Type Here to Get Search Results !

சிமியோன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓

[09/09 9:26 am] Elango: 🕎  *இன்றைய வேத தியானம் - 09/09/2017* 🕎

1⃣ *இரண்டாவது கோத்திரமான சிமியோன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*

 2⃣ சிமியோன்  கோத்திரத்தை குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[09/09 9:43 am] Elango: 3⃣ வெளிப்படுத்தின விசேஷத்தில் 7:7 ல் சொல்லப்பட்ட *சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.*  என்ற தொகை உண்மையிலேயே 12,000 தொகை குறிக்கிறதா அல்லது 12,000 என்பதற்க்கு வேறு அர்த்தங்கள் உண்டா❓

[09/09 10:11 am] Aa Thomas Pastor Brunei VDM: 3⃣ First of all we have to keep in mind that the Book of Revelation has many literal numbers as well as figurative numbers.

[09/09 10:13 am] Aa Thomas Pastor Brunei VDM: In New Jerusalem the number 12 is literal

[09/09 10:15 am] Aa Thomas Pastor Brunei VDM: Whereas in Rev 7, I believe, the num 144000 and 12000 are figurative

[09/09 10:15 am] Aa Thomas Pastor Brunei VDM: In Rev 7 the tribe of Dan and Ephraim are missed out..

[09/09 10:18 am] Elango: 🕎  *இன்றைய வேத தியானம் - 09/09/2017* 🕎

1⃣ *இரண்டாவது கோத்திரமான சிமியோன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*

 2⃣ சிமியோன்  கோத்திரத்தை குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ வெளிப்படுத்தின விசேஷத்தில் 7:7 ல் சொல்லப்பட்ட *சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.*  என்ற தொகை உண்மையிலேயே 12,000 தொகை குறிக்கிறதா அல்லது 12,000 என்பதற்க்கு வேறு அர்த்தங்கள் உண்டா❓

4⃣  ஆதியாகமம் 34:25 ல் தீனாளின் நிமித்தம் *சிமியோன் லேவி*  இவ்விரண்டு பேரும் சீகேமுடைய பட்டணத்திலுள்ள ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள் - என்ற சம்பவத்தை வேத அறிஞர்கள் எப்படி பார்க்கின்றனர்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[09/09 10:34 am] Elango: தான் விக்கிரக ஆராதனை செய்ததுதான் நீக்கப்பட்ட காரணம்தானே ஐயா..

அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா...

[09/09 10:38 am] Thirumurugan VTT: யூத இனத்தைக் குறித்து விசேஷமாக 12 கோத்திரங்களைக் குறித்து படிக்கும் நாம் ஒரு காரியத்தை நம் நினைவில் வைத்துக் கொள்ளவது நலமாய் இருக்கும் என நம்புகிறேன். காரணம் தேவனுடைய திட்டத்தில் யூதர்களின் பங்கும் இடமும் மிகவும் அதிகம்.

அதாவது தேவனாகிய கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட மனிதனாகிய ஆபிரகாமோடு பண்ணின உடன்படிக்கை இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபோடு உடன்படிக்கையை உறுதிசெய்த தேவன் தாமே தாவீது ராஜாவோடும் அதை நிலைவரப் படுத்துகிறார்.

சுருங்கச் சொல்ல வேண்டுமானால், கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலரோடுள்ள வாக்களித்த தமது திட்டங்களை நிறைவேற்றுவதில் தவறவில்லை. மாறாக ஒரு சிறிய இடைவெளி விட்டிருக்கிறார் அவ்வளவுதான். திருச்சபையும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் இப்பொழுது இருப்பது தேவனுடைய திட்டத்தின் ஒரு அடைப்புக்குள்ளாகும் (parenthesis).

தானியேல் 70 வார தரிசனம் சிறிது விளக்கமாகவே இதை விவரிக்கிறது. அதாவது 70 வாரங்களில் 69 வாரங்கள் முடிவடைந்து விட்டன அல்லது நிறைவேறி விட்டன. மீதம் இருப்பது கடைசி வாரம் மட்டும் தான். அந்த வாரம் துவங்கும் நாள் தான் 7 வருட உபத்திரவ காலத்தின் முதல் நாள்.

இந்த 70 வாரமும் 100% இஸ்ரவேலருக்கு மட்டுமே உரியதாகும் சபைக்கு அல்ல. கவனியுங்கள்: *"உன் ஜனத்தின்மேலும் (இஸ்ரவேலர்கள்) உன் பரிசுத்த நகரத்தின்மேலும் (எருசலேம்) எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது."* Seventy weeks are determined For *your people (Israel)* and for *your holy city (Jerusalem)* (தானியேல் 9:24).

ஆக, காரியங்கள் இப்படியிருக்க தாம் தெரிந்துகொண்ட யூத இனமே அறியாத அவர்களுக்கு இன்றும் மர்மமாய் இருக்கின்ற தேவனுடைய ஆச்சரியமான அற்புத திட்டம் தான் *"சபை"*. தேவன் சபையோடுள்ள காரியங்களை சபை எடுக்கப்படுதலோடு (with Rapture) முடித்துக் கொண்டபின், ஏற்கனவே pause செய்து வைத்திருக்கிற திட்டம் தொடரும். அதாவது இஸ்ரவேலரோடு தேவனுக்கு உண்டான திட்டம்.

இந்த காரியங்களில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பின் தயவாய் பதிவிடுங்கள்.

[09/09 10:51 am] Aa Sam Jebadurai Pastor VDM: வேதத்தில் இல்லாததை உயர்த்தி பிடிக்க கூடாது என்பதே வாதம். ரூபன் கோத்திர கொடியில் இது துவங்கியது. கலாச்சாரத்தை இயேசு கிறிஸ்துவை விட உயர்த்துவது தவறு என்பது தான் கருத்து. எனது கருத்தை நீங்கள் புரிந்ததில் தவறு உள்ளது.

[09/09 10:52 am] Aa Thomas Pastor Brunei VDM: Dan alone was not involved in Idolatry...
Both the kingdoms practiced idolatry.
Ezekiel says about it.

[09/09 10:56 am] Aa Jeyaseelan Bro VDM: *சிமியோன் மற்றும் லேவி -- ஆதியாகமம் 49:5-7.*


1. சிமியோன் என்னும் பதத்திற்குரிய எபிரெயச் சொல் ’கேட்டல்’ அல்லது கேட்கப்படுதல்’ (ஆதி. 29:33), லேவி என்பதன் பொருள்  ’இணைக்கப்படுதல்’ என்பதாகும் (ஆதி. 29:34).

2. இவ்விரு சகோதரர்களும் குறிப்பிடத்தக்க வகையில் கொடூரமானவர்கள்.

3. சிமியோனும் லேவியும் வஞ்சகத்தினிமித்தம் எண்ணிக்கையில் அதிகமான கானானியரை கொன்று குவித்தனர் ஆதி. 34.

4. யாக்கோபு தீர்க்கதரிசனமாய் உரைக்கையில், இவர்கள் இருவரும் இஸ்ரவேலில் இருந்து பிரிக்கப்பட்டு வாக்குத்தத்த தேசத்திற்கு புறம்பாக தனிப்பட்ட சுதந்தரத்தை பெறக்கடவர்கள் என்றான். யோசுவா 19:1-9 ல் அவர்களது சுதந்தர வீதம் அந்தப்பகுதியில் யூதாவிற்காக ஒதுக்கப்பட்டது. 

5. இந்த பட்டணங்கள் இப்பொழுது நெகவ் என அறிப்படுகிறது, இப்பகுதி இன்றைய அளவில் வறண்டதும் மற்றும் தரிசு நிலங்களாகவும் காணப்படுகின்றன.

6. சிமியோனும் கூட எண்ணிக்கையில் குறைவுபட தொடங்கினான் எண்ணாகம 1:23ல் 59,300 எனவும் வானாந்திர பயண இறுதியில் இவனது எண்ணிக்கை 22,000 மாக குறைந்துக் காணப்படுகிறது எண்ணாகமம் 26:14.

7. எசேக்கியாவின் ஆழுகை காலத்தில் சிமியோனின் சந்ததியினர் ஏதோமுக்குள் குடிபெயர்ந்தனர் காரணம் அவர்கள் அமலேக்கியரை முறிடித்து வெற்றிபெற்று இருந்தனர்.  (1 நாளாக. 4:38-43).

8. யூதப்பாரம்பரிய கணக்கின் படி எல்லா ஏழ்மையான யூதர்கள் இந்த சந்ததியிலிருந்து வருகிறவர்களாய் இருந்தனர்.

9. எண்ணாகமம் 35:1-4 ல் கர்த்தர் கட்டளையிட்டு சொன்னது என்னவென்றால் தேசத்தை பங்கிட்டு அளிப்பதற்குப் பதிலாக பட்டணங்களை அவர்களுக்காய் கொடுக்க வேண்டும் என்றார். யோசுவா 21:4-7 ல் லேவியருக்கு 48 பட்டணங்கள் ஒதுக்கப்பட்டு எல்லாக் கோத்திரத்தாருக்குள்ளும் வாசம் பண்ணும்படி அவர்கள் பரவிச்செல்கிறவர்களாய் இருந்தனர்.

10. லேவியருக்கு கர்த்தரே அவர்கள் பங்கு வீதமும், சுதந்திரமுமாய் இருந்தனர். உபாகமம் 10:9.

11. இவர்கள் ஜனங்களால் ஆதரிக்கப்பட்டனர், இதினிமித்தம் இவர்கள் ஊழியத்திற்கென தங்களை அற்பணித்துக் கொண்டனர்.  (உபாகமம் 18:1-5).

12. மோசே லேவி கோத்திரத்தானாய் இருந்தான், ஆரோனும் லேவிகோத்திரத்தான், ஆரோனின் வம்சத்திலிருந்து லேவிய ஆசாரியர்கள் ஆசாரிய ஊழியம் செய்து வந்தனர். தேவன் அவர்களை உபாகமம் 33:8-11 ல் ஊரீம் தும்மீம் இவற்றை பயன்படுத்தும் தெய்வீக ஞானத்தினால் ஆசீர்வதித்தார்.

13. லேவியர்கள் நீதியினிமித்தம் வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தனர் (யாத்திராகமம் 32:28,29)  மற்றும் இவர்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்க ஆரம்பித்தனர் (உபாகமம் 10:8).

14. இன்றைய அளவில் கூட லேவியர்கள் மத சம்பந்தமான கூட்டங்களில் சிலாக்கியம் பெற்றவகளாய் இருக்கின்றனர்.

[09/09 11:03 am] Aa Peter David Bro VDM: லேவியை ஏன் கர்த்தர் கரம்பிடித்தார் சிமியோன் ஏன் தள்ளப்பட்டார்

[09/09 11:24 am] Aa Thomas Pastor Brunei VDM: The Levite's heeded to Moses command and had zeal for the Lord.
They did not hesitate to take the sword even against their own bros.

[09/09 11:29 am] Elango: 👍👍
யாத்திராகமம் 32:26-28
[26]பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். *அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.*🚶🚶🚶🚶👬👬👬👬👬

[27]அவன் அவர்களை நோக்கி: *உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன்* என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
[28]லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

[09/09 11:31 am] Thirumurugan VTT: *12 கோத்திரங்களைப் பற்றி...*

இஸ்ரவேலரில் 12 கோத்திரங்களும் இஸ்ரவேலின் (யாக்கோபின்) 12 புத்திரர்களில் இருந்து வருகிறது. யாக்கோபுக்கு "இஸ்ரவேல்" என்னும் நாமத்தை அல்லது பெயரை தேவனே அவனுக்கு அளித்ததாகும் (ஆதி. 32:28).

யாக்கோபின் 12 புத்திரர்களுடைய பெயர்கள் ஏற்கனவே நமது குழுவில் பதிவிடப்பட்டுள்ளது, அவர்களுடைய நாமங்களை அல்லது பெயர்களை ஆதி. 35:23-26; யாத். 1:1–4; 1 நாளா. 2:1–2 ஆகிய வேதப்பகுதிகளில் காணலாம்.

தேவன் ஆபிரகாமிற்கு வாக்கு பண்ணின தேசத்தை (கானான்) 12 கோத்திரங்களும் யோசுவாவின் (காலேபும் உண்டு) தலைமையில் அடைந்த போது, லேவி கோத்திரத்திற்கு மட்டும் சுதந்திர வீதம் வழங்கப்படவில்லை (யோசுவா 13:14).

அவர்களுக்கு தேவனே சுதந்ரமானார். ஆகையால் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் (பின்னாட்களில் சாலமோனுக்குப் பிறகு ஆலயத்தில்) ஆசாரியர்களாகவும் லேவிக்கோத்திரத்திற்குட்பட்ட ஆரோனின் குடும்பம் பிரதான ஆசாரியர்களாவும் கர்த்தரை சேவித்தார்கள். இவர்களுக்கென்று மற்ற கோத்திரங்களைப் போல சுதந்திர வீதம் இல்லையென்கிற போதிலும், இவர்கள் வசிப்பதற்கென்று மற்ற கோத்திரங்களில் இருந்து பட்டணங்கள் வழங்கப்பட்டது.

பின்னாட்களில் யாக்கோபின் 12 புத்திரர்களுள் ஒருவனான யோசேப்பின் இரண்டு புத்திரர்கள் யாக்கோபினால் தத்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் யாக்கோபு சுதந்திர வீதம் வஸ்கங்குகிறார். காரணம் யோசேப்பு இஸ்ரவேலரை அல்லது யாக்கோபின் குடும்பத்தை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றியதற்கான வெகுமதியாகும் (ஆதி. 47:11–12).

சில இடங்களில், எப்பிராயீம் யோசேப்பினுடைய கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது (எண்ணா. 1:32–33).

பிறகு சாலமோன் ராஜாவின் மரணத்திற்கு பிறகு 12 கோத்திரங்களங்கிய சமத்துவ இஸ்ரவேல் ராஜ்ஜியம் இரண்டு இராஜ்ஜியங்களாக பிளவு பட்டது. அதில் யூதா, சிமியோன் மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் இணைந்து தெற்கு இராஜ்ஜியமாகவும் (யூதா என அறியப்பட்டது) மீதமுள்ள கோத்திரங்கள் இணைந்து வடக்கு இராஜ்ஜியமாகவும் (இஸ்ரவேல் என அறியப்பட்டது) விளங்கியது.

(தொடரும்...)

[09/09 11:32 am] Thirumurugan VTT: பொதுவாக கூறப்பட்ட கருத்தை தனிப்பட்ட நிலையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

[09/09 11:37 am] Aa Sam Jebadurai Pastor VDM: நேற்று கலாச்சாரத்தை இயேசு கிறிஸ்துவை விட உயர்த்த கூடாது என பதிவிட்டது நானே. அதற்கு எதிர் கருத்து தானே தாங்கள் பொதுவில் பதிவிட்டு இருக்கிறீர்கள். ஆகவே தன்னிலை விளக்கம் தந்து உள்ளேன்.

[09/09 11:54 am] Parthiban 2 VTT Cinema Song: Indha whatsapp group messages dhan ungaluku anupukiren...Neenga ithula join pannikonga direct ha ungalukku varum

[09/09 1:44 pm] Elango: 4⃣  ஆதியாகமம் 34:25 ல் தீனாளின் நிமித்தம் *சிமியோன் லேவி*  இவ்விரண்டு பேரும் சீகேமுடைய பட்டணத்திலுள்ள ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள் - என்ற சம்பவத்தை வேத அறிஞர்கள் எப்படி பார்க்கின்றனர்❓

இதற்கு ஆவிக்குரிய ஏதாவது அர்த்தம் இருக்கிறதா சொல்லுங்களேன்...

கிறிஸ்தியான் எனும் புஸ்தகத்தில் இதைக்குறித்து ஓரளவு சொல்லப்பட்டிருந்தது, ஓரளவு எனக்கு ஞாபகம் இருக்கிறது அதாவது, சீகேம் இராஜா உலக சுகத்திற்க்காக, தேவனை உண்மையாக அறியாமல், கள்ள மார்க்கத்தனமாக அவர்கள் விருத்தசேதனம் செய்ய சம்மதித்ததினால்... சிமியோன் லேவி மூலம் அங்கே தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டது என்று...

அந்த பட்டணத்தின் ஆண்கள் அழிக்கப்பட்டது ஏதாவது ஆழமான கருத்து இருக்கிறதா..?

[09/09 1:44 pm] Thirumurugan VTT: இரண்டாக பிளவு பட்ட 12 கோத்திரங்கங்களும் இரண்டு இராஜ்ஜியங்களாகி ராஜாக்கள் பலரை கண்டபின்பு (அதாவது வட இராஜ்ஜியம் 19 ராஜாக்கள், தென் இராஜ்ஜியம் 20 ராஜாக்கள்) கி.மு.722ல் வட இராஜ்ஜியம் அசீரியர்களால் சிறைபிடிக்கப்பட்டு அநேகர் கொலையுண்ணப்பட்டு சிதறடிக்கப்பட்டார்கள். இதுவரையில் அவர்கள் திரும்பவரவேயில்லை இவர்களைக் குறித்த ஒரு தகவலும் இல்லை. ஆனாலும் தேவன் அவர்களைக் மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என்பது நிச்சயம்.

பிறகு தென் இராஜ்ஜியமும் கி.மு. 606, 596 மற்றும் 586 முறையே பாபிலோனியர்களால் மூன்று முறை சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கைதிகளாக அல்லது அடிமைகளாக கொண்டுபோகப் பட்டார்கள். ஆனாலும் இவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு யெருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா தலைமையில் மீண்டும் தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்து குடியேறினார்கள்.

மீதியாய் திரும்பி வந்த ஒரு இராஜ்ஜியமான தென் இராஜ்ஜியத்திற்குட்பட்ட ஒரு கோத்திரமான யூதா கோத்திரத்தில் இருந்து தான் மேசியாவாகிய  கிறிஸ்துவும் பிறக்கலானார்.

ஆனாலும் திரும்பி வந்தவர்களுக்கு சந்தோஷம் நீடித்திருக்கவில்லை. கிரேக்க சாம்ராஜ்யத்தில் முக்கியமான மாமன்னனாகிய அலெக்ஸ்சாண்டர் மரித்த பின் அவனுடைய நான்கு தளபதிகளும் இராஜ்ஜியத்தை நான்காக பங்கிட்டார்கள். அவற்றுள் ஒரு இராஜ்ஜியமாகிய சிரியாவினால் மீண்டும் யூதர்கள் பல நாசத்திற்குள்ளானார்கள்.

அதன்பிறகு கி.பி. 70 ல் மீண்டும் ரோமர்களால் சிதறடிக்கப்பட்டார்கள். இன்றுவரை இரண்டு இராஜ்ஜியங்களையும் சேர்த்து 12 கோத்திரங்களையும் அடையாளம் கண்டு கொள்வதில் மெய்யாகவே பெரும் சிரமம் தான்.

காரியங்கள் இப்படியிருக்க, 12 கோத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இல்லை என்றாகிவிடாது. காரணம் 7 வருட உபத்திரவ காலத்தில் கோத்திரத்திற்கு 12,000 பேர் வீதம் 12 கோத்திரங்களிலும் மொத்தமாக 144,000 பேர்கள் தேவனால் முத்திரை இடப்படுவதில் இருந்து இவர்கள் மீண்டும் கூட்டிச்சேர்க்கப்படுவது உறுதியாகிறது.

கர்த்தரின் திட்டமும் செயலும் மெய்யாகவே நம்மை வியக்க வைக்கிறது.

[09/09 1:57 pm] Aa Sam Jebadurai Pastor VDM: 👍..தேவனுடைய மீட்பின் திட்டம் ஆச்சரியமானதே..அதே சமயம் நீங்கள் குறிப்பிட்ட 144000 பேர் என்பது அதே எண்ணிக்கை என்பதை விட அடையாள எண்ணாக மதிப்பிடலாம்.

[09/09 2:02 pm] Thirumurugan VTT: இந்த எண்ணிக்கை அடையாள எண்ணாக எடுத்துக்கொள்ள வெளிப்படுத்தின விசேஷம் அனுமதிப்பதில்லை மாறாக மெய்யாகவே எழுத்தியல் பிரகாரமாக 144,000 பேர்கள் முத்திரையிடப்பட்டு 7 வருட காலம் தேவானாலே பாதுகாக்கப் படுவார்கள்.

[09/09 2:04 pm] Aa Sam Jebadurai Pastor VDM: இது ஏன் அடையாள எண்ணாக இருக்க இயலாது ஐயா? வெளிப்படுத்திய விஷேசம் முழுவதும் அநேக விஷயங்கள் அடையாளங்களாக, உருவகங்களாக தானே கூறப்படுகிறது.

[09/09 2:26 pm] Thirumurugan VTT: This post is an answer to Bro. Sam Jebadurai who requested an answer by raising a question "why can't we take 144,000 as symbolic?":

The case for symbolism  is exegetically  weak. The principal reason for the view is a predisposition to make the 144,000 into a group representative of the church with which no possible numerical connection exists. No  justification can be found for understanding the simple statement of fact in v. 4 as a figure of speech. It is a definite number in contrast with the indefinite number of 7:9. *"If  it is taken symbolically, no number in the book of Revelation can be taken literally."*

[09/09 2:52 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Can we include Abraham, Isaac and Jacob in this 144000? Because Jesus said Matthew 8:11 (KJV)  And I say unto you, That many shall come from the east and west, and shall sit down with Abraham, and Isaac, and Jacob, in the kingdom of heaven.
If Dan and Ephraim are excluded as in Rev 7, Joshua will not be in the Heaven know????

[09/09 2:52 pm] Aa Sam Jebadurai Pastor VDM: The 144,000 are mentioned again in Revelation 14:1ff. Once more, however, the numeral is clustered with several other prominent symbols.

First, there is the “Lamb,” a figure representing Christ (cf. Jn. 1:29; Rev. 5:6).

Second, there is Mount Zion, a symbol of divine government (cf. Isa. 2:2-4).

Third, there is the numeral 144,000, suggestive of the heavenly complement of God’s people — no one will be missing who is supposed to be there.

Fourth, the saints are depicted as “virgins,” which descriptive emphasizes their purity (cf. 2 Cor. 11:2).

Again, though, it must be stressed that if one contends for a literal 144,000, if consistent, he should argue also that a literal Lamb was literally standing on literal Mount Zion with a group of literal men who had never been intimate with literal women, hence, were literal virgins!

[09/09 2:57 pm] Thirumurugan VTT: "முத்திரை" வேண்டுமானால் தாங்கள் கூறினதுபோல அடையாளமாக எடுத்துக்கொள்ளலாம் அதாவது தேவனுடைய பாதுகாப்பு மற்றும் தேவனே அவர்களுக்கு சொந்தக்காரர் அல்லது உரிமையாளர் என்பதற்கு அடையாளமாக இருக்கலாம். ஆனால் 12 என்கிற கோத்திரங்களைக் குறிப்பிடுகிற எண்களும் 144000 உட்பட வெளிப்படுத்தின விசேஷங்களில் கூறப்பட்டிருக்கிற எண்களெல்லாம் அடையாளங்கள் என்றாகிவிடாது. 7 சபைகள் என்பது 7 சபைகளைத்தான்  குறிக்கிறது. அதே போல 7 முத்திரைகள் 7 எக்காளங்கள் 7 கோபகலசங்கள் இப்படி எண்களெல்லாம் அடையாளங்கள் அல்ல எழுத்தியல் பிராகரம் கொடுக்கப்பட்டுள்ளது. எவைகளெல்லாம் அடையாளங்கள் என்பதை நாம் வாசிக்கும்பொழுதே கண்டு கொள்ளலாம். 

உதாரணமாக 13ஆம் அதிகாரத்தில் இரண்டு மிருகங்களைக் குறித்து வாசிக்கிறோம். வாசிக்கும்பொழுதே நாம் கண்டு கொள்ளலாம் அவைகள் எழுத்தியல் பிரகாரமான மிருகங்கள் அல்ல மாறாக வேறே காரியங்களை அல்லது நபர்களை அவை சுட்டிக் காண்பிக்கின்றன. இங்கே 13ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு மிருகங்களும் இரண்டு நபர்களைக் காண்பிக்கிறது: ஒன்று எதிர் கிறிஸ்து (Antichrist) மற்றொன்று கள்ளத்தீர்க்கதரிசி (False Prophet).

(The  seal on their  foreheads  symbolizes protection and ownership  and God’s intention to protect the 12 tribes that are  mentioned, much as He protected Noah from  the  Flood, Israel  from  the plagues of Egypt,  and Rahab and her household  in  Jericho.)

[09/09 3:00 pm] Thirumurugan VTT: You have miserably misunderstood the scripture portion. The sealing of 144000 people are concerning the living ones among 12 tribes of Israel during the time of Tribulation period. Why do you go to the tombs of Abraham, Isaac and Jacob to bring them to Rev. 7 and 14? Please read the passage once again.

[09/09 3:03 pm] Aa Sam Jebadurai Pastor VDM: I...let it be as you said. Does God discriminate?? What about people from  Dan and Ephrahim???

[09/09 3:03 pm] Thirumurugan VTT: All the examples quoted by you is very clearly understood in the context itself they are symbolic. But give me the references concerning numeric values mentioned in Revelation are symbolic.

[09/09 3:05 pm] Aa Sam Jebadurai Pastor VDM: I am talking about 144000 only. I accept revelation has literal numbers too.

[09/09 3:06 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Any how..good discussion...👍

[09/09 3:10 pm] Thirumurugan VTT: Not only Bro. Sam Jebadurai even many ask the same question and raise the same doubt. Much speculation has arisen about why the tribe  of Dan is omitted. Joseph and one of his two sons, Manasseh, are listed, but Ephraim,  Joseph’s other son, is omitted. Thus if Dan were included, there would have been 13 tribes. The tribe omitted was usually Levi, from  which the priesthood came. Inasmuch as it is normal to have only  12  and not  13 tribes, the omission of Dan is because one of the first tribes to go into idolatry (Jud. 18:30; 1 Kings 12:28-29).

[09/09 3:12 pm] Elango: கொஞ்சம் தமீழிலும் பேசுங்க பாஸ்டர்ஸ். குழுவினருக்கும் புரியும்🙏😀

[09/09 3:13 pm] Thirumurugan VTT: We can't take the scripture to interpret within the book in one place symbolic and in other place literal. That will take us away from the context and author intended meaning, finally end up in misinterpretation.

[09/09 3:13 pm] Aa Sam Jebadurai Pastor VDM: As you said, this passege  is talking about Israelites who accept Jesus as their Messiah  in the NT Period. Why Dan and Ephrahim is omitted?

[09/09 3:15 pm] Aa Sam Jebadurai Pastor VDM: No..I strongly disagree with you. We need to interpret as per figures of speech and literary style. Revelation has so many symbols as well as literal things. We can't take interprete everything as same

[09/09 3:16 pm] Thirumurugan VTT: மன்னிக்கவும். சுத்த தமிழில் தான் கூடுமானவரை பதிவிடுகிறேன். பதில் கொடுப்பதற்காக தான் ஆங்கிலத்தை திணித்தேன். மேலும் ஆங்கிலம் தட்டச்சு செய்வது எளிமையாகவும் இருக்கிறது. இருப்பினும் குழு நிர்வாகியின் வேண்டுகோளை ஏற்கிறேன்.
🙏

[09/09 3:27 pm] Aa Ebi Kannan Pastor VDM: வெளிப்படுத்தின விசேஷம் 14:3-4
[3]அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
[4]ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.

[09/09 3:39 pm] Thirumurugan VTT: நமது சகோதரர் கேட்டதற்கிணங்க வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் அநேக உருவகங்கள் மற்றும் அடையாளங்களால் நிறைந்து காணப்படுகிறத்தினாலே, வேத பண்டிதர்கள் நான்கு விதமான வியாக்கியான முறைகளை நம் முன் வைக்கிறார்கள். இந்த நான்கையும் ஒவொன்றாக தனிப்பட்ட நிலையில் விசுவாசிக்கிற அவைகளை அந்த பின்னணியில் புரிந்து கொள்ளுகிறார்கள்.

இப்பொழுது இங்கே சகோ. சாம் ஜெபத்துரை அவர்களுக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கிற மாற்றுக்கருத்துகளுக்கும் இவை தான் காரணம்.

இதோ இங்கே அந்த நான்கு நிலைகளையும் உங்கள் முன் வைக்கிறேன். இவைகளில் எது உங்கள் விசுவாசம் என எனக்கு தெரிந்தால் உங்கள் மாற்றுக்கருத்துக்கான காரணம் எனக்கு புரிந்து விடும்.

_(மன்னிக்கவும் ஆங்கிலத்தில் பதிவிடுகிறேன். நிர்வாகி அவர்கள் நேரம் இருக்கும்போது தமிழாக்கம் செய்து பதிவிடுங்கள்.)_

Because of its unusual character, Revelation has been  approached from  a number  of interpretive principles, some of which raise serious questions concerning its value as divine authoritative revelation.

*1. The allegorical or nonliteral approach*

This form  of interpretation  was offered by  the Alexandrian school of theology  in  the third and fourth  centuries. It regards the entire Bible as an extensive allegory  to  be interpreted in a nonliteral  sense. The allegorical interpretation of the Bible was later restricted largely  to prophecy about the Millennium  by  Augustine (354-430), who interpreted Revelation as a chronicle of the spiritual  conflict between God and  Satan being fulfilled in the present Church Age. A liberal variation of this  in  modern times  considers Revelation simply as a symbolic presentation of the concept of God’s ultimate victory.

*2. The preterist  approach*

A more respected approach is  known as the  preterist view which regards Revelation as a symbolic picture of early church conflicts which have been fulfilled. This view  denies the future predictive quality of most of the Book of  Revelation. In  varying  degrees this view combines the allegorical and symbolic interpretation with  the concept that Revelation does  not deal with specific future events. Still another variation of the preterist view regards Revelation as setting forth principles of  divine dealings with man, without presenting specific events.

*3. The historical approach*

A popular view  stemming from  the Middle Ages is the historical approach which views Revelation as a symbolic picture of the total  church history of the  present Age between Christ’s  first and  second comings. This view  was advanced by  Luther, Isaac  Newton,  Elliott, and many  expositors of the postmillennial school of  interpretation  and has attained respectability in recent centuries. Its principal problem  is  that seldom  do  two interpreters interpret  a given passage as referring to the same event.  Each interpreter tends to  find its fulfillment in his generation. Many  have combined the historical interpretation with aspects of  other forms of  interpretation in order to  bring out a devotional or spiritual teaching from  the book.  The preceding methods of interpretation tend to deny  a literal future Millennium  and also literal future  events in the Book of Revelation.

*4. The futuristic approach*

The futuristic approach has been  adopted by  conservative scholars, usually premillenarians, who state that chapters 4-22  deal with events that are yet future today. The content of Revelation 4-18  describes the  last seven years preceding the second coming of Christ and particularly  emphasizes the Great Tribulation, occurring in  the last three and one-half years before His coming.

Objections to this view usually  stem  from  theological  positions  opposed to premillennialism. The charge is often made that the Book  of Revelation would not have  been a comfort to early Christians or understood  by  them  if it were largely  futuristic. Adherents of the futuristic school of interpretation insist, on the  contrary, that  future events described in Revelation bring comfort and reassurance to Christians who in the  nature  of their faith regard their  ultimate victory  as future.  The futuristic interpretation, however, is demanding of  the expositor  as it requires him  to reduce to tangible prophetic events the symbolic presentations which characterize the book.

[09/09 3:41 pm] Aa Sam Jebadurai Pastor VDM: நான் எந்த நோக்கில் வெளிப்படுத்திய விஷேசத்தை பார்ப்பதாக நினைக்கிறீர்கள் ஐயா??

[09/09 3:45 pm] Aa Sam Jebadurai Pastor VDM: 1. உருவக பார்வை
2. ஏற்கனவே நடந்து விட்டது என்ற பார்வை
3. வரலாற்று பார்வை
4. எதிர்காலம் குறித்து பேசுகிறது என்ற பார்வை

[09/09 3:45 pm] Anthony Ayya VTT: ஆமா Pastor இங்கு இருக்கிறார்கள் அவர்களை கண்டால் அப்படியே பார்த்துகென்டே நிற்பேன்

[09/09 4:16 pm] Thirumurugan VTT: உங்கள் நோக்கமும் விசுவாசமும் எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் விசுவாசிப்பதை கூறுகிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் 4 முதல் 22 வரையுள்ள அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ள காரியங்கள் எல்லாம் இன்னும் சம்பவிக்கவில்லை எதிர்காலத்தில் அல்லது இனிமேல் சம்பவிக்க வேண்டியவை என்பது தான் நான் விசுவாசிப்பது, அதாவது *the futuristic அணுகுமுறை*:

👉👉4-22 வரையுள்ள அதிகாரங்கள் இன்னும் நடந்தேறவில்லை.

👉👉4-18 வரையுள்ள அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள், 7 வருட உபத்திரவ காலத்தில் நிகழ இருக்கின்ற காரியங்கள்.

[09/09 4:28 pm] Aa Thomas Pastor Brunei VDM: PTL. I think it is slip of tongue.

[09/09 4:28 pm] Elango: இங்கே திருத்தியுள்ளார் எபி பாஸ்டர்.

20000 ❌ 12000✅

[09/09 4:30 pm] Elango: Praise the Lord..🙏

Eagerly expecting your explanation in 144000 regarding Rev 7

[09/09 4:31 pm] Aa Thomas Pastor Brunei VDM: If we take the 144000 in  Rev 7 as literal number... Then 144000 in Rev 14 also should be taken as literal number along with the characteristics of the 144000.

[09/09 4:59 pm] Aa Thomas Pastor Brunei VDM: Please excuse me. I will join the discussion later. Driving at the moment

[09/09 7:15 pm] Aa Thomas Pastor Brunei VDM: Praise the Lord... Regarding the 144000 in Rev 7.. there is no doubt about who they are.. the verse 4 to 8 very clearly says they are from all the tribes of Israel..

[09/09 7:19 pm] Aa Thomas Pastor Brunei VDM: The point of discussion is about the Number 1,44,000... and 12,000.. whether they are figurative or literal..

[09/09 7:19 pm] Aa Thomas Pastor Brunei VDM: Bro Thiru says it is literal and Bro Ebenezar Kannan says it is figurative..

[09/09 7:20 pm] Aa Thomas Pastor Brunei VDM: If we take the numbers as literal... can we apply that same principle for the 1,44,000 referred in Rev 12?

[09/09 7:22 pm] Aa Thomas Pastor Brunei VDM: i do not think 1,44,000 in Rev 7 is literal and 1,44,000 in Rev 12 is figurative..

[09/09 7:22 pm] Aa Sam Jebadurai Pastor VDM: Is it Rev 12 or Rev 14???

[09/09 7:23 pm] Aa Thomas Pastor Brunei VDM: oops sorry. Rev 14

[09/09 7:24 pm] Aa Thomas Pastor Brunei VDM: What could be so special about God so keen about this number 1,44,000?

[09/09 7:26 pm] Aa Thomas Pastor Brunei VDM: Numbers do have spiritual meaning.. and 12 is authority governance and completion..

[09/09 7:27 pm] Aa Thomas Pastor Brunei VDM: No wonder Peter was ken to fulfill the prophecy to fill the place of Judas so that 12 is maintained..

[09/09 7:32 pm] Aa Thomas Pastor Brunei VDM: We may not and come to conclusion about this special number 1,44,000..

[09/09 7:33 pm] Aa Thomas Pastor Brunei VDM: What we surely know is that we (you and I) are not part of this 1,44,000 mentioned in Rev 7 but certainly part of the 1,44,000 mentioned in Rev 14. 😀😀

[09/09 7:34 pm] Alphonse VTT: Knosis message தமிழில் அனுப்பவும்

[09/09 7:51 pm] Elango: 🕎  *இன்றைய வேத தியானம் - 09/09/2017* 🕎

1⃣ *இரண்டாவது கோத்திரமான சிமியோன் கோத்திரத்தை குறித்து வேதம் என்ன கூறுகிறது❓*

 2⃣ சிமியோன்  கோத்திரத்தை குறித்து சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனங்கள் என்ன❓

3⃣ வெளிப்படுத்தின விசேஷத்தில் 7:7 ல் சொல்லப்பட்ட *சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.*  என்ற தொகை உண்மையிலேயே 12,000 தொகை குறிக்கிறதா அல்லது 12,000 என்பதற்க்கு வேறு அர்த்தங்கள் உண்டா❓

4⃣  ஆதியாகமம் 34:25 ல் தீனாளின் நிமித்தம் *சிமியோன் லேவி*  இவ்விரண்டு பேரும் சீகேமுடைய பட்டணத்திலுள்ள ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள் - என்ற சம்பவத்தை வேத அறிஞர்கள் எப்படி பார்க்கின்றனர்❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
 Vedathiyanam offline / online application -  https://goo.gl/JpGaev

Vedathiyanam in WordPress - https://goo.gl/WSHGAE

Vedathiyanam in blog - https://goo.gl/EiYkb1

Vedathiyanam in Facebook - http://fb.com/vedathiyanam

Vedathiyanam in Twitter - twitter.com/vedathiyanam
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[09/09 8:22 pm] Elango: உபாகமம் 33:1
[1] *தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:*

உபாகமம் 33 ம் அதிகாரத்தில், மோசே எல்லா கோத்திரங்களையும் அதில் ஆசீர்வதிக்கிறார், சிமியோனை ஏன் அதில் ஆசீர்வதிக்கவில்லை?

சிமியோன் கோத்திரத்தை மோசே ஆசீர்வதிக்காததற்க்கு ஏதாவது காரணங்கள் இருக்குமா?

[09/09 8:46 pm] Thirumurugan VTT: I strongly disagree brother.

[09/09 8:48 pm] Thirumurugan VTT: we are not in part of ch. 14

[09/09 8:48 pm] Thirumurugan VTT: How could you differentiate 14 from 7? Please explain!

[09/09 8:52 pm] Thirumurugan VTT: Rev. 14 is just another view is given of the  144,000  who were  standing on Mount  Zion  with  the Lamb.  It is reasonable to conclude that  this is the same group mentioned in  7:4-8, except that here they are in a later period of  the Tribulation. Chronologically  the vision anticipates the triumph of the 144,000 still  intact at the time of Jesus  Christ’s  return  from  heaven to earth.

In  contrast with many others who become  martyrs, these people live through the period. But they  are not the only ones to survive, as many  Gentiles  and Jews will  turn  to Christ in the end  time and somehow escape martyrdom  and be honored  to welcome Christ at His return.

[09/09 8:54 pm] Elango: அக்காலத்தில் சிமியோன் கோத்திரத்தினர் தனியானதொரு கோத்திரமாக கருதப்படவில்லை.

யோசுவா 19:1,9
[1]இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; *சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.*
[9] *சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது;* யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

👆👆👆 சிமியோன் கோத்திரத்தார் யூதா கோத்திரத்தோடு சேர்க்கப்பட்டுள்ளதை பார்க்கிறோம்.

 மொத்தம் 12 கோத்திரங்கள் எனும் பட்டியலில் பிற்காலத்தில் *யூதா கோத்திரத்தோடு இணையப்போகும் சிமியோன் கோத்திரம் அக்காலத்தில் தனியான கோத்திரமாகக் கருதப்படவில்லை. எனவே மோசே அக்கோத்திரத்தை தனியாக ஆசீர்வதிக்கவில்லை. எனினும் அவர்கள் யூதா கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என கருதபடுகிறது*

[09/09 8:56 pm] Thirumurugan VTT: In fact there is no mentioning of Church in the Book of Revelation after chapter 3. But I wonder how could kenosis bring church and state we are in that group in 14.

[09/09 8:56 pm] Elango: Good question

[09/09 9:04 pm] Thirumurugan VTT: There are some who believe that the 144,000 will be evangelists in the Great Tribulation. But there is no indication that the 144,000  were preachers or prophets; their testimony  was largely from  their moral purity  and the  fact that they were not  martyred  like many  others.  *They follow the Lamb wherever He goes*.  John further stated,  *They were  purchased from among men and offered as firstfruits to God and the Lamb*.  The word “firstfruits” suggests that  these converted Israelites precede  many others who at the Lord’s second coming will turn  to Him  (Zech. 12:10; Rom. 11:15, 26-27).  They were also described as  *blameless*  (amōmoi, a greek word used of sacrificial animals without defect) and as those who, living in a period of  great satanic deception, were free from  lying. The passage  as a  whole is a prophetic foreview of the triumph of the 144,000  when Christ returns.

[09/09 9:05 pm] Aa Ebi Kannan Pastor VDM: இது தமிழ்  குழு

[09/09 9:07 pm] Elango: ஆமாம் ஐயா தமிழில் பதிவிடுங்களேன்.🙏 அநேகருக்கு புரியாது ஐயா

[09/09 9:23 pm] Elango: நீதிமொழிகள் 14:29
[29]நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; *முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.*

[09/09 9:25 pm] Elango: ஆதியாகமம் 49:5-7
[5]சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
[6]என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; *அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று,*❓❓❓❓❓👆👆👆🤔🤔🤔🤔 தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.
[7] *உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது;*😡😡😡😡😡 யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்.

*லேவியையும், சீமியோனையும் யாக்கோபு ஆசீர்வதிக்கவே இல்லை*

[09/09 9:25 pm] Elango: *அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று,*

இங்கே சொல்லப்பட்ட அந்த ஒரு புருஷன் என்பது யார்?

[09/09 9:27 pm] Aa Jeyanti Pastor VDM: தீனாளை பற்றியது,

[09/09 9:29 pm] Aa Thomas Pastor Brunei VDM: Bro Thiru my understanding of Rev 14 seem very different from your understanding..
I, as someone who has been ' redeemed' by the shed blood of the Lamb and someone who identify with the resurrection of Jesus the ' first fruit with sheaves' ( the resurrected saints in Mathew 27:53) look forward to that event becoming a reality in future..

[09/09 9:59 pm] Aa Dilaxan VTT: ஐயா இந்த குழுவில் போடப்படுகிற பதிவுகள் அனைத்தும் மிக அருமையாகவும் எனக்கு பிரயோஜனம்  ஆகவும்  இருக்கு ஐயா.
எல்லா பதிவுகளையும் முடிந்தவரை தமிழில் போட்டால் எனக்கும் எல்லோருக்கும் மேலும் விளங்ககூடியதாக இருக்கும் ஐயா... 😒😒😒

[09/09 10:03 pm] Aa Sankar Sir Madurai VDM: Amen,(yes)

[09/09 10:39 pm] Elango: ஆண்டவருடைய மகிமையான நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் உண்டாகுவதாக.

தீனாவின் நிமித்தம், சிமியோனும், லேவியும் இரண்டுபேரும் சீகேம் பட்டணத்திலுள்ள ஆண்மக்களை கொன்றார்கள் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம்.

இது யாக்கோபுக்கு வருத்தமாக இருந்தது. இவர்களும் ரூபனைப்போல சேஷ்டப்புத்திர பாகத்தின் அருமையை தெரியாமல் அவற்றை இழந்துவிட்டார்கள்.

*சிமியோன், லேவியின் பட்டயம் கூர்மையாக இருந்தாலும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அதைவிட கூர்மையாக இருக்கிறது. அது இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக இருக்கும்.*

*யாரெல்லாம் தன் வாழ்க்கையில் முற்கோபத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களோ, அவர்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கை ஒருவேளை குறைந்து போகும். அவர்களுடைய சுதந்திரங்கள் பெற முடியாமல் போய்விடும்.*

*பக்திவைராக்கியமாக அவர்கள் கர்த்தர சேவித்தால், அவருடைய கண்களின் அவர்களுக்கு கிருபை கிடைக்கும்.* கொடுரமான எந்த மனிதனும் தேவனை தேடுகின்ற போது, அவருக்கு ஊழியம் செய்கிற போது, அவனின் கோலில் தேவன் துளிர்விட செய்கின்றார்.

லேவி கோத்திரத்தார் தேவனுக்கு ஊழியம் செய்தார்கள், ஆசரிப்பு கூடாரத்தில் பல வேலைகள் செய்திருக்கலாம், அதன் பணிமூட்டுகளை பாதுகாத்திருக்கலாம், வேதத்தை அவர்கள் போதித்திருக்கலாம், நியாயம் விசாரிக்கும் பணிக்காக தங்களை அற்பணித்திருக்கலாம்,  ஆனாலும் ஆண்டவருடைய வேலை செய்வதால் லேவியை தேர்ந்தெடுத்து ஊழியத்திற்க்கு லேவி கோத்திரத்தாரை அழைத்திருக்கலாம் எனவே நாம் தேவனை சேவிப்போம் அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம். ஆமென்.

- சங்கர் ஐயா

Post a Comment

0 Comments