Type Here to Get Search Results !

மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும் என்பதன் அர்த்தம் என்ன?

[8/4, 9:06 AM] Elango: 🔖 *இன்றைய வேத தியானம் - 04/08/2017* 🔖

1⃣  👇மத்தேயு 8:21-22 வசனங்களில், ஆண்டவர் இயேசு நமக்கு சொல்ல விரும்பும் சத்தியம் என்ன❓

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: *ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்* என்றான். 
மத்தேயு 8:21
22 அதற்கு இயேசு: *மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா* என்றார். 
மத்தேயு 8:22

2⃣ தகப்பனையும் தாயையும் கனம்பன்ன வேண்டும் என்று சொன்ன ஆண்டவர் இயேசு, 
*ஏன் இந்த இடத்தில் தகப்பனை அடக்கம் பண்ண அனுமதிக்கவில்லை❓*
j
3⃣ இங்கே கீழே வசனங்களில் எலிசா அனுமதித்ததற்க்கும், 👇🏻 அங்கே மேலே வசனங்களில் இயேசு அனுமதிக்காததற்க்கும்👆🏻 ஏதாவது காரணம் உண்டா❓

அப்பொழுது அவன்  *( எலிசா)  மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா;* நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/4, 9:22 AM] Stanley Ayya VTT: ஆண்டவரே இன்றைய தியான பகுதியையும் நீரே பொறுப்பெடுத்து நாங்கள் சிறுத்து நீங்கள் பெருகி எங்கள் மூலம் உம்முடைய சித்தத்தையே வெளிபடுத்துங்கப்பா.

எங்களின் ஆவி ஆத்துமா சரீரத்தை காத்து உம்மை மகிமைபடுத்த எங்களின் இந்த தின தியானபகுதி உதவியாய் இருக்க கிருபை தாங்கப்பா.

ஆண்டவராகிய
இயேசு கிறித்துவின் திருநாமத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம் நல்ல பிதாவே.

[8/4, 10:44 AM] Elango: இங்கே முக்கியப்படுத்துவது என்னவென்றால், இயேசுவின் சீஷன் என்பவன் சரீர பிரகாரமாக மரித்தவர்களின் சரீரங்களின் அடக்கம் பண்ணுவதை விட, அனுதினமும் இறந்துக்கொண்டிருக்கும் ஆத்துமாக்களை காப்பற்ற வேண்டிய அவசியத்தை அவனுக்கு வலியுறுத்தினார்.

[8/4, 10:47 AM] Elango: மரித்தவர்களை எழுப்ப வேண்டிய ஊழியத்திற்க்கு அழைக்கும் அவன் சரீரத்தில் மரித்தவர்களை அடக்கம் பண்ண கேட்கிறான்... ஆண்டவர்  இறந்தவர்களை உயிரோடெழுப்பினார்., அதேப்போல சீஷர்களும் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினர்.

[8/4, 10:54 AM] Elango: இறந்தவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்....  ஆனால் நீ  என்னைப் பின்பற்று. இதை  வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒரு சீஷனின் ஊழியம் என்பது ஜீவனான இயேசுவை பின்பற்றுவதே, இறந்துக்கொண்டிருக்கும்  ஆத்துமாக்களை ஜீவனாக மாற்றும் வழி.

[8/4, 10:57 AM] Elango: லூக்கா 14:26 யாதொருவன் என்னிடத்தில் வந்து, *தன் தகப்பனையும்* தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

[8/4, 10:57 AM] Elango: மத்தேயு 10:37 *தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல;** மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

[8/4, 10:58 AM] Elango: அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; *தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்* என்றார்.

24. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: *ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்**

[8/4, 11:03 AM] Elango: 21. அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, *அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.*

22. *உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.*  மத்தேயும் 4

[8/4, 11:20 AM] Elango: யூத கலாச்சாரத்தில் , தன் தகப்பன் இறக்கும் வரையில் , தன் தகப்பனை  மகன் கவனிக்க வேண்டும், இது பல வருடங்கள் ஆகலாம்... ஆகையால் அவன் இயேசுவின் சீஷனாக ஆக காலம் ஆகலாம்.

*உண்மையிலே அந்த சீஷனுடைய தகப்பன் அந்த நேரத்தில் மரிக்கவில்லை.... ஆனால் அவன் சொல்லும் விதம் என்னவென்றால்,, என் தகப்பன் மரிக்கும் வரையில் நான் அவரை கவனிக்க வேண்டும்.. அவர் மரித்த பிறகு உம்மை நான் பின்பற்றுவேன் என்கிறான்.*

ஆண்டவர் இங்கே, ஆவிக்குரியரீதியில் மரித்தவர்களை குறித்து பேசுகிறார்... சிலர் சரீர பிரகாரமாக உயிரோடு இருக்கிறவர்களாக தன்னை சொல்லிக்கொண்டாலும், அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக தேவனுக்கு மரித்தவர்கள்... தேவனோடு ஆவிக்குரிய எந்த உறவும் இல்லாமால், தேவனற்றவர்களாக வாழ்பவர்கள் அவர்கள்.

[8/4, 11:37 AM] Elango: தன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணவேண்டாம் என்ற முரண்பாடு கருத்தை  ஆண்டவர் இயேசு இங்கே சொல்ல வரவில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பரிசேயர்களை கடிந்துக்கொள்கிறார் தன் பெற்றோர்களை கவனிக்காமல் போனதன் நிமித்தம்...

11. *நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது* என்று சொல்லி, 12. அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;  13. *நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.* மாற்கு 7:11-13

[8/4, 11:38 AM] Elango: எப்படியெனில், *உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும்** என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. மாற்கு 7:10

[8/4, 12:14 PM] Parthiban VTT: பாஸ்டர் அப்ப இயேசுவின் சீஷனா இருக்கனும் எல்லாவற்றையும் வெறுக்கனும்...அப்ப அவன் துறவியாதான் போகனும்.

[8/4, 12:26 PM] Elango: இயேசுவின் சீஷனுடைய முதல் தகுதி அவன் தன்னையும், தனக்குண்டானவைகளையும் விட இயேசுவை அதிகமாக நேசிப்பவனாயும், அவரது சித்தத்தையே முதன்மையானதாக செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும்.

தன்னை வெறுக்காமல், துறவியாக மாறி இமயமலை போய் இருந்தாலும் தான் என்பது சாகாது.

[8/4, 12:39 PM] Parthiban VTT: ANBU na enna pastor...jesus anbu nammakitta iruka...enaku therinthu elloruda anbilum oru suyanalamdhan iruku..appara eppadi jesus mattum athigama nesikiren nu solla mudium...

[8/4, 12:40 PM] Parthiban VTT: SUYANALAM illama yarumay illa pas..

[8/4, 12:42 PM] Elango: அன்பு என்றால் என்ன... இயேசுவோட அன்பு நம்மகிட்ட இருக்கா... எனக்கு தெரிந்து எல்லோரோட அன்பிலும், ஒரு சுயாதீனம் இருக்கு... அப்புறம் எப்படி இயேசுவை அதிகமாக நேசிக்கிறேன்னு சொல்ல முடியும் - சகோ பார்த்தீபன்

[8/4, 12:44 PM] Elango: சுயநலம்*

[8/4, 12:50 PM] Parthiban VTT: எனக்கு சுயநலம் இல்லனு யாரும் சொல்ல முடியாதே...

[8/4, 12:53 PM] Parthiban VTT: அப்படி சொன்னா அவங்க பொய் சொல்றாங்கனுதானே அா்த்தம்..

[8/4, 12:53 PM] Elango: அந்த சுயநலம் இல்லாமல் நாம் வாழ வேண்டுமென்பதே இயேசுவின் சீஷனாக இருக்க விரும்புபுவனுடைய தகுதி..... *ஒருவன் தனக்குண்டானவைகளெல்லாம் வெறுக்காவிட்டால் அவன் எனக்கு சீஷனாக இருக்க முடியாது* என்கிறார் ஆண்டவர்....

[8/4, 12:55 PM] Elango: இயேசுவின் சீஷனாக ஆண்டவர் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது, தன்னை தானே வெறுத்து என்பது.... நாம் இன்னும் சுயநலமாக வாழ்வது என்பது நம்முமுடைய பிரச்சனை... சீஷனாக இருக்க தகுதியில்லாமை...

[8/4, 12:56 PM] Elango: எத்தனையோ ஊழியர்கள், மிஷினரிகள் தன்னையும், தன் குடும்பத்தையும் தியாகம் செய்து, சுயநலம் பார்க்காமல் ஆண்டவருக்காக நின்றதால் தான் நாம் இப்போது கிறிஸ்துவரகளாக இருக்கிறோம்...

[8/4, 12:56 PM] Parthiban VTT: அது பூமியிலே  முடியுமா

[8/4, 12:58 PM] Elango: சுயநலம் இல்லாமல் இல்லாமல் ஒருவரும் இல்லை என்று சொல்வவது.... எலியா சொல்வது போல் இருக்கிறது ... தான் ஒருவன் மாத்திரமே மீதியாக இருக்கிறேன் என்று சொன்னது போல்.... ஆண்டவருக்காக சுயநலம் பார்க்காமல் ஊழியம் செய்ப்வர்கள் அநேகர்....

[8/4, 12:58 PM] Parthiban VTT: தியாகம் எ..எ

[8/4, 12:59 PM] Elango: வட இந்தியாவாக இருக்கட்டும், தென்னிந்தியாவாக இருக்கட்டம்... தன் குடும்பத்தையும் விட்டு... மிஷினரியாக எத்தனையோ ஊழியர்கள் வருகிறார்....

[8/4, 12:59 PM] Elango: அப்படி பூமியில் முடியாது என்றால்... ஆண்டவர் அப்படிப்பட்ட கட்டளையை கொடுத்திருக்க மாட்டாரே.....

[8/4, 1:01 PM] Elango: ஆண்டவருடைய சீஷர் தோமாவை எடுத்துக்கொள்ளுங்கள்... ஏன் அவர் தன் சொந்த தேசத்தையும், குடும்பத்தையும் விட்டு இந்திதியாவை நோக்கி கடந்து வர வேண்டும்.... இது சுயநலமில்லாத ஆண்டவர் மேல் உள்ள அன்பின் நிமித்தமும், சத்தியத்தை அனைவருக்கும் அறிவிக்கும் படியாக வந்தார்... *இதில் சுயநலம் உள்ளதா*?

[8/4, 1:02 PM] Elango: நம்மிடம் சுயநலம் இருக்கிறதென்றால்... அடுத்தவர்களிடமும் சுயநலம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லைலையே...

[8/4, 1:05 PM] Elango: பவுல் செய்தது சுயநலமில்லாத ஊழியம்.

தேவனுக்காக தன்னையே அர்ப்பணித்த ஊழியம்.

அவர் பொய் சொல்கிறாரா?

2 கொரிந்தியர் 11:23-31
[23]அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
[24]யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்;
[25]மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
[26]அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
[27]பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
[28]இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
[29]ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
[30]நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்.
[31]என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், *நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.*

இது சுயநலமில்லாத ஊழியம்...👆🏻👆🏻👆🏻

[8/4, 1:12 PM] Elango: தேவன் என்னை ஊழியத்திற்க்கு அழைத்தால் என்றால் என் குடும்பத்தையும் அவர் போஷிப்பார் தானே... வேலைக்காரன் தன் ஆகாரத்திற்க்கு பாத்திரவான் தானே... ஊழிய அழைப்பில் வித்தியாசம் உண்டு.... சிலர் குடும்பமாக ஊழியம் செய்கிறார்கள்... பேதுரு கூட தன் மனைவியோடு ஊழியம் செய்வதை நாம் வேதத்தில் பார்க்கலாம்....

[8/4, 1:14 PM] Elango: மத்தேயு 4:18-20
[18]இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
[19]என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
[20] *உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.*

[8/4, 1:15 PM] Elango: இந்த பேதுரு பின்னாட்களில் மனைவியோடும் ஊழியம் செய்கிறார் தானே.

1 கொரிந்தியர் 9:5
[5] *மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?*

குடும்பமாக ஊழியம்👆🏻👆🏻👆🏻

[8/4, 1:17 PM] Elango: *He that 💓loveth💓 father or mother more than me is not worthy of me:* mat. 10:37

[8/4, 2:03 PM] Elango: I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; *அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.* இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், *சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.*

தேவன் அன்பாயிருக்கிறார், அவரில் இருள் எவ்வளவேனும் இல்லை என்று பார்க்கிறோம்... சூரியனை மையமாக பூமி சுற்றாத போது... எவ்வளவு பெரிய விபரீதம் இருக்கிறதோ...

அதேப் போல ஒவ்வொரு ஜீவராசிகளும், மனிதனும் தேவனை மையமாக வைத்து தன் ஜீவியத்தை நடத்தாத போது அதே விபரீதம் உள்ளது.

*தேவனை விட, தேவனுக்கு மேலாக நாம் யாரையும் நேசித்தால் அது தேவனை பகைப்பதற்க்கு சமம்.*

4. விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
15. *உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.*
16. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
17. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2 :15:17

[8/4, 2:18 PM] Elango: தேவன் அன்பாக இருக்கிறார், அது தேவனுடைய குணம். அதையே நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.

இதையே அவருடைய சுயநலம் என்று சொல்லலாகாது.

அவரை விட நாம் பிறரிடத்தில் அதிகமாக அன்பு கூறினால் , அது நம்மிடத்தில் தேவ அன்பு இல்லை என்றே அர்த்தம்.

1 யோவான் 4:7-10
[7]பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
[8]அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
[9]தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
[10] *நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.*

[8/4, 3:46 PM] Thomas - Brunei VTT: 1⃣ once you become a disciple.. You cannot go back..
Once you have taken hold of the yoke... No turning back..
That issue must have been considered before taking the yoke..

[8/4, 3:50 PM] Thomas - Brunei VTT: 2⃣ I think Honouring parents doesn't mean you relinquish your higher calling..
Jesus did not stop preaching to meet His mother and His Brothers.

[8/4, 3:52 PM] Elango: 3. மூன்றாவது பதில் சொல்லுங்க ஐயா

[8/4, 4:03 PM] Elango: ஒருமுறை நீங்கள் இயேசுவுக்கு சீஷராகிவிட்டால், நீங்கள் சீஷர் என்ற ஸ்தானத்திலிருந்து விலக முடியாது. நீங்கள்  நுகத்தடியை பிடித்துவிட்டீர்கள், திரும்பி போகலாகாது. இது பற்றியதான சிக்கலை, நீங்கள் நுகத்தை எடுப்பதற்க்கு முன்பதாகவே யோசித்திருக்க வேண்டும். - @⁨Thomas - Brunei VTT⁩

[8/4, 4:18 PM] Elango: நான் நினைக்கிறேன், பெற்றோர்களை கனம் பண்ணுவது என்பது உங்களுடைய தேவ அழைப்பை கைவிடுவது என்ற அர்த்தமாகி விடாது. இயேசு தமது தாயையும், சகோதரர்களையும் சந்திப்பதற்க்காக  தமது பிரசங்கத்தை நிறுத்தவில்லை...  - @⁨Thomas - Brunei VTT⁩

[8/4, 4:29 PM] Elango: லூக்கா 9:62
[62]அதற்கு இயேசு: *கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல* என்றார்.

பேதுரு ஆண்டவரை மறுதலித்து பின்பு மனந்திரும்பி வந்ததை நாம் பார்க்க முடியும்.

பேதுருவின் பலத்தை பலவீனத்தை தேவன் ஏற்கனவே அறிந்தவர் தான்.

2 கொரிந்தியர் 3:5
[5] *எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.*

[8/4, 4:38 PM] Elango: மத்தேயு 24:13
[13] *முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.*

[8/4, 4:41 PM] Elango: Bible teacher ஆக இருக்கும் நீங்களும் பதில் தரலாமே ஐயா😊

[8/4, 4:57 PM] Elango: நிக்கொலா பின் வாங்கிய போனது சரித்திரமா ஐயா?

நீங்கள் சொல்லுங்கள்.. நான் இப்போது ஆண்டவரை விசுவாசிக்கிறேன்.. ஆண்டவருக்குள் நிலைத்திருந்து விசுவாசத்தின் நற்கிரியைகளை வெளிப்படுத்துகிறேன்.

பின்நாட்களில் நான் ஆண்டவரை விட்டு விலகி துன்மார்க்கமாக ஜீவனம் செய்தால் என் இரட்சிப்பை இழந்துப்போக மாட்டேனா?

[8/4, 4:59 PM] Elango: அல்லது நான் ஒரு முறை இரட்சிப்புக்குள் வந்த பிறகு, என் இரட்சிப்பை இழக்க வாய்ப்பே இல்லையா ஐயா?

[8/4, 5:05 PM] Elango: குருவின் சொல்படிக்கு, கட்டளைக்கு கீழ்ப்படியாதவன் சீஷன் என்னும் தகுதி இழப்பான்.

குருவின் கட்டளையை பின்பற்றாவன் சீஷனல்ல.

[8/4, 5:09 PM] Elango: https://vedathiyanam.blogspot.in/2017/07/blog-post_55.html?m=1

சீஷத்துவத்தை பற்றி இந்த தியானத்தில் பார்க்கலாம்

[8/4, 6:05 PM] Elango: 🔖 *இன்றைய வேத தியானம் - 04/08/2017* 🔖

1⃣  👇மத்தேயு 8:21-22 வசனங்களில், ஆண்டவர் இயேசு நமக்கு சொல்ல விரும்பும் சத்தியம் என்ன❓

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: *ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்* என்றான்.
மத்தேயு 8:21
22 அதற்கு இயேசு: *மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா* என்றார்.
மத்தேயு 8:22

2⃣ தகப்பனையும் தாயையும் கனம்பன்ன வேண்டும் என்று சொன்ன ஆண்டவர் இயேசு,
*ஏன் இந்த இடத்தில் தகப்பனை அடக்கம் பண்ண அனுமதிக்கவில்லை❓*
j
3⃣ இங்கே கீழே வசனங்களில் எலிசா அனுமதித்ததற்க்கும், 👇🏻 அங்கே மேலே வசனங்களில் இயேசு அனுமதிக்காததற்க்கும்👆🏻 ஏதாவது காரணம் உண்டா❓

அப்பொழுது அவன்  *( எலிசா)  மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா;* நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/4, 6:46 PM] Elango: 🔖 *இன்றைய வேத தியானம் - 04/08/2017* 🔖

1⃣  👇மத்தேயு 8:21-22 வசனங்களில், ஆண்டவர் இயேசு நமக்கு சொல்ல விரும்பும் சத்தியம் என்ன❓

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: *ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்* என்றான்.
மத்தேயு 8:21
22 அதற்கு இயேசு: *மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா* என்றார்.
மத்தேயு 8:22

2⃣ தகப்பனையும் தாயையும் கனம்பன்ன வேண்டும் என்று சொன்ன ஆண்டவர் இயேசு,
*ஏன் இந்த இடத்தில் தகப்பனை அடக்கம் பண்ண அனுமதிக்கவில்லை❓*
j
3⃣ இங்கே கீழே வசனங்களில் எலிசா அனுமதித்ததற்க்கும், 👇🏻 அங்கே மேலே வசனங்களில் இயேசு அனுமதிக்காததற்க்கும்👆🏻 ஏதாவது காரணம் உண்டா❓

அப்பொழுது அவன்  *( எலிசா)  மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா;* நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/4, 7:27 PM] Ebi Kannan Pastor VTT: ஆண்டவர் எப்பொழுதும் ஒரு சம்பவத்தோடு தொடர்பில்லாத ஒன்றை அதைப்போல தோன்றும் மற்றொன்றோடு தொடர்புபடுத்தி உபதேசிப்பார்

எ.கா
இராயனுக்கு வரி கொடுப்பதைப் பற்றி பேசினது

இன்னும் பல

[8/4, 7:28 PM] Ebi Kannan Pastor VTT: மாற்கு 7:11-13
[11]நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,
[12]அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
[13]நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

[8/4, 7:29 PM] Ebi Kannan Pastor VTT: தாய் தகப்பனைக் குறித்த இயேசுவின் நிலைப்பாடு இதுதான்

[8/4, 7:32 PM] Ebi Kannan Pastor VTT: தகப்பன் மரிக்கும் வரைக்கும் அவர் அடக்கம்பண்ணப்படும்வரைக்கும் அவரை பின்பற்றாதிருக்க உத்தரவு கேட்டது உள்ளபடியே அவனுடைய அறியாமையைக் குறிக்கிறது

[8/4, 7:35 PM] Ebi Kannan Pastor VTT: இதில் இயேசுக் கூறின ஆலோசனையின் அர்த்தம்
அவரை பின்பற்றாமல் இருக்க
அவருக்கு ஊழியஞ் செய்யாமல் இருக்க சாக்குப் போக்குக் கூறும் ஒவ்வொருத்தருக்கும் பொருந்தும்

[8/4, 9:52 PM] Levi Bensam Pastor VTT: மத்தேயு 3:9
[9] *ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்;*👇👇👇👇👇👇 👇 👇 👇 *தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.*

[8/4, 9:52 PM] Levi Bensam Pastor VTT: உபாகமம் 5:16
[16]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, *உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.*☝️ 👆 👆 👆 👆 👆

[8/4, 9:52 PM] Levi Bensam Pastor VTT: ஏசாயா 43: 1
இப்போதும் யாக்கோபே, *உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது:* பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

Isaiah 43: 1
But now thus saith the *LORD that created thee, O Jacob, and he that formed thee,*O Israel, Fear not: for I have redeemed thee, I have called thee by thy name; thou art mine.👆👆👆👆👆👆👆👆

[8/4, 9:59 PM] Levi Bensam Pastor VTT: லூக்கா 9:57-62
[57]அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
[58]அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, *மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.*
[59]வேறொருவனை அவர் நோக்கி: *என்னைப் பின்பற்றிவா என்றார்.* அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
[60]அதற்கு இயேசு: *மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்*;👉 👉 👉 👉 👉 *நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.*
[61]பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
[62]அதற்கு இயேசு: *கலப்பையின்மேல் தன் கையை வைத்துப்👇👇👇👇👇👇👇 பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.*

[8/4, 10:08 PM] Levi Bensam Pastor VTT: 1 கொரிந்தியர் 7:29-31
[29]மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், *இனிவரும் காலம் குறுகினதானபடியால்,*👇 👇 👇 👇 👇 👇 மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,
[30]அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும்,
[31] *இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்;👇👇👇👇👇👇👇 இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே*.

[8/4, 10:11 PM] Levi Bensam Pastor VTT: எபேசியர் 5:14-17
[14]ஆதலால், தூங்குகிற நீ விழித்து, *மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.*
[15]ஆனபடியினாலே, நீங்கள் *ஞானமற்றவர்களைப்போல நடவாமல்,* ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
[16] *நாட்கள் பொல்லாதவைகளானதால் 👉👉காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.*👍👍👍👍👍👍👍
[17]ஆகையால், *நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.*🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

[8/4, 10:12 PM] Elango: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்னதன் நோக்கம் - மற்றவர்கள் ஆவிக்குரிய ரீதியில் மரித்தவர்கள், வேதத்தை பின்பற்றாத நபர்களாய் பாரம்பரியத்தை கைக்கொள்கிற நபர்களாய் இருந்தார்கள், மரித்தவர்கள் உண்மையாகவே மரித்துவிட்டார். அதனால் தான் இயேசுகிறிஸ்து அந்த அர்த்தத்தில் பேசுகிறார்.

இயேசுகிறிஸ்து ஏன் அவனை அனுமதிக்கவில்லையென்றால், இங்கே அவனுடைய அழைப்பை முக்கியப்படுத்துகிறார்.

இறந்த ஒருவருக்கு காரியங்களை செய்ய அநேகர் இருப்பார்கள் ஆனால் தேவனுடைய அழைப்பு என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை..குறிப்பிட்ட நபருக்கு தான் கிடைக்கிறது. அதனால் தான் இயேசுகிறிஸ்து அங்கே அவனிடம் வற்ப்புறுத்தி சொல்கின்றார்.

*அதே நேரத்தில் எலியா ஏன் எலிசாவிற்க்கு அனுமதி கொடுத்தார் என்று பார்க்கும் போது, எலியாவிற்க்கு காலங்கள் நிறைய இருந்தது, பெற்றிடம் சொல்லிவிட்டு வா ஆனால் நான் சொல்லிய காரியங்களை மறந்துடாதே என்கிறார் எலியா... ஆனால் இயேசுகிறிஸ்துக்கு அந்த மூன்றரை வருடத்திற்க்குள் அந்த இடங்களை எல்லாம் சுற்றி முடிக்க வேண்டும்.தேவனுடைய இராஜ்யத்தை சுவிஷேசத்தை பிரசிங்கிக்க வேண்டும்.நேரங்கள் குறைவு அதை விரைவாக நிறைவேற்றி விட வேண்டும்.அதனால் தான் சீஷராக வரவேண்டிய இந்த நபரை துரிதப்படுத்துகிறார்.*

ஆனால் தகப்பன் தாயை கனப்படுத்தக்கூடாது என்று அந்த இடத்தில் அர்த்தம் கிடையாது. அந்த அழைப்பின் மேன்மையை முக்கியப்படுத்தியே அங்கே ஆண்டவர் சொன்னார்.

-.Pastor Soumraj

[8/4, 10:15 PM] Soumraj Pastor VTT: Thank you brother

[8/4, 10:16 PM] Levi Bensam Pastor VTT: லூக்கா 14:15-24
[15]அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: *தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான்* என்றான்.
[16]அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
[17]விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: *நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள்*🙏🙏🙏🙏🙏🙏, என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
[18] *அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள்*😭😭😭😭😭😭. *ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.*🤔 🤔 🤔 🤔 🤔
[19] *வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.*🤔🤔🤔🤔🤔🤔
[20] *வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது* என்றான்.
[21]அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
[22]ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
[23]அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
[24] *அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில்👇👇👇👇👇👇👇 ஒருவனாகிலும் என் விருந்தை🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂ ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான்* என்று சொன்னார்.

[8/4, 10:22 PM] Elango: மத்தேயுவில் நேசிக்கிறவன் என்ற வார்த்தை,

மத்தேயு 10:37
[37]தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் *நேசிக்கிறவன்* எனக்குப் பாத்திரன் அல்ல.

இந்த இடத்தில் ஃப்லேயோ எந்த கிரேக்க வார்த்தை உபயோகித்திருக்கிறார்கள்.இதன் அர்த்தம் Brotherly love என்பதை குறிக்கிறது.

லூக்கா 14:26
[26]யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், *தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால்* எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இங்கே வெறுத்தல் என்பது கிரேக்கத்தில் - மெசிவா என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  அதன் அர்த்தம் என்னவென்றால் *ஒரு காரியத்திற்க்கு இடையூறாக இருக்கிற,  காரியத்தை வெறுத்தல் என்பது தான் அதன் அர்த்தம்.*

- pastor Rooban

[8/4, 10:26 PM] Levi Bensam Pastor VTT: யோவான் 21:15-18
[15]அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, *இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா* என்றார். அதற்கு அவன்: *ஆம் ஆண்டவரே,* உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: *என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக* என்றார்.
[16] *இரண்டாந்தரம்* அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, *நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா* என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: *என் ஆடுகளை மேய்ப்பாயாக* என்றார்.
[17] *மூன்றாந்தரம்* அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, *நீ என்னை நேசிக்கிறாயா* என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். *இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.*
[18]நீ *இளயவதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்* என்றார்.

[8/4, 10:30 PM] Thomas Udumalai VTT: லூக்கா 9:59
மிக சுருக்கமாக இந்த வசனங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

( வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான் )

இந்த உரையாடலில் யூதர்களுடைய கலாசார முறைமை அறிந்தால் மட்டுமே - இயேசு சொன்ன விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

கீழே உள்ள வசனங்களை கவனமாக படிக்கவும் :

ஆதியாகமம் 50 : 10
அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினார்கள்.

எண்ணாகமம் 20 : 29
ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டானார்கள்.

உபாகமம் 34 :8
இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள், மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

1 சாமுவேல் 25 :1
சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து, பாரான் வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப்போனான்.

வேதாகமத்தில்  யூதர்கள் துக்க நாட்களை
1 வாரம்
1 மாதம்
1 வருடம்  என்று  துக்க நாட்களை கொண்டாடுவார்கள்
( அனுசரிப்பார்கள் ) என்பதற்கு மேலே வசன ஆதாரங்கள்..☝☝ கொடுக்கப்பட்டுள்ளது

இந்த உரையாடல் :
இயேசு ஒரு நபரை நோக்கி நீ என்னை பின்பற்றி வா என்றார்.

அந்த நபர் தகப்பன் மீது மிகுந்த நேசம் வைத்திருந்த படியால் இயேசு தன்னை பின்பற்றி வா என்று சொன்னதற்கு
என் தகப்பனுடைய துக்கநாட்களை ஒரு வருடம் கொண்டாட (அனுசரிக்க) வேண்டும் என்றான்.

இயேசு கிறிஸ்து: தகப்பனை அடக்கம் பண்ண வேண்டாம் என்று சொல்லவில்லை.,
ஒரு வருடம் துக்கங்கொண்டாட வேண்டாம் என்றே சொன்னார்.

அவரைப் பின்பற்றவும்
( அவருடைய பணியை செய்ய ) நாட்களையும் , வருடங்களையும் தாமதம் மற்றும் தள்ளிப்போடுவதையே இயேசு வேண்டாம் என்று சொன்னார்.,

இதில் இயேசு தகப்பனை அடக்கம் பண்ண வேண்டாம் என சொல்லவில்லை.
(புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டதால் - யூதர்களின் மொழி., கலாசார முறைமையின் புரிதல் <குறைவின் -காரணம் > பிழையே).

இன்று நாமும் கூட இயேசுவின் அழைப்பை ஏற்று
அவரை பின்பற்றாமல்
அவருக்கு ஊழியஞ் செய்யாமல் சாக்குப் போக்குக் கூறி நாட்களை தள்ளிப்போட்டு கொண்டிருக்கும் நம் ஒவ்வொருத்தருக்கும் பொருந்தும்.

[8/4, 10:30 PM] Levi Bensam Pastor VTT: *இயேசு கிறிஸ்துவை உண்மையாய் நேசிக்கிறீர்களா*👇 👇 👇 👇 👇 *அப்படி என்றால் ஆட்டு குட்டிகளையும், ஆட்டையும் மேய்க்க தயாராக இருங்கள்*🙏🙏🙏👍🙏🙏

[8/4, 10:31 PM] Moses Bro VTT: 4 நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

ஆதியாகமம் 17 :4

Shared from Tamil Bible Offline 3.7
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
www.bible2all.com

[8/4, 10:37 PM] Elango: லூக்கா 9:59-62
[59]வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

[60]அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

[61]பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

[62]அதற்கு இயேசு: *கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல* என்றார்.

முதல் Priority தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்பதனால் இயேசுகிறிஸ்து இந்த காரியத்தை குறித்து பேசியிருக்கிறார்.

பழைய ஏற்ப்பாட்டில் ஆபிரகாமுக்கும் அதே மாதிரியான டெஸ்ட் தான் வந்தது, முதலாவது கீழ்ப்படிதல் குறித்ததான ஒரு டெஸ்ட் அவனுக்கு நடந்தது

இரண்டாவது அவனுக்கு விசுவாசத்தை குறித்ததான டெஸ்ட் நடந்தது.

மூன்றாவது அவனுக்கு First priority யாருக்கு கொடுக்கிறதான டெஸ்ட் நடந்தது.

ஈசாக்கை பலியிட கொண்டு போன வேளையில் அவனது மனம் முழுவதும், எதன் மேல் இருந்தது என்று கர்த்தர் அந்த சூழ்நிலையை பார்க்கிறார்.

அதே மாதிரியான சூழ்நிலைதான் கர்த்தர் இங்கே பேசுகிறார்.

மாற்கு 7:10-13
[10]எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
[11] *நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,*
[12]அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
[13]நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

இங்கே மேலே வசனங்களில் பரிச்சேயர்களை ஆண்டவர் கடிந்துக்கொள்கிறார் ... தன் தகப்பனையும் தாயையும் காணம் பண்ணாமல் போனதின் நிமித்தம்.இப்படியிருக்க ஆண்டவர் பெற்றோர்களை கனம் பண்ண வேண்டாமென்று சொல்லமாட்டார்.

*First priority தேவனுக்குத்தான், பிறகு தான் மற்றவர்களுடைய Priority வருகிறது*

- Pastor Rooban

[8/4, 10:53 PM] Elango: மத்தேயு 8:21-22
[21]அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
[22]அதற்கு இயேசு: *மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.*

இந்த வசனத்திற்க்கு என்னுடைய புரிந்துக்கொண்ட பார்வையை நான் பதிவு செய்கிறேன்.

இதில் வருகிள சீஷன் 12 சீஷர்களில் ஒருவனாக இருக்க வாய்ப்பில்லை.இயேசுவை பின்பற்றின வேறு ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்துத்

அவனுடைய தகப்பன் மரணமடைந்த சமயத்தில் அந்த நாளில் இயேசுவிடம் அனுமதி கேட்கவில்லை... அதற்கு மாறாக தன் தகப்பன் உயிரோடு இருக்கும் வரைக்கும்,  அவரை அடக்கம் பண்ணுகிற வரைக்கும் அவரோடு இருந்து அவரை கவனித்துவிட்டூ, அதன் பிறகு ஊழியத்திற்க்கு வர அனுமதி கேக்கிறான் அதுதான் அந்த சம்பவம் சொல்லுது.

நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பெற்றோரை கவனிக்க வேண்டியது தேவை, கனப்படுத்துவது அவசியம். ஆனால் ஊழியத்திற்க்கு சென்றாலும் நாம் முழு நேரமாக வந்தாலும் பெற்றோரை நம்மால் கவனிக்க முடியும்.

பணம் அனுப்பி கவனிக்கலாம், தன் சகோதரனுடை வசத்தில் வைத்து கவனிக்கலாம். அப்படி பல வழிகளில் கனப்படுத்துகிற வாய்ப்புண்டு. அப்படி அவன் செய்யலாம்.

ஆனால் அவன் என்ன செய்கிறான் என்றால், தகப்பன் உயிரோடு இருக்குமௌ வரையில் அவரை காத்துக்கொள்ள வேண்டும் என்று ஊழியத்தை காட்டிலும்,  பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுக்கிற காரியத்தை பார்க்கலாம்.

அதனால் தான் ஆவியில் மரித்த நிலையில் இருக்கிறவர்களை, தங்கள் இனத்தார் கவனித்துக்கொள்ளட்டும்,  நீ ஊழியத்திற்க்கு வா, ஊழியத்தை தாமதமில்லாமல் செய்ய வேண்டும் என்பதை தான் இயேசுகிறிஸ்து சொல்லுகிறார் என்பது என்னுடைய கருத்து.

- Pastor Charles

Post a Comment

0 Comments