Type Here to Get Search Results !

ஆசரிப்புக்கூடாரத்தின், பிராகாரத்தைக் குறித்து ஆழமாக தியானம்...

[8/1, 9:23 AM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 01/08/2017* ♦

1⃣ ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பகுதியான *பிராகாரத்தைக் குறித்து ஆழமாக* இன்று தியானிக்கலாம்.

_*இன்றும், நாளையும் பிராகாரம், ஆசரிப்புக்கூடாரம் பற்றிய ஆழமான தியானம் தொடரும்*_
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/1, 10:08 AM] Christopher Pastor, V: யாத்திராகமம் 27:  9 வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.
10 அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
11 அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
12 பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
13 சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ அகலமாயிருக்கவேண்டும்.
14 அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
15 மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.

[8/1, 10:12 AM] Christopher Pastor, V: ஏசாயா 1:  12 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?
13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
14 உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
15 நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;
17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

[8/1, 10:16 AM] Christopher Pastor, V: சங்கீதம் 100:  4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

[8/1, 10:31 AM] Christopher Pastor, V: மத்தேயு 27:  46 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

[8/1, 10:31 AM] Christopher Pastor, V: சகரியா 13:  7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்பவைப்பேன்.

[8/1, 10:38 AM] Christopher Pastor, V: யாத்திராகமம் 12:  3 நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.

[8/1, 10:41 AM] Christopher Pastor, V: எபிரெயர் 9:  25 பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

[8/1, 10:42 AM] Christopher Pastor, V: எபிரெயர் 10:  10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.

[8/1, 10:48 AM] Christopher Pastor, V: எண்ணாகமம் 26:  11 கோராகின் குமாரரோ சாகவில்லை.

[8/1, 10:53 AM] Christopher Pastor, V: சங்கீதம் 65:  4 உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

[8/1, 10:54 AM] Christopher Pastor, V: சங்கீதம் 36:  7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
9 ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

[8/1, 10:54 AM] Christopher Pastor, V: சங்கீதம் 27:  4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

[8/1, 11:33 AM] Christopher Pastor, V: லூக்கா 1:  71 உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,

[8/1, 11:45 AM] Christopher Pastor, V: 17 சபைகளை நன்முறையில் நடத்தும் மூப்பர்கள், சிறப்பாக இறைவார்த்தையை அறிவிப்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டு உழைப்பவர்கள் இருமடங்கு ஊதியத்திற்கு உரியவர்களாகக் கருதப்படவேண்டும்.

1 திமொத்தேயு 5:17

[8/1, 11:55 AM] Christopher Pastor, V: எபிரெயர் 10:  19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;
25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

[8/1, 12:02 PM] Christopher Pastor, V: II கொரிந்தியர் 6:  14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

[8/1, 12:07 PM] Christopher Pastor, V: சங்கீதம் 84:  1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
10 ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

[8/1, 12:07 PM] Christopher Pastor, V: சங்கீதம் 65:  4 உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

[8/1, 12:08 PM] Christopher Pastor, V: I தெசலோனிக்கேயர் 4:  3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
4 தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
5 உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப்பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
6 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

[8/1, 12:09 PM] Christopher Pastor, V: II கொரிந்தியர் 7:  1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

[8/1, 12:10 PM] Christopher Pastor, V: ரோமர் 12:  1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

[8/1, 1:47 PM] Levi Bensam Pastor, V: கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக 👏 👏 👏

[8/1, 1:53 PM] Levi Bensam Pastor, V: சங்கீதம் 84:1-2,10
[1]சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
[2] *என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது;* என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
[10] *ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது 👉👉👉👉👉👉👉👉பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது*; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

[8/1, 2:16 PM] Levi Bensam Pastor, V: சங்கீதம் 92:13-15
[13] *கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇👇தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.*
[14]கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
[15]அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.👍👍👍👍👍👍

[8/1, 2:17 PM] Levi Bensam Pastor, V: சங்கீதம் 96:8
[8] *கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.*☝️ 👆 👆 👆 👆

[8/1, 4:47 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 01/08/2017* ♦

1⃣ ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பகுதியான *பிராகாரத்தைக் குறித்து ஆழமாக* இன்று தியானிக்கலாம்.

_*இன்றும், நாளையும் பிராகாரம், ஆசரிப்புக்கூடாரம் பற்றிய ஆழமான தியானம் தொடரும்*_
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/1, 8:05 PM] Elango: இன்றைய நாள் ஆசரிப்புக்கூடாரத்தில் பிராகாரத்தை குறித்து பார்க்கலாம்,  பிராகாரம் எதற்கு அடையாளமாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

*ஆசரிப்புக்கூடாரத்தை சுற்றிலும் 100 முழ நீளமும், 50 முழ அகலமும் கொண்ட வேறு பிரித்த இடத்திற்க்கு பிராகாரம் என்று பெயர்*

ஆசரிப்புக்கூடாரம் சுற்றிலும் வேலி அடைத்து வைத்திருந்தார்கள். இந்த பிராகாரத்தில் பலிபீடமும்,  வெண்கல தொட்டியும் வைக்கப்பட்டிருந்தது.

பலிக்காக கொண்டு வருகிற மிருகங்களை இந்த இடத்தில் தான் கொன்று...அதை வெட்டி அதை ஆயத்தப்படுகிறார்கள்.

பிராகாரத்தை சுற்றிலும் 60 தூண்கள், 5 முழ நீளமுல்ல வெள்ளைத் துணிகளால் மறை உண்டாக்கினார்கள்.

இந்த பிராகாரத்தீல் பிரவேசிக்க கிழக்கு பாகத்தில் தான், ஒரே ஒரு வாசல் இருந்தது.

அதாவது கர்த்தருடைய வாசஸ்தலத்திற்க்குள் வருகிறவன்... பாளத்தில் இருந்து பிராகாரத்தில் வருகிறான்.

- Pastor Christopher

[8/1, 8:14 PM] Elango: *இந்த ஆசரிப்புக்கூடாரத்தில் பிராகாரம் எதைக் குறிக்கிறது என்றால்... தண்டனையின் இடமாகவே பார்க்கப்படுகிறது*

இந்த பிராகாரத்தில் வருகிற மனுஷன் முதலாவது பார்ப்பது இடைவிடாமல் எரிந்துக்கொண்டிருக்கிற அக்கினியை பார்க்கிறான்.

பலிக்கான மிருகங்கள் அங்கே கதறிக்கொண்டிருக்கிறதான சத்தம் பிராகாரத்தில் கேட்கப்படுகிறது.

அந்த மிருகத்தை அறுப்பதற்க்கான பட்டயங்கள், துண்டிப்பதற்க்கான கத்திகள், திருப்பி போடுவதற்க்கான முள் துறடுகள், இரத்தம் பட்ட பாத்திரங்கள் எல்லாம் பிராகாரத்தில் எப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆசாரியர்கள் உடுத்தியிருக்கும் அந்த இரத்தம் படிந்ததான வஸ்திரங்கள், லேவியர்கள் தரித்திருக்கும் கரிப்பட்டதான ஆடைகள், பலி பீடத்திலிருந்து எழும்புகிறதான புகைகள் ... இந்த காரியங்கள் எல்லாம் ஒரு பயங்கரத்தை காட்டுகிறதாக காணப்படுகிறது.

- Pastor Christopher

[8/1, 8:25 PM] Elango: அதாவது தான் செய்த பாவத்திற்க்கு மனஸ்தாபப்பட்டு, அதை அறிக்கையிட்டு, பலி மிருகத்தின் மீது கைகழை வைத்து நான் தான் குற்றவாளி நான்தான் தண்டனையை அநுபவிக்க வேண்டியவன் என்று மனப்பூர்வமாக அதை ஒத்துக்கொண்டு அந்த பிராகாரத்தில் அவன் நிற்கிறான்.

அந்த இடம் எதை காட்டுகிறதென்றால், பாவிகளுக்கு தண்டனை இரக்கம் கிடையாது, அங்கே அவர்களுக்கு தண்டனை உண்டு என்பதை பிராகாரம் எடுத்துக்காட்டுகிறதாக இருக்கிறது.

*இந்த பிராகாரம் சிலுவையின் காட்சியை காட்டுவதாகவும் இருக்கிறது* மத்தியானத்தில் கடும் வெயில் ஈட்டிகள்,  சுத்தியல்கள்,  போர் வீரர்களின் பட்டயங்கள், சிலுவைகள், ஆசாரியனீன் தூஷனங்கள்,  கள்ளர்களின் சாபம், கூடி வந்திருக்கும் ஜனங்களின் கூக்குரல்...சில ஜனங்கள் மார்பில் அடிக்கும் காட்சி, மற்ற ஜனங்களின் பரியாசங்கள், நிந்தனைகள்,  இவைகளையெல்லாம் இயேசு மரிக்கிற அந்த கல்வாரி இடத்தில் நாம் பார்க்க முடியும்.

*மனிதர்கள் இயேசுவை சித்திரவதை செய்தார்கள், அதற்கு மேலாக கத்தருடைய பட்டயமும் அவருக்கு விரோதமாக இருந்தது என்று பார்க்க முடிகிறது.*

சகரியா 13:7
[7]பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்பவைப்பேன்.

- Pastor Christopher

[8/1, 8:34 PM] Elango: *அதாவது பாவத்தின் தண்டனை சிறிய அளவு பிராகரத்திலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத , சிந்தித்து பார்க்க முடியாத அளவில் , கல்வாரி சிலுவையிலும் பாவத்தின் தண்டனை வெளிப்படுகிறது.*

 உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி , தண்டனையை சகித்து , பாவத்தின் பரிகாரத்தை உண்டாக்கினார் என்று நாம் பார்க்க முடிகிறது.

- Pastor Christopher

[8/1, 8:47 PM] Elango: 2⃣. *பிராகாரம் எதற்கு அடையாளமாக இருக்கிறது❓*

இரண்டாவதாக பார்க்கும் போது, இந்த பிராகாரம் , நீதிக்கான அனுபவத்தை காட்டுவதாக காணப்படுகிறது.

*பாளயத்தில் அடிக்கடி பாவத்தின் நிமித்தம் தண்டனையும் வாதையும் ஏற்ப்பட்டதை பார்க்க முடியும். ஆனால் பிராகாரத்தில் தண்டனையெல்லாம் பலி மிருகம் அனுபவிப்பதினால், பாவி நீதிமானாக அனுப்பப்படுகிறான். இதுவே நீதிக்கான அனுபவம்*

*அதாவது பாவமே அறியாத இயேசு நமக்காக மரித்தது போல, பாவம் அறியாத ஆட்டுக்குட்டி, பாவம் செய்த பாவிக்காக மரிக்கிறது, தண்டனை பெற வேண்டிய பாவியோ நீதி பெற்று சமாதானத்தோட போகிறான்*

ஒரு தனிப்பட்ட மனிதனுக்காகவும், குடும்பத்திற்க்காகவும், சபை முழுமைக்காகவும் பாவம் நிவாரணம் செய்ய ஒரு மிருகம் பலியானால் போதுமானதாக இருக்கிறதை நாம் பார்க்க முடியும்.

- Pastor Christopher

[8/1, 9:02 PM] Elango: இயேசுகிறிஸ்து உலகம் முழுவதற்க்காகவும் தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார்.அதாவது  விசுவாசிக்கிற யாவரும் அவர் மூலமாக நீதிமான்களாக்கப்படுகின்றனர்.

*மீட்பின் வேலை அனுதினமும் பிராகாரத்தில் நடந்துக்கொண்டேயிருக்கிறது, ஆனால் கல்வாரியிலோ ஒரே தரம் மீட்பின் திட்டத்தை நிறைவேற்றி விட்டார்*

செய்யத்தகாத ஒன்றையும் செய்யாத ஆண்டவர் கைவிடப்பட்டார் பலியானார், ஆனால் மகா பாவியான நாமோ, அன்றைக்கே பரதீசியிலே சேர்த்துக்கொள்ளப்பட்டோம். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் அவரை ஏற்றுக்கொண்டதின் நிமித்தமாக அன்றைக்கு பரதீசியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். மகா பாவியான நமக்கு தேவன் மீட்பை உண்டாக்கினார், தேவனுடைய அன்பு அளவிட முடியாதது.

- Pastor Christopher

[8/1, 9:25 PM] Elango: 3⃣ *இந்த பிராகாரம் எதற்கு ஒப்பாக இருக்கிறது❓*

*பிராகாரம் என்பது மீட்கப்பட்டவர்களின் சுதந்திரத்தை குறிப்பதாக இருக்கிறது.*

சங்கீதம் 84:2,10
[2]என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
[10]ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

*கோராகின் குமாரர்கள் இதை எழுதுகிறார்கள், இந்த கோராகின் குமாரர்கள் யாரென்றால்...பணி மூட்டுகளை சுமப்பவர்கள், ஆசரிப்புபெட்டி, குத்துவிளக்கு,  மேஜை இதெல்லாம் சுமக்கிற கோகாத்தியர்களாக இருந்ததை பார்க்கிறோம்.*

எண்ணாகமம் 16:1
[1]லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
எண்ணாகமம் 16:27,33-34
[27]அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.
[33]அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
[34]அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.

*ஆண்டவர் கோராகின் குடும்பத்தாரை தண்டிக்கிறார், ஆனாலும் முழுவதும் அவர்களை அழித்துப்போடாமல்,  தேவன் அவர்களை கிருபையாக விடுவித்ததையும் நாம் பார்க்க முடியும்*

மீண்டும் அவர்களை மன்னித்து, தம்முடைய பிராகாரத்தினுடைய தொண்டு செய்வதற்க்காக அவர்களை ஏற்ப்படுத்தினார் என்பதை நாம் பார்க்கலாம்.

இந்த கோராகினர் தான்  வாசஸ்தலத்தின் மகிமையை இராப்பகல் கண்டுக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் பார்க்க முடியும்.

*மீட்கப்பட்டவர்களுடைய சுதந்திரம் - பிராகாரம்*

- Pastor Christopher

[8/1, 9:42 PM] Christopher Pastor, V: அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:  44 மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.

[8/1, 9:42 PM] Christopher Pastor, V: யோவான் 1:  10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

[8/1, 9:43 PM] Christopher Pastor, V: யோவான் 7:  3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம்.
4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.

[8/1, 9:50 PM] Elango: இந்த கோராகின் புத்திரர்கள், கூடாரத்தின் பணிவிடைகளை செய்யவும், அங்குள்ள மகிமையை அனுபவிக்கவும் தங்களுக்கு கிடைத்த பாக்கியமாக சிலாக்கியமாக, சந்தோஷமாக, மகிழ்ச்சியாக எண்ணினார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் - பணிமூட்டுகளை செய்வதில், கூடாரத்தின் வேலையை செய்வதில்.

அவர்கள் சொல்லுகிறார்கள் - *கர்த்தருடைய பிராகாரங்களிலேயே தங்கள் ஆயுசு நாட்களை கழித்தால் நலமாக இருக்கும் என்று*

தேவனுடைய மகிமையை குறித்து கோராகின் புத்திரர்கள் பாடல்களாகவும் பாடியிருக்கிறார்கள்...

தாவீது இராஜா கூட தான் விசேஷமாக கட்டின அரண்மனையை காட்டிலும், தேவனுடைய ஆலயத்தின் பிராகாரத்தின் மேல் அவன் அதிக வாஞ்சையுள்ளவன் என்று பார்க்க முடியும்.

சங்கீதம் 84:10
[10] *ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.*

இந்த பிராகாரமானது மீட்கப்பட்டவர்களுடைய சுதந்திரமாக இருக்கிறது, அதேப்போல தான், தாவீது இராஜா , கோராகின் புத்திரர்கள் பிராகாரத்தை வாஞ்சித்தது போல...நாமும் மீட்கப்பட்டவர்களாகிய நாமும்,  இந்த பூமுக்குரியவைகளை நாடாத படிக்கு, தேவனுடைய மேன்மையான மகிமையான,  தேவனுக்கு தொண்டு செய்கிறதான பாக்கியத்தை நாம் நாடும்பொழுது.. நம்முடைய இருதயம் களிக்கூரும் போது சந்தோஷம் படும்பொழுது பிரீதீயாக காணப்படுகிறது.

*தேவன் இதைத்தான் வாஞ்சிக்கிறார், எனவே நாம் எப்பொழுதும் தேவனுடைய பிராகாரத்தை நாம் வாஞ்சிப்போம்., தேவனுடைய சமூகத்தை நாடுவோம், தேவ சமாதனம், தேவ ஆசீர்வாதம்,  நம்மேல் தங்கியிருக்கும்*

எவ்வளவு ஆஸ்தி அந்தஸ்து மாடி வீடு இருந்தாலும், தேவ மகிமைக்கு ஈடாகாது.

பஞ்சு மெத்தையில் படுத்தால் கூட தூக்கம் வராது, ஆனால் தேவ மகிமையில் இருக்கும் போது ஒரு ஆறுதல் சந்தோஷம் சமாதானம் கிடைக்கிறது.

பணம் கொடுக்க முடியாததை,  தேவ சமூகம் பிராகாரம் , மீட்கப்பட்டவர்களுக்கு கொடுக்கிறது. கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.

- Pastor Christopher

[8/1, 9:50 PM] Christopher Pastor, V: யோவான் 2:  19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.

[8/1, 9:51 PM] Christopher Pastor, V: யோவான் 14:  11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

[8/1, 9:52 PM] Christopher Pastor, V: ஏசாயா 53:  2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

[8/1, 10:07 PM] Christopher Pastor, V: யோவான் 14:  6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

[8/1, 10:08 PM] Christopher Pastor, V: I தீமோத்தேயு 2:  5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

[8/1, 10:09 PM] Christopher Pastor, V: எபிரெயர் 1:  2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

[8/1, 10:20 PM] Christopher Pastor, V: எண்ணாகமம் 2:  17 பின்பு ஆசரிப்புக்கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.

[8/1, 10:21 PM] Christopher Pastor, V: எண்ணாகமம் 11:  24 அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

[8/1, 10:40 PM] Elango: 4⃣. *நான்காவதாக இந்த பிராகாரம் பணிவிடை செய்யும் இடமாக நாம் பார்க்க முடியும்*

லேவி கோத்திரத்தார்களுக்கு , பிராகாரத்தில் அதிகமான வேலைகள் இருந்தது. ஆசாரியர்கள் பலி மிருகத்தை அறுப்பார்கள் இரத்தத்தை தெளிப்பார்கள். லேவியர்கள் அந்த மிருகத்தின் தோலை கழுவி அதை துண்டாக்கி, பலி பீடத்தின் அக்கினியை எல்லாம் கவனிக்கிற காரியம்... சம்பலை அள்ளுகிற காரியம் இன்னும் அநேக வேலைகளை பிராகாரத்தில் செய்தார்கள்.

ஆசாரியர்கள் என்ன செய்தார்கள் என்றால் - பாவிகளிடத்திலிருந்து பலியையும், நீதிமான்களிடமிருந்து சமாதான பலிகளையும்,  ஆராதனைக் காரர்களிடமிருந்து தகன பலிகளையும், வாங்கி அதை போஜன பலியோடு தேவனுக்கு அதை காணிக்கையாக, பலியாக அவர்கள் செலுத்தினார்கள்.

*வாசஸ்தலத்தில் உட்காருகிறதற்க்கு  இருக்கைகள் இல்லை, அதேப்போல பிராகாரத்திலும் இருக்கைகள் இல்லை*

*அதாவது தேவனுடைய இரத்ததினால் கழுவப்பட்டு, மீட்ப்பட்ட யாவரும், கிருபையின் இக்காலத்தில் தேவனுடைய வீட்டில், தேவனுடைய பண்ணையில் பணிவிடைக்காக நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.*

-  Pastor Christopher

[8/1, 11:02 PM] Christopher Pastor, V: உபாகமம் 11:  19 நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

[8/1, 11:03 PM] Christopher Pastor, V: சங்கீதம் 40:  8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.

[8/1, 11:04 PM] Christopher Pastor, V: மத்தேயு 5:  17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

[8/1, 11:04 PM] Christopher Pastor, V: நீதிமொழிகள் 2:  2 நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

[8/1, 11:12 PM] Elango: 4⃣ continue *மீட்கப்பட்டவர்களுடைய வேலை*

உலக வேலை செய்யும்போது கூலி கிடைக்கும், அதே போல தேவனுக்காக பணி செய்யும் போது, அதற்கு பிரதிபலன் அநேகம் உண்டு.

சபையிலும் சபைக்கு வெளியிலும் உண்டு பணிவிடை ஊழியத்தை செய்ய வேண்டும். .நாம் பிராகாரத்தில் நின்று கொண்டு, பாவிகளுக்கு இரட்சகரை  , இயேசுகிறிஸ்துவை காண்பிக்கிற நபராக காணப்பட வேண்டும்.

சபைக்குள்ளே ஆராதனை செய்கிறவர்களுக்கு, மகா பரிசுத்த ஸ்தலம் அங்கே உள்ளே கடந்து போகிறதற்க்கு, வழியை காண்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

வெளியில் இருக்கிறவர்களை இந்த சபைக்குள்,பிராகாரத்திற்க்குள் கொண்டு வருபவர்களாக, இயேசுவை காட்டுபவர்களாக, பணிவிடைக்காரர்களாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

கலாத்தியர் 6:14
[14] *நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;* அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

ஆகையால் நம்முடைய உபதேசம் கிறிஸ்துவை குறித்ததான சிலுவையை குறித்ததான உபதேசம், பிரசங்கிக்க வேண்டும். அது கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாக தோன்றலாம், ஆனால் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு அப்படியல்ல.

*நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் ஆனால் தேவனுடைய சித்தமென்ன என்னுடைய வேலை என்ன, என்பதை நாம் மறந்து போகிறோம், இரட்சிக்கப்பட்ட நாம் சபையிலும், வெளியிலும் செய்யப்பட வேண்டிய வேலை, இயேசு கிறிஸ்துவை காட்டுவது, மகா பரிசுத்தஸ்தலத்திற்க்கு கடந்து செல்வதற்க்கு வழியை காட்டுவது எப்படி என்றால்... நம்முடைய ஜீவியத்தின் மூலமாக, நம்முடைய கனியின் மூலமாக, தேவனை பிரதிபலிப்பதன் மூலமாக, நாம் கிறிஸ்துவை காட்ட முடியும், எனவே நாம் யாவரும் தேவனுக்கு பணிவிடை செய்கிறவர்களாக, கர்த்தருடைய பணியை செய்வோம் கர்த்தர் அதற்கேற்ற கூலியை தருவார்*

- Pastor Christopher

[8/1, 11:42 PM] Elango: 5⃣. *பிராகாரம் என்பது ஆராதிப்பதற்க்கான நல்ல இடம்*

இஸ்ரவேலர் தங்களுடைய காணிக்கைகள் முதலற்பலன்கள், பலிகள், இவை எல்லாவற்றையுமே பிராகாரத்தில் தான் கொண்டு வந்தார்கள்.

அங்கே அவைகளை சமர்த்தித்த பிறகு, பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிற ஆசாரியர்களையும், ஊழியர்களையும் கண்டு கர்த்தரை ஆராதித்து மகிமைப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இஸ்ரவேலர் செல்லக்கூடிய எல்லை - பிராகாரம் மாத்திரமே. பிராகாரத்தில் தான் அவர்கள் நிற்க வேண்டும். பலி பீடமும், வெண்கல தொட்டியும் பிராகாரத்தில் இருந்ததை நாம் பார்க்க முடியும்.

*கிறிஸ்துவின் மரணத்தை காட்டுகிற பலிபீடமும், வெண்கல தொட்டியானது பரிசுத்தத்தை காட்டுகிறது, இந்த இரண்டுமே பிராகாரத்தில் இருந்தது, அதாவது நீதியும் பரிசுத்தமும்.*

நீதியும் பரிசுத்தமும் இல்லாமல் ஆராதன இல்லை, நீதியோடும் பரிசுத்தத்தோடும் ஆராதனை செய்ய வேண்டும், இன்று நாம் தேவனை எப்படி ஆராதிக்கிறோம், பிராகாரம் ஒரு ஆராதனை ஸ்தலமாக காணப்பட்டது.

எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது, அது பிராகாரம் மட்டுமல்ல, இயேசுகிறிஸ்து நமக்காக மரித்ததன் நிமித்தமாக திரைச்சீலை கிழிந்தன் நிமித்தமாக மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைய வழியை ஏற்ப்பாடுத்தியிருக்கிறார்.

எங்கே வேண்டுமானாலும் ஆவியோடும், உண்மையோடும், பரிசுத்தத்தோடு நாம் தேவனை ஆராதிக்கம் போது, அந்த ஆராதனை பலிகளை தேவன் அங்கிகரிக்கிறவராய் இருக்கிறார்.

- Pastor Christopher

[8/1, 11:55 PM] Elango: 6⃣ *பிராகாரம் - தெய்வ விருந்து அனுபவிக்கும் இடம்*

பிராகாரத்தில் அப்பங்கள், இறைச்சி, பொரி, திராட்சைரசம், தோசை, வடை, காணிக்கை, தசம பாகங்கள், மதற்பலன்கள், முதற்லீற்றுகள்,பொருத்தனைகள், மனப்பூர்வ காணிக்கைகள்... . இவை எல்லாமே தேவ சமூகத்தில் பிராகாரத்தில் வந்துக்கொண்டு இருந்தது.

இவைகளை லேவியர்களும், ஆசாரியர்களும் பங்கிட்டுக்கொண்டார்கள், கர்த்தருக்கு செலுத்துகிற பலிகள்... கர்த்தருடைய ஆசாரியர்களுக்கு சில விசேசித்த சுதந்திரங்கள் இருந்தன.

கர்த்தருடைய ஆலயத்தில் வருகிற வருவாயை கொண்டு தான் லேவி கோத்திரத்தார் ஜீவனம் செய்து வந்தனர். தசமபாகமும், பலிகளின் பாகமும் ஆசாரியன் குடும்பத்துக்குரியதாக இருந்தன.

பலிபீடத்தில் உள்ள அப்பமும் இறைச்சியையும் புசித்து அவர்கள் ஆசாரியர்கள், லேவியர்கள் திருப்தி அடைந்தார்கள். சில பாகங்கள் வீட்டுக்கு கொண்டுப்போகாமல் அங்கே வைத்து சமைத்து சாப்பிட வேண்டுமென்று இருந்தன.

லேவியராகமம் 6:16
[16] *அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.*

பிராகாரம் என்பது ஒரு பண்டகைசாலை மாதிரியே இருந்தது, செழிப்பான இருந்த இடம்... எப்போதும் ஆகாரம் இருந்தது. *கர்த்தருடைய சமூகத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு தேவனே ஆகாரம் கொடுத்தார்*

- Pastor Christopher

[8/2, 12:13 AM] Elango: 7⃣ *பிராகாரம் - தரிசனம் கிடைக்கக் கூடிய இடம்*

பலிபீடத்தின் அண்டையில் நிற்கிறவன், மகா பரிசுத்த ஸ்தலத்தில் நடக்கிற காரியத்தை கண்டு மகிழ்கிறவனாக காணப்படுகிறான்

*ஆசாரியன் கூடாரத்தில் பிரவேசிக்கும் போது, அதற்க்குள்ளேயான மகிமை யான காட்சிகளை,  தேவ சிங்காசனம் வரையிலான காரியத்தை கண்டு மகிழ்கிறவனாக இருக்கிறான்*

அதாவது கல்வாரியில் இயேசுவின் அண்டையிலே நாம் இருப்போமானால், தேவ சிங்காசனத்தின் தரிசனம் நமக்கு நிச்சயமாக கிடைக்கும், கல்வாரியில், பிராகாரத்தில்,  இயேசுவண்டை நாம் நிற்கும் போது, உண்மையாக நமக்கு தேவ சிங்காசனத்தை குறித்ததான தரிசனம் நமக்கு கிடைக்கும்.

உதாரணமாக: இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் போது கள்ளன் சொல்கிறான், ஆண்டவரே உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும் என்கிறான்...அதேப்போல தான் கல்வாரியில் இருந்து மகா பரிசுத்த ஸ்தலத்தின் தரிசனம் நமக்கு கிடைக்கிறது...

திரைசிலை இரண்டாக கிழிந்தது, சிலுவையிலிருந்து நேராக, பரிசுத்தஸ்தலத்திற்க்குள்ளே,  பரதேசீக்கு செல்லும் வழி திறக்கப்படுகிறது.

*இந்த பிராகாரம் தரிசனம் கிடைக்கிற இடமாக காணப்படுகிறது*

- Pastor Christopher

[8/2, 12:41 AM] Elango: 8⃣ *பிராகாரம் - வேறுபட்ட ஒரு அனுபவத்தை காட்டுகிறது*

இந்த பிராகாரத்தை சுற்றிலும், 5 நீள முழமுள்ள தொங்குதிரை உண்டு பண்ணியிருந்தார்கள். இந்த பிராகாரத்தில் நிற்பவர்கள் வெளியே தெரியாது.இந்த திரை மறைவாக காணப்படுகிறது, அது பிரித்து விடுகிறது.

அதேப்போல இந்த பிராகாரத்தில் வந்த பிறகு தேவனுடைய மகிமை கிருபையை தியானித்து, தேவனுக்கு பலியிட்டு ஆராதித்துக்கொண்டு  தேவனுடைய கூடாரத்திலேயே அவர்கள் வசிக்கிறார்கள்.

இந்த பிராகாரம் ஒரு வேறுபட்ட ஜீவியத்தை குறிக்கிறது, உலக இச்சையிலிருந்து அது பிரித்து காட்டுகிறது.மீட்கப்படப்பட்டவர்கள் ஒரு வேறுபட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று தான் தேவன் விரும்புகிறார்.

இரண்டு எஜமான்களூக்கு ஊழியம் செய்யக்கூடாது. ஒரே எஜமானுக்கு ஊழியம் செய்ய வேண்டும். ஆண்டவர் நம்மை பிரித்து எடுத்ததினால் நாம் உலகத்துக்குரியவர்கள் அல்ல தேவனுக்குரியவர்கள், வெளிச்சல் நடக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

நாம் விசேஷித்தமானவர்கள், காக்கை, குருவிகளை காட்டிலும் ஆண்டவர் நம்மை போசிக்கிறார். நாம் விசேஷித்தவர்கள் நாம் கவலைப்படக் கூடாது என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

மத்தேயு 6:33
[33] *முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.*

கர்த்தருடைய இராஜ்யத்தை பிராகாரத்தை தேடும்போது, உண்மையாகவே கர்த்தர் நன்மை ஆசீர்வதிக்கிறார்.

- Pastor Christopher

[8/2, 12:49 AM] Elango: 9⃣. *பிராகாரம் - பரிசுத்தத்தின் ஸ்தானம்*

தேவனுடைய பிள்ளைகள், தேவ ஜனங்கள், பரிசுத்தவான்கள் மாத்திரமே இந்த பிராகாரத்தில் இருக்க முடியும், அந்நியர்கள் பாவிகள் இந்த இடத்தில் வசிக்க முடியாது. பரிசுத்தம் இல்லாதவர்கள் இந்த இடத்தில் வசிக்க முடியாது.

பிராகாரம் என்பது சலுகை நிறைந்ததான இடம், தாவீது பலபல பிரபுக்கள், இராஜாக்கள் பாடியிருக்கிறார்கள் இந்த பிராகாரத்தில் இருக்க வாஞ்சிப்பதை. 

*தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த பிராகாரத்தில் தேவனுடைய இன்பம், சமாதானம், ஆசீர்வாதம் கிடைக்கிறது*

*பிராகாரம் என்பது பரிசுத்தத்தின் ஸ்தானம் என்பதை பார்க்க முடியும்*

- Pastor Christopher

Post a Comment

0 Comments