Type Here to Get Search Results !

பழைய ஏற்பாட்டு உணவு முறைகளை நாம் கடைபிடிக்க வேண்டுமா❓

[8/3, 9:33 AM] Levi Bensam Pastor VTT: 🌟 *இன்றைய வேத தியானம் -03/08/2017* 🌟
1⃣ பழைய ஏற்பாட்டில், தேவன் சொன்ன உணவு முறைகளை இன்றும் நாம் கடைபிடிக்க வேண்டுமா❓கடைபிடியாவிட்டால் கீழ்ப்படியாமையா❓

2⃣ கடல் உணவுகளில் சிறகும் செதிலும் இல்லாதவைகளை உண்ண கூடாது எனில் அந்த உணவுகளை பிடிப்பவரும், விற்பவரும், உண்பவரும் தேவ கோபத்திற்க்கு உள்ளானவர்களா❓

3⃣ பன்றி தடை செய்யப்பட்ட உணவு எனில், பன்றி மட்டுமே உண்ண வழி உள்ள குளிர் பகுதி மக்கள் என்ன செய்ய முடியும்❓மீறி சாப்பிட்டால் பாவமா❓

4⃣  *பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட உணவுமுறைகளை நாம் இப்போது கடைபிடிக்க வேண்டாமெனில்... தேவன் அப்படிப்பட்ட உணவு கட்டுப்பாடு முறைகளை ஏன் கொடுக்க வேண்டும்⁉*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/3, 10:03 AM] Levi Bensam Pastor VTT: *விதையுள்ளதை மனிதனுக்கும், விதை இல்லாதை மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் கொடுக்க காரணம் என்ன*❓❓❓❓❓❓❓❓ 👇👇👇👇👇👇👇ஆதியாகமம் 1:29-30
[29]பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் *விதைதரும்* கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
[30]பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் *பசுமையான சகல பூண்டுகளையும்* ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

[8/3, 10:16 AM] Elango: லேவியராகமம் 11:26 விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; *அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்**

[8/3, 10:17 AM] Elango: லேவியராகமம் 11:27 நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; *அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.*👆⁉

[8/3, 10:17 AM] Elango: லேவியராகமம் 11:31 *சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது;* ⁉ அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

[8/3, 10:19 AM] Levi Bensam Pastor VTT: ஏசாயா 65:4
[4]பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:

[8/3, 10:21 AM] Levi Bensam Pastor VTT: ஏசாயா 66:1-3,17
[1]கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?
[2]என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
[3]மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
[17]தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், *பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று 🗣🗣🗣கர்த்தர் சொல்லுகிறார்.*🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂

[8/3, 10:23 AM] Elango: *லேவியராகமம் 11 அதிகாரம் முழுவதையும் படித்தால் புசிக்கத்தக்க புசிக்கத்தகாத மிருகங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கும்*

1. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:

3. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

4. ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

5. குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

6. முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

7. பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

8. இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

9. ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

10. ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

11. அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.

12. தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.

13. பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

14. பருந்தும் சகலவித வல்லூறும்,

15. சகலவித காகங்களும்,

16. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,

17. ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,

18. நாரையும், கூழக்கடாவும், குருகும்,

19. கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.

20. பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

21. ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

22. வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.

23. பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

24. அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

25. அவைகளின் உடலைத் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

26. விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

27. நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

28. அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

29. தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில் பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,

30. உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.

31. சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

32. அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

33. அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

34. புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

35. அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

36. ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.

37. மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

38. அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

39. உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

40. அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

41. தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

42. தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

43. ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

44. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

45. நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

46. சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

47. மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

[8/3, 10:23 AM] Elango: Leviticus Chapter 11

[8/3, 10:24 AM] Elango: எனக்கு தெரிந்த ஒரு கிறிஸ்தவர் இப்போதும் பன்றி கறியை விரும்பி சாப்பிடுவார்... 😭😭😭

[8/3, 10:32 AM] Elango: பாஸ்டர், பேதுருக்கு சொல்லப்பட்ட அடித்து புசி என்று சொல்லப்பட்டது... புறஜாதியாரின் இரட்சிப்பை குறித்து தானே...

பேதுரு அந்த மிருகங்களை அப்படி அடித்து சாப்பிடவில்லை தானே...

அப்போஸ்தலர் 11:7,18
[7]அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
[18] இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: *அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.*

[8/3, 10:35 AM] Elango: உள்ளேயிருந்து வெளியே வருவதே நம்மை தீட்டுப்படுத்தும் என்றால் நான் போயிலை, பான்பராக், சாராயம் குடிக்கிலாமா பாஸ்டர்...🙏😀

[8/3, 10:37 AM] Elango: சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

*சுத்தம் அசுத்தம் என்று எதன் அடிப்படையில் அப்படி மிருக பறவைகளை பிரித்தார்? ஏதாவது காரணம் இருக்கும் தானே.... மிருகங்கள் இன்றும் அப்படிதானே இருக்கிறது...

[8/3, 10:40 AM] Elango: *தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள்* எவையெனில் பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும், 30. உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.

எலி, உடும்பும் இரட்சிக்கப்பட்ட முன்பு சாப்பிடதுண்டு.... இப்போது இல்லை...

எலியும், உடும்பும் அசுத்த மிருகங்கள் வகையில் வருகிறது....

[8/3, 10:46 AM] Elango: ரோமர் 14:14 ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.

[8/3, 10:46 AM] Elango: மத்தேயு 15:11 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

மத்தேயு 15:18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

மத்தேயு 15:20 இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.

மாற்கு 7:15 மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

மாற்கு 7:18 அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

மாற்கு 7:20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

மாற்கு 7:23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

[8/3, 10:48 AM] Elango: எசேக்கியேல் 4:14 அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; *அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை* என்றேன்.

[8/3, 10:50 AM] Thomas - Brunei VTT: Praise the Lord.
I believe the New Testament has no diet restrictions.

We ad gentiles are advised not to eat blood and foods offered to idols.

Paul advised the Corinthian believers 'eat whatever is sold n the meat market'...
1 Corinthians 10:25

[8/3, 10:51 AM] Levi Bensam Pastor VTT: ரோமர் 14:1-3,13-15,20-21
[1]விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
[2]ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான்.
[3]புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
[13]இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
[14]ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
[15]போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
[20]போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
[21]மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

[8/3, 10:51 AM] Levi Bensam Pastor VTT: *சாக்கடையில் விழுந்து கிடந்து அசுத்தத்தை தின்னுகிற பன்றியாகட்டும், வாந்தி செய்கிறதை மறுபடியும் தின்னுகிற நாயாக இருக்கட்டும் அதனுடைய இறைச்சி எவ்வளவு ருசியாக இருந்தாலும் நமக்கு வேண்டாம் sorry எனக்கு வேண்டாம், காரணம் என் தேவன் விலக்கினதில் பல காரணங்கள் உண்டு*

[8/3, 10:53 AM] Glory Joseph VTT: SSSS   SUPER    GLORY TO GOD

[8/3, 11:02 AM] Thomas - Brunei VTT: Personal decision cannot be forced on others.

[8/3, 11:04 AM] Thomas - Brunei VTT: Are we recommending the diet laws which are part of the Mosaic Law?

[8/3, 11:04 AM] Elango: Personal decision should not disobey the Word Of God and Godly loves on other's rom 14:15

[8/3, 11:10 AM] Elango: ரோமர் 14:15-16
[15] *போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல;*⚠⚠⚠⚠⚠⚠ அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
[16]உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

[8/3, 11:11 AM] Thomas - Brunei VTT: Simple example...
If my beef eating is a hindrance to a young believer... I would never serve beef in his presence..

[8/3, 11:11 AM] Elango: ரோமர் 14:21-22
[21]மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.
[22] 👉👉👉👉👉 உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும்.👈👈👈👈👈👈👈 நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.

[8/3, 11:12 AM] Levi Bensam Pastor VTT: நல்ல கேள்விகள் எழும்பட்டும், 👍

[8/3, 11:13 AM] Thomas - Brunei VTT: I understand the explanations but my concern is are we ignorantly advising to follow the Law?

[8/3, 11:14 AM] Thomas - Brunei VTT: And one more..... Pig has been so degraded in India because of its habitat in our country

[8/3, 11:16 AM] Thomas - Brunei VTT: Please remember it is a favorite dish in many other countries

[8/3, 11:17 AM] Elango: அப்போஸ்தலர் 15:24-25,27-29
[24] *எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,*👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿

[25]நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட,

[27]அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.

[28] *எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.*

[29]அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.

[8/3, 11:19 AM] Thomas - Brunei VTT: Need to broaden our Understanding...
🙏🏻🙏🏻🙏🏻

[8/3, 11:21 AM] Elango: Shall we not obey the Law ayya?

மத்தேயு 7:12
[12]  *ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.*

[8/3, 11:26 AM] Elango: *Whatever commandment God has given to the Israelites is good because God knows what is good for man*

[8/3, 11:26 AM] Thomas - Brunei VTT: James says if you want to follow/keep/ observe the Law... You need to do the whole law

[8/3, 11:28 AM] Thomas - Brunei VTT: Circumcison too?

[8/3, 11:29 AM] Levi Bensam Pastor VTT: நீதிமொழிகள் 14: 12
*மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.*

Proverbs 14: 12
*There is a way which seemeth right unto a man, but the end thereof are the ways of death.*🙆♂🙆♂🙆♂🙆♂

[8/3, 11:29 AM] Thomas - Brunei VTT: Bro Elango i remember we had a lengthy discussion about The Law some months ago

[8/3, 11:30 AM] Thomas - Brunei VTT: It would be nice to recapitulate them...

[8/3, 11:31 AM] Thomas - Brunei VTT: I believe this speaks about a man who has not known God.

[8/3, 11:32 AM] Levi Bensam Pastor VTT: பிரசங்கி 7: 29
இதோ, *தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.*

Ecclesiastes 7: 29
Lo, this only have I found, that God hath made man upright; but they have sought out many inventions.

[8/3, 11:32 AM] Elango: no...... அப்போஸ்தலர் 15:24-25,27-29
[24] எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿

[8/3, 11:35 AM] Levi Bensam Pastor VTT: கொலோசெயர் 3:23-24
[23]நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
[24] *எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.*

[8/3, 11:39 AM] Justin VTT: 2பேதுரு 2;22 .....கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பியது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்கு சம்பவித்தது.  ....இதில் கழுவப்பட்ட பன்றி என சொல்லபட்டிருப்பதிலிருந்து பன்றியும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ளது என பொருள் கொள்ளலாமா....

[8/3, 11:40 AM] Elango: *Fish must have both fins and scales (Leviticus 11:9). That means, some of the things we are not supposed to eat are:*👇🏿👇🏿👇🏿👇🏿

Abalone
Catfish
Clam
Crab
Crayfish
Cuttlefish
Eel
Jellyfish
Limpet
Lobster
Marlin
Mussel
Octopus
Otter
Oyster
Porpoise
Prawn
Scallop
Seal
Shark
Shrimp
Squid
Sturgeon
Tarbot
Walrus
Whale

Notice shrimp. Because shrimp do not have both fins and scales, they are considered unclean.

[8/3, 11:41 AM] Thomas - Brunei VTT: There is a danger of ordinary ascetic preference of spiritual restraint to spiritual energy.
Colossians 2:21

[8/3, 11:42 AM] Elango: *As for mammals, they must chew the cud and have a divided hoof (Leviticus 11:3-4). This immediately labels pork, monkeys, cats, dogs, rabbits, and many others as unclean, while the following animals can still be eaten:*

Antelope
Beef
Buffalo
Deer
Elk
Giraffe (Not eaten due to being a protected species)
Goat
Moose
Sheep
Lamb

[8/3, 11:42 AM] Elango: *Leviticus 11 verse 18 and onwards gives a long lists of birds ("fowls") that must not be eaten. Namely, they are:*

Albatross
Bat
Bittern
Buzzard
Condor
Cormorant
Crane
Crow
Cuckoo
Eagle
Flamingo
Glede
Grosbeck
Gull
Hawk
Heron
Kite
Lapwing
Loon
Ossifrage
Osprey
Ostrich
Owl
Pelican
Penguin
Plover
Raven
Stork
Swallow
Swift
Vulture
Water hen
Woodpecker

[8/3, 11:42 AM] Elango: *The following birds are still clean and edible:*

Chicken
Dove
Duck
Goose
Grouse
Guinea fowl
Partridge
Peacock
Pheasant
Pigeon
Songbirds
Sparrow
Quail
Turkey

[8/3, 11:45 AM] Elango: 3. விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் *ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று* அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். 1 Timothy 4:3

இந்த வசனத்திற்க்கு அர்த்தம் சொல்லுங்களேன்......

[8/3, 11:55 AM] Levi Bensam Pastor VTT: 1 கொரிந்தியர் 8:1,4,7-8,10-13
[1]விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
[4] *விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.*
[7]ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.
[8]போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
[10]எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
[11]பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
[12]இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
[13]ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.

[8/3, 12:00 PM] Elango: சைவ காரர்கள், அசைவ காரர்களை அற்பமாக நினைக்கிறார் .. மற்ற மதத்தில்.... அதே போல கிறிஸ்தவர்களானா நாமும் புசிக்கிறவர்களை அற்பமாகவும்,... புசிக்காமல் இருக்கிற என்னை மேன்மையாகவோ நினைக்ககூடாது என்று பவுல் சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்....

[8/3, 12:02 PM] Elango: சுத்தமான, அசுத்தமான மிருகங்கள் என்று தேவன் ஏன் பிரித்தார் என்று மருத்துவ ரீதியில் யாராவது சொன்னால் எளிதில் புரிந்துக்கொள்ள இயலும்.. அனைவருக்கும்...

[8/3, 12:07 PM] Levi Bensam Pastor VTT: பன்றி பன்றி தான் ஐயா 🙆♂

[8/3, 12:07 PM] Levi Bensam Pastor VTT: 2 பேதுரு 2:22
[22]நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

[8/3, 12:13 PM] Elango: நாய் சுத்த மிருகமா அசுத்த மிருகமா ஐயா

[8/3, 12:23 PM] Levi Bensam Pastor VTT: *ராஜ போஜனத்தில் அப்படி என்னங்க தீட்டு என்று சொன்னால் புரியாது, ஆனால் உண்டு*👇👇👇👇👇👇👇👇👇👇 👇 👇 👇 தானியேல் 1:8,12-16
[8] *தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.*
[12]பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
[13]எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.
[14]அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
[15]பத்துநாள் சென்றபின்பு, *ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.*🖐🖐🖐🖐🤝🤝
[16]ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

[8/3, 12:26 PM] Elango: ஆமென் .. தேவனையும், தேவனுடைய வார்த்தையையும் நாம் கனம்பண்ணினால், நாமும் தேவனால் கனம்பண்ணப்படுவோம்....

[8/3, 12:30 PM] Levi Bensam Pastor VTT: 1கொரிந்தியர் 6: 12
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, *ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது;* எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

1 Corinthians 6: 12
All things are lawful unto me, but all things are not expedient: all things are lawful for me, but I will not be brought under the power of any.

[8/3, 12:34 PM] Ebi Kannan Pastor VTT: 👍✅ நாய் அசுத்த மிருகம்தான்
[8/3, 12:36 PM] Arun VTT: Why..?

[8/3, 12:37 PM] Ebi Kannan Pastor VTT: எந்தெந்த மிருகமெல்லாம் மாம்சம் புசிக்கிறதோ அதெல்லாம் அசுத்த மிருகமாகும்

[8/3, 12:38 PM] Levi Bensam Pastor VTT: *செங்கடலை கடந்து வந்தும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை மறந்து எகிப்து தேசத்தில் உள்ள இறைச்சி பாத்திரத்தையே நினைத்து இருக்கிறார்*👇 👇 👇 👇 👇 👇 யாத்திராகமம் 16:2-3
[2]அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
[3]நாங்கள் *இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே* உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.

[8/3, 12:39 PM] Ebi Kannan Pastor VTT: வேதாகமத்தில் எந்த இடத்திலும் நாயை மேன்மைப் படுத்தி வசனம் வரவேயில்லை

[8/3, 12:42 PM] Levi Bensam Pastor VTT: எண்ணாகமம் 11:4-6,33
[4]பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, *நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?*
[5]நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.
[6]இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.
[33] *தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.*

[8/3, 12:44 PM] Elango: பாஸ்டர் இதையும் சொல்லுங்களேன்.
பன்றி மாம்சம் திங்காதுதானே

[8/3, 12:48 PM] Elango: லேவி 11 : 7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருக்கும்... அது அசைபோடாது...அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்...


- @⁨Rigankumar VTT⁩

[8/3, 1:01 PM] Ebi Kannan Pastor VTT: பன்றி புழுக்கள் நிறைந்த உணவை சாப்பிடும்

[8/3, 1:04 PM] Ebi Kannan Pastor VTT: வெஜிடேபிள் சாப்பிடும் அனைத்து மிருகங்களும் சுத்தமானதல்ல ஆனால் மாம்சம் புசிக்கும் எந்த மிருகமும் சுத்தமானதல்ல அது அசுத்தம்

[8/3, 1:04 PM] Ebi Kannan Pastor VTT: அணில் புசிக்க இயலாது

[8/3, 1:10 PM] Ebi Kannan Pastor VTT: பழைய ஏற்பாட்டில்
சுத்த ஜீவன்கள்-  மனிதர்கள் புசிக்க தகுந்தது

அசுத்த ஜவன்கள்- மனிதர்கள் புசிக்கத் தகாதது

துஷ்ட மிருகங்கள்- மனிதர்களையே புசிக்கக் கூடியது

[8/3, 1:25 PM] Thomas - Brunei VTT: I'm a bit puzzled by the explanations...
Do we have any commandment in the New Testament about what animals you should eat and what animals you should not eat?
Except the circumstance and the manner by which they are eaten...

[8/3, 1:26 PM] Thomas - Brunei VTT: Doesn't Paul say that we can eat whatever is sold in the market ( meaning socially acceptable)

[8/3, 1:29 PM] Thomas - Brunei VTT: If i prefer not to eat a particular meat.. Then it should be out of some personal reason... Like..
I'm not used to eat this meat... Or i don't like the taste of that particular meat...
Instead if you say it is written in the OT Law... Then we are in the danger of the Galatian Church

[8/3, 1:30 PM] Thomas - Brunei VTT: Some comments sound very Spiritual but not Scriptural...

[8/3, 1:31 PM] Peter David Bro VTT: பிரதர் தமிழில் பதிவிடுங்களேன் நாங்க புரிந்து கொள்வோம்🙏🏻

[8/3, 1:35 PM] Thomas - Brunei VTT: In fact Jesus said it is not the things eaten that defile us but the things from within...

[8/3, 1:37 PM] Elango: எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. எந்த மிருகங்களை நாம் சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று புதிய ஏற்ப்பாபாட்டில் ஏதாவது சட்டம் இருக்கிறதா? *அவர்கள் சாப்பிடும் முறையும், சூழ்நிலையும் தவிர...*

[8/3, 1:38 PM] Elango: சந்தையில் விற்கப்படும் எதையும் சாப்பிடலாம் என்று பவுல் சொல்லவில்லையா?

[8/3, 1:39 PM] Thomas - Brunei VTT: Please do not bring in the Law... Then you will be Expected to keep all the Law.

[8/3, 1:41 PM] Ebi Kannan Pastor VTT: அப்போஸ்தலர் 15:20
[20]விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.

[8/3, 1:41 PM] Elango: நான் ஒரு குறிப்பிட்ட இறைச்சி சாப்பிட விரும்பவில்லை என்றால் .. அது சில தனிப்பட்ட காரணங்களால் இருக்க வேண்டும் ... அதாவது... நான் இந்த இறைச்சி சாப்பிட பயன்படுத்தவில்லை ... அல்லது நான் குறிப்பிட்ட இறைச்சி சுவை பிடிக்காது... அதற்கு பதிலாக OT சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது அதனால் நான் சாப்பிடவில்லை என்று நீங்கள் சொன்னால் நாமும் கலாத்தியர் சபையார் இருந்த ஆபத்தில் நாமும் இருக்கிறோம்.

[8/3, 1:42 PM] Elango: சிலருடைய comments ஆவிக்குரியவைகள் போல் தெரிகிறது... ஆனால் அது வேதாகம அடிப்படையில் இல்லைலை...

[8/3, 1:43 PM] Elango: தயவு செய்து நீங்கள் பழைய ஏற்ப்பாட்டு  சட்டத்தை கொண்டு வர வேண்டாம் ... பிறகு நீங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவீர்கள்.

[8/3, 1:58 PM] Elango: உண்மையிலேயே இயேசு என்ன சொன்னார்..... மாற்கு 7:15 மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

[8/3, 2:04 PM] Elango: I கொரிந்தியர் 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

[8/3, 2:26 PM] Levi Bensam Pastor VTT: *ஆமென் 👏 எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவ கிருபை என்னாலும் உள்ளது*

[8/3, 2:30 PM] Levi Bensam Pastor VTT: 1தெசலோனிக்கேயர் 5: 21
*எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.*

1 Thessalonians 5: 21
*Prove all things; hold fast that which is good.*

[8/3, 2:38 PM] Levi Bensam Pastor VTT: நீதிமொழிகள் 23: 2
*நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.*

Proverbs 23: 2
*And put a knife to thy throat, if thou be a man given to appetite.*

[8/3, 2:41 PM] Levi Bensam Pastor VTT: நீதிமொழிகள் 23:6-8
[6]வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
[7]அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
[8]நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.

[8/3, 2:47 PM] Levi Bensam Pastor VTT: நீதிமொழிகள் 23: 21
குடியனும் *போஜனப்பிரியனும்* தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
Proverbs 23: 21
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe a man with rags.

[8/3, 2:53 PM] Levi Bensam Pastor VTT: *யோபு பக்தனின் தீர்மானம்*👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 யோபு 23: 12
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; *அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.*🖐🖐🖐🖐🤝

Job 23: 12
Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary food.

[8/3, 7:07 PM] Elango: 🌟 *இன்றைய வேத தியானம் -03/08/2017* 🌟

1⃣ பழைய ஏற்பாட்டில், தேவன் சொன்ன உணவு முறைகளை இன்றும் நாம் கடைபிடிக்க வேண்டுமா❓கடைபிடியாவிட்டால் கீழ்ப்படியாமையா❓

2⃣ கடல் உணவுகளில் சிறகும் செதிலும் இல்லாதவைகளை உண்ண கூடாது எனில் அந்த உணவுகளை பிடிப்பவரும், விற்பவரும், உண்பவரும் தேவ கோபத்திற்க்கு உள்ளானவர்களா❓

3⃣ பன்றி தடை செய்யப்பட்ட உணவு எனில், பன்றி மட்டுமே உண்ண வழி உள்ள குளிர் பகுதி மக்கள் என்ன செய்ய முடியும்❓மீறி சாப்பிட்டால் பாவமா❓

4⃣  *பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட உணவுமுறைகளை நாம் இப்போது கடைபிடிக்க வேண்டாமெனில்... தேவன் அப்படிப்பட்ட உணவு கட்டுப்பாடு முறைகளை ஏன் கொடுக்க வேண்டும்⁉*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/3, 7:56 PM] Ebi Kannan Pastor VTT: பன்றி கறி புசிப்பது பாவமல்ல
ஆனால் பன்றிக் கறி புசிக்க வேண்டுமென்பது கட்டளையல்ல

[8/3, 9:23 PM] Ebi Kannan Pastor VTT: பழைய ஏற்பாட்டில் புசிக்கத்தகாத உணவில் சிக்கன் உள்ளது

[8/3, 9:27 PM] Ebi Kannan Pastor VTT: லேவியராகமம் 11:26-27
[26]விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
[27]நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

[8/4, 8:31 AM] Isaac Samuel Pastor VTT: Future will be only vegetarian.....😂😂😂.....So don't worry......

[8/4, 8:32 AM] Charles Pastor VTT: பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம்

The Issue of Eating Pork

கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடுவதைக் கண்டு அனேக இஸ்லாமியர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மோசே சட்டத்தின் கீழ் வாழும் இஸ்ரவேல் மக்கள் எப்படி பன்றியைக் கண்டவுடன் தூரமாக ஒதுங்குகிறார்களோ, அது போல, இஸ்லாமியர்களும் பன்றியைக் கண்டதும் ஒதுங்குகிறார்கள். இன்று உலகில் வாழும் பல இலட்ச யூதர்கள் மோசேயின் கட்டளைகளை பின் பற்றுகிறார்கள். உண்மையாகவே, பழைய ஏற்பாட்டில் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது.

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. (லேவியராகமம் 11:7-8)

இதே போல தடை குர்ஆனிலும் உண்டு:

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;... (குர்ஆன் 2:173)

பன்றி மாமிசம் சாப்பிடக்கூடாது என்று இஸ்லாமில் உறுதியாக கட்டளையிடப்பட்டுள்ளதால், பன்றி மாமிசம் சாப்பிடுவது என்பது ஒரு "பரிசுத்தமில்லாத செயல்" அதாவது இறைவனுக்கு முன்பாக தகாத செயல் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த காரணத்திற்காகத் தான், பரிசுத்த நபியாகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லி கொள்பவர்கள், பன்றி மாமிசம் சாப்பிடுவதை மிகப்பெரிய குற்றமாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

மோசேயின் சட்டங்களை புரிந்துக்கொள்வதும், அந்த சட்டங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நோக்கத்தை புரிந்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும், பழைய ஏற்பாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாக உள்ளன, அவைகள்:

அறநெறி சட்டங்கள் (Moral Law)

மற்றும்

அரசாங்க, ஆரோக்கிய மத சட்டங்களாகும் (Civil Law)

வாழ்க்கையின் முக்கியமான நன்னடத்தை சம்மந்தப்பட்ட விவரங்கள் அறநெறி சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த அறநெறி சட்டத்தின் முக்கிய நோக்கம், தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் தங்கள் உள்ளான பரிசுத்தத்தினால் மற்ற மக்களைவிட வேறுபட்டவர்களாக காணப்படவும், மற்றும் மனிதர்களுக்கும் தேவனுக்கும் முன்பாக பரிசுத்தமாக வாழுவதற்கும் கொடுக்கப்பட்டது. இந்த உயர்ந்த அறநெறி சட்டங்கள் இஸ்ரவேல் மக்களின் தரத்தை உயர்த்தவும், அவர்கள் தங்கள் பரிசுத்தத்தில் மற்ற மக்களுக்கு, வம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவும் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், "பத்து கட்டளைகளைச்" சொல்லலாம். ஒரு மனிதன் தன் சக மனிதனுக்கும் அதே நேரத்தில் தேவனுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை இந்த பத்து கட்டளைகள் சொல்கின்றன. இந்த சட்டங்கள் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மாற்றமடையாத நிலையான சட்டங்களாகும்.

சிவில் சட்டங்கள் என்றுச் சொல்லக்கூடிய "அரசாங்க, ஆரோக்கிய மத" சட்டங்கள் வித்தியாசமானவைகள். இந்த சட்டங்கள் ஒவ்வொரு நாளும் நாம் வாழும் சமுதாயத்தில் பின் பற்றவேண்டிய சட்டங்களாகும். இந்த சட்டங்கள் சூழ்நிலைகள் மாறும் போதும், நம் அருகிலுள்ள சமுதாயத்திற்கு ஏற்ற விதமாக பழக்கவழக்கங்களினால் மாறக்கூடியதாக உள்ளது. இந்த சட்டங்கள் வெளிப்புற சுத்தம் பற்றியும், ஆரோக்கியம் பற்றியும், உணவுகளைப் பற்றியும், உடைகளைப் பற்றியும் மற்றும் மத சடங்குகளைப் பற்றியும் சொல்கின்றன. இந்த சட்டங்களின் முக்கிய நோக்கம், இஸ்ரவேல் மக்கள் வெளிப்புற பரிசுத்தத்தின் அடிப்படையில் மற்ற சமுதாயங்களை விட எப்படி வேறு பிரிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டவேயாகும். இந்த இஸ்ரவேல் மக்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக, ஒரே மெய்யான தேவனை அவர்கள் தொழுதுக்கொள்வதால் உலகத்திலுள்ள மற்றவர்களின் பார்வையில் வித்தியாசமானவர்களாக காணப்படும்படி வாழவேண்டும். அதே நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள மற்ற சமுதாயத்தின் மூட பழக்கவழக்கங்களையும், விக்கிர ஆராதனையையும் பின் பற்றாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக இச்சட்டங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த சிவில் சட்டங்களில் ஒன்று தான் "பன்றி மாமிசம் உண்ணக்கூடாது" என்ற தடை கட்டளையாகும். இஸ்ரவேலை சுற்றியிருந்த பழங்குடியினர் தங்கள் விக்கிரகங்களுக்கு பன்றியை பலியிடுவது அவர்களுக்கு ஆராதனை வழக்கமாக இருந்தது. இன்னும் அந்த காலத்தில் அந்த இடங்களில் வாழும் பன்றிகள், குப்பை கூளங்களையும் இதர கழிவுகளையும் திண்பவைகளாக இருந்தன. இதனால், பன்றியின் மாமிசத்தை உட்கொள்ளுதல், அனேக கொடுமையான வியாதிகளைக் கொண்டுவந்து மொத்த சமுதாயத்தையும் தாக்குவதாக இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் இப்படிப்பட்ட பழங்குடி மற்றும் அவர்களின் இந்த பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை காத்துக்கொண்டு தூரமாக இருக்கவேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் தனக்கு பரிசுத்த ஜனங்கள் என்று தேவன் அவர்களை பிரித்தெடுத்து, மெய்யான ஒரே தேவனாகிய தன்னை தொழுதுக்கொள்ளவேண்டுமென்று, ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் தேவன் விரும்பினார். இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டார்கள், இதனை அவர்கள் தொடர்ந்து நியாபகத்தில் வைத்திருக்கவேண்டும். இதனை குர்ஆன் இவ்விதமாக கூறுகிறது:

(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்). (குர்ஆன் 38:45- 46)

இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும்,உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். (குர்ஆன் 2:47)

ஏன் இஸ்ரவேல் மக்கள் விசேஷித்தவர்கள்? எந்த நோக்கத்திற்காக தேவன் அவர்களை தெரிந்தெடுத்துக் கொண்டார்? இந்த தெரிந்தெடுத்த சமுதாயத்திலிருந்து தான் உலக இரட்சகர் மேசியாவாகிய இயேசு வரவேண்டும், இவர் மனித இனத்தை காப்பாற்ற தன்னையே ஒப்புக்கொடுக்க தேவனிடமிருந்து வந்தவர். தேவனின் வார்த்தை மனிதனாக வந்தார், கன்னி மரியாளுக்கு மகனாக இயேசுவாக வந்தார். இந்த பரிசுத்தர் ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் வம்சமாகிய இஸ்ரவேல் வம்சத்தில் பிறக்கவேண்டும். இஸ்ரவேல் மக்கள் மற்றவர்களைவிட தனித்தன்மை வாய்ந்தவர்க்ளாக தனக்கு பரிசுத்த ஜனம் என்று தேவன் அழைத்து அவர்களை தெரிந்தெடுத்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே.

இயேசு இந்த உலகில் ஊழியம் செய்த காலத்தில், துரதிஷ்டவசமாக, இஸ்ரவேல் மக்களில் அனேகர் கட்டளைகளின் நோக்கத்தை மறந்தவர்களாக வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். இதயத்தை சுத்தமாக வைத்திருப்பதைக் காட்டிலும், தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கே அதிக முக்கியத்தும் கொடுத்து வந்தார்கள். அவர்கள் நன்னெறி சட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும், சிவில் சட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். முக்கியமாக மதத் தலைவர்கள் இதயத்தை பரிசுத்தமாக வைத்திருப்பதற்கு பதிலாக, அனேக சுத்திகரிப்பு கட்டளைகளை உருவாக்கி அவைகளை கடைபிடித்தனர், மற்றும் இவைகளே முக்கியமானவைகள் என்றும் சொல்லிவந்தனர். இதயத்தை பரிசுத்தமாக வைத்திருப்பது கொஞ்சம் கடினமே. இதனால், உண்மையான மார்க்கத்தை பின் பற்றுகிறவர்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மத சடங்குகளாலும், மாய்மாலத்திலும் நிறைந்திருந்தது. மதத் தலைவர்களை வெளிப்புறமாக கண்டால், அவர்கள் தங்கள் ஜெபங்களை அடிக்கடி செய்கிறவர்களாகவும், தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பவர்களாகவும், மற்றும் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கண்டால், வெறுப்பிலும், பேராசையிலும், பொறாமையிலும் காமத்தால் நிறைந்ததாயும் இருந்தது. தன் பரிசுத்தம் பற்றி தானே புகழ்ந்துப் பேசி மனிதன் தேவனின் கட்டளைகளை அவமதித்தான்.

இந்த சிவில் சட்டத்தை மனிதன் தவறாக மாற்றியதால், தேவன் கொடுத்த தனக்கிருந்த அதிகாரத்தினால் இயேசு காரியத்தில் இறங்கினார். அந்த மக்களின் மாய்மால வாழ்க்கையை நீக்குவதற்காக எல்லா உணவுகளும் சுத்தமானவைகள் என்று அறிவித்தார், இதன் மூலம், உண்மையான பரிசுத்தம் என்பது உண்ணும் உணவினால் அல்ல, மனதில் ஏற்பட்டிருக்கும் பரிசுத்தமே உண்மையான பரிசுத்தம் என்பதை காட்டினார். இதன் காரணமாக, இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே, அனுமதிக்கப்பட்டதே. இயேசு சொன்னதாக குர்ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:

"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும்,உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; …." (குர்ஆன் 3:50)

பரிசுத்தம் பற்றி இயேசுவின் போதனையை புதிய ஏற்பாடு இவ்விதமாகச் சொல்கிறது:

அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில்,மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:18-23)

இந்த இடத்தில் ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது இயேசு இந்த உலகத்தில் வந்துவிட்டதினால், இஸ்ரவேல் மக்கள் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில், இயேசு உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும், மக்களையும் தேவனுக்குள் ஒன்றாக்கியுள்ளார்.எல்லா நாட்டு மக்களும் இனி தேவனின் நன்னெறி சட்டங்களை (Moral Laws) பின்பற்றி வாழ்ந்து தேவனுக்கு முன்பாக பரிசுத்தவான்களாக வாழமுடியும். இயேசுவின் மக்களாகிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதாலும், அவர்கள் அதிகமதிகமாய் பெருகுவதாலும் இனி எல்லா நாட்டு மக்களுக்கும், கலாச்சாரத்திற்கு ஏற்ற ஒரு பொதுவான சிவில் சட்டம் இனி தேவையில்லை. ஏனென்றால், உலக மக்களின் சூழ்நிலைகள் வேறு, கலாச்சாரங்கள் வேறு, வாழும் இடமும், சீதோஷ்ண நிலையும் வேறு. எனினும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய இயேசுவின் நன்னெறி போதனைகள் மாறாமல் அப்படியே உள்ளது. அது என்னவென்றால், நாம் உணவை தவிர்ப்பதினால் சர்வ வல்லவருக்கு மகிமை உண்டாக்கப்போவதில்லை, ஆனால், தேவனுக்காகவும், தன் சக மனிதனுக்காகவும் இருதயத்தில் உண்டாகும் உண்மையான அன்பே, அதிக முக்கியமானது. இந்த சட்டமானது, எந்த நாட்டில் வாழ்பவனாக இருந்தாலும், உலகில் யாராக இருந்தாலும் சரி, அது அவனுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

இங்கு ஒன்றை நாம் குறிப்பிடவேண்டும், மோசேயின் சிவில் சட்டங்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு கொடுக்கப்பட்டது. இன்றுள்ள கிறிஸ்தவர்களில் அனேகர் இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர்கள் அல்ல. இதனால், இஸ்ரவேல் சமுதாய "சிவில் சட்டதிட்டங்களுக்கு" கிறிஸ்தவர்கள் அப்பாற்பட்டவர்கள் ஆவார்கள்.

சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதாவது, தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள பன்றிகள் கழிவுகளையும், இதர குப்பை கூளங்களையும் சாப்பிட்டு வளருவதாக கிறிஸ்தவர்கள் அறிய வந்தால், உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டவர்களாக, பன்றியின் மாமிசம் சாப்பிடாமல் இருக்கவேண்டும். நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் கூட தேவனுக்கு பிரியமான செயலாக இருக்கிறது.

இஸ்ரவேல் அல்லாத அந்நிய ஜனங்களுக்கும் கட்டாயமாக சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பதை அப்போஸ்தலர் பேதுரு உணரவேண்டும் என்பதற்காக "குறிப்பிட்ட மிருக மாமிசத்தை உண்ணுங்கள்" என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளையை குறிப்பிட்டு, இயேசு ஒரு தரிசனத்தை பேதுருவிற்கு கொடுத்து அவரை அந்நிய ஜனங்களுக்கும் சுவிசேஷம் சொல்லும் படி தயார்படுத்தினார். அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த தரிசனத்தின் மூலமாக பேதுரு தெரிந்துக்கொண்ட ஒரு தீர்மானத்தை 28ம் வசனத்தில் நாம் காணலாம்.

அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 10

11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

28 அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.

அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சியின் முக்கியத்துவம் "அந்நிய ஜனங்கள் (யூதரல்லாதவர்கள்) அசுத்தமானவர்கள் என்று இனி கருதவேண்டாம்" என்பதைச் சொல்வதற்காகவே ஆகும். இதன் படி "சுத்திகரிப்பு சடங்குகள் சம்மந்தப்பட்ட சட்டங்கள்" இனி அமுலில் இல்லை என்பதை காட்டவேயாகும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டில் யார் யாரெல்லாம் "அசுத்தமான தடை செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறாரோ" அவர் யூதர்களுக்கு அசுத்தமாக இருப்பார் என்ற கட்டளை இனி செல்லாது என்பதை தெரிவிக்கவேயாகும். ஆக, யூதர்களையும், யூதரல்லாதவர்களாகிய அந்நிய ஜனங்களையும் பிரித்துக்காட்டும் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்கள் இனி அமுலில் இருக்காது அல்லது செல்லுபடியாகாது, என்று தெரிவிக்க போதுருவிற்கு இயேசு தரிசனத்தைக் கொடுத்தார்.

இதன்படி, அப்போஸ்தலர் நடபடிகள் 15ம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி, அப்போஸ்தலர்கள், அந்நிய ஜனங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களை "யூதர்களின் உணவு பற்றிய சட்டத்திட்டங்களிலிருந்து" விடுதலைக் கொடுத்தார்கள். இதே போல, 1 கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், எல்லா உணவுகளையும் நாம் உண்ணலாம், ஆனால், பலவீனமான சகோதரரின் விசுவாசத்தையும், மனசாட்சியையும் கருத்தில்கொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.
[8/4, 8:51 AM] Christopher Pastor VTT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:  25 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.

[8/4, 8:53 AM] Christopher Pastor VTT: அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:  19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,
20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுவது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.

[8/4, 8:54 AM] John Madurai VTT: நேற்று நடந்த... தியானத்தின்....மொத்த சாரம்சமாய்...அருமையாய் தொகுத்துள்ளிற்கள் நன்றி..👏👏👏👏👏👏

[8/4, 9:02 AM] Stanley Ayya VTT: கடுங்குளிர் பிரதேசங்களில் விவசாயம் மிக குறைவு.  அங்கு கிடைக்கும் விலங்குகளையே உண்டு வாழ முடியும்.
பன்றி இறைச்சியே பல இடங்களில் வாய்ப்பு.

மனிதன் வாழ சில சலுகைகள் தேவனிடம் தேவைபடுகிறது.

நம் தேசம் தானியங்கள் வசதி உண்டு.
இயற்கை தட்பவெப்ப நிலை சைவ உணவிற்க்கு மிக சாதகமே.

வாய்பிருந்தும் கடைபிடிக்க மனமில்லை எனில் தவறே.

வேறு வழி இல்லாத பட்சத்தில் உணவுக்கு சில ஒத்து போதல் அவசியம்.

நாய் குரங்கு போன்றவை தவறே.

நம்மை பன்றி இறைச்சி தவறென்று கூறும் இஸ்லாமியர் ஒட்டகம் உண்ணுவது எப்படி தவறாகும்.

நாம் எந்த உணவு கொண்டாலும் குழந்தைகளை வேத சட்டபடி உணவு கொடுத்து வளர்க்க முடியும்.

முயல்வோம் வேத சட்டத்தை பிரச்சாரம் செய்வோம்.

இனி உலகெங்கும் தேவ சட்ட உணவு உற்பத்தி நடக்கவே ஜெபிப்போம்.

சுவைக்காக தேவ வவிருப்பத்தை விட்டு கொடுத்தலும் சிறப்பானது அல்ல.

மோசேயின் ஆகமம் ஒட்டக கறியையும் புசிக்கக் கூடாதென்கிறது.

லேவியராகமம் 11:3-4
[3]மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
[4]ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

Post a Comment

0 Comments