Type Here to Get Search Results !

லவோதிக்கேயா சபையின் குறைகள், நிறைகள் என்னென்ன❓

 [30/08 8:24 pm] Aa uma Sister VDM: ⛪ *இன்றைய வேத தியானம் - 28/08/2017* ⛪

1⃣ லவோதிக்கேயா என்பதன் அர்த்தம் என்ன

2⃣ லவோதிக்கேயா சபையின் குறைகள், நிறைகள் என்னென்ன

3⃣ இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் *உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.* Rev. 3:16 - என்பதன் அர்த்தம் என்ன

4⃣ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் *என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.* Rev. 3:21 - என்பதன் அர்த்தம் என்ன
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 *Vedathiyanam offline / online application* -  https://goo.gl/JpGaev

*Vedathiyanam in WordPress* - https://goo.gl/WSHGAE

*Vedathiyanam in blog* - https://goo.gl/EiYkb1

*Vedathiyanam in Facebook* - http://fb.com/vedathiyanam

*Vedathiyanam in Twitter* - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[30/08 8:24 pm] Aa uma Sister VDM: லவோத்கேயா சபை - இக்காலத்திய எதிர்ப்பு சபை - விசுவாச துரோக சபை (Apostate church)

*லவோதிக்கேயா என்றால் அரைமனசானவன், அலட்சியமானவன் (முக்கியமாக மதரீதியாக அரசியல் ரீதியாக)*

குறைகள்:

1. குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறாய்

2. நிர்ப்பாக்கியமுள்ளவன் (மகிழ்ச்சியில்லாத செழிப்பில்லாத நிலை)

 3. பரிதாபிகரமான நிலை

4. ஆவியில் தரித்தின்

5.குருடன் - வசனங்களை அறியாதவன் - தைலமாகிய நல்ல உபதேசம் தேவை

6. நிர்வாணி - நற்குணங்கள் இல்லாதவன் 

*வெதுவெதுப்பாயிருப்பதால் வாந்தி பண்ணி போடுவேன் என்றால் கர்த்தர் தன் இருதயத்திலிருந்து எடுத்து விடுவார்.*

இந்த 7 சபைகளின் தீயவைகளை மேற்கொண்டு ஜெயித்தால் இயேசு கிறிஸ்துவின் இதயத்தை பிடித்து விடலாம். ஆமென்

யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,                   (வெளி. விசேஷம் 1 :4)

[30/08 8:24 pm] Aa uma Sister VDM: 💥லவோதிக்கேயா சபை💥

உலக சபை அல்லது கடைசி கால சபை

லவோதிக்கேயா - 'ஜனங்களின் உரிமைஅல்லது 'நியாயத் தீர்ப்பு'

*லவோதிக்கேயா பட்டணம்:*

இது பிலதெல்பியாவிலிருந்து  தென் திசையில் 43 மைல் தூரத்திலிருந்தது. கி.மு.250 ல் 2 ம் அந்தியோக்கஸ் தன் மனைவி லவோதிக்கேயாவின் ஞாபகார்த்தமாக இப் பட்டணத்தைக் கட்டினான். எனவே, இப்பட்டணத்துக்கு லவோதிக்கேயா என பெயர் வந்தது

கி.பி.60 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இப்பட்டணம் படு சேதமடைந்தது. இப்பட்டணத்தை சீர்படுத்த ரோம அரசாங்கம் பணம் கொடுக்க முன் வந்தும் இப்பட்டணத்தார் இப் பணத்தை வாங்க மறுத்து தாங்களே தங்கள் சொந்த செலவில் பட்டணத்தை சீர்படுத்திக் கொள்வதாக கூறினர்.

இங்கு துணி நெய்யும் தொழிலும் மிக பிரபல்யமாய் நடந்து வந்தது. ஆடுகள் திரளாய் வளர்க்கப்பட்டது. எனவே, கம்பளம் நெய்யும் தொழிலும் சிறப்பாய் நடைபெற்றது. இன்று அறியப்பட்ட உலகத்திற்கு இப்பட்டணத்திலிருந்து ஆடைகள் அனுப்பப்பட்டன.

இங்கு ஒரு கண் மருத்துவ சாலையும், மருத்துவக் கல்லூரியும் இருந்தது. இப்படணத்தில் மூன்று நாடக சாலையும், 30,000 பேர் இருக்கும் ஒரு சர்க்கஸ் அரங்க சாலையும் இருக்கிறது.

இச்சபை கொலேசே பட்டணத்து எப்பாப்பிராவினால் ஸ்தாபிக்கப்பட்டது. 4 ம் நூற்றாண்டில் லவோதிக்கேயா சபையின் ஆலோசனைக்குழு ஒன்று கூடி வேத புத்தகங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது வெளிப்படுத்தலின் புத்தகத்தை தள்ளிப் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இப்பட்டணம் அழிக்கப்பட்ட நிலையிலுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் இந்நிலை உண்டாயிற்று. இன்று இப்பட்டணம் இருந்த இடம் வனாந்திரமாய் உள்ளது. துருக்கி நாட்டிலுள்ள இவ்விடத்துக்கு இப்போது எஸ்கிஹிசார் என்று பெயர்.

*இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:*

1. உண்மையும் சத்தியமுள்ள சாட்சி

2. தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதி

3. ஆமென் என்பவர்

இச்சபையின் நற்குணங்கள் ஒன்றும் கூறப்படவில்லை.

*தீய குணங்கள்:*

1. வெதுவெதுப்பான நிலை

2. நிர்பாக்கியமுள்ளது

3. பரிதபிக்கபட்டது

4. ஆவிக்குரிய நிலையில் தரித்திரம்

5. ஆவிக்குரிய கண் குருடாயிருந்தது

6. ஆவிக்குரிய நிலையில் நிர்வாகி

7. குறைவிருந்தும், ஒரு குறைவும் இல்லை என்கிற மாய்மாலம்

*எச்சரிப்பு:*

1. நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரங்களையும், கண்களுக்கு கலிக்கத்தையும் வாங்கிக் கொள்.

2. நீ ஜாக்கிரதையாய் இருந்து மனம் திரும்பு

*ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:*

லூக்கா: 22:28-30; எபேசியர்: 2:7;  2தீமோத்தேயு: 2:12;  வெளிபடுத்தல்: 20:6

கிறிஸ்துவின் சிங்காசனத்தில் அவரோடுகூட உட்காரும் சிலாக்கியம்.

http://nesarin.blogspot.in/2012/12/blog-post_5311.html?m=1

[30/08 8:24 pm] Aa uma Sister VDM: *இந்த 7 சபைகளின் தீயவைகளை மேற்கொண்டு ஜெயித்தால் இயேசு கிறிஸ்துவின் இதயத்தை பிடித்து விடலாம். ஆமென்.*

[30/08 8:24 pm] Aa uma Sister VDM: 3⃣ இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் *உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.* Rev. 3:16 - என்பதன் அர்த்தம் என்ன

வாந்திப்பண்ணுவேன் என்று ஆண்டவர் கூறும் ஆவிக்குரிய அர்த்தம் என்ன?

[30/08 8:24 pm] Aa uma Sister VDM: Revelation      3:14-22
14 "லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"
15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
17 "நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;"
18 "நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்."
19 "நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு."
20 "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்."
21 "நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்."
22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

[30/08 8:24 pm] Aa uma Sister VDM: 👍🏻👍🏻

*கிறிஸ்துவின் சபை*யார் ( Church of Christ)   என்பவர்கள் இப்படியும் சொல்லக்கேள்விப்படிருக்கிறேன்... சபைக்கு பெயர் வைக்கவே கூடாது *கிறிஸ்துவின் சபை* என்றே அழைக்கப்பட வேண்டும் .. மேலும் ஊர் பெயரை வைத்தும் அழைக்கலாம் ஆனால் சபைக்கு *நானே நல்ல மேய்ப்பன் சபை, கிருபாசனம், பெந்தோகோஸ்தே சபை, அப்போஸ்தல ஐக்கிய சபை, மாரநாதா சபை, சிஎஸ்ஐ சபை என்று பெயர் வைப்பது வேதத்தின் படி தவறு என்று அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

அவர்கள் சபைக்கு பெயர் வைக்கக்கூடாது என்று ஆதாரமாக வைக்கும் வசனம்.👇🏻👇🏻👇🏻

ரோமர் 16:16
[16]ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். *கிறிஸ்துவின் சபையார்* உங்களை வாழ்த்துகிறார்கள்.

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: There was only one Church in the city during early apostolic days.
[30/08 8:25 pm] Aa uma Sister VDM: Now we have do many churches in one city town  and even in villages.
To identity each church we have named the churches according to our doctrine or name from Bible

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: நாங்க இருக்கிற பகுதியில்... ஒரே ஏரியாவில் ஒரு கி.மீ கூட இருக்காது 7 8 சபைகள் இருக்கிறது...

சபை பெயர்கள்👇🏻

பிரதரன் சபை
செவன்த் டே சபை
மெதடிஸ்ட் சபை
இரண்டு கிருபாசனம் சபை
மெதடிஸ்ட் சபை
Free மெதடிஸ் சபை

நாங்க ஒரு சபைகாரங்க ஒரு சபைக்கு போவதில்லை.🤔🙄

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: Good ellam place eppati tha eruku max 1C.S.I Pentecost rc and 7th day church

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: அசத்தியத்தை ஏற்றுக் கொண்டால் எல்லா சபைகளுக்கும் செல்லலாம்

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: 👍🏻👍🏻

நான் மற்ற சபைகளுக்கும் செல்வதுண்டு, கிடியோன் ஊழியத்தின் நிமித்தமும், மற்ற சபைகளின் விசேஷித்த நாட்களிலும்.

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: ஆனால் சில சபை போதகர்கள் இதை அனுமதிக்கமாட்டனர்.

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: ஆனாலும் துர்உபதேசக்காரர்களோடு கை கோர்ப்பது சரியில்லையே

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: 2 John          1:10-11
10 "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்."
11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: யோவானின் காலத்திலும் இப்படிபட்ட   ஆட்கள் இருந்தனர்

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: RC, Only Jesus, Jehovah witness தவிர மற்ற எந்த சபைகளும் கிடியோன்ஸ் Presentation பண்ண போய் விடுவோம்.

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: மற்ற அந்த சபைக்காரர்கள் மாமா, மச்சான் உறவு பாஸ்டர்... கைக்கோர்த்தாதான் நாம் பெலமா இருக்கும் பட்சத்தில் அவர்களையும்  இழுக்க முடியும் நம்ம பக்கம்.😀💪🤝

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: இந்த வசனம் ஒன்லி ஜீஷஸ், ஜெகோவா விட்னஸ் காரர்களுக்கு மட்டும் பொருந்தும் என நினைக்கிறேன்....தற்போதைய காலக்கட்டத்தில்...

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: ஏனென்றால் ஏழாம் நாள் காரர்களும், வேத மாணாக்கர்களும்,Hyper grace,  மற்ற சில சபையினரும் ஆபத்தானவர்களே...

தேவத்துவத்தை மறுதலிக்கும் கூட்டத்தினர் இதை விட ஆபத்தானவர்கள்.

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: லவோதிக்கேயா, மற்ற ஒவ்வொரு சபையை சொல்லும்போது ..  அந்த சபை ஊரின் பெயரினால் அழைக்கப்படுகிறது.

இன்றைக்கு நவீன உபதேசத்தை உபதேசிக்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஒரு ஊருக்கு ஒரு திருச்சபைதான் இருக்க வேண்டும் என்றும், ஆதி அப்போஸ்தல காலத்தில் அப்படிதான் இருந்தது என்று சொல்லுகிறார்கள்..ஆனால் அதற்கு வேத ஆதாரம் இல்லை.

லவோதிக்கேயா சபை என்பது லவோதிக்கேயாவில் கூடிவருகிற சிறு சிறு சபைகளை குறிக்கிறதாக இருக்கிறது. உதாரணத்திக்கு மங்களுர் சிட்டியில் ஒரே ஒரு சபைதான் இருக்க வேண்டுமென்று சொன்னால் ... சிட்டியின் மற்ற இடத்திலிருந்து 30 40 கி.மீ பயணம் செய்து வரவேண்டும் அந்த குறிப்பிட்ட இடத்திற்க்கு. ஆகையால் அப்படிப்பட்ட அர்த்தத்திற்க்கு அது சொல்லப்பட்டிருக்காது.

சிலர் சொல்லுகின்றார்கள் .. ஊர் பெயரில் தான் சபை இருக்க வேண்டும், உங்க சபை பரலோகம் போகாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு நல்ல பாடமாக வெளிப்படுத்தின விசேஷத்தில் கர்த்தர் சொல்லிய காரியம் இருக்கிறது.

- Pastor Sam

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: லவோதிக்கேயா என்பது துறைமுகங்களை கொண்ட பட்டணமாகவும், செயற்கையாக துறைமுகங்களை கொண்டவாணிபத்தில் சிறந்து விளங்குவதாக இருந்தது, மிகவும் செல்வந்ததாக இருந்தது.

லவோதிக்கேயா சபைக்கு ஆண்டவர் சொல்லும் காரியங்களை வைத்து நாம் புரிந்துக்கொள்ள முடியும்...

ஆண்டவர் தன்னை எப்படி Introduce பண்ணுகிறார் என்றால்...
👇🏻
வெளிப்படுத்தின விசேஷம் 3:14
[14]லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: *உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர்* சொல்லுகிறதாவது;

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஒரு நாமம் - ஆமென் என்பது. ஆமென் என்பது அப்படியே ஆகட்டும் என்பது மாத்திரமல்ல.. இயேசுகிறிஸ்துவின் பெயரையும் கொண்டதாக இருக்கிறது.

இந்த ஆமென் வார்த்தைக்கு  எபிரேயத்தில் விசுவாசம் என்று அர்த்தம். அதனால் தான் எபிரேய ஆக்கியோன் இயேசுகிறிஸ்துவை விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவரும் என்று சொல்லுகிறார்.

இயேசுகிறிஸ்துவிற்க்கு ஆமென் என்று சொல்ல இன்னோரு ஒரு காரணம் என்னவென்றால் அவர் பிறந்ததுமுதல், மரித்து உயிர்ந்தெழுந்த பின்பதாக கூட பிதாவின் சித்தத்தை செய்கிறவராக எல்லா சூழ்நிலையிலும் இருந்தார். தேவனுடைய சித்தத்தை எந்த சூழ்நிலையிலும் செய்யும் விசுவாசம். ஒரு குழந்தை தன்னை தூக்கிவைத்திருக்கிற தாயின் மேல் என்ன விசுவாசம் வைத்திருக்கிறதோ அது தான் விசுவாசம். இயேசுகிறிஸ்துவிற்க்கு இருந்த விசுவாசம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

- Pastor Sam

[30/08 8:25 pm] Aa uma Sister VDM: வெளிப்படுத்தின விசேஷம் 3:15
[15]உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; *நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.*

வெளிப்படுத்தின விசேஷம் 3:16
[16] *இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.*

லவோதிக்கேயா சபைக்கு புரியும்படியாக பேசுகிறார்...லவோதிக்கேயா பகுதியில் இயற்கையாகவே தண்ணீர் கிடையாது அவர்கள் ஆறு மைல் தொலைவிலிருந்து வெண்ணீர் ஊற்றிலிருந்து அந்த லவோதிக்கேயா நகரத்திற்க்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அந்த காலத்தில் சுரங்கங்கள் தோண்டி இங்கே கொண்டு வருவார்கள்.

வெண்ணீர் அங்கேயிருந்து இங்கே வருவதற்க்குள் சுண்ணாம்பு கலந்த தண்ணீராக சூடாகவும் இல்லாமல், குளிராகவும் இல்லாமல்  useless தண்ணீராக மாறிவிடும். ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்றால் அந்த தண்ணீரைப் போல குடிக்கவும், குளிக்கவும்  எதற்கு உதவாத மாதிரி இருக்கிறாய் என்று எச்சரிக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:17
[17] *நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;*

லவோதிக்கேயா நகரம் ஆடைகளுக்கும் பெயர் வாங்கினதாய் இருந்தது. தன்னுடைய நிலையை அறியாத ஒரு சபையாக லவோதிக்கேயா சபை இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 3:18
[18]நான்: *நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும்,* *உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், *நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று* உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

பொன் என்று சொல்லும்போது, யோபு சொல்லுகிறார் நான் சோதித்தபின்பு பொன்னாக விளங்குவேன் என்று...கர்த்தர் அந்த சபையை புடமிடுவேன் என்று சொல்லுகிறார்.

கலிக்கம் என்றால் குதிரை கண்ணை மறைக்கும் கலிக்கம் என்று சொல்லுகிறார்கள் ஆனால் நான் ஒருவரிடம் பேசின விதத்தில் புரிந்துக்கொள்ளுதலில் நான் சொல்லுகிறேன் ...கலிக்கம் என்றால் களிம்பு, லவோதிக்கேயா பெரிய கண் மருத்தவமனையில் கொடுக்கப்பட்ட களிம்பு பிரசித்தம்பெற்றதாக இருந்தது ஆகவே ஆண்டவர் சொல்லுகிறார் உன் கண்ணுக்கு மருந்து போட வேண்டுமா என்று ...

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19] *நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.*

சிட்சை நல்லதுபாவம் செய்கிறவர்களை சிட்சிக்கிறார்.. மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துகிறார். மனந்திரும்ப வேண்டியது அவசியம்.

- Pastor Sam

[30/08 8:26 pm] Aa uma Sister VDM: வெளிப்படுத்தின விசேஷம் 3:20
[20]இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

இந்த இடத்தில் ஆண்டவர் இரட்சிக்கப்பட்டவர்களிடத்தில் திருச்சபைக்கு பேசிக்கொண்டிருக்கிறார்.

 வாசற்படி என்பது முக்கியமானது. ரூத் புத்தகத்தில் பட்டணத்தின் வாசற்படியில்போவாஸ் அவனுடைய உடன் சுதந்திரவாளியானவனிடத்தில் உடன்படிக்கை செய்வான் So அது பட்டணத்தின் வாசல் அது.

அதேப்போல வீட்டு வாசற்படி என்பது வெளியேயிருக்கிறவரிடத்தில் செய்கிற ஒரு உடன்படிக்கை. திருணத்தில் இதுஒரு முக்கியமான காரியமாக இருக்கிறது.

 நம் ஊரில் .. திருமணத்திற்க்கு பின்பு மணமகள் வீட்டிற்க்கு நுழையும் போது அந்த மணமகள் தன் கணவனோடு உடன்படிக்கை செய்கிறாள். அவள் அந்த வீட்டு வாசல் படியில் வரும்போது அவள் அந்த வீட்டிலிருப்பவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்கிறாள்.

முந்தைய காலத்தில் பெண் கேட்டு வருகிறவர்கள்.. மாப்பிளை வீட்டார் வாசலில் நிற்பார்கள்அவர்களை உள்ளே வாருங்கள் என்று கூப்பிடுவார்கள். இதை எலியேசர் காரியத்தில் பார்க்கலாம். லாபான் சொல்லுவான்.

ஆதியாகமம் 24:31
[31] *அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.*

வாசலை விட்டு தாண்டி உள்ளே வருவது என்பது அது ஒரு உடன்படிக்கையாக இருந்தது.

2 யோவான் 1:10-11
[10] *ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.*
[11]அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.

- Pastor Sam

[30/08 8:26 pm] Aa uma Sister VDM: வீட்டிற்க்கு வந்த பின்பு என்ன செய்வார்கள் என்றால், போஜனம் பண்ணுவார்கள்.

வாசல்படியில் ஒரு சின்ன குழி இருக்கும்.நீங்களும் பார்த்திருக்கலாம் அவர்களிடத்தில் எதற்காக இந்த குழி என்று கேட்டால் அவர்களுக்கு தெரியாது.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரத்தை பார்த்தோமானால், வாசலில் யாராவது வெளியிலிருந்து வந்தால்.. அந்த குழியில் இரத்தத்தை ஊற்றுவார்கள் , யார் அந்த இரத்தத்தை தாண்டுகிறார்களோ அவர்களோடு உடன்படிக்கை செய்கிறார்கள்

இந்த வாசல்படி இங்கு தான் ஆண்டவர் நின்றுக்கொண்டிருக்கிறார்.யார் அவருக்கு கதவை திறக்கிறார்களோ அவர்களோடு ஒரு நித்திய உடன்படிக்கையை செய்துகொள்ளுகிறார், போஜனம் பண்ணுகிறவராயிருக்கிறார்.

- Pastor Sam

[30/08 8:26 pm] Aa uma Sister VDM: யார் ஆண்டவரோடு போஜனம் பண்ணக்கூடிய Communion fellowship வருகிறதோ, அவர்கள் ஆண்டவரோடுகூட இயேசுகிறிஸ்து எப்படி உட்கார்ந்தாரோ அதேப்போல அவரோடு உட்காருவார்கள்.

Every communion is a remembering an engagement service. இயேசுகிறிஸ்துவோடு கூட திருச்சபையானது பண்ணிக்கொண்ட அந்த நிச்சய உடன்படிக்கை நினைவு கூறும்படியாக இருக்கிறது. So கடைசி வரைக்கும் ஆண்டவருக்கு உண்மையாக இருந்தால் அவரோடு கூட உட்கார அருள் செய்வார்.

தான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று தெரியாத நிலைமையில் தான் சபை இருந்துக்கொண்டிருக்கிறது. வெளியே பாட்டு ஆராதனை என்று நன்றாக இருக்கிறது ஆனால் உள்ளே பரிசுத்தம் இல்லை. பிரயோஜனம் , ஆத்தும ஆதாயம் இல்லாம நிலையில் சபை போய்க்கொண்டிருக்கிறது. இதைவிட்டு மந்திரும்ப வேண்டும்அந்த Communion நிறைவுகூற வேண்டுமென்று கர்த்தர் இங்கே சொல்லுகிறார்.God bless you.

- Pastor Sam

[30/08 8:35 pm] Aa uma Sister VDM: Praise the lord
இதுவரை 7 சபைகளை குறித்த விளக்கம்  புரியும்படியாகவும  போதுமானதாகவும் அருமையாகவும்
 இருந்த்துஇருப்பினும் எனக்கு 7 சபைகளும் தற்சமயம  எந்தெந்த
 நாடுகளில் இருந்தன எனபதை  அறிந்து கொள்ள விரும்புகிறேன்.துருக்கி  _யை   சுட்டிக்காட்டடினீரகளே்.
வரலாற்றை  விளக்கும்போத அது சம்பந்தமான அரிய பத்தகங்கள் , வீடியோ க்கள் பெட்டி செயதிகள  _இவை கிடைக்குமிடம்,   தறசமயம் இருப்பிடத்தின்
 நிலைமை  போன்ற தகவல்களை தரலாமே. வேகமாக முடிக்க  வேண்டிய கட்டாயமா? என் எதிர்ப்பார்ப்பெல்லாம் அனலுமின்றி குளிருமின்றி _என்பதற்கு  Bro.Sam அவரகள் வெந்நீர் ஊற்று  வரலாறை அருமையாக சுட்டிக்காட்டினாரே அப்படி இருக்க வேண்டும். அட்மினரலகள்  கிறிஸ்தவ வரலாற்று   ஆசிரியர்களை முன்னமே பேட்டி கண்டு அதை வெளியிணலாம். நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும்  மேலாக கர்த்தர் பெரிய காரியங்களை VEDA THIYANAM _மூலமாக செய்வாராக.ஆமென்!

[30/08 8:55 pm] Aa uma Sister VDM: 
*வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்ட ஏழு சபைகளின் நகரங்கள் நவீன துருக்கி நாட்டில் இருக்கின்றன.*👇🏻👇🏻

1⃣ எபேசு

எபேசில் நவீன துருக்கியில் அமைந்துள்ள எபேசு கிழக்கு மத்தியதரைக் கடலில் மிகப்பெரிய மற்றும் செல்வந்த நகரங்களில் ஒன்றாகும். இது சுமார் 250,000 மக்களைக் கொண்டது. கிரேக்க தெய்வம் ஆர்ட்டிஸ் கோவில் அங்கு அமைந்திருந்தது.

2⃣ சுமிர்னா

நவீன துருக்கியில் அமைந்துள்ள இது இப்போது இஸ்மிர் என அழைக்கப்படுகிறது. சுமிர்னா எபேசுவில் வடக்கே ஆசியாவின் ரோமானிய மாகாணத்தின் (நவீன துருக்கியின்) ஏஜியன் கடலோரப் பகுதியிலுள்ள ஒரு நகரம். அது அற்புதமான கட்டிடங்களைக் கொண்டிருந்தது, மேலும் ஆசியா மைனரில் மிகவும் வளமான நகரங்களில் ஒன்றாக இருந்தது. கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் லீதியர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு கிரேக்க காலனியாக இருந்தது. இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது, பின்னர் ரோம் ஒரு நட்பு மாறியது. இறுதியில் எபேசுவிலிருந்து சுவிசேஷம் பரவியது.

3⃣ பெர்கமு

Pergamon அல்லது Pergamum என்றும் அறியப்படுகிறது. மேற்கு ஆசியா மைனரில் (நவீன துருக்கி), ஸ்மிர்னாவுக்கு வடக்கே, மற்றும் ஏஜியன் கடலில் இருந்து சுமார் 15 மைல் தூரத்திலுள்ள நகரம். சிறிது காலமாக அது ரோமன் மாகாண ஆசியாவின் தலைநகரமாக இருந்தது.

4⃣ தியத்தீரா

நவீன துருக்கியில் அமைந்துள்ள இது இப்போது அக்சார் என அழைக்கப்படுகிறது. தியத்தீரா லிசஸ் ஆற்றின் மீது ஆசியா மைனரில் (நவீன துருக்கி) ஒரு நகரமாக இருந்தது. பிலிப்பியில் இருந்தபோது பவுலும் அவரோடிருந்தவர்களும் லீதியாளின் வீட்டில் தங்கும்படி அழைக்கப்பட்டார்கள் (அவளும் அவளுடைய வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்).

5⃣ சர்தை

சர்தைஸ்மிர்னாவுக்கு 50 மைல் தொலைவில், ஆசியா மைனர் (துருக்கி), தெனாட்டிராவின் தெற்கே 30 மைல் தூரத்தில் உள்ள ஒரு நகரம். இது முன்னர் லிடியாவின் தலைநகரமாக இருந்தது, கிமு 129 ல் ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. சர்திஸில் பகவானியம் செழித்தோங்கியது. கிறிஸ்துவர்கள் சமூகம் சிறியதாகவும், பலவீனமாகவும் இருந்தது, அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பழைய மதங்களுக்கு திரும்பினர்.😭😭😭😭😭

6⃣ பிலதோப்பியா

நவீன துருக்கியில் அமைந்திருக்கும் இது, இப்போது அலசிஹிர் என்று அழைக்கப்படுகிறது. பிலடெல்பியா ஆசியா மைனாரில் சர்தைக்கு 30 மைல் தென்கிழக்கே ஒரு நகரமாக இருந்தது. கிரேக்க கலாச்சாரத்திற்கான ஒரு திறந்த கதையாக இது பெர்டாமோஸின் அட்டாலஸ் இரண்டாம் பிலடெல்ப்ஸ் நிறுவப்பட்டது. *இது கி.மு. 17-ல் பூகம்பத்தால் அழிக்கப்பட்டது மற்றும் திபெரியஸ் பேரரசரால் கட்டப்பட்டது.*😥😥😥

7⃣ லவோதிக்கேயா

நவீன துருக்கியில் அமைந்துள்ள டென்னிஸ்லி என அறியப்படுகிறது. லாவோடிசியா பிலடெல்பியாவின் 40 மைல் தென்கிழக்காகவும், மேற்கு ஆசியா மைனரில் (துருக்கி) எபேசுவுக்கு 80 மைல் தொலைவிலும் இருந்தது. இது புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியின் ஒரு *பணக்கார நகரம் ஆகும்.* அது நன்றாக கம்பளி ஆடைகளை ஏற்றுமதி செய்து அதன் கண் உமிழ்விற்கு புகழ் பெற்றது.

*மேலே ஜெயக்குமார் ஐயா கேட்டிருந்தார்கள், இப்போது அந்த சபைகளின் நிலையென்ன? அவைகள் இப்போது எந்த நாட்டில் இருக்கிறது என்ன... ஆதற்க்கான பதிலே மேலே...*


Source - http://www.about-jesus.org/seven-churches-revelation-map.htm

Post a Comment

0 Comments