகளும் இன்றைய நாட்களில் இருக்கின்றன.
(Denominational church) 

*ஏழு படிக்கட்டுகள் ஏழு சபைகள்ஏழு சபைபைகளின் குறைகளை ஒன்றுஒன்றாய் விட்டுவிட்டால் பரலோக தேவனின் இருதயத்தில் இடம் பிடிக்கலாம்.*
           
5 வது படிக்கட்டு சர்தை சபை குறைகள்

I. சபை உயிருள்ளவன் என்று பெயர் பெற்றும் செத்தவனைப்போல உள்ளது

II. கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக இல்லை

இதிலிருந்து உயிரடைய வழிகளைச்சொல்லுகிறார்.

 நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாய் இருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து,  

நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன், நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்

தன் ரகசிய வருகையில் வருவேன், மனந்திரும்பாதிருந்தால் கைவிடப்படுவாய் என்கிறார்

ரகசிய வருகையில் எல்லோரும் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்கிறவர்கள் கவனிக்கவும்.

[30/08 10:43 pm] Aa uma Sister VDM: கேட்டு பெற்றுக்கொண்டவைகள் என்றால் என்ன? தேவனிடத்தில் எதையாவது வேண்டும் என கேட்டு பெற்று கொண்டது பற்றியா அல்லது தேவன் சொன்னதை காதால் கேட்டலை பற்றியதா...

[30/08 10:43 pm] Aa uma Sister VDM: காதால் கேட்டவை மற்றும் பெற்றுக்கொண்டவை!

Post a Comment

0 Comments