Type Here to Get Search Results !

ஆசரிப்புக்கூடாரத்தைக் குறித்து ஆழமான தியானம்...

[8/2, 8:44 AM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 02/08/2017* ♦

1⃣  *ஆசரிப்புக்கூடாரத்தைக் குறித்து இன்று ஆழமாக*  தியானிக்கலாம்.

_*இன்றோடு ஆசரிப்புக்கூடாரம் சம்பந்தமான தியானங்கள் நிறைவுபெறுகிறது*_

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/2, 10:06 AM] Christopher Pastor, V: I யோவான் 1:  7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

[8/2, 10:06 AM] Christopher Pastor, V: I யோவான் 4:  10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

[8/2, 10:07 AM] Christopher Pastor, V: எபிரெயர் 9:  26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

[8/2, 10:08 AM] Christopher Pastor, V: யோவான் 6:  33 வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
34 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.
35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
48 ஜீவ அப்பம் நானே.
51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

[8/2, 10:12 AM] Christopher Pastor, V: யோவான் 14:  6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

[8/2, 10:12 AM] Christopher Pastor, V: யோவான் 10:  9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

[8/2, 10:18 AM] Christopher Pastor, V: ஆகாய் 2:  8 வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

[8/2, 10:18 AM] Christopher Pastor, V: சங்கீதம் 50:  10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

[8/2, 10:19 AM] Christopher Pastor, V: கொலோசெயர் 1:  16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

[8/2, 10:31 AM] Christopher Pastor, V: யாத்திராகமம் 35:  30 பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
31 அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
32 இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
33 அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
34 அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
35 சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

[8/2, 10:31 AM] Christopher Pastor, V: லூக்கா 1:  34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.

[8/2, 10:33 AM] Christopher Pastor, V: எபிரெயர் 7:  14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
15 அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.

[8/2, 10:34 AM] Christopher Pastor, V: II பேதுரு 1:  17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
18 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.

[8/2, 11:53 AM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 02/08/2017* ♦

1⃣  *ஆசரிப்புக்கூடாரத்தைக் குறித்து இன்று ஆழமாக*  தியானிக்கலாம்.

_*இன்றோடு ஆசரிப்புக்கூடாரம் சம்பந்தமான தியானங்கள் நிறைவுபெறுகிறது*_

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/2, 4:43 PM] Elango: ♦ *இன்றைய வேத தியானம் - 02/08/2017* ♦

1⃣  *ஆசரிப்புக்கூடாரத்தைக் குறித்து இன்று ஆழமாக*  தியானிக்கலாம்.

_*இன்றோடு ஆசரிப்புக்கூடாரம் சம்பந்தமான தியானங்கள் நிறைவுபெறுகிறது*_

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*வேத தியானம் ( Offline / Online Application )* -  https://goo.gl/JpGaev

*வேத தியானம் ( Web WordPress )* - https://goo.gl/WSHGAE

*வேத தியானம் ( Web blog )* - https://goo.gl/EiYkb1
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

[8/2, 8:31 PM] Elango: ஆசரிப்புக்கூடாரம் என்பது கிறிஸ்துவுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது என்று தெரியும்.

ஆசரிப்புக்கூடாரம் என்பது கொஞ்ச காலத்திற்க்குரியதாக இருந்தது, அந்த ஆசரிப்புக்கூடாரம் போகும் போது அதை எடுத்துட்டு போகத்தக்கதாக அதை அமைத்திருந்தார்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த இயேசுகிறிஸ்து,  அவருடைய வாழ்க்கை மூன்றரை வருடமாக இருந்தாலும், அவர் ஓரிடத்தில் இல்லாமல் பல இடங்களில் சுற்றித்திரிந்து சுவிஷேசம் அறிவித்து, பிணியாளிகளை இரட்சித்து, பிசாசு பிடித்தவர்களை விடுவித்தார்... மரித்தவர்களை எழுப்பினார், நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார்.

*கூடாரம் எப்பொழும் ஒரே இடத்தில் நிலையாக இல்லை, அதேப்போல தான் இயேசுவும் ஒரே இடத்தில் இல்லாமல், பல இடங்களில் சுற்றிந்திரிந்து மனிதர்களுக்கு நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும் படியான ஒரு வழியை ஏற்ப்படுத்திக்கொடுத்தார்.*

- Pastor Christopher

[8/2, 8:44 PM] Elango: ஆசரிப்புக்கூடாரம் வனாந்தரத்தில் காணப்பட்டது.

அப்போஸ்தலர் 7:44
[44]மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, *அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.*

இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்கு வந்த பிறகு, இந்த கூடாரம் இருந்த இடத்தில் தேவாலயத்தை ஸ்தாபித்தார்கள்.

எகிப்திலிருந்து, கானானுக்கு அந்த பிரயாணத்தில் வரும்போது, கூடாரம் அங்கே லேவியர்களின் ஆராதனை ஸ்தலமாக இருந்தது.

அதாவது வார்த்தையானவர்  ( யோவான் 1:1 ) அந்த வார்த்தை மாம்சமாகி, இயேசுகிறிஸ்து மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார்,  நாசரேத்தில் தச்சுபட்டறையில் வேலை, வீட்டிலிருந்து புறக்கணிப்படுதல், தலை சாய்க்க இடமில்லை, இரவலுக்கு வாங்கின கல்லறை இது எல்லாமே இயேசு வனாந்திரத்தில் வாழ்ந்ததையே காட்டுகிறது.

*ஆசரிப்புக்கூடாரம் வனாந்திரத்தில் இருந்தது போல, நம் ஆண்டவரும் வனாந்தரமான ஏழ்மையான சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார்*

- Pastor Christopher

[8/2, 9:23 PM] Elango: *ஆசரிப்புக்கூடாரம் - தேவ வாசஸ்தலம்*

பாளயத்தின் மத்தியில் இந்த வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்பட்டது. தேவன், கிருபாசனத்தின் மீது கேருபீன்கள் நடுவிலே பிரசன்னமானார் என்பதை பார்க்க முடியும்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும், தேவ வாசஸ்தலமாக இருக்கிறார், ஏனென்றால் பிதா அவருக்குள் வசித்தார் என்று வேதம் சொல்கிறது.

யோவான் 10:30
[30] *நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.*

இயேசுகிறிஸ்து அவருடைய சரீரத்தை ஆலயமென்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.

இந்த ஆசரிப்புக்கூடாரம் புறம்பான தோற்றத்திலே பார்க்கும்போது, சாலோமோன் கட்டின ஆலயத்தைவிட இது அலகற்றதுமாக இருந்தது.

அதேப்போல தான் இயேசுகிறிஸ்துவும் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை போல, விரும்பபடத்தக்கதான ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது என்று நாம் வேதத்தில் பார்க்க முடியும்.

ஏசாயா 53:2
[2]இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; *அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.*

- Pastor Christopher

[8/2, 9:49 PM] Elango: *ஆசரிப்புக்கூடாரம் - மனிதனை வரவேற்கும் இடம்*

மனிதனை தேவன் வரவேற்கும் இடமாக காணப்படுகிறது. இதற்கு வரவேற்பு கூடாரம் என்று கூட சொல்லலாம். அதாவது ஒன்று சேர்தல் வரவேற்க படுதல், சந்தித்தல் என்றெல்லாம் அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

ஒரு இஸ்ரவேலன் தேவனிடத்திற்க்கு வரவேண்டும் என்றால், அவன் முதலாவது கூடார வாசலுக்குத்தான் வரவேண்டும்.

கிருபாசனத்தின் மீதும் சாட்சிபெட்டியின் மேல் நிற்கும் இரண்டு கேருபீன்கள் நடுவிலிருந்து இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கற்பிக்கப்போகிறவைகளெல்லாம் உன்னோடு சொல்லுவேன்.

யாத்திராகமம் 25:21-22
[21]கிருபாசனத்தை பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
[22] *அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.*

*இங்கு கிறிஸ்துவின் சாயல் நமக்கு அழகாக தெரிகிறது. அது என்னவென்றால் கிறிஸ்து - தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியிலே, மனிதனை தேவனிடத்திலே, ஒன்று சேர்க்கும் பாலமாக காணப்படுகிறார்.*

இயேசுகிறிஸ்து இல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் செல்ல முடியாது, கிறிஸ்து மூலமாகவே பிதாவினிடத்தில் வர முடியும்.

1 தீமோத்தேயு 2:5
[5] *தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.*

எபிரெயருக்கு எழுதின நிருபம் 1:1-2
[1]பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
[2] *இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;* இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

தெய்வீகம், மனுசீகம் அந்த இரண்டையும் இணைக்கும் பாலமே அவர் தான்.

இன்றைக்கும் ஆண்டவர் அனைவரையும் வரவேற்கிறார்...

மத்தேயு 11:28
[28] *வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.*

அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும்,  பாவியாக இருந்தாலும் ஆண்டவர் இன்றைக்கு எல்லா மனுஷர்களையும் வரவேற்கிறார்.

யாரெல்லாம் ஆசாரிப்புக்கூடாரமான இயேசுவினிடத்தில் வருகிறார்களோ, அவர் மத்தியஸ்தராக, பரிந்துப்பேசுபவராக இருந்து  பிதாவினிடத்தில் சேர்க்கிறார்.

-.Pastor Christopher

[8/2, 10:11 PM] Elango: யாத்திராகமம் 25:10
[10] *சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்;* அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.

சீத்திம் மரம் என்பது வேல மரமாக இருக்கலாம் என்று அநேகர் அதற்கு அபிப்பிராயம் சொல்லுகிறார்கள்.

இந்த உடன்படிக்கை பெட்டி சீனாய் மலையில் செய்யப்பட்டது, வனாந்திர பயணத்தில் இந்த லேவியர்கள் சுமந்து சென்றனர்.எரிகோவை எதிர்த்து போரிடும் போது கூட, உடன்படிக்கை பெட்டியை கொண்டு போனார்கள்.

யோசுவா 6:6,8
[6]அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
[8]யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; *கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின் சென்றது.*

ஏசுவாவின் காலத்திலிருந்து, ஏலியின் காலம் வரைக்கும் இது சீலோமில் இருந்தது.

1 சாமுவேல் 4:3
[3]ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய *அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்*; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.

ஏலியின் காலத்தில்,  உடன்படிக்கை பெட்டி கொண்டு வரப்பட்டு, பெலிஸ்தரோடு செய்த யுத்தத்தில் உடன்படிக்கை பெட்டி கைப்பெற்றப்பட்டது.

1 சாமுவேல் 4:10-11
[10]அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.
[11] *தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது;* ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.

பிறகு பெலிஸ்தருக்கு தேவன் கொடுத்த வாதையினால், பெட்டி திரும்ப வந்தது.

1 சாமுவேல் 5:6-8
[6]அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
[7]இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி;
[8]பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; *அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள்.*

அன்பிறகு தாவீது அந்த உடன்படிக்கை பெட்டீயை எருஷலேமிற்க்கு கொண்டு வந்தான்.
2 சாமுவேல் 6:3-4
[3]தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
[4] *அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி,& அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.

பின்னாட்களில் சாலோமோன் கட்டின தேவாலயத்தில் வைக்கப்பட்டது.

- Pastor Charles

[8/2, 11:35 PM] Elango: ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள *பொன் - தேவ மகிமைக்கு* ஒப்பாக இருக்கிறது என்றும்.

*வெள்ளி - மீட்பிற்க்கு அடையாளமாகவும்*👇🏼👇🏼

யாத்திராகமம் 30:12,16
[12]நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.
[16]அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.
யாத்திராகமம் 38:25
[25]சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.

*வெண்கலம் - நியாயத்தீர்ப்பிர்க்கு அடையாளமாகவும்*

*நீலம் - பரலோகத்திற்க்குரியவைகளை நினைப்பூட்டவதாகவும்*

*இரத்தாம்பரம் - இராஜரீகத்திற்க்கு மாதிரியாகவும்*

*சிகப்பு என்பது - பலி, நிவாரணம்,*

☝🏻☝🏻 ஆகியவைகளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்று அநேக வேத வல்லுநர்கள் சொல்கின்றனர்.

அதேப்போல ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா வேலைகளும் முழத்தின் அளவில் தான் சொல்லப்பட்டிருக்கிறது, ஒரு முழம் என்பது 45 சென்டிமீட்டர் அளவு.

யாத்திராகமம் 26:31-33
[31]இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
[32]சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
[33]கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; *அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.*

மத்தேயு 27:51
[51]அப்பொழுது, *தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது,* பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.

கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது, தேவாலய உள் திரைசீலை மேலிருந்து கீழாக கிழிந்ததனால், கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் சேரும் ஒரு பாக்கியத்தை பெறுகிறோம்.

இயேசுகிறிஸ்துவின் மனித சரீரத்திற்க்கு அடையாளமாக இந்த உள் திரைசீலை இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சரீரம் கிழிக்கப்பட்டு, நாம் தேவனோடு ஒப்புறவு ஆனது போல, அந்த திரைசீலை கிழிந்து நாம் தேவனோடு ஒப்புரவானோம்.

- pastor Charles

[8/2, 11:47 PM] Elango: யாத்திராகமம் 27:1
[1]ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.

ஆசரிப்புக்கூடாரத்தில் ஒரு மனிதன், பிரவேசிக்கிறானென்றால் முதலில் அவன் பார்க்கக்கூடியது, இந்த வெண்கல பலிபீடத்தை தான்.

இதற்கு என்ன அர்த்தமென்றால், பலி செலுத்தாமல் தேவனிடத்தில் ஒருவனும் சேரமுடியாது என்பதை காட்டுகிறது,

யாத்திராகமம் 27:20
[20]குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.

*குத்துவிளக்கு என்பது பரிசுத்த ஆவியானவருக்கு மாதிரியாகவும்* ☝🏻☝🏻☝🏻

யாத்திராகமம் 28:1
[1] *உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.*

ஆரோன்,  இயேசுகிறிஸ்துவுக்கு சம்பந்தப்படுத்தியும், அவனுடைய புத்திரர்கள் - இயேசுகிறிஸ்துவினால் சம்பாதித்த சபையாகிய விசுவாச மக்களுக்கும் மாதிரியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

- pastor Charles

[8/3, 12:19 AM] Elango: *கேருபீன்கள்*

கேருபீன்கள் என்பது தேவ பிரசன்னத்தில் இருக்கக்கூடிய உயிரினங்கள் என சொல்லப்படுகிறது.

அதற்கு என்னவெல்லாம் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் ...ஜீவ விருட்சத்திற்க்கு போகிற வழியை பாதுகாப்பதே இவைகளின் பிரதானமான வேலை.

ஆதியாகமம் 3:24
[24]அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் பயணம் செய்யும் போது, இந்த கேருபீன்களை தான் பயன்படுத்துகிறார்.

2 சாமுவேல் 22:11
[11]கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார்.

சங்கீதம் 18:10
[10]கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.

தேவன் பயணம் செய்யும் சிங்காசத்தை எடுத்து செல்லக்கூடிய பணியை இந்த கேருபீன்கள் செய்கிறது.

எசேக்கியேல் 10:1-22
[1]இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
[2]அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.
[3]அந்தப் புருஷன் உள்ளே பிரவேசிக்கையில், கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உட்பிராகாரத்தை நிரப்பிற்று.
[4]கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.
[5]கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது.
[6]அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.
[7]அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து சணல்நூல் அங்கிதரித்திருந்த புருஷனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.
[8]கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.
[9]இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது.
[10]அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது.
[11]அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
[12]அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
[13]அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.
[14]ஒவ்வொன்றுக்கும் நாலு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன்முகமும், இரண்டாம் முகம் மனுஷமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நாலாம் முகம் கழுகுமுகமுமாயிருந்தது.
[15]கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.
[16]கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.
[17]அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.
[18]கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.
[19]அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
[20]இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
[21]அவைகளில் ஒவ்வொன்றுக்கு நாலு முகமும், ஒவ்வொன்றுக்கு நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.
[22]அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.

☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻

*ஒருமையாக கேருப் என்றும்,  பன்மையில் கேருபீன்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது*

- Pastor Charles

[8/3, 12:37 AM] Elango: ஆசரிப்புக்கூடாரத்தை செய்யும் முன் கூடார மாதிரியை காண்பித்தார், தேவன் சொன்னகட்டளையின் படியே அந்த ஆசரிப்புக்கூடாரத்தை மோசே செய்து முடித்தார்.

*இன்றைக்கு தேவன் விரும்புகிற காரியம் என்னவென்றால், கீழ்ப்படிதல்... மோசேக்கு சொன்ன கட்டளையின் படி அவன் கீழ்ப்படிந்து, முழுவதும் நிறைவேற்றி முடித்தது போல, இன்றைக்கு ஆண்டவர் நாம் சத்தத்திற்க்கு செவிசாய்த்து அவருக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்தை செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்*

யோவான் 4:34
[34]இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதே, இயேசுவுனுடைய போஜனமாக இருந்தது என்று சொல்லி எல்லாம் முடிந்தது என்றும்,  பிசாசை வென்று மனுகுலத்தை சாபத்திலிருந்து விடுவித்தார்.

நாமும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் ஊழியனாக, விசுவாசியாக இருக்க வேண்டும்,.

 2 தீமோத்தேயு 4:7-8
[7] *நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.*

[8] இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

முடிவுபரியந்தம் விசுவாசத்தை காத்துக்கொண்டவன் தான் அவன் இரட்சிக்கப்படுகிறான்.

ஜனத்தை விசாரிக்கும் ஊழியம் என்றால் அதை சரியாக செய்ய வேண்டும், ஜெபிக்கிற ஊழீயத்தை கொடுத்தால் அதை நாம் திறம்பட செய்ய வேண்டும்.நமக்கு தேவன் கொடுத்த தாளந்துக்களை புதைத்து போடக்கூடாது. தேவனுடைய சத்தத்திற்க்கு செவி கொடுக்கிற ஆடாக நாம் காணப்பட வேண்டும்.

யோவான் 10:4
[4]அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், *ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.*

நாம் தேவனுடைய சத்தத்திற்க்கு கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருப்போம்.உலகத்தில் அநேக சத்தங்கள் உண்டு, அந்த சத்தத்திற்க்கு செவி கொடாமல், சுய நீதிக்கு செவிகொடாத படிக்கு,  தேவனுடைய சத்தத்திற்க்கும் உபதேசத்திற்க்கும் நம்முடைய செவியை சாய்த்து  , மாம்சத்தை கீழ்ப்படுத்தி தேவ சித்தத்தில் வாழும் போது,  உண்மையிலேயே தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

- Pastor Christopher

Post a Comment

0 Comments