Type Here to Get Search Results !

தானியேல் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட 70 வாரங்கள் என்பதன் அர்த்தம் என்ன❓

 [30/08 8:35 pm] Aa uma Sister VDM: 📆 *இன்றைய வேத தியானம் - 29/08/2017* 📆

*மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் 7⃣0⃣எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.தானியேல் 9:24*

1⃣ தானியேல் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட 70 வாரங்கள் என்பதன் அர்த்தம் என்ன

2⃣ இந்த வசனம் நம்மை எப்படி பரிசுத்தரின் வருகைக்கு ஆயத்த படுத்துகிறது, பரிசுத்தரை எதிர்கொள்ள நாம் கழுவப்பட என்ன செய்ய வேண்டும்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[30/08 8:35 pm] Aa uma Sister VDM: 🌹 தானியேலின் எழுபது வாரங்கள்🌹

1. வேதபகுதி:- தானியேல் 9:24-27.

 (தானியேல் 9:24).
  
🌷2. வாரம் என்றால் என்ன?

பண்டைய உலகின் கிரேக்க மற்றும் இலத்தீன் தத்துவ சாஸ்திரிகளுக்கு வாரம் என்பதன் பொருள் தெரியும், வருடங்களின் வாரம் என்பது அவர்களுக்குப் புரியும். இவ்வித அமைப்பில் ஒரு வாரம் என்பது ஏழு வருடங்களைக் குறிக்கிறது. இதன்படி எழுபது வாரங்கள் என்பது 70 * 7  வருடங்கள் = 490 வருடங்கள் ஆகும்.

🌷3. வருடங்கள் எந்த வகையைச் சார்ந்தது?

 தானியேலின் நாட்களில் வேதாகமத்தில் யூத வருடங்கள் கணக்கிடப்பட்டு வந்தது, இக்கால கணக்கீடு ஆபிரகாம் கல்தேயர் நடுவே ஜீவித்த காலம் முதல் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆபிரகாம் வருட கணக்கு சந்திரனை மையமாய் கொண்டது இது வருடத்தில் 360 நாட்களைக்கொண்டது. இதன் படி 70 வாரங்களின் நாட் கணிப்பு 70 * 7 * 360 = 1,76, 400 நாட்கள் ஆகும்

 🌷4. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்

ஜனங்கள், பரிசுத்த நகரம் - யூதர்கள் மற்றும் எருசலேம் அல்லது யூதேயாவை குறிப்பிடுகிறது. இதினிமித்தம் நாம் யூதர்கள் மற்றும் எருசலேமை உள்ளடக்கிய 490 வருட கால கணக்கை கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.
  
🌷5. இக்காலக்கணக்கு எப்பொழுது நிறைவடையும்?

 a) வசனம் 24 ன் இரண்டாம் பாதிப்பகுதியில் முடிவு காலம் ஆறு தனித்தனி நிகழ்வுகள் மூலம் கொடுக்கப்பட்டுள்லது.  

 மீறுதலைத் தவிர்க்கிறதற்கு - இரண்டாம் வருகையில் ஆயிரவருட ஆழுகையின் துவக்கம்.
பாவங்களை தொலைக்கிறதற்கு - இரண்டாம் வருகையில் பூரணமான சூழ்நிலமை ஆரம்பித்தலும், அது ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து நிகழ்தலும்.  (ரோமர் 8:19-21).

அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுதால் -

கி.பி. 70 முதல் யூதர்கள் தேசங்களுக்குள் சிதறியிருந்தனர், இரண்டாம் வருகையில் இயேசுக்கிறிஸ்து அவர்களது தேசத்திற்கு அவர்களை மீண்டும் அழைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து சிதறியிருப்பர்.
  
நித்திய நீதியை வருவிப்பது -
ஆயிர வருட ஆழுகையில் கிறிஸ்துவின் நித்திய நீதியின் காலம் துவங்கி நித்திய எதிர்காலம் வரை நீடிக்கும். இக்காலம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் துவங்கும்.

தரிசனம், தீர்க்கதரிசனம் முத்திரிக்கப்படுதல் -

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், ஆபிரகாமின் உடன்படிக்கை, பாலஸ்தீனிய உடன்படிக்கை, தாவீதின் உடன்படிக்கை மற்றும் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்.

 மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் செய்தல் -

இரண்டாம் வருகையில் கிறிஸ்து இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுவார்

 b) மேற்கண்ட ஆறு வாக்கியங்களில் கூறப்பட்ட குறிப்புகள் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்து கூறுகிறது அல்லது மத்தேயு 25:6 ன் நடுஇரவு காலம் எனவும் கூறலாம்.

இதினிமித்தம் தானியேல் 9:24ன் காலம், 360 நாட்களைக்கொண்ட 490 யூத வருடங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நிறைவு பெறும் எனக்கூறலாம்.  

 c) தொடர்து உள்ள மூன்று வசனங்களில் 70 வாரக்காலம் மூன்று பகுதிகளாய் பிரிக்கப்பட்டுள்ளன.
  
d)49 வருடங்கள்
  
  434 வருடங்கள் (தானியெல் 9:25)

e)  இதினிமித்தம் எழுபது வாரங்கள் மூன்று காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். - 7 வாரங்கள் + 62 வாரங்கள் விடப்பட்டு மீந்து இருக்கும் 1 வாரம்.

இவ்வாரங்களை வருடங்களாய் பகுப்போமெனில்
49 வருடங்கள் + 434 வருடங்கள் + 7 வருடங்கள்.

🌷6. இதன் துவக்க காலம் எது?

பெர்சிய பிரபுக்களால், தானியேலின் காலத்திற்குப் பின்னர், யூதர்கள் சொந்த தாயகம் திரும்ப மூன்று முறை கட்டளைப் பெற்றனர்.

கி.மு. 538 ல் கோரேஸ் அரசனால் தேவனுடைய வீட்டை (தேவாலயத்தை) திரும்பக்கட்ட கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
(எஸ்றா 1).

கி.மு. 520 ல் தரியு அரசனால் தேவாலயம் திரும்பக்கட்ட உத்திரவு பிறப்பிக்கப்பட்டது
(எஸ்றா 6) ல் இதைக் காண்கிறோம்.

கோரேஸ் அரசன் மரணத்திற்குப் பின்னர் தடைப்பட்திருந்த கட்டிட வேலையை, தரியு அரசன் திரும்பக்கட்ட உத்திரவு அளித்து கோரேஸ் அரசனின் கட்டளையை உறுதிப்படுத்தினான்.

அர்தெசெஷ்டா லாங்கிமனஸ் கி.மு. 445 ல் எருசலேமை திரும்பக்கட்ட உத்திரவு பிறப்பித்தான். (நெகேமியா 2).

b) தானியேல் 9:25 ன் ஆய்வு பிரகாரம், 70 வாரங்களின் ஆரம்பம், தேவாலயத்தை அல்ல, *எருசலேமை* திரும்பக்கட்ட உத்திரவு பிறந்த நாள் முதல் 70 வாரங்களின் காலக்கடிகாரம் இயங்கத்துவங்கியது. சரியான ஒழுங்கின்படி, அர்தெசெஷ்டா கி.மு. 445 ல் கொடுத்த கட்டளை சரியான துவக்கம் என ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது

பெர்சிய அரசர்களின் பழக்கம் என்னவெனில், அவர்கள் புதுவருடத்தின் முதல் நாளில் நிசான் மாதம் முதல் தேதியிலே இப்படிப்பட்ட கட்டளைகளை பிறப்பிப்பர்.

ஸர். ராபர்ட் ஆண்டர்சன் இவர் லண்டனில் உள்ள ஜோதிடகலைஞர், இவர் கணிப்பின்படி, கி.மு. 445 நிசான் மாதம் முதல் தேதி, 14 ம் தேதி மார்ச் 445 கி.மு. என நிர்ணயிக்கப்படுகிறது.

c)  14 ம் தேதி மார்ச் மாதம் கி. மு. 445 - 490 வருடங்கள்

d) எருசலேமின் மதில்களும், எருசலேமும் 49 வருடங்களுக்குப் பிறகு (7 வாரங்கள்) மிகக்கடினமான சூழ்நிலையில் கட்டி முடிக்கப்பட்டது. போதுமான வேத ஆதாரங்களுடன் எருசலேம் மிக நெருக்கங்கள் நடுவே திரும்பக் கட்டப்பட்டது எனக்கூறமுடியும்.

🌷7. மேசியா யார்? -

இயேசுக்கிறிஸ்து !

லூக்கா எழுதின சுவிஷேசத்தில், இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, குருத்தோலை ஞாயிறு அன்று அவர் எருசலேமில் பிரவேசித்த பொழுது, திரள் கூட்ட ஜனங்கள் அவரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்று கூறி  அவரை வரவேற்றனர்.
(லூக்கா 19:38) எருசலேமில் குடியிருந்த ஜனங்கள், இவ்வாறு அவரை அழைத்தது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

🌷8. எப்பொழுது அவர்
சங்கரிக்கப்பட்டார் ?


*லூக்கா 3:1 ன் படி இயேசுக்கிறிஸ்து, திபேரியு இராயனின் 15 ம் ஆண்டில் ஞானஸ்நானம் பெற்றார்.*

அவரது ஊழியகாலம் மூன்று ஆண்டு காலங்கள், அவர் எருசலேமில் பிரவேசித்தது திபேரியு இராயனின் பதினெட்டாம் வருடத்தில் நிகழ்ந்தது. கிப்பன் என்பவரால் எழுதப்பட்ட *"ரோம சாம்ராஜ்யத்தின் சரிவும், வீழ்ச்சியும்"* என்ற புஸ்தகத்தில், திபேரியு கி.பி 14 ல் இராயன் ஆனான், அவன் எருசலேமில் பிரவேசித்தது குருத்தோலை ஞாயிறு கி.பி 32 ல் எனக்கூறப்படுகிறது.

👆இதைக்கணணி கணிப்பின் மூலம் ஆய்வு செய்தபோது, கி.பி. 32, நிசான் மாதம் 10 ம் தேதி அல்லது கி.பி. 32 ஏப்ரல் மாதம் 6 ம் தேதி என நிதானிக்கப்படுகிறது.

கிறிஸ்து கைது செய்யப்பட்டு விசாரனை துவங்கியது கி.பி.32 ஏப்ரல் மாதம் 9 ம் தேதியில் எனக் கணக்கிடப்படுகிறது
  
🌷9. இது சரி என்றால், மேசியா சங்கரிக்கப்படப்போகும் 483 யூத வருடங்களை கி.மு. 445 மார்ச் 14ம் தேதி முதல் கி.பி 32 ஏப்ரல் 6 ம் தேதி வரை ஒப்பிட்டு பார்ப்போமெனில், இவ்விரண்டு தேதிகளுக்கும் இடைப்பட்ட காலம் 476 வருடங்களும் 24 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

*இதை நாட்கணக்கில்
கீழ் கண்டவாறு👇 கணக்கிடுவோமெனில்:*

476 வருடங்கள் * 365 நாட்கள் = 173,740 நாட்கள்.
14/3 முதல் 6/4 = 24 நாட்கள்
லீப் வருட நாட்கள் = 116 நாட்கள்
மொத்த நாட்கள் = 173,880 நாட்கள்

*யூத காலக்கணக்கின் படி:*

483 * 360 = 173 880 நாட்கள்
நமது கணிப்பு இப்பொழுது நமக்கு காட்டுவது:-

14 மார்ச் கி.மு. 445 - 483 வருடங்கள் - 6 ஏப்ரல் கி.பி. 32.

👇கீழ்க்கண்ட கேள்விகள் இப்பொழுது எழலாம்.

🎈இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழ்ந்து விட்டதா?

 இல்லை.

💥கிறிஸ்து எருசலேமிற்குள் பவனி சென்ற நாளிலிருந்து கடைசி ஒருவாரம் (கடைசி 7 வருடங்கள்) நிகழ்ந்து விட்டதா? 💥

இல்லை.
  
*இதினிமித்தம் 69 வது வாரத்திற்கும் 70 வது வாரத்திற்கும் இடைப்பட்ட ஒரு வாரகாலம் நிறைவேற வேண்டியதாய் இருக்கிறது.*

கி.மு 445 - 483 வருடங்கள் - கி.பி.32 - இடைவெளி - 7 ஆண்டுகள் -
இரண்டாம் வருகை.

சபை யுகத்தில் இந்த இடைவெளி தேவனால் நிறப்பப்படுகிறதாய் இருக்கிறது.

*எழுபதாவது வாரம்அதாவது கடைசி ஏழு வருடங்கள் சபையுகத்தின் இறுதியில் ஆரம்பமாகும் அதாவது சபை எடுத்துக்கொள்ளப்படும்போது ஆரம்பமாகும்.*

👆இந்த எழுபதாவது வாரத்தின் ஏழு வருடங்கள் மனித சரித்திரத்திலே மிகவும் கொடிய நாட்கள் ஆகும் - உபத்திரவ காலம்.
  
இதன் படியே தானியேலின் 70 வாரங்களை கீழ்க்கண்டவாறு👇 பிரிக்கிறோம்:
  
*கி.மு 445  - 483 வருடங்கள் -

 *கி.பி. 32 - சபை யுகம் -

*குறிப்பிடப்படாத கால அளவு -

*இரகசியவருகை

*7 வருட உபத்திரவகாலம் -
  
*பகிரங்க வருகை.

(EVANGELICAL BIBLE COLLEGE)

[30/08 8:35 pm] Aa uma Sister VDM: 70 வாரங்களின  விளக்கத்தை இன்று தான் தெரிந்திருக்கிறேன்நன்றி.

[30/08 8:35 pm] Aa uma Sister VDM: Daniel 9:24

Seventy weeks.That is, seventy weeks of years, or 490 years, which reckoned from the seventh year of Artaxerxes, coinciding with the 4,256th year of the Julian period, and in the month Nisan, in which Ezra was commissioned to restore the Jewish state and polity, (Ezr 7:9-26) will bring us to the month of Nisan of the 4,746th year of the same period, or A.D. 33, the very month and year in which our Lord suffered, and completed the work of our salvation.

Lev 25:8; Num 14:34; Eze 4:6

[30/08 8:35 pm] Aa uma Sister VDM: *தானியேலின் 70 வாரங்கள் காலவரை என்பது 70 வாரங்கள் என்று அப்படியே எழுத்து வடிவில் எடுக்கக்கூடாது, கணக்கிடக்கூடாது என்று வேத வல்லுநர்கள்  கூறுகின்றனர்.*

[30/08 8:36 pm] Aa uma Sister VDM: தானியேல் 9: 24-27-ல் உள்ள 70 வாரங்கள் என்பது பைபிளின் மிகவும் கடினமான தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகும். இதற்க்கான வெளிப்படையான விளக்கங்கள் பலவும் சொல்லப்பட்டாலும் , ஒரு உறுதியான வெளிப்படையான விளக்கம் சொல்லப்படவில்லை என்று சொல்ல வேண்டும்...

[30/08 8:36 pm] Aa uma Sister VDM: தானியேலின் எழுபது வார தரிசனம்
  
“..இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். ..,உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது" தானியேல் 9:23-24

   இஸ்ரவேல் ஜனத்தின்மேலும், எருசலேம் நகரத்தின்மேலும் குறிக்கப்பட்ட எழுபது வார தரிசனமானது, நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்டிருந்த எருசலேமின் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை  மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தின் ராஜாவாகிய  அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே (கி.மு. 445 மார்ச் 14) வெளிப்பட்டது முதல் ஒவ்வொரு வாரமாக எண்ணப்பட்டு ஏழு வருட உபத்திரவ காலத்தின் முடிவில் (புற ஜாதியாரின் காலம் முடிவடைவதோடு) முடிவடைகிறது. எழுபது வாரம் என்ற காலகட்டமானது 490 வருடங்களை குறிக்கும். அதாவது ஒரு நாள் ஒரு வருடமாகவும் ஒரு வாரம் ஏழு வருடமாகவும் கணக்கிடப்படுகிறது.
ஒரு நாள்                =  ஒரு வருடம் (ஆதி 29:27; எண் 16.39 ; எசே 4:6)
ஒரு வாரம்             = ஏழு வருடம்
எழுபது வாரம்      = 7*70 = 490 வருடம்
   அர்தசஷ்டாவின் கட்டளை மூலம் ஓடத்தொடங்கிய எழுபது வார கடிகாரமானதுஅதன் முதல் 69 வாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்தன. அதன் முடிவில் கிறிஸ்துவாகிய மேசியா தமது சொந்த ஜனத்தினால் தள்ளப்பட்டு சங்கரிக்கப்பட்டதினிமித்தம்  எழுபது வார கடிகாரமானது 69 வாரத்தோடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மேசியாவை ஏற்றுக்கொண்டு பூரணராகும் யூத மற்றும் புற ஜாதியர்களின் நிறைவுக்காக கிருபையின் காலமாக தேவனால் நியமிக்கப்பட்டு மணவாட்டி சபையாக  உருவாகிக்கொண்டு வருகிறதுஇதன் மூலம் எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட்டு, பூரனராகும்படியாக எழுபதாவது வாரம் துவங்குவது தாமதிக்கப்படுகிறது. இது தானியேலுக்கு வெளிப்படுத்தப்படாத இரகசியமாகும்
   பூரணமாக்கப்பட்ட சபையின் நிறைவு உண்டானதும் கர்த்தராகிய இயேசு தமது இரகசிய வருகையில் வெளிப்பட்டு சபையை சேர்த்துக்கொண்டபின், எழுபது வார கடிகாரத்தின் எழுபதாவது கடைசி வாரமானது, ஏழு வருட உபத்திரவ காலத்தின் துவக்கத்தில் மீண்டும் ஓடத்துவங்கி ஏழு வருட உபத்திரவ காலத்தின் முடிவில் முடிவடையும்.
   அதன் பின் தானியேலுக்கு கொடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களையும், எருசலேம் நகரத்தையும் குறித்ததான வாக்குறுதிகள் (தானியேல் 9:24) ஆயிர வருஷ அரசாட்சியில் நிறைவேறும்.

IX.I. முதல் வாரத்தின் துவக்கத்தில் எருசலேமை திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுதல்
   நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்டிருந்த எருசலேமின் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை  மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தின் ராஜாவாகிய  அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே (B.C.445-MARCH-14) வெளிப்பட்டது. இது தானியேலின் எழுபது வார தரிசனத்தின் துவக்கமாயிருக்கிறது.
அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே.., தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்நெகேமியா 2:1,8

IX.I.I. இடுக்கமான காலங்களில் எருசலேமின் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படுதல்
அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.” நெகேமியா  6:15


   நெகேமியாவின் காலத்தில் யூத ஜனங்கள் எருசலேமின் வீதிகளையும் அதின் அலங்கங்களையும் மறுபடியும் திரும்ப எடுப்பித்துக் கட்டத்துவக்கியபோதுநிந்தை பரியாசம் (நெகேமியா  2:19; 4:1-3), யுத்தத்திற்கான தொடர்ச்சியான பயமுறுத்தல்கள் (நெகேமியா  4:7-12), கொலை செய்வதற்கான சதி ஆலோசனை (நெகேமியா  6:1,2), பொய்க்குற்றச்சாட்டுக் கடிதங்கள் (நெகேமியா  6:5-9), கள்ளத்தீர்க்கதரிசனம் (நெகேமியா  6:10,12), மிரட்டல் கடிதங்கள் (நெகேமியா  6:19) போன்ற பல ஏதுக்களை சத்துருக்கள் அவர்களுக்கு விரோதமாக பிரயோகித்தனர். ஆனாலும் அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டது (நெகேமியா  6:15).
IX.II. அறுபத்தொன்பதாவது வார முடிவில் மனுக்குலத்துக்காக மேசியா சங்கரிக்கப்படுதல்
  சரித்திர கணக்குப்படி எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பப்பட்ட நாளான கி.மு. 445 மார்ச் 14 முதல்  மேசியா சங்கரிக்கப்பபட்டது வரை (கி.பி. 32 ஏப்ரல் 6)  யூத காலேண்டர் (Lunar) படி 483 வருடங்கள் வருகின்றன. இது தானியேலின் எழுபது வாரத்தின் அறுபத்தொன்பதாவது வார முடிவாகும்.
அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல;..” தானியேல் 9:26
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; “ஏசாயா 53:5
IX.III. 69-வது வாரத்திற்கும் 70-வது வாரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர்களின் நிலைவரம்
    69-வது வார முடிவிலிருந்து 70-வது வாரம் துவங்குவது வரையிலான இடைப்பட்ட சபையின் (கிருபையின்) காலத்தில் இஸ்ரவேலர்களின் பல்வேறு நிலவரங்கள் பின்வருமாறு:
IX.III.I. இஸ்ரவேலர்களின் ஆவிக்குரிய குருட்டாட்டம்
   மேசியாவின் வருகையைப்பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருந்த அநேக தீர்க்கதரிசனங்களை யூதர்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் இத்தீர்க்கதரிசனங்களின் பூரண நிறைவேறுதலாக இயேசு வந்த போது அவர்கள் அவரை பகைத்து, அவரை புறக்கணித்துத்தள்ளினர். ஏனெனில் அவர் அவர்களின் விருப்பத்திற்கு அல்லது எதிர்பார்ப்புக்கேற்றவராய் காணப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மெசியாவாக அவர்களால் அவரை காணமுடியவில்லை. புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் இக்குருட்டாடம் தொடர்ந்திருக்கும். அதுவரை 70-வது வாரம் துவங்குவது தாமதிக்கப்பட்டு வருகிறது. அதன் பின் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்க்கும்படியாக இஸ்ரவேலர்களில் மீதியானவர்களாகிய முத்திரையிடப்படும்  1,44,000 இஸ்ரவேலர்களின் (வெளி 7:1-8) கண்கள் திறக்கப்படும்.
அப்பொழுது அவர் நீ போய்; இந்த ஜனங்களை நோக்கி நீங்கள் காதாரக் கேட்டும்  உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார். அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி, கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே”. ஏசாயா 6:9-11
கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார். ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து நீ இதை வாசி என்றால், அவன்; இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான், அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான் இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது...” ஏசாயா 29:10-14
“..அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.” ரோமர் 11:15,25
IX.III.II. எருசலேம் நகரமும் தேவாலயமும்  ரோம சாம்ராஜ்யத்தினால் அழிக்கப்படுதல்
  கிறிஸ்துவின் தீர்க்கதரிசன நிறைவேறுதலின்படி (லூக்கா 19:44) கி.பி. 70-ல் தீத்து இராயனால் எருசலேம் நகரமும் தேவாலயமும் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
“..நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது”. தானியேல் 9:26
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்”. மத்தேயு 24:1-2
அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்  பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்லூக்கா 21:6,24
IX.III.IV. இஸ்ரவேலர்கள் சிதறடிக்கப்படுதல்
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்லூக்கா 21:24
  கி.பி. 135 -ல் யூதர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சிதறடிக்கப்பட்டனர். ரோம ஆளுகைக்கு பின் பாலஸ்தீனா தேசமானது பல்வேறு ஆட்சியாளர்களின் கைகளுக்கு மாறிப்போயிற்று. கி.மு. 586 முதல் நேபுகாத்நேச்சார் துவக்கி புற ஜாதியாரால் மிதிக்கப்பட்டு வரும் எருசலேமை   கி.பி. 70 முதல் ஆண்ட புற ஜாதியார்கள் விபரம் பின்வருமாறு;
எருசலேமை ஆளுகை செய்தவர்கள்
வருடம்

ரோமர்
70-613

பாரசீகர்
613-627

ரோமர்
628-637

அரேபியர்
638-1076

துருக்கியர்
1077-1098

சிலுவை போர் வீரர்கள்               
1099-1186

எகிப்தியரும் சீரியரும்                  
1187-1228

ஜெர்மானியர்  
1229-1243

துருக்கியர் 
1244-1247

எகிப்தியர்
1248-1516

ஆட்டோமான் துருக்கியர்               
1517-1916

ஆங்கிலேயர் (சர்வதேச சங்கம்)  
1917-1948


IX.III.V. இஸ்ரவேலர்கள் (அத்தி மரம்) துளிர்விடும் காலம்
   கர்த்தராகிய இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளாமல் சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்ததினிமித்தம் பட்டுப்போன அத்திமரமாகிய யூதர்கள் (மத் 27:25), கர்த்தராகிய இயேசுவின் முன்னுரைப்பின் படி மீண்டும் துளிர் விட ஆரம்பித்தார்கள்.  19 -ம் நூற்றாண்டின் கடைசியில் யூதர்களுக்குள்ளே ஒரு பெரிய விழிப்பு உண்டாயிற்று. தியோடர் ஹர்ஷேல் (Theodore Herzel) என்னும் யூத வழக்கறிஞர் சீயோன் சங்கம் (ZIONISM) என்னும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். பாலஸ்தீனா யூதர்களுக்கு என்பது இச்சங்கத்தின் நோக்கமாயிருந்தது. அக்காலத்தில் பாலஸ்தீனா துருக்கியரின் ஆட்சியின் கீழ் இருந்தது.
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம்(GK,ENG:கோடை காலம்) சமீபமாயிற்று என்று அறிவீர்கள்”. மத்தேயு 24:32
IX.III.VI. இஸ்ரவேலர்கள் முதல் உலக மகா யுத்த முடிவில் சுயதேசத்திற்கு திரும்பி வருதல்
  முதல் உலக மகா யுத்தத்தில் யுத்தத்தின் ஆரம்பத்தில் ஜெர்மனி வெற்றி பெற்று முன்னேறிக் கொண்டிருந்தது. 1916 - ல் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்த பிரிட்டனுக்கு, யூத விஞ்ஞானியான வைஸ்மன் T.N.T. (TRI NITRO TOLUENE) என்னும்  வெடிமருந்தைக் கண்டுப்பிடித்துக் கொடுத்தார். ஆனால் அவ்வெடிமருந்து, ஆங்கில கால்வாயைக் கடந்து ஐரோப்பாவிற்குள் கொண்டு வருவதற்குள் அவ்வெடிமருந்து பழுதாகிவிட்டது.  ..“உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.” (யோபு 38:22-23) என்ற வேத வசனத்தின் படி   அவ்வெடிமருந்தை ஐஸ் கட்டிகளுக்குள் வைத்து அனுப்பினார். மருந்து பழுதடையவில்லை. யுத்தத்தில் பிரிட்டன் வெற்றிபெற ஆரம்பித்தது. பிரிட்டன் நன்றியுள்ள இருதயத்தோடு சீயோன் சங்க தலைவராகிய வைஸ்மனுடைய விருப்பப்படி பால்பர் அறிக்கையை பிரகடனப்படுத்திமுழு பலஸ்தீனா தேசமும் யூத மக்களுடைய தாயகம்என்று உறுதிப்படுத்தியது. இதன் மூலம் இஸ்ரவேலர்கள் முதல் உலக மகா யுத்த முடிவில் சுயதேசத்திற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர்.
  1917 டிசம்பர் 9 - ல் பிரிட்டிஷ் ராணுவ தளபதியும், யூத பக்திமானுமான ஜெனரல் அலென்பியின் ஒரு படைப்பிரிவு எகிப்திலிருந்து சூயஸ் கால்வாயைக் கடந்து பலஸ்தீனாவுக்குள் நுழைய, எருசலேம் வெற்றிக்கொள்ளப்பட்டது. 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 -ம் தேதி 11 மணிக்கு முதலாவது உலக மகா யுத்தம் முடிவடைய, ஹேர்பட் சாமுவேல் என்னும் யூதன் பலஸ்தீனா தேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,” எசேக்கியேல் 37:21
இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து, அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”. சகரியா 8:7-8
IX.III.VII. உலர்ந்த எலும்புகளான இஸ்ரவேலர்கள் பிரேதக்குழியிலிருந்து வெளிப்படுதல்
  சோவியத் யூனியனின் பாபி யார் பள்ளத்தாக்கிலே (தற்போதைய உக்ரைன்) 1941 ஆம் ஆண்டு செப்டம்பர்  29-30 ல் ஹிட்லர் மூலம் நாசிக்களால் நடத்தப்பட்ட ஹோலோகோஸ்ட (Holocaust) எனப்படும் யூதப்படுகொலையின் போது ஏறக்குறைய ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு பின்பு உலகின் நாலாபக்கம் சிதறுண்டு உலர்ந்த எலும்புகளாக காணப்பட்ட யூதர்கள், எசேக்கியேல் உரைத்த தீர்க்கதரிசனத்தின் படியே பிரேதக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது  முழுக்க முழுக்க தேவ கிருபையே ஆகும்.
ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.” எசேக்கியேல் 37:12
IX.III.VIII. இஸ்ரவேலர்கள் இரண்டாம் உலக மகா யுத்த முடிவில் ஒரே ராஜ்யமாகுதல்
     சிதறுண்டு போன கோத்திரங்களில் பத்து கோத்திரத்தார் அழிந்து போயினர் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் அசீரிய சிறையிருப்புக்குள் போன கோத்திரத்தார் பால்பர் பிரகடனத்துடன் (Balfour Declaration) யூத, பென்யமீன் ஆகிய இரு கோத்திரத்தாருடன் திரும்பி வர ஆரம்பித்தனர்.
   1947 ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலஸ்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்களுக்கு ஐம்பத்தைந்து சதவீதமும், அராபியர்ககளுக்கு நாற்பத்தைந்து சதவீதமும், எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கும் என்றும் முடிவு செய்தது. இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) இதை ஏற்க மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர் விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது. பிரிட்டனின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948-ல் இஸ்ரவேல் நாடு உருவானதாக டேவிட் பென்கூரியனால் அறிவிக்கப்பட்டதுஇவ்விதம் எல்ல யூதரும் இஸ்ரவேல் என்னும் சுதந்திர நாடாயினர். 1948 மே 14 யூத நாடு சுதந்திரம் பெற்று தனிராஜ்ஜியமாக திகழ ஆரம்பித்தது.
    இஸ்ரவேல் சுதந்திரம் பெற்றதை கேள்விப்பட்ட அயல் நாடுகளான எகிப்து, ஜோர்டான் , சிரியா, லெபனான், ஈராக் ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து கோபாவேஷத்துடன் படுபயங்கரமாக யூத தேசத்தை தாக்க ஆரம்பித்தன. தேவன் செய்த அற்புதத்தால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. கி.பி. 70-க்கு பின் இஸ்ரவேலர்களுக்கு சொந்த நாடு கிடைத்தது இதுவே முதல் முறை. 1967-ம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் யுத்தத்திலும் தேவன் இஸ்ரவேலை பாதுகாத்தார். இஸ்ரேலிய பாதுகாப்பு படை (ISRAEL DEFENSE FORCE) உருவான 1948 -ம்  வருடம் முதல் இன்று வரை ஒருவராலும் தாக்கி வெல்ல முடியாத சேனையாகவும் அதை எதிர்க்கிற ராஜ்யங்களுக்கெல்லாம் ஒரு பாரமான கல்லாக இருந்து வருகிறது. இப்போது இஸ்ரவேல் ராஜ்யமானது தொடர்ந்து பிரதம மந்திரிகளாலும் ஜனாதிபதிகளாலும் ஆளப்பட்டு வருகிறது.

   “எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள். அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை”. எசேக்கியேல் 37:10,22   

ISRAEL MAP
ISRAEL PRIME MINISTERS
ISRAEL PRESIDENTS


David Ben-Gurion
1948-1954
Chaim Weizmann
1949 – 1952
  
Moshe Sharett
1954-1955
Yitzhak Ben-Zvi
1952 – 1963
  
David Ben-Gurion
1955-1963
Zalman Shazar
1963 – 1973
  
Levi Eshkol
1963-1969
Ephraim Katzir
1973 – 1978
  
Golda Meir
1969-1974
Yitzhak Navon
1978 – 1983
  
Yitzhak Rabin
1974-1977
Chaim Herzog
1983 – 1993

 Menachem Begin
1977-1983
Ezer Weizman
1993 – 2000
  
Yitzhak Shamir
1983-1984
Moshe Katsav
2000 – 2007

 Shimon Peres
1984-1986
Shimon Peres
2007 – 2014

 Yitzhak Shamir
1986-1992
Reuven Rivlin
2014-Present
  
Yitzhak Rabin
1992-1995
WESTERN WALL JERUSALEM
  
Shimon Peres
1995-1996
  
 Benjamin Netanyahu
1996-1999

 Ehud Barak
1999-2001

 Ariel Sharon
2001-2006

 Ehud Olmert
2006-2009

 Benjamin Netanyahu
2009-Present

 IX.IV. எழுபதாவது வாரத்தின் முதல் பாதி

   எழுபதாவது வாரத்தின் முதல் பாதி என்பது அந்திகிறிஸ்துவின் எழுவருட உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை வருட உபத்திரவகாலமாகும். இக்காலகட்டம் யூதர்களுக்கு தற்காலிக சமாதான காலமாகும்.

IX.IV.I. இஸ்ரவேலுக்கு எதிரான உலக மகா யுத்தம்

    இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதை மையமாக வைத்து நடைபெறும் மூன்றாம் உலக மகா யுத்தத்தில், ரஷ்யா தலைமையிலான நாடுகள் தேவாலயப் பலி பொருட்களை கொள்ளையிடுவதர்க்காக வரும்போது, பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகள் ரஷ்யா தலைமையிலான நாடுகளை இஸ்ரவேல் மலைகளில் வீழ்த்தும். இஸ்ரவேலுக்கு எதிராக பிரவாகமாய் வருகிற சேனைகள் நேச நாடுகளிலிருந்து எழும்பும் அந்திகிறிஸ்துவினால் தடுத்து நிறுத்தப்படும். இஸ்ரவேலர்களுக்கும் இஸ்மவேலர்களுக்கும் அந்திகிறிஸ்துவினால் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நேச நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய யூனியனின் பத்து கூட்டணி நாடுகளுடன் கூடிய புதிய ரோம சாம்ராஜ்யம் எழும்பி  அந்திகிறிஸ்து முழு உலக தலைவனாக சமாதானமாக நுழைந்து ராஜ்யத்தை கட்டிக்கொள்வான். அன்றிலிருந்து தானியேலின் எழுபது வார தரிசனத்தின் கடைசி எழுபதாவது வாரம் ஆரம்பமாகும்.
வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்துபோகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.” ஏசாயா 14:31
IX.IV.II. இஸ்ரவேலர்கள் அந்திகிறிஸ்துவுடனான உடன்படிக்கையின் மூலம் தேவாலயம் கட்டப்படுதலும்  அந்திகிறிஸ்துவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளுதலும்
   ஏழு வருட உபத்திரவ காலத்தின் (70-வது வாரத்தின்) ஆரம்பத்தில் அந்திகிறிஸ்து (சின்ன கொம்பு) யூதர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளுவான். தேவனுடைய பிரசன்னமும் அவருடைய வல்லமையும் யூதர்களை உலக காரியங்களில் ஒருவரும் எதிர்த்து வெல்ல முடியாத ஒரு வல்லமையாக்கிவிடக்கூடும். ஆகையால் அந்திகிறிஸ்து தன் சொந்த ஆளுகையைக் காத்து கொள்ளும்படி யூதருடன் ஒருவித உடன்படிக்கையை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்படும். அதனடிப்படையில் யூதர்கள் கி.பி. 70-க்கு பின் வெகு காலமாய் காத்திருந்த எருசலேம் தேவாலயம் கட்டுவதற்கு அவன் அனுமதியளிப்பான். இதன் மூலம் தாங்கள் வெகு காலமாய் காத்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மெசியா இவர்தானென்று அவனை ஏற்றுக்கொள்ளுவார்கள். இந்த உடன்படிக்கையின் மூலம் முதல் மூன்றரை வருட உபத்திரவ காலம் (70-வது வாரத்தின் முதல் பாதி) யூதர்களுக்கு சமாதானமாகவே இருக்கும்.
அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி,.. தானியேல் 9:27
“…ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்வான். பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்;..” தானியேல் 10:21,22
"… வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.” யோவான் 5:43

IX.V. எழுபதாவது வாரத்தின் இரண்டாம் பாதி
  எழுபதாவது வாரத்தின் இரண்டாம் பாதி என்பது அந்திகிறிஸ்துவின் எழுவருட உபத்திரவ காலத்தின் இரண்டாம் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமாகும். இக்காலகட்டம் யூதர்களுக்கு மிகுந்த இக்கட்டுக் காலமாகும்.

IX.V.I. யாக்கோபின் இக்கட்டுக்காலமும்  1,44,000 இஸ்ரவேலர்களின் மீட்பும்
    70-வது வாரம் பாதி சென்ற போது (அதாவது மகா உபத்திரவ காலத்தின் துவக்கத்தில்) அந்திகிறிஸ்து யூதர்களுடனான உடன்படிக்கையை முறித்து தேவாலயத்தை தீட்டுப்படுத்தி, அன்றாட பலியை நீக்கி பாழாக்கும் அருவருப்பை ஸ்தாபித்து தன்னை தேவனாக்கி கொள்ளுவான். இதை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரவேலர்களை அவன் உபத்திரவப்படுத்துவதினிமித்தம் அந்த மீதி மூன்றரை வருடம் முழுவதும் யாக்கோபுக்கு இக்கட்டுக்காலமாயிருக்கும். இந்த மூன்றரை வருட முடிவில் அர்மேகதொன் யுத்தத்தில் எருசலேம் நகரமானது கிறிஸ்துவும் அவரது மணவாட்டி சேனைகளாலும் கைப்பற்றப்படும். அதோடு தானியேலின் 70-வது வார தரிசனத்தின் 70-வது வாரம் முடிவுக்கு வரும்.
    மறு பக்கத்தில் ஏழு வருட உபத்திரவத்தின் முதல் மூன்றரை வருட முடிவில் உபத்திரவ கால இரத்த சாட்சிகளை சேர்க்கும்படி கர்த்தராகிய இயேசு மேகங்களில் வெளிப்படும்போது (மத் 24:29-31) தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்க்கும்படியாக இஸ்ரவேலர்களில் மீதியானவர்களாகிய முத்திரையிடப்படும்  1,44,000 இஸ்ரவேலர்களின் (வெளி 7:1-8) கண்கள் திறக்கப்பட்டு (சகரியா 12:10; வெளி 1:7) அவரை தங்கள் மெசியாவாக அங்கீகரிப்பார்கள். எல்லா கோத்திரத்தார் மீதும் தேவன் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவார். அவர்கள் அவருக்காக துக்கிப்பார்கள். இதன் மூலம் 1,44,000 இஸ்ரவேலர்கள் தூதர்களால் முத்திரையிடப்பட்டு மகா உபத்திரவ கால முழுவதும் பாதுகாக்கப்படுவார்கள்.
அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.” தானியேல் 9:27
ஐயோ அந்த நாள் பெரியது அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்எரேமியா 30:7
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்” IIதெச 2:4
IX.VI. எழுபது வாரத்திற்கு பின் (ஆயிர வருஷ அரசாட்சி)
    கிருபையின் ஆவி, விண்ணப்பங்களின் ஆவி, இவற்றின் மூலம் உண்டான உணர்வினாலும், தாங்கள் குத்தினவரை தரிசித்ததினாலும், இரு சாட்சிகளின் தீர்க்கதரிசன ஊழியத்தினாலும், உபத்திரவத்தின் அக்கினியினாலும் (சகரியா 13:8-9), முத்திரையிடப்பட்ட 1,44,000 இஸ்ரவேலர்கள் தங்கள் சகல அசுத்தங்களும் அருவருப்புகளும் நீங்கி சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுடைய ஜனங்கள் என அழைக்கப்பட தகுதியாகின்றனர். இதன் மூலம் இவர்கள் 1000 வருஷ அரசாட்சியில் பிரவேசித்து மாம்சத்தின்படி பலுகி பெருகி பூமியை நிரப்புவார்கள். அதன் பின் தானியேலுக்கு கொடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களையும், எருசலேம் நகரத்தையும் குறித்ததான வாக்குறுதிகள் (தானியேல் 9:24) நிறைவேறும். ஆயிர வருஷ அரசாட்சி துவங்கும்போது அவர்களுக்கு ஆராதனை செய்வதற்கு ஒரு ஆலயம் உண்டாயிருக்கும் (ஏசாயா 2:2-3 ; சகரியா 14:16-21 ; எசே 37:22-28).
   இஸ்ரவேலர்கள், நியாயப்பிரமாணத்தை விசுவாசத்தினால் தேடாமல் அதின் கிரியைகளினால் தேடினபடியால் கிருபையின் காலமுழுவதும் சீயோனில் வைக்கப்பட்ட மூலைக்கல்லில் இடறுவதினால் நீதிப்பிரமாணத்தை அவர்களால் அடைந்து கொள்ள முடியவில்லை (ரோமர் 9:31-33). விசுவாசிக்கிறவர்களுக்கு நீதி உண்டாகும்படிக்கு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் (ரோமர் 10:4). ஆயிர வருஷ அரசாட்சியில் இஸ்ரவேலர்கள், நியாயப்பிரமாணத்தை விசுவாசத்தினால் நிறைவேற்றுவார்கள். மீட்கிறவராகிய மேசியா சீயோனிலிருந்து வந்து இஸ்ரவேலர்களுடைய அவபக்தியை நீக்குவார் (ரோமர் 11:26-27). 
IX.VI.I ஆயிர வருஷ அரசாட்சியில் இஸ்ரவேலர்களின் ஆசீர்வாதங்கள்
"மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.” தானியேல் 9:24
      ஆயிர வருஷ அரசாட்சியில் இஸ்ரவேலர்களுக்கு கீழ்க்கண்ட ஆறு ஆசீர்வாதங்கள் உண்டாயிருக்கும்.
இஸ்ரவேலர்களின் அனைத்து மீறுதல்களும் தவிர்க்கப்படும்.

இஸ்ரவேலர்களின் பாவங்கள் அனைத்தும் தொலைக்கப்படும்.

இஸ்ரவேலர்களின் சகல அக்கிரமமும் நிவிர்த்திபண்ணப்படும்.

இஸ்ரவேலர்களுக்கு நித்திய நீதி உண்டாயிருக்கும்.

இஸ்ரவேலர்களைக் குறித்து உரைக்கப்பட்டதான சகல தரிசனமும் தீர்க்கதரிசனமும் முத்திரிக்கப்பட்டு நிறைவேறும்.

இஸ்ரவேலர்களின் மகா பரிசுத்த ஸ்தலம் அபிஷேகம் பண்ணப்படும்.


[30/08 8:36 pm] Aa uma Sister VDM: எழுபது வாரம் கடிகாரமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments