[01/09 11:12 am] Elango: 🔹 *இன்றைய வேத தியானம் - 01/09/2017* 🔹
1⃣ இராட்சதர்களை தேவன் படைத்தாரா❓இராட்சதர்கள் என்பவர்கள் யார்❓
2⃣ *அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்;* பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால்,
இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
*ஆதியாகமம்
6:4 என்பதன் அர்த்தம் என்ன்*❓
3⃣ *அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்...* எண்ணாகமம் 13:33 ஏனோக்கின் குமாரர்கள் ஏன் இராட்சதர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது❓
4⃣ *தாவீது காலத்தில் வாழ்ந்த இராட்சதர்கள் என்பவர்கள் யார்❓ 2 சாமுவேல்
21:16-22 , கோலியாத்❓*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*Vedathiyanam offline
/ online application* -
https://goo.gl/JpGaev
*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE
*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1
*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam
*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
[01/09 11:37 am] Aa Prabhu Sasirekha VTT: ஆதியாகமம் 6
4 . அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்;
பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்
[01/09 11:38 am] Aa Jenkins VDM: மனிதனின் விழுகை முதல் ஜலப்பிரயளம் வரையுள்ள காலம் பூர்வ உலகத்தின் காலம் என்றழைக்கப்படுகிறது.
சேத்தின் நாட்களில் மனுஷர் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ள ஆரம்பித்தனர் (ஆதி 4:26). இவ்வாக்கியம் மூல எபிரேய மொழியில் அவர்கள் தங்களை கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு அழைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள் என்று பொருள்படுகிறது.
எனவே அவர்கள் தேவகுமாரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
காயினின் பிள்ளைகள் மனுஷ குமாரர்கள் என அழைக்கப்பட்டனர். தேவ குமாரர்கள் சாந்தமும் அமைதலுள்ள ஆவியுடன் கூடிய பரிசுத்தத்தின் உள்ளான அழகைக்குறித்து (Iபேதுரு 3:3-4) தங்களிலிருந்த ஆவிக்குரிய தரிசனத்தை இழந்தபோது மனுஷ குமாரத்திகள் அதிக சௌந்தரியமுள்ளவர்களாக தெரிந்தார்கள்.
இவ்வாறு தேவகுமாரர்களாக இருந்தவர்கள் அந்நிய நுகத்திலே பிணைக்கப்பட்டதினால் அவர்களுக்கு பொல்லாத இராட்சதர்கள் பிறந்ததோடு அவர்களின் கிரியைகள் நித்தமும் பொல்லாததாயிருந்ததால் தேவன் நோவாவின் காலத்தில் உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழித்தார்.
[01/09 12:02 pm] Elango: வேதாகமத்தில் வருகிற தேவ புத்திரர், தேவ குமாரர், இராட்சதர்கள் என்பவர்கள் எவ்வாறு வேறு பட்டவர்கள் என்பதையும் தெளிவுபடுத்தலாம்...
[01/09 3:49 pm] Aa Justin VTT: வேதத்தில் இரண்டு ஏனோக்கு..இருக்கின்றனர்.
ஆதி.4:17 காயீன் தன் மனைவியை அறிந்தான் அவள் கர்ப்பவதியாகி ஏனோக்கைப் பெற்றாள்.
👆இந்த ஏனோக்கின் வழியில் வந்தவர்களே இராட்சதர்கள் எனலாம். அதாவது பொல்லாங்கினால் உண்டாயிருந்த காயீனின் வம்சம்.
சேத்துனுடைய வம்ச வழியில் பிறந்த ஏனோக்குதான் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த போது எடுத்துக்கொள்ளப்பட்டார். (ஆதி.5:1
to 24) இப்படி தேவனோடு பரிசுத்த ஐக்கியம் கொண்டிருந்தவர்களே தேவனுடைய புத்திரர் ஆவர்.
ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
தேவகுமாரர், தேவபுத்திரர் இரண்டும் ஒன்றே...தேவன் மீது மட்டுமே விசுவாசம் வைத்து தேவ ஆவியில் நடத்தப்பட்டவர்கள்,
படுபவர்கள் இவர்களே.
[01/09 5:17 pm] Aa Jeyakumar Toothukudi VTT: இராட்சதர்களை வானத்திலுள்ள ஆவிகள் என்பது தவறுதானே? சரீரம் இல்லாமல் எப்படி கூட முடியும்?
[01/09 6:02 pm] Elango: பிசாசுகளுக்கு ஆவிக்குரிய சரீரம் இருக்கலாம்.
ஆனால் இராட்சதர்களை, வானத்திலுள்ள ஆவிகள் என்பது தவறு.
தேவன் பூமியில் படைத்தது மனித இனம் மட்டுமே.
இராட்சதர்களை தேவன் படைத்ததாக வேதத்தில் எங்கும் ஆதாரம் இல்லை
[01/09 6:56 pm] Aa Justin VTT: தாவீது காலத்தில் வாழ்ந்த இராட்சதர்கள்
மற்ற தேசத்தின் குடிகளை பிடிக்கும்போது அவர்கள் எல்லாரையும் துரத்திவிட்டான் வேண்டும் என கர்த்தர் மோசேயின் மூலமாக சொல்லியிருந்தார்.
எண்ணாகமம் 33:55
நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாக துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து நீங்கள் கூறியிருக்கிறார் தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
யோசுவாவின் காலத்தில் தேசமனைத்தையும் கர்ததர் சுதந்திரமாக கொடுத்தும் அவர்களின் அலட்சியத்தால் மீதியாக வைக்கப்பட்ட ஊர்கள் காசா, 👉காத்👈
அஸ்தோத்,
(யோசுவா
11:22) ..காத் ஊரிலிருந்தே கோலியாத்தும் வந்தான் இவர்களே தாவீதின் காலத்தில் இராட்சதர்களாக காணப்பட்டார்கள்.
1சாமுவேல் 17:4 அப்பொழுது 👉காத்👈
ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டு வந்து நிற்பான். அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
[01/09 7:27 pm] Aa Justin VTT: இந்த பெலிஸ்தர் கொண்டிருந்த கர்த்தருக்கு விரோதமான செயல்கள் இவர்களை படிப்படியாக இராட்சதர்களாக மாற்றுகிறது என்பதை வேதத்தில் அறியலாம்.
பெலிஸ்தரின் சந்ததிக்கு தலைவன் கஸ்லூகீம் என்பவன்(ஆதி.10:14) , இவனை பெற்றது நிம்ரோத்...இவன் கர்ததருக்கு விரோதமாக பாபேல் கோபுரத்தை கட்டியவன், நோவாவால் சாபத்திற்குள்ளான காமுடைய வம்சாவழியினரே இந்த பெலிஸ்தர். இவர்கள்தான் ஈசாக்கு மேல் பொறாமை கொண்டவர்கள்,
ஈசாக்குக்கு சொந்தமான துரவுகளையெல்லாம் தீர்த்து மண்ணினால் நிரப்பியவர்கள். இவர்களின் இப்படிப்பட்ட கர்த்தருக்கு விரோதமான செயல்களே பின்னாளில் இவர்களை இராட்சதர்களாக மாறப்பண்ணியது.
[01/09 7:41 pm] Aa Tamilmani Ayya VDM: இராட்சதர்கள் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள வேண்டு அறிந்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால் ஆவியானவர் வழிநடத்துதல்படி எழுதிய இந்தப்புத்தகத்தைப்படியுங்கள். பெயர்:
*இராட்தர்களின் நிகழ்ச்சி நிரல்*:- ரான்டி டிமெயின்
*NEPHILIM AGENDA*
https://www.amazon.com/Nephilim-Agenda-Ultimate-Last-Deception/dp/1936101173
[01/09 7:55 pm] Aa Jeyaseelan Bro VDM: தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும், எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளது.
வேதாகமத்திற்கு மிஞ்சிய வேத விளக்கங்கள் எப்போதும் நம்முடைய விசுவாச வாழ்வை சோர்வடையச் செய்து, விசுவாச வாழ்வையே கேள்வி குறியாக்கி விடும். இப்படிப்பட்ட வேத பகுதியை விளக்க முயற்சிக்கும் முன் இவைகளை கட்டாயம் மனதில் கொண்டே எழுத முற்படவேண்டும்.
“மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்’’ (ஆதியாகமம் 6: 1,2).
“தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள்’’யார் என்றகேள்வி வேதத்தை வாசிக்க ஆரம்பித்ததும் எல்லோருடைய உள்ளத்திலும் எழுவது இயற்கையே. இதற்கு பலரும் பல விதங்களில் விளக்கங்கள் கொடுத்திருந்தாலும்,அதை வேதத்தின் வெளிச்சத்தில் காண்பது மிகவும் நல்லது.
இங்கு தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் என்று பிரிவினைச் சொற்கள் பயன்படுத்துவதற்கு காரணம்.
தேவனை அறிந்து, தேவனுடைய வழிகளில் நடப்பவர்களையும், தேவனை அறியாது தேவனுடைய வழிகளில் நடக்காதவர்களையும் வேறுபடுத்தி, அடையாளப்படுத்தவே.
உதாரணமாக இன்றைக்கும் தேவனை அறிந்தவர்களை தேவ பிள்ளைகள் என்றும், தேவனை அறியாதவர்களை புறவினத்தார் என்றும் அடையாளப்படுத்துவது உண்டு.
மாறாக சிலர் சொல்லுவது போல் தேவ தூதர்களையோ, அல்லது ஆதாமுக்கு முன்பாக பூமியில் மனிதர்கள் இருந்தார்கள் என்பதையோ வேதம் குறிப்பிட வில்லை.
முதலாவது நாம் புரிந்து கொள்ள வேண்டியது, பிள்ளைகள் என்று அதாவது குமாரர் என்று மனிதர்களையே தேவன் குறிப்பிடுகிறார்.
மனிதர்களுக்கு மட்டுமே தேவ பிள்ளைகள் என்ற அதிகாரம் உண்டு. தேவ தூதர்களுக்கு ஒரு போதும் வேதம் தேவ பிள்ளைகள் என்ற அதிகாரத்தை கொடுக்க வில்லை.
தேவ தூதர்களுக்கு மனிதர்களைப்போல சரீரமும், உணர்ச்சிகளும் இல்லை.
தேவ தூதர்கள் பாலின உறவு கொள்வது போல் ஆண் பால், பெண் பால் உள்ளவர்கள் அல்ல.“மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்;’’
(மாற்கு 12:25).
ஆண் இனம், பெண் இனம் எல்லாம் மனிதர்களில்தான் தேவ தூதர்களில் இல்லை.
“அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்;அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்’’
(லூக்கா 20:36). இவைகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட வார்த்தைகள்.
மனிதர்களில் மட்டுமே ஆண் என்றும் பெண் என்று உண்டு. தேவ தூதர்களில் அப்படி இல்லை என்பதை இயேசு கிறிஸ்து மிகவும் அழகாக விளக்கி காண்பிக்கிறதை கவனிக்க வேண்டும்.
“அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்’’
(ஆதியாகமம் 6:4).
இந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ள “இராட்சதர்’’ என்ற வார்த்தை இரண்டு விதங்களில் பயன் படுத்தப்படும்.
1சராசரி மனிதர்களை விட மிகவும் உயரமான, பருமனான மனிதர்களை குறிப்பிட பயன்படுத்தப் படும்.
2.பொல்லாத செய்கைகளை செய்கிறவர்களையும், எதற்கும் அடங்காதவர்களையும் குறிக்கவும் பயன்படுத்தப்படும்.
உடல் அமைப்பை வைத்துமட்டும் ஒருவரை “இராட்சதர்’’ அரக்கர் என்று சொல்லுவதில்லை.
அவர்களின் குணாதிசயங்களை குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படும்.
தேவ பக்தி அற்ற முறையில் வாழ்ந்து வந்த அக்கிரமக் காரர்களையே “இராட்சதர்’’ என்று இந்த பகுதியில் வேதம் குறிப்பிடலாம்.
மேலும் ராட்சதர்கள் என்று தனி இனம் எதுவும் இருப்பதாக வேதம் கூறவில்லை. மற்ற புராணங்களிலும், கதைகளிலும்தான் ராட்சதர்கள், பூதங்கள் இருந்ததாக கதைகள் கூறுகின்றன. மற்ற கதைகளை வைத்து வேதாகமத்தை விளக்கக்கூடாது.
ஆதியாகமம் 6 ம் அதிகாரத்தின் சம்பவங்கள் ஆதாமில் இருந்து 9 ம் தலைமுறைகளுக்கு பின்புதான் நடப்பதாக வேதம் கூறுகிறது. 4ம் அதிகாரத்தில் காயீனின் முக்கியமாக 6தலைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 5ம் அதிகாரத்தில் சேத்தின் முக்கியமான 9 தலைமுறைகள் காட்டப்படுகிறது. அதாவது, ஆதாம் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டதில் இருந்து, நோவாவின் காலத்தில் நடந்த வெள்ளப்பெருக்குவரை கிட்டத்தட்ட 2000 வருட இடைவெளி இருப்பதாக வேத வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
ஆதியாகம ம் 6ம் அதிகாரம் வரை சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள்வரை இந்த இரண்டு தலைமுறைகளும் அதுவரை பிரிந்தே வாழ்ந்து வருகிறது. காயீன் தேவ சமூகத்தை விட்டு பிரிந்து தேவன் அற்றவனாக வாழ்ந்ததினால் அவனுடைய சந்ததிகளும் தேவன் அற்றவர்களாக அக்கிரம செய்கைக் காரர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
சேத்தின் சந்ததியினர் தேவனோடு இணைந்து தேவனை அறிந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த இரண்டு தலைமுறையினரும்,எந்த விதத்திலும் சம்மந்தம் கலவாதவர்களாக இருந்தவர்கள். 6 ம் அதிகாரத்திற்குப் பின்பாக திருமண பந்தங்கள் மூலமும், தகாத உறவின் மூலமும் இணைவதினால், அது தேவனுக்கு பிரியமில்லாத செயலாக மாறுகிறது.
அது மட்டுமல்ல, அவர்களுக்கு பிறக்கிற பிள்ளைகள் இன்னும் அக்கிரம மிகுதி உள்ளவர்களாக வாழ ஆரம்பிக்கின்றனர்.
இதனால் தேவனுடைய திட்டங்களும் தேவனுடைய சித்தமும் பாழ்படுத்தப்படுகிறது.
“மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும்,கர்த்தர் கண்டு,தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது ( ஆதியாகமம் 6:5,6).
இந்த 6ம் அதிகாரத்தின் வசனங்கள் நமக்கு தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கால கட்டத்தின் சம்பவங்கள் என்பதை முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
தேவனை அறிந்த சேத்தின் சந்ததியும்,தேவனை அறியாத காயீனின் சந்ததியும் ஒன்றாக கலக்கும் போதே அக்கிரமங்கள் பெருக ஆரம்பிக்கிறது.
தேவனை அறிந்த சேத்தின் சந்ததியும்,தேவனை அறியாதபடி தங்கள் மனம் போல் வாழ்ந்த காயின் சந்ததியும் இணைந்ததால் மட்டும் தேவன் அந்த சந்ததியை அழிக்க வில்லை.
படிப்படியாக முழுவதுமாக தேவனை விட்டு விலகி, மனிதர்களுக்குள் அக்கிரமம் பெருகியதால்,
தேவ திட்டத்திற்கு விரோதமாகவும்,தேவ சித்தத்திற்கு எதிராகவும் அக்கிரமத்தின் மிகுதியினால்,வன்முறைகளும், தகாத விதமாய் நடந்த பாலியல் உறவுகளும், பாவத்தின் அகோரமும், அவலட்சணமாக அநேக பாவ காரியங்களும் மனிதர்களுக்குள் பெருகிய போதே தேவன் பூமியில் உள்ள மனிதர்களை அழிக்க முடிவெடுக்கிறார். அழிவிற்கு அதுவே காரணமாக அமைந்து விட்டது.
மாறாக தேவ குமாரர்கள் எனப்படுகிறவர்கள் தேவ தூதர்கள் என்று வியாக்கியானம் செய்வதோ, ஆதாமுக்கு முன்பாகவே பூமியில் மனிதர்கள் இருந்தார்கள் என்று சொல்லுவதோ வேதத்தின் முறைமைகளுக்கு எதிராகவே இருக்கிறது.
தேவதூதர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடிய வகையில் இருந்திருப்பார்களானால், அவர்கள் மூலம் சந்ததிகள் உருவாவதற்குண்டான வாய்ப்புக்கள் இருக்குமானால் அது தேவன் மனிதனை பூமியில் படைத்ததற்கே எதிரான செயலாகவே இருக்கும்.
அது மட்டுமல்ல தேவ தூதர்களில் ஆண் தன்மை உள்ளவர்கள் இருந்திருப்பார்கள் என்றால், பெண் தன்மை உள்ளவர்களும் இருந்திருக்க வேண்டும் அப்படிதானே, அப்படியானால் ஆண் பால் தேவ தூதனும், பெண்பால் தேவ தூதனும் ஒன்றினைந்தால் அவர்களுக்கு சந்ததிகள் உண்டாக வேண்டும் அல்லவா? இப்படி கேள்விகள் பல விதங்களில் அதிகமாக எழும்ப வாய்ப்புகள் உண்டாகும்.
எனவே நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் தேவ தூதர்களுக்கு சந்ததியை விருத்தியடையச் செய்யும் வித்து அவர்களுக்குள் இல்லை.அவர்களுக்கு மனிதர்களைப்போல் இரத்தமும், சரீரமும் இல்லை. அவர்களுக்கு மனிதர்களைப்போல் பாலியல் உணர்வுகளோ, மற்ற உணர்வுகளோ இல்லை.
தேவ குமாரர்கள் என்ற வார்த்தை தேவனை அறிந்து தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றும் தேவ மக்களையே குறிப்பிடுகிறது.
மனுஷ குமாரத்திகள் என்ற வார்த்தை தேவனை அறியாத தேவனுடைய வழிகளில் நடக்காத மக்களையே குறிப்பிடுகிறது.
தேவனை அறிந்தவர்கள் தேவனை அறியாத பெண் பிள்ளைகளை தங்கள் திருமண பந்தத்தில் இணைத்துக்கொள்ளும் போது அவர்கள் இவர்களின் மனதை வழிவிலகி போக செய்கிறார்கள். இதனால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுகிறது.
தேவனை அறியாத அல்லது தேவனுடைய வழிகளில் செல்லாதவர்களின் இருதயம் கடினப்படுவது மட்டுமல்ல, ஒழுக்கக் கேடான வாழ்க்கைக்கு நேராகவே திருப்பி விடும்.
ஒருவருடைய வாழ்க்கையில் தேவனுடைய சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுக்கும் போதே எல்லாவித தீங்கும் உள்ளே வந்து விடுகிறது. இது ஒரே நாளில் நடந்து விடுகிற சம்பவம் அல்ல, படிப்படியாக விஷம் போல் பரவி முழுமனித இனத்தையும் பாழ்ப்படுத்தி விடுகிறது.
அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் தேவனை அறியாத பிள்ளைகளை தேவனை அறிந்து பின்பற்றும் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளும் போது தேவனை அறிந்த பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடுகிறதை இன்றைக்கும் நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.
தேவ தூதர்கள் மனுஷ குமாரத்திகளோடு கூடினார்கள் அதினால்தான் இராட்சத பிறவிகள் பிறந்தார்கள் என்று ஆதியாகமம் 6ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று வியாக்கியானம் செய்தால், நோவா காலத்தில் தேவன் முழு உலகத்தையும் வெள்ளப்பெருக்கினால் அழித்து, நோவா வின் குடும்பம் தவிர எல்லா மனிதர்களையும் மாண்டு போக செய்தார், நோவாவின் குடும்பத்தின் மூலமாகவே மறுபடியும் புது மனித சந்ததியை உருவாக்குகிறார். அப்படி இருக்க,
எண்ணாகமம் 13:33,
உபாகமம் 2:11 ,
உபாகமம் 2:20 ,
உபாகமம் 3:11,
உபாகமம் 3:13 ,
யோசுவா 13:12, II சாமுவேல் 21:16,
II சாமுவேல் 21:18,
II சாமுவேல் 21:20,
II சாமுவேல் 21:22,
☝இந்த வசனங்களில் இராட்சத பிறவிகள் இருந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால் இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள இராட்சதர்கள் யாருக்குப் பிறந்தவர்கள்?
இவர்களும் தேவ குமாரர்களுக்கும் மனுஷ குமாரத்திகளுக்கும் பிறந்தவர்களா?
அப்படியானால் தொடர்ந்து தேவ தூதர்கள் மனிதர்களோடு பாலியல் உறவில் ஈடுபட்டார்களா? என்ற கேள்வி எழும்பும் எனவே, வேதாகமத்தை வாசிக்கும் போது எல்லாவற்றையும் நம்முன் கொண்டுவருவது நல்லது.
மேலே உள்ள வசனங்களில் குறிப்பிட்டுள்ள இராட்சதர்கள் , உருவத்தில் சராசரி மனிதர்களை விட வித்தியாசமாக இருந்ததால் அவர்களை வேதம் ராட்சதர்கள் என்று கூறினாலும், அவர்கள் மனிதனுக்கும், மனுஷிக்கும் பிறந்தவர்களே, அவர்களும் மனிதர்களோடு மனிதர்களாகவே வாழ்ந்து வந்தார்கள்.
மேலும் ஆதியாகமம்
6.3 ல்
அப்பொழுது கர்த்தர்:என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே,
என்று சொல்லுகிறார்.
பாவத்தை செய்தது தேவ தூதர்களானால் தேவன் மனிதனுக்குத் தண்டனை விதிப்பது ஏன்? தேவ புத்திரர் எனக்குறிப்பிடப்படுகிறவர்கள் மனிதர்களாக இருந்தால்தான் வசனம் 7 தேவன் மனிதரை தண்டிப்பது ஏன் என்று விளங்கி கொள்ள முடியும்.
நோவாவின் காலத்தில் மனிதர்களுடைய பாவங்கள் இரண்டு வகைகளில் துணிகரமாக செயல்பட்டன. ஒன்று, பாலியல் உறவுகள் மிகவும் மட்டமாக இருந்தன , மற்றும் வன்முறைகள் முகவும் பெருகி மனிதனின் அன்பு முழுவதும் தனிந்து போன நிலையில் இருந்தது. அதைக்குறித்துதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லும் போது.
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்’’ (மத்தேயு 24:
37-39) என்று உலகத்தின் கடைசி நாட்களிலும் அவ்விதமாக நடக்கும் என்று சொன்னது போல இந்நாட்களிலும் அவ்விதமான அவலட்சனமான பாலியல் உறவுகளும், வன்முறைகளும் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இன்னும் கடைசி நாட்களில் அதிகமாகும். அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் வருகை இருக்கும் என்று தெளிவாக இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார்.
ஆதாமுக்கு முன்பாகவும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது.
முதல் மனிதன் ஆதாம் என்று வேதமே நமக்கு தெளிவாக சொல்லி இருக்க ஆதாமுக்கு முன்பாக மனிதர்கள் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
தேவ குமாரர்கள், தேவ தூதர்களையே குறிக்கிறது என்று சொல்லுகிறவர்கள் “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்’’
(யூதா 6) என்ற இந்த வசனத்தையே ஆதாரமாக வைக்கிறார்கள்.
ஆனால் இந்த வசனம் தேவனுக்கு விரோதமாக எழும்பி, பெருமையினால் விழுந்துபோன தேவ தூதர்களையே குறிப்பிடுகிறது.
அதுதான் சாத்தானின் கூட்டம்.
மேலும் பழைய ஏற்பாட்டில் சில சமயங்களில் தேவ தூதர்கள் மனித ரூபத்தில் காணப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. அதை வைத்து தேவ தூதர்கள் பாலின உறவில் ஈடுபட்டார்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம். அவர்கள் குறிப்பட்ட அந்த வேலைகளுக்கு மட்டுமே மனித வடிவில் தெரிந்தார்கள், மற்றபடி மனிதர்களோடு மனிதர்களாக வாழவில்லை. அவர்களுக்கு மனிதர்களைப்போல உணர்வுகள் இல்லை.
மேலும் மனிதர், ராட்சதர், தேவ குமாரர் என்று தனி தனி இனங்கள் பூமியில் இருந்தது, என்று சொல்லுவது மற்ற புராணங்களை மனதில் வைத்து கற்பனை வடிவம் கொடுக்க முயற்சிப்பது. அதற்கு வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
ஆகவே தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய பதில் தேவ குமாரர் என்பவர்கள் சேத்தின் சந்ததியினரே
எனவே வேதத்திற்கு மிஞ்சிய வியாக்கியானம் வேதத்திற்கு விரோதமானதும், வேதாகம விசுவாசத்தை கேள்விக்குறியாகவும் மாற்றிவிடும் என்பதில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
*இந்த கட்டுரை எழுத துணை நின்ற நூல்கள்.*
நிறைவாழ்வு ஆய்வு வேதாகமம்
மற்றும்
ஆதியாகமம் விளக்கவுரை
எய்ச். ஜே. ஆப்பிள்பீ
இன்னும் சில நூல்கள்.
[01/09 8:27 pm] Elango: நீளமாக இருந்தாலும் நல்ல விளக்கம்👌👌
[01/09 8:30 pm] Aa Robert Pastor VTT: மிகவும் அற்புதமான விளக்கம் அனைத்தும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா
[01/09 9:58 pm] Aa Nesaraja VDM: Super thank u astor
[01/09 10:00 pm] Elango: ஏசாயா 26:14
[14]அவர்கள் செத்தவர்கள்,
ஜீவிக்கமாட்டார்கள்;
*மாண்ட இராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்;* நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.
இந்த இராட்சதர் என்பது யார்..?
தேவனை விட்டு விலகி தூரமாக வாழும் மனிதர்களை நாம் இராட்சதர் சொல்லலாமா?
[01/09 10:03 pm] Elango: யோவான் 10:35
[35] *தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள்* என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
சங்கீதம் 82:6-7
[6] *நீங்கள் தேவர்கள் என்றும்,* நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
[7]ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
ரோமர் 8:14
[14]மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் *தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்*.
தேவ புத்திரர், தேவர்கள் யார்..👆🏻👆🏻👆🏻
[01/09 10:09 pm] Elango: *ஆதியாகமம் 6:1-4ல் தேவகுமாரர் யார்? இராட்சதர் யார்?*
கேள்வி:
ஆதியாகமம் 6:2, 4 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை"
அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு,
அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்...அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்;
பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
இங்கே "தேவகுமாரர்" யார், "இராட்சதர்"
யார்?
ஆதியாகமம் 6:1-4 வரையுள்ள வசனங்களைக்காட்டிலும் வரலாற்றில் சிலர் எழுதிய புத்தகங்கள் ஜனங்களின் மத்தியில் ஒரு விநோத ஆர்வத்தையும்,
வேறுபட்ட கருத்துக்களையும் எழுப்பியுள்ளது.
முதற்பார்வையில் இந்த வசனம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
கடினமானது என்னவெனில் "தேவ புத்திரர்",
"மனுஷ குமாரத்திகள்" மற்றும் "இராட்சதர் (அதாவது நெஃபிலிம் என்னும் எபிரெய வார்த்தை)"
எனப்படும் வார்த்தைகளில் அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டியவர்கள்தான். இந்த கூட்டத்தினரினைப் பற்றி தனித்தனியே விளக்கம் கொடுக்க பல பண்டிதர்கள் பெரிய நிலைகளில் எழும்பி விவாதித்தனர்.
*மூன்று வாதத்திற்குரிய கூட்டத்தினராக*
[1] அண்டவெளியின் கலப்பினங்கள்
(cosmological mix - தூதர்கள்-மனிதர்கள் கலவை).
[2] சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர் கலவை.
[3] சமுக அந்தஸ்த்தில் கலந்தவர்கள் (sociological mix).
என்று வார்ப்புரு
(label) இடப்பட்டன.
இப்படி கொடுக்கப்பட்டுள்ள கலப்பினங்களுக்குள் முதற்பார்வையில் தேவதூதர்கள் மனிதர்களுடன் கலந்தார்கள் என்ற சாத்தியம், எல்லா பார்வைகளை(view)
விட ஒருவேளை மேலோங்கி நிற்கலாம்.
[01/09 10:13 pm] Elango: பைபிளில் எங்குமே தேவதூதர்கள் மனிதர்களை திருமணம் செய்ததாக இல்லை.
*மிக மிக முக்கியமாக நம்முடையஆண்டவராகிய இயேசு சொல்லும்போது "அவர்கள் 👉தேவதூதர்களைப்போல👈
திருமணம் செய்யாமல் (கொள்வனையும் கொடுப்பனையும் இன்றி) இருப்பார்கள்" என்று மாற்கு 12:25ல் குறிப்பிட்டுள்ளார்.*
மிகவும் முக்கிய பதிப்பான ஆல்பிரட் ரால்ஃப்ஸ் என்பவரின் பதிப்பு, தூதர்கள் கலப்பைப்பற்றி சொல்லவில்லை.
பூமியிலே தேவதூதர்கள்தான் பிரச்சனை உண்டாக்கினார்கள் என்றால் தேவன் ஏன் பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவேண்டும்; பரலோகத்தில் ஒருபகுதியில் பேரழிவை உண்டாக்கியிருக்கலாமே;
குற்றவாளிகள் மேலேயிருந்து தானே வந்தார்கள்; பெண்கள் அழகாக இருந்ததார்களே தவிர வேறென்ன என்கிறது ஒரு வாதம். சிலர் 1 பேதுரு
3:18-20, 2 பேதுரு
2:4 மற்றும் யூதா 6,7 ஆகிய வசனங்களை கொண்டுவந்து "மனிதர்கள்-தூதர்கள்"
கொள்கையை ஆதரிக்கின்றனர். ஆனால் அந்த வசனங்களில் தூதர்கள் திருமணம் செய்ததைப் பற்றி சொல்லவில்லை.
மேலும்,
சோதோம் கொமோராவின் பாவம் என்பது ஆதி 6:1-4ல் சொல்லப்பட்டதுதான் என்று விவாதிப்பது தவறான ஒப்பிடுகையாகும்.
*அங்கே தூதர்களின் பாவத்தை சோதோம் கொமோராவின் பாவத்துடன் ஒப்பிடவில்லை; பதிலாக, சோதோம் கொமோராவின் பாவத்தை அதைச்சுற்றியுள்ள பட்டணங்களுடன்
(அத்மரா,
செபோயீம் உபாகமம் 29:23, ஓசியா 11:8) ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.*
எனவே யூதா குறிப்பிட்ட தூதர்களின் பாவங்களும் (யூதா 6), அந்த பட்டணங்களின் பாவங்களும் (யூதா 7) மற்றவர்களின்மேல் வரும் நியாயத்தீர்ப்பைக்குறித்து நமக்கு உணர்த்துகின்றன.
*யூதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்களின் விழுகை என்பது பிசாசாசின் (லூசிபர்)
விழுகையைப் பற்றியதாகும். இந்த விழுகையையும் ஜலப்பிரளயத்து காலத்தையும் இணைப்பது தவறாகும். அப்படி இணைத்தால் அந்த பட்டணங்களின் பாவத்தையும் ஜலப்பிரளயத்துடன் இணைக்கும்படி வரும், அது பொருந்தாமல் போகிறது. யூதா-வில் ஒரே நேரத்தில் நடந்தவைகள் குறிப்பிடப்படவில்லை; அடுத்தடுத்து நடந்தவை குறிப்பிடப்பட்டுள்ளன.*
[01/09 10:14 pm] Elango: *"இராட்சதர்"
என்பவர்கள் தூதர்-மனிதர்களின் கலவை என விவாதிப்பது பைபிளுடன் பொருந்தவில்லை.*
தூதர்கள் மனிதனுடைய அழிந்துபோகும் மண்ணின் சரீரத்துக்கு மாறிவந்து மணம் செயதது என்பது எல்லாம் யூகத்துக்கு அடுத்தவையாகும். மேலும் "1 ஏனோக்கு"
என்ற புத்தகத்தை சாட்சியாக கொண்டுவருவதும், வேதத்திலுள்ளதை மாற்றாக பிரதிபலிப்பதும் தவறாகும். எனவே இது சாத்தியமல்ல.
[01/09 10:16 pm] Elango: "தேவ புத்திரர்" என்பது ஆரம்பநாட்களில் ராஜாக்கள், கனவான்கள், அதிபதிகள் மற்றும் ஞானிகள் போன்ற மதிப்புக்குரியவர்களுக்கு மத்தியகிழக்கு பகுதியில் காணப்பட்ட வழக்கச்சொல். இப்படிப்பட்ட அதிகாரப்பெயர் பெறுவதற்கு அவர்கள் மிகவும் உந்தப்பட்டு பேர்பெற்றவர்களாக (ஆதி 6:4) இருக்க விரும்பினர். இப்படியாக அறியப்படுவதற்கு அவர்கள் எந்த பகுதிகுயில் இருந்தார்களோ அந்த பகுதிக்கு தானே பொறுப்பென்றும், அதிகாரி என்றும் காட்டுவதற்குஅநியாயமுறையில் தாகத்துடன் இருந்தனர். இப்படியாக அவர்கள் அநீதியாகவும் இச்சையுடனும் காணப்பட்டனர். (ஆதி 6:5-6; ஆதி 10:8-12)
மேலும் பல மனைவிகளையும் தங்களுக்கு கொண்டனர் (ஆதி 6:2). இப்படியாக சொல்லப்படும் கருத்துக்கு என்ன ஆதாரம்?
ஆறு ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன:
[அ] முற்கால அராமிய மொழிபெயர்ப்புகள் "தேவ புத்திரர்"
என்பதை
"கனவான்களின் புத்திரர்" என்று சொல்கின்றது.
(Onkelos மொழிபெயர்ப்பில்)
[ஆ] கிரேக்க மொழிபெயர்ப்பில் "ராஜாக்களின் புத்திரர் அல்லது கர்த்தாக்களின் புத்திரர்" என்று சிம்மாச்சஸ்
(Symmachus) -ல் கொடுக்கப்பட்டுள்ளது.
[இ] எபிரெய மொழியில் தேவர்கள் (elohim--gods) எனபது நியாதிபதிகள் மற்றும் அதிபதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் அவனை தேவர்களிடத்தில் (நியாயாதிபதிகளிடத்தில்-gods-elohim)
கொண்டுபோகவேண்டும்.
(ஆதியாகமம்
21:6, யாத்
22:8 மற்றும் சங்கீதம் 82:1, 6)
[ஈ] அமைப்பின்படி, "காயீன் வழிவந்த லாமேக்கு"
(ஆதி
4:19-24) மற்றும்
"தேவபுத்திரர்"
(ஆதி
6:1-4) இரண்டும் ஒன்றுபோல் உள்ளது. இவ்விரண்டிலும் பெண்கொள்ளுதலும், பிள்ளைப்பெறுதலும், "பேர்"பெறுதலும் காணப்படுகின்றன. முதற்பகுதியானது லாமேக்குடைய அதிகார தீர்ப்புடனும்,
பின்புவரும் பகுதியானது தேவனால் வந்த தீர்ப்புமாயிருக்கிறது. லாமேக்கு இருமனைவிகளை கொண்டிருந்தான்;
தன்னுடைய அதிகாரத்தைக்கொண்டு கட்டளைகளை இட்டான்.
[உ] மத்தியக் கிழக்குபகுதியில் ஜனங்கள் தேவர்கள்(gods)
மற்றும் தேவதைகளின்(goddess) பெயர்களை தங்களுக்கு பயன்படுத்தியதாக கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இப்படி தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டதால் எகிப்து மற்றும் மெசப்பதோமியா பகுதியில் தங்களுக்கு கிடைத்த மரியாதைக்காக அப்படிச் செய்தார்கள். எனவே அவர்கள்
"தேவபுத்திரர்"
என்ற பட்டத்தை கொண்டிருந்தனர்.
[ஊ] கடைசியாக, நெஃபிலிம்/கிப்போரோம் என்று சொல்லப்பட்டுள்ள இராட்சதர் (ஆதி 6:4). இந்த "நெஃபிலிம்"
ஆதியாகமம்
6:4-லும்,
எண்ணாகமம்
13:33ல் ஏனாக்கின் புத்திரர் என்பவர்கள் பார்வையில் தாங்கள் வெட்டுக்கிளிகள் போல என்ற வசனத்திலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூலபாஷையான எபிரெய மொழியில் நெஃபிலிம் என்ற வார்த்தைக்கு "விழுகை(fall)" என்று பொருள். இருப்பினும் ஆதி
6:4ல்
"நெஃபிலிம்"
என்னும் பதம் "கிப்போரோம்" என்ற பதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதற்கு "பராக்கிரமசாலிகள், பலசாலிகள், செல்வம் மற்றும் அதிகாரமுடையவர்கள்"
என்று பொருள்படும். ஆதி 10:8ல் நிம்ரோத் கர்த்தருக்குமுன்பு பலத்தவேட்டைக்காரனாயிருந்தான் என்பதில் அவன் கிப்போரோம்- ஆக இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அவன் சிநெயார் தேசத்தில் ராஜாவாயிருந்தான்.
எனவே "நெஃபிலிம்/கிப்போரோ"ம் என்றால் இராட்சதர் என்று அர்த்தமல்ல, ஆனால்
"இளவரசர்கள்,
வல்லுநர்கள்,
பெரியோர்"
என்றே பொருள்படும். எனவே ஆதியாகமம்
6:1-4ல் பேராசைகொண்ட ஆளுபவர்கள் அதிகாரத்தையும், பெண்களையும், நாட்டையும் இஷ்டத்துக்கு பயன்படுத்தினர்.
இந்த துர்பிரயோகம் தேசத்தைக் கெடுத்ததுமட்டுமன்றி, தேவனையும் துக்கப்படுத்தினது.
தேவனுடைய இருதயத்துக்கு அது விசனமாயிருந்தது என்று உடனே அடுத்த வசனமான ஆதி 6:6-ல் வாசிக்கிறோம்.
எனவே ஜலப்பிரளயமானது தேவனின் தீர்ப்பாக இருந்தது; அது அவர்களின் இச்சைகளையும்,
அதிகார துர்பிரயோகத்தையும், அநீதியான காரியங்களையும்,
பாலியல் பாவங்களையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முற்றுப்புள்ளியாகும்.
எனவே அதிகமான சாத்தியங்கள் இதற்குத்தான்
Source -
http://tamilbibleqanda.blogspot.in/2011/01/67-61-4.html?m=1
[01/09 10:32 pm] Elango: இன்னோரு ஒரு பார்வையும் இருக்கிறது.
*தேவதூதர்கள் பாலினம் இல்லாதவர்*
அவர்கள் மனுஷர்களை போல சரீரம் உள்ளவர்களா என்பது ஒரு கேள்விக்குறியானதே, அவர்களுக்கு அதற்க்கான வாய்ப்புகள் இல்லை.
அவர்களுக்கு பாலினமும் கிடையாது அப்படியிருக்கையில் அவர்கள் எப்படி மனுஷக்குமாரத்திகளோடு கூடி, அவர்கள் சந்ததியை உருவாக்க முடியும்.
இதை ஹைப்பத்தடிகல் கொஸ்டின்ஸ் என்பார்கள்.இதற்கு ஆன்ஸர் வந்து நாம் ஒரு அனுமானமாகத்தான் சொல்ல முடியும்.
*இன்னோரு பார்வையும் இருக்கிறது.*👇🏻
தேவர்கள் யார் என்று பார்த்தால், அன்றைய நாட்களில் இராஜாக்களை கடவுளுக்கு சமமாக பார்த்ததினால் அதற்க்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இது என்னுடைய கருத்து.
- பாஸ்டர் சோம்ராஜ்
[02/09 12:52 am] Aa Saranya VDM: Doubt:
1 கொரி 11:10
ஆகையால் *தூதர்களினிமித்தம்* ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
1 Corinthians 11:10
For this cause ought the woman to have power on her head
because of the *angels.*
👆🏻இதில் சொல்லப்பட்டிருக்கும் தூதர்கள் யார்?
ஏன் *தூதர்களினிமித்தம்* ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்?
[02/09 5:51 am] Aa Thomas Ayya Brunei VDM: 1 Corinthians
11:10 speaks about obedience in the order of God's creation..
[02/09 5:53 am] Aa Thomas Ayya Brunei VDM: Covering means
submission and obedience (a sign of accepting a higher authority). Rebekah is
an example..
[02/09 8:12 am] Elango: தேவனுடைய சிருஷ்டிப்பின் வரிசையின்படி,
கீழ்ப்படிதலைப் பற்றி 1 கொரிந்தியர் 11:10 வசனம் பேசுகிறது.
முக்காடிடுதல் என்பது சமர்ப்பித்தல் மற்றும் கீழ்ப்படிதல் (உயர்ந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதற்கான அடையாளம்) என்பதாகும்.
ரெபேக்கா ஒரு உதாரணம் ..
ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
[65]ஊழியக்காரனை நோக்கி:
அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். *அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.* ஆதியாகமம் 24:64-65
- தாமஸ் ஐயா
Post a Comment
0 Comments